11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 15/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 11 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
2.
சறுக்குக் கோணத்தை கண்டறிவதற்கான சோதனையைச் சுருக்கமாக விவரி.
3.
உருளுதலின் உராய்வினைப் பற்றி சுருக்கமாக விளக்குக.
4.
மையவிலக்கு விசையைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சுருக்கமாக விளக்குக.
5.
மையநோக்கு மற்றும் மையவிலக்கு விசைகளுக்கிடையேயான ஒத்த, வேறுபட்ட கருத்துகளை விவரி.
1.
2.
சாய்தளப் பரப்பின் மீது வைக்கப்பட்டுள்ள பொருள் ஒன்றைக் கருதுக. இந்தச் சாய்தளப் பரப்பு சமதளத்துடன் ஏற்படுத்தும் கோணம் θ என்க. θ வின் சிறிய மதிப்பிற்கு சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள் நகராது.
θ வின் மதிப்பை படிப்படியாக உயர்த்தும் போது, ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு, சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள் நகரத்தொடங்கும். அதுவே சறுக்குக்கோணம் எனப்படும். இதனை அளந்து கொள்ள வேண்டும்.
சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள், கிடைத்தளப் பரப்புடன் சாய்தளம் ஏற்படுத்தும் எக்கோணத்தில் நகரத்தொடங்குகிறகேோ, அக்கோணமே, சறுக்குக்கோணம் எனப்படும்.
3.
பொருளொன்று பரப்பில் இயங்குகிறது எனில் அடிப்படையில் அப்பொருள் பரப்பில் சறுக்கிச் செல்கிறது எனப் பொருள்படும். ஆனால் சக்கரங்கள் உருளுவதன் மூலம் பரப்பில் இயங்குகின்றன.
சக்கரம் பரப்பில் இயங்கும்போது, சக்கரத்தில் எப்புள்ளி பரப்பை தொடுகிறதோ, அப்புள்ளி ஓய்வு நிலையில் இருக்கும். அதாவது தொடுபுள்ளியில் சக்கரத்திற்கும், பரப்பிற்கும் இடையே எவ்விதமான சார்பியக்கமும் இல்லை. எனவே உராய்வு விசையும் மிகக்குறைவு. அதே நேரத்தில் பொருளொன்று பரப்பின் மீது சக்கரங்கள் இன்றி செல்லும் போது, பொருளுக்கும் பரப்பிற்கும் இடையே ஒரு சார்பியக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக அநிக உராய்வு விசை ஏற்படுகிறது.
சறுக்கலற்ற உருளும் இயக்கத்தில் பரப்பினைக் தொடும்புள்ளி ஓய்வுநிலையில் இருப்பது இலட்சிய நிலையில் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை. பொருட்களின் நெகிழ்வுத் தன்மை காரணமாக தரையைத் தொடும்புள்ளி சந்றே தரையில் அழுத்தி மிகக் குறைவான உராய்வினை ஏற்படுத்துகிறது. எனவே வாகனத்தின் சக்கரத்திற்கும் சாலையின் பரப்பிற்குமிடையே உராய்வு விசை ஏற்படுகிறது. இதுவே இயக்க உராய்வாகும். இருப்பினும் இவ்வுராய்வு, இயக்க உராய்வை விட மிகவும் வலிமை குமைந்ததாகும். எனவே \(\mu_{\mathrm{s}}>\mu_{\mathrm{k}}>\mu_{\mathrm{r}}, \mu_{\mathrm{s}}\) என்பது ஓய்வுநிலை உராய்வுக் குணகம், μk என்பது இயக்கநிலை உராய்வுக் குணகம், μr என்பது உருளும் உராய்வுக் குணகம் ஆகும்.
4.
மையவிலக்கு என்பதன் பொருள் மையத்தை விட்டு வெளிநோக்கிச் செயல்படுவது என்பதாகும். சுழற்சிக் குறிப்பாயத்தைப் பொருத்து கல்லின் சுழற்சி இயக்கத்தை ஆய்வு செய்யும்போது மட்டும் மையவிலக்கு விசை கல்லின் மீது செயல்படுவதாகத் தோன்றும். இக்காரணத்தினால் தான் மையவிலக்கு விசையை ஒரு போலியான விசை என்று அழைக்கிறோம். இப்போலியான விசை எந்த மூலத்திலிருந்தும் தோன்றுவதில்லை (It has no origin) இங்கு போலி விசை தோன்றுவதற்கான காரணம், நாம் கருதும் சுழற்சி குறிப்பாயம் ஒரு நிலைமமற்ற குறிப்பாரும் என்பதாலே ஆகும்.
நிலைமக் குறிப்பாயத்தைப் பொருத்து கல்லின் சுழற்சி இயக்கத்தை ஆய்வு செய்யும்போது மையநோக்கு விசை மட்டுமே செயல்படும். இம்மையநோக்கு விசை கல் கட்டப்பட்டிருக்கும் மெல்லிய கயிற்றின் இழுவிசையால் பெறப்படுகிறது. சுழற்சி குறிப்பாயத்தைப் பொருத்து சுழற்சி இயக்கக் கணக்குகளைத் தீர்வு செய்ய வரையப்படும் தனித்த பொருளின் விசைப்படங்களில் படத்தில் காட்டியுள்ளவாறு மையவிலக்கு விசை கண்டிப்பாகக் காட்டப்பட வேண்டிம்.
மையவிலக்கு விசையின் விளைவுகள்
மையவிலக்கு விசை ஒரு போலியான விசையாக இருப்பினும் அதன் விளைவுகள் உண்மையாகும். காா் ஒன்று வளைவுப்பாதையில் திரும்பும்போது, காரின் உள்ளே அமர்ந்திருப்பவர் ஒரு வெளிப்புறவிசையை உணர்வார். அவ்விசை அவரை வெளிநோக்கித் தள்ளும். இவ்வெளிநோக்கிய விசையையும் மையவிலக்கு விசை என்றே அழைக்கலம். காரின் இருக்கைக்கும், அமர்ந்திருக்கும் நபருக்கும் இடையே உள்ள போதுமான உராய்வுவிசை இருந்தால் அவர் வெளியே தள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது.
நேர்க்கோட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் காா் ஒன்று திடீரென்று தன்பாதையிலிருந்து வளையும்போது, காரின் உள்ளே நிலையாகப் பொருத்தப்படாத பொருள், திசையில் நிலைமப் பண்பின் (Inertia of director) காரணமாக நேர்க்கோட்டுப் பாதையிலேயே தொடர்ந்து இயங்க முயற்சிக்கும்.
இவ்வியக்கத்தை நிலைமக் குறிப்பாயத்திலிருந்து பார்க்கும் போது படத்தில் காட்டியுள்ளவாறு நேர்க்கோட்டு இயக்கமாகத் தெரியும். ஆனால் சுழற்சிக் குறிப்பாயத்திலிருந்து பார்க்கும்போது இயக்கம் வெளிநோக்கிச் செல்வது போன்று தோன்றும்.
சுழலும் மேடையில் நின்று கொண்டிருக்கும் நபா் வெளிப்புற மையவிலக்கு விசையை உணர்வார். இதன் காரணமாக மேடையிலிருந்து அவா் வெளியே தள்ளப்பட வாய்ப்பு அதிகம். நின்று கொண்டிருக்கும் நபருக்கும், மேடைக்குமான உராய்வு விசை வெளிநோக்கித் தள்ளப்படும் விசையினைக் சமன் செய்ய போதுமானதல்ல.
இதனைத் தவிர்ப்பதற்காக மேடையின் வெளிப்புற விளிம்பு சற்றே மேல்நோக்கி உயர்த்தப்பட்டிருக்கும். இவ்வுயர்வு நின்று கொண்டிருக்கும் நபரின் மீது ஒரு செங்குத்து விசையைச் செலுத்தி அவா் வெளியே விழுவதைத் தடுக்கும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
5.
| மையநோக்கு விசை | மையவிளக்கு விசை |
| 1.புவியீர்ப்பு விசை,கம்பியின் இழுவிசை செங்குத்துவிசை போன்ற புறவிசைகளினால் பொருளின் மீது செலுத்தப்படும் உண்மை விசையாகும். |
இது போலியான அல்லது பொய்யான விசையாகும் இவ்விசை புவியீர்ப்பு விசை,கம்பியின் இழுவிசை செங்குத்து விசை போன்ற புறவிசைகளினால் தோன்றாது |
| 2.நிலைம மற்றும் நிலமை மற்ற குறிப்பாயங்கள் இரண்டிலும் இவ்விசை செயல்படும் |
நிலைமமற்ற சுழலும் குறிப்பாயங்களில் மட்டுமே இவ்விசை செயல்படும். |
| 3.சுழல் அச்சினை நோக்கிச் செயல்படும் வட்டப்பாதை இயக்கத்தில் வட்டத்தின் மையத்தை நோக்கி செயல்படும். | சுழல் அச்சிலிருந்து வெளிநோக்கிச் செயல்படும்.மேலும் வட்ட இயக்கத்தில் வட்டமையத்திலிருந்து ஆரத்தின் வழியே வெளிநோக்கிச் செயல்படும். |
| \(\left|F_{c p}\right|=m \omega^2 r=\frac{m v^2}{r}\) | \(\left|F_{c f}\right|=m \omega^2 r=\frac{m v^2}{r}\) |
| 4.இது ஒரு உண்மையான விசை, இதன் விளைவுகளும் உண்மையானவை | இது ஒரு போலிவிசை,ஆனால் இதன் விளைவுகள் உண்மையானவை. |
| 5.இரண்டு பொருட்களுக்கிடையேயான உறவே (interaction) மையநோக்கு விசைக்கு அடிப்படையாக அமைகிறது | ஒரு பொருளின் நிலைமத் தன்மையே (interial property) மையவிலக்கு விசைக்கு அடிப்படையாக அமைகிறது.இவ்விசை பொருட்களுக்கிடையேயான உறவால் (interaction) தோன்றாது. நிலைமக் குறிப்பாயம் ஒன்றின் இயங்கும் பொருளின் நிலைம இயக்கம் தான்,சுழற்சிக் குறிப்பாயத்தில் மையவிலக்கு விசயாகத் தோன்றுகிறது. |
| 6.நிலைமக் குறிப்பாயத்தில் தனித்த பொருளின் விசைப்படம் வரையும்போது,மையநோக்கு விசையை குறிப்பிட வேண்டும். | நிலைமக் குறிப்பாயத்தில் மையவிலக்கு விசை இல்லை.சுழலும் குறிப்பாயத்தில்,மையநோக்கு விசை மற்றும் மையவிலக்குவிசை இரண்டையும் தனித்த பொருளின் விசைப்படத்தில் குறிப்பிட வேண்டும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards