11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 First Revision Test
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
HTTP –ன் விரிவாக்கம்
Hyper text transfer protocol
Hyper transmit transfe protocol
Hyper tech transfer protocol
Hyper text telnet protocol
2.
ASCII விரிவாக்கம்
American standard code for Information Interchange
American scientific code for International Interchange
American standard code for Intelligence Interchange
American scientific code for Information Interchange
3.
படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?
புதிய நிகழத்துததலை உருவாக்கல்
புதிய வரைநிலையை உருவாக்கல்
கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்
மேற்கண்ட எதுவுமில்லை
4.
வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transistion
(அ) அல்லது (ஆ)
5.
வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?
பட்டியல்
வடிகட்டுதல்
வடிவமைத்தல்
செல்லுபடியாக்கல்
6.
பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?
Ctrl
Shift
Alt
tab
7.
காலக்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது
எண்
குறியீடு
தேதி
எழுத்து
8.
Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.
Thunderbird
Fire Fox
Internet Explorer
Chrome
9.
அண்ட்ராய்டு ஒரு
மொபைல் இயக்க அமைப்பு
திறந்த மூல
கூகுள் உருவாக்கியது
இவை அனைத்தும்
10.
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லோகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
11.
NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது
NOT(OR)
NOT(AND)
NOT(NOT)
NOT(NOR)
12.
2^50 என்பது எதை குறிக்கும்
கிலோ (Kilo)
டெரா (Tera)
பீட்டா (Peta)
ஜீட்டா (Zetta)
13.
ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
பச்சை நிற நெளிக்கோடு
நீல நிற நெளிக்கோடு
கருப்பு நிற நெளிக்கோடு
சிகப்பு நிற நெளிக்கோடு
14.
Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?
Ctrl + F5
Ctrl + F8
Ctrl + F10
Ctrl + F12
15.
ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?
Head
Foot
Header
Footer
16.
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
17.
கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?
18.
QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?
19.
தமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக
20.
கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக
21.
எத்தனை உள்ளமைந்த சில்லு வடிவமைப்புக்ள் (layout) Impress-ல் உள்ளன?
22.
வரைபடம் என்றால் என்ன?
23.
ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?
24.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
25.
ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?
26.
விண்டோஸில் உள்ள Shutdown என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி.
27.
மின்னஞ்சலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி
28.
நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்
29.
முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?
30.
அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக
31.
காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக
32.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
33.
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக
34.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
35.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
36.
விண்டோஸ் இயக்க அமைப்பின் செயல்பாடுகளைப் பட்டியலிடு.
37.
மையச் செயலகம் என்றால் என்ன?
38.
தேடல் பொறி எவ்வாறு செயல்படுகிறது
39.
நிகழத்துதல் கோப்பினை எவ்வாறு சேமிப்பாய்?
40.
தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக
41.
நுண்ணறை A1, A2 மற்றும் A3 யில் முறையே, 34, 65 மற்றும் 89 ஆகிய மதிப்புகள் உள்ளது.அதன் சராசரியை காணும் வாய்ப்பாட்டை எழுதுக
42.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்பு முகங்களை எழுதுக.
43.
கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BC9
44.
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
45.
மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக
1.
(a)
Hyper text transfer protocol
2.
(a)
American standard code for Information Interchange
3.
(a)
புதிய நிகழத்துததலை உருவாக்கல்
4.
(a)
Custom Animation
5.
(a)
பட்டியல்
6.
(a)
Ctrl
7.
(a)
எண்
8.
(a)
Thunderbird
9.
(a)
மொபைல் இயக்க அமைப்பு
10.
(a)
லோகேட்டர் (Locator)
11.
(a)
NOT(OR)
12.
(a)
கிலோ (Kilo)
13.
(a)
பச்சை நிற நெளிக்கோடு
14.
(a)
Ctrl + F5
15.
(a)
Head
16.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரை தேர்வு செய்யப்பட்டப்பின் Shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
17.
1. Copy மற்றும் Paste தேர்வுகள் மூலம்.
2. இழுத்து விடுதல் முறையில்.
18.
1. கியூ.ஆர் (QR-QuickResponse) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும்.
2. ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது.
19.
Google மற்றும் Bing தமிழில் தேடக்கூடிய தேடுபொறிகள் ஆகும்.
20.
வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் முனையம் எனப்படும். இவை தகவலை அனுப்பவும் பெறவும் முடியும்.
21.
12 உள்ளமைந்த சில்லு தளவமைப்புகள் Impress ல் உள்ளன.
22.
வரைபடம் என்பது திறன்மிக்க முறையில் தரவுகளைப் படிப்பதற்கு எளிதாகப் புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்.
23.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் கொடா நிலையாக மூன்று கருவிப்பட்டைகள் உள்ளன. அவை
(i) செந்தரக் கருவிப்பட்டை
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை
(iii) வாய்ப்பாட்டு பட்டை
24.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
25.
1. Word Art வார்த்தை கலை என்பது Open Office Writer யில் உள்ள உரை மாற்றப்படும் அம்சமாகும்.
2. ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு நிழல்கள்,வரைபடங்கள், வண்ணங்கள்,சாய்வு 3D விளைவுகள் போன்ற தாக்கங்கள் (effects) இதன் மூலம் பெறலாம்.
3. Word Art-ல் உள்ள சிறப்பு தாக்கங்கள் மூலம் உரையை மேலும் படிப்பதற்கு எளிமையாக மற்றும் தூண்டுவதாகவும் அமைக்க முடியும்.
26.
1. Switch User: அடுத்த பயனர் கணக்கினுள் கணிப்பொறியின் இயக்கத்தை நுழைய விண்டோஸ் வழி வகுக்கும்.
2. Log Off : திறந்துள்ள அனைத்து நிரல்களும் மூடிய பின்னரே அடுத்த பயனர் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலும்.
3. Lock :கணிப்பொறியை முறையாக விட்டு வெளியில் செல்லும் நிலையில் மூடும் வசதி உள்ளது.
4. Restart: கணிப்பொறியை மறு தொடக்கம் செய்வது (விண்டோஸ் இயக்க அமைப்பை மேம்படுத்தும் போதும் புதிய மென்பொருள் நிறுவும் போதும் இந்த விருப்பம் பயன்படும்).
5. Sleep: குறைந்த மின் சக்தியில் கணிப்பொறியை இயக்க இந்த நிலை பயன்படும். இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பயன்பாடுகளும் இயங்கி கொண்டிருக்கும்.
6. Hibernate: குறைந்த மின் சக்தியில் கணிப்பொறி இருக்கும் போது எல்லா இயங்கும் நிரல்களும் மற்றும் திறந்த விண்டோஸ்களும் சேமிக்கப்பட்டு விரைந்து தொடங்கும் நிலைக்கு மாறும்.
27.
இணையத்தில் மின்னஞ்சலின் செயல்பாடு :
1. இணைய மின்னஞ்சலை அனுப்ப இணைய இணைப்பும் மற்றும் அஞ்சல் சேவையக அணுகலும் தேவைப்படுகிறது.
2. இணைய மின்னஞ்சலை அனுப்புவதற்கான நிலையான நெறிமுறை SMTP (Simple Mail Transfer Protocal) ஆகும்.
3. இணையத்தில் மின்னஞ்சல் செய்திகளை அனுப்பவும் பெறவும் பயன்படுகிறது.
4. மின்னஞ்சல் பயனரால் செய்திகள் SMTP சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது.
5. மின்னஞ்சல் பெறுவோர் உள்ளூராக இருந்தால் அனுப்பப்படும் செய்தி சேவையகத்தில் வைக்கப்பட்டு பின்னர் POP IMAP அல்லது மின்னஞ்சல் சேவைகள் மூலம் அனுப்பப்பட்டு மீட்கப்படுகிறது.
6. பெறுநர் தொலை தூரமாக (மற்றொரு com காம்) இருந்தால் SMTP சேவையகம் DNS யைத்தொடர்பு கொண்டு சரியான IPல் முகவரியை கண்டுபிடித்து அந்த IP - க்கான களத்திற்கு அனுப்புகிறது.
7. IP முகவரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் SMTP சேவையகம் தொலைதூர SMTP சேவையகத்துடன் இணைக்கப்பட்டு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
8. SMTP சேவையகம் அனுப்பும் அஞ்சல் தொலைதூர SMTP சேவையகத்துடன் இணைக்கப்பட முடியவில்லை என்றால் செய்தியானது மீண்டும் முயற்சிக்கப்பட்டு அனுப்பப்படும்.
9. செய்தியானது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு (30 மணி நேரம் தோராயமாக) அனுப்பப் படவில்லை எனில் அந்தச் செய்தி, பெறுநருக்குத் திருப்பி அனுப்பப்படும்.
மின்னஞ்சல் செய்தியின் கட்டமைப்பு :
To : இந்த புலம் யாருக்கு செய்தியை அனுப்ப வேண்டுமோ அவருடைய முகவரியைக் கொண்டிருக்கும். இது கட்டாயமாகும்.
CC : இது தட்டச்சு நகலாகும் (Carbon copy) இது விருப்பத் தேர்வாகும். இதன் மூலம், செய்தி நகலைத் தேவையான செய்தி பெறுநர், இந்த நகலைப் பெறும் அனைத்து பெறுநர்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.
BCC : இதன் விரிவாக்கம் Block carbon copy ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெறுநர் இந்தச் செய்தி நகலானது பிற பெறுநருக்கு பகிரப்பட்தை மறைக்கிறது. இது விருப்பத் தேர்வாகும்.
Subject : மின்னஞ்சலின் நோக்கத்தைக் குறிக்கிறது.
Attachment : இந்த இணைப்பு மின்னஞ்சல் உடன் இணைப்பு ஆவணங்கள், படங்கள் போன்றவற்றை இணைக்கிறது.
Body : இது மின்னஞ்சல் செய்தியில் முக்கியப் பகுதி. இது செய்தியின் உரை, படங்கள் மற்றும் பிற தரவுகளையும் உள்ளடக்கியது.
Signature : அனுப்புநரின் பெயர்.
28.
கம்பியில்லாத் தகவல் தொழில் நுட்பத்தின் வகைகள் :
கம்பியில்லாத் தொலைபேசி, செல்பேசி, GPS) அலகுகள், கம்பியில்லா கணினி பகுதிகள் மற்றும் செயற்கை கோள் தொலைக்காட்சி ஆகியவை.
I. புளுடூத் (Bluetooth) :
1. இது டேனிஷ் ராஜா ஹரால்டு புளுடூத் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
2. கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் மூலம் தரவைப் பரிமாறிப் பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.
3. வெவ்வேறு மின்சாதனங்களை இணைக்க புளுடூத் பயன்படுகிறது.
4. அலைபேசியை, கை பயன்படாத காது கருவிகள், (handfree ear tools) கம்பியில்லா விசைப்பலகை, சுட்டி, ஒலிபெருக்கி மூலம் மடிக் கணினியை இணைத்துக் தகவல்களை ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கு பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது.
II. அகச்சிவப்பு தொழில்நுட்பம் :
1. அகச்சிவப்பு கதிர்வீச்சுகளின் வழியாக அகச்சிவப்பு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சாதனங்களுக்கு இடையில் தரவு பரிமாற்றத்திற்கான கம்பியில்லா தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு வகையாகும்.
2. கம்பியில்லாத் தரவு பரிமாற்றத்தில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. சுட்டி, கம்பியில்லா விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற சாதனங்களில் பயன்படுகிறது.
III. வை-யை (Wi-Fi) :
1. கம்பியில்லா மிகக்குறைந்த செலவு கொண்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும்.
2. Wi-Fi அமைப்பு கம்பியில்லா திசைவியைக் (Router) கொண்டுள்ளது.
3. இது தொடர்பு மையமாக செயல்பட்டு எடுத்துச் செல்லத்தக்க ( (portable) சாதனத்தை இணையத்துடன் இணைக்கிறது.
4. ரவுட்டர் (Router) கட்டமைப்பைப் பொறுத்து பல சாதனங்களின் இணைப்பை இந்த வலையமைப்பு நிர்ணயிக்கிறது.
IV. வானொலி இணைப்பு (Radio Link) :
வானொலி இணைப்பு என்பது தரவு வலையமைப்பில் உள்ள இரண்டு முனையங்கள் (அ ) வானொலி அலகுகளுக்கு இடையில் உள்ள கம்பியில்லா இணைப்பாகும். (கம்பியில்லா முனையம்- முனையம் (point-to-point) இணைப்பு).
V. நுண்ணலை இணைப்பு (Microwave Link) :
வானொலி அலைகளின் அதிக அதிர்வெண் கற்றைகளைப் பயன்படுத்தி ஒலி, ஒளி மற்றும் தரவுத் தகவல்களை அனுப்ப மற்றும் பெறக்கூடிய அதிவேக தகவல் தொடர்பு இணைப்புகளை வழங்குகிறது.
VI. செயற்கைக்கோள் இணைப்பு (Statellite Link):
1. செயற்கைக்கோள் உதவியுடன் சமிக்ஞைகளை அனுப்புநரிடமிருந்து பெறுனருக்கு பரிமாற்றம் செய்ய உதவும் கம்பியில்லா தொழில்நுட்பமே செயற்கைக்கோள் தகவல் தொடர்பு எனப்படும்.
2. உலகம் முழுவதும் பரவி, பயனர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் மெய்நிகராக (Virtualy) இணைப்பில் இருக்க அனுமதிக்கிறது.
29.
1. வார்ப்புருக்கள் என்பவை மென்பொருளில் முன் வடிவமைத்தப் படிவங்கள் ஆகும்.
2. நிகழ்த்தல் உருவமைத்தலில் எளிதான முறை வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உருவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதேயாகும்.
3. Impress - ல் ஐந்து நிகழ்த்துதல் வார்ப்புருக்கள் உள்ளன. Prescntations என்பதன்கீழ் இரண்டு வார்ப்புருக்களும், Presentation backgrounds என்பதன்கீழ்மூன்றுவார்ப்புருக்களும் உள்ளன.
4. இரண்டு வகைகளுக்கான வேறுபாடு, 'Presentation' வார்ப்புருக்கள் மாதிரி தலைப்புகள் மற்றும் விஷயங்களைக் கொண்ட சில்லுகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும், "Presentation Background" வார்ப்புருக்கள் பின்னணி மற்றும் பின்னணிப் பொருட்களை மட்டுமே கொண்டிருக்கும்.
5. இரண்டு வகைகளும் முன் வடிவமைத்த நிகழ்த்துதல் மற்றும் வரைகலைப் பாணிகளைக் கொண்டிருக்கும்.
30.
வடிவூட்டல் கருவிப் பட்டையிலுள்ள பணிக்குறிகள் :
1.எழுத்துரு கீழிறக்கு பெட்டி : பலவேறு எழுத்து வடிவுகளை இந்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
2.எழுத்து அளவு கீழிறக்கு பெட்டி: இது எழுத்துருக்களின் அளவை மாற்றி அமைக்கப் பயன்படுகிறது.
3. எழுத்துருக்களை தடிமனாக்குதல் பணிக்குறி: இதனைப் பயன்படுத்தி தரவுகளை தடித்த எழுத்துக்களில்
காட்டலாம் இதற்கான குறுக்குவழி Ctrl+B.
4. சாய்வெழுத்து பணிக்குறி : இது தரவுகளை சாய்ந்த வடிவில் காட்டப்பயன்படும். இதற்கான குறுக்கு
வழி Ctrl+I.
5. அடிக்கோடிக்கல் பணிக்கறி : இது தரவுகளை அடிக்கோடிட்டுக் காட்டப் பயன்படுகிறது, இதற்கான
குறுக்குவழி Ctrl+U.
6. இசைவு பணிக்கறிகள் - இவை தரவுகளை இடது, வலது, மையம் மற்றும் நேர்த்தி இசைவுகளில்
ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதற்கான குறுக்கு வழிகள் இடது-Ctrl+L. வலது-Ctrl+R. மைய-Ctrl+E மற்றும் நேர்த்தி-Ctrl+J.
7.எண் வடிவமைப்பு பணிக்குறிகள் :
பணக் குறியீடு (Currency) பணிக்குறி, சதவீதம் (Percent) பணிக்குறி, இயல்பு நிலை (Standard) பணிக்குறி,
தசம புள்ளியைச் சேர்த்தல். தசம புள்ளியை குறைத்தல் போன்ற பணிக்குறிகளைப் பயன்படுத்தலாம். இவற்றுள்,
பணக் குறியீடு, சதவீதம் மற்றும் இயல்பு நிலைக்கு முறையே Ctrl+Shift+4, Ctrl+Shift+5 மற்றும் Ctrl+Shift+6 குறுக்கு
வழிகளைப் பயன்படுத்தலாம்.
8. வன் தன்னால் மிகுப்பு மற்றும் குறைப்புப் பணிக்குறிகள் : நுண்ணறையில் உள்ள தரவுகளை
உள்தள்ளப் பயன்படுகிறது.
9.எல்லைப் பணிக்குறி (Border) : எல்லையின் வகை. பின்புற நிறம் மற்றும் எழுத்து நிறம்
பணிக்குறிகள் முறையே அட்டவணைத்தாள் கோடுகளின் நிறம், பின்புற வண்ணம் மற்றும் தரவுகளின்
நிறத்தை மாற்றப் பயன்படுகிறது.
31.
வழிமுறை : 1
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற விரும்பு புகின்றோமோ அந்த நெடுவரிசையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format –> Column –> Width என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
4. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 2
1 அகலம் மாற்றப்பட வேண்டிய நெடுவரிசைத் தலைப்பில் சுட்டியை வைத்து வலது கிளிக் செய்யவும்.
2. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
3. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 3
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற வேண்டுமோ. அந்த நெடு வரிசையை, அடுத்த வரிசையிலிருந்து
பிரிக்கும் கோட்டிற்கு சுட்டியை எடுத்துச் செல்லவும்.
2. சுட்டெலியின் சுட்டி இருதலை அம்புக்குறியாக மாறுவதைக் காணலாம்.
3. அந்த நிலையில் கிளிக் செய்து சுட்டியை இடப்புறம் அல்லது வலப்புறம் இழுத்து
அகலத்தைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்யலாம்.
32.
I. பரவல் இயக்க அமைப்பு: டிஜிட்டல் பிணையம் (இணைய தளம்/உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட தரவு மற்றும் பயன்பாடுகளை இந்த அம்சம் கவனித்து கொள்கிறது.
பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் இருக்கும் கோப்புகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவைக் கையாள முடியும். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியில் உள்ள கோப்புகளைக் கையாளுவதைப் போன்று உணருவர்.
II. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1. ஓரே இடத்தில் உள்ள ஒரு பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றோரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2. பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்.
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
4. புரவலன்/புரவலர்(Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
33.
I. படிக்க மட்டும் நினைவகம் (ROM):
1. படிக்க மட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம்.இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்ய முடியாது .
2. ROMல் கணனியை துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்கள சேமிக்கப்படும்.
3. ஒரு முறைத் தரவுகளை இதில் எழுதிவிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் படிக்க மட்டும் முடியும்.
4. ROM ன் உள்ளடக்கம் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை. இதனால் ROM அழியா நினைவகம் என்று அழைக்கப்படுகிறது .
II. நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (Programmable Read-Only Memory - PROM):
1. நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும்.இதில் தரவுகளை ஒருமுறை மட்டும் எழுத முடியும்.
2. PROM-ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும், PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
3. PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவமாக தயாரிக்கப்படும், ஆனால் P R O Mல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி எழுதப்படுகின்றது. இந்த வகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
III. நிரலாக்கு அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EPROM) Erasable Programmable Read-Only Memory :
1. அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
2. EPROM -ல் தகவல்கள் புற ஊதா ஓளி செலுத்தும் வரை சேமித்து வைக்கப்படுகின்றன.புற ஊதா ஓளியை செலுத்தி EPROM- ன் உள்ளடக்கத்தை அழித்து, மீண்டும் வேறு நிரல்களை எழுதலாம்.
3. EPROM பொதுவாக தனியாள் கணினியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உற்பத்தியலார்கள் கணினியை வழங்கும் முன் PROM-ன் உள்ளடக்கத்தை மாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்க வேண்டியவற்றை அழிக்க முடியும்.
IV. மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EEROM)Electrically Erasable Programmable Read-Only Memory :
1. ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும் .
2. இதில் உள்ளத் தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். மற்றும் PROM வகையைபோலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது.
3. மற்ற வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.
34.
| கணிப்பொறியின் தலைமுறை |
காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் |
நிறை / குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை |
1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes ) |
1.அளவில் பெரியது. |
| இரண்டாம் தலைமுறை |
1955-64 | திரிதடையகம் (Transistors ) |
1.முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. eg :IBM 1620,UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை |
1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC ) |
1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது . |
| நான்காம் தலைமுறை |
1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1. சிறியது மற்றும் வேகமானது. 2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது . 3. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின . |
| ஐந்தாம் தலைமுறை |
1980-இன்று வரை | மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் Ultra Large Scale Integration (ULSI) |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3.கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது . 4. நிழற்பட்டங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன். 5.செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் . |
| ஆறாவது தலைமுறை |
எதிர் காலத்தில் | செயற்கை அறிவு | 1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. 2.கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும். 3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல். 4. இயற்கை மொழிச் செயலாக்கம். 5. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல். |
35.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
36.
1. சொற்செயலிகள், அட்டவணை செயலிகள். கணிப்பான் விளையாட்டுகள் போன்ற பயன்பாடுகளை இயக்குவதற்கும்.
2. கணிப்பொறியில் புதிய பயன்பாடுகளை நிறுவுவதற்கும்.
3. அச்சுப் பொறி, வருடி,சுட்டி, இலக்க வகை கேமரா போன்ற வன்பொருட்களை மேலாண்மை செய்வதற்கும்.
4. கோப்பு மற்றும் கோப்புறைகள் உருவாக்குதல்,பதிப்பாய்வு செய்தல், சேமித்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்கும்.
5. கணிப்பொறியின் அமைப்புகள் (Settings),வண்ண திட்டங்கள் (Colour Scheme),திரைக்காப்பு (Screen savers)போன்றவற்றை மாற்றி அமைக்கவும் பயன்படுகின்றன.
37.
1. மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும்.
2. இது நினைவகம், உள்ளீடு, மட்டும் வெளியீடு போன்ற மற்ற அனைத்துச் சாதனங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.
3. இது தரவை உள்ளீடாகப் பெற்று கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
38.
1.வலை தேடல் பொறி என்பது www - ல் தகவல்களைத் தேடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் அமைப்பாகும்.
2. பல்வேறு தலைப்புகளுக்கான பரந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது.
3.இந்தத் தகவலானது வலைப்பக்கங்கள். படங்கள் மற்றும் பிறக் கோப்பு வகைகளின் கலவையாகும்.
4.சில தேடல் பொறிகள் தரவுத்தளத்திலுள்ள தரவுகள் அல்லது திறந்த விவரப்புத்தகத்திலுள்ள தரவுகளையும் தேடிக் கொடுக்கிறது.
5.தேடல் பொறிகள் நிகழ் நேர தகவல்களை webcrawler நெறிமுறைகளைச் செயல் படுத்துவதன் மூலம் பராமரிக்கிறது.
39.
1.File --> Save விருப்பத்தைத் தேர்வு செய்தால், Save As உரையாடல் பெட்டியைத் திறக்கும்.
2.அதில் கோப்பின் பெயரை File Name பெட்டியில் உள்ளிடவும்.
3.நிகழ்த்துதலை ஒரு PPT விளக்கக் காட்சியாக சேமிக்க முடியும். விளக்கக் காட்சியைச் நேரடியாக .pdf என ஏற்றுமதி செய்யலாம்.
40.
படிநிலை 1:
வரிசையாக்கம் செய்யப்பட வேண்டிய புலத்தில் (நெடுவரிசை) நுண்ணறைச் சுட்டியை இருத்தவும்.
படிநிலை 2:
1.செந்தரக் கருவிப்பட்டையிலுள்ள Sort Ascending அல்லது Sort Descending பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. ஓபன் ஆஃபீஸ் கால்க், தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையிலுள்ள தரவுகளின் அடிப்படையில், அதனுடன் தொடர்புடைய மற்ற நெடுவரிசைகளையும் சேர்த்து வரிசைப்படுத்தும்.
41.
சராசரியை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு =AVERAGE (A1;A2;A3)
அல்லது
AVERAGE (A1;A3)
42.
பலவகையான தொடர்பு முகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தொடர் தொடர்பு முகம் (Serial Port) - பழைய கணினிகளில் வெளிக்கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
2. இணையான தொடர்பு முகம் (Parallel Port)- பழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
3. USB தொடர்பு முகம்- கேமராக்கள், ஸ்கேனர்கள் , மொபைல்கள், வெளிப்புற வன்தட்டு மற்றும் அச்சுப்பொறி போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
4. USB 3.0 - பல்வேறு மின்னணுச் சாதனங்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
5. VGA இணைப்பான்- புரொஜெக்டர் அல்லது காட்சித் திரையைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
6. ஆடியோ பிளக்ஸ் (Audio plugs): கணினியுடன் ஒலிபெருக்கி, மைக்ரோ ஃபோன் மற்றும் தலை தொலை பேசி இணைப்பதற்கு பயன்படுகிறது.
7. PS/2 Port: சுட்டி மற்றும் விசைப்பலகையை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
8. SCSI Port : வன்வட்டு, பிணைய இணைப்பிகள் கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
9. HDMI: என்பது ஒளிக்காட்சி கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜெக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
43.
பதினாறு நிலை எண்களை இருநிலை எண்களாக மாற்ற, ஒவ்வொரு பதினாறு நிலை எண்ணிற்கும் நிகரான நான்கு இலக்கு இருநிலை எண்களைக் கணக்கிட்டு எழுத வேண்டும்.
ஈ) \(BC9_{ 16 }={ \left( ? \right) }_{ 2 }\)

\(\therefore \quad BC9_{ 16 }=\quad { \left( 101111001001\right) }_{ 2 }\)
44.
(i) உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
(ii) உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
45.
(i) மெயில் மெர்ஜ் வசதி முகவரித்தரவை ஒருங்கிணைத்து, அதை ஆவணத்தில் ஒன்றிணைத்து தேவையான வடிவமைப்பில் அச்சிடப் பயனருக்கு உதவி செய்கிறது.
(ii) பெயர்கள் மற்றும் முகவரியின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
(iii) ஒரு ஆவணத்தின் (கடிதப் படிவம்) பல நகல்களை பல்வேறு பெறுநர்களுக்கு பின்வரும் வசதிகளால் அனுப்பப்படும்.
1. மெயிலிங் (Mailing)
2. லேபில்ஸ் (Labels)
3. எனவலப்ஸ் (Envelopes)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards