11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
2.
உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
அச்சுப்பொறி
சுட்டி
வரைவி
படவீழ்த்தி
3.
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
4.
தற்காலிக நினைவகம் எது?
ROM
PROM
RAM
EPROM
5.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்த சுற்றுகள்
நுண்செயலிகள்
6.
முதல்,இரண்டாம், மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
7.
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
8.
மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
9.
முதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.
10.
மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?
11.
தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
12.
கணிப்பொறி என்றால் என்ன?
13.
ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
14.
ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
15.
இரண்டாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
16.
கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
17.
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
18.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
19.
கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
20.
மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.
21.
ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.
1.
(a)
வெப்ப அச்சுப்பொறி
2.
(a)
அச்சுப்பொறி
3.
(a)
விசைப்பலகை
4.
(a)
ROM
5.
(a)
வெற்றிடக்குழுல்
6.
| முதல் தலைமுறை | ENIAC, EDVAC, UNIVAC 1 |
|---|---|
| இரண்டாம் தலைமுறை | IBM 1401,IBM 1620,UNIVAC 1108 |
| மூன்றாம் தலைமுறை | 1MB 360 series, Honey well 6000 series. |
7.
1. சிறியது மற்றும் வேகமானது.
2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது .
3. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின .
8.
1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது .
2. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
3. உயர்நிலை மொழி பயன்படுத்தப்பட்டது .
9.
1. அளவில் பெரியது.
2. அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
3. அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும்.
4. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது .
10.
மையச்செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
1. கட்டுப்பாட்டகம் (CU- Control Unit).
2. கணித ஏரணச் செயலகம் (ALU- Arithmetic and Logic Unit)
3. நினைவகம் (MU-Memory Unit) ஆகும்.
11.
| தரவு | தகவல் |
|---|---|
| 1. பல்வேறு வகையிலும் திரட்டப்படும் அடிப்படைச் செய்தித் துணுக்கு தரவு எனப்படும். இது தொடர்பு கொள்வதற்கும் , விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது. | முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும் . |
| 2. அர்த்தமற்றவை . | அர்த்தமுள்ளவை |
| எ.கா : 16, அருண் , 'c' | எ.கா : அருண் வயது 16 |
12.
கணிப்பொறி என்பது கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று,அதிவேகமாகச் செயல்பட்டு,விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
13.
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு.
2.கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல்.
4. இயற்கை மொழிச் செயலாக்கம்.
5. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல்.
14.
1. இணைச் செயலாக்கம்
2. மீ-கடத்தி
3.கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது .
4. நிழற்பட்டங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
5.செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு அறிமுகம்.
6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் .
15.
1.முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
2. குறைந்த வெப்பத்தை உருவாக்கியது .
3. துளையிட்ட அட்டை உள்ளிட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
4. முதல் இயக்க அமைப்பான தொகுப்பு செயலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது .
5.இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது .
16.
1. 1837ம் ஆண்டு "அனலடிக்கல் இன்ஜின்" என்ற கருவியை வடிவமைத்த சார்லஸ் பாபேஜ், "கணிப்பொறியின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
2. "அனலடிக்கல் இன்ஜின்" - கணித ஏரணச் செயலகத்தையும், அடிப்படை கட்டுப்பாட்டு அமைவுகளையும். உள்ளிணைந்த நினைவகத்தையும் உள்ளடக்கியது.
3. இவரின் இந்த "அனலடிக்கல் இன்ஜின்" முதல் பொதுப்பயன் கணிப்பொறிகளை வடிவமைக்க அடிப்படையாக அமைந்ததால் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
17.
(i) உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
(ii) உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
18.
கணிப்பொறிகள் பயன்பத்தப்படும் பல்வேறு துறைகளில் சில:
1. கல்வி மற்றும் ஆராய்ச்சி
2. சுற்றுலா
3. வானிலை முன்னறிவிப்பு
4. சமூக வலைதளம்
5. மின் வணிகம் (e-commerce)
6. இரயில்,வானுர்தி மற்றும் திரைப்படம் முன்பதிவு
7. பொழுதுபோக்கு
19.
கணிப்பொறியின் தன்மைகள்
வேகம்: அதிவேக கணக்கீட்டுத்திறன் கொண்டது.
துல்லியம்: வேலையைத் துல்லியமாக செய்து முடிக்கும் திறன் கொண்டது.
தளரா ஊக்கம்: மனிதர்களைப் போல் ஒரே வேலையயைச் செய்யும் போது தளர்வடைவதில்லை.
பல்வகைச் செயலாக்கத்திறன்: பல்வேறு வகையிலான பணிகளைச் செய்யும் திறன் பெற்றவை. எ.கா : இரயில் முன்பதிவு, வங்கிச் சேவை , வானிலை முன்னறிவிப்பு போன்றவை .
சேமிப்புத்திறன்: மிக அதிக அளவிலானத் தரவுகளைச் சேமிக்கும் திறன் பெற்றவை.
20.
| சுட்டியின் வகைகள் | இயங்கும் முறை | உருவாக்கம்/அறிமுகம் |
|---|---|---|
| இயந்திரவியல் சுட்டி (Mechanical ) ![]() |
ஒரு சிறிய கடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொறுத்தப்பட்டிருக்கும் . அது அந்தச் சுட்டியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும் பொது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிக்ஞைகளாக மாற்றப்பட்டுக் கணிப்பொறிக்கு அனுப்பப் படுகிறது . |
டெலிபன்கன், ஜெர்மானிய நிறுவனம் 02/10/1968 (Telefunken, Company) German |
| ஒளியியல் சுட்டி (Optical ) ![]() |
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration ) அளவிடப்படும். சுட்டி நகர்வத்தைத் தீர்மானிக்கப் பந்துக்குப் பதிலாக ஒளிப் பயன்படுத்தப்படுகிறது ஒளியியல் சுட்டியில் மூன்று பொத்தான்கள் உள்ளன. ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது |
1980-ல் ரிச்ர்ட்டு லயன் (Richard Lyon ), ஸ்டீவ் கிரீஸ் (Steve Kirsch). |
| லேசர் சுட்டி (Laser ) ![]() |
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration ) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்த உணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
--- |
21.

உள்ளீட்டகம் :
உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது .எ.கா : விசைப்பலகை,சுட்டிப் போன்றவை.
மையச் செயலகம்:
1. மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும். இது தரவை உள்ளீடாகப் பெற்று கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
2. மையச்செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
i. கட்டுப்பாட்டகம்
ii. கணித ஏரணச் செயலகம்
iii. நினைவகம்.
(CU-Control Unit), கணித ஏரணச் செயலகம் (ALU- Arithmetic and Logic Unit ) மற்றும் (MU-Memory Unit ) நினைவகம் ஆகும்.
கணித ஏரணச் செயலகம் :
மையச்செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம். பல கணிப்பீட்டு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் மற்றும் சுருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது .
கட்டுப்பாட்டகம் :
மையச்செயலகம்-நினைவகம் மற்றும் உள்ளீடு /வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
வெளியீட்டகம்:
பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும்.
எ .கா: திரையகம்,அச்சுப்பொறி.
நினைவகம்:
தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.எ.கா: RAM தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம்நிலை நினைவகம் பயன்படுகிறது.
எ .கா : வன்வட்டு, CD-ROM.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards