11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்?
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
வாஸ்கோடாகமா
அக்பர்
2.
பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?
கொற்கை
சாலியூர்
காயல்பட்டினம்
காவிரிப் பூம்பட்டினம்
3.
அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது
கெளடில்யர்
சாணக்கியர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
4.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
5.
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
6.
வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?
7.
ஆலம்பறை பற்றி கூறுக
8.
ஜானகர் என்பவர் யார்?
9.
அல்லங்காடி என்றால் என்ன?
10.
நாளங்காடி என்றால் என்ன?
11.
பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
12.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?
13.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
14.
பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் யாவை?
15.
பண்டைய தமிழ்நாட்டின் வர்த்தக வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன?
16.
மருவுர்ப்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் விளக்குக
17.
வணிகம் பொருள் தருக
18.
பண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை? விவரி?
19.
பண்டையத் தமிழ்நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பைக் பற்றி விளக்குக
20.
வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக
1.
(a)
அலாவுதீன் கில்ஜி
2.
(d)
காவிரிப் பூம்பட்டினம்
3.
(a)
கெளடில்யர்
4.
(a)
போக்குவரத்து
5.
(a)
அங்காடி
6.
புறநானூறு மற்றும் திருக்குறள்
7.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தெற்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முக்கியத்துவம்: இது வர்த்தகத்திற்குரிய ஒரு வளமான இடமாக இருந்தது.
8.
தமிழர்களுடன் வர்த்தகம் செய்த அரேபியர்கள் ஜானகர் என்று அழைக்கப்பட்டனர்.
9.
இரவில் வியாபாரம் நடைபெறுவதை அல்லங்காடி என அழைக்கப்படுகிறது.
10.
பகலில் வியாபாரம் நடைபெறுவதை நாளங்காடி என அழைக்கப்படுகிறது.
11.
ஒரு பொருள் மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையைப் பண்டமாற்று முறை எனலாம்.
12.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்துப் பண்டமாற்று முறையிலிருந்து நாணயமுறை, அஞ்சல் வழி வணிகம், வாடகைக் கடன் கொள்முதல் முறை, தவணை விற்பனை முறை போன்ற பன்முகத் தன்மையில் உருமாறி வளர்ந்துள்ளது.
13.
பல பொருள்கள் விற்குமிடம் அங்காடி என அழைக்கப்பட்டுள்ளது.
பகலில் நடப்பதை நாளங்காடி எனவும்
இரவில் நடப்பதை அல்லங்காடி எனவும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் மதுரை ஒரு இரு பெரு நியாமத் எனப்படும் தூங்காநகரம் எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது இடைவெளியின்றி 24 மணி நேரமும் வியாபாரம் நடந்ததாகக் கூறுகிறார்.
14.
பாண்டியர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் கொற்கை, சாலியூர், காயல்பட்டினம், மருங்காவூர்பட்டினம், குமரி ஆகிய இடங்கள் ஆகும்.
15.
சங்க காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே அடர்ந்த காட்டுப் பகுதியில் சாலைகள் அமைத்து தரப்பட்டன. பெருவழி எனப்படும் தரை வழி நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
16.
மருவூர்பாக்கம்:
(i) பூம்புகார் போன்ற பெரிய நகரங்கள் மருவூர்பாக்கம் (உள்நாட்டு நகரம்) என அழைக்கப்பட்டன. உணவுப் பொருள்கள் மற்றும் இதரபொருள்கள் வியாபாரம் செய்யக் கூடிய இடங்களில், அங்காடிகளையும் பெரும் வியாபாரிகளையும் கொண்டிருந்தன.
(ii) எ.கா. : தொண்டி, கொற்கை, பூம்புகார், முசிறி ஆகும்.
பட்டினப்பாக்கம்:
(i) பட்டினப்பாக்கம் என்பது கடலோர நகரம் ஆகும்.
(ii) எ.கா. முத்துக்கள், பவளங்கள், மீன் பிடிப்பதிலும், உப்பு உற்பத்தியிலும் இடம் பெற்றுள்ளன.
17.
பண்டங்கள் மற்றும் பணிகள் பரிமாற்றம் செய்யும் ஓர் ஒழுங்கு முறை அமைப்பு வணிகம் என்றழைக்கப்படுகிறது.
18.
(i) இருவருடைய தேவைகள் உடன்பாடில்லாமல் இருத்தல்.
(ii) பொதுவான மதிப்பீட்டு அளவு இல்லாமை, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையில் நேரடித் தொடர்பின்மை.
(iii) உபரி இருப்பு வைக்க இயலாத நிலை: இருவருடைய தேவைகள் உடன்பாடில்லாமல் இருத்தல். இருவரில் முதலாவருடைய உபரி பொருட்கள் இரண்டாமவருக்குத் தேவையாகவும் இரண்டாமவருடைய உபரி பொருட்கள் முதலாமவருக்கு தேவையாகும் இருக்க வேண்டும். இல்லையெனில் பண்டமாற்றம் நிகழாது.
(iv) பொதுவான மதிப்பீட்டு அளவு இல்லாமை: ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி மதிப்பு உண்டு மதிப்பீட்டில் யாதொரு மதிப்பும் பின்பற்றப்படுவதில்லை. விலை மதிப்பிட்டின்மைக் காரணமாக பொருட்கள் மதிப்பீட்டு ஒப்புடையில் தடைகள் உள்ளன.
(v) உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையில் நேரடித் தொடர்பின்மை: விற்போரும் வாங்குவோரும் எப்பொழுதும் நேரடித் தொடர்புகொள்ள வாய்ப்பு ஏற்படுவதில்லை. இம்முறையில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியது அவசியம்.
(vi) உபரி இருப்பு வைக்க இயலாத நிலை: இம்முறையில் பொருட்கள் தேவைக்கு அதிகமாக கையிருப்பு இல்லையெனில் வணிகம் நடைபெற வழி ஏற்படாது.
19.
(i) ரோமாபுரி மற்றும் கிரேக்க வர்த்தகர்கள் பழங்காலத் தமிழ்நாட்டுக்கு வந்து பண்டைய சோழ, சேர, பாண்டிய மன்னர்களைச் சந்தித்து வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
(ii) சீன சோங் வம்சத்தினர் சோழர்களுடன் வலுவான வர்த்தக உறவு கொண்டிருந்தனர். இந்தோனேசியா மற்றும் மலேசியாவை ஆண்டு கொண்டிருந்த ஸ்ரீ விஜய நகர சாம்ராஜ்ஜியத்தை, சோழர்கள் கைப்பற்றி, சீனாவுடன் கடலோர வணிகத்தைத் தொடர்ந்தனர்.
(iii) இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சீனத்தின் யுவான் சுவாங் என்பவர் கண்டறிந்து தனது தேசத்திற்கு எடுத்துரைத்துள்ளார். 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ததன் காரணமாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் பரவலாக விரிவடைந்தது.
(iv) வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து நன்னம்பிக்கை முனை வழியாக கி.பி. 1496 - இல் இந்தியாவுக்கு வரும்போது அனைத்துப்புதிய கடல் வழிகளையும் கண்டுபிடித்ததால் நாகரிக உலகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. மேலும் போர்த்து கீசியர்களின் இந்திய வருகை பிற ஐரோப்பிய சமூகங்களின் வருகைக்கு வழிவகுத்தது. இவ்வாறாக இந்தியாவின் கடலோர வர்த்தகம் ஐரோப்பியர்கள் மீது ஏகபோக உரிமை கொண்டதாக மாறியது.
(v) ஒரு கட்டத்தில் 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் உலகளாவிய வர்த்தக பங்கு 55-விழுக்காடாக இருந்தது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உலகளாவிய வர்த்தக பங்கு 2 விழுக்காடாக தற்போது குறைந்து விட்ட நிலையில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் பல அரசர்களை பல்வேறு பகுதிகளில் வீழ்த்தினர்.
(vi) ஐரோப்பிய வர்த்தகத்தின் விளைவாக 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் துணி மற்றும் கப்பல் கட்டுதல் பாரதத்தின் புகழ் பெற்றது. ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்திய பிராந்தியங்களில் இளவரசர்களின் கட்டளைகளை அகற்றினர். இதனால் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய பொருட்களின் விலை குறைந்தது. குறிப்பாக இந்திய ஜவுளிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பாரம்பரிய பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தார்கள். 1600 தொடக்கம் முதல் 19-ஆம் நூற்றாண்டின் முற்தொடக்கம் முதல் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கிடையில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆசியா முழுவதும் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.
20.
(i) ஆள்சார் தடை
(ii) இடத்தடை
(iii) காலத்தடை
(iv) இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்க தடை
(v) நட்ட இடர்பாட்டு தடை
(vi) அறிசார் தடை
(vii) பண்டப் பரிமாற்றத் தடை
(viii) நிதித் தடை
(ix) பொருட்களைத் துல்லியமாக தயாரிப்பத்தில் தடை
(x) பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடி வீட்டிற்கு கொண்டு செல்லுதல்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards