11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/01/2019
11th Full Test Exam ( Important Question )
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அமுக்கத்திறன் காரணி வரையறு.
2.
சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.
3.
கீழ்க்காணும் அமைப்புகளுக்கு என்ட்ரோபி மாற்றம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
1.வெப்பநிலை மாறா மற்றும் அழுத்தம் மாறா செயல்முறை
2.வெப்பநிலை மாறா மற்றும் கனஅளவு மாறா செயல்முறை
4.
உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?
5.
ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களை எழுதுக.
6.
ஆக்சிஜனேற்ற எண்ணை எவ்வாறு கண்டறிவாய்?
7.
''சேர்மங்களின் பண்புகள் அவற்றின் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும்" இக்கூற்றை தகுந்த உதாரணத்துடன் விளக்குக.
8.
எரிதல் என்தால்பியை வரையறு
9.
பொருண்மைசாரா பண்பை இரண்டு எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக.
10.
a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி
11.
பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
(அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
(ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்
12.
ஒரு அணுவானது 35 எலக்ட்ரான்கள் மற்றும் 45 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
i) புரோட்டான்களின் எண்ணிக்கை
ii) தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
iii) கடைசி எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் ம மதிப்பு ஆகியனவற்றை கண்டறிக.
13.
STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.
14.
0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?
15.
ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.
16.
வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.
17.
தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.
18.
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
19.
"தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.
20.
பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
[அ]
[ஆ]
[இ]
[ஈ]
இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.
21.
வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.
22.
போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?
23.
ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 10 எனில் \(\triangle G\) மதிப்பின் குறியீடு என்ன?அவ்வினை தன்னிச்சையாக நிகழுமா?
24.
மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?
25.
ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
26.
பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
(i) மெக்னீசிய பால்மம்
(ii) கடுங்காரம்
(iii) சுண்ணாம்பு
(iv) எரி பொட்டாஷ்
(v) சலவை சோடா
(vi) சோடா சாம்பல்
(vii) ட்ரோனா(trona)
27.
பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு
28.
கனநீரின் பயன்களைத் தருக
29.
கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?
30.
அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் நாட்டத்தினை பாதிக்கும் காரணிகளுள் முக்கியமான ஒரு காரணி அணுவின் எலக்ட்ரான் அமைப்பு - விளக்குக.
1.
இயல்பு வாயுக்கள், நல்லியல்புத் தன்மையிலிருந்து விலகலடைதலை PV மற்றும் nRT க்கு இடையேயான விகிதத்தின் அடிப்படையில்,அளவிட இயலும்.இக்காரணி அமுக்கத்திறன் காரணி எனப்படுகிறது.
2.
\(H-C\equiv C-H\overset { Na }{ \longrightarrow } H-C\equiv C-Na\overset { Na }{ \longrightarrow } Na-C\equiv C-Na\)
3.
1. \(\triangle S={1\over T}\int^2_1 \partial q_p.rev\)
2.\(\triangle S={1\over T}\int^2_1 \partial q_v.rev\)
4.
(i) தனிம வரிசை அட்டவணையின் இடமிருந்து வலமாகச் செல்லும்போது உட்கருமின்சுமை அதிகரிப்பதாலும், உருவளவு குறைவதாலும் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகரிக்கின்றது.
(ii) அலோகங்கள் அட்டவணையின் வலப்புறத்திலும் உலோகங்கள் இடப்புறத்திலும் காணப்படுகின்றன.
(iii) எனவே அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் அதிகமாகக் காணபப்டுகின்றன.
5.
1. நீரை சுத்திகரிக்கும் செயல்முறையில் மாசுக்களை ஆக்ஸிஜனேற்றம் அடைய செய்ய.
2. வீரியம் குறைந்த புரைத் தடுப்பானாக.
3. துணி, காகிதம், முடிபாதுகாப்பு தொழிற்சாலையில் வெளுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
6.
ஒரு சேர்மத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அனுவினைத் தவவிர்த்து, பிற அணுக்களை, அவற்றின் வழக்கமான, ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விகளின்படி நிர்ணயம் செய்யப்பட்ட ஆக்சிஜனேற்ற நிலையில் அயனிகளாக நீக்கிய பின்னர், அக்குறிப்பிட்ட அணுவின் மீது எஞ்சியிருப்பதாகக் கருதப்படும் மின்சுமையே எந்த அணுவின் ஆக்சிஜனேற்ற எண் எனப்படும்.
7.
1. சோடியம் ஒரு பளபளப்பான உலோகம்
2. குளோரின் ஓர் எரிச்சலூட்டும் வாயு.
3. ஆனால் இந்த இரண்டு தனிமங்களில் இருந்து உருவாகும் சேர்மமான சோடியம் குளோரைடு, படிக்கத் தன்மையுடைய திண்மமாகும்.
4. இச்சேர்மம் உயிரியல் செயல்பாடுகளுக்கு முக்கியமானதாகும்.
8.
ஒரு மோல் சேர்மமானது அதிக அளவு காற்று அல்லது ஆக்ஸிஜனில் முழுமையாக எரிக்கப்படும்போது ஏற்படும் என்தால்பி மாற்றல் எரிதல் என்தால்பி (அ) எரிதல் வெப்பம் என வரையறுக்கப்படுகிறது.
9.
ஒரு பண்பானது அமைப்பின் நிலை அல்லது அளவினை பொறுத்து அமையாதிருந்தால் அப்பண்பு பொருண்மைசாரா பண்பு என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
1. ஒளி விலகல் எண்
2. பரப்பு இழுவிசை
3. அடர்த்தி
4. வெப்பநிலை
5. கொதிநிலை
6. உறைநிலை
7. மோலார் கனஅளவு
10.
1.வாயுக்களை திரமாக்கும் கொள்கையானது மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட கவர்ச்சி விசைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது
2.மூலக்கூறுகளுக்கிடையே விசை அதிகரிக்கும் போது வாயுவானது தீர்வமாக்கப் படுகிறது
3. வண்டார் வாலஸ் மாறிலி a = 0 என்ற வாய்விற்கு இருக்குமானால் அது நல்லியல்பு வாயுவாக செயல்படும்
4.அதாவது மூலக்கூறுகளுக்கிடைபட்ட விசைகள் ஏதும் காணப்படாது.எனவே அதனை திரவமாக்க முடியாது.
11.
(அ) \(Ca(HCO_{3})_{2} \rightarrow CaCO_{3}+CO_{2}+H_{2}O\)
(ஆ) \(2CaO_{(s)}+5C_{(s)} \rightarrow 2CaC_{2(s)}+CO_{2(s)}\)
12.
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை: 35 (கொடுக்கப்பட்டுள்ளது)
புரோட்டான்களின் எண்ணிக்கை : 35
எலக்ட்ரான் அமைப்பு
1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p5

கடைசி எலக்ட்ரான் 4Py ஆர்பிட்டாலில் உள்ளது.
n = 4 l = 1 ml = +1 அல்லது -1 ஆக இருக்கலாம், மற்றும் s = –1/2
13.
கொடுக்கப்பட்டவை:
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் CO2- ன் அடர்த்தி = 1.965 kgm–3
CO2 - ன் மோலார் நிறை=?
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் , 1 மோல் CO2 வாயுவானது 22.4 L கன அளவை அடைத்துக் கொள்கிறது.
1 மோல் CO2 -ன் நிறை=\(\frac{1.965 Kg}{1m^3}\)x 22.4 L

CO2 மோலார் நிறை= 44 gmol–1
14.
1. எந்த நிலையிலும் பனிக்கட்டியானது நீரில் மூழ்குவதில்லை. ஆனால் 0°c உள்ள பனிக்கட்டியை 0°c உள்ள திரவ நீரில் வைக்கும் போது சமநிலையை அடைகிறது.
2. எனவே, உருகுதல் அல்லது உறைதல் நிகழ்வு ஏற்படுகிறது.
3. இதே நிலையில் உள்ள பனிக்கட்டியை 0°c உள்ள கன நீரில் (D2O) வைக்கும் போது மூழ்குகிறது.
15.
வெவ்வேறு தனிமங்களின் அயனிகள் ஒரே எலக்ட்ரான் எண்ணிக்கையை கொண்டிருப்பது ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் எனபப்டும்.
உதாரணம்:
| வெவ்வேறு தனிம அயனிகள் | Na+ | Mg2+ | AI3+ | F- | O2- | N3- |
| எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | 10 | 10 | 10 | 10 | 10 | 10 |
16.
வாயுக்களை திரவமாக்கப்பல்வேறு முறைகள் பயன்படுகின்றன.
1) லின்டே முறையில், காற்று அல்லது பிறவாயுக்கள் ஜூல் தாம்சன் விளைவை பயன்படுத்தி திரவமாக்கப்படுகின்றன.
2) கிளாட் முறையில், ஜூல் தாம்சன் விளைவுடன்,வாயுவானது எந்திரவியல் வேலைக்கும் உட்படுத்தப்படுகிறதன் மூலம் அதிக குளிரிச்சியடைந்த நிலை உருவாக்கப்படுகிறது.
3) வெப்பமாறாச் செயல் முறையில்,கடோலினியம் சல்பேட் போன்ற காந்தத் தன்மையுடைய பொருளின் காந்தத் தன்மையை இழக்கச் செய்வதன் மூலம், குளிரிச்சியடைச் செய்தல் நிகழ்த்தப்படுகிறது. இம்முறையில் 0K யை விடகுறைவான வெப்பநிலையான 10-4 K
அளவில் வெப்பநிலையினை அடைய இயலும்.
17.
i.கார உலோகங்கள் அதிக வினைதிறனைக் கொண்டுள்ளன.
ii.இந்த வினையின் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
iii.தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
iv.அனைத்து கார உலோகங்களும்,அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்ஸிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
18.
H=U+PV
H,U,V ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் H1,U1,V1 மற்றும் H2,U2,V2 ஆகும்.
என்தால்பி மாற்றம்
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+ P\triangle V\)
19.
(i) ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தது.
உதாரணம்:
டெல்லூரியம் (127.6) ஆறாவது தொகுதியிலும் அயோடின் (127) ஏழாவது தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
20.

1. கொடுக்கப்பட்டுள்ள p3 எலக்ட்ரான் அமைப்புகளுள் (அ) அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது.
2. இதுவே (அ) நிலையான நிலையை கொண்டதாக கருதப்படுகிறது.
21.
மாறாக வேதிவினைக் கூறு விகித அடிப்படையில் அமையாத அளவினைக் கொண்ட வினைபடு பொருட்களைக் கொண்டு, வினை நிகழ்த்தப்படும் போது, உருவாகும் விளை பொருளின் அளவானது, எந்த வினைபடுபொருள் முதலில் முழுவதும் வினைப்படுகிறதோ, அந்த வினைபொருளைச் சார்ந்து அமையும். இவ்வினைப்பாடு பொருள் வினை தொடர்ந்து நிகழ்வதைக் கட்டுப்படுத்துகிறது. இது வினை கட்டுப்பாட்டுக் காரணி என அழைக்கப்படுகிறது.
22.
(i) பல எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களுக்கு இக்கொள்கையினை பயன்படுத்த இயலாது
(ii) சீமன் விளைவு மற்றும் ஸ்டார்க் விளைவு ஆகியவற்றை இக்கொள்கை விளக்கவில்லை.
(iii) அணுக்கருவினைச் சுற்றி எலக்ட்ரான்கள் அவற்றின் கோண உந்தத்தின் மதிப்பு \(\frac{nh}{2\pi}\) க்கு சமமாக இருக்குமாறு உள்ள சில குறிப்பிட்ட வட்டப்பாதையில் மட்டுமே சுழல்வதற்கு அடிப்படையாக அமையும் காரணத்தினை போர் கொள்கையினால் விளக்க இயலவில்லை.
23.
Keq = 10
R= 8.314 JK-1 mor-1
T= 300 k
\(\triangle G^o\) = -RT In k
1. k, Tமற்றும் R ஆகியவை நேர்குறி மதிப்பை உடையவை. ஆகவே Go எதிர்குறி மதிப்பைப் பெறும்
2. \(\triangle G\) எதிர்குறி மதிப்பை பெற்றால் அவ்வினையானது தன்னிச்சையானது மற்றும் நிகழக்கூடியது.
24.
1. மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள்.இது நியூட்டனின் முதல் விதிப்படி நடக்கிறது
2. பிரேக்கினை உபயோகிக்கும் போது அந்த குறிப்பட்ட வாகனமானது ஓய்வு நிலைக்கு வருகிறது.ஆனால் பயணிகள் தொடர்ந்து முன்னோக்கிய இயக்கத்தில் உள்ளனர்.எனவேதான் முன்பக்கமாக விழுகின்றனர்
3. ஹீலியம் பலூனின் இயக்கம் எதிர்திசையில் இருக்கும்.சுற்றியுள்ள காற்றின் அடர்த்தி வேறுபாடே இதற்குக் காரணம்
4. தீரரென காரை நிறுத்தும் போது காற்று முன்னோக்கி நகர்கிறது.இதன் விளைவு காரின் முன்புற அடர்த்தி பின்புறத்தைவிட அதிக அழுத்தத்தை முன் புற பலூனிற்கும் தரும்
5. எனவே பலூன் ஆனது குறைந்த அதிர்த்தியுடைய பின்பக்கமாக தள்ளப்படுகிறது/
25.
கொடுக்கப்பட்டவை: ஒரு அணுவின் நிறை= 6.645 × 10–23 g
\(\therefore\)1 மோல் அணுவின் நிறை = 6.645 × 10–23 g × 6.022 × 1023
=40 g
0.320 kg -ல் உள்ள தனிமத்தின் மோல்களின் எண்ணிக்கை = \(\frac{1 mole}{40 g}\times0.320 kg\)
=\(\frac{1 mol\times320g}{40g}\)
=8 mol
26.
1.மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
2.சோடியம் ஹைட்ராக்சைடு
3.கால்சியம் ஆக்சைடு
4.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
5.சோடியம் கார்பனேட்
6.சோடியம் கார்பனேட்
7.டிரை சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் டைஹைட்ரேட்
27.
கொடுக்கப்பட்ட ஒரு ஆர்பிட்டாலில் அதிகபட்சமாக இரு எலக்ட்ரான்கள் மட்டுமே நிரப்ப முடியும். அவை இரண்டும் எதிரெதிர் சுழற்சியுடையவை.
28.
1. அணுக்கரு உலைகளில் வேகமாகச் செல்லும் நியூட்டரான்களின் ஆற்றலை, கனநீர் குறைப்பதால் இது மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.
2. கரிம வினைகளின் வினைவழி முறைகளை கண்டறிதல் மற்றும் உடல் செயற் வினைகளின் வழிமுறைகளை தீர்மானிப்பதில் இது சுவடறிவானாகப் பயன்படுகிறது.
3. அணுக்கரு உலைகளில் வெளிப்படும் வெப்ப ஆற்றலை உறிஞ்சும் தன்மையினை இது பெற்றிருப்பதால் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.
29.
1. நீர் மற்றும் கனநீருக்கு இடையே இயற்பண்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
2. ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் இவற்றின் நிறைகளின் வேறுபாடு காரணமாக, வினைகள் வெவ்வேறு விதங்களில் நடைபெறும்.
3. D2O பங்குபெறும் வினையின் வேகம் H2O பங்குபெறும் வினையின் வேகத்தை விட குறைவு.
4. எனவே இதை பருகினால் உடல் செயலியல் நிகழ்வுகள் பாதிக்கப்படும்.
5. ஆகையால் D2O (கனநீர்) குடிப்பதற்கு உகந்ததல்ல.
30.
(i) அணுவில் எலக்ட்ரான்கள் நிரப்பப்பட்டுள்ள விதம் அணுவின் எலட்ரான் அமைப்பு எனபப்டும்.
(ii) அணுவின் வெளிக்கூட்டில் காணப்படும் எலட்ரான்கள் இணைதிற எலட்ரான்கள் எனப்படுகின்றன.
(iii) இந்த இணைதிற எலட்ரான்களில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் அயனியாக்கும்.
(iv) எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் அயனியாக்கும் ஆற்றலை நோக்கினால் சரிபாதியளவு மற்றும் முழுவதும் நிரப்பப்பட்ட எலட்ரான் அமைப்பு அதிக அயனியாக்கும் ஆற்றலையும், பகுதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பு குறைந்த அயனியாக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
(v) இதேபோல் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானை சேர்த்து அதன் எதிர் அயனியை உருவாக்கும்போத வெளிப்படும் ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் எனப்படுகிறது.
(vi) சரிபாதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பில் மேலும் ஒரு எலக்ட்ரான் அமைப்பு இழக்கப்படும் நிலை ஏற்படும்.
(vii) மேலும் முழுவதும் நிரப்பப்பட்ட நிலையான எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளவற்றுடன் கூடுதலாக ஓர் எலக்ட்ரானை சேர்த்தல் சாதகமானதல்ல.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards