11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
Plus One Public Exam March 2019 Model
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது
தகவல் பரிமாற்றம்
தரவு மாதிரி
தரவு புலம்
தரவு அட்டவணை
2.
உள்வரும் மற்றும் வெளியேறும் வலையமைப்பு போக்குவரத்தைத் கட்டுப்படுத்தும் விதிகளை பயன்படுத்துகின்ற வலை பாதுகாப்பு அமைப்பைக் கண்டறிக
Firewall
Cookies
Hacking
Crackers
3.
உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?
விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்
குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு
அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு
4.
இம்ப்ரெஸ்ல் அனைத்து சில்லுகளின் சிறுபதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் முறை
Notes
Outline
Handout
Slide Sorter
5.
வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?
பட்டியல்
வடிகட்டுதல்
வடிவமைத்தல்
செல்லுபடியாக்கல்
6.
எநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது
COMBINA
CEILING
Floor
ABS
7.
ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?
விசி காலக் (Visicalc)
லிப்வர காலக் (LibreCalc)
லோட்டஸ் 1-2-3 (Lotus 123)
ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல
Ubuntu
RedHat
CentOS
BSD
9.
பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?
செயல்முறை மேலாண்மை
நினைவக மேலாண்மை
பாதுகாப்பு மேலாண்மை
நிரல் பெயர்ப்பி சூழல்
10.
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லோகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
11.
NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
12.
00100110 க்கான 1ன் நிரப்பி எது?
00100110
11011001
11010001
00101001
13.
ஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______
சொற்செயலி
அட்டவணைத்தாள்
நிகழ்த்துதல்
தரவுதளம்
14.
"Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?
File ⟶ Table properties
Format ⟶ Table properties
Table ⟶ Table Properties
Table ⟶ Table format
15.
ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?
Ctrl + F1
Ctrl + F4
Ctrl + F5
Ctrl +F7
16.
சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
17.
தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?
18.
கணிப்பொறியின் ஐந்து தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்திய முதன்மைப் பொருள் யாது ?
19.
பொருத்துக
| அ | ஆ | ||
|---|---|---|---|
| அ | வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் | 1 | தனித்த நுண்ணறை |
| ஆ | நுண்ணறை சுட்டி | 2 | நிலைமைப் பட்டை |
| இ | தேர்ந்தெடுப்பு நிலை | 3 | செந்தரக் கருத்திப்பட்டை |
| ஈ | $A$5 | 4 | இயங்கு கலம் |
20.
தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக
21.
கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?
22.
சில்லு அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?
23.
வரைபடம் என்றால் என்ன?
24.
ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?
25.
ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?
26.
விண்டோஸில் உள்ள Shutdown என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி.
27.
சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?
28.
கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்
29.
வளர்மதியின் ஆசிரியர்,OpenOffice Impress -யை பயன்படுத்தி ஒரு நிகழ்த்துதலை உருவாக்கும்படி கூறினார். ஆனால் வளர்மதி இதற்கு முன் எப்போதுமே Impressல் வேலை செய்தது இல்லை.எனவே, கீழ்காணும் செயல்களை செய்வதற்கு வளர்மதிக்கு உதவி செய்க
அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு,அவர் என்ன செய்ய வேண்டும்?
ஆ )பார்வையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள,விளக்கக்காட்சியின் ஒரு வன்படி நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும்.இதை அவர் எதை கொண்டு உருவாக்க வேண்டும்?
இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்தலில் செருக விரும்புகிறார்.எப்படி இதை செய்ய முடியும்?
ஈ) நிகழ்த்துதலை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதற்கு மிகவும் பொருத்தமான சில்லு காட்சிமுறையை பரிந்துரைக்கவும்.
உ) நிகழ்த்துதலை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு,அதில் சில விளைவுகளைச் சேர்க்க விரும்புகிறார்.எப்படி அதை செய்ய முடியும்.பரிந்துரை
30.
ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக
31.
5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக
32.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
33.
நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
34.
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்
35.
அட்டவணையில் உள்ள தரவுகளின் கூட்டுத்தொகையை வாய்ப்பாட்டு மூலம் எவ்வாறு செய்வது என்பதை பற்றி வழிகளை எழுதுக.
36.
வேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.
37.
உடன் தொடக்கம்(Warm booting) என்றால் என்ன?
38.
இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?
39.
நிகழத்துதலில் ஒரு சில்லுவை நீக்கும் வழிமுறை யாது?
40.
தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக
41.
Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக
42.
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
43.
கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BC9
44.
ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?
45.
ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.
1.
(a)
தகவல் பரிமாற்றம்
2.
(a)
Firewall
3.
(a)
விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்
4.
(a)
Notes
5.
(a)
பட்டியல்
6.
(a)
COMBINA
7.
(a)
விசி காலக் (Visicalc)
8.
(a)
Ubuntu
9.
(a)
செயல்முறை மேலாண்மை
10.
(a)
லோகேட்டர் (Locator)
11.
(a)
அடிப்படை வாயில்
12.
(a)
00100110
13.
(a)
சொற்செயலி
14.
(a)
File ⟶ Table properties
15.
(a)
Ctrl + F1
16.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. சுட்டெலியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்.
3. உரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொத்தானை விட்டு விட வேண்டும்.
17.
1. Switch user
2. Lock
3. Sleep
4. Logoff
5. Restart
6. Hibernate.
18.
| தலைமுறை | தொழில்நுட்பம் (அ ) முதன்மைப் பொருள் |
|---|---|
| முதலாம் (1942-1955)தலைமுறை | வெற்றிடக் குழல் (Vaccum tubes ) |
| இரண்டாம் (1955-1964)தலைமுறை | திரிதடையகம் (Transistors ) |
| மூன்றாம் (1964-1975)தலைமுறை | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC ) |
| நான்காம் (1975-1980)தலைமுறை | நுண் செயலி(VLSI) Very Large Scale Integrate Circuts. |
| ஐந்தாம் தலைமுறை (1980-இன்று வரை) |
ULSI (Ultra Large Scale Integration) |
19.
பொருத்துக
| அ | ஆ | ||
|---|---|---|---|
| அ | வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் | 1 | செந்தரக் கருத்திப்பட்டை |
| ஆ | நுண்ணறை சுட்டி | 2 | இயங்கு கலம் |
| இ | தேர்ந்தெடுப்பு நிலை | 3 | நிலைமைப் பட்டை |
| ஈ | $A$5 | 4 | தனித்த நுண்ணறை |
20.
1.தமிழை உலகெங்கிலும் இணையத்தின் வழியே கொண்டு சேர்க்கும் நோக்குடன், 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாளில், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
2. தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இணையத்தின்வழியை தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வழங்குவதற்காக, மழலையர் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை பல்வேறு கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
3. இணைய முகவரி : http://www.tamilvu.org/index.php
21.
(i) இணைப்பில் உள்ள கணிப்பொறியின் வன்பொருள், மென்பொருள், வளங்கள் மற்றும் தரவுகளை அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு இடையகத்தின் வழியே பகிர்ந்து கொள்ளும் அமைப்பாகும்.
(ii) கணிப்பொறி வலையகத்தில் உள்ள கணிப்பொறிகள் கம்பிகள், தொலைபேசி கம்பிகள், வானொலி அலைகள் செயற்கைகோள்கள் அல்லது அகச்சிவப்பு அலைகள் வழியாக இணைக்கப்படுகிறது.
22.
1.முதன்மை (Impress) சன்னலில் உள்ள பணிப்பலகத்தின் ஒரு பகுதியே சில்லு அமைப்பு (Layout) ஆகும்.
2.முன்னரே தொகுக்கப்பட்ட சில்லு அமைப்புகள் Layout ல் காட்டப்பட்டுள்ளது.
3.இதில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, மாற்றம் செய்து தனித் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
23.
வரைபடம் என்பது திறன்மிக்க முறையில் தரவுகளைப் படிப்பதற்கு எளிதாகப் புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்.
24.
ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
25.
1. Word Art வார்த்தை கலை என்பது Open Office Writer யில் உள்ள உரை மாற்றப்படும் அம்சமாகும்.
2. ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு நிழல்கள்,வரைபடங்கள், வண்ணங்கள்,சாய்வு 3D விளைவுகள் போன்ற தாக்கங்கள் (effects) இதன் மூலம் பெறலாம்.
3. Word Art-ல் உள்ள சிறப்பு தாக்கங்கள் மூலம் உரையை மேலும் படிப்பதற்கு எளிமையாக மற்றும் தூண்டுவதாகவும் அமைக்க முடியும்.
26.
1. Switch User: அடுத்த பயனர் கணக்கினுள் கணிப்பொறியின் இயக்கத்தை நுழைய விண்டோஸ் வழி வகுக்கும்.
2. Log Off : திறந்துள்ள அனைத்து நிரல்களும் மூடிய பின்னரே அடுத்த பயனர் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலும்.
3. Lock :கணிப்பொறியை முறையாக விட்டு வெளியில் செல்லும் நிலையில் மூடும் வசதி உள்ளது.
4. Restart: கணிப்பொறியை மறு தொடக்கம் செய்வது (விண்டோஸ் இயக்க அமைப்பை மேம்படுத்தும் போதும் புதிய மென்பொருள் நிறுவும் போதும் இந்த விருப்பம் பயன்படும்).
5. Sleep: குறைந்த மின் சக்தியில் கணிப்பொறியை இயக்க இந்த நிலை பயன்படும். இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பயன்பாடுகளும் இயங்கி கொண்டிருக்கும்.
6. Hibernate: குறைந்த மின் சக்தியில் கணிப்பொறி இருக்கும் போது எல்லா இயங்கும் நிரல்களும் மற்றும் திறந்த விண்டோஸ்களும் சேமிக்கப்பட்டு விரைந்து தொடங்கும் நிலைக்கு மாறும்.
27.
1. நேர்மை : இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது பயனர். உண்மையாக இருத்தல் பண்பு சார்ந்த நன்னடத்தையாகும்.
2. நம்பகத்தன்மை : முக்கியமானத் தகவல்களை அனுமதியற்ற நபர்களுடன் பகிர்வதைத் தடுப்பதன் மூலம் நம்பகத் தன்மை பராமரிக்கப் படுகிறது.
3.மரியாதை : பிற பயனர்களின் தனிமையை (Privacy) மதிக்க வேண்டும்.
4.தொழில் சார் மனப்பாண்மை : பயனர் தொழிற்சார் நடத்தை மற்றும் சிறந்த நன்னடத்தை அணுகுமுறையையும் பராமரிக்க வேண்டும்.
5.சட்டத்தை மதிக்கல் : கணினி பயன்பாட்டில் கண்டிப்பாக பயனர் சட்டத்தை மதிக்க வேண்டும்.
6.பொறுப்புத் தன்மை : பயனர் உரிமை தன்மை மற்றும் பொறுப்பு நம்பகத் தன்மை மற்றும் உண்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
28.
கணிப்பொறி வலையமைப்பானது நான்கு வகைப்படும். அவையாவான :
1. தனிப்பட்ட வலை பகுதி
2. குறும் பரப்பு வலையமைப்பு
3. நகரப் பரப்பு வலையமைப்பு
4. பரந்த வலையமைப்பு
தனிப்பட்ட வலை பகுதி (Personal area network):
1. தனிப்பட்ட பகுதி வலை அல்லது PAN என்பது கணிப்பொறி சாதனங்களுக்கிடையேயான தொடர்பைச் செயல்படுத்தும் வலையமைப்பாகும்.
2. PANI என்பது கம்பி இணைப்பாகவோ (அதாவது USBI Fireware) அல்லது கம்பி இல்லாத இணைப்பாகவோ இருக்கலாம். (அதாவது அகச்சிவப்பு infrared, ZigBee, ப்ளுடூத் புறபரப்பு (ultra wide band) UWB.
3. இதன் பரப்பு சில மீட்டர்களே ஆகும். கம்பியில்லா PAN அல்லது WPAN-க்கு எ.கா : கைப்பேசியின் தலையணி ஒலிவாங்கி (head set) கம்பியில்லா விசைப்பலகைகள், கம்பியில்லா சுட்டிகள், அச்சுப்பொறிகள், பட்டைக் குறிவருடிகள், விளையாட்டு கட்டுப்பாட்டு அமைவு ஆகியவற்றை உள்ளடக்கிய சாதனங்கள் ஆகும்.
குறும்பரப்பு வலையமைப்பு - LAN (Local Area Network) :
1. தனியார்சொந்த கணினி வலை சிறிய புவியியல் பகுதியான வீடு, அலுவலகம் அல்லது கட்டிடங்களை இணைக்கும் வலையமைப்பே குறும்பரப்பு வலையமைப்பு எனப்படும்.
எ.கா : பள்ளி வலையமைப்பு
2. LAN வலையமைப்பு, அச்சுப்பொறிகள், வன்தட்டுகள் போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது.
3. பொதுவாக LANன் அளவு சிறியதாகும். இதில் உள்ள பல்வேறு சாதனங்கள் மைய சாதனங்களோடு (மையம் / இணைப்பி) மூலம் இணைக்கப்படுகிறது.
4. தற்போது LAN கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் நிறுவப்படுகிறது.
5. ஒரு விநாடிக்கு 4 லிருந்து 16 மெகாபிட்டுகள் வரை அதிக வேகத்துடன் தரவுகளைத் தொடர்புபடுத்துகிறது.
நகரப்பரப்பு வலையமைப்பு - Metropolitan Area Network (MAN) :
1. LAN ன் பெரிய வடிவம் MAN ஆகும். ஒரு நகரம் முழுவதையும் இணைக்க விரிவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 100 கி.மீக்கு மேல் விரிவடைந்து இணைக்க வல்லது.
2. ஒரு நகரத்தில் உள்ள பெரிய நிறுவனத்தின் பல்வேறு கிளைகளை இணைப்பதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
3. வேறுபட்ட வன்பொருள் மற்றும் பரிமாற்ற ஊடகங்களின் பிணைப்பு ஆகும்.
4. இது கேபிள் டிவி வலையமைப்பைப் போல தனித்த வலையமைப்பாகவும் அல்லது பெரிய வலையமைப்பில் உள்ள பல LAN களை இணைப்பதாகவும் இருக்கலாம்.
5. எனவே ஒரு LAN லிருந்து மற்றொரு LANனிற்கும். ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கும் வளங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
பரந்த வலையமைப்பு (Wide Area Network) WAN :
1. ஒரு தொலைத்தொடர்பு வலையமைப்பாகும்.
2. LAN வலையமைப்பு எதிர்திசையில் அமைந்திருக்கும் பல கட்டிடங்கள், நாடு) முழுவதும் அல்லது உலகம் முழுவதும் உள்ள பல LAN வலையமைப்புகளை இணைக்கிறது.
3. பரந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறிகள் பொது வலையமைப்பான தொலைபேசி அமைப்பு மூலம் இணைக்கப்படுகின்றன.
4. பிணைப்பு இணைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகின்றன. மிகப் பெரிய பரந்த வலையமைப்பு இணையம் ஆகும்.
29.
அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு,அவர் என்ன செய்ய வேண்டும்?
1. வளர்மதி பணிப்பலகத்தில் உள்ள Mastér Pages பகுதியில் உள்ள ஏதேனும் முதன்மைப் பக்கத்தைத் தேர்வு செய்து நிகழ்துதலுக்குத் தேவையான எல்லா சில்லுகளையும் உருவாக்கலாம்.
2. முதல் சில்லுவின் வடிவமைப்பை மாற்ற Format --> Slide Design என்பதைப் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். Slide Design உரையாடல் பெட்டடித் தோன்றும்.
3. அதில் Load பொத்தானை அழுத்தினால் Load Slide Desing உரையாடல் பெட்டித் தோன்றும். அதில் Categories பட்டியல் பெட்டியிலிருந்து ஒரு சில்லு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும். Template பட்டியிலிருந்து தேவையான முன் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பைத் தேர்வு செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும்.
4. சில்லு வடிவமைப்பை நடப்பு சில்லுக்கு மட்டும் பயன்படுத்த, Exchange background page என்றத் தேர்வுப் பெட்டியைத் துடைத்து விடவும், OK பொத்தானை அழுத்தி Slide Design உரையாடல் பெட்டியை மூடவும்.
ஆ) எளிதில் தொடர்பு கொள்ள, விளக்கக்காட்சியின் ஒரு பிரத்தியேக நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு எதை உருவாக்க வேண்டும்?
1. கை அறிக்கைகளை Handout View ஐப் பயன்படுத்தி உருவாக்க வேண்டும்.
இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்துதலில் செருக விரும்புகிறார். எப்படி இதை செய்ய முடியும்?
1. படங்களைச் சில்லுவில் சேர்க்க, வளர்மதி Insert --> Picture –-> From File என்றத் கட்டளையைப் பயன்படுத்தி வரும் Insert --> Picture உரையாடல் பெட்டியில் தேவையான படத்தைத் தேர்வு செய்து திறக்கலாம்.
2. திரைப்படக் கோப்பைச் சில்லுவில் சேர்க்க வளர்மதி Insert --> Movie and Sound என்றக் கட்டளையைப் பயன்படத்தி வரும் Insert Movie and sound உரையாடல் பெட்டியில் தேவையான திரைப்படக் கோப்பைத் தேர்வு செய்து திறக்கலாம்.
ஈ) விளக்கத்தை காண்பிப்தற்கு மிகவும் பொருத்தமனாதாக எது இருக்கும்?
1. விளக்கப்படத்தைக் காண்பதற்கு நிகழ்த்தலை ஓடச் செய்ய வேண்டும். நிகழ்த்தலைத் தொடங்கும் வழிகள் :
Slide show --> Slide Show என்றப் பட்டிப்பட்டைத் தேர்வு மூலம்.
2. நிகழ்த்தல் கருவிப்பட்டையில் உள்ள Slide Show பணிக்குறி மூலம்.
3. F5 அல்லது F9 விசை மூலம்.
உ) விளக்கக்காட்சியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு, அதில் சில விளைவுகளைச் சேர்க்க விரும்புகிறார். அதை எப்படி செய்ய முடியும்? பரிந்துரை:
1. விளக்கப்படக் காட்சியைக் கவர்ச்சியா மாற்றுவதற்கு வளர்மதி. தனிப்பயன் அசைவுப்பட விளைவுகளையும், சில்லு மாற்ற விளைவுகளையும் சில்லுவில் வழங்கும் பொருள்களுக்குச் சேர்க்க வேண்டும்.
2. இதைச் செய்யப் பணிப்பலகத்திலுள்ள Custom Animation மற்றும் Slide Transition பகுதியை வளர்மதி பயன்படுத்த வேண்டும்.
30.
Insert --> Function கட்டளை அல்லது Ctrl+F2 விசைப் பலகை குறுக்குவழியின் மூலம் Function wizard
உரையாடல் பெட்டியை பெறலாம்.
1. Category கீழறங்குப் பெட்டியிலிருந்து செயற்கூறின் வகையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். Function பட்டியல்,
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கூறு வகையின். செயற்கூறுகளை மட்டும் பட்டியலிடும். இதிலிருந்து தேவையான
செயற்கூறைத் தேர்ந்தெடுக்கவும்.
2. செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதற்கான விளக்கம் உரையாடல் பெட்டியின் வலதுபுறம் தோன்றும்.
தேவையான செயற்கூறின் மீது இரட்டை கிளிக் செய்யவும்.
3. இப்பொழுது உரையாடல் பெட்டியில் தோன்றும் உரைப்பெட்டியில் தேவையான தரவை உள்ளிட்டால் Result
உரைப்பெட்டியில் அதன் விடை தோன்றும்.
எ.கா : Category வகையிழுப் பட்டியிலுள்ள Mathematical தேர்வின் மூலம் கணித கணக்கீடுகளைச் செய்யும்
பல்வேறு செயற்கூறுகளை பெறலாம்.
31.
1.அட்டவணைத் தாளில் வேண்டிய அளவு நுண்ணறைகளைத் தேர்வு செய்து கொள்ளவும்.
எ. கா : A1 முதல் A20 வரையிலான நுண்ணறைப் பரப்பைத் தேர்வு செய்யலாம்.
2.Edit -->Fill --> Series என்றக் கட்டளையைத் தேர்வு செய்தால் Fill Series உரையாடல் பெட்டி தோன்றும்.
3. அதில் Direction என்பதில் Down என்ற தேர்வுப் பொத்தானை தேர்வு செய்யவும்.
4. Series Type என்பதில் 'Growth' என்ற தேர்வுப் பொத்தானையும் தேர்வு செய்யவும்,
5. Start Value என்பதில் 5 என்று உள்ளிடவும்.
6. End Value என்பதில் 2560 என்று உள்ளிடவும்.
7.Increment என்பதில் 2 என்று உள்ளிட்டு, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
8. படத்தில் உள்ளவாறு எண்வரிசை உருவாக்கப்படும்.
| A | |
| 1 | 5 |
| 2 | 10 |
| 3 | 20 |
| 4 | 40 |
| 5 | 80 |
| 6 | 160 |
| 7 | 320 |
| 8 | 640 |
| 9 | 1280 |
| 10 | 2560 |
32.
I. பரவல் இயக்க அமைப்பு: டிஜிட்டல் பிணையம் (இணைய தளம்/உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட தரவு மற்றும் பயன்பாடுகளை இந்த அம்சம் கவனித்து கொள்கிறது.
பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் இருக்கும் கோப்புகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவைக் கையாள முடியும். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியில் உள்ள கோப்புகளைக் கையாளுவதைப் போன்று உணருவர்.
II. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1. ஓரே இடத்தில் உள்ள ஒரு பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றோரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2. பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்.
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
4. புரவலன்/புரவலர்(Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
33.
ஒரு நுண்செயலியின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
I. கடிகார வேகம்:
1. ஒவ்வொரு நுண்செயலியிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்தக் கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும்.
2. கணிப்பொறியின் வேகம் மெகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) மற்றும் கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) அளவில் அளக்கப்படுகிறது.
II. கட்டளை தொகுப்பு :
1. கணிப்பொறிகளில் தரவை செயற்படுத்த கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
2. ஒரு நுண்செயலி இயக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட, அடிப்படையான எந்திர மொழி அறிவுறுத்தல்களின் தொகுப்பு, கட்டளைத் தொகுதி எனப்படும்.
3. நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி .செயல்படுத்தும் செயல்கள்:
(i) தரவு மாற்றம்
(ii) எண் கணித செயல்முறைகள்
(iii) தருக்கச் செயல்முறைகள்
(iv) கட்டுப்பாட்டு நகர்வு
(v) உள்ளீடு/ வெளியீடு
III. வேர்டு அளவு :
1. வேர்டு அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
2. ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையையும் பொறுத்ததாகும்.
3. மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.
34.
மைபீச்சு அச்சுப்பொறி:
1. மைபீச்சு அச்சுப்பொறிகள் கறுஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் சியான் உள்ளடக்கிய மைகுப்பியைக் பயன்படுத்தி வண்ணச் சாயலை உருவாக்குகிறது.
2. ஒரு நிற வண்ணத்தில் அச்சிடுவதற்கு கருப்பு மைகுப்பியைக் பயன்படுத்த்துகிறது.
3. மைப்பீச்ச மின்னுட்டம் பெற்ற மையைத் தெளிப்பதன் மூலம் செயல்படுகிறது.
4. அச்சிடும் வேகம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 1 முதல் 20 பக்கங்களை அச்சிடும்.
5. வெப்பம் மூலம் மின்கலன் சூடாக்குவதால் மை காகிதத்தில் குமிழிகளாக தெளிக்கப்படும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
பல்லூடகப் படவீழ்த்தி:
1. பல்லூடகப் படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகின்றது.
2. வகுப்பறைகளில் அல்லது கூட்ட அரங்குகளில் விளக்கக் காட்சிகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டைக் குறியீடு / கியூ. ஆர் படிப்பான்:
1. பட்டைக் குறியீடு என்பது வெவ்வேறு தடிமன் வரிசையில் அச்சிடப்படும் ஒரு வடிவம் ஆகும்.
2. பட்டைக் குறியீடு படிப்பான். பட்டைக் குறியீட்டைப் படித்து அவற்றை மின் துடிப்புகளாக மாற்றி கணிப்பொறி செயலகத்திற்கு அனுப்பும் ஒரு கருவியாகும்.
3. கணிப்பொறி தகவலை விரைவாகவும் பிழையின்றிப் பதிவு செய்யவும் பயன்படுகிறது.
4. கியூ.ஆர் (QR-QuickResponse) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும். இது ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது .
35.
1. அட்டவணையிலுள்ள தரவிற்கு கணக்கீடு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற தரவுகளுடன் ஒரு அட்டவணையை உருவாக்குக.
| விற்கப்பட்ட பொருள்கள் |
ஜனவரி | பிப்ரவரி | மொத்தம் |
|---|---|---|---|
| புத்தகங்கள் | 15 | 70 | |
| பேனாக்கள் | 30 | 50 | |
| அளவுகோல் | 25 | 25 | |
| மொத்த பொருள்கள் |
2. எந்த சிற்றரையில் கணக்கீடு செய்ய வேண்டுமோ அதில் கிளிக் செய்யவும்.
3. Table → Formula என்ற கட்டளை அல்லது F2 கிளிக் செய்தால்,அட்டவணைச் செயலியில் உள்ளது போன்ற Formula உள்ளீட்டு பகுதியுடன் கூடிய கருவிப்பட்டை தோன்றும்.
4. சிற்றரை B2 விலிருந்து B4 வரை ஒரு குழுவாக தேர்வு செய்ய, தற்போதைய சிற்றரையில்
=< B2 : B4> என்று தட்டச்சு செய்து Enter சாவியை அழுத்தவும். கீழே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் உள்ள மொத்த எண்ணிக்கை உடைய அட்டவணை தோன்றும்.
| விற்கப்பட்ட பொருள்கள் |
ஜனவரி | பிப்ரவரி | மொத்தம் |
|---|---|---|---|
| புத்தகங்கள் | 15 | 70 | |
| பேனாக்கள் | 30 | 50 | |
| அளவுகோல் | 25 | 25 | |
| மொத்த பொருள்கள் | = |
| விற்கப்பட்ட பொருள்கள் |
ஜனவரி | பிப்ரவரி | மொத்தம் |
|---|---|---|---|
| புத்தகங்கள் | 15 | 70 | = |
| பேனாக்கள் | 30 | 50 | |
| அளவுகோல் | 25 | 25 | |
| மொத்த பொருள்கள் | 70 |
5. கணக்கீடு செய்யப்படும் தனிப்பட்ட சிற்றரைகளின் பெயரை '<>' என்ற அடைப்புக் குறியில் அமர்த்த வேண்டும்.
6. அட்டவணை அமைப்பில் நெடுவரிசைகள் A,B,C....... என்றும் வரிசைகள் 1,2,3,.....என்ற எண்ணிலும் பெயரிடப்பட்டிருக்கும் . உதாரணமாக முதல் சிற்றரை A1,B1 ...... போன்று பெயரிடப்பட்டிருக்கும்.
7. மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்கப்பட்ட புத்தகங்ளின் கூட்டுத்தொகை கணக்கீடு செய்ய =
36.
1. Start \(\rightarrow \)All Programs\(\rightarrow \)Accessories\(\rightarrow \)Wordpad அல்லது Run\(\rightarrow \)type Wordpad தட்டச்சு செய்த பிறகு OK பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.Wordpad சன்னல் திரை திறக்கப்படும்.
2. பணித்தளத்தில் தட்டச்சு செய்யப்பட வேண்டிய உரையை தட்டச்சு செய்து, File \(\rightarrow \)Save அல்லது Ctrl+S ப்யன்படுத்தவும்.
3. Save As உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.
4. அந்த உரையாடல் பெட்டியில் ஆவணத்தை எங்கு சேமிக்க வேண்டுமோ அதை Look-in கீழிறங்கு பெட்டியில் தேர்வு செய்ய வேண்டும்.
5. File name என்ற உரப்பெட்டியில் கோப்பின் பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
6. Save பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
37.
1. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கணிப்பொறியை ஏதேனும் ஒரு சூழலில் அதன் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் தொடங்குதலை உடன் தொடக்கம் அல்லது மென் தொடக்கம் (Soft booting) எனலாம்.
2. இந்த முறையில் கணிப்பொறி "தண் தொடக்க முறையில்" தொடங்கியது போல அனைத்துப் புறக்கருவிகளின் இணைப்பை உறுதி செய்து தொடங்குவதில்லை.
3. மேலும் இந்தத் தொடக்க முறையில் தகவல்கள் அழியும் நிலையும், கணிப்பொறியின் இயக்க அமைப்பு பழுத்தடையும் நிலையும் ஏற்படும்.
38.
தேவையான வன்பொருட்கள் :
இணைய வழித் தொடர்பிற்குக் கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்று கட்டாயம் ஆகும்.
1. தொலைபேசி வழி இணைய இணைப்பிற்கு மோடம் (modem) பயன்படுகிறது.
2. NIC - Network Interface Card (கம்பி / கம்பியில்லா) வசதி இணையத்தை இணைக்கத் தேவைப்படும் மிக முக்கியமான வன்பொருளாகும்.
3. செல்லுலார் வலையகம் (cellular network) மூலம் இணையத்தில் இணைய வன்பூட்டு (dongle) பயன்படுகிறது.
4. Wi - Fi திசைவி (Router) அல்லது ஹாட்ஸ்பாட் (Hotspot) கம்பியில்லா வலையகத்தைப் பயன்படுத்தி இணையகத்துடன் இணைக்கப் பயன்படுகிறது.
5. செல்லுலார் வலையகத்தை ஆதரிக்கும் மின்னணு சாதனம் தொலைபேசி இணைப்பி (dial up connection), ISDN, DSL, கேபிள் TV, கம்பியில்லா வலையகம் மூலம் இணையத்தில் இணைத்தல்.
தேவையான மென்பொருள்கள் :
இயக்க அமைப்பானது
1. TCP/IP (Transfer Control Protocol/ Internet Protocol)
2. SMTP (Simple Mail Transfer Protocol)
3. FTP (File Transfer Protocol).
4. HTTP (Hyper Text Transfer Protocol)
5. HTTPS (Hyper Text Transfer Protocol Secured) ) நெறிமுறைகளை ஆதரிக்கிறது.
உலவிகள் (Broswers) மற்றும் இணைய வாடிக்கையாளரான (client) outlook gmail, whatsapp, facebook, twitter மூலம் வலைப் பயன்பாடுகளை அணுகலாம்.
39.
1.நீக்க விரும்பும் சில்லுவை தேர்ந்தெடுக்கவும்.
2.Edit --> Delete slide என்ற கட்டளை மூலம். சில்லின் மீது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தி வரும் மேல் மீட்புப் பட்டியில் Delete slide என்பதைத் தேர்வு செய்து நீக்க வேண்டும்.
3. Delete பொத்தானை அழுத்த வேண்டும்.
40.
படிநிலை 1:
வரிசையாக்கம் செய்யப்பட வேண்டிய புலத்தில் (நெடுவரிசை) நுண்ணறைச் சுட்டியை இருத்தவும்.
படிநிலை 2:
1.செந்தரக் கருவிப்பட்டையிலுள்ள Sort Ascending அல்லது Sort Descending பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. ஓபன் ஆஃபீஸ் கால்க், தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையிலுள்ள தரவுகளின் அடிப்படையில், அதனுடன் தொடர்புடைய மற்ற நெடுவரிசைகளையும் சேர்த்து வரிசைப்படுத்தும்.
41.
| Backspace பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
Delete பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
| இது காட்டிக்கு (Cursor) இடப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும் | இது காட்டிக்கு வலப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும். |
42.
| CD | DVD |
|---|---|
| 1. ஒரு சாதாரண CDன் கொள்ளளவு 700MB ஆகும். |
DVD-4.7GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6-CDக்களின் கொள்ளளவுக்குச் சமமாகும். |
| 2. தரவு எழுதும்/ படிக்கும் வேகம் குறைவு. |
தரவு எழுதும்/ படிக்கும் வேகம் அதிகம். |
| 3. CD-Drive மற்றும் DVD Drive களில் இயக்க முடியும். |
DVD - Drive களில் மட்டுமே இயக்க முடியும். |
| 4. இது பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனது |
இது கண்ணாடியிழை வட்டு ஆகும் |
43.
பதினாறு நிலை எண்களை இருநிலை எண்களாக மாற்ற, ஒவ்வொரு பதினாறு நிலை எண்ணிற்கும் நிகரான நான்கு இலக்கு இருநிலை எண்களைக் கணக்கிட்டு எழுத வேண்டும்.
ஈ) \(BC9_{ 16 }={ \left( ? \right) }_{ 2 }\)

\(\therefore \quad BC9_{ 16 }=\quad { \left( 101111001001\right) }_{ 2 }\)
44.
(i) திரையகம் : தகவலைத் திரையில் காட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளியீட்டுச் சாதனம்.
(ii) வரைவி : தாள்களில் தவல்கள் மற்றும் வரைகலை வெளியீட்டை அச்சிடப் பயன்படுகிறது.
(iii) அச்சுப்பொறி: தாள்களில் தவல்களை அச்சிடப் பயன்படுகிறது.
(iv) பல்லூடகப் படவீ ழ்த்தி: கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகிறது .
(v) ஒலிப்பெருக்கி: பேச்சு இணைப்பாக்கம் மென்பொருளை இதனுடன் பயன்படுத்திக் கணிப்பொறி குரல் வெளியீட்டை வழங்க முடியும்.
45.
1. தேவையான உரையைத் தேர்வு செய்தபின் Tools→Word Count விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
2. தேர்வு செய்யப்பட்ட உரையில் உள் சொல்லின் எண்ணிக்கை மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை WordCount உரையாடல் பெட்டியில் காணலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards