11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
கணக்கியல் அறிமுகம்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________
மக்கள் தொகை கட்டுப்பாடு
நாடுகள் பெருக்கம்
இயற்கைச் சீரழிவுகள்
பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்
2.
19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்படக் காரணம் ________________
பஞ்சமும் பட்டினியும்
இயற்க்கைச் சீரழிவுகள்
அதிக அளவிலான மக்கள் தொகைப் பெருக்கம்
அரசர்களின் ஆதிக்கம்
3.
கணக்காளரின் பணி __________________
ஏடுகளைப் பராமரிப்பவர்
நிதி ஆலோசகர்
வரி மேலாளர்
மேற்கூறிய அனைத்தும்
4.
_______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது.
அடக்கவில்லைக் கணக்கியல்
நிதி ஆலோசகர்
வரி மேலாளர்
மேற்கூறிய அனைத்தும்
5.
பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.
செலவுகள்
வருவாய்
ஆதாயம்
முதலீடு
6.
நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.
கணக்கு
நடவடிக்கை
சான்றுச்சீட்டு
இடாப்பு
7.
நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.
பொறுப்பாகும்
செலவாகும்
வருமானமாகும்
கடனீந்தோர் ஆவர்
8.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
9.
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
10.
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
11.
சான்றுச்சீட்டு என்றால் என்ன?
12.
முதல் என்றால் என்ன?
13.
கணக்கு என்றால் என்ன?
14.
நடவடிக்கை என்றால் என்ன?
15.
கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக.
16.
கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?
17.
அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.
18.
கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.
19.
கணக்கியலின் பண்புகளை எழுதுக.
20.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
21.
நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.
22.
கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? (அ) முதலீட்டாளர்கள் (ஆ) அரசு
23.
புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.
24.
கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன.
1.
(d)
பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்
2.
(c)
அதிக அளவிலான மக்கள் தொகைப் பெருக்கம்
3.
(d)
மேற்கூறிய அனைத்தும்
4.
(d)
மேற்கூறிய அனைத்தும்
5.
(a)
செலவுகள்
6.
(c)
சான்றுச்சீட்டு
7.
(a)
பொறுப்பாகும்
8.
(b)
பணியாளர்
9.
(d)
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
10.
(b)
காரியதரிசிகளின் கணக்கியல்
11.
1) ஒரு வணிக நடவடிக்கைக்கு ஆதாரமான எழுத்து வடிவிலான அல்லது அச்சிடப்பட்ட ஆவணம் சான்றுச் சீட்டு ஆகும்.
(2) எடுத்துக்காட்டுகள்:
ரொக்க ரசீது, இடாப்பு, வங்கிச் செலுத்துச் சீட்டு.
12.
உரிமையாளரால் வணகித்தில் முதலீடு செய்த தொகை முதலீடு எனப்படும்.
இத்தொகை இலாபம் ஈட்டும் பொழுதும், கூடுதல் முதலீடு செய்யும் பொழுதும் அதிகரிக்கும் மாறாக நட்டம் ஏற்படும் பொழுதும் எடுப்பு செய்யும் பொழுதும் இத்தொகை குறையும்.
13.
ஒரு வியாபார அமைப்பிற்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பே கணக்கு எனப்படும். ஒரு நபர், சொத்து, செலவு மற்றும் வருவாய் ஆகியவற்றிக்கு தனித்தனியாக கணக்குகள் துவக்கப்படும்.
கணக்குகள் மூன்று வகைப்படும்.
1. ஆள்கார் கணக்குகள்,
2. சொத்துக் கணக்குகள்
3. பெயரளவுக் கணக்குகள்.
14.
இரு நபர்களுக்கிடையே அல்லது இருகணக்குகளுக்கு இடையே நடைபெறும் பணம், பொருள், பணி, மாற்றத்தை விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயலும் நடவடிக்கை எனப்படும்.
15.
பொதுவான பயன்பாட்டிற்காக கணக்கியலில் கீழ்கண்ட மூன்று அடிப்படைகள் உள்ளன.
அ. ரொக்க அடிப்படை
ஆ. நிகழ்வு அடிப்படை அல்லது வணிக அடிப்படை
இ. கலப்பு அல்லது கலப்பின் அடிப்படை.
16.
கணக்கியலின் அடிப்படை நோக்கமே நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள தனிநபர் மற்றும் குழுவிற்கு கணக்கியல் தகவல்களை பயன்படும்படி அளிப்பதாகும்.
அ. அகப் பயனீட்டாளர்கள்:
உரிமையாளர்
நிர்வாகம்
பணியாளர்கள்
ஆ. புறப் பயனீட்டாளர்கள்:
கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்
முதலீட்டாளர்கள்
வாடிக்கையாளர்கள்
வரி அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள்.
அரசு
ஆராய்ச்சியாளர்கள்.
பொதுமக்கள்.
17.
அகப் பயனீட்டாளர்கள்:
அகப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் வணிக நிறுவனத்தின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் ஆவார்கள்.
(i) உரிமையாளர்கள்:
வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் மூலதனத்தொகையை அளிப்பவர்களே உரிமையாளர்கள் எனப்படுகின்றனர்.
(ii) நிர்வாகம்:
(1) பெரும்பாலான முடிவுகளை நிர்வாகம் எடுப்பதற்கு கணக்கியலின் விவரங்கள் அடிப்படையாக இருக்கின்றன.
(2) வணிகச் செயல்பாடுகளின் திட்டமிடுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு நிர்வாகத்திற்கு பல முக்கியமான நிதிசார்ந்தத் தகவல்கள் தேவைப்படுகின்றன.
(3) நிதி நிலை கணக்கியலில் தயாரிக்கப்படும் நிதியியல் அறிக்கைகள் மற்றும் பிற அறிக்கைகள் நிர்வாகத்திற்க்கான தகவல்களை அளிக்கின்றன.
(iii) பணியாளர்கள்:
பணியாளர்கள் தங்களது ஊதியம், பணியாற்றும் சூழ்நிலைகள், ஓய்வு பலன்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறன், வணிகத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அறிய ஆர்வமாக இருப்பார்கள்.
18.
கணக்கியல் சுழலின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) நடவடிக்கைகளை இனம் கண்டு குறிப்பேட்டில் பதிவு செய்தல்:
(1) கணக்கியலின் முதல் படிநிலையானது வணிகத்தின் நிதி நடவடிக்கைகளை அடையாளம் காண்பதாகும்.
(2) அனைத்து பணமதிப்பிலான நடவடிக்கைகள் தோற்றப்பதிவேடுகளில் (குறிப்பேடு) பதிவு செய்யப்படுகிறது.
(ii) எடுத்தெழுதுதல் மற்றும் இருப்புக் கட்டுதல்:
(1) பதிவுகளைக் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு மாற்றுவது எடுத்தெழுதுதல் எனப்படும்.
(2) பதிவுகள் பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தப்பட்டு, பேரேட்டில் ஒவ்வொரு கணக்கிலும் எடுத்தெழுதப்படுகின்றன.
(iii) இருப்பாய்வு தயாரித்தல்:
(1) பேரேட்டு இருப்புகளின் பட்டியல் அதாவது இருப்பாய்வு தயாரித்தல், அடுத்த படிநிலையாகும்.
(2) இருப்பாய்வின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.
(iv) வியாபாரக் கணக்கு தயாரித்தல்:
(1) குறிப்பிட்ட கணக்காண்டிற்குறிய வியாபாரக் கணக்கு தயாரிப்பதே கணக்கியல் சுழலின் அடுத்த படிநிலையாகும்.
(2) அனைத்து நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருவாய்கள் வியாபாரக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன.
(v) இலாப நட்டக் கணக்கு தயாரித்தல்:
(1) குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயார் செய்வது கணக்கியல் சுழலின் அடுத்த படிநிலையாகும்.
(2) மொத்த இலாபத்துடன் அல்லது மொத்த நட்டத்துடன் அனைத்து மறைமுக வருவாய்கள் மற்றும் மறைமுகச் செலவுகள் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன.
(vi) இருப்பு நிலைக்குறிப்பு தயாரித்தல்:
(1) கணக்கியல் சுழலில் இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்வது இறுதி படிநிலையாகும்.
(2) இருப்புநிலைக்குறிப்பு, சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இருப்புகளைக் காட்டும் ஒரு அறிக்கை.
19.
(i) கணக்கியல் ஒரு கலை. ஒரு நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப, கணக்கியல் முறை மற்றும் கொள்கைகளை வடிவமைக்கவும், கணக்கியல் நடைமுறைகளை முடிவு செய்யவும், கணக்காளரின் திறமையும், சிறப்புத் தேர்ச்சியும் தேவைப்படுகிறது.
(ii) வணிகத்தின் நடவடிக்கைகள் அல்லது நிகழ்வுகள் பண மதிப்பில் பதியப்படுகின்றன.
(iii) வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல், வகைப்படுத்துதல், சுருக்கமுணர்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் முடிவுகளை உய்த்துணர்தல் போன்றவைகளை உள்ளடக்கியது கணக்கியல் செய்ல்பாடுகள்.
(iv) கணக்கியல் தகவல்களில் ஆர்வமுள்ள பயனீட்டாளர்களுக்கு, பகுப்பாய்வின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும்.
20.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
வணிக நிறுவனத்தின் நிதி நிலையை அறிதல்.
பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத் தன்மையை அறிதல்.
21.
கணக்காளர் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பல்வேறு பணிகளில் பங்களிக்கிறார்.
ஏடுகளை பராமரிப்பவர்:
கணக்காளர் நிதிசார்ந்த நடவடிக்கைகளை முறையாக பதிவு செய்து, நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்கிறார்.
நிர்வாகத்திற்குத் தகவல்களைத் தருபவர்:
முடிவுகளை எடுக்கவும் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் தேவையான நிதிச் சார்ந்த தகவல்களை நிர்வாகத்திற்கு அளித்து உதவுகிறார்.
வணிகச் சொத்துக்களின் காப்பாளர்:
கணக்காளர் சொத்துக்களுக்கான பதிவேடுகளைப் பராமரிப்பதன் மூலம், நிர்வாகம் அந்தச் சொத்துக்களைப் பாதுகாத்து கட்டுப்படுத்த முடிகிறது.
நிதி ஆலோசகர்:
கணக்காளர் நிதிச் சார்ந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து முதலீட்டுக்கான வாய்ப்புகள், மூலதன திட்டப்பட்டியல், செலவினைக் குறைப்பதற்கான உக்திகள், விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்றவை குறித்து வணிக மேலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
வரி மேலாளர்:
கணக்காளர், குறித்த காலத்தில் வருமான வரி விவரம் தயாரிப்பு செய்தல், தாக்கல் செய்தல் முதலியவற்றை உறுதி செய்கிறார். மேலும் வரி மேலாண்மை, வரிச்சுமையை குறைத்தல் வரி விலக்கு பெறுதல் போன்றவற்றில் ஆலோசனை வழங்குகிறார்.
பொது தொடர்பு அலுவலர்:
கணக்காளர், தேவைப்படும் பயனீட்டாளர்களுக்கு கணக்கியல் பகுப்பாய்வு செய்யத் தேவைப்படும் விவரங்களை வழங்குகிறார்.
22.
அ. முதலீட்டாளர்கள்:
ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர். அழர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர் ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்.
ஆ. அரசு:
அரசாங்கம் வணிக நிறுவனங்களின் செயல் திறனை அறிந்து கொண்டு வணிகம் மற்றும் தொழில்துறைச் சார்ந்த கொள்கை முடிவுகளை உருவாக்குதல், மானியம் மற்றும் சலுகைகள் வழங்குதல் போன்றவற்றிற்க்கான முடிவுகளை எடுக்க உதவுகிறது. சில பொருட்களுக்கான விலைகளை அரசு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் உதவுகிறது.
23.
புறப் பயனீட்டாளர்கள்:
புறப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் நிறுவனத்திற்கு வெளியிலுள்ள நபர்கள். ஆனால், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்கள் பின்வருமாறு,
(i) கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள், வணிக வங்கிகள், பொது வைப்புநிதி வைத்திருப்பவர்கள் மற்றும் கடனீட்டு பத்திரத்தார்கள் இந்த பிரிவில் அடங்குவர்.
(ii) முதலீட்டாளர்கள்:
(1) ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர்.
(2) அவர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர்ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர்.
(iii) வாடிக்கையாளர்கள்:
(1) வணிக நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள் மற்றும் சேவைகளை, வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவற்றின் விவரங்கள் மற்றும் விலைகள் பற்றி அறிய விருப்பம் கொண்டுள்ளனர்.
(2) அவர்களுக்கு தொடர்ந்து பொருட்களும், சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதற்காக நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் இலாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றை அறிய ஆர்வம் காட்டுவர்.
24.
அளவிடுதல்:
வணிக நடவடிக்கைகள் குறித்து முறையான ஆவணங்களை வைத்திருத்தல், பதிவு செய்தல், எடுத்தெழுதல், கடைசியாக இறுதிக் கணக்குகளை தயாரித்தல் ஆகியவையே காணக்கியலின் முதன்மையான பணியாகும்.
முன்னறிதல்:
வணிக நிறுவனங்களின் எதிர்கால செயல்திறன் மற்றும் நிதிநிலை பற்றி கணக்கியலின் பல்வேறு கருவிகளின் மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடிகிறது.
ஒப்பிடுதல்:
கணக்கியல், நிகழ்ந்த செயல்திறனுடன். திட்டமிட்ட செய்ல்திறனை ஒப்பிட உதவுகிறது. மேலும், இது கணக்கியல் கொள்கைகளுடனும் ஒப்பிட உதவுகிறது. மேலும், இது கணக்கியல் கொள்கைகளுடனும் ஒப்பிட உதவுகிறது.
முடிவெடுத்தல்:
திட்டமிடுதல், செயல்திறன் மதிப்பீடு, கட்டுப்பட்டு ஆகிய மேலாண்மை பணிகளுக்கான தகவல்களை நிர்வாகத்திற்கு கணக்கியல் வழங்குகிறது. இதன் பயனாக, பொருட்களின் அடக்கவிலை, விற்பனை விலை மற்றும் நிறுவன செயல்திறன் போன்றவை பற்றி எளிதாக முடிவெடுக்க முடிகின்றது.
கட்டுப்பாடு:
கணக்கியல் ஒரு கட்டுப்பாட்டு கருவியாக இருப்பதால், கையாண்ட பல்வேறு வழிமுறைகள் குறித்த பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, கருத்து தெரிவிக்க முடிகிறது. மேலும், வணிக கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்யும் கருவியாக இது பயன்படுகிறது.
அரசுக்கு உதவிபுரிதல்:
வரிவிதிப்பு, மானியம் வழங்குதல் போன்ற பல காரணங்களுக்காக அரசு வணிகத்தின் நிதிசார்ந்த முழுமையான தகவல்கள் தேவைப்படுகின்றன. வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தகவல்கள் தேவைப்படுகின்றன. வணிக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான அவற்றைப் பற்றிய உரிய தகவல்களைக் கணக்கியல் அரசுக்கு வழங்குகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards