11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் ( 11th Standard Tamil Medium Chemistry Important Question )
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கூற்று (A) : நீர் மூலக்கூறு 'V' வடிவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் CO2 நேர்க்கோட்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
காரணம் (R): வேதிப்பிணைப்பினைப் பற்றிய கொள்கையை ப் பயன்படுத்தி இவற்றை விளக்க இயலும்
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
(A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) தவறு (R) தவறு
2.
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு.
திட நிலைமையில் காணப்படும் வினைப் பொருள்களை கொண்டுள்ள சமநிலை அமைப்புகளின் மீது மட்டுமே அழுத்த அதிகரிப்பு
அமைப்பின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது அடர்க்கு இணையான அளவில் கன அளவு குறைகிறது
கன அளவு குறையும் போது அதனை சமன் செய்யும் வகையில் குறைவான மோல்கள் எண்ணிக்கையுடைய வாயுவினை பொருள்கள் உள்ள திசையை நோக்கி சமநிலை நகர்கிறது
மேற்கண்ட அனைத்தும் தவறு
3.
வேதி வினைகளில் நேரத்தைப் பொறுத்து வினைபடு பொருள்களின் செறிவு
அதிகரிக்கிறது
குறைகிறது
மாறுபடாது
இருமடங்காகிறது
4.
ஒரு வினையின் ஆற்றல்களை ஆயிந்தறிவதற்கான ஒரு அணுகுமுறை
படிகக்கூடு ஆற்றல்
பார்ன் -ஹேபர் சுற்று
பாம்கலோரி மீட்டர்
ஹெஸ்ஸின் வெப்பமாறா கூட்டல் விதி
5.
வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் ________ வெப்ப இயக்கவியல் விதிகளின் அடிப்படையில் அமைகின்றன.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
6.
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு
வாயுக்களை திரவமாக்குதல் நிகழ்வானது வாயு மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசை உள்ளது என்பதைக் காட்டுகிறது.
அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் எல்லா வாயுக்களும் நல்லியல்பு வாயுவின் தன்மையினைப் பெற்றிருக்கும்.
நல்லியல்பு தன்மையற்ற வாயுக்கள் இயல்பு வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன
இயல்பு வாயுக்கள் சில நிபந்தனைகளில் நல்லியல்புத் தன்மையை நெருங்குகின்றன.
7.
பின்வருவனவற்றை பொருத்துக.
| A | 1 atm | 1 | 6894.76 pa |
| B | 1 mm Hg | 2 | 105 pa |
| C | 1 bar | 3 | 133.322 pa |
| D | 1 psi | 4 | 101325 pa |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 3 | 4 | 2 | 1 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
8.
மாறா வெப்பநிலையில் 56கே நைட்ரஜன் மற்றும் 96கி ஆக்சிஜன் ஆகியவை உள்ள கலவையின் மொத அழுத்தம் 10 atm எனில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பகுதி அழுத்தங்கள் முறையே
4,6
8,2
6,4
2,8
9.
லித்தியத்தின் வினைத்திறன் தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களின் வினைத்திறன் ஒப்பீடும் போது லித்தியத்தின் வினைத்திறன்
அதிகம்
குறைவு
பூஜ்ஜியம்
மாற்றமடைவதில்லை
10.
பின்வருவனவற்றுள் எது ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன் எனக் குறிப்பிடுக.
வீரியமிக்க புரைத்தடுப்பான்
காகிதம் வெளுக்கும் பொருளாக
நீர் சுத்திகரித்தலில் மாசுக்களை ஒடுக்கமடையச் செய்ய
இவை அனைத்தும்
11.
H2O2 கரைசலானது இதில் சேமித்து வைக்கப்படுகிறது?
கண்ணாடி கலன்
லெட் கலன்
நெகிழி கலன்
தாமிர கலன்
12.
பொருட்களின் பண்புகள் அவற்றின் எண்களின் பண்புகளோடு தொடர்புடையது என்று கூறியவர்
லவாய்சியர்
டாபரீனர்
டி-சான்கோர்டாய்ஸ்
நியூலண்ட்
13.
மரபு இயக்கவியற் கொள்கையால் _________ இயக்கத்தினை சரிவர விளக்க இயலவில்லை
நுண்துகளின்
குறிப்பிட்ட நிறையுடைய பொருளின்
பேரளவு துகளின்
இவை அனைத்தும்
14.
பின் வருவனவற்றுள் தவறானது எது?
ஹெய்சன்பர்க் தனது நிச்சயமற்றத் தன்மை கோட்பாட்டை உருவாக்கினார்
எலக்ட்ரானைப் போன்ற நுண்துகளிற்கு, நிச்சயமற்றக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது
அதிக நிறையுடைய பெரிய துகளிற்கு இதன் விளைவு குறிப்பிடத்தக்க ஒன்று.
மேற்கண்ட அனைத்தும் தவறு
15.
கீழ்கண்டவற்றுள் எது பொட்டாசியம் டைகுரோமேட்டின் தனித்த அணு [அ] மூலக்கூறின் நிறை [கிராமில்]
29.86 x 10-23
26.242 x 10-23
48.851 x 10-23
1.9926 x 10-23
16.
பின்வருவனவற்றில் தவறானது எது?
சோடியம் ஒரு பளப்பளப்பான அலோகம்
குளோரின் ஓர் எரிச்சலூட்டும் வாயு
சோடியம் குளோரைடு படிகத்தன்மையுடைய திண்மம்
மேற்கண்ட அனைத்தும் தவறு
17.
நீர் மூலக்கூறில் உள்ள OH பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்களின் சராசரி மதிப்பு
502 KJ mol-1
427 KJ mol-1
546.8 KJ mol-1
464.5 KJ mol-1
18.
ஒரு அணுவின் முறைசார் மின்சுமையை கண்டறிய பயன்படும் சமன்பாடு?
Nv-\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
Nv+\(\left( { N }_{ l }-\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
Nv-\(\left( { N }_{ l }-\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
Nv+\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
19.
செறிவை அதிகரிப்பதன் மூலம் சமநிலையின் மீது ஏற்படும் விளைவு
முன்னோக்கு வினை
பின்னோக்கு வினை
வெப்பக் கொள்வினை
பாதிப்பு எதுமில்லை
20.
மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு
p மற்றும் \(\frac { 1 }{ v } \)
pv மற்றும் v
p மற்றும் v
v மற்றும் \(\frac { 1 }{ p } \)
21.
கார உலோகங்களின் அயனி ஆரம் அமைந்துள்ள வரிசை
Li<Na<K<Rb<Cs
Na<Li<K<Rb<Cs
Li<Na<K<Rb<Cs
Na<Li<Rb<K<Cs
22.
பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?
H=G-TS
G=H-TS
\(G= \triangle E- T\triangle S\)
G=V-TS
23.
பின்வருவனவற்றுள் அணுவின் எலக்ட்ரான் நாட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
உருவ அளவுடன் நேர்விகிதத் தொடர்புடையது
உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது
உருவ அளவைப் பொறுத்து அல்ல
இவற்றில் எதுவுமில்லை
24.
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
போரானை விட கார்பனின் அணுக்கரு மின்சுமை அதிகம்
போரானை விட காப்பரின் உருவ அளவு பெரியது
கார்பன் எலக்ட்ரான் குறை சேர்மங்களை உருவாக்குகின்றது
கார்பன் அயனிகி சேர்மங்களை உண்டாக்கும்
25.
பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத் திறன்
குறைவு
அதிகம்
பூஜ்ஜியம்
மதிப்பு இல்லை
26.
பின்வரும் வினைகளை கவனி :
I. 4Fe +3O2 \(\rightarrow \) 2Fe2O3
II. Fe2+ \(\rightarrow \)Fe3+ + e-
III. H2S+CI2 \(\rightarrow \) 2HCl + S
IV. CuO+C \(\rightarrow \) Cu+CO
இவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.
I
II
III
IV
27.
சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களின் நிலைப்புத்தன்மை அதிகம். இது பின்வரும் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?
பரிமாற்ற ஆற்றல்
நிலை ஆற்றல்
இயக்க ஆற்றல்
இவற்றுள் எதுவுமில்லை
28.
400K வெப்பநிலையில் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO2 (g) மற்றும் அதிகளவு SrOஉள்ளது (திண்ம SrO ன்
கனஅளவை புறக்கணிக்க). கலனில் பொருத்தப்பட்டுள்ள உந்து தண்டினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு
குறைக்கப்படுகிறது. CO2 ன் அழுத்தமானது அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கனஅளவின் மதிப்பு யாது கொடுக்கப்பட்டவை:
SrCO3 (s) ⇌ SrO (s) + CO2 (g)
KP = 1.6 atm
2 லிட்டர்
5 லிட்டர்
10 லிட்டர்
4 லிட்டர்
29.
ClF3 இன் வடிவம்
முக்கோணசமதளம்
பிரமிடுவடிவம்
'T' வடிவம்
இவற்றில் ஏதுமில்லை
30.
ஒரு வினையின் சமநிலை மாறிலி அறைவெப்பநிலையில் K1 மற்றும் 700K ல் K2 ஆகும். K1>K2 எனில்,
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் உமிழ்வினை.
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் கொள்வினை.
இவ்வினை சமநிலையை அடையா து.
பின்னோக்கு வினை ஒரு வெப்ப உமிழ்வினை
31.
இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாவது
முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போதும்போது
சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
பிணைப்பில் ஈடுபடாதஅணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
32.
ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம்
>0
> 0
<0
=0
33.
ஒரு அமைப்பின் மீது 4kJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1kJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்
+1kJ
-5kJ
+3kJ
-3kJ
34.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?
8
4
3
1
35.
வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது
பாயிலின் விதி
நியூட்டனின் விதி
கெல்வினின் விதி
பிரௌனின் விதி
36.
பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது
K2CO3
Na2CO3
BaCO3
Li2CO3
37.
தவறான கூற்றைக் கண்டறியவும்
உலோக சோடியம் ,கரிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.
சோடியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது, மேலும் இது கனிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.
சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்
பொட்டாசியம் பைகார்பனேட் அமிலத் தன்மை உடைய உப்பு
38.
1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.
0%
4.4%
16%
8.4%
39.
கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?
கார்பன்
ஆக்ஸிஜன்
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்
கார்பன், ஆக்ஸிஜன் இரண்டுமில்லை
40.
போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப் பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.
n = 6 இல் இருந்து n = 1
n = 5 இல் இருந்து n = 4
n = 5 இல் இருந்து n = 3
n = 6 இல் இருந்து n = 5
41.
E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?
எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.
n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.
42.
Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்
+169 kcal mol-1
- 169 kcal mol-1
+ 527 kcal mol-1
- 527 kcal mol-1
43.
டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------
1p +0n
2p +1n
1p +2n
இவற்றில் ஏதும் இல்லை
44.
ஆர்த்தோ, பாரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அவைகள் உட்கரு சுழற்சி ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்)
ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.
குறைந்த வெப்பநிலை, பாரா மாற்றியத்திற்கு சாதகமாக உள்ளது.
பாரா மாற்றியத்தின் வெப்ப கடத்துதிறன், அதன் ஆர்த்தோ மாற்றியத்தை விட 50% அதிகம்
45.
பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
புரோமின்
குளோரின்
அயோடின்
ஹைட்ரஜன்
46.
அணுக்களுக்கிடையேயான எலக்ட்ரான்களின் பரிமாற்ற பங்கீட்டினால் அவைகள் நிலைப்புத் தன்மையைப் பெறுகின்றன என்ற கருத்தை முன்மொழிந்தவர் யார்?
47.
ஒரு வெப்ப பரிமாற்றமில்லா குடுவையில் உள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தம் யாது?
48.
நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினால் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் செயல்முறை எதற்கு உதாரணம்?
49.
வெப்ப இயக்கவியலின் தத்துவங்கள் மூன்று வெப்ப இயக்கவியல் விதிகளின் அடிப்படையில் அமைகின்றன. அவ்விதிகள் எதைப்பற்றி கூறுகின்றன.
50.
சார்லஸ் விதியை வரையறு.
51.
வாயு மற்றும் ஆவி இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு யாது?
52.
இயற்கை மின்காப்புப் பொருள் என அறியப்படுவது எது?
53.
பெரிலியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவை ஏறத்தாழ பூஜ்ய எலக்ட்ரான் நாட்ட மதிப்பை பெற்றுள்ளன. ஏன்?
54.
தனிமங்களை வகைப்படுத்துவதன் அவசியம் என்ன? எதன் அடிப்படையில் தனிமங்கள் வகைப்படுத்தப்பட்டது?
55.
டியூட்ரியம் பற்றி சிறு குறிப்பு வரைக.
56.
எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய நிபந்தனை என்ன?
57.
கோண உந்தக் குவாண்டம் எண் பெறும் மதிப்புகள் யாவை?
58.
இயற் நிலைமையின் அடிப்படையில் பருப்பொருட்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்? பருப்பொருட்களை ஒரு எயர்நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு எவ்வாறு மாற்றுவாய்?
59.
அமோனியா BF3 உடன் நிகழ்த்தும் பிணைப்பை விளக்குக.
60.
X, Y, Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7 மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசையில் இறங்கு வரிசைப்படுத்துக.
61.
பின்வருவனவற்றிற்கு நடைமுறைக்குறியீடுகளை எழுதுக.
1.அமைப்பினால் வெப்பமானது உறிஞ்சப்பிடும் போது
2.அமைப்பிலிருந்து வெப்பமானது வெளியேறும் போது
3.அமைப்பினால் வேலை செய்யப்படும் போது
4.அமைப்பின் மீது வேலை செய்யப்படும் போது
62.
ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக.
63.
வினைகட்டுப்பாட்டுக் காரணி - குறிப்பு வரைக.
64.
சமநிலை வினையின் திசையினை எவ்வாறு கணிப்பாய் என்பதை விவரி.
65.
VSEPR கொள்கையை விளக்குக. இக்கொள்கையை பயன்படுத்தி IF7, மற்றும் SF6 ஆகியவற்றின் வடிவமைப்புகளை கண்டுபிடி.
66.
ஆக்ஸிஜன் மூலக்கூறிற்கு மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) வரைபடத்தை வரைக. அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக, மேலும் O2 மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது எனக் காட்டுக.
67.
ஒரு வினையில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சமநிலை மாறிலி மாறாத மதிப்பினை பெற்றிருக்கிறது Qன் மதிப்பும் மாறாமல் இருக்குமா? விவரி.
68.
பின்வருவனவற்றுள் நிலை மற்றும் வழிச்சார்புகளை கண்டறிக.
அ.என்தால்பி
ஆ.என்ட்ரோபி
இ.வெப்பம்
ஈ.வெப்பநிலை
உ.வேலை
ஊ.கட்டிலா ஆற்றல்
69.
நடுநிலையாக்கல் என்தால்பியை வரையறு.
70.
a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி
71.
கேலூசாக் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரு மாதிரிகளின் பெயர்களைத் தந்து விளக்குக.
72.
பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
(அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
(ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்
73.
பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?
74.
STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.
75.
Mn2+ மற்றும் Cr3+ ஆகியனவற்றின் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.
76.
ஆக்ஸி ஜனேற்ற எண் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய்?
77.
ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?
78.
கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
(i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
(ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு
79.
HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.
80.
முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?
81.
எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.
82.
பொட்டாசியம் குளோரைடில் அயனிப்பிணைப்பு உருவாதலை விளக்குக.
83.
பனிக்கட்டி குளிர் நிலையில் உள்ள நீரில் உள்ள ஒருபலூனை, கொதி நீருள்ள தொட்டிக்கு மாற்றும்போது ஏற்படும் நிகழ்வு யாது?
84.
மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கு.
85.
பின்வருவனவற்றின் ஒப்பு மூலக்கூறு நிறையினை கணக்கிடுக.
(i) ஹைட்ரஜன்
(ii) குளுக்கோஸ்
86.
Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத் எவ்வாறு தீர்மானிப்பாய்?
87.
ஆர்கான் ஒரு மந்தவாயு. இது மின்விளக்குகளில் டங்ஸ்டன் இழை ஆவியாவதைத் தடுக்க பயன்படுகிறது. மாறா கனஅளவில் உள்ள ஒரு மின் விளக்கில் 180C யில் 1.2atmல் உள்ள ஆர்கான் வாயு 850C க்கு வெப்பப்படுத்தப்படுகிறது. அதன் இறுதி அழுத்தத்தினை (atmல்) கணக்கிடுக.
88.
தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.
89.
\(\triangle H^o _f\) for CO2(g), CO(g)மற்றும் H2O(g) மதிப்புகள்-393.5,-111.31 மற்றும்-242 மது mol-1
90.
அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நீ எவ்வாறு வரையறுப்பாய்?
91.
NO2ன் தொடக்க அழுத்தம் 1atm மற்றும் O2ன் தொடக்க அழுத்தம் 1atm ஐ கொண்ட 2000C வெ ப்பநிலையில், NOன் ஆக்ஸிஜனேற்ற வினை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமநிலையில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனஅறியப்படுகிறது. KPன் மதிப்பினை கணக்கிடு.
92.
4.1 வளிமண்டல அழுத்தம்,மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு,3710J ஆற்றலை உறிஞ்சி,2L விரிவடைகிறது.இந்த விரிவடைதலின்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக .
93.
ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக
94.
பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
(i) மெக்னீசிய பால்மம்
(ii) கடுங்காரம்
(iii) சுண்ணாம்பு
(iv) எரி பொட்டாஷ்
(v) சலவை சோடா
(vi) சோடா சாம்பல்
(vii) ட்ரோனா(trona)
95.
Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.
96.
கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?
97.
இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.
98.
N2+ - ன் பிணைப்பு நீளமானது M2-ன் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் NO+ ன் பிணைப்பு நீளமானது NO வைக் காட்டிலும் குறைவு. ஏன்?
99.
1 மோல் மெக்னீசியம, 1 மோல் திரவபுரோமினிலிருந்து 1 மோல் மெக்னீசியம் புரோமைடு தயாரிக்கும் போது 524 KJ அளவு ஆற்றல் வெளிப்படுகிறது. மெக்னீசியத்தின் பதங்கமாதல் வெப்பம் 148 KJ mol-1, திரவ புரோமினின் ஆவியாதல் வெப்பம் 31 KJ mol-1, புரோமின் வாயுவை அணுக்களாக்க தேவைப்படும் பிரிகையடைதல் வெப்பம் 193 KJ mol-1, மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் 2187 KJ mol-1, புரோமினின் எலக்ட்ரான் நாட்டம் -662 KJ mol-1எனில், மெக்னீசியம் புரோமைடு படிகத்தின் படிகக்கூடு ஆற்றலைக் கணக்கிடுக.
100.
எளிதில் தீப்பற்றும், ஒரு குறிப்பிட்ட கனஅளவுடைய வாயு நிலையில் ஹைட்ரோ கார்பன், ஒரு சிறு துளையின் வழியே 1.5 நிமிடங்களில் விரவுகின்றது. இதே வெப்ப அழுத்த நிலைகளில் சம கனஅளவு உடைய புரோமின் ஆவியானது அதே துளையின் வழியே விரவுவதற்கு 4.73 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறையினை கண்டறிக. மேலும் அந்த ஹைட்ரோ கார்பன் என்னவாக இருக்கலாம் எனக் கூறு. [புரோமின் மோலார் நிறை 159.8 g mol-1 என கொடுக்கப்பட்டுள்ளது.
101.
4f2 என்ற குறியீடு உணர்த்தும் பொருள் யாது? இதில் உள்ள எலக்ட்ரான்களுக்கு, நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் எழுதுக.
102.
PCI5 சிதைவடைதலுக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிடு
103.
பெரிலியத்தின் தனித்துவனமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
104.
போர் ஆரம் [r] மற்றும் டி-பிராக்ளி [λ] அலைநீளத்திற்இடையேயான தொடர்பை தருக.
105.
ஹைட்ரஜனின் பயன்களை விவரி.
106.
ஆக்சிஜனேற்ற எண்ணை வரையறு. பின்வரும் சமன்பாட்டை ஆக்சிஜனேற்ற எண் முறையை பயன்படுத்தி சமன்செய்க.
AS2S3+ HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
1.
(a)
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
2.
(a)
திட நிலைமையில் காணப்படும் வினைப் பொருள்களை கொண்டுள்ள சமநிலை அமைப்புகளின் மீது மட்டுமே அழுத்த அதிகரிப்பு
3.
(b)
குறைகிறது
4.
(a)
படிகக்கூடு ஆற்றல்
5.
(c)
மூன்று
6.
(b)
அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் எல்லா வாயுக்களும் நல்லியல்பு வாயுவின் தன்மையினைப் பெற்றிருக்கும்.
7.
(d)
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
8.
(a)
4,6
9.
(b)
குறைவு
10.
(b)
காகிதம் வெளுக்கும் பொருளாக
11.
(c)
நெகிழி கலன்
12.
(c)
டி-சான்கோர்டாய்ஸ்
13.
(a)
நுண்துகளின்
14.
(c)
அதிக நிறையுடைய பெரிய துகளிற்கு இதன் விளைவு குறிப்பிடத்தக்க ஒன்று.
15.
(a)
29.86 x 10-23
16.
(a)
சோடியம் ஒரு பளப்பளப்பான அலோகம்
17.
(d)
464.5 KJ mol-1
18.
(a)
Nv-\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
19.
(a)
முன்னோக்கு வினை
20.
(c)
p மற்றும் v
21.
(a)
Li<Na<K<Rb<Cs
22.
(b)
G=H-TS
23.
(b)
உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது
24.
(a)
போரானை விட கார்பனின் அணுக்கரு மின்சுமை அதிகம்
25.
(c)
பூஜ்ஜியம்
26.
(d)
IV
27.
(a)
பரிமாற்ற ஆற்றல்
28.
(b)
5 லிட்டர்
29.
(c)
'T' வடிவம்
30.
(a)
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் உமிழ்வினை.
31.
(b)
சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
32.
(d)
=0
33.
(c)
+3kJ
34.
(b)
4
35.
(a)
பாயிலின் விதி
36.
(d)
Li2CO3
37.
(c)
சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்
38.
(c)
16%
39.
(b)
ஆக்ஸிஜன்
40.
(d)
n = 6 இல் இருந்து n = 5
41.
(b)
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
42.
(c)
+ 527 kcal mol-1
43.
(c)
1p +2n
44.
(b)
ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.
45.
(d)
ஹைட்ரஜன்
46.
G.N. லூயிஸ்
47.
273 k வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தம்
48.
மீளும் செயல்முறை
49.
1. ஆற்றலின் பல்வேறு வடிவங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தின் அனுபவங்களை முதல் மற்றும் இரண்டாம் விதிகள் தொகுத்துக் கூறுகின்றன.
2. என்ட்ரோபியை கணக்கிடுதல் மற்றும் தனிச்சுகி கெல்வின் வெப்ப நிலையை அடைய இயலாத தன்மை ஆகியவற்றை வெப்ப இயக்கவியல் மூன்றாம் விதி விளக்குகிறது.
50.
ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவிற்கு, அதன் அழுத்தம் மாறாதிருக்கும் போது, கன அளவானது அதன் வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்புடையது.
V ∝ T (p, n மாறிலி) (அ)
V=kT (அ)
\(\frac { V }{ T } \)=மாறிலி
51.
1. அறை வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் இயல்பாகவே வாயு நிலைமையில் உள்ள ஒரு பொருள் வாயு எனவும்.
2. அறை வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் திட அல்லது திரவ நிலையில் இருக்கும் ஒரு பொருளின் வாயு நிலை வடிவம் ஆவி எனவும் அழைக்கப்படுகிறது.
52.
ஜிப்சம்
53.
1. Be - 1s2 2s2
2. N - 1s2 2s2 2p3
2. பெரிலியம் நைட்ரஜன் போன்ற தனிமங்களில் ஒரு எலக்ட்ரான் சேர்க்கப்படும் நிலையில் அவற்றின் அதிக நிலைப்புத்தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பு இழக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இத்தகைய தனிமங்கள் ஏறத்தாழ பூஜ்ஜிய எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளன.
54.
1. தனிமங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு அதனை வகைப்படுத்துதல் அவசியமாகிறது.
2. தனிமங்களை வகைப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டன.
3. எனினும் அணுநிறையின் அடிப்படையிலான வகைப்பாடு, தனிம வரிசை அட்டவணையினை சரியான வடிவில் உருவாக்குவதற்கு வழிவகை செய்தது.
55.
1. டியூட்ரியத்தை கன ஹைட்ரஜன் என்றும் அழைக்கலாம்.
2. இது 0.015% அளவே கிடைக்கிறது.
3. ஹைட்ரஜனின் மூன்றாவது ஐசோடோப்பான டிரிட்டியம் மிகச் சிறிதளவே கிடைக்கப்பெறும் கதிரியக்கத் தன்மையுடைய ஐசோடோப்பாகும்.
4. இது தோராயமாக 1018 ஹைட்ரஜன் அணுக்களுக்கு ஒரு டிரிட்டியம் அணு என்ற விகிதத்தில் உள்ளது.
56.
1. எலக்ட்ரான் சுற்றி வரும் வட்டப்பாதையின் சுற்றளவானது, அதன் அலை நீளத்தின் முழுஎண் மடங்காக இருக்க வேண்டும்.
2. அவ்வாறு இல்லாத நிலையில் எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியற்றதாக இருக்கும்.
57.
பூஜ்ஜியம் முதல் (n-1)
58.
1. பருப்பொருட்களை அவற்றின் இயற்நிலைமையின் அடிப்படையில்,
(i) திண்மம்
(ii) திரவம்
(iii) வாயு என வகைப்படுத்தலாம்
2. அழுத்தம் மற்றும் வெப்பநிலையை தகுந்தவாறு மாற்றியமைப்பதன் மூலம் பருப்பொருட்களை அதன் இயற்நிலையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு மாற்ற இயலும்.
59.
அமோனியா போன்ற தனித்த இரட்டை எலக்ட்ரான்களைப் பெற்றுள்ள மூலக்கூறுகள் தங்களிடம் உள்ள எலக்ட்ரான் இரட்டையினை எலக்ட்ரான் பற்றாக்குறை உள்ள BF3 போன்ற மூலக்கூறுகளுக்கு வழங்கி ஈதல் சகபிணைப்பை உருவாக்கிறது.

60.
Y > Z > X > A
61.
நடைமுறைக் குறியீடுகளின் சுருக்கமான அட்டவணை
| 1. | அமைப்பினால் வெப்பமானது உறிஞ்சப்பிடும் போது | : | +q |
| 2. | அமைப்பிலிருந்து வெப்பமானது வெளியேறும் போது | : | -q |
| 3. | அமைப்பினால் வேலை செய்யப்படும் போது | : | -w |
| 4. | அமைப்பின் மீது வேலை செய்யப்படும் போது | : | +w |
62.
| பண்புகள் | ஆர்த்தோ ஹைட்ரஜன் | பாரா ஹைட்ரஜன் |
|---|---|---|
| உருகுநிலை | 13.95 k | 13.83 k |
| கொதி நிலை | 20.39 k | 20.26 k |
| காந்த்த் திருப்புதிறன் | புரோட்டனின் காந்திருப்புத்திறன் போல் இராண்டு மடங்கு | பூஜ்ஜியம் |
63.
1. வேதிவினைக் கூறு விகித அடிப்படையில் அமையாத அளவினைக் கொண்ட வினைப்பொருட்களைக் கொண்டு, வினை நிகழ்த்தப்படும் போது, உருவாகும் விளை பொருளின் அளவானது, எந்த வினைபடு பொருள் முதலில் முழுள்வதும் வினைப்படுகிறதோ, அந்த வினைப்படுபொருளைச் சார்ந்து அமையும்.
2. இவ்வினைபாடு பொருள் வினை தொடர்ந்து நிகழ்வதைக் கட்டுப்படுத்துகிறது, இது வினைக்கட்டுப்பாட்டுக் காரணி என அழைக்கப்படுகிறது.
64.
| KC ன் மதிப்பு | \({ K }_{ C }<{ 10 }^{ -3 }\) | \({ 10 }^{ -3 }<{ K }_{ C }<{ 10 }^{ 3 }\) | \({ K }_{ C }>{ 10 }^{ 3 }\) |
| வினைபடு பொருட்கள் மற்றும் வினை விளை பொருட்களின் ஒப்பீட்டுச் செறிவு | [விளை பொருள் ]<<[வினைபடுபொருள்] | குறிப்பிடத்தக்க அளவு வினைபடு மற்றும் வினை விளைப் பொருட்கள் | [வினைவிளைப் பொருள்]>>[வினைபடுபொருள்] |
| வினை நிகழும் அளவு | முன்னோக்கிய திசையில் வினை சிறிதளவே நிகழ்ந்துள்ளது | முன்னோக்கிய வினை மற்றும் பின்னோக்கிய வினை ஆகிய இரண்டும் குறிப்பிடத் தக்க அளவு நிகழ்ந்துள்ளது | வினை ஏறத்தாழ முடியவடையும் நிலையில் உள்ளது. |
| கணிப்பு | பின்னோக்கிய வினைக்கு சாதகம் | முன்னோக்கிய வினையோ அல்லது பின்னோக்கிய வினையோ விஞ்சியிருப்பதில்லை | முன்னோக்கிய வினைக்கு சாதகம் |
65.
கொள்கையின் முக்கிய கோட்பாடுகள்:
(i) மைய அணுவைச் சுற்றி காணப்படும் இணைதிற கூடு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து மூலக்கூறின் வடிவம் அமைகிறது.
(ii) எலக்ட்ரான் இரட்டைகள் இருவகைப்படும். அவை பிணைப்பு எலக்ட்ரான் இரட்டை மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை ஆகும். பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான் இரட்டைகள் பிணைப்பு இரட்டை எலக்ட்ரான்கள் எனப்படுகிறது. அதே நேரத்தில் பிணைப்பில் ஈடுபடாத அனுவின் இணைதிற எலக்ட்ரான்களின் இரட்டையினை தனித்த எலக்ட்ரான் எனப்படுகிறது.
(iii) மைய அணுவினை சூழ்ந்துள்ள ஒவ்வொரு எலக்ட்ரான் இரட்டையும் தங்களுக்குள் ஒன்றையொன்று விலக்குகின்றன. எனவே, அவைகளுக்கிடையேயான விலக்குவிசையினை எந்த அளவிற்கு சிறுமமாக்க இயலுமோ அதற்கேற்ப முப்பரிமாண வெளியில் விலகி அமைகின்றன.
(iv) வெவ்வேறு வகையான எலக்ட்ரான் இரட்டைகளுக்கு இடையேயான விலக்கு விசையின் வரிசை பின்வருமாறு:
lp - lp > lp - bp - > bp - bp
lp-தனித்த இரட்டை (lone pair)
bp-பிணைப்பு இரட்டை(bond pair)
IF7 ன் வடிவம்:

(i) இது தனித்த ஜோடி எலக்ட்ரான்கள் இல்லாத மைய அணுவைக் கொண்ட மூலக்கூறு வகையைச் சார்ந்தது.
(ii) இது AB7 வகையைச் சார்ந்தது.
(iii) இவ்வமைப்பில் மையத்தில் I-யும் அதைச் சுற்றி ஏழு பிணைப்பு எலக்ட்ரான் ஜோடிகள் உள்ளன.
(iv) மூலக்கூறானது ஒழுங்கான ஐங்கோண இரு பிரமிடு வடிவத்தைப் பெற்றுள்ளது.
SF6 ன் வடிவம்:

(i) இது தனித்த ஜோடி எலக்ட்ரான்கள் இல்லாத மைய அணுவைக் கொண்ட மூலக்கூறு வகையைச் சார்ந்தது .
(ii) இது AB6 வகையை சார்ந்தது.
(iii) இதில் மைய சல்பர் அணுவைச் சுற்றி ஆறு பிணைப்பு எலக்ட்ரான் ஜோடிகள் உள்ளன.
(iv) மூலக்கூறானது ஒழுங்கான எண்முகி அமைப்பைப் பெற்றுள்ளது.
66.
ஆக்சிஜன் (O2) மூலக்கூறு ஆர்பிட்டால் வரைபடம்

(i) ஆக்சிஜன் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு 1s2 2s2 sp4
(ii) ஆக்சிஜன் மூலக்கூறின் எலக்ட்ரான் அமைப்பு (O2)
\({ \sigma }_{ 1s }^{ 2 },{ \sigma }_{ 1s }^{ *2 },{ \sigma }_{ 2s }^{ 2 },{ \sigma }_{ 2_{ x } }^{ *2 },{ \sigma }_{ 2p_{ x } }^{ 2 },{ \pi }_{ 2p_{ y } }^{ 2 },{ \pi }_{ 2p_{ z } }^{ 2 },{ \pi }_{ 2p_{ y } }^{ *1 },{ \pi }_{ 2p_{ z } }^{ *1 }\)
(iii) பிணைப்பு தரம்=\(\frac { { N }_{ b }-{ N }_{ a } }{ 2 } =\frac { 10-6 }{ 2 } \)=2
(iv) மூலக்கூறில் இரு தனித்த எலக்ட்ரான்கள் உள்ளது. எனவே இது பாரா காந்த2பண்புடையது.
67.
வினை தொடர்ந்து நிகழும் போது, வினைபடுபொருள்களின் மற்றும் வினை விளை பொருள்களின் செறிவு மற்றும் Q ன் மதிப்பு சமநிலை அடையும் வரை மாறிக்கொண்டே இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் Q ன் மதிப்பு KC க்கு சமமாகிறது.
சமநிலை அடைந்த பின்னர் Q ன் மதிப்பில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை.
68.
நிலைச்சார்புகள்:
1. என்தால்பி
2. என்ட்ரோபி
3.வெப்பநிலை
4.கட்டிலா ஆற்றல்
வழிச்சார்புகள்:
1. வெப்பம்
2. வேலை
69.
நீர்த்த கரைசலில் ஒரு கிராம் சமான நிறை கொண்ட ஒரு அமிலமானது ஒரு கிராம் சமான நிறை கொண்ட ஒரு காரத்தால் முற்றிலும் நடுநிலையாக்கப்படும்போது ஏற்படும் என்தால்பி மாற்றம் நடுநிலையாக்கல் வெப்பம் (அல்லது) நடுநிலையாக்கல் என்தால்பி என வரையறுக்கப்படுகிறது.
70.
1.வாயுக்களை திரமாக்கும் கொள்கையானது மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட கவர்ச்சி விசைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது
2.மூலக்கூறுகளுக்கிடையே விசை அதிகரிக்கும் போது வாயுவானது தீர்வமாக்கப் படுகிறது
3. வண்டார் வாலஸ் மாறிலி a = 0 என்ற வாய்விற்கு இருக்குமானால் அது நல்லியல்பு வாயுவாக செயல்படும்
4.அதாவது மூலக்கூறுகளுக்கிடைபட்ட விசைகள் ஏதும் காணப்படாது.எனவே அதனை திரவமாக்க முடியாது.
71.
1. நன்றாக காற்று நிரப்பப்பட்ட சக்கரத்தின் அழுத்தம் ஆனது மாறிலியாக அமையும்
2. ஆனால் கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிப்பதால் அழுத்தம் அதிகரிக்கிறது.சில நேரங்களில் சக்கரம் வெடிக்கவும் செய்கிறது.
3. துப்பாக்கி மற்றும் சுடக்கூடிய அனைத்து பொருட்களும் கேலுசாக் விதிக்கு உதாரணம் ஆகும்
4. துப்பாக்கியை உபயோகிம்போது அது வெளியேற்றும் துப்பாக்க துகள்களால் (gun powder ) வெப்பநிலை உயருகிறது.இது அழுத்தம் உயரவும் காரணமாகிறது.எனவே துப்பாக்கிலிருந்து தோட்ட பாய்ந்து செல்கிறது
72.
(அ) \(Ca(HCO_{3})_{2} \rightarrow CaCO_{3}+CO_{2}+H_{2}O\)
(ஆ) \(2CaO_{(s)}+5C_{(s)} \rightarrow 2CaC_{2(s)}+CO_{2(s)}\)
73.
1.பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை பெற்றுள்ளதற்கு முக்கியக் காரணம், அத்தொகுதியில் உள்ள மற்ற தனிமங்களைக் காட்டிலும் இதன் சிறிய உருவளவு மற்றும் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை.
2.பாஜான்ஸ் விதிப்படி சிறிய உருவளவை உடைய நேர்மின் அயனி சகப்பிணைப்பை உண்டாகும்.
3.எனவே பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவையாக உள்ளன.
74.
கொடுக்கப்பட்டவை:
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் CO2- ன் அடர்த்தி = 1.965 kgm–3
CO2 - ன் மோலார் நிறை=?
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் , 1 மோல் CO2 வாயுவானது 22.4 L கன அளவை அடைத்துக் கொள்கிறது.
1 மோல் CO2 -ன் நிறை=\(\frac{1.965 Kg}{1m^3}\)x 22.4 L

CO2 மோலார் நிறை= 44 gmol–1
75.
| அயனிகள் | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | எலக்ட்ரான் அமைப்பு |
|---|---|---|
| Mn2+ | 23 | 1s2 , 2s2, 2p6 3s2, 3p6, 3d5 |
| Cr3+ | 21 | 1s 2 , 2s2, 2p6 3s2, 3p6, 3d3 |
76.
ஒரு சேர்மத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அணுவினைத் தவிர்த்து, பிற அணுக்களை அவற்றின் வழக்கமான, ஆக்சிஜனேற்ற நிலையில் அயனிகளாக கண்டறிவதற்கான விதிகளின்படி நிர்ணயம் செய்யப்பட்ட ஆக்சிஜனேற்ற நிலையில் அயனிகளாக நீக்கிய பின்னர் அக்குறிப்பிட்ட அணுவின் மீது எஞ்சியிருப்பதாக கருதப்படும் மின்சுமையே அந்த அணுவின் ஆக்சிஜனேற்ற எண் எனப்படும்.
ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளை ஆக்சிஜனேற்ற எண்ணை பயன்படுத்தி நன்கு விளக்க முடியும்.
77.
| குவாண்டம் எண் | குறிப்பிடுவது | |
|---|---|---|
| (i) | முதன்மை குவாண்டம் எண் | உருவளவு மற்றும் ஆற்றல் |
| (ii) | கோண உந்தக் குவாண்டம் எண் | வடிவம் |
| (iii) | காந்தக் குவாண்டம் எண் | திசையமைப்பு |
78.
(i) WO3 + 3H2 \(\rightarrow \) W + 3H2O
(ii) H2 + CI2 \(\rightarrow \) 2HCI
79.
(அ) வாயு:
1. மூலக்கூறுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படாததால் வாயுவாக உள்ளது.
(ஆ) திண்மம்:
1. NaH அனது ஒரு அயனி ஹைட்ரைடாகும்
2. இது சோடியம் உலோகத்தில் இருந்து ஒரு எலக்ட்ரானை ஹைட்ரஜனுக்கு இடப்பெயர்ச்சி செய்வதால் உருவாகிறது.
80.
(i) தனிமங்களின் இயற் மற்றும் வேதிப்பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன. ஒரு நேர்மின்சுமையுடைய அயனியில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது, அதன் நடுநிலை அணுவில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தபோதிலும் அவைகளின் அணுக்கரு மின்சுமை சமமாக இருக்கும்.
(ii) எனவே, நேர்மின்சுமையுடைய அயனியின் செயலுறு அணுக்கவர்ச்சி விசையானது, தொடர்புடைய நடுநிலை அணுவின் செயலுறு கவர்ச்சி விசையினை விட அதிகம்.
(iii) எனவே, தொடர்ச்சியான அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் எப்போதும் பின்வரும் ஏறுவரிசையில் அமைகின்றன.
IE1 < IE2 < IE3 ..........
81.
(i) சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள ஒரு அணுவானது, சகப்பிணைப்பில் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினைச் தன்னை நோக்கி ஒப்பீட்டு அளவில் கவரும் பண்பு எலக்ட்ரான் கவர்தன்மை எனப்படும்.
(ii) எலக்ட்ரான் கவர்தன்மை ஒரு அளவிடத்தக்க பண்பு அல்ல.
82.
1. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு:
2. குளோரின் எலக்ட்ரான் அமைப்பு:
3. பொட்டாசியம் தனது இணைத்திறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானையும், குளோரின் தனது இணைதிறன் எலக்ட்ரானையும், குளோரின் தனது இணைதிறன் கூட்டில் ஏழு எலக்ட்ரானையும் பெற்றுள்ளது.
4. பொட்டாசியம் அணு ஒரு எலக்ட்ரானை இழப்பதால் ஆர்கானின் நிலையான எல்கட்ரான் அமைப்பினை பெற்று K+ அயனியாக மாறுகிறது.
83.
1. பனிக்கட்டி குளிர் நிலையில் உள்ள நீரில் உள்ள ஒரு பலூன, கொதி நீருள்ள மற்றொரு தொட்டிக்கு மாற்றும்போது, பலூனில் உள்ள வாயுவின் வெப்பநிலை அதிகரிக்கிறது.
2. இதன் விளைவாக பலூனிலுள்ள வாயு மூலக்கூறுகள் வேகமாக நகர்கின்றன. எனவே வாயு விரிவடைந்து கனஅளவு அதிகரிக்கின்றது.
84.
1. ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
2. இதைப் போலவே ஆவர்த்தன விதிக்கு முரணாக அதிக அணு நிறையுள்ள தனிமமானது குறைவான அணு நிறையுள்ள திமத்திற்கு முன்னதாகவே வைக்கப்பட்டிருந்தது.
எ.கா.
3. டெலூரியம் (127.6) ஆறாவது (VI) தொகுதியிலும், அயோடின் (127) ஏழாவது (VII) தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
4. 58.7Ni28 -க்கு முன்னதாக 59Co27 வைக்கப்பட்டிருந்தது.
85.
(i ) ஹைட்ரஜன் மூலக்கூறின் ஒப்பு மூலக்கூறு நிறை (H2)
=2 x (ஹைட்ரஜன் அனுவின் ஒப்பு அணு நிறை)
=2 x 1.008 u
=2.016 u
(ii) குளுக்கோஸ் சேர்மத்தின் ஒப்பு மூலக்கூறு நிறை (C6H12O6)
=(6 x 12) + (12 x 1.008) + (6 x 16)
=72+12.096+96
=180.096 u.
86.
Q = KC, எனும்போது வினை சமநிலையில் உள்ளது.
Q > KC, எனும்போது வினையானது பின்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
Q < KC, எனும்போது வினையானது முன்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
87.
P1=1.2 atm
T1=180C+273=291K
T2=850C+273=358K
P2=?
\(\frac{P_1}{T_1}=\frac{P_2}{T_2}\)
\(\Rightarrow P_2=(\frac{P_1}{T_1})\times T_2\)
=\(\frac{1.2atm}{291 ̶K̶}\times358 ̶K̶\)
P2=1.48 atm
88.
i.கார உலோகங்கள் அதிக வினைதிறனைக் கொண்டுள்ளன.
ii.இந்த வினையின் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
iii.தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
iv.அனைத்து கார உலோகங்களும்,அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்ஸிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
89.
\(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)
\(\triangle H^o _f (CO_2)=\) -393.5 KJ mol-1
\(\triangle H^o _f (CO)=\)-111.31 KJ mol-1
\(\triangle H^o _f (H_2O)=\)-242 KJ mol-1
\(\triangle H^o _f = \sum \triangle H^o_{f(product)} -\sum \triangle H^o_{f(reactant)}\)
=[-111.31+(-242)]-[-393.5]
=-111.31-242+393.5
\(\triangle H^o _f=40.19 KJ \ mol^{-1}\)
90.
1. அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நான்கு குவாண்டம் எண்கள் அடங்கிய தொகுப்பின் மூலம் வரையறுக்க இயலும்.
2. அவையானவை
(i) முதன்மை குவாண்டம் எண்(n)
(ii) கோண உந்த குவாண்டம் எண் (l)
(iii) காந்த குவாண்டம் எண் (m)
(iv) தற்சுழற்றி குவாண்டம் எண் (s)
91.
2NO (g) + O2(g) ⇌ 2NO2(g)
| NO | O2 | NO2 | |
| ஆரம்ப அழுத்தம் | 1 | 1 | - |
| வினைப்பட்டது | 0.96 | 0.48 | - |
| சமநிலை பகுதி அழுத்தம் | 0.04 | 0.52 | 0.96 |
Kp =\(\frac { { ({ P }_{ N{ O }_{ 2 } }) }^{ 2 } }{ { ({ P }_{ N{ O } }) }^{ 2 }({ P }_{ { O }_{ 2 } }) } =\frac { 0.96\times 0.96 }{ 0.04\times 0.04\times 0.52 } \)
Kp =1.017 x 103
92.
கொடுக்கப்பட்டவை
n=1mol
P=4.1 atm
V=2 Lit
T =?
q=3710J
\(\triangle S=\frac { q }{ T } \)
\(\triangle S=\frac { q }{ \left( \frac { PV }{ nR } \right) } \)
\(\triangle S=\frac { nRq }{ PV } \quad \)
\(\triangle S=\frac { 1\times 0.082litatm{ K }^{ -1 }\times 3710J }{ 4.1atm\times 2lit } \)
\(\triangle S=37.10J{ K }^{ -1 }\)
93.
ஈத்தேனின் எரிதல் வினைக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
C2H6 + 7/2O2 → 2CO2 + 3H2O
⇒ 2C2H6 + 7O2 → 4CO2 + 6 H2O
4 மோல்கள் CO2 - ஐ உருவாக்க 2 மோல் ஈத்தேன் தேவைப்படுகிறது.
1 மோல் (44 g) CO2 - ஐ உருவாக்க தேவைப்படும் ஈத்தேனின் மோல்களின் எண்ணிக்கை

=1/2 மோல் ஈத்தேன்
=0.5 மோல் ஈத்தேன்
94.
1.மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
2.சோடியம் ஹைட்ராக்சைடு
3.கால்சியம் ஆக்சைடு
4.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
5.சோடியம் கார்பனேட்
6.சோடியம் கார்பனேட்
7.டிரை சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் டைஹைட்ரேட்
95.
\(\Delta x.\Delta P\ge\frac{h}{4\pi}\)
\(\Delta x.\Delta p\ge 5.28\times10^{-35}Kgm^{2}s^{-1}\)
\(\Delta x.(m\Delta v)\ge5.28\times 10^{-35}Kgm^{2}s^{-1} \)
கொடுக்கப்பட்டுள்ளவை \(\Delta\)v = 0.1%
v = 2.2 × 106 ms–1
m = 9.1 × 10–31 Kg
Δv=\(\frac{1}{100}\times2.2\times10^{6}ms^{-1}\)
=2.2x103ms-1
\(\therefore\) \(\Delta x\ge\frac{5.28\times10^{-35}Kgm^{2}s^{-1}}{9.1\times10^{-31}kg\times2.2\times10^{3}ms^{-1}}\)
\(\Delta x\ge2.64\times10^{-8}m\)
96.
1. நீர் மற்றும் கனநீருக்கு இடையே இயற்பண்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
2. ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் இவற்றின் நிறைகளின் வேறுபாடு காரணமாக, வினைகள் வெவ்வேறு விதங்களில் நடைபெறும்.
3. D2O பங்குபெறும் வினையின் வேகம் H2O பங்குபெறும் வினையின் வேகத்தை விட குறைவு.
4. எனவே இதை பருகினால் உடல் செயலியல் நிகழ்வுகள் பாதிக்கப்படும்.
5. ஆகையால் D2O (கனநீர்) குடிப்பதற்கு உகந்ததல்ல.
97.
E1=-2.8 x 10-18 J
E∞=0
ΔE=E∞-E1
0-(-2.8 x 10-18J)
H-ன் அயனியாக்கும் ஆற்றல் =2.8 x 10-18 J
ஒரு மோல் H அணுவின் அயனியாக்கும் ஆற்றல்
=2.8 x 10-18J x 6.023 x 1023
=13.13 x 105 J mol-1
98.
1. மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின்படி N2-ன் பிணைப்புத்தரம் மூன்று N2+ ன் பிணைப்புத்தரம்.
2. இக்கொள்கையின்படி அதிக பிணைப்புத்தரம் உடையவை குறைந்த நீளத்தினைப் பெற்றிருக்கும்.
3. எனவே, N2+ -ன் பிணைப்பு நீளம் N2 ன் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
மேலும்,
4. NO+ ஆனது O π* எதிர்பிணைப்பு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது.
5. சூடீ அனைத்து 1 π* எதிர் பிணைப்பு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது.
3. இதில், N-O பிணைப்பு ஆனது, எதிர்பிணைப்பு எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வலிமையற்றதாகிறது.
4. இதனால் NO+ ன் பிணைப்பு நீளமானது NO வை விடக் குறைவாக உள்ளது.
99.
Mg(s)+ Br2(l) ⟶ MgBr2(s) ;
Hf0 = -524 KJ mol-1
பதங்கமாதல்,
Mg(s) ⟶ Mg(g)
ΔH1° = +149 KJ mol-1
அயனியாதல்,
Mg(g) ⟶ Mg(g)2+ + 2e-
ΔH2° =2187 KJ mol-1
ஆவியாதல்,
Br2(l) ⟶ Br2(g)
ΔH2° = +31 KJ mol-1
பிரிகையடைதல்,
Br(g)2 ⟶ 2Br(g)
ΔH4° =+193 KJ mol-1
எலக்ட்ரான் நாட்டம்
Br(g) +e- ⟶ Br(g)-
ΔHJ° =-331 KJ mol-1
ΔHf =ΔH1+ΔH2+ΔH3+ΔH4+2ΔH5+u
-524 =14.8 + 2187 + 31 + 193 + (2 x -331) + u
-524 =1897 + u
⇒ u =-524 - 1897
u=-2421 KJ mol-1.
100.
t1 =1.5 நிமிடங்கள் (ஹைட்ரோ கார்பன்)
t2=4.73 நிமிடங்கள் (புரோமின்)
mஹைட்ரோகார்பன் =16.1 g mol-1
∴ ஹைட்ரோ கார்பனின் பொதுவான வாய்ப்பாடு
= CnH2n+2
n(12)+(2n+2) 1 = 16
12 n + 2n + 2 = 16
14n+2 = 16
14 n = 14
n = 1
∴ ஹைட்ரோ கார்பனானது C1H2(l)+2 = CH4.
101.
102.
'V ' கனஅளவுள்ள ஒரு கலனில் 'a' மோல் PC15 எடுத்துக்கொள்ளப்படுவதாகக் கருதுவோம்.
'x' மோல் PC15 சிதைவடைந்து x மோல் PC13 மற்றும் x மோல் C12 வைத் தருகிறது என்க. \({ PC1 }_{ 5 }(g)\rightleftharpoons { PC1 }_{ 3 }(g)+{ C1 }_{ 2 }(g)\)
| PC12 | PC12 | C12 | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a | 0 | 0 |
| சிதைவடைந்த மோல்களின் எண்ணிக்கை | x | 0 | 0 |
| சமநிலையில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a -x | x | x |
| சமநிலையில் மோலார் செறிவு | \(\frac { a-x }{ V } \) | \(\frac { x }{ V } \) |
\(\frac { x }{ V } \) |
நிறைதாக்க விதியைப் பயன்படுத்த,
\({ K }_{ C }=\frac { \left[ { PC }1_{ 3 } \right] \left[ C1_{ 2 } \right] }{ \left[ PC1_{ 5 } \right] } \)
\(=\frac { \left( \frac { x }{ V } \right) \left( \frac { x }{ V } \right) }{ \left( \frac { a-x }{ V } \right) } =\frac { { x }^{ 2 } }{ (a-x)V } \)
KP ன் மதிப்பினை பின்வருமாறு கணக்கிடலாம்.
KP க்கும் KC க்குமானத் தொடர்பினை நாம் அறிவோம்.
\({ K }_{ P }={ K }_{ C }(RT)^{ { \triangle n }_{ g } }\)
இங்கு \(\triangle n(g)={ n }_{ P }-{ n }_{ r }=2-1=1\)
எனவே \({ K }_{ p }={ K }_{ C }(RT);PV=nRT\)
\(RT=\frac { PV }{ n } \)
103.
லித்தியம் மற்றும் அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளின் ஒப்பீடு:
| பெரிலியம் | தொகுதியிலுள்ள மற்ற தனிமங்கள் | ||
|---|---|---|---|
| i. | சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்குகின்றது | i. | அயனிச் சேர்மங்களை உருவாக்குகின்றன. |
| ii. | உயர்ந்த உருகுநிலை மற்றும் கொதிநிலை | ii. | குறைவான உருகுநிலை மற்றும் கொதிநிலை |
| iii. | உயர் வெப்பநிலைகளிலும் கூட நீருடன் வினை புரிவதில்லை. | iii. | நீருடன் வினை புரிகின்றன. |
| iv. | ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை. | iv. | ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைகின்றன. |
| v. | ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மையுடையவை | v. | ஹேலைடுகள் அயனித் தன்மை உடையவை. |
| vi. | பெரிலியத்தின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் ஈரியல்புத் தன்மை உடையவை |
vi. | கார இயல்புடையவை |
| vii. | ஆக்சைடு படலம் இருப்பதால் இது எளிதில் அமிலத்தால் பாதிப்படைவதில்லை | vii. | எளிதில் அமிலத்தால் பாதிப்படைகின்றன |
| viii. | பெரிலியம் கார்பைடு நீருடன் வினைபுரிந்து மீத்தேனை வெளியிடுகிறது. | viii. | நீருடன் அசிட்டிலீனைத் தருகிறது. |
| Beன் உப்புகள் அதிக அளவில் நீராற் பகுப்படையும் | ix. | நீரில் பகுப்படையும் |
104.
டி-பிராக்ளி கொள்கைப்படி, அணுக்கருவினை சுற்றி வரும் எலக்ட்ரானானது, துகள் மற்றும் அலைப்பண்பு ஆகிய இருபண்புகளையும் பெற்றுள்ளது. எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய வேணடுமெனில், எலக்ட்ரான் சுற்றி வரும் வட்டப்பாதையின் சுற்றளவானது, அதன் அலை நீளத்தின் முழுஎண் மடங்காக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியற்றதாக இருக்கும்.
வட்டப்பாதையின் (orbit) சுற்றளவு =nλ
2πr = nλ
2πr = nh/mv
மாற்றியமைக்க, mvr = nh/2π
கோணஉந்தம்= nh /2π
மேற்கண்டுள்ள சமன்பாடு ஏற்கெனவே போர் என்பவரால் யூகித்தறியப்பட்ட ஒன்றாகும். எனவே போர் கொள்கையும் டிபிராக்ளி கொள்கையும் ஒன்றுக்கொன்று உடன்படுகின்றன.
105.
1. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜனில் 90% மேல், அத்தொழிற்சாலைகளிலேயே தொகுப்பு முறை பயன்பாட்டிற்கு வினைபொருளாகப் பயன்படுகிறது. அம்மோனியாவை பெருமளவில் தயாரிக்க பயன்படும் ஹேபர்முறை இதற்கு ஒரு உதாரணமாகும். நைட்ரிக் அமிலம், உரங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட வேதிச் சேர்மங்களை பெருமளவில் தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது.
380-450°C
N2+ 3H2 \(\rightleftharpoons \) 2NH3
200 atm/ இரும்பு(Fe)
2. தொழிற்சாலைகளில் பெருமளவு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை, கார்பன் மோனாக்சைடிலிருந்து தாமிரத்தை (Cu) வினையூக்கியாகக் கொண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.
CO+2H2 \(\overset { Cu }{ \rightarrow } \) CH3 OH
3. Pt/H2 ஐப் பயன்படுத்தி, நிறைவுறாத கொழுப்பு எண்ணெய்களை வனஸ்பதி என்றழைக்கப்படும் நிறைவுற்ற கொழுப்புகளாக (Margarine) மாற்றலாம்.
4. உலோகவியலில் உலோக ஆக்சைடுகளை அதிக வெப்பநிலையில் உலோகமாக ஒடுக்க ஹைட்ரஜன் பயன்படுகிறது.
CuO + H2 \(\rightarrow\) Cu + H2O
WO3 + 3H2 \(\rightarrow\) W + 3H2 O
5. அணுநிலை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கலவையானது உலோகங்களை ஒட்டவும், வெட்டவும் பயன்படுகிறது.
6. ராக்கெட்டுகளை உந்தித்தள்ளும் எரிபொருளாக நீர்ம ஹைட்ரஜன் பயன்படுகிறது.
7. எரிமின்கலங்களில், மின் ஆற்றலை உற்பத்தி செய்ய ஹைட்ரஜன் பயன்படுகிறது. உலோகங்கள் ஹைட்ரஜனை மீள் முறையில் ஏற்றுக்கொள்ளும் தன்மையானது. மறு மின்னூட்டம் செய்யும் வகையிலான உலோக ஹைட்ரைடு மின்கலங்கள் தயாரிப்பதில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
106.
ஆக்சிஜனேற்ற எண்: ஒரு மூலக்கூறில் பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அனுவின் மீதமுள்ள எஞ்சிய மின்னோட்டமே, தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் ஆகும்.
படி 1: AS2S3+ HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
படி 2: As யின் ஆக்சிஜனேற்ற எண் 2 அதிகரிக்கிறது
N யின் ஆக்சிஜனேற்ற எண் 3 குறைகிறது.

படி 3: AS2S3 யை மூன்றாலும், HNO3 யை இரண்டாலும் பெருக்குக.
3AS2S3+ 2HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
படி 4: H மற்றும் O வை தவிர பிற அணுக்களைச் (As, S, N)சரி சமன் செய்க
3AS2S3+ 2HNO3 + H2O \(\rightarrow \) 6H3AsO4 + 9H2SO4 + 2NO
படி 5: இருபுறமும் O மற்றும் H ன் குறைபாடுகளைக் கண்டறிந்து சமன் செய்க.
3AS2S3+ 28HNO3 + 4H2O \(\rightarrow \) 6H3AsO4 + 9H2SO4 + 28NO
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards