11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
11th Second Revision Test 2019
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வினையூக்க அமினோவாக்கம் பற்றி எழுதுக.
2.
நீர் வடிதல் என்றால் என்ன ?
3.
கோண கோலங்கைமா பற்றி எழுதுக.
4.
செல்சவ்வு தேர்வு கடத்துச் சவ்வாக செய்லபட உதவுவது எது?
5.
கரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலையை எழுது.
6.
புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து
7.
கோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது.அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.
8.
பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.
9.
10.
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
11.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
12.
கூட்டைக் கட்டி முடிக்க _____ ஆகிறது
ஒழுங்கற்று
ஒழுங்கானதாக
3 நாட்கள்
10 முதல் 12 நாட்கள்
13.
முதல் 7 இணை விலா எலும்புகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.
அட்லஸ்
அச்சு முள்ளெலும்பு
தட்டையான மார்பெலும்பு
முள்ளெலும்புகள் விலா எலும்புகள்
14.
ஆற்றல் மிகுந்த ATP-களை அதிக அளவில் மைட்டோகாண்ட்ரியங்கள் உருவாக்குவதால் இவை ________ என அழைக்கப்படுகிறது.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
15.
______ இறந்த செல்களாகும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
16.
ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.
எத்தனால்
சைட்டோகைனின்
ABA
ஆக்சின்
17.
சரியானவற்றைப் பொருத்துக.
| தனிமங்கள் | பணிகள் | ||
|---|---|---|---|
| A | மாலிப்டினம் | 1 | பச்சையம் |
| B | துத்தநாகம் | 2 | மெத்தியோனின் |
| C | மெக்னீசியம் | 3 | ஆக்சின் |
| D | சல்ஃபர் | 4 | நைட்ரோஜினேஸ் |
| A | B | C | D |
| 1 | 3 | 4 | 2 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
18.
யூகேரியோட்டுகளில் காணப்படும் இந்த நுண்ணுறுப்புகள் உள்ளுறை கூட்டுயிர் வாழ்க்கை கோட்பாட்டை உறுதி படுத்துகின்றன.
லைசோசோம்கள் , ரைபோசோம்கள்
மைட்டோகாண்ட்ரியா ,பசுங்கணிகம்
எண்டோபிளாசவலை , கோல்கை உடலம்
உட்கரு , சென்ட்ரியோல்
19.
நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்ற உடற்குழியை உடைய விலங்கு ___________ என அழைக்கப்படுகின்றன.
என்டிரோசீலோமேட்டுகள்
சைசோசீலோமேட்டுகள்
உண்மையான உடற்குழியுடையவைகள்
போலியான உடற்குழி உடையவைகள்
20.
அனோஸ்டாமோசிஸ் என்பது
நுண்தமனி இரத்தக்குழாய்களும், நுண் சிறைகளும் இணைவது
கீழ் பெருஞ்சிரையும் மேல் பெருஞ்சிரையும் இணைவது
நுரையீரல் தமனியும் நுரையீரல் சிரையும் இணைவது
சில இடங்களில் தமனிகள் இணைந்து பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக இணைவது
21.
வைரஸின் உயிரற்ற பண்பினைக் கன்டுபிடி.
உறுத்துணர்வு உள்ளவை
படிகங்களாக்க முடியும்
திடீர் மாற்றம் அடையும் திறன்
உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன்
22.
உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.
ஒழுங்குப்படுத்துதல்
உடல் சமநிலை பேணுதல்
ஒருங்கிணைப்பு
ஹார்மோன்களின் கட்டுப்பாடு
23.
24.
ஒடி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?
கல்லீரல் - கணைய நாளம்
பொதுப் பித்த நாளம்
கணைய நாளம்
சிஸ்டிக் நாளம்
25.
உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இனப்பெருக்கம்
வளர்ச்சி
வளர்சிதை மாற்றம்
இடப்பெயர்ச்சி
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
26.
வேர்கள் என்பவை ______.
கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
27.
பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன.
குரோட்டலேரியா ஜன்சியா
சைகஸ் ரெவலூட்டா
சைசர் அரிட்டினம்
கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா
28.
முன் மூளை அமைப்பை விவரி?
29.
கிரப்ஸ் சுழற்சியினை விளக்குக. (விளக்கம் (அல்லது) வரைபடம்)
30.
உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. கழிவு நீக்கம், கிளாமருலஸ் , சிறுநீர்ப்பை, கிளாமருலார் வடிதிரவம், சிறுநீர் நாளங்கள், சிறுநீர், பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், புரதங்கள், சமநிலை பேணுதல்
i. சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.
ii. பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.
iii. சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.
iv. இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.
vi. தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.
vii. ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.
vii. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.
xi. சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.
xii. இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துதல்.
xiii.சிறுநீரகங்கள். சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
xiv. கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்.
xvii. இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு கிளாமருவார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?
31.
கரப்பான் பூச்சியின் பெண் இனப்பெருக்க மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்கு.
32.
பூஞ்சைகளின் பொதுப்பண்புகள் யாவை?
33.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
34.
யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?
35.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
36.
மேல் நோக்கு கற்றைகள் என்றால் என்ன?
37.
ஒட்டுமொத்த மூப்படைதல் பற்றி எழுதுக.
38.
பெருங்குடலில் உருவாகும் பொருட்கள் யாவை? எவ்வாறு உருவாகிறது?
39.
எலும்பு மீன்களில் காணப்படும் காற்றுப்பைகளின் பயன் யாது?
40.
புளுமோஸ் சூல்முடி என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.
41.
விரியான் என்பது யாது?
42.
ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.
43.
தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
44.
மோனோடைப்பிக் பேரினம் என்பது யாது? எ.கா. தருக.
45.
MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி
46.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?
1.
(i) குளுட்டாமேட் அமினோ அமிலானது அம்மோனியாவுடன் வினைபுரிந்து குளுட்டாமைன் எனும் அமைடினை உருவாக்குகிறது.
(ii) குளுட்டாமைன்-கீட்டோகுளூட்டாரிக் அமிலத்துடன் வினைபுரிந்து இரண்டு மூலக்கூறு Formula குளுட்டோமேட்டை உருவாக்குகிறது.
2.
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது நீராவிப்போக்கின் வீதம் வெகுவாகக் குறைகிறது.
இந்நிலையில் நீர் உறிஞ்சப்படும்போது தாவரத்தினுள் அதிகப்படியான நீர் சேர்ந்து வேர் அழுத்தத்தினை உருவாக்குகிறது.
இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதுவே நீர் வடிதல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: புற்கள்.
3.
(i) இது பொதுவான கோலங்கைமா வகையாகும். இங்கு செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும்.
(ii) இதில் செல்கள் இணையும் கோணத்தில் அல்லது விளிம்பில் தடிப்புகள் காணப்படும்.
(iii) எடுத்துக்காட்டு: டாட்டூரா
4.
1.செல்சவ்வின் பாஸ்போலிப்பிடு நீர் விரும்பும் மற்றும் நீர் வெறுக்கும் பகுதிகள் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.
2.செல் சவ்வில் இவை இரு அடுக்கில் அமைந்திருக்கும் விதம் அதைத் தேர்வு செலுத்து சவ்வாக செயல்பட உதவுகிறது.
5.
தொகுதி : கணுக்காலிகள்
வகுப்பு : பூச்சிகள்
வரிசை : ஆர்தரப்டீரா
பேரினம் : பெரிப்பிளனெட்டா
சிற்றினம் : அமெரிக்கான
6.
புரோட்டோ நெஃப்ரீடியாக்கள் - எளிய குழல் வடிவிலான தொன்மையான சிறுநீரகங்கள்.
மெட்டா நெஃப்ரீடியாக்கள் - குழல் வடிவ சிறுநீரகங்கள்.
7.
1. வெண்ட்டிரிக்கிளின் கூரையில் உள்ள இரத்த நுண் நாளங்கள் இணைந்து கோராய்டு வலைப்பின்னலை உருவாக்குகின்றன.
2. இது இரத்தத்திலிருந்து மூளை தண்டுவடத் திரவத்தை உற்பத்தி செய்கிறது.
3. மைய நரம்பு மண்டலப்பகுதிகளுக்கு மிதத்தல் தன்மையை இத்திரவம் அளிக்கிறது.
4. மூளை மற்றும் தண்டுவடத்திற்குப் பாதுகாப்பாக அதிர்ச்சி தாங்கியதாகவும் இத்திரவம் பயன்படுகிறது.
5. அதுமட்டுமல்லாமல், மூளை செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து கடத்துகிறது.
6. அதே வேளையில் மூளையின் வளர்சிதை மாற்றக் கழிவுகளை இரத்தத்திற்கு அனுப்பும் வேலையையும், மூளை நாளங்களின் உள் அழுத்தத்தை நிலையாகப் பராமரிக்கும் வேலையையும் மூளை தண்டுவடத் திரவம் செய்கிறது.
8.
| வ.எண். | சைகோசீலோமேட் | என் டீரோசீலோமேட் |
|---|---|---|
| 1. | நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்றது | மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகின்றது. |
| 2. | பிளவு உடற்குழி என அழைக்கப்படுகிறது. | உணவுப்பாதை உடற்குழி என அழைக்கப்படுகிறது. |
| 3. | எ.கா. வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள் | முட்தோலிகள், அரை நாணிகள், முதுகு நாணிகள் |
9.
10.
| வரம்பற்ற கிளைத்தல் | வரம்புடைய கிளைத்தல் | |
| 1. | இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. |
இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குதிசுக்களின் மூலமாகவோ, மொட்டுகளின் நடைபெறுகிறது. |
| 2. | எ.கா. பாலியால்தியா, ஸ்வைடீனியா, ஆன்ட்டியாரிஸ் | எ.கா. சைகஸ். |
11.
12.
(c)
3 நாட்கள்
13.
(d)
முள்ளெலும்புகள் விலா எலும்புகள்
14.
(b)
செல்லின் ஆற்றல் நிலையம்
15.
(d)
ஸ்கிலிரைடுகள்
16.
(c)
ABA
17.
(c)
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
18.
(b)
மைட்டோகாண்ட்ரியா ,பசுங்கணிகம்
19.
(b)
சைசோசீலோமேட்டுகள்
20.
(d)
சில இடங்களில் தமனிகள் இணைந்து பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக இணைவது
21.
(b)
படிகங்களாக்க முடியும்
22.
(b)
உடல் சமநிலை பேணுதல்
23.
(c)
24.
(a)
கல்லீரல் - கணைய நாளம்
25.
(e)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
26.
(b)
கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
27.
(d)
கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா
28.
மூளை கதுப்புகளின் பணிகள்
1. உணர்ச்சிப்பரப்பு
2. இயக்கு பரப்பு
3. இணைப்பு பரப்பு
டயன் செஃபலான்
1. எபிதலாமஸ்:
2. தலாமஸ்
3. ஹைப்போதலாமஸ்
லிம்பிக் மண்டலம்
மூளைத்தண்டு
29.

விளக்கம்
தளப்பொருள்
நொதி
ATP, NADH2, FADH2
30.
| 1 | சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம் | சிறுநீர் |
| 2 | பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது | கிளாமருலார் வடிகட்டல் |
| 3 | சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல் | சிறுநீர்ப்பை |
| 4 | இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து | கிளாமருலஸ் |
| 5 | கிளாமருலார் வடிதிரவத்தை சிறுநீராக மாற்றும் செயல் | கழிவுநீக்கம் |
| 6 | தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல் | யூரியா |
| 7 | ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது | பௌமானின் கிண்ணம் |
| 8 | சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது | சிறுநீர் நாளங்கள் |
| 9 | யூரியா மற்றும் பயனுள்ள பல பொருட்களைக் கொண்டுள்ளது | கிளாமருலார் வடிகட்டல் |
| 10 | இதன் சுவர்கள் வழியாக பௌமான் கிண்ணத்தினுள் இரத்தமானது வடிகட்டப்பட்டுள்ளது | கிளாமருலஸ் |
| 11 | சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர் | மிக்ட்யூரின் |
| 12 | இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்தல். | உடற்சமநிலை பேணுதல் |
| 13 | சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன. | சிறுநீரக மண்டலம் |
| 14 | கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல் | மீண்டும் உறிஞ்சுதல் |
| 15 | அண்மை சுருண்ட குழல்களில் நீர் கடத்தப்படும் நிகழ்ச்சி | மீண்டும் உறிஞ்சுதல் |
| 16 | அண்மை சுருண்ட குழல்களைச் சூழ்ந்து காணப்படும் இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்தம் எங்கிருந்து வருகிறது? | பௌமானின் கிண்ணம் |
| 17 | இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது? | புரதங்கள் |
31.
1. கரப்பான் பூச்சி ஒரு பால் உயிரிகளாகும்.
2. ஆண், பெண் உயிரிகள் தனித்தனியாக உள்ளன.
3. இவற்றில் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
4. பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
1. அண்டக்கங்கள் - 1இணை
2. கலவிக் கால்வாய்
3. இனப்பை
4. கொல்லேட்ரியல் சுரப்பி
5. விந்து கொள்பை
ஆகியவை காணப்படுகிறது.
5. 2வது லிருந்து 6வது வியிற்றுக் கண்டங்களின் பக்கவாட்டில் ஓர் இணை அண்டங்கள் காணப்படுகிறது.
6. ஒவ்வொரு அண்டகமும் 8 அண்டக்குழல்களால் ஆனவை.
7. இதனுள் தொடர் வரிசையில் வளர்ச்சியடையும் முட்டைகள் உள்ளன.
8. அண்டநாளங்கள் இணைந்து அண்ட பொது நாளம் எனப்படும் கல்வி நாளத்தை தோற்றுவிக்கிறது.
9. கலவி நாளாம் இனப்பையில் திறக்கிறது.
10. கலவி நாளத்தின் செங்குத்துபிளவே பெண் இனப்பெருக்கத்துளை எனப்படுகிறது.
11. 6வது வயிற்றுக்கு கண்டத்தில் உள்ள ஓர் இணை விந்து கொள்பைகள் இனப்பையில் முதுகுப்புறத்திலுள்ள மையத்துளை வழியாக திறக்கிறது.
12. கலவியின்போது அண்டங்கள் இனப்பைக்குள் விழுகின்றன.
13. அங்கு விந்துச் செல்களால் கருவுருகின்றன.
14. நன்கு கிளைத்த ஓர் இணை வெண்ணிறக் கொல்லேட்ரியல் சுரப்பிகள் அண்டத்தின் பின்பகுதியில் உள்ளது.
15. இச்சுரப்பி கருமுட்டைகளை பாதுகாக்கும் ஊத்திகா எனும் கருமுட்டைகூட்டை சுரக்கிறது.
16. படகு வடிவமான 7, 8 மற்றும் 9வது வயிற்றுக்கண்ட தகடுகளால் உருவாக்கப்பட்டதாகும்.
17. இனப்பை இரு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
18. கலவி நாளம் திறக்கும் அரை இனப்பெருக்க அறை என்றும் கருமுட்டை கூடு உருவாகும் அறை கருமுட்டை கூடுஅறை என்றும் அழைக்கப்படுகின்றன.
19. பெண் பூச்சிகளில் 3 இணை கைட்டின் ஓடுகள் ஒன்றிணைந்து கோனோபோஃபைசிஸ் எனும் அமைப்பாக பெண் புழையை சூழ்ந்துள்ளது.
20. முட்டையீட்டுவாயில் என்னும் இது முட்டைகளை முட்டை கூட்டிற்குள் செல்ல வழி செய்கிறது.
21. கரப்பான் பூச்சியின் கருமுட்டைகள் அடர்சிவப்பிலிருந்து கரும் பழுப்பு நிறமுடைய 12மிமி நீளமும் 16 முட்டைகளையும் கொண்ட இக்கூடு ஏதாவதொரு பொருளின் மேல் குறிப்பாக உணவுப் பொருட்கள் அருகில் அதிக ஈரப்பதமிக்க இடுகுகள் வெடிப்புகள் அருகில் ஒட்டவைக்கப்படுகிறது.
22. ஒரு கரப்பான் பூச்சி 1 முதல் 2 ஆண்டுகளில் சுமார் 15லிருந்து 40கருமுட்டை கூடுகளை உற்பத்தி செய்கின்றது.
23. இக்கூடுகளுக்குள்ளேயே சுமார் 5-13 வாரங்களுக்கு கரு வளர்ச்சியடைகிறது.
24. இதன் கருவளர்ச்சி இறக்கையற்ற படிநிலைகளைக் கொண்டிருப்பதால் கரப்பான் பூச்சி பாராமெடாபோலஸ் வகை எனப்படுகிறது.
25. வளர் உருமாற்றத்தின் மூலம் இறக்கையற்ற வளர் உயிரிகள் முதிர் உயிரிகளாக மாறுகிறது.
26. இவ்வாறு முதிர் உயிரியாக மாறுவதற்கு முன் இறக்கைகளற்ற வளர் உயிரி சுமார் 13 முறை தோலுரித்துக் கொள்கிறது.
32.
1.பூஞ்சைகள் மெய்யுட்கரு கொண்ட பச்சையமற்ற பிறசார்பூட்ட உயிரியாகும்.
2.இவை ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனவை.
3.பெரும்பாலான பூஞ்சைகளின் உடலம் கிளைத்த இழை போன்ற ஹைஃபாக்களால் ஆனது.
4.எண்ணற்ற ஹைஃபாக்கள் இணைந்து மைசீலியத்தை உருவாக்குகின்றன.
5.பூஞ்சைகளின் செல்சுவர் கைட்டின் எனும் பாலிசாக்ரைட்களால் (N-அசிட்டைல் குளுக்கோஸமைன்)ஆனது.
6.கீழ்நிலை பூஞ்சைகளின் ஹைஃபாக்களில் தடுக்குச் சுவர் காணப்படவில்லை.எண்ணற்ற உட்கருக்களைக் கொண்டு காணப்படுகிறது.
7.எண்ணற்ற உட்கருக்களைக் கொண்டு காணப்படுவது பல்உட்கரு மைசீலியம் எனப்படும்.
8.மேம்பாடு அடைந்த பூஞ்சைகளில் ஹைப்பாக்களின் செல்களுக்கிடையே தடுப்புச்சுவர் காணப்படுகிறது.
9.மைசீலியத்தில் காணக்கூடிய ஹைஃபாக்கள் நெருக்கமின்றியோ அல்லது நெருக்கமாகவோ பிணைந்து பூஞ்சை திசுக்களை உருவாக்குவது பிளக்டங்கைமா எனப்படும்.
10.பிளக்டங்கைமா இரண்டு வகைப்படும் அவை புரோசங்கைமா மற்றும் போலியான பாரங்கைமா.
11.முழுகனி உறுப்புடைய பூஞ்சைகளில் முழு உடலமும் இனப்பெருக்க அமைப்பாக மாறுகிறது.
12.உண்மைக்கனி உறுப்பு வகையின் உடலத்தில் சில பகுதிகள் மட்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு மற்ற பகுதிகள் தழை உடல் நிலையிலேயே உள்ளன.
13.பாலிலா, பாலினப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.
14.பூஞ்சைகளின் பாலிலா நிலை, பாலிலி நிலை என்றும், பாலின நிலை பால் நிலை என்றும் அழைக்கப்படுகிறது.
15.இருநிலைகள் (பால்,பாலிலி) காணப்படும் பூஞ்சைகள் முழு உடலி எனப்படும்.
16.பூஞ்சைகளில் பாலினப்பெருக்கத்தில் மூன்று படிநிலைகள் உள்ளன.
(i) இரண்டு செல்களின் சைட்டோபிளாச இணைவு
(ii) உட்கரு இணைவு
(iii) குன்றல் பகுப்பு
33.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்:
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலைத் தண்டு | ஒருவிதையிலைத் தண்டு |
| 1. | பபுறத்தோலடித்தோல் | கோலங்கைமா செல்களானது. | ஸ்கிலிரங்கைமா செல்களானது. |
| 2. | அடிப்படைத்திசு | புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது. |
வேறுபடாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது. |
| 3. | தரசு அடுக்கு | காணப்படுகிறது | காணப்படவில்லை. |
| 4. | மெடுல்லா கதிர்கள் | காணபப்டுகிறது | காணப்படவில்லை. |
| 5. | வாஸ்குலக் கற்றைகள் | (i) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை. (ii) ஒரு வளையமாக அமைந்துள்ளன. (iii) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. |
(i) ஒருங்கமைந்தவை மற்றும் மூடிய வை. (ii) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது. (iii) இரண்டாம் நிலை பொதுவாக நடைபெறுவதில்லை. |
34.
1. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.
2. காடுகள் அழிக்கப்படுவதால், உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
3. மழைபொழிவு மற்றும் நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால்
4. அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால்
5. மனிதர்கள் காட்டுக்குள் சென்று அவைகளுக்கு இடையூறு செய்வதால்.
35.
வளரியல்பு: பின்னுக் கொடி
வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்து மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது
தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி
இலை: ஒற்றைப்படை ஒருமடிககூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு , இலையடிச் செதிலுடையது .வலைப் பின்னால் இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும் அதைப்புடையன.
மஞ்சுரி ; கக்க மலர்
மலர் : பூவடிச்செதிலுடையது. புககாம்புச் செதிலுடையது . புககாம்புச் செதில்கள் அளவில் பெரியது,மலர்காம்புடையது.இரு பூவிதழடுக்குடையது.முழுமையானது, இருபால்மலர் , ஐந்தங்கமலர். இரு பக்கச்சிருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.
புல்லிவட்டம் ; புல்லிகள் 5,இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைத்துள்ளது .தனிப்புள்ளி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும் .
அல்லிவட்டம்: அல்லிகள் 5,வெண்மை அல்லது நீல நிறத்தாலானது.தனித்தது ,ஒழுங்கற்றவை , வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை இறங்குதழுவு இதழமைவில் உள்ளன
மகர்ந்ததாள் வட்டம் : மகர்ந்ததாள் கள் 10 இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகர்ந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வந்து தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன.மகரந்தப்பை ஈரறையுடையது. தாள்அடி இணைந்தவை.நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.
சூலவட்டம் : ஒற்றச்சூலக இலையானது மேல்மட்டசூலகம், ஒரு சூலக அறை ,சூல்கள் பல விளிம்பு சூள் ஒட்டு முறையில் அமைத்துள்ளன.சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது , சூலக முடி தூவிகளுடையது கனி: இருபுற வெடிகனி
விதை :சிறுநீரக வடிவிலானது.கருவூன் அற்றது
36.
உணர்ச்சி தூண்டல்களை மூளைக்கு எடுத்துச் செல்வது மேல் நோக்கு கற்றைகள் ஆகும்.
37.
ஒரு பருவத் தாவரங்களில் இந்த வகையான மூப்படைதல் நடைபெறுகிறது. முழு தாவரமும் பாதிக்கப்பட்டு இறக்கிறது. எடுத்துக்காட்டு கோதுமை மற்றும் சோயமொச்சை சில பல்பருவத் தாவரங்களிலும் கூட இது நடைபெருகிறது. எடுத்துக்காட்டி : அகேவ் மற்றும் மூங்கில்.
38.
பெருங்குடலில் செரிக்காத உணவிலிருந்து உருவாகும் நார் பொருட்களை, பெருங்குடலில் உள்ள இணைவாழ் பாக்டீரியாவால் பயன்படுத்தப்பட்டு வைட்டமின் K மற்றும் பிற வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் உருவாகின்றன.
39.
1. நுரையீரல் மீன்களில் வாயு பரிமாற்றம்.
2. திருக்கை மீன்களில் மிதப்பதற்கும் உதவும்.
40.
மலரில் சூல் முடி இறகு போன்று கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ காணப்பட்டால், அவ்வகை சூல்முடி புளுமோஸ் எனப்படும்.
41.
தொற்றுத் தன்மை வாய்ந்த, ஓம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத, ஒரு முழுமையான வைரஸ்துகள் விரியான் எனப்படும்.
42.
மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுவது என்பது சத்தியம் இல்லை. அப்படி எந்த மரமும் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிருபிக்கவும் இல்லை.
43.
44.
பேரினத்தில் ஒரே ஒரு இனம் காணப்பட்டால், மோனோடைப்பிக் பேரினம் எனப்படும்.
எ.கா. அய்லூரஸ் எனும் பேரினம் அய்லூரஸ் ஃபுல்ஜென்ஸ் (சிவப்பு பாண்டா) எனும் ஒரே ஒரு சிற்றினத்தைக் கொண்டுள்ளது.
45.
1. இந்தத் தொழில் நுட்பம் பசுவினம், ஆட்டினம் மற்றும் எருமையினங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
2. இத்தொழில் நுட்பம் அதிக பால் உற்பத்தி செய்யும் பெண் பசுக்களையும் அதிக இறைச்சி தரும் ஆண் காளைகளையும் குறைந்த காலத்தில் உருவாக்கப் பயன்படுகின்றது.
46.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் சேய்மை சுருள் நுண் குழல் மற்றும் சேகரிப்பு நாளத்தில் சோடியம் அயனி மீள உறிஞ்சப்படுத்தல், பொட்டாசியம் அயனி வெளியேற்றம் மற்றும் நீர் உறிஞ்சப்படுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அது அட்ரீனல் கார்டெக்ஸில் இருந்து உருவாகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards