11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
11th Revision Test
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்?
1 ppm மேல்
2 ppm மேல்
3 ppm மேல்
50 ppm மேல்
2.
ஏத்திலிட்டி டை குளோரைடு ஜிங்க் தூளுடன் வினைபட்டு தருவது
மெத்தனால்
மெத்திலீன்
எத்தனால்
எத்திலீன்
3.
குழாய் வண்ணப்பிரிகை எக்கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது?
பரப்புக் கவர்ச்சி
பக்கீட்டு முறை
உறிஞ்சுதல்
பிரிகையடைதல்
4.
வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை
விரிவாக விளக்குகிறது
கணிதவியல் முறைப்படி விளக்குகிறது
இயற்பியல் முறைப்படி விளக்குகிறது
விளக்குவதில்லை
5.
0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு
2.8
8.4
5.6
16.8
6.
பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை
s>p>d>f
f>d>p>s
d>p>s>f
இவற்றுள் எதுவுமில்லை
7.
SO2 மற்றும் O2 ஆகியவற்றிலிருந்து இரண்டு மோல்கள் SO3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலி
K1,ஒரு மோல் SO3 சிதைவுற்று SO2 மற்றும் O2 ஆகியவற்றைத் தரும் வினையின் சமநிலை மாறிலி
1/K1
\({ K }_{ 1 }^{ 2 }\)
\({ \left( \frac { 1 }{ { K }_{ 1 } } \right) }^{ 1/2 }\)
\(\frac { { K }_{ 1 } }{ 2 } \)
8.
சமமோலார் NaCl மற்றும் KCl கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. NaCl கரைசலின் உறை நிலை –2oC,எனில் எதிர்பார்க்கப்படும் KCl கரைசலின் உறைநிலை மதிப்பு
–2oC
– 4oC
– 1oC
0oC
9.
பின்வருவனவற்றுள் வாயு நிலையில் உள்ள புரோமினுடன் உடனடியா க வினைபுரியும் சேர்மத்தின் வாய்பாடு
C3H6
C2H2
C4H10
C2H4
10.
பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்.
NH4Cl
NH3
NaCl
இவற்றில் ஏதுமில்லை
11.
-I விளைவினை காட்டுவது
-Cl
-Br
both (a) and (b)
-CH3
12.
ஒரு கலனில் சம எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன.பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்சிஜனின் பின்ன அளவு
3/8
1/2
1/8
1/4
13.
கார உலோக ஹேலைடுகளின் , அயனித் தன்மையின் ஏறுவரிசை
MF < MCl < MBr < MI
MI < MBr < MCl < MF
MI < MBr < MF < MCl
இவற்றில் ஏதுமில்லை
14.
50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?
3.59 g
7 g
14 g
28 g
15.
தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?
பொதுவாக அதிகரிக்கின்றது
பொதுவாக குறைகின்றது
எவ்வித மாற்றமுமில்லை
முதலில் அதிகரிக்கிறது பின்பு குறைகிறது
16.
உர்ட்ஸ் - பிட்டிங் வினையை எழுதுக.
17.
சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?
18.
ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக.
19.
சமநிலையில் உள்ள ஒரு வினையில், மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?
20.
370.28 K வெப்பநிலையில், 0.25m குளுக்கோஸ் கரைசலானது ஏறத்தாழ இரத்தத்திற்கு சமமான சவ்வூடுபரவல் அழுத்தத்தை கொண்டுள்ள து. இரத்தத்தின் சவ்வூடு பரவல் அழுத்தம் என்ன?
21.
பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
(i) BOD மற்றும் COD
(ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்
22.
முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.
23.
ஒப்பு அணு நிறை வரையறு
24.
முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?
25.
மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.
26.
அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது?
27.
0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.
28.
2% எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்க் கரைசலானது, கரைப்பானின் கொதிநிலையில், 1.004 bar அழுத்தத்தை கொண்டுள்ளது. PA 0 மதிப்பு 1.013 bar ஆக இருக்கும்போது கரைபொருளின் மோலார் நிறை என்ன?
29.
இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.
30.
அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நீ எவ்வாறு வரையறுப்பாய்?
31.
298 K வெப்பநிலையில் :2A +B → C வினையின் ΔH=400 KJ mol-1, ΔS=0.2 KJK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக
32.
சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு அது நல்லியல்பு தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50Cல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.
33.
கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?
34.
பின்வரும் சேர்கை வினைகளை எடுத்துக்காட்டுன் விளக்குக.
(i) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
(ii) கருக்கவர் பொருள் சேர்க்கை வினை
(iii) தனி உறுப்பு சேர்கை வினை
35.
மீத்தேனின் இனக்கலப்பை விவரி.
36.
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?
37.
20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.
38.
ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.
39.
மொத்த அழுத்தம் 1.00 bar மற்றும் 800Kல் 1 மோல் A2(g) மற்றும் 1 மோல் B2(g) யினை கொண்டு ஒரு மூடிய கலன் நிரப்பப்படுகிறது. சமநிலையில், கலவையிலுள்ள பகுதிப் பொருள்களின் அளவினை கணக்கிடுக. (கொடுக்கப்பட்டவை: வினையின் Kp மதிப்பு 1)
A2(g) + B2(g) ⇌ 2AB(g)
40.
300k வெப்ப நிலையில்,\(CO+(\frac{1}{2})O_2\rightarrow CO_2\) என்ற விளை தன்னிச்சையானது எனக்கட்டுக .CO2 மற்றும் CO ஆகியன உருவாவதற்கான திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றங்கள் முறையே -394.4 மற்றும் -137.2KJ mole-1
41.
கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும்
ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் (tyres) கோடையில் குளிர்காலத்தை விடகாற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும்.
42.
துகள் முடுக்கிகளைக் கொண்டு புரோட்டான்களை முடுக்குவிக்க இயலும். அத்தகைய முடுக்குவிக்கப்பட்ட 2.85 ×108 ms-1 வேகத்தில் இயங்கும் புரோட்டான் ஒன்றின் அலை நீளத்தினை (\(\overset { 0 }{ A } \)ல்) கணக்கிடுக. (புரோட்டானின் நிறை 1.673 × 10-27 Kg).
43.
ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.
1.
(b)
2 ppm மேல்
2.
(d)
எத்திலீன்
3.
(a)
பரப்புக் கவர்ச்சி
4.
(d)
விளக்குவதில்லை
5.
(a)
2.8
6.
(a)
s>p>d>f
7.
(c)
\({ \left( \frac { 1 }{ { K }_{ 1 } } \right) }^{ 1/2 }\)
8.
(a)
–2oC
9.
(a)
C3H6
10.
(a)
NH4Cl
11.
(c)
both (a) and (b)
12.
(c)
1/8
13.
(b)
MI < MBr < MCl < MF
14.
(a)
3.59 g
15.
(a)
பொதுவாக அதிகரிக்கின்றது
16.

17.
இணையும் இரண்டு அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலட்ரான் இரட்டைகள் சமமாக பங்கிடப்படுவதால் அவைகளுக்கு இடையே வேதிப் பிணைப்பு உருவாகிறது. எனவே இது சகப்பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
18.
| பண்புகள் | ஆர்த்தோ ஹைட்ரஜன் | பாரா ஹைட்ரஜன் |
|---|---|---|
| உருகுநிலை | 13.95 k | 13.83 k |
| கொதி நிலை | 20.39 k | 20.26 k |
| காந்த்த் திருப்புதிறன் | புரோட்டனின் காந்திருப்புத்திறன் போல் இராண்டு மடங்கு | பூஜ்ஜியம் |
19.
மாறாத கன அளவில், சமநிலையில் உள்ள ஒரு அமைப்பின் ஒரு மந்தவாயு சேர்க்கப்படும் போது, அக்கலனில் உள்ள வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதாவது வாயுக்களின் மொத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வினைபடு பொருட்கள் மற்றும் வினை விளை பொருட்களின் பகுதி அழுத்தங்கள் அதிகரிப்பதில்லை.
எனவே, மாறாத கன அளவில் மந்த வாயுவினை சமநிலையில் உள்ள ஒரு அமைப்பின் சேர்ப்பதால் அது சமநிலையில் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
20.
C = 0.25 M
T = 370.28 K
(π)குளுக்கோஸ் = CRT
(π) =0.25 mol L–1 × 0.082L atm K–1mol–1 × 370.28K
= 7.59 atm
21.
| (i) | BOD | COD |
| 1. | 200 சி வெப்பநிலையில் 5 நாள்கள் கால இடைவெளியில், ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிம கழிவுகளை சிதைக்க நுண்ணியிர்களால் நுகரப்படும் மொத்த ஆக்சிஜனின் மில்லிகிராம் அளவு உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD) என்றழைக்கப்படுகிறது. | குறிப்பிட்ட நீர் மாதிரியுள்ள கரிம பொருட்களை, அமில ஊடகத்தில், 2 மணிநேர கால இடைவெளியில் K2Cr2O7 போன்ற வலிமையான ஆக்ஸிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவானது வேதி ஆக்ஸிஜன் தேவை (COD) |
| (ii) | உயிருள்ள துகள் பொருள்கள் | உயிரற்ற துகள் பொருள்கள் |
| 1. | காற்றில் விரவியுள்ள பாக்டீரியா, பூஞ்சை, நுண்பூஞ்சை, பாசி போன்ற நுண்ணுயிர்களாகும். | சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலை பெற்றுள்ள திரவ மூலக்கூறுகளாகும். |
| 2. | சில பூஞ்சைகள் மனிதர்களுக்கு ஒவ்வாமையும் தாவரங்களில் நோய்களையும் உண்டாக்குகின்றன. | தூசி, மூடுபனி, கரும்புகை போன்றவை மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பவை. |
22.
1.கார உலோகங்களின் புளூரைடுகள் பின்வரும் கரைதிறன் வரிசையைக் கொண்டுள்ளன.
LiF < NaF < Kf < RbF < CsF
2.LiF ன் கரைதிறன் மிகக்குறைவு.Li+ மற்றும் F- ன் சிறிய உருவளவு காரணமாக மிகக்குறைந்த கரைத்திறனைக் கொண்டுள்ளது.
23.
ஒரு அனுவின் சராசரி அணுநிறைக்கும், ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம்.
ஒப்பு அணு நிறை (Ar) = அனுவின் சராசரி நிறை / ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறை
24.
(i) தனிமங்களின் இயற் மற்றும் வேதிப்பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன. ஒரு நேர்மின்சுமையுடைய அயனியில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது, அதன் நடுநிலை அணுவில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தபோதிலும் அவைகளின் அணுக்கரு மின்சுமை சமமாக இருக்கும்.
(ii) எனவே, நேர்மின்சுமையுடைய அயனியின் செயலுறு அணுக்கவர்ச்சி விசையானது, தொடர்புடைய நடுநிலை அணுவின் செயலுறு கவர்ச்சி விசையினை விட அதிகம்.
(iii) எனவே, தொடர்ச்சியான அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் எப்போதும் பின்வரும் ஏறுவரிசையில் அமைகின்றன.
IE1 < IE2 < IE3 ..........
25.
| மீளும் வினை | சமநிலை மாறிலி |
| முன்னோக்கு வினைக்கு \(xA+yB\rightleftharpoons lC+mD\) |
KC என்க |
| வினையை மருதிசையில் மாற்றி எழுதும்போது,\(lC+mB\rightleftharpoons xA+yB\) | \({ K }_{ C }^{ 1 }=\frac { 1 }{ { K }_{ C } } \) |
| \(\begin{matrix} A\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons B } & B\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons C } \\ C\overset { { K }_{ 3 } }{ \rightleftharpoons D } & A\overset { { K }_{ 4 } }{ \rightleftharpoons D } \end{matrix}\) எனில் |
\({ K }_{ 4 }={ K }_{ 1 }{ K }_{ 2 }K_{ 3 }\) |
26.

27.
28.
\({\Delta P\over P_A^o}={W_B\times M_A\over M_B\times W_A}\)
2 % கரைசலில் கரைபொருளின் எடை 2 கிராம், மற்றும் கரைப்பானின் எடை 98 கி.
ΔP = PA - Psolution = 1.013 - 1.004 bar = 0.009 bar
\(M_B={P_A^o\times W_B\times M_A\over \Delta P\times W_A}\)
MB = 2 x 18 x 1.013/(98 x 0.009)
= 41.3 g mol-1.
29.
இரண்டு வினைப் பொருட்கள் வினைபுரிந்து ஒரு சேர்மத்தினைத் தரும் வினைகள், இணையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:

30.
1. அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நான்கு குவாண்டம் எண்கள் அடங்கிய தொகுப்பின் மூலம் வரையறுக்க இயலும்.
2. அவையானவை
(i) முதன்மை குவாண்டம் எண்(n)
(ii) கோண உந்த குவாண்டம் எண் (l)
(iii) காந்த குவாண்டம் எண் (m)
(iv) தற்சுழற்றி குவாண்டம் எண் (s)
31.
T = 298 K
ΔH = 400 J mol−1 = 400 J mol−1
ΔS = 0.2 J K−1 mol−1
ΔG = ΔH − TΔS
if T = 2000 K
ΔG = 400 − (0.2 × 2000) = 0
if T > 2000 K
ΔG will be negative.
The reaction would be spontaneous only beyond 2000K
32.
n = 1.82 mole
V = 5.43 dm3
T = 69.5 + 273 = 342.5
P = ?
PV = nRT
\(P={nRT\over V}\)

P=9.425atm
33.
1. நீர் மற்றும் கனநீருக்கு இடையே இயற்பண்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
2. ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் இவற்றின் நிறைகளின் வேறுபாடு காரணமாக, வினைகள் வெவ்வேறு விதங்களில் நடைபெறும்.
3. D2O பங்குபெறும் வினையின் வேகம் H2O பங்குபெறும் வினையின் வேகத்தை விட குறைவு.
4. எனவே இதை பருகினால் உடல் செயலியல் நிகழ்வுகள் பாதிக்கப்படும்.
5. ஆகையால் D2O (கனநீர்) குடிப்பதற்கு உகந்ததல்ல.
34.
1. இவ்வினை உள்ளடங்கிய கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு காணப்படக்கூடிய நிறைவுறா சேர்மங்களுக்கான ஒரு தனித்துவமிக்க வினையாகும்.
2. இவ்வினைகளில் இரு மூலக்கூறுகள் இணைந்து ஒற்றை விளைபொருளைத் தருகின்றன.
3. பதிலீட்டு வினைகளைப் போலவே இவ்வினைகளையும் கருக்கவர் பொருள், எலக்ட்ரான் கவர் பொருள் மற்றும் தனிஉறுப்பு சேர்க்கை வினைகள் என வகைப்படுத்தலாம்.
4. சேர்க்கை வினையின் போது ஒரு பிணைப்பு உடைக்கப்பட்டு, இரு புதிய பிணைப்புகள் உருவாவதால் வினைக்கு உட்படும் பொருளின் இனக்கலப்பு மாற்றமடைகிறது.
5. (ஆல்கீன்களின் சேர்க்கை வினைகளி sp2\(\rightarrow\) sp3 ஆகவும், ஆல்கைன்களில் sp\(\rightarrow\) sp2 ஆகவும் மாற்றமடைகிறது.)

(i) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை:
1. ஒரு பொதுவான எலக்ட்ரான்கவர் பொருள் சேர்க்கை வினையினை பின்வருமாறு குறிப்பிடலாம்.

2. ஆல்கீன்கள் புரோமினேற்றம் அடைந்து புரோமோ ஆல்கேன்களைத் தரும் வினை இவ்வினைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

(ii) கருக்கவர் பொருள் சேர்க்கை வினை:

1. எடுத்துக்காட்டு : அசிட்டால்டிஹடுடன் HCN புரியும் சேர்க்கை வினை

(iii) தனிஉறுப்பு சேர்க்கை வினை:
1. ஒரு பொதுவான தனி உறுப்பு சேர்க்கை வினையை பின்வருமாறு குறிப்பிடலாம்.

35.
1. மீத்தேன் மூலக்கூறை எடுத்துக்காட்டாகக் கொண்டு sp3 இனக்கலப்பினை விளக்கலாம். மீத்தேன் மூலக்கூறில் மைய கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கார்பன் அணுவின் இணைதிற கூட்டு எலக்ட்ராட்ரான் அமைப்பு அடி ஆற்றல் நிலையில் [He]2s22px12py12pz0.

2.நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் நான்கு சகப்பிணைப்பினை ஏற்படுத்த கார்பனின் 2s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது 2pz ஆர்பிட்டாலுக்கு கிளர்வுறுகிறது.கார்பனின் ஒரு 2s ஆர்பிட்டாலும் மற்றும் ஒரு மூன்று 2p ஆர்பிட்டால்களும் இனக்கலப்பு அடைந்து நான்கு சமமான sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்களைத் தருகின்றன. இரு sp3 ஆர்பிட்டால்களைத் இடையேயுள்ள பிணைப்புக் கோணம் 109o 28'.
ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதல்:
நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் 1s ஆர்பிட்டால்களுடன் கார்பன் அணுவின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் நேர்கோட்டில் மேற்பொருந்தி மீத்தேன் மூலக்கூறினில் 4C-H \(\sigma \)-பிணைப்பினை படத்தில் காட்டியுள்ளவாறு ஏற்படுத்துகின்றன.

36.
1.நீண்ட கார்பன் தொடரை தெரிவு செய்யா வேண்டும்(மூலவார்த்தை) இச்சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற அனைத்துத் தொகுதிகளையும் பதிலிகளாகக் கருத வேண்டும்.
2.நீண்ட கார்பன் சங்கிலிக்கு எண் இட வேண்டும்.
3. பதிலிகளுக்கு பெயரிடுதல் (முன்னொட்டு அல்லது பின்னொட்டு)
4. பதிலிகளை ஆங்கில அக்கறை வரிசையில் வைக்க.
5.பெயரை பின்வருமாறு எழுத வேண்டும்.
முன்னொட்டு +மூலவார்த்தை +முதன்மை பின்னொட்டு +இரண்டாம் நிலை பின்னொட்டு.
37.
மொத்த அழுத்தம் = 1 atm
PN2 = \(\left( \frac { 80 }{ 100 } \right) \\ \) x அதிக அழுத்தம்
= \(\frac { 80 }{ 100 } \) x 1 atm
= 0.8 atm
PO2 = \(\left( \frac { 20 }{ 100 } \right) \) x 1
= 0.2 atm
ஹென்றி விதிப்படி,
Pகரைபொருள் = KH x கரைசலின் கரைபொருள்
PN2 = (KH)நைட்ரஜன் x கரைசலின் நைட்ரஜன் மோல் பின்னம்
⇒ \(\frac { 0.8 }{ 8.5\times { 10 }^{ 4 } } ={ X }_{ { N }_{ 2 } }\\ \)
⇒ \({ X }_{ { N }_{ 2 } }\\ \) = 9.4 x 10-6
இதைப்போலவே
\({ X }_{ { O }_{ 2 } }=\frac { 0.2 }{ 4.6\times { 10 }^{ 4 } } \)
= 4.3 x 10-6
38.
(i) ஒரு தனித்த தனிமத்தின் (அதவாது வேறெந்த தனிமத்துடனும் பிணைத்துக்காத நிலையில்) ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
எடுத்துக்காட்டு: H2, C12, Na, S8 ஆகியவற்றில் காணப்படும் அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
(ii) ஓரணுவினைக் கொண்ட அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை என்பது அந்த அயனியின் மீதுள்ள நிகர் மின்சுமைக்குச் சமம்.
எடுத்துக்காட்டு:
Na+ அயனியில் உள்ள சோடியத்தின் ஆக்சிஜனேற்ற எண் +1 ஆகும்.
Cl- அயனியில் உள்ள குளோரின் ஆக்சிஜனேற்ற எண் -1
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து உள்ள அனைத்து அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்யமாகும். அயனிகளைப் பொறுத்தவரையில் இக் கூடுதல் மதிப்பு அயனியின் மீதுள்ள நிகர மின்சுமைச் சமம்.
எடுத்துக்காட்டு:
H2SO4 ல் , (2 X H -ன் ஆக்சிஜனேற்ற எண்) +(S- ஆக்சிஜனேற்ற எண்) +(4x ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்)=0
\({ SO }_{ 4 }^{ 2- }\)ல் (1 X S-ன் ஆக்சிஜனேற்ற எண்)+(4 X O-ன் ஆக்சிஜனேற்ற எண்) =-2
(iv) உலோக ஹைட்ரைடுகளைத் தவிர பிற அனைத்துச் சேர்மங்களிலும் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1, உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
ஹைட்ரஜன் குளோரைடில் (HCl), ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1
சோடியம் ஹைட்ரைடில் (NaH) ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் -1
(V) அனைத்துச் சேர்மங்களிலும் புளூரினானது -1 ஆக்சிஜனேற்ற நிலையினைக் கொண்டுள்ளது.
(Vi) பெரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜன் -2 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது. பெராக்சைடுகள், சூப்பர் ஆக்சைடுகள், புளூரினின் சேர்மங்கள் ஆகியன இதற்கு விதிவிலக்காக அமைகின்றன.
எடுத்துக்காட்டுகள்: ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்
நீரில் (H2O) -2 [2 (+ 1)+ x = 0; x = -2]
ஹைட்ரஜன் பெராக்ஸைடில் (H2O2)
H2O2
2 (+ 1) + 2x = 0;
⇒2x =-2;
⇒x =-1
KO2 போன்ற சூப்பர் ஆக்சைடுகளில் -\(\frac {1}{2}\)+1 + 2x = 0·,
2X =-1; X=--\(\frac {1}{2}\)
ஆக்சிஜனின் டைபுளூரைடில் (OF2) + 2.
x + 2 (-1) = 0; x = + 2
(vii) அனைத்துச் சேர்மங்களிலும், கார உலோகங்கள் +1 ஆக்சிஜனேற்ற நிலையினையும், காரமண் உலோகங்கள் +2 ஆக்சிஜனேற்ற நிலையினையும்,பெற்றுள்ளன.
39.
A2(g) + B2(g) ⇌ 2AB(g)
| A2 | B2 | AB | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கை |
1 | 1 | - |
| பிரிகை அடை ந்த மோல்களின் எண்ணிக்கை |
x | x | - |
| சமநிலையில் உள்ள மோல்களின் எண்ணிக்கை |
1-x | 1-x | 2x |
மொத்த மோல்களின் எண்ணிக்கை
=1 – x + 1 – x + 2x
= 2
Kp=\(\frac { ({ P }_{ AB })^{ 2 } }{ ({ P }_{ A_{ 2 } })({ P }_{ B_{ 2 } }) } =\frac { \left( \frac { 2x }{ 2 } \times P \right) ^{ 2 } }{ \left( \frac { (1-x) }{ 2 } \times P \right) \left( \frac { 1-x }{ 2 } \times P \right) } \)
Kp=\(\frac { 4x^{ 2 } }{ (1-x)^{ 2 } } \)
கொடுக்கப்பட்டவை Kp=1; \(\frac { 4x^{ 2 } }{ (1-x)^{ 2 } } \)=1
⇒ 4x2=(1-x)2
⇒ 4x2=1+x2-2x
3x2+2x-1=0
x=\(\frac { -2\pm \sqrt { 4-4\times 3\times -1 } }{ 2(3) } \)
x=\(\frac { -2\pm \sqrt { 4+12 } }{ 6 } \)
=\(\frac { -2\pm \sqrt { 16 } }{ 6 } \)
=\(\frac { -2+4 }{ 6 } ;\frac { -2-4 }{ 6 } \)
=\(\frac { 2 }{ 6 } ;\frac { -6 }{ 6 } \)
x=0.33; -1(not possible)
∴ [A2]eq =1-x=1-0.33=0.67
[B2]eq=1-x=1-0.33=0.67
[AB]eq=2x=2 x 0.33=0.66
40.
\(CO+(\frac{1}{2})O_2\rightarrow CO_2\)
\(\triangle G^0\)வினை =\(\sum G^0_f\)வினைவினை பொருட்கள் -\(\sum G^0_f\)வினைபடு பொருட்கள்
\(\triangle G^0\)வினை =\([G^0_CO2]-[G^0_{CO}+\frac{1}{2}G^0_{O2}]\)
\(\triangle G^0\)வினை =-394.4+[137.2+0]
\(\triangle G^0\)வினை =-257.2 KJ mol-1
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் \(\triangle G^0\)வினை மதிப்பு எதிர்க்குறியை பெறுகிறது, எனவே வினை தன்னிச்சையாக நிகழும்.
41.
42.
கொடுக்கப்பட்டுள்ளவை
v = 2.85 × 108 ms–1
mp = 1.673 × 10–27 Kg
\(\lambda =\frac {h}{mv}\)
\(=\frac{6.626\times10^{-34}kgm^2s^{-1}}{1.673\times10^{-27}kg\times2.85\times10^{8}ms^{-1}}\)
\(\lambda=1.389\times10^{-15} \Rightarrow \lambda=1.389\times10^{-5} \overset{0}{A}\)
\([\because 1\overset{0}{A}=10^{-10}m]\)
43.
1. ஹைட்ரஜனின் ஐசோடோப்பு ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கனநீரைத் தருகிறது.
(B)
2D2 + O2 \(\rightarrow\) 2D2 O
2. டியூட்டிரியம் ஆனது புரப்பீனுடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு புரோப்பேன் டியூட்ரைடைத் தருகிறது.
(A) (C) (D)
CH3CH = CH2 \(\overset { { D }_{ 2 } }{ \longrightarrow } \) CH3 - CHD - CH2D
(C) (D)
முடிவு:
| குறியீடு | பெயர் | வாய்பாடு |
|---|---|---|
| A | டியூட்டிரியம் | D2 |
| B | கனநீர் | D2O |
| C | புரப்பீன் | CH3CH = CH2 |
| D | புரோப்பேன் டியூட்ரைட் | CH3 - CHD - CH2D |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards