11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil medium Economics All Chapter Important Question)
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இறுதிநிலைச் வருவாயைக் கணக்கிடும் வாய்ப்பாடு _________
\(MC={d(TC)\over dQ}\)
Qd=Qs
\(MR={d(TR)\over dQ}\)
Ps=2Q+1
2.
மாறிகள் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை ______ஆகும்.
எளிய மாறிச் சார்பு
பலமாறிச் சார்புகள்
இரண்டு மாறிச் சார்புகள்
மேற்கூறிய அனைத்தும்
3.
_______என்ற பொருளியலாளர் அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்களை எண்கள்.எடை மற்றும் அளவுகளில் சுருக்கி அமைக்க வேண்டும் என்று கருதினார்.
சர்.வில்லியம் பெட்டி
G.கிராமர்
J.M.கீன்சு
மார்ஷல்
4.
"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" இதை கொடுத்தவர் _______.
திருவள்ளுவர்
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
அமர்த்தியா சென்
5.
வேளாண்மை இந்தியாவில் ______ஆக கருதுகின்றனர்.
மூளையாக
முதுகெலும்பாக
இதயமாக
எதுவுமில்லை
6.
நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.
மேல்நோக்கி உயர்ந்து செல்லும்.
படுகிடை கோடாக
கீழ்நோக்கி சரிந்து செல்லும்
செங்குத்தாக
7.
மொத்த செலவு (TC)=___________.
TFC+TVC
TFC-TVC
TFCxTVC
TFC\(\div\)TVC
8.
வாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.
பிறவாய்ப்புச் செலவு
மாற்றுச் செலவு
பரிமாற்றச் செலவு
மேற்கூறிய அனைத்தும்
9.
மேக்னடைட் தாது ________ல் அதிகம் கிடைக்கிறது.
மத்திய பிரதேசம்
உத்திர பிரதேசம்
கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை
மேற்காணும் அனைத்தும்
10.
சமநோக்கு வளைகோடு _______தரத்தில் அமையும்
உயர்தர
கீழ்தரம்
சாதாரண தரம்
எதுவுமில்லை
11.
அளிப்பு மாற்றத்திற்கேற்ப விலையில் ஏற்படும் மற்ற விழுக்காடு _______ஆகும்.
அளிப்பு நெகிழ்ச்சி
தேவை நெகிழ்ச்சி
நெகிழ்ச்சி விதி
அலகு அளிப்பு நெகிழ்ச்சி
12.
________ தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் வைர முரண்பாட்டுக் கோட்பாட்டை விளக்குகிறார்.
ஆடம் ஸ்மித்
ஆல்ஃபிரட் மார்ஷல்
J.M.கீன்சு
A.C.பிகு
13.
வேளாண்மை சார்ந்த தொழிலுக்கு எடுத்துக்காட்டு
ஜவுளி தொழிற்சாலை
சர்க்கரை தொழிற் ஆலை
காகித ஆலை
மேற்குறிய அனைத்தும்
14.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______
8வது ஏப்ரல் 2015
16வது மார்ச் 2015
18வது ஜூன் 2013
4வது ஏப்ரல் 2014
15.
பிரம்பு மற்றும் மூங்கில் கூடை செய்தல், காலனி தயாரித்தல், மட்பாண்டங்கள் மற்றும் தோல் பதனிடுதல் முதலியன _____ தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பெரிய தொழில்
சிறு தொழில்கள்
கிராமத் தொழிற்சாலைகள்
எதுவுமில்லை
16.
தொகுத்தாய்வு முறை _______ என்று அழைக்கப்படுகிறது.
பகுத்தறியும் முறை
கருத்திலான முறை
செயலறி முறை
மேற்காணும் அனைத்தும்
17.
_______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.
இயல்புரை
நெறியுரை
எதிர்மறை
எதுவுமில்லை
18.
'நலஇயல்' என்பது_________.
மகிழ்ச்சி
தனி மனிதனின் நலம்
ஒட்டுமொத்த மக்களின் நலம்
மேற்கூறிய அனைத்தும்
19.
\(\alpha +\beta <1\) என்பது _______
வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி
மாறா விகித அளவு விளைவு விதி
குறைந்து செல் விகித அளவு விளைவு விதி
எதுவுமில்லை
20.
__________________ கடற்கரை உலகிலே மிகப்பெரிய கடற்கரையாகும்.
மெரினா கடற்கரை
ஹாட்வாடர் கடற்கரை
மாயா கடற்கரை
ஆல்மென்ட் கடற்கரை
21.
மேட்டூர் அணைக்கட்டின் மொத்த நீளம் ______________ மீ ஆகும்.
1600மீ
1700மீ
1800மீ
1500மீ
22.
வங்கி வைப்புகள், பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் வேறு சில பண ஆதாரம் அனைத்தும் _______ ஆகும்.
பண மூலதனம்
மனித மூலதனம்
பரும மூலதனம்
எதுவுமில்லை
23.
அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் _________________
தமிழ்நாடு
கேரளா
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரா
24.
______ மக்களுக்கு பசுமைப்புரட்சி செழிப்பை வழங்கியது
நகர்புற மக்களுக்கு
கிராமப்புற மக்களுக்கு
மாநகராட்சி மக்களுக்கு
ஏதுமில்லை
25.
இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
முதல்
இரண்டு
மூன்று
நான்கு
26.
உற்பத்தி என்பது _______ உருவாக்குதல் ஆகும்.
பரிமாற்றம்
பகிர்வு
பயன்பாடு
தேவை
27.
முற்றுரிமை அங்காடிக்கு எடுத்துக்காட்டு ________
மின்சார வாரியம்
LIC
வங்கி
சிமெண்ட் ஆலை
28.
_________ முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர்.
முற்றுரிமை
இருமுகமுற்றுரிமை
இருமுக சில்லோர்
முற்றுரிமை போட்டி
29.
மிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது.
நீண்ட காலம்
குறுகிய காலம்
அங்காடிக் காலம்
தொலைநோக்குக் காலம்
30.
டேவிட் ரிகார்டோ ஒரு ___________பொருளியல் அறிஞர் ஆவார்.
தொன்மை பொருளியல் அறிஞர்
புதிய தொன்மை பொருளியல் அறிஞர்
நவீன பொருளியல் அறிஞர்
மேற்கூறிய அனைத்தும்
31.
வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்___________.
ஆல்ஃபிரட் மார்ஷல்
டேவிட் ரிகார்டோ
போம் போகுவார்க்
நட்விக்செல்
32.
MRP=_________.
MPP x MR
MPP \(\div \) MR
MPP - MR
MPP + MR
33.
1510 லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தவர்
இந்தியர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
கிரேக்கர்கள்
ரோமானியர்கள்
34.
உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் _____ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
APMC
ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை
வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்
SEZ
35.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் _________ ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாகும்.
1991
1998
2016
1992
36.
________ போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிர் வளர்ப்பதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.
மிளகாய்
பருத்தி
புகையிலை
மேற்கூறிய அனைத்தும்
37.
x n என்பதன் வகையீட்டுக்கெழு _____________ ஆகும்.
nx(n-1)
nx (n+1)
பூஜ்யம்
ஒன்று
38.
D = 50 - 5P எனக்கொள்க. D = 0 எனில், P யின் மதிப்பு
P = 10
P = 20
P = 5
P = -10
39.
வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்
திட்டக்குழு
நேரு
D.மோரிஸ்
பிஸ்வாஜித்
40.
வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
1989-1991
1990-1992
2000-2001
1981-1983
41.
எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
சண்டிகர்
பாண்டிச்சேரி
இலட்சத்தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
42.
எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
கீன்ஸ்
வாக்கர்
ஹாலே
நைட்
43.
எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?
மூலதனம்
உழைப்பாளி
நிலம்
அமைப்பு
44.
கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?
மதுரை
திருச்சி
தூத்துக்குடி
கோயம்புத்தூர்
45.
ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக
வேளாண்மை சாரா வேலையின்மை
அதிக வேலை நிலை
குறைந்த பணவீக்க வீதம்
அதிக முதலீடு
46.
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புபடுத்தி குறிப்பது
நுட்பம்
சார்ந்திருப்பு
இரட்டை தன்மை
சமமின்மை
47.
கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?
மெக்ஸிகோ
கானா
பிரான்ஸ்
ஸ்ரீலங்கா
48.
கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______
கோலார்
இராமகிரி
அனந்தபூர்
கொச்சின்
49.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _____________ அமல்படுத்தப்பட்டது.
2017 ஜுலை 1ந் தேதி
2016 ஜுலை 1ந்தேதி
2017 ஜனவரி 1ந்தேதி
2016 ஜனவரி 1ம்தேதி
50.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.
ஆலோசனைக் குழு
சட்டபூர்வமான குழு
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
51.
விலையின் மற்றொரு பெயர்______
சராசரி வருவாய்
இறுதிநிலை வருவாய்
மொத்த வருவாய்
சராசரி செலவு
52.
உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.
உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு
53.
தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?
ஜே.பி கிளார்க்
சும்பீட்டர்
நைட்
ஆடம் ஸ்மித்
54.
கீழ்க்கண்டவற்றுள் உபரிதிறன் இல்லாதது ________
முற்றுரிமை
முற்றுரிமை போட்டி
சில்லோர் முற்றுரிமை
நிறைவுப் போட்டி
55.
கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.
மாறா
மாறும்
இறுதிநிலை
வாய்ப்பு
56.
உற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு ---------- செலவு எனப்படும்.
பண
மாறும்
மொத்த
மாறா
57.
சம நோக்கு வளைகோடுகள்
செங்குத்துக் கோடுகள்
படுக்கைக் கோடுகள்
நேர்மறைச் சரிவுடையது
எதிர்மறைச் சரிவுடையது
58.
பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
இராபின்ஸ்
ராபர்ட்சன்
59.
சமநிலை விலை என்பது அந்த விலையில்
எல்லாம் விற்கப்படுகிறது
வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
மிகைத்தேவை பூஜ்ஜியம்
60.
நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
ராபின்ஸ்
ரிக்கார்டோ
61.
TC = 30 + 6Q2 +14Q3 என்பது மொத்த செலவுச் சார்பு என தரப்படின் இறுதிநிலைச் செலவுச் சார்பினை வருவி.
62.
Y = 2x4-6X2 எனில் \(dy\over dx\)=?
63.
இந்தியாவில் உடல்நலப் பணிகள் பற்றி எழுதுக.
64.
முன்னேறிய நாடுகளின் இயல்புகள் யாவை?
65.
சராசரி வருவாய் என்றால் என்ன?
66.
உண்மைச் செலவு என்றால் என்ன?
67.
அங்காடித் தேவை என்றால் என்ன?
68.
வரவு செலவுக் கோட்டை வரையறு.
69.
ஊரக அங்காடி என்றால் என்ன?
70.
ஊரக தொழிற்சாலைகள் என்றால் என்ன?
71.
பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.
72.
பணிகளின் இயல்புகள் யாவை?
73.
அளிப்பு விதி என்றால் என்ன?
74.
சம அளவு உற்பத்தி என்றால் என்ன?
75.
காற்றழுத்த விசைக்குழாய் நகரம்' என்றழைப்பது ஏன்?
76.
பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் நிலை யாது?
77.
மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.
78.
திட்ட விடுமுறை குறிப்பு வரைக.
79.
கடன் நிதிகளின் தேவையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
80.
ரிகார்டோ வாரக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.
81.
இருமுக முற்றுரிமை என்றால் என்ன?
82.
AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?
83.
ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்த்திய நாடு எது? எப்பொழுது?
84.
தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p என்றால் இறுதிநிலை வருவாய் சார்பினை வருவி.
85.
\(\int { \left( { x }^{ 2 }+x-1 \right) dx=\int { { x }^{ 2 }dx+\int { xdx } -\int { dx } } } \)
86.
வட்டி பற்றி நீ அறிவது யாது?
87.
பகிர்வின் வகைகள் யாவை?
88.
இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை கூறுக.
89.
ஊரக வளர்ச்சி என்றால் என்ன?
90.
முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.
91.
விற்பனை செலவு என்றால் என்ன?
92.
தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு
93.
94.
உழைப்பு – வரையறு
95.
மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?
96.
செலவுச் சார்பை வரையறு
97.
நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.
98.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி
99.
பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக
100.
101.
நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.
102.
சராசரி செலவு வளைகோட்டை வரைபடத்துடன் விளக்குக.
103.
பண்டங்களின் வகைகளை விளக்குக.
104.
ஊரக கடன் சுமைகளின் இயல்புகள் யாவை?
105.
பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
106.
மாறும் விகித விதியின் வரைபடம் வரைக.
107.
நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.
108.
முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை?
109.
சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.
110.
வேளாண் உற்பத்தியில் உணவுப் பொருள்களின் கழிவுகள் பற்றி எழுதுக.
111.
கிராமர் விதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நேர்கோட்டுச் சமன்பாடுகளை தீர்வு காண்.
x1-x2+x3=2: x1+x2-x3=0: -x1-x2-x3 = -6
112.
காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக
113.
சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டின் செயல்திறனை விளக்குக.
114.
ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?
115.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.
116.
பொருளாதார முன்னேற்றம் – வரையறு.
117.
உற்பத்தியாளர் சமநிலையை உதாரணத்துடன் விளக்குக
118.
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
119.
தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.
120.
121.
ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?
122.
மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.
123.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
124.
ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.
125.
நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.
126.
உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.
127.
இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.
128.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
129.
பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].
130.
Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண்.
1.
(c)
\(MR={d(TR)\over dQ}\)
2.
(a)
எளிய மாறிச் சார்பு
3.
(a)
சர்.வில்லியம் பெட்டி
4.
(a)
திருவள்ளுவர்
5.
(b)
முதுகெலும்பாக
6.
(b)
படுகிடை கோடாக
7.
(a)
TFC+TVC
8.
(d)
மேற்கூறிய அனைத்தும்
9.
(c)
கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை
10.
(c)
சாதாரண தரம்
11.
(a)
அளிப்பு நெகிழ்ச்சி
12.
(a)
ஆடம் ஸ்மித்
13.
(d)
மேற்குறிய அனைத்தும்
14.
(a)
8வது ஏப்ரல் 2015
15.
(a)
பெரிய தொழில்
16.
(c)
செயலறி முறை
17.
(b)
நெறியுரை
18.
(d)
மேற்கூறிய அனைத்தும்
19.
(c)
குறைந்து செல் விகித அளவு விளைவு விதி
20.
(a)
மெரினா கடற்கரை
21.
(b)
1700மீ
22.
(a)
பண மூலதனம்
23.
(c)
மேற்கு வங்காளம்
24.
(b)
கிராமப்புற மக்களுக்கு
25.
(d)
நான்கு
26.
(c)
பயன்பாடு
27.
(a)
மின்சார வாரியம்
28.
(b)
இருமுகமுற்றுரிமை
29.
(d)
தொலைநோக்குக் காலம்
30.
(a)
தொன்மை பொருளியல் அறிஞர்
31.
(b)
டேவிட் ரிகார்டோ
32.
(a)
MPP x MR
33.
(b)
போர்ச்சுக்கீசியர்கள்
34.
(d)
SEZ
35.
(a)
1991
36.
(d)
மேற்கூறிய அனைத்தும்
37.
(a)
nx(n-1)
38.
(a)
P = 10
39.
(c)
D.மோரிஸ்
40.
(b)
1990-1992
41.
(b)
பாண்டிச்சேரி
42.
(b)
வாக்கர்
43.
(c)
நிலம்
44.
(c)
தூத்துக்குடி
45.
(a)
வேளாண்மை சாரா வேலையின்மை
46.
(c)
இரட்டை தன்மை
47.
(c)
பிரான்ஸ்
48.
(a)
கோலார்
49.
(a)
2017 ஜுலை 1ந் தேதி
50.
(b)
சட்டபூர்வமான குழு
51.
(a)
சராசரி வருவாய்
52.
(c)
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
53.
(c)
நைட்
54.
(d)
நிறைவுப் போட்டி
55.
(b)
மாறும்
56.
(b)
மாறும்
57.
(d)
எதிர்மறைச் சரிவுடையது
58.
(c)
இராபின்ஸ்
59.
(c)
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
60.
(b)
மார்ஷல்
61.
TC = 30 + 6Q2 +14Q3
\(MC ={d(30)\over dQ}+{d(6Q^3)\over dQ}+{d(14Q^3)\over dQ}\)
= 0+ 6(2) Q2-1 + 14 (3) Q3-1
=0+12Q+42Q2
\(\boxed{\therefore MC=2Q+42Q^2}\)
62.
Y =2x4-6x4
x ஐ பொருத்து 'y' யினை வகையிட
\({dy\over dx}=2(4)x^{4-1}-6(2)x^{2-1}\)
\(\boxed{\therefore{dy\over dx}=8x^3-12x}\)
63.
1.இந்தியாவில் உடல்நலப் பணிகள் மத்திய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.
2.மாநிலங்களை பொறுத்தவரையில் கேரளா மற்ற மாநிலங்களை விட உடல்நலம் பேனுதலின் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது.
64.
1.உயர்ந்த நாட்டு வருமானம்
2.உயர்ந்த தனிநபர் வருமானம்.
3.உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
4.முழு வேலை வாய்ப்பு.
5.தொழில் துறையின் ஆதிக்கம்.
6.உயர் தொழில் நுட்பம்.
65.
1.சராசரி வருவாய் என்பது, ஒரு பண்டத்திற்கான வருவாய் ஆகும்.
2.சராசரி வருவாய் என்பது மொத்த வருவாயை விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AR={TR\over Q}}\)
66.
1. உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடக் கூடிய செலவுகளுடன், நிர்வாகச் செலவையும் சேர்த்துக் கொண்டால் அது முதன்மைச் செலவு எனப்படும்.
2.இச்செலவுகள் நேர்முகச் செலவுகள் என்றும் அழைக்கப்படும்.
3.
67.
தனிநபர் தேவைப் பட்டியலின் அடிப்படையில் விலை, இடம் மற்றும் நேரத்தை இணைத்து அங்காடித் தேவை வளைகோட்டைப் பெறலாம்.
68.
1.நுகர்வோர் வருமானத்தைப் பொருத்து,கொடுக்கப்பட்டுள்ள விலையில் பண்டங்களை எவ்வளவு வாங்க முடியும் என்பதை அறிய வரவு செலவுக் கோடு பயன்படுகிறது.
2. வரவு செலவுக் கோடு 'விலை விகிதக் கோடு'எனவும் அழைக்கப்படுகிறது.
69.
(i) ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் வாங்கவோ அல்லது விற்கவோ ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு ஊரக அங்காடியாகும்.
(ii) நகர்புறம் மற்றும் இதர பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட இதர பொருட்கள் ஆகியவற்றை வாங்கவும் ஊரக அங்காடிகள் பயன்படுகின்றன.
70.
(i) ஊரக பகுதிகளில் ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும்.
(ii) உள்ளூரில் கிடைக்கும் கச்சாப் பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
71.
பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
1. பகுத்தாய்வு முறை (Deductive Method)
2. தொகுத்தாய்வு முறை (Inductive Method)
72.
பணிகளின் இயல்புகள்.
1. புலனாகாப் பொருட்கள்
2. பலதரப்பட்ட பண்டங்கள்
3. பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது
4. அழியக் கூடியவை.
73.
அளிப்பு விதி விலைக்கும் அளிப்புக்கும் உள்ள நேரடியான தொடர்பினை விளக்குகிறது.
74.
1. ஒன்றுக்கு மேற்பட்ட மாறும் உற்பத்திக் காரணிகளை பல்வேறு இணைப்பில் ஈடுபடுத்தி ஒரு குறிப்பிட்டஅளவு உற்பத்திச் செய்வதை காட்டும் கோடு சம அளவு உற்பத்திக்கோடு எனப்படும்.
2. ஐசோ(ISO),குவான்ட (quant) என்றும் இணைப்புத்தான் சம அளவு உற்பத்திக் கோடு என்று அழைக்கப்படுகிறது.
75.
(i) இந்தியாவில் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை கோயம்புத்தூர் கொடுக்கிறது.
(ii) எனவேதான் கோயம்புத்தூரை 'காற்றழத்த விசைக் குழாய் நகரம்' என்றழைக்கப்படுகிறது.
76.
பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி, யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
77.
(i) இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் PC மஹலநோபிஸ் மாதிரியை அடிப்படையாக கொண்டது
(ii) இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்
78.
(i) இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.
(ii) வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
79.
கடன் நிதிகளின் தேவை கீழ்கண்டவைகளை அடிப்படையாக கொண்டது. அவை,
(i) முதலீட்டுத் தேவை(Investment)
(ii) நுகர்வுத் தேவை (Consumption)
(iii) பதுக்குவதற்கான தேவை(Hoarding)
80.
81.
இருமுக முற்றுரிமை [Bilateral Monopoly] இருமுக முற்றுரிமை என்னும் அங்காடியில் ஓர் உற்பத்தியாளர் (முற்றுரிமையாளர்) மற்றும் ஒரு வாங்குபவர் (வாங்கும் முற்றுரிமையாளர்) மட்டும் இருப்பர்.
82.
சூத்திரம் :
AR=100, AC=32, உற்பத்தி=5
TP=(AR-AC)xஉற்பத்தி
=(100-32)x5
=68x5
∴ மொத்த இலாபம் = 340
83.
(i) ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்த்திய நாடுகளில் முதன்மையானது இந்தியாவாகும்.
(ii) 1965 ஆம் ஆண்டில் கண்டலாவில் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அமைக்கப்பட்டது.
84.
தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p, MR =?
\({dq \over dp}=-3\)
\(\eta d={-p\over q}{dq\over dp}={-p\over 150-30}(-3)\)
\(={3p\over 150-3p}\)
\(MR=p[1-{1\over \eta d}]=p[1-{{1\over3p}\over150-3p}]\)
\(=p[1-{150-3p\over3p}]\)
\(=p[{3p-150+3p\over3p}]\)

= 2[p-25]
\(\boxed{\therefore MR=2p-50}\)
(அல்லது)
\({dq \over dp}=-3\)
R=pq
=150p-3p2
\(MR={d(TR)\over dp}=150{dp \over dq}-6p{dp\over dq}\)

=-50+2p
=-50+\([{150-q\over 3}]\)
\(=50-100{-2q\over3}\)
\(=50-{2q\over3}\)
\(=50-{2\over3}(150-3p)\)
=50-100+2p
\(\boxed{\therefore MR=2p-50}\)
85.
= \(\frac { { x }^{ 2+1 } }{ 2+1 } +\frac { { x }^{ 1+1 } }{ 1+1 }- x+c\)
= \(\frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 2 } }{ 2 } -x+c\)
86.
முதலைப் பயன்படுத்திக் கொள்ள அதைப்பெற்றவர்கள் அதை வழங்கியவர்க்கு வெகுமதியே வட்டியாகும்.
87.
(i) தனிநபர் பகிர்வு
(ii) பணிசார் பகிர்வு
88.
(i) நிதிப்பற்றாக் குறை
(ii) மாநிலங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகள்.
89.
ஊரக வளர்ச்சி என்பது பொருளாதார கொள்கைகளை பயன்படுத்தி, ஊரக பகுதிகளை வளர்ச்சியடையச் செய்வதைக் குறிக்கும்.
90.
1.வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்களை முழுமையாக பயன்படுத்துவதுமான நாடுகளைக் குறிக்கும்.
2. அதிக தலா வருவாயைக் கொண்டிருப்பது ஆகும்.
3. முழு வேலைவாய்ப்பு
4. தொழில் செறிவு
91.
(i) முற்றுரிமைப் போட்டியில் ஒவ்வொரு நிறுவனமும் தன் உற்பத்தி பண்டத்தின் விற்பனையை அதிகரிக்க அதிக விற்பனை செலவை மேற்கொள்கிறது.
(ii) இதுவே விற்பனை செலவு எனப்படும்.
92.
நிறைவுப் போட்டியை தூய போட்டி என்றும் அழைக்கலாம்.அவற்றின் பண்புகளானவன.
(i) எண்ணற்ற வாங்குபவர் மற்றும் விற்போர் இருப்பர்.
(ii) ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை இருக்கும்.
(iii) உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை.
(iv) போக்குவரத்து செலவு இல்லை.
(v) அங்காடி நிலைபற்றி அறிந்திருப்பர்.
93.
94.
மார்ஷலின் கூற்றுப்படி, உழைப்பு என்பது உற்பத்தி காரணியான உழைப்பாளர் வருமானம் ஈட்டுவதற்காக தனது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்துவதாகும்.
95.
1. மீட்டு எடுக்க முடியாத கடந்த காலச் செலவுகள் அமிழ்த்தப்பட்ட (அ) மூழ்கும் செலவுகள் ஆகும்.
2. எதிர்கால வியாபாரத்தை தீர்மானிப்பதில் இக்கடந்த காலச் செலவுகள் பொருத்தமற்றதாக இருக்கும்.
96.
1. செலவுச் சார்பு என்பது மொத்த செலவிற்கும் மற்றும் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பினை வெளிப்படுத்துகிறது.
2. செலவுச் சார்பை, C=f(Q) என்று எழுதலாம் இதில் C= செலவு, Q= உற்பத்தி அளவு.
3. செலவுச் சார்பு என்பது பெறப்பட்ட சார்பு ஆகும்.
97.
1. ஒரு பொருளுக்கு நுகர்வோர் கொடுக்க விரும்பும் விலைக்கும் உண்மையிலேயே கொடுக்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே நுகர்வோர் எச்சம்.
2. நுகர்வோர் எச்சம் =TU-(P x Q)
அல்லது
3. நுகர்வோர் எச்சம் = தகுவிலை - உண்மை விலை.
TU =மொத்தப் பயன்பாடு
P =விலை
Q =பண்ட அளவு
98.
விலையில் ஏற்படும் பிரதிபலிப்பின் காரணமாக தேவை ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை\((EP= \alpha)\)
2.முற்றிலும் நெகிழ்ச்சியுற்ற தேவை \((EP= 0)\)
3. மிகை தேவை நெகிழ்ச்சி \((EP>1)\)
4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத்தேவை நெகிழ்ச்சி \((EP<1)\)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி \((EP=1)\)
99.
| வ. எண் | பண்டங்கள் | பணிகள் |
| 1. | பண்டங்கள் உற்பத்தி செய்யப்படும். | பண்டங்களோடு சேர்த்து பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படுகின்றன. |
| 2. | பண்டங்களுக்கு உருவ அடையாளம் உண்டு | பணிகளுக்கு உருவ அடையாளம் இல்லை |
| 3. | பண்டங்கள் உரிமையாளரிடமிருந்து தனித்துக் காணப்படும். | பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது. |
100.
101.
1.உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்"என்று குறிப்பிடுகிறது.
3.பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும்.உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6%ஆக இருந்தது.
4.இதன் மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதாரம் வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.
102.
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான செலவு எனப்படும்.
2.சராசரி மொத்த செலவு என்பது மொத்தச் செலவை,உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்ககையால் வகுப்பதால் கிடைப்பதாகும்.
3.\(\boxed{AC={TC\over Q}}\) (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
4.சராசரி மாறாச் செலவையும், சராசரி மாறும் செலவையும், கூட்ட கிடைப்பதே சராசரி செலவு ஆகும்.

5.சராசரி செலவு ஆரம்பத்தில் குறைந்து பின் உற்பத்தி அதிகரிக்கும் போது, அந்நிறுவனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குறைந்தபட்ச உற்பத்தி செலவை எட்டுகிறது.
6.அக்குறிப்பிட்ட புள்ளியைத் தாண்டி உற்பத்தி அதிகரிக்கும் போது சராசரி செலவும் அதிகரிக்கும்.
7.மாறும் விளைவு விதி செயல்பாட்டின் காரணமாக சராசரி செலவுக் கோடு 'U' வடிவத்தில் உள்ளது.
103.
பண்டங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
அவை,
1.இன்றியமையாத பண்டங்கள்
2. வசதிப் பண்டங்கள்
3.ஆடம்பரப் பண்டங்கள்
1.இன்றியமையாத பண்டங்கள்:
1.மனிதன் உயிர் வாழத் தேவையான மற்றும் தவிர்க்க முடியாத பண்டங்கள் இன்றியமையாத பண்டங்கள் எனப்படும்.
2.(எ.கா)உணவு,உடை மற்றும் இருப்பிடம்.
2.வசதிப் பண்டங்கள்:
1.நம்முடைய வாழ்வை எளிதாக, சுகமாக மற்றும்வசதியாக வைத்துக் கொள்ள பயன்படக் கூடியவை வசதிப் பண்டங்கள் ஆகும்.
2.(எ.கா) குளிர்சாதன பெட்டி
3.ஆடம்பரப் பண்டங்கள்
1.சிலவகை பண்டங்கள் மிக முக்கியமானவை அல்ல ஆனால் விலை உயர்ந்தவை.இவற்றை ஆடம்பரப் பண்டங்கள் என்கிறோம்.
2.(எ.கா)வைரங்கள்
104.
(i) இந்தியாவில் ஏறக்குறைய 4ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
(ii) சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம்.
(iii) விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
(iv) பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மட்டும் உற்பத்தி இயல்பற்றவை.
(v) அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் சதவிகிதமே அதிகமாக உள்ளது.
(vi) பெரும்பான்மையான கிராம மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்கள்.
105.
1.பகுதிச் சமநிலை:
1. ஒரேயொரு மாரியின் மூலம் கிடைக்ககூடிய சமநிலை பகுதிச் சமநிலை பகுதிச் சமநிலை எனப்படும்.
2.இது தனிச் சமநிலை என்றும் அழைக்கப்படுகிறது.
2.பொதுச் சமநிலை:
பொதுச் சமநிலை என்பது பொருளாதாரத்தில் செயல்படுகின்ற அனைத்து மாறிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு மொத்த பொருளாதாரத்திலும் சமநிலை ஏற்படுவதைக் குறிக்கின்றது.
106.

107.
நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாடு:
(i) அமெரிக்க பொருளியல் வல்லுநர் A.பிராங்க் H.ஹைட் (Frank H.Night) நிலையின்மைக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) இவரின் கூற்றுப்படி, நிச்சயமற்ற தன்மையைத் தாங்குவதற்கான வெகுமதியே இலாபம் ஆகும்.
(iii) காப்பீடு இடர்பாடு மற்றும் காப்பீடற்ற இடர்பாடு என இடர்பாடுகளை இரு வகைப்படுத்துகிறார்.
காப்பீடு இடர்பாடு:
(i) சில இடர்பாடுகள் அளவிடக்கூடியவை.
(ii) (எ.கா) தீ விபத்து மற்றும் கொள்ளை.
(iii) இதற்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கிவிடும்.
(ii)காப்பீடற்ற இடர்பாடு:
(i) சில இடர்பாடுகள் அளவிட முடியாதவை.
(ii) நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அனுமானிக்க முடியாது.
(iii) (எ.கா) நிறுவனங்களுக்கிடையே போட்டி, சந்தை நிலை, தொழில் நுட்பமாற்றம் போன்றவை.
(iv) இதற்கு காப்பீடு நிறுவனம் இழப்பை ஏற்காது.
108.
முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள்:
(i) எண்ணற்ற வாங்குவோர் மற்றும் விற்போர்.
(ii) நிறுவனங்கள் விலை நிர்ணயிக்க முடியாமல் அவர்களே தங்கள் பண்டங்களுக்கு விலை நிர்ணயிப்பர்.
(iii) நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்த பண்டங்களை மற்றவர்களின் பண்டங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயற்சிப்பதே முற்றுரிமைப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.
(iv) தொழிலில் உள்ளே நுழைய மற்றும் வெளியேற நிறுவனங்களுக்கு தடையில்லை.
(v) ஒவ்வொரு நிறுவனமும் தன் உற்பத்தி பண்டத்தின் விற்பனையை அதிகரிக்க அதிக விற்பனை செலவை (Selling cost) மேற்கொள்கிறது.
(vi) விலை அல்லா போட்டி (Non price competition) ஒவ்வொரு நிறுவனமும் சுதந்திரமான விலைக் கொள்கையை பின்பற்றும்.
109.
(i) இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) மொத்த புத்தங்களில் 60 முதல் 70 சதவீதம் சிறு தொழில்கள் சிறு தொழில் மூலமாக கிடைத்தவையே
(iii) இன்றைய பெரிய தொழில்களின் பெரும்பான்மையான தொழில்கள் சிறு தொழில்களாக உருவாக்கப்பட்டு பின் வளர்ந்து பெரிய தொழில்களாக மாறியுள்ளன
(iv) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறு தொழில்களின் பங்கு மிகப் பெரியதாகும்
110.
| வ. எண் | பயிர்கள் | கூட்டு விரயங்கள் (% சதவீதங்களில்) |
| 1. | தானியங்கள் | 5-6 |
| 2. | பருப்பு வகைகள் | 6-8 |
| 3. | என்னை வித்துகள் | 3-10 |
| 4. | பழங்கள் மற்றும் காய்கறிகள் | 5-16 |
| 5. | பால் | 1 |
| 6. | மீன் வளம் (நிலத்தில்) | 5 |
| 7. | மீன் வளம் (கடலில்) | 10 |
| 8. | இறைச்சி | 3 |
| 9. | கோழி | 7 |
மூல உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம், உணவுப் பொருள் கழிவுகள் பற்றி வெளியிட்டுள்ளது.
111.
x1-x2+x3=2 ;
x1+x2-x3=0;
-x1-x2-x3=-6
\(\left| \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & 1 & -1 \\ -1 & -1 & -1 \end{matrix} \right| =\left| \begin{matrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{matrix} \right| =\left| \begin{matrix} 2 \\ 0 \\ -6 \end{matrix} \right| \) (1+4-3)
AX=B
A=\(\left| \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & 1 & -1 \\ -1 & -1 & -1 \end{matrix} \right| \)
\(\Delta =\left| \begin{matrix} 1 & -1 & 1 \\ 1 & 1 & -1 \\ -1 & -1 & -1 \end{matrix} \right| \)
=1(-1-1)+1(-1-1)+1(-1+1)
=-2-2+0
\(\boxed { \therefore \quad \Delta =-4 } \)
\(\Delta x_{1} =\left| \begin{matrix} 2 & -1 & 1 \\ 0 & 1 & -1 \\6 & -1 & -1 \end{matrix} \right| \)
=2(-1-1)+1(0+6)+1(0-6)
=2(-2)1(6)+1(-6)
= -4+6-6
= -4
\(\boxed { \therefore \quad \Delta x_{1} =-4 } \)
\(\Delta x_{2} =\left| \begin{matrix} 1 & 2 & 1 \\ 1 & 0 & -1 \\-1 & 6 & -1 \end{matrix} \right| \)
= 1(0+6)-2(-1-1)+1(6-0)
= 1(6)-2(-2)+1(6)
= 6+4+6
\(\boxed { \therefore \quad \Delta {x_2} =16 } \)
\(\Delta x_{3} =\left| \begin{matrix} 1 & -1& 2 \\ 1 & 1 & 0 \\-1 & -1 & 6 \end{matrix} \right| \)
= 1(6-0)+1(6-0)+2(-1+1)
= 1(6)+1(6)2(0)
= 6+6+0
= 12
\(\boxed { \therefore \quad \Delta {x_3} =12 } \)
\(x_{1}=\frac{\Delta x_{1}}{\Delta}=\frac{-4}{-4}=1\)
\(\boxed { \therefore \quad {x_1} {x_2} {x_3} =(1,-4,-3) } \)
112.
(i) அமெரிக்க பொருளியல் அறிஞர் J.B கிளார்க் 1900 ல் இக்கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) இக்கூற்றுப்படி, இலாபம் என்பது விலைக்கும் பனங்களின் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வேறுபாடே ஆகும்.
(iii) சமுதாயத்தில் ஏற்பட்ட இயங்குநிலை மாற்றங்களுக்கான வெகுமதியே இலாபம் ஆகும்.
(iv) கிளார்க் கருத்துப்படி, இயங்கா நிலையில் உள்ள சமுதாயத்தில் இலாபம் தோன்றாது. இந்நிலைச் சமுதாயத்தில் அனைத்தும் செயல்படாதிருக்கும். அங்கு எவ்வித மாற்றமும் ஏற்படாது.
(v) தற்காலத்தில் சமுதாயம் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ளது. கிளார்க்கின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட ஐந்து முக்கிய மாற்றங்களை இயங்கு சமுதாயத்தில் காணலாம்.
(1) மக்கள் தொகை பெருகும்
(2) மூலதன அளவு பெருகும்
(3) உற்பத்தி முறைகள் மேம்பாடு அடையும்
(4) தொழில் அமைப்பின் வகைகள் மாற்றமடையும்
(5) நுகர்வோரின் விருப்பங்கள் பெருகும்.
திறனாய்வு:
நவீன கோட்பாடுகளில் ஒன்றான இது குறுகிய காலத்தில் எதிர்பார்க்க முடியாத மாற்றங்களின் வேறுபாட்டைப் புறக்கணித்துவிட்டது.
113.
(i) நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதாரக்குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது.
(ii) பெருபான்மையான மக்களுக்கான சமூகநலக் கொள்கைகளைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.
(iii) எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்குப் பரவலாகப்பட்டுள்ள பொது விநியோகத்திட்டம், மதிய உணவுத்திட்டம், பொது சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு குறிப்பிடலாம்.
114.
(i) இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மற்றும் முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
(ii) பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
(iii) நகர்புறத்திற்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
(iv) ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நாற்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
(v) வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம் ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலை வாய்ப்புகளையம் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க முடியும்.
(vi) கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பு தேடி திறமைசாலிகள் இடம் பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிபெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
(vii) ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
(viii) கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினைகுறைக்க முடியும்.
115.
(i) பொருளாதார சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்க்கும் மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கும் சிவப்பு கம்பள வரவேற்பு தருவதாகும்.
(ii) நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளது.
(iii) அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது.
(iv) 1991ல் சில உயர் தொழில்நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழ்ற்சாலைகளுக்கு அனுமதியளித்தது.
(v) 51% பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
(vi) இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74% பின்னர் 100% மாற்றியமைக்கப்பட்டது.
116.
1. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நல்வாழ்வையும் உள்ளடக்கியதாகும்.
2. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடுகள் என்பது.
1. மனிதவள மேம்பாட்டு குறியீடு
2.வாழ்க்கைத் தரக்குறியீடு
3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றை பொறுத்தது.
117.
(அ) உற்பத்தியாளர் சமநிலை
உற்பத்தியாளர் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் உற்பத்தியாளர் உச்சபட்ச உற்பத்தியை அடையும் நிலையாகும்.
(ஆ) காரணிகளின் உத்தம அளவு குறிப்பிடுவது:
1. குறிப்பிட்ட அளவு உள்ளீட்டில் அதிக பட்ச உற்பத்தியைப் பெறுவது.
2. குறைந்த செலவில், குறிப்பிட்ட உற்பத்தியைப் பெறுவது.

(இ)வரைபட விளக்கம்:
1. E என்ற புள்ளியில் ஒரு நிறுவனம் அல்லது உற்பத்தியாளர் அதிக அளவு இலாபத்தை பெறுகிறார்.
2. அப்புள்ளியில் சம அளவு உற்பத்திக் கோட்டினை சம அளவு செலவுக் கோடு தொட்டுச் செல்லும். அங்கு இரண்டு கோடுகளின் சாய்வும் சமமாக இருக்கும்.
3. MRTSLK=\({P_L\over P_K}\)
4. E என்ற புள்ளியில் நிறுவனம் OM அலகு உழைப்பையும் அலகு மூலதனத்தையும் பயன்படுத்துகிறது.
5. உயிர் சமசெலவுக் கோடுகளில் அமைந்துள்ளH,K,R மற்றும் S புள்ளிகள் அதிக செலவினங்களையும், உற்பத்தியாளர் அடைய இயலாத நிலையையும் குறிக்கின்றன.
118.
| வ.எண் | வெளியுறு செலவு | உள்ளுறு செலவு |
| 1. | உற்பத்திக் காரணிகளை வாங்கு மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும். | நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும். |
| 2. | ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்கு தேவையான காரணிகளை விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு அமர்த்தியோ உற்பத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒட்டு மொத்த செலவு வெளிப்படையான செலவு. | நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் மற்றும் சுய உழைப்பிற்கான செலவுகள் உள்ளார்ந்த செலவுகள். |
| 3. | வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு அல்லது பணச் செலவு என்று அழைக்கப்படும். | உள்ளார்ந்த செலவு என்பது மறைந்திருக்கும் செலவு அல்லது எட்டுச் செலவு என்றழைக்கப்படும். |
119.
தேவை விரிவு:
குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்குவது தேவை விரிவு ஆகும்.
தேவை சுருக்கம்:
அதிக விலையில் குறைந்த பொருட்களை வாங்குவது தேவை சுருக்கம் ஆகும்.
தேவை விரிவும், தேவை சுருக்கமும்:
விலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே தேவை அளவில் மாற்றம் ஏற்பட்டால் அதனை ' தேவை விரிவு ' மற்றும் 'தேவை சுருக்கம் 'என அழைக்கிறோம்
120.
121.
1.நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
2.இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மின்சாரம் இன்றி நம்மால் வாழ்வது சிரமம்.
3.ஆற்றல் இரண்டு வகைப்படும்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது.அவை தீர்ந்துவிட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது.
2.மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும்.
3.உதாரணம் :நிலக்கரி, பெட்ரோலியம்,இயற்கை வாயு மற்றும் பல.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டு பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை.
2.ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன.அவை,
1.சூரிய சக்தி.
2.காற்று சக்தி.
3.அலைகள் சக்தி
4.புவி வெப்ப சக்தி
5.உயிரி எரிவாயு சக்தி
3.சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு.
4.காரணம் இவ்வளங்கள் கொண்டு முன்காலங்களில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட வில்லை அல்லது வழக்கத்தில் இல்லை எனலாம்.
122.
1.மொத்த வருவாய் (Total Revenue - TR) என்பது, ஒரு நிறுவனம் தன் உற்பத்தி பண்டங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் மொத்த வருமானமே, மொத்த வருவாய் எனப்படுகிறது.
2.விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையை அப்பண்டத்தின் விலையால் பெருக்கிக் கிடைப்பது மொத்த வருவாய் ஆகும்.
3.\(\boxed{TR = P \times Q}\) இதில் TR -மொத்த வருவாய்,P-விலை, Q-விற்பனை அளவு.
4.உதாரணம்: ஒரு நிறுவனம் 100 கைபேசியை 500 வீதம் விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50000/-ஆகும்.
5.TR= 500 x 100
\(\boxed{\therefore TR=50000}\)
மாறாத விலையில் மொத்த வருவாய்
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 5 | 5 |
| 2 | 5 | 10 |
| 3 | 5 | 15 |
| 4 | 5 | 20 |
| 5 | 5 | 25 |
| 6 | 5 | 30 |

நிலையான விலை:
விலை Rs.5ஆக உள்ளபோது மொத்த வருவாய் போக்கினை மேற்கண்ட வரைபடம் விளக்குகிறது.
விலை குறைவு:
விலை குறையும் போது பண்டத்தின் விற்பனை அதிகரிக்கும் மொத்த வருவாயின் போக்கினை கீழ்கண்ட வரைபடம் விளக்குகிறது.
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 10 | 10 |
| 2 | 9 | 18 |
| 3 | 8 | 24 |
| 4 | 7 | 28 |
| 5 | 6 | 30 |
| 6 | 5 | 30 |
| 7 | 4 | 28 |
| 8 | 3 | 24 |
| 9 | 2 | 18 |
| 10 | 1 | 10 |

123.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
124.
(1) நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:
(i) ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகிறது.
(ii) கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு செய்கின்றனர்.
(2) பண்ணை சாராத தொழில்களில் வேலை வாய்ப்பின்மை:
அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
(3) பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.
(4) பணவீக்கம்:
பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்த ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
(5) குறைந்த உற்பத்தித் திறன்:
ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
(6) வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை:
பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால் சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளது.
(7) குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
(8) பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்:
இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
(9) சமூக குறைபாடுகள்:
சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
125.
நிலையான சமநிலை:
1. சமநிலை என்பது மாற்றமில்லா நிலையை அடைவது என்று ஸ்டிக்லர் குறிப்பிடுகிறார்.
2. நுகர்வோர் உச்ச மனநிலைவை பெருகின்றபோது சமநிலையடைகிறார்.
3.உற்பத்தியாளர் உச்ச இலாபம் பெறுகின்ற போது சமநிலையடைகிறார்.
4.உற்பத்தி காரணிகள் முழு வேலை வாய்ப்பையும்,உச்ச வெகுமதியையும் பெறும் போது சமநிலை அடைகின்றன.
5.எனவே, நிலையான சமநிலை என்பது நிலையான வேலை, அளவு,வருமானம்,தொழில்நுட்பம்,மக்கள் தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

வரைபட விளக்கம்:
1. X- அச்சு தேவை மற்றும் அளிப்பின் அளவையும்,
Y- அச்சு விலையையும் குறிக்கிறது.
2. DD-என்பது கீழ்நோக்கி சரியும் தேவைக்கோடு மற்றும்
SS-என்பது மேல்நோக்கி செல்லும் அளிப்பு கோடு ஆகும்.
3.OP-என்பது சமநிலை விலை.
4.OM-என்பது சமநிலை அளவு ஆகும்.
5.புள்ளி-E-ல் தேவை கோடும்,அளிப்புக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கிறது.
6.புள்ளி-E-ல் தேவையும், அளிப்பும் சமமாகி சமநிலை அடைகிறது.
126.
1. உழைப்பு அழியக்கூடியது.
2.உழைப்பை "உழைப்பாளரிடமிருந்து" பிரிக்க இயலாது.
3. உழைப்பு இடங்களுக்கிடையேயும், தொழில்களுக்கிடையேயும் மெதுவாக நகரக்கூடியது.
4. உழைப்பு இடம் பெயரக்கூடியது.
5.உழைப்பு செயல் உற்பத்திக் காரணியாகும்.
6. உழைப்பு என்பது பல வகைப்படும். இது உடலுழைப்பு மற்றும் அறிவு திறன் சார்ந்த உழைப்பு (ஆசிரியர்)
7.உழைப்பாளர் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் உள்ளார்.
8. உழைப்பின் அலகுகள் பலவகைப்பட்டவை.
9. கூலியானது உழைப்பாளரின் அளிப்பையும் திறனையும் பொருத்து அமையும்.
127.
நிறைகுறைப் போட்டியில் இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு:
நிறைகுறைப் போட்டியில் காரணியின் விலை தீர்மானம் விளக்கப்பட்டுள்ளது. இதனை கீழ்க்கண்ட வரைபடம் விளக்குகிறது.
வரைபட விளக்கம்:
(i) AFC என்பது காரணியின் சராசரி செலவுக்கோடு, காரணிகளை வழங்கப்பட்ட விலையை குறிக்கிறது.
(ii) AFC உயரும்போது MFC ஆனது AFC க்கு மேலே மேல்நோக்கிச் செல்லும் கோடாக அமைந்துள்ளது.
(iii) MFC என்பது காரணிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிநிலைச் செலவை குறிக்கிறது.
(iv) Q என்ற புள்ளியில் MFC யும், MRP யும் சமநிலையில் உள்ளது.
(v) இப்புள்ளியில் உற்பத்தியாளர் அதிகபட்ச இலாபத்தைப் பெறுகிறார்.
(vi) காரணிக்கு செய்த சராசரி செலவு NR மற்றும் சராசரி வருவாய் NQ ஆகும்.
(vii) ஒவ்வொரு அலகு காரணியும் RQ அளவுக்கு சுரண்டப்படுகிறது.
(viii) மொத்த காரணிகளின் எண்ணிக்கை ON க்கு சமம்.
(ix) உற்பத்தியாளர் காரணியை மொத்தமாக சுரண்டிய அளவு.
(கோடிடப்பட்ட பகுதி)
(x) எனவே நிறைகுறைப் போட்டியில் சமநிலையில் உற்பத்திக் காரணி சுரண்டப்படுகிறது.
128.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
129.
(அ) (i) தேவைச்சார்பு என்பது Qt=f(Pt,Y,A,N,Pc)
(ii) தேவை தீர்மானிக்கும் காரணிகளானவன.
Y=குடும்பத்தின் சராசரி வருமானம்
A = பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு.
N = அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை
Pc= பதப்படுத்தப்பட்ட பாலின் விலை.
(ஆ) இம்மாறிகளில் சார்பற்ற மாறிகள் = A மற்றும் N.A என்பது விளம்பரச் செலவு N என்பது மக்களின் எண்ணிக்கை
(இ) குடும்பத்தின் சராசரி வருமானம் கூடும்பொழுது பதப்படுத்தப்படாத பாலின் தேவை அதிகரிக்கும்.
(ii) Pc- பதப்படத்தப்படாத பாலின் விளம்பரச் செலவு அதிகரித்தால் அப்பாலின் தேவை குறையும்.
(iii) அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாலின் தேவை அதிகரிக்கும்.
(iv) பதப்படுத்தபட்ட பாலின் தேவை அதிகரித்தால் பதப்படுத்தப்படாத பாலின் தேவை குறையும்.
(v) ஆகையால் Qt=-a Pt+bY-cA+dN-e Pc) எனவே இதனை நேர்கோட்டு சார்பு எனலாம்.இங்கு சாய்வின் மதிப்பு எதிர்மறையாக இருப்பதால் இந்த சார்பு தேவைச் சார்பாக அமையும்.
130.
Pd=1600-x2
Ps =2x2+100
\(\boxed { { P }_{ d }={ P }_{ s } } \)
⇒ 1600-x2=2x2+400
1600-x2-2x2=400
-3x2=400-1600
+3x2=+1200
\(x ^{2}= \pm \sqrt {400}\)
∴ x=20
x=20 எனில் p0x0= 1600-x02
=1600-(20)2
=1600-400
p0=1200
p0x0=1200x20
=24000
நுகர்வோர் உபரி (c.s)=\(\int_{0}^{x0}f(x)dx-p_{0}x_{0}\)
i) \(\int_{0}^{20}(1600-x^{2})dx-24,000\)
ii) \(|1600x-\frac{x^{3}}{3}|^{20}_{0}-24,000\)
=\(32000-\frac{8000}{3}-24000\)
=\(8000-\frac{8000}{3}\)
=\(\frac{24000-8000}{3}\)
உற்பத்தியாளர் உபரி (p.s)=P0x0 - \(\int^{x0}_{0}g(x)dx\)
=\(24000-\int^{20}_{0}(2x^{2}-400)dx\)
=\(24000-[\frac{2x^{3}}{3}+400x]^{20}_{0}\)
=24000-\([\frac{2(20)^{3}}{3}+400(20)]^{20}_{0}\)
=24000-\([\frac{2\times 8000}{3}+8000]\)
=24000-\(\frac{16000}{3}-8000\)
=16000-\(\frac{16000}{3}\)
=\(\frac{48000-16000}{3}\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards