11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Chemistry All Chapter Important Question )
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கூற்று (A) : நீர் மூலக்கூறு 'V' வடிவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் CO2 நேர்க்கோட்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
காரணம் (R): வேதிப்பிணைப்பினைப் பற்றிய கொள்கையை ப் பயன்படுத்தி இவற்றை விளக்க இயலும்
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
(A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) தவறு (R) தவறு
2.
ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை
பிணைப்பு நீளம்
பிணைப்புக் கோணம்
பிணைப்புத் தரம்
இவற்றுள் எதுவுமில்லை
3.
Q ன் மதிப்பை உடன் Kc ஒப்பிட்டு வினையின் திசையை தீர்மானிப்பதில் சரியானதைத் தேர்ந்தெடு.
Q = Kc எனில் வினை சமநிலையில் உள்ளது
Q > Kc எனில் விளைபொருள் உருவாகிறது
Q < Kc எனில் வினைபடு பொருள் உருவாகிறது
இவை அனைத்தும் சரி
4.
வாயு-கரைசல் சமநிலையினை விளக்குவதற்கு பயன்படுவது
நிறைத்தாக்க விதி
ஹென்றி விதி
லீ - சாட்லியர் தத்துவம்
ஹேபர் விதி
5.
எண்ணெய் மற்றும் நீர் அடங்கிய கலவை பின்வரும் எதற்கு உதாரணம்?
தனித்த அமைப்பு
மூடிய அமைப்பு
ஒருபடித்தான அமைப்பு
பலபடித்தான அமைப்பு
6.
பின்வருவனவற்றை பொருத்துக.
| A | 1 atm | 1 | 6894.76 pa |
| B | 1 mm Hg | 2 | 105 pa |
| C | 1 bar | 3 | 133.322 pa |
| D | 1 psi | 4 | 101325 pa |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 3 | 4 | 2 | 1 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
7.
மாறா வெப்பநிலையில் 56கே நைட்ரஜன் மற்றும் 96கி ஆக்சிஜன் ஆகியவை உள்ள கலவையின் மொத அழுத்தம் 10 atm எனில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பகுதி அழுத்தங்கள் முறையே
4,6
8,2
6,4
2,8
8.
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (A) : ஏற்கனவே நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை அடைந்த அயனியிலிருந்து இரண்டாம் எலக்ட்ரானை நீக்குவது மிகக் கடினம்.
காரணம் (R) : நேர்மின் அயனிகள் மந்த வாயுக்களைப் போன்ற நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன.
i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும்
ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான விளக்கம் அல்ல.
iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
iv) (A) சரி (R) ஆனால் தவறு
(i)
(ii)
(iii)
(iv)
9.
பின்வருவனவற்றை சரியான எலக்ட்ரானைக் கொண்டுள்ள ஹைட்ரைட் எது?
B2H6
NH3
H4O
SiH4
10.
CH4 + H2O ⟶ CO + 3H2 ↑ என்ற வினையின் வெப்பநிலை எல்லை
600-7000C
700-8000C
800-9000C
900-10000C
11.
அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு ________ ஆய்வின் மூலம் கண்டறியப்படுகிறது.
மோஸ்வே ஆய்வு
X - கதிர் விளிம்பு விளைவு
தாம்சன் ஆய்வு
லவே ஆய்வு
12.
ஆக்டினைடு தனிமங்கள் லாந்தனைடு தனிமங்களின் பண்புகளுடன் ஒத்துப்போகின்றன என்பதே சோதனை மூலம் நிரூபித்துக் காட்டியவர்
லவாய்சியர்
சீபார்க்
டாபரீனர்
டி-சான்கோர்டாய்ஸ்
13.
ஐகன் மதிப்புகள் என்று அழைக்கப்படுபவை
ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டின் தீர்வுகள்
தற்சுழற்சிக் குவாண்டம் எண் மதிப்புகள்
டி-பிராக்ளே சமன்பாட்டின் தீர்வுகள்
இவற்றுள் எதுவுமில்லை
14.
இடப்பெயர்ச்சி வினைகளின் வகைகள்
2
3
4
6
15.
பின்வருவனவற்றில் தவறானது எது?
சோடியம் ஒரு பளப்பளப்பான அலோகம்
குளோரின் ஓர் எரிச்சலூட்டும் வாயு
சோடியம் குளோரைடு படிகத்தன்மையுடைய திண்மம்
மேற்கண்ட அனைத்தும் தவறு
16.
நிறையுள்ள, இடத்தை அடைத்துக்கொள்ளும் தன்மையுடைய அனைத்தும்
துகள்
அனு
பருப்பொருள்
அலை
17.
AB2L மூலக்கூறின் வடிவம் (VSEPR கொள்கை அடிப்படையில்)
நேர்கோடு
வளைந்த V வடிவம்
தளமுக்கோணம்
நான்முகி
18.
வாயு கரைசல் சமநிலையினை விளக்குவதற்கு பயன்படும் விதி
வான்ட ஹாப் விதி
லீ - சாட்லியர் விதி
ஹென்றி விதி
ஜூல் தாம்சன் விதி
19.
ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது
குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும்
குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும்
20.
கீழ்க்கண்டவற்றுள் எது சலவை தூளின் வாய்பாடு?
CaCl2.H2O
CaOCl2.H2O
CaSO4.2H2O
CaSO4.\(\frac{1}{2}\)H2O
21.
பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?
சோடியம்
கால்சியம்
லித்தியம்
பொட்டாசியம்
22.
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு
E
H
S
G
23.
எந்த சூழ்நிலையில் ஒரு அமைப்பின் செயல்முறை தன்னிச்சையானது?
S=+Ve
S=-ve
H=+ve
T2>T1
24.
குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட பண்புகள் திரும்ப அமைவது
இயற்பியல் பண்புகள்
வேதிப்பண்புகள்
காந்தப்பண்புகள்
ஆவர்த்தன பண்புகள்
25.
பின்வருவனற்றுள் கார உலோகங்களின் ஆக்ஸிஜனேற்ற நிலை
+2
0
+1
+3
26.
பின்வருவனவற்றை கவனி.
I. எலக்ட்ரான் நுண்ணோக்கி
II. குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் விளிம்பு வளைவு எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது என்ற கண்டுபிடிப்பானது, மேற்கண்ட எந்த சோதனை நுட்பங்களை உருவாக்க காரணமாக அமைந்தது?
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
இரண்டும் இல்லை
27.
பின்வரும் நீல்ஸ்போரின் அணு மாதிரி கருதுகோள்கள் கவனி.
I. எலக்ட்ரானின் ஆற்றல் வரையறுக்கப்பட்ட மதிப்புகளைப் பெற்றிருக்கும்.
II. எலக்ட்ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி சில குறிப்பிட்ட ஆற்றலுடைய ஆர்பிட் எனும் வட்டப்பாதையில் மட்டும் சுற்றி வருகின்றன.
III. ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரானின் கோண உந்த மதிப்பு ஆனது \(\frac {h }{4}\pi\)ன் முழு எண் மடங்காக இருக்கும்.
IV. எலக்ட்ரானது ஒரு குறிப்பிட்ட நிலை வட்டப்பாதையில் சுற்றி வரும் வரையில் அதன் ஆற்றலை இழப்பதில்லை. இவற்றுள் தவறான கூற்று எது?
I
II
III
IV
28.
Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH–(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது
மாறாது
¼ மடங்காக அதுவும் குறையும்
4 மடங்காக அதிகரிக்கும்
64 மடங்காக அதிகரிக்கும்
29.
N2(g) + O2(g) \(\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons } \) 2NO(g)
2NO(g)+O2(g)\(\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons } \) 2NO2(g)
மேற்கண்டுள்ள வினைகளின் சமநிலை
மாறிலிகளின் மதிப்புகள் முறையே K1 மற்றும்
K2
NO2(g)\({ \rightleftharpoons } \)1/2N2(g) + O2(g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?
\(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)
(K1=K2)1/2
\(\frac { 1 }{ 2{ K }_{ 1 }{ K }_{ 2 } } \)
\({ \left( \frac { 1 }{ { K }_{ 1 }{ K }_{ 2 } } \right) }^{ 3/2 }\)
30.
பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றை தேர்ந்தெடு
Sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும்அவை ஒன்றுக்கொன்று 1090 28' கோணத்தில்அமைந்துள்ளன.
dsp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவற்றில் எந்த இரண்டுக்கும் இடையே உள்ள கோணம் 900
ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 1200,கோணத்திலும், மீதமுள்ள இரண்டு
ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.
இவற்றில் எதுவுமில்லை
31.
பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?
PH3
(CH3)2
BH3
NH3
32.
கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.
காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது
33.
பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு
நிறை
கனஅளவு
என்தால்பி
நிறை/கனஅளவு
34.
வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?
q=w
q=0
ΔE=q
PΔV=0
35.
ஒரு கலனில் சம எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன.பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்சிஜனின் பின்ன அளவு
3/8
1/2
1/8
1/4
36.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?
8
4
3
1
37.
CaC2 ஐ வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.
Ca(CN)2
CaNCN
CaC2N2
CaNC2
38.
பெரிலியத்தின் சூழலைப் பொருத்து , பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
நைட்ரிக் அமிலம் இதை செயலற்றதாக்குகிறது
Be2C ஐ உருவாக்குகிறது
இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.
இதன் ஹைட்ரைடு எலக்ட்ரான் குறைவுள்ளது,மற்றும் பலபடி அமைப்புடையது.
39.
கார்பன் -12 பொறுத்து பின்வருவனவற்றுள் எது உண்மையான கூற்று?
C -12 ன் ஒப்பு அணுநிறை 12 u
கார்பனின் அனைத்து சேர்மங்களிலும் அதன் ஆக்ஸிஜனேற்ற எண் +4
1 மோல் கார்பன் -12 ல் 6.022 × 1022 அணுக்கள் உள்ளன.
அனைத்தும்
40.
சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?
Cu+ 2H2SO4 → CuSO4 + SO2+2H2O
C+ 2H2SO4 → CO2+2SO2+2H2O
BaCl2 + H2SO4 → BaSO4+2HCl
இவற்றில் எதுவுமில்லை
41.
பின்வரும் குவாண்டம் எண்களின் தொகுப்பினைக் கருதுக
| n | l | m | n | |
| (i) | 3 | 0 | 0 | +1/2 |
| (ii) | 2 | 2 | 1 | -1/2 |
| (iii) | 4 | 3 | -2 | +1/2 |
| (iv) | 1 | 0 | -1 | +1/2 |
| (v) | 3 | 4 | 3 | -1/2 |
பின்வரும் எந்த குவாண்டம் எண்களின் தொகுப்பு சாத்தியமற்றது?
(i), (ii), (iii) மற்றும் (iv)
(ii), (iv) மற்றும் (v)
(i) மற்றும் (iii)
(ii), (iii) மற்றும் (iv)
42.
d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது
\(\frac{\sqrt{2}h}{2\pi } \)
\(\frac{\sqrt{2}h}{2\pi } \)
\(\frac{\sqrt{2\times4 }h}{2\pi } \)
\(\frac{\sqrt{6}h}{2\pi } \)
43.
H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு
முக்காரத்துவ அமிலம்
இருகாரத்துவ அமிலம்
ஒரு காரத்துவ அமிலம்
இவற்றுள் ஏதுமில்லை
44.
ஒரு மோல் அமிலம் கலந்த KMnO4யை நிறமிழக்கச் செய்யத் தேவைப்படும் H2O2ன் மோல்களின் எண்ணிக்கை
\(\frac {1}{2}\)
\(\frac {3}{2}\)
\(\frac {5}{2}\)
\(\frac {7}{2}\)
45.
பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?
Al < O < C < Ca < F
Al < Ca < O < C < F
C < F < O < Al < Ca
Ca < Al < C < O < F
46.
pH4+ ன் பிணைப்புக் கோணமானது pH3 பிணைப்புக் கோணத்தைக் காட்டிலும் அதிகம்? ஏன்?
47.
கார உலோக ஹாலைடுகள் அனைத்தும் அயனிப்படிகங்களாகும். எனினும் லித்தியம் அயோடைடு சகப்பிணைப்புப் பணப்பை காட்டுகிறது.
48.
(n-1) d2, ns2 (இங்கு n =5) என்ற எலக்ட்ரான் அமைப்பினை நிறைவு செய்யும் தனிமம் தனிமைவரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினைக் கண்டறிக.
49.
புள்ளியில் காணப்படும் ஒரு அமிலம் பகுப்பாய்வில் பின்வரும் சதவீத இயைபினைக் கொண்டுள்ளது. 32% கார்பன் 4% ஹைட்ரஜன் 64% ஆக்சிஜன். அச்சேர்மத்தின் எளிய விகித வாய்ப்பாட்டினைக் கண்டறிக.
50.
சமநிலையின் மீது வினைவேக மாற்றியின் விளைவை எழுதுக.
51.
மலையேறுபவர் ஒருவரின் காதுகளில் சிறு வலி உரைப்பது ஏன்?
52.
பின்வருவனவற்றிற்கு \(\triangle \)S குறியீடுகளை
1. மீளாத தன்னிச்சையான செயல்
2. சமநிலையில் உள்ள மீள் செயல்முறை
3. துன்னிச்சையற்ற செயல்
53.
66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.
54.
ஒரு மூடிய ஒரு லிட்டர் கலனில், ஒரு மோல் PCl5 வெப்பப்படுத்தப்படுகிறது. சமநிலையில் 0.6 மோல் குளோரின் இருந்தால் சமநிலைமாறிலி மதிப்பினைகணக்கிடுக.
55.
33k வெப்பநிலையில் ஐம்பது சதவீதம் N2O4 சிதைகிறது எனில் அந்த வெப்பநிலையில், 1 atm அழுத்தத்தில் ஏற்படும் திட்டகட்டிலா ஆற்றல் மாற்றத்தை கணக்கீடுக.
56.
ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 60 மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 250சி மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனளவினை கண்டறிக.
57.
பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
(i) மெக்னீசிய பால்மம்
(ii) கடுங்காரம்
(iii) சுண்ணாம்பு
(iv) எரி பொட்டாஷ்
(v) சலவை சோடா
(vi) சோடா சாம்பல்
(vii) ட்ரோனா(trona)
58.
ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.
59.
பாரா ஹைட்ரஜனை, ஆர்த்தோ ஹைட்ரஜனாக எவ்வாறு மாற்றலாம்?
60.
Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
61.
32 g மீத்தேன் எரிக்கப்படும் போது உருவாகும் நீரின் அளவினைக் கணக்கிடுக
62.
NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8 x 10-2M, 1.2 x 10-2 M மற்றும் 3 x 10-2M. N2 மற்றும் H2 விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.
63.
வினைவேகம் ∝ [வினைபடுபொருள்]x என்பது எவ்விதிக்கான சமன்பாடு?
64.
எந்த வெப்பநிலைக்கு மேல் ஒரு துளை வழியே வாயுவினை விரிவடையச் செய்யும் போது வெப்பமாகிறது?
65.
ஹைட்ரஜன் பற்றி சிறு குறிப்பு வரைக.
66.
கோண உந்தக் குவாண்டம் எண் பெறும் மதிப்புகள் யாவை?
67.
எலக்ட்ரான் நுண்ணோக்கி உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது எது?
68.
இணையும் வினைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
69.
எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதி விலக்குகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
70.
சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?
71.
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
72.
சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.
73.
பெரிலியத்தின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் என்ன?உன் பதிலை விளக்குக.
74.
X, Y, Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7 மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசையில் இறங்கு வரிசைப்படுத்துக.
75.
கீழ்க்காணும் அமைப்புகளுக்கு என்ட்ரோபி மாற்றம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
1.வெப்பநிலை மாறா மற்றும் அழுத்தம் மாறா செயல்முறை
2.வெப்பநிலை மாறா மற்றும் கனஅளவு மாறா செயல்முறை
76.
ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக க் காணப்படுகிறது. உன் விடைக்கான காரணத்தை நியாயப்படுத்துக.
77.
பின்வருவனவற்றிற்கு நடைமுறைக்குறியீடுகளை எழுதுக.
1.அமைப்பினால் வெப்பமானது உறிஞ்சப்பிடும் போது
2.அமைப்பிலிருந்து வெப்பமானது வெளியேறும் போது
3.அமைப்பினால் வேலை செய்யப்படும் போது
4.அமைப்பின் மீது வேலை செய்யப்படும் போது
78.
கனநீரை மின்னாற் பகுத்தவை விளக்குக.
79.
எளிய விகித வாய்ப்பாடு வரையறு.
80.
3H2(g) + N2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி KP மற்றும் KC க்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.
81.
கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக
a) H2(g) + I2(g) ⇌ 2 HI
b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.
82.
CH4, NH3 மற்றும் H2O, ஆகியவற்றிலுள்ளமைய அணுக்கள் sp3 இனக்கலப்பிற்கு உட்பட்டுள்ளன. எனினும் அவற்றின் பிணைப்புக் கோணங்கள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?
83.
பின்வருவனவற்றை வரையறு
i) பிணைப்புத்தரம் ii) இனக்கலப்பு iii) σ- பிணைப்பு
84.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு
85.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.
86.
விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.
87.
ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக
88.
பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
89.
ஒரு கார உலோகம் (X) அதன் நீரேற்றிய சல்பேட் X2SO4.10H2O ஐ உருவாக்குகிறது.அந்த உலோகம் சோடியமாகவோ அல்லது பொட்டாசியமாகவோ இருக்க வாய்ப்புள்ளதா?
90.
சமான நிறை வரையறு
91.
ஒப்பு அணு நிறை வரையறு
92.
ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக
93.
பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

(i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
(ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?
94.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.
95.
HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.
96.
மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.
97.
ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.
98.
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.
99.
குளிர்சாதனப் பெட்டிகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் ஃபிரியான்-12 சேர்மமானது ஓசோன் படலம் சிதைவடைய காரணமாக அமைகிறது. தற்போது அதற்கு மாற்றாக சூழலுக்கு ஏற்ற சேர்மங்கள் பயன்படுத்தப்படுகிறது. 0.3 atm அழுத்தம் மற்றும் 1.5 dm3 கன அளவு உடைய ஃபிரியான் வாயு மாதிரியினைக் கருதுக. மாறாத வெப்பநிலையில், அழுத்தமானது 1.2 atm க்கு மாற்றப்படும் போது அதிகரிக்கும் அல்லது குறையும் கனஅளவைக் கணக்கிடுக.
100.
4f2 என்ற குறியீடு உணர்த்தும் பொருள் யாது? இதில் உள்ள எலக்ட்ரான்களுக்கு, நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் எழுதுக.
101.
423K வெப்பநிலையில் 1dm3 கலனில் 1 மோல் PC15 எடுத்துக்கொள்ளப்பட்டது சமநிலை அடைய அனுமதிக்கப்படுகிறது. வினைக்கலவையின் சமநிலைச் செறிவுகளைக் காண்க. (PC15 சிதைவடையும் வினைக்கும் 423K ல் KC ன் மதிப்பு 2]
102.
நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.
103.
பெரிலியத்தின் தனித்துவனமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
104.
எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகளை விவரித்து எழுதுக.
105.
ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.
106.
298k வெப்பநிலையில் ஆக்ஸ்ஜனை ஓசோனாக மாறும் 3/2 O2 \(\rightarrow O_{3(g)}\)வினைக்கு \(\triangle G^0 \) காண்க , திட்டஅழுத்த அலகுகளில் இவ்வினையின் KP மதிப்பு 2.47X 10-29
1.
(a)
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
2.
(c)
பிணைப்புத் தரம்
3.
(a)
Q = Kc எனில் வினை சமநிலையில் உள்ளது
4.
(b)
ஹென்றி விதி
5.
(d)
பலபடித்தான அமைப்பு
6.
(d)
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
7.
(a)
4,6
8.
(a)
(i)
9.
(d)
SiH4
10.
(c)
800-9000C
11.
(b)
X - கதிர் விளிம்பு விளைவு
12.
(b)
சீபார்க்
13.
(a)
ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டின் தீர்வுகள்
14.
(a)
2
15.
(a)
சோடியம் ஒரு பளப்பளப்பான அலோகம்
16.
(c)
பருப்பொருள்
17.
(b)
வளைந்த V வடிவம்
18.
(c)
ஹென்றி விதி
19.
(b)
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது
20.
(b)
CaOCl2.H2O
21.
(b)
கால்சியம்
22.
(b)
H
23.
(a)
S=+Ve
24.
(d)
ஆவர்த்தன பண்புகள்
25.
(c)
+1
26.
(c)
இரண்டும்
27.
(c)
III
28.
(d)
64 மடங்காக அதிகரிக்கும்
29.
(a)
\(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)
30.
(c)
ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 1200,கோணத்திலும், மீதமுள்ள இரண்டு
ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.
31.
(c)
BH3
32.
(c)
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
33.
(d)
நிறை/கனஅளவு
34.
(b)
q=0
35.
(c)
1/8
36.
(b)
4
37.
(b)
CaNCN
38.
(c)
இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.
39.
(a)
C -12 ன் ஒப்பு அணுநிறை 12 u
40.
(c)
BaCl2 + H2SO4 → BaSO4+2HCl
41.
(b)
(ii), (iv) மற்றும் (v)
42.
(d)
\(\frac{\sqrt{6}h}{2\pi } \)
43.
(c)
ஒரு காரத்துவ அமிலம்
44.
(c)
\(\frac {5}{2}\)
45.
(d)
Ca < Al < C < O < F
46.
1. pH3 மற்றும் pH4+ இரண்டிலும் p-ன் இனக்கலப்பு Sp3 ஆகும்.
2. pH4+ ல் உள்ள அனைத்து ஆர்பிட்டால்களும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஆனால் pH3 ல் ஒரு தனித்த எலக்ட்ரான் இணை காணப்படுகிறது.
3. pH4+ -ல் உள்ள H-P-H இணைப்பு ஆனது நான்முகி கோணமான 109.50 உடையது. ஆனால் pH3 -ல் ஒரு தனித்த எலக்ட்ரான் இணை உள்ளதால், அதன் பிணைப்புக் கோணம் குறைவாக உள்ளது.
47.
1. மிகச் சிறிய நேர்மின் எதிர்மின் அயனியை அதிக முனைவுறுத்தும் திறனைப் பெற்றுள்ளது.
2. கூடுதலாக அயோடைடு அயனி மிகப்பெரியதாக இருப்பதால் Li+ அயனியால் மிக அதிக அளவிற்கு முனைவுறுத்தப்பட முடியும்.
48.
1. எலக்ட்ரான் அமைப்பு: (n-1) d2, ns2
2. n=5 க்கு எலக்ட்ரான் அமைப்பு:
3. IUPAC தற்காலிக குறியீடு : 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 4d2 5s2
4. அணு எண் :40
5. அணு எண் : 40
6. இத்தனிமம் 4-ஆவது தொகுதி 5-வைத்து வரிசையில் (d-தொகுதி) உள்ள சிர்க்கோனியம் (zr) ஆகும்.
49.
| தனிமம் | சதவீதம் | அணுநிறை | ஒப்பு அணுக்களின் எண்ணிக்கை | எளிய விகிதம் | முழு எண் |
| C | 32 | 12 | \(\frac{32}{12}\)=2.66 | \(\frac { 2.66 }{ 2.66 } \)=1 | 2 |
| H | 4 | 1 | \(\frac { 4 }{ 1 } \)=4 | \(\frac { 4 }{ 2.66 } \)=1.5 | 3 |
| O | 64 | 16 | \(\frac { 64 }{ 16 } \)=4 | \(\frac { 4 }{ 2.66 } \)=1.5 | 3 |
எளிய விகித வாய்ப்பாடு =C2H5O3.
50.
வினைவேக மாற்றியை சேர்ப்பதன் மூலம் சமநிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
வினைவேக மாற்றியானது முன்னோக்கிய வினையையும் பின்னோக்கிய வினையையும் ஒரே அளவிற்கு பாதிக்கிறது.
எனவே, இது சமநிலைக் கலவையின் இயைபினை மாற்றியமைப்பதில்லை.
எனினும் குறைவான கிளர்வு ஆற்றல் உடைய வினை வழியினை உருவாக்குவதன் மூலம் வினைவேக மாற்றியானது சமநிலை விரைவாக எய்துவதற்கு காரணமாக அமைகிறது.
51.
*மலையேறும் ஒருவர்,அழுத்தக் குறைவினால் ஏற்படும் விளைவினை,காதுகளில் ஏற்படும் சிறுவலியின் மூலம் உணரமுடியும்.
* வெளிப்புற அழுத்தம் குறையும் போதிலும் காதின் உட்குழியில் உள்ள காற்றின் அழுத்தம் மாறாமல் இருக்கும்.
* இது ஒரு சமநிலையற்ற நிலையினை ஏற்படுத்துகிறது.
* இந்த அதிகப்படியான உள் அழுத்தம், செவிப்பறையினை வெளிநோக்கி தள்ளுவதால் சிறு வலி ஏற்படுகிறது.
* சிறிது நேரத்தில் கொட்டாவி விடுவதால், செவி உட்குழியில் உள்ள மிகுதியான காற்று வெளியேறும் நிகழ்வின் காரணமாக உள் அழுத்தமும், வெளி அழுத்தமும் சமமாவதுடன்,வலியினையும் குறைக்கிறது.
52.
| செயல் | தன்னிச்சை செயல் | சமநிலை | தன்னிச்சையற்ற செயல் |
| \(\triangle \)S | +ve | 0 | -ve |
53.
\(\lambda=\frac{h}{p}=\frac{6.626\times10^{-34}}{66.26\times10^{-28}}\)
λ=1x10-7 m
54.
Given that [PCI5]initial=\(\frac { 1mole }{ 1{ dm }^{ 3 } } \)
[C12]eq =0.6 mole dm-3
PCI5 \(\rightleftharpoons \) PCI3 + CI2
[PCI3]eq = 0.6 மோல் dm-3
[PCI5]eq=0.4 மோல் dm-3
\(\therefore \) \({ K }_{ c }=\frac { [{ PCI }_{ 3 }][CI_{ 2 }] }{ [PCI_{ 5 }] } =\frac { 0.6\times 0.6 }{ 0.4 } \)
Kc = 0.9
55.
தீர்வு
கொடுக்கப்பட்டவை
T = 33K
N2O4 ⇌ 2NO2
56.
P1 = 1.2 atm
T1 = 180 C + 273 = 291 K
T2 = 850 C + 273 = 358 K
P2 = ?
\({P_1\over T_1}-{P_2\over T_2}\)
\(P_2\left(P_1\over T_1\right)\times T_2\)

P2 - 1.48atm
57.
1.மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
2.சோடியம் ஹைட்ராக்சைடு
3.கால்சியம் ஆக்சைடு
4.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
5.சோடியம் கார்பனேட்
6.சோடியம் கார்பனேட்
7.டிரை சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் டைஹைட்ரேட்
58.
1. டி -பிராக்ளி கொள்கைப்படி, அணுக்கருவினை சுற்றி வரும் எலக்ட்ரானானது, துகள் மற்றும் அலைப்பண்பு ஆகிய இரு பண்புகளையும் பெற்றுள்ளது.
2. எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய வேண்டுமெனில், எலக்ட்ரான் சுற்றி வரும் வட்டப்பாதையின் சுற்றளவானது, அதன் அலை நீளத்தின் முழு எண் மடங்காக இருக்க வேண்டும்.
3. அவ்வாறு இல்லாத நிலையில் எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியற்றதாக இருக்கும்.
வட்டப்பாதையில் சுற்றளவு =\(n\lambda \)
\(2\pi r=n\lambda \)...(1)
இங்கு,
\(\lambda =\frac { h }{ mv } \)
\(\lambda \)-வின், மதிப்பை (1) ல் பிரதியிட,
\(2\pi r=\frac { nh }{ mv } \)...(2)
சமன்பாடு (2) ஐ மாற்றியமைக்க,
\(mvr=\frac { nh }{ 2\pi } \)...(3)
கோண உந்தம் =\(\frac { nh }{ 2\pi } \)
4. மேற்கண்ட சமன்பாடு ஏற்கனவே போர் என்பவரால் யூகித்தறியப்பட்ட ஒன்றாகும். எனவே போர் கொள்கையும், டி -பிராக்ளி கொள்கையும் ஒன்றுக்கொன்று உடன்படுகின்றன.
59.
ஒருவகை ஹைட்ரஜனானது மற்றோரு வகை ஹைட்ரஜனாக மாறும் செயல்முறை மிகவும் மெதுவானதாகும்.
(i) பிளாடினம், இரும்புபோன்ற வினைவேக மாற்றிகளைச் சேர்ப்பதன் மூலம் பாரா ஹைட்ரஜனை, ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம்.
(ii) மின் பாய்சல் மூலமாகவும் பாரா ஹைட்ரஜனை ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம்.
(iii) 8000°c க்கும் அதிகமான வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தல், O2, NO, NO2 போன்ற பாரா காந்தத்தன்மையுள்ள மூலக்கூறுகளைச் சேர்த்தல் அல்லது பிறவி நிலை / அணு நிலை ஹைட்ரஜனை சேர்த்தல் ஆகிய முறைகளினும் பாரா ஹைட்ரஜனை ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம்.
60.
(i) z=118 என்ற தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
86[Rn] 5f14 6d10 7s2 7p6
(ii) தனிம வரிசை அட்டவணையில் இது p-தொகுதியில் இடம்பெற்றுள்ளது. (இறுதி எலக்ட்ரான் p ஆர்பிட்டாலில் சேர்க்கப்படுவதால்)
(iii) வரிசை எண் =7 (n =7 என்பதால்)
(iv) தொகுதி எண் =18
(nd ஆர்பிட்டால் +ns ஆர்பிட்டால் +np ஆர்பிட்டால்)
(10) (2) (6)
61.
CH4(g) + 2O2(g) → CO2(g) + 2H2O(g)
சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில், 1 மோல் (16 g) CH4 எரிதலின் போது 2 மோல் (2 x 18 = 36 g) நீரினைத் தருகிறது.

32 g மீத்தேன் எரிதலின் போது

= 72 g நீரைத் தருகிறது.
62.
[NH3] =1.8 x 10-2 M
[N2] =1.2 x 10-2 M
[N2] =3 x 10-2 M
Kc =?
N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g)
Kc =\(\frac { \left[ { NH }_{ 3 } \right] ^{ 2 } }{ \left[ { N }_{ 2 } \right] \left[ { H }_{ 2 } \right] ^{ 3 } } \)
=\(\frac { 1.8\times { 10 }^{ -2 }\times 1.8\times 10^{ -2 } }{ 1.2\times 10^{ -2 }\times 3\times { 10 }^{ -2 }\times 3\times 10^{ -2 }\times 3\times 10^{ -2 } } \)
Kc =1 x 103 l2 mol-2.
63.
நிறைத்தாக்க விதி
64.
எதிர்மாறு வெப்பநிலைக்கு மேல்
65.
1. ஒரு தனித்த எலக்ட்ரானைப் பெற்றிருப்பதினால் இது அதிக வினைதிறன் மிக்கதாகவும்.
2. ஈரணு மூலக்கூறாகவும் (H2) காணப்படுகிறது.
3. எனினும், வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் வாயு மிகக்குறைந்த அளவே உள்ளது.
66.
பூஜ்ஜியம் முதல் (n-1)
67.
எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது என்ற கண்டுபிடிப்பு
68.
இரண்டு வினைப் பொருட்கள் வினைபுரிந்து ஒரு சேர்மத்தினைத் தரும் வினைகள், இணையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
69.
(i) எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதி விலக்குகளை மூன்று வகைப்படுத்தலாம். அவை:
(ii) எலக்ட்ரான் குறை மைய அணுவைக் கொண்டுள்ள மூலக்கூறுகள்.
(iii) ஒற்றை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகள்.
(iv) இணைதிற கூட்டினை விரிவாக்கும் தன்மையுடைய மூலக்கூறுகள்.
70.
இணையும் இரண்டு அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலட்ரான் இரட்டைகள் சமமாக பங்கிடப்படுவதால் அவைகளுக்கு இடையே வேதிப் பிணைப்பு உருவாகிறது. எனவே இது சகப்பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
71.
வெப்பமாறாச் செயல்முறையில் ஒரு வாயுவானது அதிக அழுத்தப்பகுதியிலிருந்து , குறைந்த அழுத்தப்பகுதிக்கு விரிவடையச் செய்யும் போது, வெப்பநிலையானது குறையும் இந்நிகழ்வு ஜூல் தாம்சன் விளைவு எனப்படுகிறது.
72.
\(H-C\equiv C-H\overset { Na }{ \longrightarrow } H-C\equiv C-Na\overset { Na }{ \longrightarrow } Na-C\equiv C-Na\)
73.
i.சிறிய உருவளவு மற்றும் அதிக முனிவுறுத்தும் திறன்
ii.அதிக எலக்ட்ரான் கவர் தன்மை மற்றும் அயனியாக்கும் ஆற்றல்
iii.இணை திற கூட்டில் காலியான d-ஆர்பிட்டால் காணப்படுவதில்லை.
74.
Y > Z > X > A
75.
1. \(\triangle S={1\over T}\int^2_1 \partial q_p.rev\)
2.\(\triangle S={1\over T}\int^2_1 \partial q_v.rev\)
76.
(i) ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அணு பருமன் அதிகம்.
(ii) லித்தியத்தின் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s1 இது தன் இணைதிற எலக்ட்ரானை எளிதில் இழந்து He-ன் எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
(iii) லித்தியத்தின் 2s1 எலக்ட்ரான் அதன் எலக்ட்ரான்களால் 1s2 பயனுள்ள வகையில் மறைக்கப்படுகிறது. எனவே அதன் மீது செயல்படும் உட்கரு கவர்ச்சி விசை குறைவு.
77.
நடைமுறைக் குறியீடுகளின் சுருக்கமான அட்டவணை
| 1. | அமைப்பினால் வெப்பமானது உறிஞ்சப்பிடும் போது | : | +q |
| 2. | அமைப்பிலிருந்து வெப்பமானது வெளியேறும் போது | : | -q |
| 3. | அமைப்பினால் வேலை செய்யப்படும் போது | : | -w |
| 4. | அமைப்பின் மீது வேலை செய்யப்படும் போது | : | +w |
78.
1. சாதாரண நீரில் 1.6 \(\times\) 10-4 சதவீதம் கனநீர் உள்ளது. கனநீரைவிட புரோட்டிய நீர் (H2O) அதிக அளவு பிரிகை அடையக் கூடியது.
2. எனவே நீரை மின்னாற் பகுக்கும் போது D2 வை விட H2 விரைவாக வெளியேறுகிறது.
3. எஞ்சியுள்ள கரைசலில் கனநீரின் செறிவு குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் வரை, மின்னாற்பகுத்தல் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது.
4. இவ்வாறு கனநீரை தொடர்ச்சியாக மின்னாற் பகுத்தல் செய்வதன் மூலம் டியூட்டிரியம் பெறப்படுகிறது.
79.
சேர்மத்தின், ஒரு முலக்கூறில் அடங்கியுள்ள வெவ்வேறு தனிமங்களின் எண்ணிக்கையின் எளிய விகிதத்தினை அத்தனிமத்தின் குறியீட்டிற்கு கீழ் ஓட்டாக எழுதுவதால் பெறப்படும் வாய்ப்பாடு எளிய விகித வாய்ப்பாடு எனப்படும்.
80.
தொகுப்பு முறையில் அம்மோனியா தயாரித்தல்:
'a' மோல் நைட்ரஜன் மற்றும் 'b' மோல் ஹைட்ரஜன் ஆகியா 'V ' கனஅளவுள்ள ஒரு கலனில் எடுத்துக் கொள்ளப்பட்டு அம்மோனியா உருவாக்கப்படும் வினையைக் கருதுக. 'X ' மோல் நைட்ரஜன் '3X' மோல் ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து 2X மோல் அம்மோனியா உருவாகிறது என்க.
\({ N }_{ 2 }(g)+3H_{ 2 }(g)\rightleftharpoons { 2NH }_{ 3 }(g)\)
| N2 | H2 | NH3 | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a | b | 0 |
| வினை புரிந்த மோல்களின் எண்ணிக்கை | X | 3X | 0 |
| சமநிலையில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a -x | b -3x | 2x |
| சமநிலையில் மோலார் செறிவு | \(\frac { a-x }{ V } \) | \(\frac { b -3x }{ V } \) | \(\frac { 2x }{ V } \) |
நிறைதக்க விதியைப் பயன்படுத்த,
\({ K }_{ C }=\frac { [NH_{ 3 }]^{ 2 } }{ \left[ { N }_{ 2 } \right] \left[ H_{ 2 } \right] ^{ 3 } } \)
\(=\frac { \left( \frac { 2x }{ V } \right) ^{ 2 } }{ \left( \frac { a-x }{ V } \right) \left( \frac { b-3x }{ V } \right) ^{ 3 } } \)
\(=\frac { \left( \frac { 4x^{ 2 } }{ V^{ 2 } } \right) }{ \left( \frac { a-x }{ V } \right) \left( \frac { b-3x }{ V } \right) ^{ 3 } } \)
\({ K }_{ C }=\frac { { 4x }^{ 2 }{ V }^{ 2 } }{ (a-x)(b-3x)^{ 2 } } \)
\({ K }_{ p }\) ன் மதிப்பை பின்வருமாறு கணக்கிடலாம்.
\({ K }_{ p }={ K }_{ C }(RT)^{ (\triangle n_{ g }) }\)
\(\triangle { n }_{ g }={ n }_{ p }-{ n }_{ r }=2-4=-2\)
\({ K }_{ p }=\frac { { 4x }^{ 2 }{ V }^{ 2 } }{ (a-x)(b-3x)^{ 3 } } (RT)^{ -2 }\)
சமநிலையில் மொத்த மோல்களின் எண்ணிக்கை,
\(n=a-x+b-3x+2x=a+b-2x\)
\({ K }_{ p }=\frac { { 4x }^{ 2 }{ V }^{ 2 } }{ (a-x)(b-3x)^{ 3 } } \times \left[ \frac { PV }{ n } \right] ^{ -2 }\)
\({ K }_{ p }=\frac { { 4x }^{ 2 }{ V }^{ 2 } }{ (a-x)(b-3x)^{ 3 } } \times \left[ \frac { n }{ PV } \right] ^{ -2 }\)
\({ K }_{ p }=\frac { { 4x }^{ 2 }{ V }^{ 2 } }{ (a-x)(b-3x)^{ 3 } } \times \left[ \frac { a+b-2x }{ PV } \right] ^{ -2 }\)
\({ K }_{ p }=\frac { 4x^{ 2 }(a+b-2x)^{ 2 } }{ { P }^{ 2 }(a-x)(b-3x)^{ 3 } } \)
81.
a) H2(g) + I2(g) ⇌ 2 HI
இங்கு வினைபடு பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை வினைவிளை பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது.
எனவே, இச்சமநிலையின் மீது கனஅளவு மாறுபாடு எவ்வித பதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
இங்கு வினைவிளை பொருட்களின் அளவினை அதிகரிக்க கன அளவினை கன அளவை அதிகரிக்க வேண்டும்.
c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
இங்கு வினைவிளை பொருட்களின் அளவினை அதிகரிக்க கன அளவினை குறைக்க வேண்டும்.
82.
(i) CH4, NH3 மற்றும் H2O ஆகியவற்றின் மைய அணுக்கள் சகப்பிணைப்புகளை உண்டாக்குகின்றன.
(ii) சகப்பிணைப்புகள் திசைப் பண்புடையவை. அவைகள் புறவெளியில் குறித்த திசையினை நோக்கி அமைகின்றன.
(iii) இதன் காரணமாக CH4, NH3 மற்றும் H2O மூலக்கூறுகளின் இரு சகப்பிணைப்புகளுக்கு இடையே குறிப்பிட்ட நிலையான கோணம் உருவாகிறது.
83.
பிணைப்புத்தரம் :
(i) இணையும் இரு அணுக்களுக்கிடையே காணப்படும் பிணைப்புகளின் எண்ணிக்கை பிணைப்புத்தரம் எனப்படுகிறது.
(ii) பிணைப்புத்தரம் =\(\frac { { N }_{ b }-{ N }_{ a } }{ 2 } \)
இங்கு,
Nb=பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
Na=எதிர் பிணைப்பு பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
இனக்கலப்பு:
(i)ஒரே அணுவின், ஒப்பிடத்தக்க அளவு ஆற்றலுடைய அணு ஆர்பிட்டால்கள் ஒன்றொடொன்று கலந்து, சம எண்ணிக்கையில் சம ஆற்றலை பெற்றுள்ள புதிய சமமான ஆர்பிட்டால்களை தரும் செயல்முறை இனக் கலப்பதால் என வரையறுக்கப்படுகிறது.
σ-பிணைப்பு:
(i) இரண்டு அணு ஆர்பிட்டால்கள் அச்சுகளின் வழியே மேற்பொருந்தும் போது உருவாகும் பிணைப்பு σ-பிணைப்பு எனப்படுகிறது.
(ii) இந்த மேற்பொருந்துதல் அச்சுவழி மேற்பொருந்துதல் எனவும் அழைக்கப்படுகிறது.
84.
1. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை பின்வருமாறு வரையறுக்கலாம்.
\(\boxed{G=H-TS}\)
2. G ஒரு பொண்மை சார் பண்பாகும். மேலும் G என்பது ஒற்றை மதிப்புடைய நிலைச்சார்பாகும்.
85.
1. ஒரு வகையான ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாறினாலும் ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி ஆகும்.
2. இது " ஆற்றல் அழிவின்மை விதி" என அறியப்படுகிறது.
86.
| விரவுதல் | பாய்தல் |
|---|---|
| ஒரு வாயுவின் மூலக்கூறுகள் மற்றொரு வாயுவின் வழியே நகரும் பண்பு | ஒரு கலனில் உள்ள வாயுவானது ஒரு மிகச்சிறிய துளையின் விழியே வெளியேறும் நிகழ்வு |
87.
PV = nRT என்ற சமன்பாடானது ஒரு வாயுவின் கனஅளவு மற்றும் மோல்களை தொடப்படுத்தும் கணிதமுறை வாய்ப்பாடு ஆகும்
இங்கு
P = அழுத்தம்
V = கன அளவு
T = வெப்ப நிலை
n = வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை
R = வாயு மாறிலி
88.
1.கார மண் உலோகங்களின் அணு ஆரம் சிறியது மற்றும் அதன் அடர்த்தி கார உலோகங்களை விட அதிகம்.
2.கால்சியம் சல்பேட்டின் ஹெமிஹைட்ரேட் பாரீஸ் சாந்து (CaS\O4.2H2) என ஆகும்.
3.393k வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி பாரீஸ் சாந்து பெறப்படுகிறது.
\(2CaSO_{4}.2H_{2}O_{(s)} \rightarrow 2CaSO_{4}.H_{2}O+3H_{2}O\)
89.
1.படிக சல்பேட்டை எளிதில் உருவாக்கும் உலோகம் சோடியம் ஆகும்.எனவே x என்பது சோடியம்.
2. இதன் நீரேற்றிய சல்பேட் Na2SO4.10H2O ஆகும்.
90.
1.008 kg ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்சிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அல்லது அயனியின் நிறையே, அதன் கிராம் சமான என வரையறுக்கப்படுகிறது.
91.
ஒரு அனுவின் சராசரி அணுநிறைக்கும், ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம்.
ஒப்பு அணு நிறை (Ar) = அனுவின் சராசரி நிறை / ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறை
92.
ஓர் அணுவில் அணுக்கருவை சுற்றியுள்ள பகுதியில் அதிகபட்ச அடர்த்தியை கொண்டுள்ள எலக்ட்ரானின் நிகழ்தகவு ஆகும்.
| ஆர்பிட்டால் | n | l |
| 3px | 3 | 1 |
| 4\(d_{x^{2}-y ^{2} }\) | 4 | 2 |
93.
i) அடி ஆற்றல் நிலை

ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றல்

94.
(i) லாந்தனைடுகள்: [54Xe] 4f1-145d1 6s2
(ii) ஆக்டினைடுகள்: [86Rn] 5f0-14 6d0-2 7s2
95.
(அ) வாயு:
1. மூலக்கூறுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படாததால் வாயுவாக உள்ளது.
(ஆ) திண்மம்:
1. NaH அனது ஒரு அயனி ஹைட்ரைடாகும்
2. இது சோடியம் உலோகத்தில் இருந்து ஒரு எலக்ட்ரானை ஹைட்ரஜனுக்கு இடப்பெயர்ச்சி செய்வதால் உருவாகிறது.
96.
1. எலக்ட்ரான் குறைபாடுடைய ஹைட்ரைடுகள் (Eg: B2H6)
2. எல்க்ட்ரான் அதிகமாக உள்ள ஹைட்ரைடுகள் (NH3,H2O)
3. சரியான எல்க்ட்ரானை கொண்டுள்ள ஹைட்ரைடுகள் (CH4, C2, H6, SiH)
97.
வெவ்வேறு தனிமங்களின் அயனிகள் ஒரே எலக்ட்ரான் எண்ணிக்கையை கொண்டிருப்பது ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் எனபப்டும்.
உதாரணம்:
| வெவ்வேறு தனிம அயனிகள் | Na+ | Mg2+ | AI3+ | F- | O2- | N3- |
| எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | 10 | 10 | 10 | 10 | 10 | 10 |
98.
HCl உருவாவதற்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
H2(g)+Cl2(g) ⟶ 2HCl(g)
கொடுக்கப்பட்ட வெப்ப அழுத்த நிலையில்,
2 மோல் HCl ஐ உருவாக்க 1 மோல் குளோரின் வாயு தேவைப்படுகிறது.
அதாவது 44.8 லிட்டர் HCl ஐ உருவாக்க 22.4 லிட்டர் குளோரின் வாயு தேவைப்படுகிறது.
∴ 11.2 லிட்டர் HCl ஐ உருவாக்க,
99.
ஃபிரியான் கனஅளவு (V1) =1.5 dm3
அழுத்தம் (P1) =0.3 dm3
'T' ஆனது மாறிலி
P2 =1.2 atm
V2 =?
∴ P1V1 = P2V2
⇒ V2 =\(\frac { { P }_{ 1 }{ V }_{ 1 } }{ { P }_{ 2 } } \)
V2 =0.375 dm3.
∴ கனஅளவு 1.5 dm3 லிருந்து 0.375 dm3 ஆகக் குறைகிறது.
100.
101.
\(PC1_{ 5 }\rightleftharpoons { PC1 }_{ 3 }+{ C1 }_{ 2 }\)
கொடுக்கப்பட்டவை
[PC15]ஆரம்பம் =1 mo1
V = 1dm3
KC =2
| PC15 | PC12 | C12 | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்கள் | 1 | - | - |
| பிரிகை அடைந்த மோல்கள் | x | 0 | 0 |
| சமநிலையில் உள்ள மோல்கள் | 1-x | x | x |
| சமநிலையில் செறிவு | \(\frac { 1-x }{ 1 } \) | \(\frac { x }{ 1 } \) |
\(\frac { x }{ 1 } \) |
\({ K }_{ C }=\frac { \left[ { PC1 }_{ 3 } \right] \left[ C1_{ 3 } \right] }{ \left[ { PC1 }_{ 5 } \right] } \)
\(2=\frac { x-x }{ (1-x) } \)
\(2-2x={ x }^{ 2 }\)
\(\Rightarrow { x }^{ 2 }+2x-2=0\)
\(x=\frac { -b\pm \sqrt { b^{ 2 }-4ac } }{ 2a } \)
\(a=1,b=2,c=-2\)
\(x=x=\frac { -2\pm \sqrt { 4-4x-2 } }{ 2(1) } \)
\(=\frac { -2\pm \sqrt { 12 } }{ 2 } \)
\(=\frac { -2\pm \sqrt { 4\times 3 } }{ 2 } \)
\(=\frac { -2\pm 2\sqrt { 3 } }{ 2 } \)
\(x=-1+\sqrt { 3 } ;-1-\sqrt { 3 } \) (சாத்தியமற்றது)
\(=-1+1.732\left[ \sqrt { 3 } =1.732 \right] \)
\(x=0.732\)
\(\therefore \) சமநிலை செறிவுகள்
\(\left[ { PC1 }_{ 5 } \right] _{ eq }=\frac { 1-x }{ 1 } \)
\(=1-0.732\\ =0.268M\)
\(\left[ { PC1 }_{ 3 } \right] _{ eq }=\frac { x }{ 1 } \)
\(=\frac { 0.732 }{ 1 } \)
\(\left[ { C1 }_{ 2 } \right] _{ eq }=\frac { x }{ 1 } \)
\(=\frac { 0.732 }{ 1 } \)
\(=0.732\)
102.
(i) நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் அமைப்பினை நாம் வரைவோம்.
(ii) அணுக்களின் அமைவு அமைப்பு

(iii) HNO3 ல் உள்ள ஒட்டு மொத்த இணைதிற எலக்ட்ரான்கள் =[(ஹைட்ரஜன்)+[1 க்ஸ் 5(நைட்ரஜன்)]+[3 x 6(ஆக்சிஜன்)]=1+5+18=24
(iv) அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை வரைக. படத்தில் காட்டியுள்ளவாறு நான்கு பிணைப்புகளை வரைய இயலும். இது எட்டு எலக்ட்ரான்களால் (4 பிணைப்பு இரட்டை) உருவாக்கப் பட்டதாகும்.

(v) மீதமுள்ள 16 எலக்ட்ரான்களை (24-8=16) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய ஆக்சிஜன் துவங்கி ஒவ்வொரு அணுவும் எட்டு எலக்ட்ரான்கள் பெறும் வகையில் பங்கீடு செய்ய வேண்டும். ஆறு தனித்த ஜோடி எலக்ட்ரான்கள், வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஒவ்வொரு ஆக்சிஜன் மீதும் தலா மூன்று ஜோடி தனித்த எலக்ட்ரான்கள் எட்டு எலக்ட்ரான் விதியை நிறைவு செய்யும் வகையில் பங்கிடப்படுகின்றது.
மீதமுள்ள இரு தனித்த இரட்டைகளை ஹைட்ரஜனோடு இணைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மீது பங்கிடுவதன் மூலம் அது எட்டு எலக்ட்ரானை பெறும்.

(vi) அனைத்து அணுக்களும் எட்டு எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேற்கண்டுள்ள பங்கீட்டில், நைட்ரஜனானது எட்டு எலக்ட்ரான்களுக்கு இரு எலக்ட்ரான்களை குறைவாக பெற்றுள்ளது. எனவே வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஆக்சிஜனிலிருந்து ஒரு தனித்த இரட்டையினை நகர்த்துவதன் மூலம் அந்த ஆக்சிஜனுக்கும், நைட்ரஜனுக்கும் இடையே மற்றொரு பிணைப்பினை உருவாக்குக.

103.
லித்தியம் மற்றும் அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளின் ஒப்பீடு:
| பெரிலியம் | தொகுதியிலுள்ள மற்ற தனிமங்கள் | ||
|---|---|---|---|
| i. | சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்குகின்றது | i. | அயனிச் சேர்மங்களை உருவாக்குகின்றன. |
| ii. | உயர்ந்த உருகுநிலை மற்றும் கொதிநிலை | ii. | குறைவான உருகுநிலை மற்றும் கொதிநிலை |
| iii. | உயர் வெப்பநிலைகளிலும் கூட நீருடன் வினை புரிவதில்லை. | iii. | நீருடன் வினை புரிகின்றன. |
| iv. | ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை. | iv. | ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைகின்றன. |
| v. | ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மையுடையவை | v. | ஹேலைடுகள் அயனித் தன்மை உடையவை. |
| vi. | பெரிலியத்தின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் ஈரியல்புத் தன்மை உடையவை |
vi. | கார இயல்புடையவை |
| vii. | ஆக்சைடு படலம் இருப்பதால் இது எளிதில் அமிலத்தால் பாதிப்படைவதில்லை | vii. | எளிதில் அமிலத்தால் பாதிப்படைகின்றன |
| viii. | பெரிலியம் கார்பைடு நீருடன் வினைபுரிந்து மீத்தேனை வெளியிடுகிறது. | viii. | நீருடன் அசிட்டிலீனைத் தருகிறது. |
| Beன் உப்புகள் அதிக அளவில் நீராற் பகுப்படையும் | ix. | நீரில் பகுப்படையும் |
104.
அனுவின் உருவளவு:
(i). அணுவின் உருவளவு அதிகரிக்கும்போது நிகர அணுக்கரு சுமை குறைவதால் எலக்ட்ரான் நாட்டம் குறையும்.
நிகர அணுக்கரு சுமை (a) செயலுறு அணுக்கரு சுமை:
(i). ஒரு அணுவின் நிகர அணுக்கரு சுமை அதிகரிக்கும்போது அந்த அணு அதிக விசையுடன் எலக்ட்ரானை ஏற்கும்.
(ii) எனவே, எலக்ட்ரான் நாட்டம் நிகர அணுக்கரு சுமைக்கு நேர்தகவில் இருக்கும்.
மறைத்தல் விளைவு:
(i) அணுக்கருவிற்கும் வெளிக்கூட்டிற்கும் இடையேயான எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் எலக்ட்ரான் சேர்க்கப்படுவதற்கான அணுக்கரு ஈர்ப்பு விசையை தடுக்கிறது.
(ii) எனவே, அதிக இடைநிலை ஆற்றல் மட்டம் இருந்தால் எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது.
எலக்ட்ரான் அமைப்பு:
(i) நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்களின் எலக்ட்ரான் நாட்டம் அதிகமாக இருக்கும்.
(ii) எனவே, ஓர் அணுவில் முழுவதும் அல்லது பாதியளவு நிரம்பிய ஆர்பிட்டால் இருந்தால் அதன் எலக்ட்ரான் நாட்டம் குறைவாக இருக்கும்.
105.
ஹைட்ரஜன் பிணைப்பு:
1. வேதியியல் மற்றும் உயிரியல் நிகழ்வுகளில் இயற்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான நிகழ்வு ஹைட்ரஜன் பிணைப்பாகும்.
2. DNA மற்றும் புரதங்களின் வடிவமைப்பில், ஹைட்ரஜன் பிணைப்பு மிக முக்கிய பாங்கு வகிக்கிறது.
3. ஒரு ஹைட்ரஜன் அணுவானது (H), அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய புளூரின் (F) அல்லது ஆக்ஸிஜன் (O) அல்லது நைட்ரஜன் (N) போன்ற அணுக்கள் ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் போது, அப்பிணைப்பு முனைவுறு பிணைப்பாகிறது.
4. இவ்விளைவின் காரணமாக முனைவுற்ற ஹைட்ரஜன் அணுவானது அதன் சூழலில் உள்ள மற்றொரு எலக்ட்ரான் கவர்தன்மை அதிகமுடைய அணுவுடன் ஒரு வலிமை குறைந்த நிலை மின்னியில் கவர்ச்சி விசையை ஏற்படுத்தும் இயல்பினைப் பெற்றுள்ளது.
5. இக்கவர்ச்சி விசையே ஹைட்ரஜன் பிணைப்பு (20-50 KJ mol-1) என்று அழைக்கப்படுகிறது. இப்பிணைப்பு விடுபட்ட கோடுகளால் (... ...) குறிக்கப்படுகிறது.
6. இப்பிணைப்பு சகப்பிணைப்பை விட வலிமை குறைவானது (>100 KJ mol-1) ஆனால் வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையைவிட வலிமையானது (<20 KJ mol-1) ஹைட்ரஜன் பிணைப்பானது. ஆவி அழுத்தம் (H2O மற்றும் H2 S) கொதிநிலை, திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் தன்மை (H2 O மற்றும் C2H5OH ). பரப்பு இழுவிசை, அடர்த்தி, பாகுநிலைத்தன்மை. ஆவியாதல் மற்றும் உருகுதலின் வெப்பம் போன்ற பல்வேறு இயற்பண்புகளில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு:
1. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பானது ஒரு தனித்த மூலக்கூறுக்கு உள்ளாகவே நிகழ்கிறது.

மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு:
1. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன்பிணைப்பானது இரண்டு வேறுபட்ட மூலக்கூறுகளுக்கிடையே நிகழ்கிறது.
2. ஹைட்ரஜன் பிணைப்பு இடைவினையை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக ஹைட்ரஜன் வழங்கி மற்றும் ஹைட்ரஜன் ஏறபியினை தகுந்த இடத்தில் பெற்றுள்ள ஒரே மாதிரியான மூலக்கூறுகள் அல்லது வெவ்வேறு மூலக்கூறுகளுக்கிடையே இத்தகைய ஹைட்ரஜன் பிணைப்பு உருவாகிறது.
3. எடுத்துக்காட்டாக: மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பானது, அம்மோனியா மூலக்கூறுகளுக்கிடையே நிகழலாம். அல்லது நீர் மூலக் கூறுகளுக்கிடையேயோ அல்லது அம்மோனியா மற்றும் நீர் மூலக்கூறுகளுக்கிடையேயோ உருவாகலாம்.
106.
\(\triangle G^0 =-2.303 RT log K_p\)
R=8.314 JK-1 mol-1
Kp =2.47x10-29
T=298K
\(\triangle G^0 \)= -2.303(8.314)(298)log(2.47x10-29)
\(\triangle G^0 \)=16300 J mol-1
\(\triangle G^0 \)= 16.3 KJ mol-1
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards