11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Physics Important Question )
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
(I) திரவம் அல்லது வாயுத்துகளின் பருமன் அதிகரிக்கும் போதும் உயர் பாக்யல் தன்மை மற்றும் அடர்த்தி காரணமாகவும் பிரௌனியன் இயக்கம் குறையும்
(II) திரவ மூலக்கூறுகள் தொடர்ந்து மோதுவதால் அத்துகள்கள் ஒழுங்கற்ற இயக்கத்தை மேற்கொள்கின்றன.
எந்தக் கூற்று சரி?
I மட்டும்
II மட்டும்
இரண்டும் சரி
ஏதுமில்லை
2.
வாயு மூகக்கூறுகளின் சராசரி வேகம் _________
\(\sqrt { \frac { KT }{ m } } \)
1.60\(\sqrt { \frac { KT }{ m } } \)
\(\sqrt { \frac { 5KT }{ m } } \)
\(\sqrt { \frac { 2KT^ 2 }{ m } } \)
3.
வரைபடத்தில் வளைகோட்டிற்குக் கீழே உள்ள பரப்பு அமைப்பினால் செய்யப்பட்ட வேலை அல்லது அமைப்பின் மீது செய்யப்பட்ட ______ சமம்
வேலை
ஆற்றல்
அழுத்தம்
பருமன்
4.
பாகியல் எண்ணின் பரிமாணம் _________
ML-1T-1
MLT-1
ML2T-1
ML2T2
5.
செங்குத்து அச்சுத் தேற்றத்தின் சமன்பாடு
I = Ic + Md2
IZ = IX - IY
IZ = IX + IY
IY = IX + IZ
6.
நிலவின் பரப்பில் உள்ள வாயுக்களின் சராசரி இருமடி மூல வேகமானது அதன் விடுபடு வேகத்தை விட அதிகமாக இருப்பதற்கு காரணம்
புவியின் சுழற்சி
குறைந்த புவி ஈர்ப்பு விசை
நிலவின் வேகமான சுழற்சி
நிலவில் வளிமண்டலம் உள்ளது
7.
வேலை செய்யும் பொருளின் வெப்பநிலை மாறா மீமெது விரிவு, மீமெது அமுக்கம் என்பன கீழ்காணும் எம்முறையில் நடைபெறுகிறது.
வெப்பநிலை மாறா நிகழ்வு
வெப்பபரிமாற்றமில்லா நிகழ்வு
அழுத்தம் மாறா நிகழ்வு
பருமன் மாறா நிகழ்வு
8.
இரண்டு இயற்பியல் அளவுகளை வகுக்கும்போது (அதாவது x=\(\frac{A}{B}\)) கிடைக்கும் பின்னப்பிழையின் பெரும மதிப்பு _____
\(\frac { \Delta x }{ x } =\mp \left( \frac { \Delta A }{ A } -\frac { \Delta B }{ B } \right) \)
\(\frac { \Delta x }{ x } =\left( -\frac { \Delta A }{ A } +\frac { \Delta B }{ B } \right) \)
\(\frac { \Delta x }{ x } =\left( \frac { \Delta A }{ A } +\frac { \Delta B }{ B } \right) \)
\(\frac { \Delta x }{ x } =\left( \frac { A }{ \Delta A } -\frac { B }{ \Delta B } \right) \)
9.
நிறை, வெப்பநிலை, மின்னோட்டம் ஆகியவை ______
அடிப்படை அளவுகள்
ஸ்கேலார்
வெக்டர் அளவுகள்
(a) மற்றும் (b) இரண்டும்
10.
ஒரு சீரான மெல்லிய கம்பியின் நிறை m1 நீளம் l தரை மட்டத்தில் அதன் கீழ் முனை இருக்குமாறு செங்குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதை கீழே விழச் செய்யும்பொது அதன் மேல் முனை எத்திசைவேகத்துடன் தாக்கும்?
\(\sqrt { 7gl } \)
\(\sqrt { mgl } \)
\(\sqrt { 3gl } \)
\(\sqrt { gl } \)
11.
ஒரு துணைக்கோளில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுருள்வில்லிலிருந்து ஒரு பொருள் தொங்கவிடப்பட்டுள்ளது. அது சுற்றுப் பாதையின் ஆரம் R ல் செல்லும்போது சுருள் வில்லின் அளவீடு w1 மற்றும் சுற்றுப்பாதையில் ஆரம் 2R ஆக உள்ளபோது அளவீடு w2
w1>w2
w1 ≠w2
w1=w2
w1<w2
12.
ஒரு குழாயின் விட்டம் 1.25 cm இதிலிருந்து நீரானது 5 x 105m3s -1 என்ற விகிதத்தில் 103 kgm-3 அடர்த்தியும் , பாகியல் குணகம் 10-3 பாஸ்கலும் கொண்டது.எனில் நீரின் விழும் தன்மை.
ரெனால்டு எண் 5100 உடன் சீராக இருக்கும்
ரெனால்டு எண் 5100 உடன் சுழற்சியாக இருக்கு
ரெனால்டு எண் 3900 உடன் சீராக இருக்கு
ரெனால்டு எண் 3900 உடன் சுழற்சியாக இருக்கு
13.
கணிசமாக பொருள்கள் நீட்சியடையும்போது உடையவதற்கு முன் மீட்சியற்ற குறுக்கத்தை அடைவது
உடையும் பொருள்கள்
மீட்சியுள்ள பொருள்கள்
உடைக்கக்கூடிய பொருள்கள்
நீளும் தன்மையுடைய பொருட்கள்
14.
பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை
முடிவிலி
சுழி
பூமியின் பரப்பின் மீதான எடைக்கு சமம்
5 மடங்கு
15.
ஒரு கொடுக்கப்பட்ட நிறையின் வெப்பநிலை 27oC லிருந்து 327oC வெப்ப நிலைக்கு உயரும், எனில் மூலக்கூறுகளின் rms திசைவேகம் உயர்வது.
\(\sqrt { 2 } \) தடவைகள்
இரண்டு தடவைகள்
2\(\sqrt { 2 } \) தடவைகள்
4 தடவைகள்
16.
ஓராண்டு காலத்தில் புவியின் மீது சூரியன் செய்த வேலையின் அளவு_____.
சுழி
சுழி அல்ல
நேர்குறி மதிப்புடையது
எதிர்குறி மதிப்புடையது
17.
ஒரு பொருளின் வேகம் V=90 km/h m/s ல் குறிப்பிட_______
90
25
45
180
18.
ஒரு சுழலும் பொருளின் கோண உந்தம் இரட்டிப்பாகும் போது அதன் சுழற்சியின் இயக்க ஆற்றல் K.ERoT
2தடவைகள்
4 தடவைகள்
பாதியாக
8 தடவைகள்
19.
ஒரு துகளின் நிறை 'm' திசைவேகம் v யுடன் ஓய்வு நிலையில் உள்ள நிறை m2 வுடன் மோதுகிறது. பின் புதைந்து விடுகிறது உடனடி மோதலில் அமைப்பின் திசைவேகம்
அதிகரிக்கும்
குறையும்
மாறிலி
சுழியாகும்
20.
இரு பொருட்களின் நிறைகள் m மற்றும் 4m சமமான இயக்க ஆற்றல்களுடன் இயங்குகிறது அதனுடைய நேர்க்கோடு உந்தத்தின் விகிதம்
1:2
1:4
4:1
1:1
21.
ஒரு பொருள் புவியை நோக்கி தடங்கலின்றி விழுகிறது. எனில் மொத்த ஆற்றல்.
அதிகரிக்கும்
குறையும்
நிலையாக இருக்கும்(மாறாது)
முதலில் அதிகரித்து பின் குறையும்
22.
10 N விசை ஒரு பொருளின் திசைவேகத்தை 20 ms-1 லிருந்து 40 ms-1 க்கு 8 செகண்டுகளில் மாறுகிறது.அதே மாற்றத்தை 4 செகண்டுகளில் எவ்வளவு விசை தேவை?
10 N
5 N
20 w
ஏதுமில்லை
23.
சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகம்_____
தொடுகோட்டிற்கு எதிர்த்திசையில் செயல்படும்
வேகம் தொடர்ந்து மாற்றமடையும்
தோடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது
வட்டத்தின் மீது செயல்படுகிறது
24.
பின்வருவனவற்றில் இரு பரிமாண இயக்கம்_____
தண்டவாளத்தில் செல்லும் ஒரு புகைவண்டியின் இயக்கம்
புவிக்கு அருகில் புவிஈர்ப்பானால் தடையின்றி விழும் இயக்கம்
ஒரு துகளானது ஒரு தளத்தில் ஒரு வளைவுப் பாதையில் இயங்குவது
பலத்த காற்று வீசும்போது ஒரு பட்டத்தைப் பறக்க விடுதல்.
25.
அணுக்களின் நிறையை அளவிடப் பயன்படும் சாதனம்_____
ஸ்பெக்ட்ராகிராப்
பெர்மி
டெலஸ்கோப் (தொலைநோக்கி)
மைக்ரோஸ்கோப் (நுண்ணோக்கி)
26.
கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?
f
\(f\over 2\)
\(f\over f +2\)
\(f+2\over f\)
27.
நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?
இருமடங்காகும்
மாறாது
பாதியாக குறையும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
28.
ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1, V1, T1, N) என்ற சமநிலை சமநிலையிலிருந்து (2P1, 3V1, T2, N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால்______.
T1 = T2
\({ T }_{ 1 }=\frac { { T }_{ 2 } }{ 6 } \)
\({ T }_{ 1 }=6{ T }_{ 2 }\)
\({ T }_{ 1 }=3{ T }_{ 2 }\)
29.
வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளிந்த பின்னர் நமது உடலின் ______.
அக ஆற்றல் குறையும்
அக ஆற்றல் குறையும்
வெப்பம் குறையும்
அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது
30.
31.
ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் \(\Delta \)l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?
2F
4F
8F
16F
32.
புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் _____.
நிலை ஆற்றலுக்குச் சமம்
நிலை ஆற்றலைவிடக் குறைவு
நிலை ஆற்றலை விட அதிகம்
சுழி
33.
m நிறைகொண்ட பொருள் ஒன்று \(\theta \) சாய்வு கோணம் கொண்ட முக்கோண வடிவ கத்திவிளிம்பில் (wedge) வைக்கப்பட்டு, நிறை வழுவாமல் இரண்டையும் சேர்த்து கிடைத்தளத்தில் முடுக்குவித்தால், கத்தி விளிம்பு பொருளுக்குக் கொடுக்கும் விசை யாது?
mg cos\(\theta \)
mg sin\(\theta \)
mg
\(\frac{mg sin\theta}{cos\theta}\)
34.
நிலைமம் என்பது ஒரு பொருளின் எந்த நிலையை மாற்றிக்கொள்ள இயலாத பண்பு?
ஓய்வு நிலையை மட்டும்
சீரான நேர்கோட்டு இயக்க நிலையை மட்டும்
இயக்கத் திசையை மட்டும்
தனது ஓய்வு நிலையையும், அதன் சீரான நேர்கோட்டு இயக்க நிலையையும்
35.
கோண திசைவேகம் நிலைமைத்திருப்பு திறனுக்கு ______
நேர்த்தகவல்
எதிர்த்தகவல்
மாறிலி
அனைத்தும்
36.
கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.
\({R}_{30°}={R}_{60°}\)
\({R}_{30°}=4{R}_{60°}\)
\({R}_{30°}={{R}_{60°}\over 2}\)
\({R}_{30°}=2{R}_{60°}\)
37.
துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?
1 m s–2
2 m s–2
சுழி
–1 m s–2
38.
ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம், 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு _______.
0.1%
0.2%
0.4%
0.01%
39.
\((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை _______.
9J
6J
10J
12J
40.
பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?
பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி
ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல
ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல
41.
பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நி்றை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நி்றையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நி்லையில் கி்டைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?

mg ஐ விடக் குறைவு
mg க்குச் சமம்
mg ஐ விட அதிகம்
கண்டறிய முடியாது
42.
பிளாங்க் மாறிலியின் (Planck's constant) பரிணாம வாய்ப்பாடு _______.
[ML2T-1]
[ML2T-3]
[MLT-1]
[ML3T3]
43.
அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.
Kg2
m3
s-1
m
44.
கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.
சுழி
v0
\(\sqrt { 2 } { v }_{ 0 }\)
2v0
45.
3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.
0.25 rad s-2
25 rad s-2
5 m s-2
25 m s-2
46.
சார்பு திசைவேகம் சுளையாக அமைய வாய்ப்புள்ளதா? விளக்குக.
47.
அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
48.
ஒரு எஃகு பந்தின் [அடர்த்தி p = 7.8gcm-3 ] முற்றுத் திசை வேகம் 10cms-1. இது ஒரு நீர்த் தொட்டியில் விழுகிறது. நீரின் பாகியல் குணகம் = 8.5 x 10-4 pas. கிளிசரினில் முற்றுத் திசைவேகம் என்னவாக இருக்கும் (p = 1.2 gcm-3, \(\eta \) = 13.2 pas )
49.
சராசரி இருமுடி மூல வேகம்\({ v }_{ rms }\) இயற்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?
50.
கோள்களின் பரப்பு விதியினை விவரி.
51.
நிறை 'm' உடைய மெல்லிய தண்டின் நிலைமத் திருப்புத்திறன் மற்றும் நீளம் 'l' [அச்சைப்பற்றி] அதன் மையம் \(Ml^1\over12\). தண்டின் இறுதி நீளத்திற்கு இணையான அச்சைப்பற்றி நிலைமத் திருப்புத்திறன் யாது?
52.
ஒரு நபர் ஒரு ரோடில் முதல் பாதி தொலைவு 4m ஐ 1ms-1 திசை வேகத்திலும் மற்ற பாதி தொலைவு 3m ஐ 0.71ms-1 திசை வேகத்துடன் பயணிக்கிறார். நபரின் சராசரி திசைவேகம் யாது?
53.
தொழில் நுட்பவியல் என்பது யாது? இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
54.
மனிதரொருவர் 2kg நிறையுடைய நீரினை துடுப்பு சக்கரத்தைக் கொண்டு கலக்குவதன் மூலம் 30 kJ வேலையைச் செய்கிறார். ஏறத்தாழ 5 k cal வெப்பம் நீரிலிருந்து வெளிப்பட்டு கொள்கலனின் பரப்பு வழியே வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பக் கதிர்விச்சின் மூலம் சுழலுக்குக் கடத்தப்படுகிறது. எனில் அமைப்பின் அக ஆற்றல் மறுபாட்டைக் காண்க.
55.
2.5 × 10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25 × 10-3m தடிமனான விளக்கெண்ணெய் ஏட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3 × 10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக.
கொடுக்கப்பட்டவை:
A = 2.5 x 10-4m2,dx = 0.25 x 10-3m,
F = 2.5N and dv = 3 x 10-2ms-1
56.
ஒரு பொருளின் இயக்கத்தை தொடரச் செய்வதைவிட, முதலில் தொடங்குவது கடினம். எதனால்?
57.
கோண இயக்கத்தின் இயக்கச் சமன்பாடுகளை எழுதுக.
58.
ஒரு நியூட்டன் – வரையறு.
59.
இடமாறு தோற்ற முறையில் சந்திரனின் (Moon) விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?
60.
10 kg, 5 kg நிறையுடைய இரு புள்ளி நிறைகளின் நிலை வெக்டர்கள் முறையே \((-3\hat { i } +2\hat { j } +4\hat { k } )m,(3\hat { i } +6\hat { j } +5\hat { k } )m\) ஆகும். நிறை மையத்தின் நிலையைக் கண்டறியவும்.
61.
ஒரு பளு தூக்குபவர் 250 kg நிறையை 5000 N விசையால் 5 m உயரத்திற்கு தூக்குகிறார்.
(a) பளுதூக்குபவரால் செய்யப்பட்ட வேலை என்ன?
(b) புவியீர்ப்பு விசையால் செய்யப்பட்ட வேலை என்ன?
(c) பொருளின் மீது செய்யப்பட்ட நிகர வேலை என்ன?
62.
கலோரிமானிகள் உலோகத்தினால் செய்யப்படுகின்றன கண்ணாடியால் செய்யப்படுவதில்லை. ஏன்?
63.
ஈர்ப்பின் முடுக்கச் சமன்பாட்டிலிருந்து அறிவான யாவை?
64.
ஒரே வெப்பநிலையில் உள்ள இரு நீர் மாதிரிகளை ஒன்றுடன் ஒன்று கலக்கும்போது இறுதி வெப்பநிலை யாது?
65.
பரப்பு இழுவிசையின் பயனபபாடுகள் யாவை?
66.
\({ v }_{ rms },\overline { v } \)மற்றும் \({ v }_{ mp }\) ஒப்பிடுக.
67.
எரட்டோஸ்தனீஸ், ஹிப்பார்க்கஸ் வானவியலில் இவர்களின் பங்கு யாது? எதைக் கொண்டு கணக்கிட்டனர்?
68.
ஆவியாதலால் குளிர்வு நிகழ்வது ஏன்?
69.
பருப்பொருள்களில் திட, திரவ, வாயு நிலை தவிர வேறு நிலைகளுக்கு வாயுப்பு உள்ளதா?
70.
படத்தில் காட்டியுள்ளவாறு 70 g நிறையுள்ள ஒரு பொருள் 50cms-1 வேகத்தில் நகரும் போது மாறுபட்ட விசைக்கு உட்படுகிறது. விசை செயல்படுவது நிறுத்தப்பட்டவுடன் பொருளின் வேகம் என்ன?

71.
SI அலகு முறையில் நீளத்தை வரையறு.
72.
20 kg நிறைவுள்ள ஒரு சிறுவனை ஒரு சாய்வுத் தளம் \(\theta \)=45° யில் 10 m தொலைவு வழியாக நிலையான திசைவேகத்துடன் நகர்த்த செய்யப்படும் வேலையாது?
73.
நிலைமத் திருப்புத் திறனை காண்பதற்கு தேவையான தேற்றங்களின் அவசியம் யாது?
74.
வட்டப் பாதையில் வண்டி ஓட்டுதல் என்ற அமைப்பின் மீது செயல்படும் விசைகள் யாவை?
75.
இரண்டு கார்களும் ஒரே திசை வேகத்தில் 15 ms-1 ஒன்று கிழக்காகவும் மற்றொன்று மேற்காகவும் செல்கின்றன எனில் அவற்றின் வேகத்தைப் பற்றி விவாதி.
76.
2 x 103ms-1 வேகத்தில் இயங்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கொள்கலன் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டுள்ள்ளன. 4cm2 சுவரின் பரப்பை ஒரு வினாடிக்கு 1020 முறை இந்த ஆக்சிஜன் மூலக்கூறுகள் செங்குத்துத்தளத்துடன் 300 கோணத்தில் தாக்குகின்றன.எனில், அம்மூலக்கூறுகள் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தத்தினைக் காண்க. (ஒரு அணுவின் நிறை = 1.67 x 10-27kg)
77.
அழுத்தத்தின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?
78.
மனித உடலின் சாதாரண வெப்பநிலை 98.6oF. அதிக காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை 104oF ஆக உயர்ந்தால் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதீர்வீச்சின் அலைநீளத்தின் பருமமதிப்பைக் கணக்கிடுக. (இங்கு மனித உடலை ஒரு கரும்பொருள் எனக் கருதுக).
79.
வெப்பக் கடத்துத்திறன் வரையறு. அதன் அலகைத் தருக.
80.
மழுங்கிய கத்தியை ஒப்பிட கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம். ஏன்?
81.
வென்சுரிமானியின் தத்துவம் மற்றும் பயன்பாட்டைக் கூறுக.
82.
புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே 200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?
83.
தற்போது புவி தன் சுழற்ச்சி அச்சிலிருந்து சாய்ந்து அமையவில்லை எனில் பருவக்காலங்களில் என்ன மாறுபாடு ஏற்படும்?
84.
திறனின் SI அலகினை வரையறு.
85.
வெக்டர்களின் இணைகர விதியைக் கூறு.
86.
விளிம்பு உயர்த்தப்பட்ட பாதை என்பதன் பொருள் என்ன?
87.
தொகுபயன் விசை என்றால் என்ன?
88.
ஒளி ஆண்டு என்றால் என்ன? இதன் மதிப்பு யாது?
89.
பின்வரும் திசைவேகம்–நேரம் வரைபடங்களினால் குறிப்பிடப்படும் துகளின் இயக்க வகையினைக் காண்க.

90.
துகள் ஒன்று 5 வினாடிகளில் நிலைவெக்டர் \(\vec r_1=5\hat i+6\hat j\) லிருந்து நிலைவெக்டர் \(\vec r_2=2\hat i+3\hat j\) க்கு மாறுகிறது அத்துகளின் சராசரி திசைவேகம் என்ன?
91.
மூன்று சாய்தளங்களில் ஒரே மாதிரியான திண்மக் கோளங்கள் கீழ்நோக்கி இயங்குகிறது. சாய்தளங்கள் A, B, C ஆகியவை ஒத்த பரிமாணத்தை உடையன. A யில் உராய்வின்றியும், B இல் நழுவுதலற்ற உருளுதலும் மற்றும் C யில் நழுவி உருளுதலும் ஏற்படுகிறது. சாய்தளத்தின் அடிப்பகுதியில் இவற்றின் இயக்க ஆற்றல்கள் EA, EB, EC,இவற்றை ஒப்பிடுக.
92.
செவ்வக கட்டையானது மேசையின் மீது அமைதி நிலையில் உள்ளது. கட்டையை நகரச் செய்ய மேசையின் தளத்திலிருந்து 'h' உயரத்தில் கிடைத்தள விசை செலுத்தப்படுகிறது. மேசை கட்டையின் மீது செலுத்தும் செங்குத்து விசை N, h-ஐச் சார்ந்து இருக்குமா?
93.
20 kg நிறையுள்ள பொருள் மீது 50 N விசை படத்தில் காட்டியவாறு செயல்படுகிறது. x , y திசைகளில் பொருளின் முடுக்கங்களைக் காண்க.

94.
பாராசூட் மெதுவாகக் கீழே விழுவதன் காரணம் என்ன?
95.
20 kg நிறை கொண்ட ஒரு துப்பாக்கி குண்டு 5 kg நிறையுள்ள ஊசல் குண்டில் மோதுகிறது ஊசலின் நீரையின் மையம் 10 cm செங்குத்துத் தொலைவு உயருகிறது.துப்பாக்கி குண்டு ஊசலில் பொதிந்துவிட்டால் அதன் தொடக்க வேகத்தைக் கணக்கிடுக
96.
20 பிரிவுகள் கொண்ட நகரும் அளவுகோலைக் கொண்ட வெர்னியர் அளவியை விட 1 mm புரிக்கோலும், 100 பிரிவுகளும் கொண்ட திருகு அளவி சிறந்தது என நிரூபி
97.
ஒரு இயற்பியல் அளவு \(x={a^2b^3\over c\sqrt{d}}\) என்று கொடுக்கப்பட்டுள்ளது. a, b, c மற்றும் d ஐ அளவிடுதலில் ஏற்படும் விழுக்காட்டுப்பிழைகள் முறையே 4%, 2%, 3% மற்றும் 1% எனில் x ன் விழுக்காட்டுப் பிழையைக் காண்க.
98.
வானியல் மற்றும் ஈர்ப்பியலில் சமீபத்திய வளர்ச்சிகளை விவரி.
99.
பல்வேறு வெப்ப இயக்கவியல் நிகழ்வுகளின் வெப்பம்,வெப்பநிலை, அக ஆற்றல், அழுத்தம் எவ்வாறு இருக்கும் என அட்டவணைப்படுத்துக.
100.
வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகளைத் தருவித்து விவாதி.
101.
பருப்பொருளின் பல்வேறு நிலைகளின் நுண்ணிய புரிதல் மூலம் விளக்கப்படுவன யாவை?
102.
இரு புள்ளி நிறைகளின் நிறை மையத்தின் நிலைகளை ஆய அச்சு அமைப்பை பொருத்து காண்க.
103.
\(\\ \overrightarrow { A } =2\hat { i } -\hat { j } \) மற்றும் \(\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)எனில் பின்வருவனவற்றின் ஸ்கேலர் எண்மதிப்பு மற்றும் x அச்சு பொருத்து திசையையும் காண்.
(i) \(\overrightarrow { A } \) (ii)\(\overrightarrow {B } \) (iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \) (iv) \(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)
104.
1 நியூட்டன் -டைனாக பரிமாணங்களின் உதவியுடன் மாற்றுக:
105.
ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் விகிதத்திற்கான கோவையை வருவி
106.
ஆற்றல் மாற்றா மற்றும் ஆற்றல் மாற்றும் விசைகளை வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக.
107.
உராய்வுக் கோணம் விளக்குக.
1.
(c)
இரண்டும் சரி
2.
(b)
1.60\(\sqrt { \frac { KT }{ m } } \)
3.
(a)
வேலை
4.
(a)
ML-1T-1
5.
(b)
IZ = IX - IY
6.
(b)
குறைந்த புவி ஈர்ப்பு விசை
7.
(a)
வெப்பநிலை மாறா நிகழ்வு
8.
(a)
\(\frac { \Delta x }{ x } =\mp \left( \frac { \Delta A }{ A } -\frac { \Delta B }{ B } \right) \)
9.
(d)
(a) மற்றும் (b) இரண்டும்
10.
(c)
\(\sqrt { 3gl } \)
11.
(a)
w1>w2
12.
(b)
ரெனால்டு எண் 5100 உடன் சுழற்சியாக இருக்கு
13.
(d)
நீளும் தன்மையுடைய பொருட்கள்
14.
(b)
சுழி
15.
(a)
\(\sqrt { 2 } \) தடவைகள்
16.
(a)
சுழி
17.
(b)
25
18.
(b)
4 தடவைகள்
19.
(b)
குறையும்
20.
(a)
1:2
21.
(c)
நிலையாக இருக்கும்(மாறாது)
22.
(c)
20 w
23.
(c)
தோடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது
24.
(c)
ஒரு துகளானது ஒரு தளத்தில் ஒரு வளைவுப் பாதையில் இயங்குவது
25.
(a)
ஸ்பெக்ட்ராகிராப்
26.
(d)
\(f+2\over f\)
27.
(b)
மாறாது
28.
(b)
\({ T }_{ 1 }=\frac { { T }_{ 2 } }{ 6 } \)
29.
(a)
அக ஆற்றல் குறையும்
30.
(b)
31.
(b)
4F
32.
(b)
நிலை ஆற்றலைவிடக் குறைவு
33.
(d)
\(\frac{mg sin\theta}{cos\theta}\)
34.
(d)
தனது ஓய்வு நிலையையும், அதன் சீரான நேர்கோட்டு இயக்க நிலையையும்
35.
(a)
நேர்த்தகவல்
36.
θ மற்றும் 90-θ ஆகிய கோணங்களுக்கு நெடுக்கம் ஒன்றுபோல் இருக்கும்.
37.
\(\mathrm{V} =2 \hat{i}+t^2 \hat{j}-9 \hat{k} \)
\(\vec{a} =\frac{d v}{d t}=2 t \cdot \hat{j} \)
\(\mathrm{t} =\mathrm{t}=0.5 \mathrm{~s} \) எனில்
\(\mathrm{a} =1 \mathrm{~ms}^{-2}\)
38.
இயக்க ஆற்றல் \(\mathrm{E}_{\mathrm{k}} =\frac{P^2}{2 m} \)
\(\frac{\Delta E_k}{E_k} =\frac{2 \Delta P}{P} \)
\(\frac{\Delta P}{P} =0.1\)
இயக்க ஆற்றலின் உ யர்வு
\(\frac{\Delta E_k}{E_k} =2 \frac{\Delta P}{P} \)
\(=2 \times 0.1=0.2 \%\)
39.
விசை F = (2i + j) N
இடப்பெயர்ச்சி d =
(5i + 3j) - (3j + k)
= (5i - k) m
வேலை W = FD
= (2i + j) (5i - k)
= 10 - 0 - 0 = 10 J
40.
(c)
ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
41.
(c)
mg ஐ விட அதிகம்
42.
பிளாங்க் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு
= ஆற்றல் / அதிர்வெண்
\(=\frac{M L^2 T^{-2}}{T^{-1}} \)
\(=M L^2 T^{-2+1}=M L^2 T^{-1}\)
43.
h இன் அலகு-(h-பிளாங்க் மாறிலி)-Js
C இன் அலகு-(ஒளியின் திசைவேகம்) ms-1
G இன் அலகு-(புவி ஈர்ப்பு மாறிலி)- \( \frac{\mathrm{Nm}^2}{\mathrm{~kg}^2}\)
\(\therefore \frac{h c}{G}\) இன் அலகு \(=\frac{J s \times m s^{-1}}{N m^2 / \mathrm{kg}^2} \)
\(=\frac{(\mathrm{Nm}) s \times m \mathrm{~s}^{-1} \times \mathrm{kg}^2}{\mathrm{Nm}^2} \)
\({[J} =\mathrm{Nm}]=\mathrm{kg}^2\)
44.
\(v_0=r w \quad \therefore v_0 \propto r\)
சீரான சக்கரத்தில் பரியில் (rim) உள்ள புள்ளிக்கும் மையத்திற்கும் உள்ள தொலைவு (ஆரம்) \(=\sqrt{2} r\)
∴ அதன் வேகம் \(=\sqrt{2} \mathrm{v}_0\)
45.
\(\mathrm{m}=3 \mathrm{~kg}, \mathrm{r}=40 \times 10^{-2} \mathrm{~m}=0.4 \mathrm{~m}, \mathrm{~F}=30 \mathrm{~N}\)
உருளையின் நிலைமத்திருப்புத்திறன்
\(I=M R^2 \)
\(\mathrm{I} =3 \times\left(40 \times 10^{-2}\right)^2 \)
\(=3 \times 0.4 \times 0.4 \)
\(=0.48 \mathrm{~kg} \mathrm{~m}^2 \)
\(\mathrm{fR} =\mathrm{I} \alpha \)
\(30 \times 40 \times 10^{-2} =0.48 \alpha \)
\(\alpha=\frac{12}{0.48} =\frac{1200}{48}=25 \mathrm{rad} \mathrm{s}^{-2}\)
46.
ஆம், சார்பு திசைவேகம் சுழியாக அமைய வாய்ப்புள்ளது.
A மற்றும் B என்ற இரு பொருள்கள் ஒரே திசையில் சம திசைவேகத்தில் செல்லும்போது அவற்றின் சார்பு திசைவேகங்கள்
VAB = VA - VB = 0 மேலும்
VBA = VB - VA = 0 (இரண்டின் திசைவேகங்களும் சமம்)
இரண்டு பொருட்களும் ஒன்று மற்றொன்றைப் பொறுத்து ஓய்விலிருப்பது போன்று தோன்றும்.
47.
அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள்:
1.வாயுவை வெப்பப்படுத்தும்போது வாயு வெப்பமடைந்து பின்னர் அது பிஸ்டனைத் தள்ளுகிறது. ஏனவே வாயுவானது வளிமண்டல அழுத்தம் மற்றும் புவியீர்ப்பு விசை இவற்றின் கூடுதலுக்குச் சமமான ஓர் விசையை பிஸ்டனின் மீது செலுத்துகிறது எனில் இந்நிகழ்வு ஓர் அழுத்தம் மாறா நிகழ்வாகும்.

2.நமது வீட்டு சமையல் அறையில் நடைபெறும் பெரும்பாலான சமையல் நிகவுகள் அழுத்தம் மாறா நிகழ்வுகள் ஆகும். திறந்த பாத்திரத்தில் உணவினை சமைக்கும் போது உணவிற்கு மேலே உள்ள அழுத்தம் எப்போதும் வளிமண்டல அழுத்தத்திற்கு சமமாகும்.
48.
V\(\rho \) = 7.8 /cm3; rw = 10cm/s
\(\eta \)w = 8.5 x 10-4 pas; \(\rho \)g = 1.29/cm3
\({ \eta }_{ g }\) = 13.2 pas Vg = ?
முற்றுத் திசைவேகம் \(V=\frac { { 2r }^{ 2 }\left( \rho -{ \rho }_{ 0 } \right) g }{ a\eta } \)
\(V\infty \frac { \left( \rho -{ \rho }_{ 0 } \right) }{ \eta } \)
பந்து நீரில் விழும்போது
\({ V }_{ w }\infty \frac { \left( \rho -{ \rho }_{ 0 } \right) }{ \eta _{ w } } \)
பந்து கிளிசரினில் விழும் போது
\({ V }_{ g }\infty \frac { \left( \rho -{ \rho }_{ 0 } \right) }{ \eta _{ w } } \)
\(\frac { { V }_{ g } }{ { V }_{ w } } =\left( \frac { \rho -{ \rho }_{ g } }{ \rho -{ \rho }_{ w } } \right) \frac { { \eta }_{ w } }{ { \eta }_{ g } } \)
\(10\left( \frac { 7.8-1.2 }{ 7.8-1 } \right) \times \frac { 8.5\times { 10 }^{ -4 } }{ 13.2 } \)
= 6.25 10-4 cm/s
49.
1.நிலவில் வளிமண்டல அற்ற நிலை: நிலவின் குறைந்த ஈர்ப்புவிசையின் காரணமாக, நிலவுப் பரப்பில் உள்ள வாயுக்களின் சராசரி இருமுடி மூல வேகமானது அதன் விடுபடு வேகத்தைவிட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நிலவுப்பரப்பில் உள்ள அனைத்து வாயுக்களும் நிலவிலிருந்து வெளியேறி விடுகின்றன.
2.புவியின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் வாயுவற்ற நிலை: ஹைட்ரஜன் வாயுவின் சராசரி இருமுடி மூல வேகமானது, நைட்ரஜனைவிட மிகவும் அதிகமானது. எனவே ஹைட்ரஜன் புவியின் வளிமண்டலத்திலிருந்து எளிதாகத் தப்பிச்சென்றுவிடும்.
50.
பரப்பு விதி (Law of area):
(i) சூரியனையும் ஒரு கோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால இடைவெளியில் சம பரப்புகளை ஏற்படுத்தும்.
(ii) கோள் ஒன்று சூரியனை சுற்றி வரும்போது \(\triangle \)t என்ற சிறிய நேர அலைல் ஆரவெக்டர் ஏற்படுத்திய பரப்பு. \(\triangle \)A. நீள்வட்டத்தின் மையத்தில் சூரியன் இல்லை.
(iii) எனவே கோள் சூரியனுக்கு அருகே வேகத்திலும், சூரியனிடமிருந்து நீண்ட தொலைவில் செல்லும் போது குறைந்த திசைவேகத்திலும் செல்லும். இதன் மூலம் சமகால அளவில் சம அளவு பரப்புகளை கடந்து செல்கிறது. கோள்களின் வேகம் மாறுபடுவதை தரவுகள் மூலம் கெப்ளர் கண்டறிந்தார்.
51.
இணை அச்சு தேற்றபடி
\(I={I_0}+mx^2\)
\(={Ml^2\over 12}+M\left(l\over 2\right)^2\)
\(={Ml^2\over12}+{Ml^2\over4}=Ml^2\left[{1\over12}+{1\over 4}\right]\)
\(=Ml^2\left[1\over 3\right]\)
\(I={Ml^2\over 3}\)
52.
4 m தொலைவை பயணிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு
\({ t }_{ 1 }=\frac { \frac { d }{ 2 } }{ { v }_{ 1 } } =\frac { d }{ 2{ v }_{ 1 } } =\frac { 4 }{ 2\times 4 } =\frac { 4 }{ 2 } =2sec\)
3 m தொலைவை பயணிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு
\({ t }_{ 2 }=\frac { \frac { d }{ 2 } }{ { v }_{ 2 } } =\frac { d }{ 2{ v }_{ 2 } } =\frac { 4 }{ 2\times 0.7 } =\frac { 3 }{ 1.4 } =2.14sec\)
மொத்த கால அளவு =t1+t2
=2+2.14=4.14sec
சராசரி திசைவேகம் \(=\frac { d }{ { t }_{ 1 }+t_{ 2 } } =\frac { 2{ v }_{ 1 }{ v }_{ 2 } }{ { { v }_{ 1 }+v }_{ 2 } } =\frac { 2\times 1\times .7 }{ 1+.7 } =\frac { 1.4 }{ 1.7 } \)
=0.82ms-1
53.
1.இயற்பியலின் கோட்பாடுகளை நடைமுறையில் பயன்படுத்துவதே தொழில் நுட்பமாகும்.
2.பல்வேறு துறைகளில் பயனுள்ள பொருட்களை கண்டுபிடிக்கவும் அவற்றைத் தயாரிக்கவும் மற்றும் நடைமுறைப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் அறிவுத் திறனைப் பயன்படுத்துவதே தொழில் நுட்பவியலாகும்.
3.எனவே, நம் சமுதாயத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
4. மின்னோட்டவியல் மற்றும் காந்தவியலின் அடிப்படை விதிகளின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட கம்பியில்லா தொலைத் தொடர்பு முறை உலகத்தைச் சுருக்கி மிக நீண்ட தொலைவிற்கான மிகச்சிறந்த தொடர்பை ஏற்படுத்துகிறது.
5.விண்வெளியில் (space)நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் தொலைத் தொடர்பில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்குகின்றன.
6.நுண் எலக்ட்ரானியல் (Microlectroncs)லேசர் (Laser),கணினி (Computer),மீக்கடத்தி (Super Conductor )மற்றும் அணுக்கரு ஆற்றல் ஆகியவை மனிதனின் சிந்தனையையும், வாழ்க்கை முறையையும் முழுமையாக மாற்றியுள்ளன.
54.
அமைப்பின் மீது செய்யப்பட்ட வேலை(நீரினைக் கலக்குவதன் மூலம் மனிதரால் செய்யப்பட்ட வேலை) W=-30KJ =-30,000J
அமைப்பிலிருந்து வெப்பம் வெளிப்படுகிறது, Q = 5Kcal = 5 x 4184J = -20920J
வெப்ப இயக்கவியலின் முதல் விதியைப் பயன்படுத்தும்போது
\(\Delta \)U = Q-W
\(\Delta \)U = -20,920 J-(-30,000) J
\(\Delta \)U = -20,920 J+30,000 J = 9080 J
இங்கு, அமைப்பின் மீது செய்யப்பட்ட வேலையைவிட வெப்ப இழப்பு குறைவாக உள்ளது. எனவே அக ஆற்றல் மாறுபாடு நேர்குறியாகும். இது அமைப்பின் அக ஆற்றல் அதிகரித்தைக் காட்டுகிறது.
55.
\(F=-\eta A\frac { dv }{ dx } \)
எண் மதிப்பில், \(\eta =\frac { F }{ A } \frac { dx }{ dv } \)
\(=\frac { (2.5N) }{ \left( 2.5\times { 10 }^{ -4 }{ m }^{ 2 } \right) } \frac { \left( 0.25\times { 10 }^{ -3 }m \right) }{ \left( 3\times { 10 }^{ -2 }{ ms }^{ -1 } \right) } \)
= 0.083×103 Nm-2s
56.
ஒரு பொருள் தனது இயக்கத்தை தொடங்க வேண்டுமானால், அது நிலையியல் உராய்வை எதிர்கொள் வேண்டும். நிலையியல் உராய்வு, இயக்க உராய்வை விட அதிகம். எனவே ஒரு பொருளின் இயக்கத்தை தொடரச் செய்வதைவிட, முதலில் தொடங்குவது கடினம்.
57.
(i) \(\omega=\omega_0+\alpha t \quad \omega=\) இறுதி கோணத் திசைவேகம்
(ii) \(\theta=\omega_0 t+\frac{1}{2} \alpha t^2 \quad \omega_0=\) தொடக்க கோணத் திசைவேகம்
(iii) \(\omega^2=\omega_0^2+2 \alpha \theta \ \theta=\) கோண இடப்பெயா்ச்சி
(iv) \(\theta=\frac{\left(\omega_0+\omega\right) t}{2} \quad \alpha=\) கோண முடுக்கம்
t = காலம்
58.
1 kg நிறையுடைய பொருளின் மீது ஒரு விசை செயல்பட்டு அந்த விசையின் திசையிலேயே 1 ms-2 முடுக்கத்கை ஏற்படுத்தினால், அவ்விசையின் அளவே ஒரு நியூட்டன் எனப்படும்.
59.
புவியிலிருந்து நிலவின் தொலைவைக் கணக்கிடுதல் (இடமாறு தோற்றமுறை)
படத்தில் C என்பது புவியின் மையம். A மற்றும் B என்பது புவி மேற்பரப்பில் நோ் எதிரெதிரான பகுதிகள். வானியல் தொலைநோக்கியின் உதவியால் A மற்றும் B யிலிருந்து அருகில் உள்ள விண்மீனுக்கும் சந்திரனுக்கும் (M) இடையேயான இடமாறு தோற்றக்கோணம் முறையே θ1 மற்றும் θ2 கண்டறியப்படுகிறது. எனவே, புவியிலிருந்து நிலவின் மொத்த இடமாறு தோற்ற கோணம்
\(\angle A M B=\theta_1+\theta_2=\theta \)
\(\theta=\frac{A B}{A M} ; A M \approx M C \)
\(\theta=\frac{A B}{M C} \Rightarrow M C=\frac{A B}{\theta}\)
AB மற்றும் θ மதிப்பு அறிந்திருந்தால் புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தொலைவை (MC) கணக்கிடலாம்
60.
m1 =10 kg
m2 = 5 kg
\(\overset { \rightarrow }{ { r }_{ 1 } } =(-3\hat { i } +2\hat { j } +4\hat { k } )m\)
\(\overset { \rightarrow }{ { r }_{ 2 } } =(3\hat { i } +6\hat { j } +5\hat { k } )m\)
\(\overset { \rightarrow }{ r } =\frac { { m }_{ 1 }\overset { \rightarrow }{ { r }_{ 1 } } +{ m }_{ 2 }\overset { \rightarrow }{ { r }_{ 2 } } }{ { m }_{ 1 }+{ m }_{ 2 } } \)
∴ \(\overset { \rightarrow }{ r } =\frac { 10(-3\hat { i } +2\hat { j } +4\hat { k } )+5(3\hat { i } +6\hat { j } +5\hat { k } ) }{ 10+5 } \)
=\(\frac { -30\hat { i } +20\hat { j } +40\hat { k } +15\hat { i } +30\hat { j } +25\hat { k } }{ 15 } \)
=\(\frac { -15\hat { i } +50\hat { j } +65\hat { k } }{ 15 } \)
\(\overset { \rightarrow }{ r } =\left( \hat { -i } +\frac { 10 }{ 3 } \hat { j } +\frac { 13 }{ 3 } \hat { k } \right) m\)
\(\overset { \rightarrow }{ r } \) என்பது நிறைமையத்தின் நிலை வெக்டரைக் குறிக்கும்.
61.
(a) பளுதூக்குபவர் நிறையைத் தூக்கும்போது விசையும் இடப்பெயர்ச்சியும் ஒரே திசையில் உள்ளதால் அவற்றிற்கிடையே உள்ள கோணம் θ = 0°. எனவே பளுதூக்குபவரால் செய்யப்பட்ட வேலை
Wப.தூ = Fwhcos\(\theta\) = FWh(cos 00)
= 5000 x 5 x (1) = 25000 J = 25 kJ
(b) பளுதூக்குபவர் நிறையைத் தூக்கும்போது புவியீர்ப்புவிசை கீழ்நோக்கி செயல்படுவதால் விசையும் இடப்பெயர்ச்சியும் எதிரெதிர் திசையில் உள்ளன. எனவே அவற்றிற்கிடையே உள்ள கோணம் θ = 1800
Wஈ = Fghcos θ = mgh(cos 1800)
= 250 x 10 x 5 x (-1)
= -12500 J =- 12.5 kJ
c) பொருளின் மீது செய்யப்பட்ட நிகர வேலை (மொத்த வேலை)
Wநிகரம் = Wப.தூ + Wஈ
= 25 kJ - 12.5 KJ = + 12.5 KJ
62.
உலோகங்கள் சிறந்த வெப்பக்கடத்திகள். மேலும் குறைந்த தன்வெப்ப ஏற்புத்திறன் உடையன.
63.
(i) ஈர்ப்பின் முடுக்கமானது முடுக்கமடையும் பொருளின் நிறையைச் சார்ந்ததல்ல.
(ii) g ன் மதிப்பு புவியின் நிறையையும், ஆரத்தையும் சார்ந்துள்ளது.
(iii) புவியை நோக்கி விழும் அனைத்துப் பொருள்களும் சமமாக முடுக்கமடைகிறது.
(iv) பூமத்தியரேகைப் பகுதியில் g=9.8 ms-2
64.
ஒரே வெப்பநிலையில் உள்ள இரு நீர் மாதிரிகளை ஒன்றுடன் ஒன்று கலக்கும்போது அவற்றின் இறுதி வெப்பநிலையும் அவ்விரண்டும் மாதிரிகளின் வெப்ப நிலையே ஆகும். ஏனெனில் இவை வெப்பச் சமநிலையில் உள்ளன. எவ்வித வெப்பப்பரிமாற்றமும் நிகழவில்லை.
65.
(i) கொசுக்கள் நீரின் மேற்பரப்பில் முட்டைகளை இடுகின்றன.நீரின் பரப்பு இழுவிசையைக் குறைக்க சிறிது எண்ணெய் ஊற்றப்படுகிறது.இது நீரின் ,மேற்பரப்பிலுள்ள மீட்சிப்படலத்தை உடைத்து விடுவதால் கொசு முட்டைகள் நீரினுள் மூலகச் செய்து அழிக்கப்படுகின்றன.
(ii) பரப்பு இழுவிசையை நுட்பமாக அளவுக்கு சரி செய்து தானியங்கி வாகனங்கள் மற்றும் அலங்காரப் பொருள்களுக்கு வர்ணம் பூசப் பயன்படுகிறது.
(iii) துணிகளைத் துவைக்கும்போது வெந்நீரில் சலவைத்தூளை சேர்ப்பதால் நீரின் பரப்பு இழுவிசை குறைக்கப்பட்டு அழுக்குத்துகள்கள் எளிதில் நீக்கப்படுகின் றன.
(iv) நீர் ஒட்டாத துணிகள் தயாரிக்கும்போது நீர் ஒட்டாத பொருளானது (மெழுகு) துணியுடன் சேர்க்கப்படுகிறது. இது சேர்கோணத்தை அதிகரிக்கிறது.
66.
கொடுக்கப்பட்ட இம்மூன்று வேகங்களிலும் \({ v }_{ ms }\)பெரும மதிப்பையும் \({ v }_{ mp }\) சிறும மதிப்பையும் பெற்றிருக்கும்.
\({ v }_{ rms }>\overline { v } >{ v }_{ mp }\) விகித அடிப்படையில்
\({ v }_{ rms }:\overline { v } :{ v }_{ mp }=\sqrt 3:\sqrt {8\over \pi }:\sqrt {}2\)=1.732:1.6:1.414
67.
(i) எரட்டோஸ்தனீஸ்-புவியின் ஆரத்தைகே கண்டறிந்தார்.
(ii) ஹிப்பார்க்கஸ்-புவிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள தொலைவைக் கண்டறிந்தார்.
(iii) வடிவியல் மற்றும் முக்கோணவியல் பயன்படுத்தப்பட்டது
68.
திரவப் பரப்பிலிருந்து வேகமாக இயங்கும் மூலக்கூறுகள் தப்பியோடுவதால் ஏற்படும் நிகழ்வு ஆவியாதல் என அனுமானிக்கப்படுகிறது.
எனவே ஆவியாதல் எஞ்சியுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் குறைவாக இருக்கும்
\(\frac { 1 }{ 2 } m \overline { { v }^{ 2 } } \propto T\)
ஆதலால் மீதமுள்ள திரவத்தின் வெப்பநிலை குறைவாக இருக்கும். இதனால் ஆவியாதலால் குளிர்வு ஏற்படுகிறது.
69.
ஆம். அதீத சூழ்நிலைகளில் பிற நிலைகளை பிளாஸ்மா 1 போஸ் - ஐன்ஸ்டீன் வாயுப் பண்பு ஆகிய நிலைகளிலும் உள்ளது. குலார்க் - குளுவான் பிளாஸ்மா மற்றும் அண்டத்தில் வெப்ப பிளாசாஸ்மாவாகவும் உள்ளது.
70.
வரைபடத்தின் கீழ் உள்ள பரப்பு கணத்தாக்கத்தை தருகிறது.
கணத்தாக்கம் I= \(\Delta\)OAE இன் பரப்பு+செவ்வகம் ABDE இன் பரப்பு+ \(\Delta\)DBC இன் பரப்பு
\(I=\frac { 1 }{ 2 } \times 4\times { 10 }^{ -3 }\times 10+(8-4)\times { 10 }^{ -3 }\times 10+\frac { 1 }{ 2 } \times 10\times { 10 }^{ 2 }(1-0.8)\)
=2x10-2+4x10-2+1x10-2
=7x10-2kgms-1
ஆனால் கணத்தாக்கம் =2x பொருளின் தொடக்க உந்தம்.
2mu=7x10-2
\(u=\frac { 7\times { 10 }^{ -2 } }{ 2\times m } =\frac { 7\times { 10 }^{ -2 } }{ 2\times 70\times { 10 }^{ -3 } } =50cm{ s }^{ -1 }\)
எனவே பொருளானது எதிர்த்திசையில் திரும்பி அதன் தொடக்க வேகத்தில் இயங்கும்.
71.
நீளத்தின் அலகு மீட்டர். குறியீடு m. வெற்றிடத்தில் \(\frac { 1 }{ 299,79,2458 } \) நொடியில் ஒளியானது கடக்கும் பதியின் நீளம் 1 மீட்டர் ஆகும்.
72.
இயக்கமானது முடுக்கமடையவில்லை தளத்திற்கு இணையான தொகுபயன் விசை சுழியாக இருக்க வேண்டும்.

எனவே, F = Mg sin 45° = 0.
விசை, F = Mg sin 45°;
தொலைவு d = 10 m
செய்யப்படும் வேலை
W = Fd cos,
= (Mg sin45°)d cos0° [\(\because\) \(\theta\) = 0° so,cos 0° = 1]
= 20 \(\times\) 10 \(\times\) sin 45° \(\times\) 10 \(\times\) cos0°
\(=20\times 10\times \frac { 1 }{ \sqrt { 2 } } \times 10\times 1\)
= 1414J
செய்யப்பட்ட வேலை W = 1414 J.
73.
ஒரு பொருளின் நிலைமத் திருப்புத்திறனானது சுழலும் அச்சை சார்ந்திருப்பது மட்டுமல்லாமல் அச்சிலிருந்து சுழலும் திசையமைப்பை பொருத்தும் மாறுபடும். எனவே சுழலும் அச்சுக்களை இடப்பெயர்வு செய்து நிலைமத் திருப்புத்திறனை காண இணையச்சுத் தேற்றம் செங்குத்து அச்சுத் தேற்றம் அவசியமாகிறது.
74.
(i) புவியீர்ப்பு விசை mg
(ii) செங்குத்து விசை (N)
(iii) உராய்வு விசை F
(iv) மைய விலக்கு விசை \(\left (mv^2\over r\right)\)
75.
இரண்டு கார்களும் வெவ்வேறான திசையில் ஒரே எண்மதிப்புடைய திசைவேகத்தில் (15 ms-1) செல்கின்றன. எனவே, இரு கார்களும் வெவ்வேறு திசைவேகத்தில் செல்கின்றன எனலாம். ஆனால், திசை வேகத்தின் எண் மதிப்பு வேகம். இதற்குத் திசை இல்லை. எனவே, வெவ்வேறு திசைகளில் சென்றாலும் சமவேகத்தில் செல்கின்றன.
76.
I அணுவின் நிறை =1.67 x 10-27 kg
ஆக்சிஜன் அணுவின் நிறை =1.67 x 10-27 kg
=26.72 x 10-7 kg
உந்தம் P =mv
=26.72 x 10-7x 8 x 2 x 103
=427.5 x 10-4 kgm s-1
ஆக்சிஜன் மூலக்கூறுகள் செங்குத்துத் தளத்துடன் 30o கோணத்தில் தாக்கும்போது
= 427.5 x 10-4x cos 30o
= 427.5 x 10-4x \({\sqrt 3\over 2}\)
= 370.2 x 10-4 kgm s-1
அழுத்தம் =\({F\over A}\)
\(={370.2\times 10^{-4}\over 4\times 10^{-4}}\)
P=92.4Nm-2
77.
1. வாயு முலக்கூறு சுவரின்மீது மோதும்போது, ஒரு உந்தத்தை சுவரின் மீது செலுத்துகிறது.
2. இந்த உந்த மாற்றத்தினால் கொள்கலனின் சுவர் ஓரலகு பரப்பில் உணரும் விசை,சுவரின் மீது வாயுவால் ஏற்படும் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது.
78.
i) சாதாரண வெப்பநிலை T = 98.6°F
செல்சியஸில், C = (F - 32) ÷ 1.8
C = (98.6 - 32) ÷ 1.8
C = 37°C
கெல்வினில், K = 273 + 37 = 310 k

ii) காய்ச்சலின் வெப்பநிலை T = 104°F
செல்சியஸில் C = (F - 32) ÷ 1.8
= (104 - 32) ÷ 1.8
= 40°C
கெல்வினில், K = 40 + 273 = 313k

= 9259 × 10-9 m
λm = 9259 nm
a) \({ \lambda }_{ max }\approx \)9348 nm at 98.6oF
b) \({ \lambda }_{ max }\approx \)9258 nm at 104oF
79.
வெப்பத்தைக் கடத்தும் திறனுக்கு வெப்பக்கடத்துத்திறன் என்று பெயர்.
மாறாநிலை நிபந்தனையை ஓரலகு வெப்பநிலை வேறுபாட்டில், ஓரலகு தடிமன் கொண்ட பொருளின் வழியே ஓரலகு பரப்பிற்குச் செங்குத்தாக உள்ள திசையின் கடத்தப்படும் வெப்பத்தின் அளவே, பொருளின் வெப்பக்கடத்துத்திறன் என அழைக்கப்படுகிறது.
\(\frac { Q }{ t } =\frac { KA\triangle T }{ L } \)
இங்கு K என்பது வெப்பக்கடத்தல் எண் ஆகும்.
(இதனை கெல்வின் வெப்பநிலை K எனத் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது)
வெப்பக்கடத்துத்திறனின் SI அலகு J s-1 m -1 K-1 அல்லது Wm-1 K-1.
80.
81.
(i) வென்சுரிமானி பெர்னெளலியின் தேற்றப்படி செயல்படுகிறது.அதன்படி வரிச்சீர் ஓட்டத்தில் உள்ள அமுக்க இயலாத பாகுநிலையற்ற, ஓரலகு நிறையுள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றல் , இயக்க ஆற்றல், மற்றும் நிலையாற்றல் ஆகியவற்றின் கூட்டுத் தொகை மாறிலியாகும்.
(ii) இக்கருவியானது ஒரு குழாயின் வழியே செல்லும் அமுக்க இயலாத நிர்மம் பாயும் விதத்தை அல்லது பாயும் வேகத்தை அளவிட உதுவுகிறது.
\(V=aA\sqrt { \frac { 2\left( \triangle p \right) }{ \rho \left( { A }^{ 2 }-{ a }^{ 2 } \right) } } \)
82.
புவிப் பரப்பிற்கு மேலே உள்ள = h = 200km
gh = ? Re = 6371 km
\({ g }_{ h }=g\left[ 1-\frac { 2h }{ R } \right] \)
\({ g }_{ h }=g\left[ 1-\frac { 2\times 200 }{ 6371 } \right] =\frac { 5971 }{ 6371 } g\)
gh = 0.937g (or) gh = 0.94 g
புவி பரப்பிற்குக் கீழே ஆழம் d = 200km
gd = ? Re = 6371km
\({ g }_{ d }=g\left( 1-\frac { d }{ { R }_{ e } } \right) \)
\(g=\left( 1-\frac { 200 }{ 6371 } \right) =g\left( \frac { 6171 }{ 6371 } \right) \)
gd = 0.968g.
\(\therefore\) gd < gh
83.
பருவங்களே இருக்காது.
84.
திறனின் SI அலகு Watt ஆகும். ஒரு வினாடியில் ஒரு ஜூல் வேலை செய்யப்பட்டால் திறன் ஒரு வாட் என அழைக்கப்படுகிறது. 1W=1Js-1
85.
(1) இரு சுழி அல்லாத வெக்டர்கள் \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஆகியவற்றை ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களாக குறித்தால், அவற்றின் தொகுபயன்.
(2) இரு வெக்டர்கள் வால் பகுதி வழியே செல்லும் மூலைவிட்டத்தால் எண்மதிப்பிலும், திசையிலும் குறிக்கப்படும்.
86.
வாகனம் வளைவுச் சாலையில் செல்லும் போது மையநோக்கு விசையைத் தரும் உராய்வு விசை போதுமானதாக இல்லை எனில் வாகனம் வழுக்கி விழுந்து விடும்.இதைத் தடுக்க உராய்வு விசையை அதிகரிக்கும் பொருட்டு சாலையின் வெளிப்புற விளிம்பு உயர்த்தப்பட்டிருக்கும்.இதையே விளிம்பு உயர்த்தப்பட்ட பாதை என்கிறோம்.
87.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விசைகள் ஒரே நேரத்தில் செயல்பட்டு ஏற்படுத்தும் விளைவை தனியொரு விசை ஏற்படுத்தினால் அவ்விசை தொகுபயன் விசை எனப்படும்.
88.
1.வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் ஒளி செல்லக்கூடிய தொலைவு ஒளி ஆண்டு எனப்படும்.
2.1 ஒளி ஆண்டு = 9.467 x 1015மீ .
89.
அ) \(\vec a\) = மாறிலி,
ஆ) \(\vec v\) = மாறிலி,
இ) \(\vec a\) = மாறிலி ஆனால் முதல் வரைபடத்தில் உள்ளதை விட அதிகம்,
ஈ) \(\vec a\) = மாறி
90.
\(\overrightarrow{r_1} =5 \hat{i}+6 \hat{j} \)
\(\overrightarrow{r_2} =2 \hat{i}+3 \hat{j} \)
\(\overrightarrow{\Delta r} =\overrightarrow{r_2}-\overrightarrow{r_1}=2 \hat{i}+3 \hat{j}-5 \hat{i}-6 \hat{j} \)
\(=-3 \hat{i}-3 \hat{j} \)
\(\Delta \mathrm{t} =5 \mathrm{sec} \)
∴Δvசராசரி \(=\frac{\Delta \vec{r}}{\Delta t}=\frac{-3}{5}(\hat{i}+\hat{j})\)
91.
உராய்வின்றி உள்ள A - ன் இயக்க ஆற்றல் = \(k_A={1\over 2}m(2gh)\)
நழுவுதல்லற்ற B - ன் உருளுதலின் இயக்க ஆற்றல் = \(k_B={1\over 2}m\left( 2gh\over 1+k^2/R^2\right)\)
நழுவி உருளுதலுடன் கூடிய C - ன் இயக்க ஆற்றல் = \(k_C={1\over2}m^2gh\)
92.
1. மேசையின் மேலும் கட்டையின் செங்குத்து விசை (N)h - ஐ சார்ந்து இருக்காது.
2. ஏனெனில் கிடைத்தாலே விசை மேல்நோக்கி செங்குத்தாக ஈர்ப்பு மையத்தை நோக்கி செயல்படும்.
93.
\(\mathrm{F}_{1 \mathrm{x}} =\mathrm{F}_{\mathrm{i}} \cos 30^{\circ} \)
\(=50 \times \frac{\sqrt{3}}{2} \)
\(\mathrm{~m} =20 \mathrm{~kg} \)
\(\mathrm{a}_{\mathrm{x}} =\frac{F_{1 x}}{m} \)
\(=\frac{25 \sqrt{3}}{20}=2.165 \mathrm{~m} / \mathrm{s} \)
\(\mathrm{F}_{1 \mathrm{y}} =\mathrm{F}_1 \sin 30^{\circ} \)
\(=50 \times \frac{1}{2}=25 \)
\(\mathrm{a}_{\mathrm{y}} =\frac{F_{1 y}}{m}=\frac{25}{20}=1.25 \mathrm{~ms}^{-1}\)
94.
காற்றின் தடையின் காரணத்தினால் பாராசூட் மெதுவாகக் கீழிறங்குகிறது. கீழே விழும் பாராசூட்டின் மீது செயல்படும் விசைகள்
1. கீழ்நோக்கிய காற்றின் தடை
2. மேல்நோக்கிய ஈர்ப்பு விசை
ஈர்ப்புவிசை காற்றின் தடை விசையை விட அதிகம்.
பாராசூட் திறக்கப்பட்டவுடன் காற்றின் தடை அதிகரிக்கும். எனவே பராசூட் மெதுவாகக் கீழிறங்குகின்றது
95.
குண்டின் நிறை \(\mathrm{m} =20 \mathrm{~g} \)
\(=20 \times 10^{-3} \mathrm{~kg} \)
\(=0.02 \mathrm{~kg} \)
குண்டின் ஊசல் நிறை M = 5 kg
உயரம் h =10 cm
\(=10 \times 10^{-2}=0.1 \mathrm{~m} \)
இயக்க ஆற்றல் = நிலை ஆற்றல்
\(\frac{1}{2} m v^2 =m g h \)
\(v =\sqrt{2 g h} \)
\(\mathrm{v} =\sqrt{2 \times 9.8 \times 0.1} \)
\(=\sqrt{1.96}=1.4 \mathrm{~m} / \mathrm{s}\)
இறுதி திசைவேகம் \(\mathrm{v}=1.4 \mathrm{~m} / \mathrm{s}\)
\(\mathrm{v} =\frac{m_1 u_1+m_2 u_2}{m_1+m_2} \)
\(=\frac{0.02 u_1+5 \times 0}{(0.02+5)}=\frac{0.02}{5.02} u_1 \)
\(\mathrm{v} =1.4 \)
\(1.4 =\frac{0.02}{5.02} \mathrm{u}_1 \)
\(\mathrm{u}_1 =\frac{1.4 \times 5.02}{0.02} \)
\(=\frac{7.028}{0.02}=351.4 \mathrm{~m} / \mathrm{s}\)
தொடக்க திசைவேகம் \(=351.4 \mathrm{~m} / \mathrm{s}\)
96.
திருகு அளவியின் மீச்சிறு அளவு =\({Pitch\over No.of divisions}\)
\(={1\over 100}\)
=0.01mm
=0.001cm
வெர்னியரின் மீச்சிறு அளவு =1MSD-1VSD=1-\({19\over20}\)
\(={1\over20}\)
=0.05
=0.005cm
மீச்சிறு அளவினை ஒப்பிட திருகு அளவியே சிறந்ததாக உள்ளது.
97.
x = \(a^2b^3\over c\sqrt{d}\)
x ன் விழுக்காட்டுப்பிழை
\({Δx\over x}\times100=2{Δa\over a}\times100+3{Δb\over b}\times100+{Δc\over c}\times100+{1\over2}{Δd\over d}\times100\)
= (2 × 4%) + (3 × 2%) + (1 × 3%) + (½ × 1%)
= 8% + 6% + 3% + 0.5%
x ன் விழுக்காட்டுப்பிழை = 17.5%
98.
99.
| வ.எண் | நிகழ்வு | வெப்பம் | வெப்பநிலை மற்றும் அகஆற்றல் | அழுத்தம் | |
| 1. | வெப்ப நிறை மாறா நிகழ்வு | விரிவு | Q>0 | மாறில் | குறைகிறது |
| அழுக்கம் | Q<0 | மாறில் | அதிகரிக்கிறது | ||
| 2. | அழுத்தம் மாறா நிகழ்வு | விரிவு | Q>0 | அதிகரிக்கிறது | மாறில் |
| அழுக்கம் | Q<0 | குறைகிறது | மாறில் | ||
| 3. | பருமன் மாறா நிகழ்வு | Q>0 | அதிகரிக்கிறது | அதிகரிக்கிறது | |
| Q<0 | குறைகிறது | குறைகிறது | |||
| 4. | வெப்பப்பரிமாற்ற மில்லா நிகழ்வு | விரிவு | Q=0 | குறைகிறது | குறைகிறது |
| அழுக்கம் | Q=0 | அதிகரிக்கிறது | அதிகரிக்கிறது | ||
100.
வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகள்
பாயில் விதி:
\(PV=\frac { 2 }{ 3 } U\)
அனால் நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல், அதன் ஒவ்வொரு மூலக்கூறில் சராசரி இயக்க ஆற்றலின் (\(\in \)),N மடங்கிற்குச் சமமாகும்.
\(U=N\in \)
\(PV=\frac { 2 }{ 3 } N\in \)
மாறா வெப்பநிலையில், சராசரி இடப்பெயர்வு இயக்கஆற்றல் ஒரு மாறிலியாகும். இதிலிருந்து PV=மாறிலி என அறியலாம்.
எனவே, மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு ஒன்றின் அழுத்தம் அதன் பருமனுக்கு எதிர்த்தகவில் இருக்கும், இதுவே பாயில் விதியாகும்.
சார்லஸ் விதி: ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில், வாயு ஒன்றின் பருமன் அதன் அகஆற்றலுக்கு நேர்த்தகவில் இருக்கும் அல்லது வாயுவின் சராசரி இயக்க ஆற்றலுக்கு நேர்த்தகவில் இருக்கும். மேலும் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்
\(V\propto T\)அல்லது \(=\frac { V }{ T } \)மாறிலி
இதுவே சார்லஸ் விதியாகும்.
அவகாட்ரோ விதி:
மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சம பருமனுள்ள அனைத்து வாயுக்களும் ஒரே எண்ணிக்கையில் வாயுமூலக்கூறுகளைப் பெற்றிருக்கும். ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு வாயுக்களுக்கு, வாயுக்களின் இயக்கவியற் கொள்கையைப் பயன்படுத்தி பின்வருமாறு எழுதலாம்.
\(P=\frac { 1 }{ 3 } \frac { { N }_{ 1 } }{ V } m_{ 1 }\overline { { v }_{ 1 }^{ 2 } } =\frac { 1 }{ 3 } \frac { { N }_{ 2 } }{ V } m_{ 2 }\overline { { v }_{ 2 }^{ 2 } } \)...(1)
இங்கு\(\overline { { v }_{ 1 }^{ 2 } } \) மற்றும்\(\overline { { v }_{ 2 }^{ 2 } } \) என்பவை இரண்டு வெவ்வேறு வாயுக்களின் சராசரி இருமுடி வேகங்களாகும். மேலும்\({ N }_{ 1 }\) மற்றும் \({ N }_{ 2 }\)என்பவை அவ்விரு வாயுக்களில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையாகும்.
இவ்விரண்டு வாயுக்களிலும் உள்ள வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல். ஒரே வெப்பநிலையில் சமமதிப்பைப் பெற்றிருக்கும்.
\(=\frac { 1 }{ 2 } m_{ 1 }\overline { { v }_{ 1 }^{ 2 } } =\frac { 1 }{ 2 } m_{ 2 }\overline { { v }_{ 2 }^{ 2 } } \)..........(2)
சமன்பாடு (1)ஐ சமன்பாடு (2)ஆல் வகுக்கும்போது \({ N }_{ 1 }\)=\({ N }_{ 2 }\)எனக்கிடைக்கும்.
இதுவே அவகாட்ரோ விதியாகும்.
101.
(i)திண்மங்களில் அணுக்கள் அல்லது மூலக் கூறுகள் இறுக்கமாக பொருத்தப்பட்டுள்ளன. திண்மம் உருவாகும்போது அணுக்கள் பல்வேறு வகையான பிணைப்புகள் மூலம் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன.
(ii) அணுக்களுக்கு இடையே உள்ள இடைவினை காரணமாக அவை ஒரு குறிப்பிட்ட அணுவிடை தொலைவில் தாங்களாகவே நிலை கொண்டுள்ளன.பிணைக்கப்பட்ட நிலையில் உள்ள அணுக்களின் இந்த நிலையானது அணுக்களின் நடுநிலை எனப்படும்.

திரவங்கள்:
(i)திண்மப் பொருளுக்கு வெப்பம் போன்ற எந்த புற ஆற்றலும் அளிக்கப்படாத போது அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பின் காரணமாக அது தொடர்ந்து திண்மமாகவே இருக்கும்.வெப்பப்படுத்தினால் திண்மத்தில் வெப்ப ஆற்றலை பெற்று அவற்றின் நடுநிலைகளை பொறுத்து அதிர்வுருகின்றன.
(ii) திண்மமானது அதன் உருகு நிலைக்கு மேல் வெப்பப்படுத்தப்பட்டால் , வெப்ப ஆற்றல் அணுக்களின் பிணைப்பை முறித்துவிடும். மற்றும் இறுதியாக அணுக்கள் போதுமான ஆற்றலை பெற்று சுற்றித் திரியும்.
(iii) இந்நிலையிலும் மூலக் கூறுகளுக்கு (அல்லது அணுக்களுக்கு ) இடையே உள்ள விசைகள் முக்கியமானதாக அமைகின்றன.ஆனால் மூலக் கூறுகள் போதுமான ஆற்றலைக் கொண்டு நகர்வதால் இதன் வடிவம் இயங்கக் கூடியதாக ஆகிறது.
வாயுக்கள் :
(i) ஒரு திரவமானது மாறா அழுத்தத்தில் அதன் கொதி நிலைக்கு வெப்பபடுத்தப்பட்டலோ அல்லது ஒரு மாறா வெப்ப நிலையில் அதன் அழுத்தம் குறைக்கப்பட்டலோ அது வாயுவாக மாறும்.திரவமானது வாயுவாக மாறும் இந்தச் செயல் முறை ஆவியாதல் எனப்படும்.
(ii) வாயு மூலக் கூறுகள் மிகுவும் வலுவற்ற பிணைப்புகளை கொண்டிருக்கும் அல்லது பிணைப்புகளே இருக்காது.எனவே வாயுவானது அதன் கொள்கலனின் வடிவத்திற்கு இணங்கி விரிவடைந்து கொள்கலனை நிரப்பும் (iii) திண்மத்திலிருந்து திரவம் மற்றும் திரவத்திலிருந்து வாயுநிலைக்கு புற ஆற்றல் மாறுபாட்டுடன் நிலைமாற்றம் அடையும்.
102.
ஆய அச்சு அமைப்பை பொருத்து நிறை மையத்தின் நிலையை கீழ்கண்ட மூன்று வழிகளில் காணலாம்.
(i) நிறைகள் நேர் x - அச்சில் உள்ள போது: படத்தில் காட்டுப்பட்டுள்ளதைப்போல் m1, m2 என்ற நிறைகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட ஆதிபுள்ளியைப் பொருத்து நேர் X அச்சில் முறையே x1 மற்றும் x2 நிலைகளில் உள்ளதாக எடுத்துக்கொள்வோம். நேர் X அச்சிலேயே xCM என்ற தொலைவில் அமைந்த நிறைமையத்தின் சமன்பாடானது.
\(x_{CM}={m_1x_1+m_2x_2\over m_1+m_2}\)
(ii) நிறையில் ஏதேனும் ஒன்று ஆதியுடன் ஒன்றியுள்ளபோது: படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு நிறை ஆய அச்சின் ஆதிபுள்ளியோடு ஒன்றியுள்ள போது கணக்கீடானது இன்னும் எளிதாக்கப்படுகிறது.புள்ளி நிறை m1 ஆதிபுள்ளியோடு ஒன்றும்போது அதன் நிலை x1 சுழியாகிறது அதாவது x1 சுழியாகிறது. அதாவது x1 = 0 எனவே,
\(x_{CM}={m_1(0)+m_2x_2\over m_1+m_2}\)
இதை மேலும் எளிதாக்கும் போது
\(x_{CM}={m_2x_2\over m_1+m_2}\)
(iii) நிறைமையானது ஆதியுடன் ஒன்றியுள்ள போது:
ஆய அச்சு அமைப்பின் ஆதிபுள்ளியானது நிறை மையத்தோடு ஒன்றியுள்ளபோது xCM = 0 மேலும் படத்தில் காட்டியுள்ளபடி நிறை m1ன் நிலையானது எதிர்குறி X அச்சில் அமையும். எனவே இதன் நிலை எதிர்குறியாக இருக்கும்.
\(0={m_1(-x_i)+m_2x_2\over m_1+m_2}\)
0 = m1(-x1)+m2x2
m1x1 = m2x2
மேல் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு திருப்புத்திறன்களின் தத்துவம் எனப்படுகிறது.
103.
\(\overrightarrow { A } =2\hat { i } -\hat { j } ,\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)
(i) \(\overrightarrow { A } \)ன் எண் மதிப்பு
\(\overrightarrow { |A| } \sqrt { { (2) }^{ 2 }-{ (1) }^{ 2 } } =\sqrt { 4+1 } =\sqrt { 5 } \)
\(\overrightarrow { A } \)ன் திசை \(tan\theta =\frac { { A }_{ y } }{ { A }_{ x } } =\frac { -1 }{ 2 } \)
\(\theta ={ tan }^{ -1 }\left( \frac { -1 }{ 2 } \right) \)
(ii) \(\overrightarrow { B } \)ன் எண் மதிப்பு \(y=\sqrt { { (4) }^{ 2 }-{ (3) }^{ 2 } } \)
\(=\sqrt { 16+9 } =5\)
\(\overrightarrow { B } \)ன் திசை\(tan\theta =\frac { { B }_{ y } }{ B_{ x } } =\frac { 3 }{ 4 } \)
(iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு
\(\overrightarrow { A } +\overrightarrow { B } =2\hat { i } -\hat { j } +4\hat { i } +3\hat { j } \)
\(\overrightarrow { A } +\overrightarrow { B } =6\hat { i } -2\hat { j } \)
\(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு \(\sqrt { { (6) }^{ 2 }-{ (2) }^{ 2 } } =\sqrt { 40 } =6.3\)
\(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)ன் திசை \(tan\theta =\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
\(\theta ={ tan }^{ -1 }\left( \frac { 1 }{ 3 } \right) \)
(iv)\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு
\(\overrightarrow { A } -\overrightarrow { B } =2\hat { i } -\hat { j } -4\hat { i } -3\hat { j } \)
\(\overrightarrow { A } -\overrightarrow { B } =2\hat { i } -4\hat { j } \)
\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு \(\sqrt { { (-2) }^{ 2 }-{ (-4) }^{ 2 } } =\sqrt { 20 } \)
\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு=\(\sqrt {20}\)
\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் திசை \(tan\theta =\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
திசை \(\theta=\frac {-4}{-2}=2\)
\(\theta ={ tan }^{ -1 }( 2) \)
104.
விசைக்கான பரிமாண வாய்ப்பாடு =F=M1L1T-2
a=1, b=1, c=-2
நியூட்டன் என்பது M.K.S முறையில் உள்ளது.
M1=1 kg, L1=1 m, T1=1s
M2=1 kg, L2=1 cm, T2=1s
n1=1 நியூட்டன் (N)
n2=?
வாய்பாட்டின்படி
n2=n1\(\left[ \frac { { M }_{ 1 } }{ { M }_{ 2 } } \right] _{ a }\left[ \frac { { L }_{ 1 } }{ { L }_{ 2 } } \right] _{ b }\left[ \frac { { T }_{ 1 } }{ { T }_{ 2 } } \right] _{ c }\)
n2=1\(\left[ \frac { 1kg }{ 1g } \right] \left[ \frac { 1m }{ 1cm } \right] \left[ \frac { 1s }{ 1s } \right] ^{ -2 }\)
n2=1\(\left[ \frac { 1000g }{ 1g } \right] \left[ \frac { 100cm }{ 1cm } \right] \times 1\)
n2 = 1000 x 100 =100000
=105 டைன்கள்
∴ N=105 dynes.
105.
ஒரு பேபால் நல்லியல்பு வாயு ஒன்றின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களுக்கிடையே உள்ள தொடர்பை, மேயர் தொடர்பு CP - CV = R கொடுக்கிறது.
ஆற்றல் சமபங்கீட்டு விதியைப் பயன்படுத்தி CP - CV மதிப்பையும் மேலும் அவற்றிற்கிடையேயான விகிதம் = γ = CP - CV யையும் கணக்கிடலாம்.
(γ -வெப்பப்பரிமாற்றமில்லா அடுக்குக்குறியீடு
1. ஓரணு மூலக்கூறு:
மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் = 3/2 kT
ஒருமோல் வாயுவின் மொத்த ஆற்றல் = 3/2 kT × NA = 3/2 RT
ஒருமோல் வாயுவின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் =

•மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் தகவு γ = CP / CV

2. ஈரணு மூலக்கூறு:
தாழ்வெப்பநிலையில் உள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் = 5/2 kT
ஒரு மோல் வாயுவின் மொத்த ஆற்றல்
= 5/2 kT × NA = 5/2 RT
ஒரு மோல் வாயுவின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
CV = dU / dT = [5/2RT ] ; CV = 5/2 R

உயர் வெப்பநிலையிலுள்ள ஈரணு மூலக்கூறு ஒன்றின் அகஆற்றல் = 7/2 RT

CV மற்றும் CP இன் மதிப்பானது ஓரணு மூலக்கூறுகளை விட, ஈரணு மூலக்கூறுகளுக்கு அதிகமாக உள்ளது.
ஓரணு வாயு மூலக்கூறுகளின் வெப்பநிலையை 1°C உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தை விட ஈரணு வாயு மூலக்கூறுகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படும்.

III மூவணு மூலக்கூறுகள்:
1. நேர்க்கோட்டிலமைந்த மூவணு மூலக்கூறு :
ஒரு மோல் மூலக்கூறின் அக ஆற்றல்

2. நேர்க்கோட்டில் அமையாத மூவணு மூலக்கூறு :
ஒரு மோல் மூவணு மூலக்கூறின் அக ஆற்றல் =

வாயுக்களின் இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில், பருமன் மற்றும் அழுத்தம் மாறா தன்வெப்ப ஏற்புத்திறன்கள் வெப்பநிலையில் சார்ந்ததல்ல.
106.
ஒரு பொருளை நகர்த்தும் போது விசையினால் அல்லது விசைக்கெதிராக செய்யப்பட்ட வேலை பொருளின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளை மட்டும் சார்ந்தும், பொருளின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கிடையே சென்ற பாதையின் இயல்பைச் சாராமலும் இருப்பின்: அவ்விசை, ஆற்றல் மாற்றா விசை எனப்படும்.
எ.கா. மீட்சி சுருள்வில் விசை, நிலை மின்னியல் விசை, காந்த விசை, புவியீர்ப்பு விசை முதலியன.
ஒரு பொருளை விசையினால் அல்லது விசைக்கெதிராக நகர்த்தச் செய்யப்பட்ட வேலை தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கிடையே உள்ள பாதையைச் சார்ந்திருப்பின் அவ்விசை ஆற்றல் மாற்றும் விசை எனப்படும். இதன் பொருள் வெவ்வேறு பாதைகளில் செய்யப்பட்ட வேலையின் மதிப்பு மாறுபடும் என்பதாகும்.
எ.கா. உராய்வு விசைகள், காற்றுத்தடையால் ஏற்படும் விசை, பாகியல் விசை முதலியன.
107.
1.செங்குத்து ஏத்தி விசை மற்றும் பெரும உராய்வு விசை (fs max)ஆகிய இரண்டின் தொகுபயனுக்கும் (R) செங்குத்து எதிர்விசை (N) க்கும் இடையேயான கோணம் உராய்வுக் கோணம் எனப்படுகிறது.
2.\(R=\sqrt { ({ f }_{ s }^{ max })^{ 2 } } +N^{ 2 }\)
3.\(tan\theta=\frac{f_s^{max}}{N}\)
4.உராய்வுத் தொடர்புகளிலிருந்து fsmax=\(\mu_k N\) ஆக இருக்கும்போது பொருள் சறுக்கத் துவங்கும் அதனை கீழ்காணுமாறும் எழுதலாம்.
5.\(\frac{f_s^{max}}{N}=\mu_s\)
6.ஆகியவற்றிலிருந்து ஓய்வுநிலை உராய்விற்கான குணகம்.
7.\(\mu_s=tan\theta\)
8.ஓய்வுநிலை உராய்விற்கான குணகம் உராய்வுக் கோணத்தின் டான்ஜென்ட் (tan θ) சமமாக இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards