11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
அலகு என்றால் என்ன?
2.
இயற்பியல் அளவின்வரையறை என்றால் என்ன?எ.கா தருக
3.
ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.
4.
ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.
5.
புவியின் விட்டத்திற்கு சமமான அடிக்கோட்டுடன் 1°55′ கோணத்தை சந்திரன் உருவாக்குகிறது எனில், புவியிலிருந்து சந்திரனின் தொலைவு என்ன?
(புவியின் ஆரம் 6.4 × 106m )
6.
தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.
7.
1.566 என்பதன் முழுமையாக்கப்பட்ட எண் ________
1.57
1.56
1.5
15.6
8.
ஒரு ஒளியாண்டு =_______
9.647x 1012m
6.764x 105m
9.467x 1012km
9.467x 1015km
9.
இதில் எது சமமானது _______
6400km & 6.4x 108cm
2x 104cm & 2x 106mm
800m & 80 x 102m
100mm & 1mm
10.
நிறையின் ஈர்ப்பு விசை _______
புவியீர்ப்பு விசை
காந்தவிசை
அணுக்கரு விசை
எதுவுமில்லை
11.
எடையை கண்டறிய உதவுவது _______
இயற்பியல் தராசு
நெம்புகோல்தரசு
வில் தராசு
எதுவுமில்லை
12.
கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?
0.007 m2
2.64 x 1024 kg
0.0006032 m2
6.3200 J
13.
பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது துல்லியத்தன்மை 0.01 m எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை_______.
351%
1%
0.28%
0.035%
14.
அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்பபு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை_______.
4%
5%
6%
7%
15.
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.
8%
2%
4%
6%
16.
அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.
Kg2
m3
s-1
m
17.
பரிமாணத்தில் ஒருபடித்தான நெறிமுறை பற்றி விவரி.
18.
முக்கிய எண்ணுருக்கள் -வரையறு.
19.
SI அலகு முறையின் சிறப்பியல்புகளைக் கூறு.
20.
நுட்பம் மற்றும் துல்லியத்தன்மை – வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக
21.
இடமாறு தோற்ற முறையில் சந்திரனின் (Moon) விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?
22.
இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:
23.
C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க]
24.
பல்வேறு அளவிடும் முறைகள் பற்றி விவரி
1.
அளவு ஒன்றை அளந்தறிய, நாம் எப்பொழுதும் அதனை ஒரு படித்தர அளவுடன் ஒப்பிடுகிறோம். இந்தப் படித்தர அளவே அலகு ஆகும்.
2.
1.அளவிடப்படக்கூடியதும், அதன் மூலம் இயற்பியல்விதிகளை விவரிக்கத்தக்கதுமான அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படுகின்றன.
2.எடுத்துக்காட்டு நீளம்,நிறை,காலம், விசை ஆற்றல் மற்றும் பல.
3.
தனிப் பிழை = ΔT=Tm-t
ΔT1 = 2.62 - 2.63 = -0.01s
ΔT2 = 2.62 - 2.56 = +0.06s
ΔT3 = 2.62 - 2.42 = +0.20s
ΔT4 = 2.62 - 2.71 = -0.09s
ΔT5 = 2.62 - 2.80 = -0.18s
4.
தொலைவு d = 6.3 × 1010 m
நேரம் t = 7 நிமிடம் = 7 × 60 s.
துடிப்பின் திசைவேகம் v = ?
துடிப்பின் திசைவேகம்
\(v={2d\over t}={2\times6.3\times10^{10}\over 7\times60}=3\times10^8ms^{-1}\)
5.
கோணம் θ = 1° 55′= 115′
= (115 × 60)" × (4.85 × 10-6) rad
= 3.34 × 10-2 rad
(1"= 4.85 × 10-6 rad)
புவியின் ஆரம் = 64 × 106 m
புவியிலிருந்து சந்திரனின் தொலைவு x = ?

படத்திலிருந்து பூமியின் விட்டம் AB அதாவது
2x = 2 × 6.4 × 106m
b = 6.4 × 106m
\(x ={b \over \theta }={2\times 6.4\times 10^ 6\over 3.34\times 10^ {-2}}\)
x = 3.83 x 108m
6.
கோணம் θ = 60˚
மரத்திற்கும் புள்ளிக்கும் இடையேயான தொலைவு (x) = 50 m
மரத்தின் உயரம் (h) = ?
முக்கோண முறைப்படி \(\tan\theta ={h \over x }\)
h = x tan θ
h = 50 × tan 60°
= 50 × 1.732
∴ மரத்தின் உயரம் h = 86.6 m
7.
(a)
1.57
8.
(c)
9.467x 1012km
9.
(a)
6400km & 6.4x 108cm
10.
(a)
புவியீர்ப்பு விசை
11.
(c)
வில் தராசு
12.
6.3200 J-ன் முக்கிய எண்ணுருக்கள் = 5
13.
\(\Delta l=0.01 \quad l=3.5 \%\)
சதவீதப் பிழை
\(=\frac{\Delta l}{l} \times 100 \)
\(=\frac{0.01}{3.51} \times 100 \)
\(=0.00284 \times 100 \)
\(=0.284=0.28 \%\)
14.
\(\mathrm{T} =2 \pi \sqrt{\frac{l}{g}} \)
\(\therefore g =4 \pi^2 \frac{l}{T^2} \)
\(\frac{d g}{g} =\frac{d l}{l}-\frac{2 d T}{T} \)
\(\frac{d g}{g} \% =\left(\frac{d l}{l}\right) \%-2\left(\frac{d T}{T}\right) \% \)
\(=1 \%-2 \times(-3 \%) \)
= 1 + 6 = 7 %
15.
ஆரத்தின் பிழை = 2 %
\(\Delta r=\frac{2}{100}=0.02\)
கோளத்தின் பருமன்
\(\mathrm{V} =\frac{4}{3} \pi r^3 \)
\(\frac{d V}{V} =\frac{4}{3} \pi \times 3 r^2 d r \)
\(=3 d r=3 \times(2 \%) \)
\(\frac{d V}{V} =6 \%\)
16.
h இன் அலகு-(h-பிளாங்க் மாறிலி)-Js
C இன் அலகு-(ஒளியின் திசைவேகம்) ms-1
G இன் அலகு-(புவி ஈர்ப்பு மாறிலி)- \( \frac{\mathrm{Nm}^2}{\mathrm{~kg}^2}\)
\(\therefore \frac{h c}{G}\) இன் அலகு \(=\frac{J s \times m s^{-1}}{N m^2 / \mathrm{kg}^2} \)
\(=\frac{(\mathrm{Nm}) s \times m \mathrm{~s}^{-1} \times \mathrm{kg}^2}{\mathrm{Nm}^2} \)
\({[J} =\mathrm{Nm}]=\mathrm{kg}^2\)
17.
பரிமாணங்களைப் பொறுத்து, இயற்பியல் அளவுகளை நான்கு வகைப்படுத்த முடியும்.
பரிமாணமுள்ளமாறிகள்
எந்த ஓர் இயற்பியல் அளவு பரிமாணத்தையும் மாறுபட்ட மதிப்புகளையும் பெற்றள்ளதோ அவை பரிமாணமுள்ள மாறிகள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: பரப்பு,கன அளவு, திசைவேகம் மற்றும் பல.
பரிமாணமற்றமாறிகள்
எந்த இயற்பியல் அளவுகள் பரிமாணம் அற்ற ஆனால் மாறுபட்ட மதிப்புகள் கொண்டுள்ளதோ அவை பரிமாணமற்ற மாறிகள் என அழைக்கப்படுகின்றன
பரிமாணமுள்ளமாறிலிகள்
எந்த இயற்பியல் அளவுகள் பரிமாணத்துடன் நிலையான மதிப்பைப் பெற்றுள்ளது. அவை பரிமாணமுள்ள மாறிலிகள் என அழைக்கப்படுகிறது. எ.கா: ஈர்ப்பியல்மாறிலி பிளாங்மாறிலி மற்றும் பல.
பரிமாணமற்ற மாறிலிகள்
ஒரு மாறிலி பரிமாணமற்று இருப்பின் அவை பரிமாணமற்ற மாறிலி எனப்படுகின்றன.
எ.கா: \(\pi,\in\)(ஆய்லர் எண்) எண்கள் மற்றும் பல.
18.
1.ஓர் அளவீட்டில் பெறப்படும் அளவுகளின் துல்லியமான மதிப்பைக் குறிப்பதற்குத் தேவைப்படும் இலக்கங்களின் சிறும எண்ணிக்கையே அதன் முக்கிய எண்ணுருக்கள் எனப்படும்.
2.தரப்பட்ட எண் மதிப்பில் மாறாநிலை கொண்ட எண்களும் அதனை தொடர்ந்து முதலில் வரும் நிலையில்லா இலக்கமும் அவ்வெண்ணின் முக்கிய எண்ணுரு ஆகும்.
3.எடுத்துக்காட்டாக,பொது ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு 6.67 x 10-11Nm2kg-2 இங்கு முதலில் உள்ள 6 மற்றும் 6 ஆகிய எண்கள் நம்பகமான நிலையான எண்கள் எண் 7 ஆனது நிலையில்லாதது. எனவே இந்த அளவிடப்பட்ட அளவு மூன்று முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது.
19.
1.இம்முறையில் ஒரு இயற்பியல் அளவிற்கு ஒரே ஒரு அலகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.அதாவது இம்முறை ஓர் பங்கீட்டு, பகுத்தறிவுக்கிசைந்த (rationa;method)முறையாகும்.
2.இம்முறையில் அனைத்தும் வழி அலகுகளும்,அடிப்படை அலகுகளில் இருந்து எளிதாக தரவிக்கப்படுகின்றன.எனவே, இது ஓர் ஓரியல் (coherent)அலகு முறையாகும்.
3.இது ஓர் மெட்ரிக் அலகு முறையாதலால் பெருக்கல் ஆகியன 10இன் மடங்குகளாக நேரடியாக தரப்படுகின்றன.
20.
ஒரு கட்டிடத்தின் வெளியில் உண்மையான வெப்பநிலை 40oC என்க. ஒரு வெப்பநிலைமானி அந்த வெப்பநிலையை 40oC என அளவிட்டால் அந்த வெப்பநிலை மானி துல்லியத்தன்மை வாய்ந்தது எனலாம். அந்த வெப்பநிலைமானியால் தொடர்ச்சியாக சரியான வெப்பநிலையை அளவிட முடிகின்றது எனில் அது நுட்பமானது எனக் கூறலாம்.
மற்றொரு எடுத்துக்காட்டினைக் கருதுவோம். ஒரு குளிா்பதனி (refrigerator)யின் வெப்பநிலையை ஒரு வெப்பநிலைமானியைக் கொண்டு அளவிடுவதாகக் கொள்வோம். அது \(10.4^{\circ} \mathrm{C}, 10.2^{\circ} \mathrm{C}, 10.3^{\circ} \mathrm{C}, 10.1^{\circ} \mathrm{C}, 10.2^{\circ} \mathrm{C}, 10.1^{\circ} \mathrm{C}, 10.1^{\circ} \mathrm{C}, 10.1^{\circ} \mathrm{C}\) ஆகிய அளவுகளைத் தருகின்றது. குளிர்பதனியின் உண்மையான வெப்பநிலை 9oC, எனில் அந்த வெப்பநிலைமானி துல்லியத்தன்மை அற்றது (உண்மையான மதிப்பிற்கு 1oC குறைவாக உள்ளது) ஆனால் அனைத்து அளவிடப்பட்ட அளவுகளும் 10oC க்கு அருகில் உள்ளதால் அந்த வெப்பநிலைமானி நுட்பமானது.
உங்களின் உண்மையான உயரம் மிகச்சரியாக 5'9'' எனக் கொள்வோம். முதலில் நீங்கள் உங்கள் உயரத்தை ஓர் அளவுகோல் மூலம் அளவிடும் போது 5'0'' என்ற மதிப்பைப் பெறுவீா்கள் என்றால், உங்களுடைய அளவீடு துல்லியத்தன்மை அற்றது. இப்போது உங்கள் உயரத்தை லேசர் அளவுகோல் (laser yardstick) மூலம் அளவிட்டால் உயரம் 5'9" என்ற மதிப்பு கிடைக்கிறது. தற்போது உங்கள் அளவீடு துல்லியத்தன்மை கொண்டது. ஒரு அளவின் உண்மையான மதிப்பைக் கோட்பாட்டு மதிப்பு என்றும் அழைக்கலாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தேவையான துல்லியத்தன்மையின் அளவு மிகவும் மாறுபடுகிறது. அளவீடுகளை மிகவும் துல்லியத்தன்மையுடன் பெறுவதும், தொகுப்பதும் மிகவும் கடினமாகும்.
எடுத்துக்காட்டாக அளவுகோல் கொண்டு உங்கள் உயரத்தை பலமுறை அளவீடு செய்யும் பொழுது உயரம் 5'0'' என தொடா்ந்து பெற்றால் எங்களது அளவீடு நுட்பமானது. வெவ்வேறு பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நுட்பத்தின் அளவு பெரிய அளவில் வேறுபாடு உடையது. சாலை மற்றும் பயன்பாட்டு கட்டுமானம் போன்ற பொறியியல் செயல்திட்டங்களுக்கான அளவீடுகள் மிகவும் நுட்பமான மில்லி மிட்டா் அல்லது அங்குலத்தில் பத்தில் ஒரு பங்கு அளவிற்குத் தேவைப்படுகிறது.
21.
புவியிலிருந்து நிலவின் தொலைவைக் கணக்கிடுதல் (இடமாறு தோற்றமுறை)
படத்தில் C என்பது புவியின் மையம். A மற்றும் B என்பது புவி மேற்பரப்பில் நோ் எதிரெதிரான பகுதிகள். வானியல் தொலைநோக்கியின் உதவியால் A மற்றும் B யிலிருந்து அருகில் உள்ள விண்மீனுக்கும் சந்திரனுக்கும் (M) இடையேயான இடமாறு தோற்றக்கோணம் முறையே θ1 மற்றும் θ2 கண்டறியப்படுகிறது. எனவே, புவியிலிருந்து நிலவின் மொத்த இடமாறு தோற்ற கோணம்
\(\angle A M B=\theta_1+\theta_2=\theta \)
\(\theta=\frac{A B}{A M} ; A M \approx M C \)
\(\theta=\frac{A B}{M C} \Rightarrow M C=\frac{A B}{\theta}\)
AB மற்றும் θ மதிப்பு அறிந்திருந்தால் புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தொலைவை (MC) கணக்கிடலாம்
22.
(i) இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒன்று அடிப்படை அளவுகள், மற்றொன்று வழி அளவுகள்.
(ii) வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
(iii) அவை நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு (amount of a substance) ஆகும்.
(iv) அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எடுத்துக்காட்டு: பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், விசை மற்றும் பல.
23.
(C + \(\Delta\)C) = (3.0 \(\pm \) 0.1) \(\mu\)F
(V+\(\Delta\)V) = (18 \(\pm \) 0.4) V
Q = CV
Q = 3.0 \(\times\) 10-6 \(\times\) 18 = 54 \(\times\) 10-6 C
C இல் உள்ள சதவீதப் பிழை =\(\frac { \Delta C }{ C } \times 100\)
\(=\frac { 0.1 }{ 3 } \times 100=3.3\)%
V இல் உள்ள சதவீதப் பிழை = \(\frac { \Delta V }{ V } \times 100\)
\(=\frac { 0.4 }{ 18 } \times 100=2.2\)%
Q இல் உள்ள சதவீதப் பிழை = C இல் உள்ள சதவீதப் பிழை + V இல் உள்ள சதவீதப் பிழை
= 3.3% + 2.2% = 5.5%
\(\therefore \) மின்னூட்டம் Q = (54 \(\times\) 10-6 \(\pm \) 5.5%) C
24.
1.அனைத்து விதமான அடிப்படை மற்றும் வழி அளவுகளை அளக்கப் பயன்படும் அலகுகளின் ஒரு முழுமையான தொகுப்பே அலகிடும் முறையாகும்.
2.எந்திரவியலில் பயன்படும் பொதுவான அலகு முறைகள் கீழே தரப்பட்டுள்ளது.
f.p.s அலகு முறை
f.p.s அலகு முறை ஓர் பிரிட்டிஷ் அலகு முறையாகும்.இம்முறையில் நீளம்,நிறை மற்றும் காலத்தை அளக்க முறையே அடி (foot),பவுண்ட் (pound),வினாடி (second),ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
c.g.s அலகு முறை
இது ஓர் கஸ்ஸியன் (Gaussian)முறையாகும்.இம்முறையில் நீளம்,நிறை, மற்றும் காலத்தை அளக்க முறையே சென்டிமீட்டர்,கிராம் மற்றும் வினாடி ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன
m.k.s முறை
இம்முறையில் நீளம்,நிறை மற்றும் காலத்தை அளக்க முறையே மீட்டர், கிலோகிராம் மற்றும் வினாடி ஆகியமூன்று அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards