11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
உயிருலகம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
விலங்குகளை கண்டு உணரவும், கற்கவும் பயன்படுவது.
விலங்கியல் பூங்கா
அருங்காட்சியகம்
கடல் பூங்கா
சரணாலயம்
2.
கீழ்க்கண்டவற்றுள் இது விலங்குகளுக்கான வகைப்பாட்டுக் கல்விக்கான கருவியாகும்.
ஹெர்பேரியம்
அருங்காட்சியகம்
டி.என்.ஏ கலப்பு ஆக்கம்
டி.என்.ஏ வரிக்குறியீடு
3.
முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.
தொகுதி
வரிசை
துணை சிற்றினம்
டாட்டோனைமி
4.
கீழ்க்கண்ட இனவிலங்கு கார்னிவோரா வரிசையைச் சார்ந்தது.
தவளை
மீன்
பறவைகள்
பூனை
5.
தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின் ஒவ்வொரு அலகு _______ ஆகும்.
டாக்சான்
வகை
சிற்றினம்
ஸ்ட்ரெயின்
6.
7.
உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இனப்பெருக்கம்
வளர்ச்சி
வளர்சிதை மாற்றம்
இடப்பெயர்ச்சி
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
8.
டேக்ஸா என்றால் என்ன?
9.
உயிரினத்தின் முக்கிய பண்புகள் கூறு.
10.
பல்லுயிர்தன்மை என்றால் என்ன?
11.
வரையறு, சூழ்நிலை மண்டலம்.
12.
கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது?
13.
வகைப்பாட்டுக் கல்விக்கான கருவிகள் எவை?
14.
வகைப்பாட்டின் அடிப்படை தேவைகள் எவை?
15.
நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?
16.
மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?
17.
முப்பெயரிடும் முறை என்பது யாது?
18.
இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?
19.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
20.
மொனிராவின் சிறப்புப் பண்புகளை எழுதுக.
21.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
1.
(b)
அருங்காட்சியகம்
2.
(b)
அருங்காட்சியகம்
3.
(c)
துணை சிற்றினம்
4.
(d)
பூனை
5.
(a)
டாக்சான்
6.
(b)
7.
(e)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
8.
வகைப்படுத்தலில் உள்ள உயிரினக் குழுக்களை குறிக்கும் அறிவியல் சொல் டேக்ஸா எனப்படும். (டாக்ஸான் - ஓரினம் எ.கா. ஊர்வன, பாலூட்டிகள்)
9.
1. செல்களான உடலமைப்பு, 2. உணவூட்டம், 3. சுவாசம், 4. வளர்சிதை மாற்றம், 5. வளர்ச்சி, 6. உணர்வுகளுக்கு எதிர் வினைப் புரிதல், 7. இடப்பெயர்ச்சி, 8. இனப்பெருக்கம், 9. கழிவு நீக்கம், 10. தகவமைதல், 11. உடல் சமநிலைப் பேணுதல்.
10.
பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் வாழ்வது பல்லுயிர்தன்மை எனப்படும்.
11.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்க்காரணிகளுக்கும் தாது உப்புகள், தட்பவெப்ப நிலை, மண், நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் குறிப்பது சூழ்நிலை மண்டலம் எனப்படும்.
12.
இயற்கையில் இனப்பெருக்கப் பண்புகளில் இரு வேறு சிற்றினங்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே அவ்வாறு இனப்பெருக்கத்தடை உண்டு.
ஆனால் சில வேளைகளில் நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத் தன்மையுடைய சேய்கள் உருவாகிறது.
அதனால் தான் கோவேறு கழுதை மலட்டுத் தன்மையுடையதாக உள்ளது.
13.
1. அருங்காட்சியகம்: பதப்படுத்தி வைக்கப்பட்ட தாவர, விலங்குகளின் தொகுப்பு உயிரியல் அருங்காட்சியகம் எனப்படும். இது கண்டு உணரவும், கற்கவும் பயன்படுகிறது. மரபற்றுப் போன மற்றும் உயிருடன் உள்ள விலங்குகளின் மாதிரிகள் வழியாக அவ்வுயிரிகளைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகின்றது.
2. விலங்கியல் பூங்கா: மனித மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வைத்திருத்தல் விலங்கியல் பூங்காக்கள் எனப்படும். விலங்குகளின் உணவு முறைகளையும் நடத்தை முறைகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன.
3. கடல் பூங்கா: இங்குப் பாதுகாப்பான சூழலில் கடல் வாழ் உயிரிகள் வைக்கப்பட்டுள்ளன.
4. அச்சிடப்பட்ட வகைப்பாட்டு கருவிகள்: அடையாள அட்டைகள், விளக்கங்கள், கள வழிகாட்டிகள் மற்றும் விளக்கக் குறிப்பேடுகள் ஆகிய இவ்வகையில் அடங்கும்.
5. மூலக்கூறு அளவிலான வகைப்பாட்டு கருவிகள்: புதிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, பாரம்பரிய வகைப்பாட்டுக் கருவியிலிருந்து மூலக்கூறு அளவிலான வகைப்பாட்டுக் கருவிகளை உருவாக்க உதவியுள்ளன. அதிகத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை இம்முறைகளின் சிறப்பம்சங்களாகும்.
6. சிற்றினங்களைக் கண்டறியும் தானியங்கி கருவிகள்: இம்முறை கணினி சார்ந்த கருவிகள் உள்ளடக்கியதாகும்.
7. புதிய வகைப்பாட்டியல் அடிப்படையிலான கருவிகள்: செல் நுண்ணுறுப்புகளின் மூலக்கூறு அமைப்புகளை மின்னணு நுண்ணோக்கி வழி படத்தின் மூலம் அறிதல்.
8. நடத்தையியலின் அடிப்படையிலான கருவிகள்: உயிரிகளின் நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துதல் ஆகும். எ.கா: பறவைகளின் ஒலி, உயிரொளி உமிழ்தல் போன்றவை.
9. மின்னியல் சார்ந்த வகைப்பாட்டு கருவிகள்: இலண்டனில் உள்ள இயற்கை அருங்காட்சியகத்தால் வடிவமைக்கப்பட்ட INOTAXA எனும் மின்னியல் சார்ந்த மூலத்தில் சிற்றினங்களின் கணினி சார்ந்த படங்களும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
14.
1. நெருங்கிய தொடர்புடைய இனங்களைக் கண்டறிந்து வேறுபடுத்துதல்.
2. சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்.
3. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளுதல்.
4. பல்வேறுபட்ட தொகுப்புகளுக்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் வகையில் மரபுத் தொகுதி தொடர்பு மரத்தை உருவாக்குதல்.
5. உயிரினங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுதல்.
15.
1. புதிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, பாரம்பரிய வகைப்பாட்டுக் கருவியிலிருந்து மூலக்கூறு அளவிலான வகைபாட்டுக் கருவிகளை உருவாக்க உதவியுள்ளன. அதிகத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை இம்முறைகளின் சிறப்பம்சங்களாகும். கீழ்கண்ட முறைகள் வகைப்பாட்டியலில் பயன்படுத்துகின்றன.
2. ஒரு உயிரியின் டி.என்.ஏ வில் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை வைத்துக் கொண்டு அவ்வுயிரினம் குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்ததா என்று அறிய டி.என்.ஏ வரிக்குறியீடு (DNA barcoding) தொழில் நுட்பம் உதவுகிறது.
3. ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை, டி.என்.ஏ வரிசை அமைப்பு மூலம் கண்டறிய, டி.என்.ஏ கலப்பு ஆக்கம் (DNA hybridization) எனும் தொழில் நுட்பம் உதவுகிறது.
4. டி.என்.ஏ வில் உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிடுவதன் மூலம், உயிரியை அடையாளம் காண, டி.என்.ஏ கைரேகை தொழில் நுட்பம் (DNA Finger printing) உதவுகிறது.
5. ஒத்தமைவு டி.என்.ஏ மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை, டி.என்.ஏ மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம்முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வு (Restriction Fragment Length polymorphisms analysis) என்று பெயர்.
6. ஒற்றை ஜீனையோ அல்லது ஜீனின் பகுதியையோ பாலிமரஸ் சங்கிலி வினையை (PCR) பயன்படுத்தி, பெருக்கி பின் அதனை வகைபாட்டுக் கருவியாக பயன்படுத்தலாம்.
16.
நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத்தன்மையுடைய சேய்கள் உருவாகின்றன.
எ.கா.
| வ.எண் | ஆண் | பெண் | சேய்(மலடு) |
|---|---|---|---|
| 1. | குதிரை | கழுதை | ஹின்னி |
| 2. | கழுதை | குதிரை | கோவேறுக் கழுதை |
| 3. | சிங்கம் | புலி | லைகர் |
| 4. | புலி | சிங்கம் | டைகான் |
17.
பேரினப்பெயர், சிற்றினப் பெயர் மற்றும் துணை சிற்றினப் பெயர் என மூன்று பெயர்களை இணைத்து ஒரு உயிரினத்திற்குப் பெயரிடுதல் முப்பெயரிடும் முறை எனப்படும்.
18.
1. உயிரினங்களை அடையாளம் கண்டு, விளக்கி, பெயரிட்டு, வரிசைப்படுத்தி பாதுகாத்து ஆவணப்படுத்துவது.
2. சிற்றினங்களின் பரிணாம வரலாறு, சூழ்நிலை தொடர்பு, சூழ்நிலை தகவமைப்புகள் மற்றும் சிற்றினங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை ஆய்வு செய்வது.
19.
லெகூம் வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில்
1.அஸட்டோபாக்டர் 2.ரைசோபியம் போன்ற பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.இவைகள் வளிமண்டல N2 ஐ மண்ணில் நிலைநிறுத்துவதால் உழவர்கள், பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் லெகூம் வகை தாவரங்களை பயிரிடுகின்றனர்.
20.
1.செல்லின் தன்மை-தொல்லுட்கரு உயிரிகள் (Prokaryotic)
2.உடல் அமைப்பு -ஒரு செல் உயிரினங்கள்
3.செல்சுவர்-செல்சுவர் உண்டு (பெப்டிடோ கிளைக்கான்,மியு கோபெப்டைட்களால்)ஆனது
4.உணவூட்ட முறை - தற்சார்பு ஊட்ட முறை (ஒளிச்சார்பு , வேதிச்சார்பு)சார்பூட்ட ஊட்ட முறை (ஒட்டுண்ணிகள் , சாறுண்ணிகள்)
5.இடப்பெயர்ச்சி அடையும் திறன் - இடப்பெயர்ச்சி அடையும் திறன் உடையவை அல்லது அற்றவை
6.எடுத்துக்காட்டு - ஆரிக்கிபாக்டீரியா,யூபாக்டீரியா,சயனோபாக்டீரியா,ஆக்டினோமை சீட்கள் ,மைக்கோபிளாஸ்மா.
21.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards