11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 Full Test Question
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அடுக்கு மண்டலத்தில் உருவாகும் வினை திறன்மிக்க குளோரின் அணுவும்______ ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.
1000
10,000
1,00,000
1,00,000
2.
ஒலிஃபின் சேர்மங்களில், மார்கோனிகாவ் சேர்ப்பு HCI வினையில் முக்கியமில்லாதவை
புரப்பீன்
பியூட்-1-யீன்
மெத்தில் புரப்பீன்
எத்திலீன்
3.
கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை
நீராவி வாலை வடித்தல்
பின்ன வாலை வடித்தல்
கொதிநிலை மாறா வாலை வடித்தல்
வகையீட்டு வடித்து இறக்குதல்
4.
பொதுவாக தன்னிச்சையான செயல் முறையின் ஒழுங்கற்ற தன்மை
பொதுவாக அதிகரிக்கும்
பொதுவாக குறையும்
பூஜ்ஜியம்
முடிவிலி
5.
0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு
2.8
8.4
5.6
16.8
6.
பின்வருவனவற்றுள் எது ஆஃபா தத்துவத்தின்படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது?
ஜிங்க்
காப்பர்
ஹைட்ரஜன்
ஹீலியம்
7.
பின்வருவனவற்றுள் எது அலிபாட்டிக் நிறைவுற்ற ஹைட்ரோகார்பனாகும்.
C8 H18
C9 H18
C8 H14
இவையனைத்தும்
8.
ஒரு வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5\(\times\)102 மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினைவேக மாறிலி
11.5
5
2 \(\times \) 102
2 \(\times \) 10-3
9.
ரெளல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது _____ க்கு சமம்.
கரைப்பானின் மோல் பின்னம்
கரைபொருளின் மோல் பின்னம்
கரைபொருளின் மோல் எண்ணிக்கை
கரைப்பானின் மோல் எண்ணிக்கை
10.
கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு
நேர் கோடு
நான்முகி
தள அமைப்பு
பிரமிடு
11.
பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?
SO2
NO2
CO2
H2O
12.
அம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது?
குழாயின் நடுப்பகுதியில்
ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்
அம்மோனியா குடுவையருகில்
குழாயின் முழுநீளத்திலும் முழுமையாக
13.
RbO2 சேர்மம் ஒரு
சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது
பெராக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது
சூப்பர் ஆக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது
பெராக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது
14.
சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?
Cu+ 2H2SO4 → CuSO4 + SO2+2H2O
C+ 2H2SO4 → CO2+2SO2+2H2O
BaCl2 + H2SO4 → BaSO4+2HCl
இவற்றில் எதுவுமில்லை
15.
முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு
1s2, 2s2, 2p6,3s1
1s2, 2s2, 2p6,3s2
1s2, 2s2, 2p6,3s2, 3p6,4s1
1s2, 2s2, 2p6,3s2,3p1
16.
பென்சீலிருந்து வளைய ஹெக்சேன் எவ்வாறு தயாரிப்பாய்?
17.
அயனிப் பிணைப்பை வரையறு.
18.
500 மி.லி, 0.250 M NaOH கரைசலை தயாரிக்க தேவையான 6M NaOH கரைசலின் கனஅளவு எவ்வளவு?
19.
பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
(i) Na (ii) Ba (iii) Fe
20.
ஒரு வினையில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சமநிலை மாறிலி மாறாத மதிப்பினை பெற்றிருக்கிறது Qன் மதிப்பும் மாறாமல் இருக்குமா? விவரி.
21.
பனிப்புகை வரையறு.
22.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ஆக்ஸிஜனேற்றி, இது பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்ஸிஜனேற்றம் செய்து, நீராக ஒடுக்கமடைகிறது. இதற்காக சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
23.
பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?
24.
நவீன ஆவர்த்தன விதியை வரையறு.
25.
சமநிலை மாறிலி எனப்படுவது எது?
26.
காட்டர்மான் வினையை எழுதுக.
27.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii. p-டைகுளோரோ பென்சீன்
iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்
28.
2% எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்க் கரைசலானது, கரைப்பானின் கொதிநிலையில், 1.004 bar அழுத்தத்தை கொண்டுள்ளது. PA 0 மதிப்பு 1.013 bar ஆக இருக்கும்போது கரைபொருளின் மோலார் நிறை என்ன?
29.
66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.
30.
சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.
31.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.
32.
பாயிலின் விதியினை தருக.
33.
ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க
34.
BF3 லூயிஸ் வடிவமைப்பை வரைந்து, அது எவ்வாறு எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதிவிலக்கினைப் பெற்றுள்ளது என விவரி.
35.
இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.
36.
+E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.
37.
1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.
38.
அயனி - எலக்ட்டரான் முறையை பற்றி விரிவாக எழுதுக.
39.
குறிப்பிட்ட வெப்பநிலையில், தூய பென்சீனின் (C6H6) ஆவி அழுத்தம் 640 mm Hg. 40 கிராம் பென்சீனுடன் 2.2 g ஆவியாகாத கரைபொருள் சேர்க்கப்படுகிறது. கரைசலின் ஆவியழுத்தம் 600 mm Hg எனில், கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிடுக.
40.
300k வெப்ப நிலையில்,\(CO+(\frac{1}{2})O_2\rightarrow CO_2\) என்ற விளை தன்னிச்சையானது எனக்கட்டுக .CO2 மற்றும் CO ஆகியன உருவாவதற்கான திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றங்கள் முறையே -394.4 மற்றும் -137.2KJ mole-1
41.
கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும்
ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் (tyres) கோடையில் குளிர்காலத்தை விடகாற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும்.
42.
விடுபட்ட குவாண்டம் எண்கள் / துணை ஆற்றல் மட்டங்களைக் கண்டறிக.
| n | l | m | துணை ஆற்றல் கூடு |
| ? | ? | 0 | 4d |
| 3 | 1 | 0 | ? |
| ? | ? | ? | 5p |
| ? | ? | -2 | 3d |
43.
ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.
1.
(c)
1,00,000
2.
(d)
எத்திலீன்
3.
(b)
பின்ன வாலை வடித்தல்
4.
(a)
பொதுவாக அதிகரிக்கும்
5.
(a)
2.8
6.
(b)
காப்பர்
7.
(a)
C8 H18
8.
(b)
5
9.
(b)
கரைபொருளின் மோல் பின்னம்
10.
(c)
தள அமைப்பு
11.
(d)
H2O
12.
(b)
ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்
13.
(a)
சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது
14.
(c)
BaCl2 + H2SO4 → BaSO4+2HCl
15.
(a)
1s2, 2s2, 2p6,3s1
16.
\({ C }_{ 6 }H_{ 6 }+{ 3H }_{ 2 }\overset { Ni }{ \longrightarrow } { C }_{ 6 }{ H }_{ 12 }+HBr\)
17.
ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுக்கிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும்.
18.
C1 = 6 M
C2 = 0.250 M
V1 = ?
V2 = 500 ml
C1V1 = C2V2
6M(V1) = 0.25 M x 500ml
⇒ V1 = \(\frac { 0.25M\times 500ml }{ 6M } \)
V1 = 20.83 ML.
19.
(i) 2 Na + 2H2O \(\rightarrow\) 2 NaOH + H2 \(\uparrow \)
(ii) Ba + 2H2O \(\rightarrow\) Ba(OH)2 + H2\(\uparrow \)
(iii) 3Fe + 4H2O \(\rightarrow\) Fe3O4 + 4H2 \(\uparrow \)
நீரானது உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது.
20.
வினை தொடர்ந்து நிகழும் போது, வினைபடுபொருள்களின் மற்றும் வினை விளை பொருள்களின் செறிவு மற்றும் Q ன் மதிப்பு சமநிலை அடையும் வரை மாறிக்கொண்டே இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் Q ன் மதிப்பு KC க்கு சமமாகிறது.
சமநிலை அடைந்த பின்னர் Q ன் மதிப்பில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை.
21.
1. பனிப்புகை என்பது புகை மற்றும் மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கை ஆகும்.
2. இது காற்றில் விரவியுள்ள திரவதுளிகளை உருவாக்குகிறது.
22.

1H2O2 + 2Fe2+ → Fe3+ + H2O
⇒ H2O2 + 2Fe2+ + 2H+ → 2Fe3+ + 2H2O
23.
1.பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை பெற்றுள்ளதற்கு முக்கியக் காரணம், அத்தொகுதியில் உள்ள மற்ற தனிமங்களைக் காட்டிலும் இதன் சிறிய உருவளவு மற்றும் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை.
2.பாஜான்ஸ் விதிப்படி சிறிய உருவளவை உடைய நேர்மின் அயனி சகப்பிணைப்பை உண்டாகும்.
3.எனவே பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவையாக உள்ளன.
24.
(i) தனிமங்களின் இயற் மற்றும் வேதிப்பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன.
(ii) இக்கூற்று நவீன ஆவர்த்தன விதி என்றழைக்கப்படுகிறது.
(iii) இவ்விதியின் அடிப்படையில், தனிமங்கள் அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் வரிசைபடுத்தப்பட்டன.
25.
கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வினையின் சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டில் உள்ள வினை விளைப் பொருட்களின் மோலார் செறியுகளை அவைகளின் வேதிவினைக் கூறு விகிதப்படிக்கு உயர்த்தப்பட்டதன் பெருக்கற்பலனுக்கும்வினைப்படும் பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதப்படிக்கு உயர்த்தப்பட்டதன் பெருக்கற்பலனுக்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி
இம்மாறிலி சமநிலை மாறிலி எனப்படுகிறது.
26.

27.
28.
\({\Delta P\over P_A^o}={W_B\times M_A\over M_B\times W_A}\)
2 % கரைசலில் கரைபொருளின் எடை 2 கிராம், மற்றும் கரைப்பானின் எடை 98 கி.
ΔP = PA - Psolution = 1.013 - 1.004 bar = 0.009 bar
\(M_B={P_A^o\times W_B\times M_A\over \Delta P\times W_A}\)
MB = 2 x 18 x 1.013/(98 x 0.009)
= 41.3 g mol-1.
29.
\(\lambda=\frac{h}{p}=\frac{6.626\times10^{-34}}{66.26\times10^{-28}}\)
λ=1x10-7 m
30.
1. ஒரு சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளாக பிரிகையடையும் வினைகள் சிதைவடையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை வினைகளில், ஒரு சேர்மத்தில் உள்ள இரண்டு வெவ்வேறான தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களில் மாற்றம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டு:

31.
(i) என்ட்ரோபி கூற்று:
1. ஒரு தன்னிச்சை செயல்முறை நிகழும்போது ஒரு தனித்த அமைப்பின் என்ட்ரோபி அதிகரிக்கிறது.
2. என்ட்ரோபி என்பது ஒரு அமைப்பின் மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற தன்மையை அளவிடும் வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பு.
(ii) கெல்வின்-பிளாங்க் கூற்று
1.ஒரு சுற்றுச்செயல் முறையில் சூடான வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி அவ்வெப்பத்தின் ஒரு பகுதியை குளிர்ந்த நிலையிலுள்ள மூலத்திற்கு மாற்றாமல் முழுவதும் வேலையாக மாற்றக்கூடிய இயந்திரத்தினை வடிவமைக்க இயலாது.
(iii) கிளாசியஸ் கூற்று
எந்த ஒரு வேலையும் செய்யாமல் குளிர்ந்த வெப்ப மூலத்திலிருந்து சூடான வெப்ப மூலத்திற்கு வெப்பத்தை மாற்ற முடியாது.
32.
1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் , குறிப்பட்ட நிறையுள்ள வாயு அடைத்துக்கொள்ளும் கன அளவானது அதன் அழுத்திற்கு எதிர்விகித தொடர்புடையது.
2. கணிதவியல் முறைப்படி, பாயில் விதி
\(V\alpha \frac { 1 }{ p } \) (T மற்றும் n மாறிலிகள் ) அல்லது \(V=K\frac { 1 }{ P } \)
3. K = விகித மாறிலி
33.
1. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஆக்ஸிஜனேற்றி மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கி ஆகிய இரண்டு வினைபொருட்களாகவும் செயல்படும் தன்மையுடையது.
2. வழக்கமாக ஆக்ஸிஜன் ஒடுக்க வினைகள் கார ஊடகத்திலும் நிகழ்த்தப்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு:
அமில ஊடகத்தில்,
H2O2 + 2H+ + 2e- \(\rightarrow\) 2H2 O (E° = + 1.77v)
எடுத்துக்காட்டு:
2FeSO4 + H2SO4 + H2O2 \(\rightarrow\) Fe2(SO4)3 + 2H2O
ஒடுக்கியாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு:
கார ஊடகத்தில்,
\({ HO }_{ 2 }^{ - }\) + OH- \(\rightarrow\) O2 + H2 O + 2e- (E° = +0.08v)
எடுத்துக்காட்டு:
2KMnO4(aq) + 3H2O2(aq) \(\rightarrow\) 2MnO2 + 2KOH + 2H2O + 3O2(g)
34.
(i) BF3 யில் போரான் அணுவானது மூன்று இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது.
(ii) மேலும், ஒவ்வொரு புளூரினின் அணுவும் ஏழு இணைதிறன் எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.
(iii) லூயிஸ் வடிவமைப்பானது,

(iv) மேற்கண்டுள்ள வடிவமைப்பில், போரான் அணுவினை சுற்றி ஆறு எலக்ட்ரான்கள் மட்டுமே உள்ளன.
(v) புளூரினில் உள்ள தனித்த இரட்டை மூலம் போரானிற்கும், புளூரினிற்கும் இடையே கூடுதலாக ஒரு பிணைப்பை ஏற்படுத்துக.

(vi) எனினும், மேற்கண்டுள்ள அமைப்பில் அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய புளூரினின் முறைசார் மின்சுமை நேர்மின்சுமையாக இருப்பதால் இவ்வடிவமைப்பு ஏற்கத்தக்கதல்ல.
(vii) எனவே, மைய போரான் எட்டு எலக்ட்ரான்களை நிறைவாக பெறாமல் உள்ள லூயிஸ் வடிவமைப்பே சாத்தியமான ஒன்றாகும்.
35.
1. ஒரு வினைசெயல் தொகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மாறுபடுவதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
2. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ள சேர்மங்களின், வினைச்செயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்கைல் தொகுதிகள் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
3.ஈதர்கள், கீட்டோன்கள் எஸ்டர்கள் மற்றும் ஈரினைய அமீன்கள் போன்ற வினைச்செயல் தொகுதிகளைப் பெற்றுள்ள சேர்மங்களில் இம்மாற்றியம் காணப்படுகின்றது.
4. அதாவது ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினையும், நீண்ட கார்பன் சங்கிலித் தொடரில் (நேராக அல்லது பக்கச் சங்கிலி அமைப்புடைய) மாறுபட்டும் காணப்படும் மாற்றியங்கள் இவ்வகைப்படும்.
எ.கா:
C4H10O விற்கான இணை மாற்றியங்கள் பின்வருமாறு
CH3-O-C3H7
(மெத்தில் புரப்பையில் ஈதர்)
C2H5-O-C2H5
(டைஎத்தில் ஈதர்)
\(C{ H }_{ 3 }-O-\underset { \overset { | }{ C{ H }_{ 3 } } }{ CH } -C{ H }_{ 3 }\)
(மெத்தில் ஐசோ-புரப்பைல் ஈதர்)
36.
(i) +E விளைவு:
1. தாக்கும் வினைக் காரணியை நோக்கி \(\pi\) எலக்ட்ரான் மாற்றப்பட்டால் அவ்விளைவு +E விளைவு எனப்படும்.

2. மேற்கண்டுள்ள ஆல்கீனுடன் H+ சேர்த்தல் +E விளைவுக்கு ஒரு உதாரணமாகும்.
(ii) +E விளைவு:
1. தாக்கும் காரணியிலிருந்து அதற்கு அப்பால் எலக்ட்ரான்கள் மாற்றப்படின் அவ்விளைவு -E விளைவு எனப்படும்.

2. மேலே தரப்பட்டுள்ள சயனைடு அயனி கார்பனைல் கார்பனை தாக்குதல் -E விளைவுக்கு எடுத்துக்காட்டாகும்.
37.
38.
அயனிகள் இடம்பெறும் ஆக்சிஜனேற்ற - ஒடுக்கம் வினைகளுக்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
படி 1: ஆக்சிஜனேற்ற எண் கோட்பாட்டினைப் பயன்படுத்தி, ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்சிஜன் ஒடுக்கம் அடையும் வினைப் பொருட்களைக் கண்டறிக.
படி 2: ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்கத்திற்கு, தனித்தனியே இரு அரைவினைகளை எழுதுக.
ஆக்சிஜனேற்ற எண் முறையினைப் பயன்படுத்தி சமன் செய்ய எடுத்துக்கொண்ட அதே வினையைக் கருதுவோம்.
KMnO4 + FeSO4 + H2SO4
\(\downarrow \)
MnSO4 +Fe2(SO4)3 +K2SO4 +H2O
இவ்வினையின் அயனி வடிவம்

இரு அறைவினைகள் முறையே
Fe2+ \(\rightarrow \) Fe3+ + 1e- (1)
மற்றும்
MnO4 + 5e- \(\rightarrow \) Mn2+ (2)
அறைவினைகளின் இருபுறமும் அணுக்கள் மற்றும் மின் சுமையினை சமன் செய்க.
சமன்பாடு (1) மாற்றம் ஏதுமில்லை
Fe2+ \(\rightarrow \) Fe3+ + 1e- (1)
சமன்பாடு (2) வினைபடுபொருள் பகுதியில் 4'O' உள்ளது.
எனவே, விளைபொருள் பகுதியில் 4H2O சேர்க்கவும். "H' ஐ சமன் செய்ய, வினைபடுபொருள் பகுதியில் 8H+ சேர்க்கவும்.
படி 3: இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும், ஏற்றுக் கொள்ளப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாகுமாறு, இரு அரைவினைகளையும் சமப்படுத்துக்க.
பின்னர், இரு அரைவினைகளையும் கூட்டுவதால் சமப்படுத்தப்பட்ட சமன்பாடு (6) கிடைக்கிறது.

39.
\({ p }_{ { C }_{ 6 }{ H }_{ 6 } }^{ 0 }=640\)mm Hg
W2 = 2.2 g (ஆவியுறா கரைபொருள்)
W1 = 40 g (பென்சீன்)
Pகரைசல் = 600 mm Hg
M2 = ?
\(\frac { { p }^{ o }-p }{ { p }^{ o } } ={ x }_{ 2 }\)
\(\frac { 640-600 }{ 640 } =\frac { { n }_{ 2 } }{ { n }_{ 1 }+{ n }_{ 2 } } \)
\(\frac { 40 }{ 640 } =\frac { { n }_{ 2 } }{ { n }_{ 1 } } \)
0.0625=\(\frac { { W }_{ 2 }\times { M }_{ 1 } }{ { M }_{ 2 }\times { W }_{ 1 } } \)
M2=\(\frac { 2.2\times 78 }{ 0.0625\times 40 } \)
=68.64 g mol-1 [∴n1>> n2 ; n1+n2 ≈ n1]
40.
\(CO+(\frac{1}{2})O_2\rightarrow CO_2\)
\(\triangle G^0\)வினை =\(\sum G^0_f\)வினைவினை பொருட்கள் -\(\sum G^0_f\)வினைபடு பொருட்கள்
\(\triangle G^0\)வினை =\([G^0_CO2]-[G^0_{CO}+\frac{1}{2}G^0_{O2}]\)
\(\triangle G^0\)வினை =-394.4+[137.2+0]
\(\triangle G^0\)வினை =-257.2 KJ mol-1
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் \(\triangle G^0\)வினை மதிப்பு எதிர்க்குறியை பெறுகிறது, எனவே வினை தன்னிச்சையாக நிகழும்.
41.
42.
| n | l | ml | துணை ஆற்றல் மட்டங்கள் |
| 4 | 2 | 0 | 4d |
| 3 | 1 | 0 | 3p |
| 5 | 1 | –1, 0, +1 ஏதேனும் ஒரு மதிப்பு |
5p |
| 3 | 2 | -2 | 3d |
43.
1. ஹைட்ரஜனின் ஐசோடோப்பு ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கனநீரைத் தருகிறது.
(B)
2D2 + O2 \(\rightarrow\) 2D2 O
2. டியூட்டிரியம் ஆனது புரப்பீனுடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு புரோப்பேன் டியூட்ரைடைத் தருகிறது.
(A) (C) (D)
CH3CH = CH2 \(\overset { { D }_{ 2 } }{ \longrightarrow } \) CH3 - CHD - CH2D
(C) (D)
முடிவு:
| குறியீடு | பெயர் | வாய்பாடு |
|---|---|---|
| A | டியூட்டிரியம் | D2 |
| B | கனநீர் | D2O |
| C | புரப்பீன் | CH3CH = CH2 |
| D | புரோப்பேன் டியூட்ரைட் | CH3 - CHD - CH2D |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards