11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
+1 First Revision Test
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
________செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.
MS Excel
MS word
MS power point
MS Document
2.
இந்தியாவின் முதல் பிரதமர் ________.
அமர்திய சென்
இராஜ் கிருஷ்ணன்
B.R. அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
3.
அளிப்புக் கோடு_________.
மேல் நோக்கி உயர்ந்து செல்லும்.
கீழ் நோக்கி சரிந்து செல்லும்.
கிடைமட்டமாக இருக்கும்
செங்குத்தாக இருக்கும்.
4.
SSI என்பது ______ நிறுவனங்கள் (MSMES) ஆகும்.
குறு
சிறு
நடுத்தர
மேற்குறிய அனைத்தும்
5.
_____ மாற்றக்கூடியவை ஆகும்.
பண்டங்கள்
பொருட்கள்
சரக்குகள்
மேற்கூறிய அனைத்தும்
6.
MPn=_______
TPn-TPn-1
TCn-TCn-1
TP/Q
TUn-TUn-1
7.
எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்_____________.
J.S மில்
F.A வாக்கர்
பேராசிரியர் நைட்
ஹாலே
8.
தமிழ்நாட்டில் ________________ ஆறுகள் உள்ளன.
15
20
17
25
9.
நிறைகுறைப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ________
1930
1932
1933
1940
10.
மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.
சராசரி வருவாய்
இலாபம்
இறுதிநிலை வருவாய்
பூஜ்ஜியம்
11.
இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்
பருத்தி
சணல்
இரும்பு
சிமெண்ட்
12.
SPIC அமைந்துள்ள இடம்
சென்னை
மதுரை
தூத்துக்குடி
புதுக்கோட்டை
13.
14.
MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
2000
2005
2010
2015
15.
இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.
சார்ந்து
ஒன்றையொன்று சார்ந்து
தடையில்லா வாணியம்
முதலாளித்துவ அமைப்பு
16.
சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்
நெகிழ்ச்சியற்ற அளிப்பு கோடு
நெகிழ்ச்சியற்ற தேவைக் கோடு
சம – இறுநிலை பயன்பாடு
சம உற்பத்தி வளைககோடு
17.
முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்______பெறும்
இயல்பு இலாபம்
நஷ்டம்
அதிக இலாபம்
அதிக நஷ்டம்
18.
உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள் ---------------------
மாறாச் செலவு
மாறும் செலவு
உண்மைச் செலவு
சமூகச் செலவு
19.
தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்போது ................
அலகுத் தேவை நெகிழ்ச்சி
முற்றிலும் நெகிழ்ச்சியின்மை
முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை
மிகைத் தேவை
20.
வளர்ச்சி இலக்கணம் என்பது
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்
செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது
மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்
21.
சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?
22.
சம அளவு உற்பத்திக் கோட்டின் எடுகோள்களைத் தருக
23.
கூலிக் கோட்பாடுகள் யாவை?
24.
AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?
25.
தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.
26.
Y = 4, எனில் \(\frac { dy }{ dx } \) மதிப்பு காண்க.
27.
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
28.
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
29.
முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.
30.
இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க
31.
Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.
32.
ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?
33.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
34.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
35.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
36.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
37.
ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.
38.
39.
40.
ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.
41.
இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
42.
சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி
43.
பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.
44.
உற்பத்தி வாய்ப்பு வளைககோட்டைக் கொண்டு, பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை விவரி.
45.
ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.
46.
மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.
47.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
48.
வேலைப்பகுப்பு முறையைப் பற்றி விளக்குக.
49.
தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.
50.
பசுமைப்புரட்சி - விளக்குக
51.
பணத்தேவைக்கான நோக்கங்கள் யாவை?
52.
ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?
53.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.
54.
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
1.
(b)
MS word
2.
(d)
ஜவஹர்லால் நேரு
3.
(a)
மேல் நோக்கி உயர்ந்து செல்லும்.
4.
(d)
மேற்குறிய அனைத்தும்
5.
(d)
மேற்கூறிய அனைத்தும்
6.
(a)
TPn-TPn-1
7.
(b)
F.A வாக்கர்
8.
(c)
17
9.
(c)
1933
10.
(c)
இறுதிநிலை வருவாய்
11.
(a)
பருத்தி
12.
(c)
தூத்துக்குடி
13.
(b)
14.
(d)
2015
15.
(b)
ஒன்றையொன்று சார்ந்து
16.
(d)
சம உற்பத்தி வளைககோடு
17.
(c)
அதிக இலாபம்
18.
(a)
மாறாச் செலவு
19.
(a)
அலகுத் தேவை நெகிழ்ச்சி
20.
(a)
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
21.
1.சமநோக்கு வளைகோட்டின் தொகுதி என்பது இரண்டு பண்டங்களுக்கான வெவ்வேறு நிலையான பயன்பாட்டை விளக்கும் பல சமநோக்கு வளைகோடுகளைக் கொண்டதாகும்.
2.மேலே உள்ள சமநோக்கு வளைகோடு அதிக அளவு திருப்தியையும், கீழே உள்ள சமநோக்கு வளைகோடு குறைந்த அளவு திருப்தியையும் குறிக்கின்றன.
22.
1.உற்பத்திக்கு இரண்டு உற்பத்திக் காரணிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
2.உற்பத்தி காரணிகளின் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட இயலும்.
3.தொழில்நுட்ப முறைகள் நிலையானவை.
23.
(i) பிழைப்பு மட்ட கூலிக் கோட்பாடு
(ii) வாழ்க்கைத்தர கூலி கோட்பாடு
(iii) கூலி நிதிக் கோட்பாடு
(iv) எச்ச உரிமை கூலி கோட்பாடு
(v) இறுதிநிலை உற்பத்தித் திறன் கூலிக் கோட்பாடு
24.
சூத்திரம் :
AR=100, AC=32, உற்பத்தி=5
TP=(AR-AC)xஉற்பத்தி
=(100-32)x5
=68x5
∴ மொத்த இலாபம் = 340
25.
1191-ன் புதிய தொழிற் கொள்கையின் கீழ் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
26.
Y = 4, இங்கு 4 மாறிலி மதிப்பு. மாறிலிச்சார்பின் வகைக்கெழு பூஜ்ஜியம்.
எனவே \(\frac { dy }{ dx } =\frac { d\left( 4 \right) }{ dx } =0\)
27.
(i) இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது
(ii) 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோள்களை கொண்டடிருந்தது
28.
எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
29.
1.வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்களை முழுமையாக பயன்படுத்துவதுமான நாடுகளைக் குறிக்கும்.
2. அதிக தலா வருவாயைக் கொண்டிருப்பது ஆகும்.
3. முழு வேலைவாய்ப்பு
4. தொழில் செறிவு
30.
1. இயல்புரை அறிவியல், உள்ளதை உள்ளவாறு கூறுகிறது.
2. நிரூபிக்க இயலும்
3. காரண காரியங்களை தொடர்புபடுத்துகிறது.
4. உண்மையின் அடிப்படையில் அமைந்தது
5. வெளிப்படையானது, என்ன என்பதைக் கூறுகிறது.
31.
Microsoft power point
கணினி வாயிலாக தகவல்களை வழங்கிட உதவும் ஒரு மென்பொருள் ஆகும்.
(MS power point)தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகள்:
1.துவங்க (Start)செயலியை அமுக்கு
2.செயற்கட்டளை (Program)யை அமுக்கு
3.Microsoft power point ஐ தெரிவு செய்.
4.புதிய power point கோப்பானது திறக்கும்.
5.அதன் பிறகு தலைப்பு மற்றும் துணை தலைப்புகளை விரும்பினால் தட்டச்சு செய்யும்.
6.புதிய படிவம் ('New Slide')என்ற குறியீடு (Icon) அல்லது 'ctrl +m' என்ற பொத்தானை அழுக்குவதன் மூலம் புதிய படிமத்தை நுழைக்கலாம்.
7.பாடப்பொருள், அட்டவணையை உள்நுழைத்தல் போன்றவற்றை உள்ளடக்கமாக தர முடியும்.
8.வடிவமைப்பு 'Design' என்ற செயலி நழுமங்களை வடிவமைக்க உதவுகிறது.
9.நழுமக்காட்சி (slide show) என்ற செயலியை அமுக்குவதன் மூலம் ஒருவர் நழுமக்காட்சிகளை துவக்கத்திலிருந்தோ அல்லது தற்போதைய நழுமக்காட்சிலிருந்தோ இயக்க முடியும்.
முடிவுரை:
1. குறிப்பிட்ட தலைப்பிலான தகவல்களை புரிந்துகொண்டு நினைவில் வைப்பதற்குரிய குறிப்பு Power Point Presentation வசதிப்படுத்துகிறது.
2.கற்பித்தலில் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உயர்ந்த தரம் வாய்ந்த கல்வியினை வழங்கிட Power Point Presentation (PPP)உதவுகிறது.
32.
1.நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
2.இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மின்சாரம் இன்றி நம்மால் வாழ்வது சிரமம்.
3.ஆற்றல் இரண்டு வகைப்படும்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது.அவை தீர்ந்துவிட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது.
2.மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும்.
3.உதாரணம் :நிலக்கரி, பெட்ரோலியம்,இயற்கை வாயு மற்றும் பல.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டு பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை.
2.ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன.அவை,
1.சூரிய சக்தி.
2.காற்று சக்தி.
3.அலைகள் சக்தி
4.புவி வெப்ப சக்தி
5.உயிரி எரிவாயு சக்தி
3.சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு.
4.காரணம் இவ்வளங்கள் கொண்டு முன்காலங்களில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட வில்லை அல்லது வழக்கத்தில் இல்லை எனலாம்.
33.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
34.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
35.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
36.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
37.
TC(Q) = 128 + 60Q + 8Q2 கொடுக்கப்பட்டுள்ளது.
TC = மாறாச் செலவு + மாறும் செலவு என்பதை அறிவோம்.
MC(Q)=\(\frac { d(TC) }{ dQ } \)
=0+60(I)Q1-1+8(2)Q2-1
=0+60Q0+16Q1(Since, Q0=1)
MC=60+16Q
சராசரி செலவு =\(\frac { TC }{ Q } \)
=\(\frac { 128+60Q+8Q^{ 2 } }{ Q } \)
AC=\(\frac { 128 }{ Q } \)+60+8Q2
மாறிலி மதிப்பினை மாறாச்செலவு என்கிறோம்
மாறாச் செலவு =128
FC =128
சராசரி மாறாச்செலவு =\(\frac { 128 }{ Q } \)
AFC=\(\frac { 128 }{ Q } \)
சராசரி மாறும் செலவு =60 + 8Q (மாறும் செலவினை Q ஆல் வகுக்க)
∴ AVC = 60 + 8Q
38.
39.
40.

ஊரக பொருளாதாரப் பிரச்சனைகள்:
(1) மக்கள் தொடர்புடைய பிரச்சனை:
எழுத்தறிவின்மை போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றை சார்ந்து வாழ்க்கைத்தரம் அமைத்தல் ஆகியன ஊரக மக்களின் பிரச்சனைகள்.
(2) வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள்:
(i) எதிர்பார்த்தல் அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை.
(ii) உள்ளீடுகள் கிடைக்கப்பெறாமை.
(iii) அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு.
(iv) பற்றாக்குறையாக பணியாளர்கள் மற்றும் சேவைகள்.
(v) பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை.
(vi) நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்.
(vii) பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல்.
(viii) குறைவான அரசு முதலீடு மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம்செய்ய இயலாமை.
(3) உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள்:
ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, நிறுவனங்கள், தகவல் தொடர்பு, மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, பண்டக சேமிப்பு வசதி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.
(4) பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள்:
அதிகச் செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை, நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள் குறைவான வருமானம், கடன் சுமை, நிலவுடைமை மற்றும் சொத்துகளில் உள்ள ஏற்றத் தாழ்வு ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளாக உளது.
(5) தலைமை சார்ந்த பிரச்சனைகள்:
(i) ஊரக பகுதிகளில் தலைமை தொடர்பான பிரச்சனைகள் உள்ளன.
(ii) தகுதியற்ற மற்றும் செயல்படாத நபர்கள் தலைமை பொறுப்பை வகிப்பு போன்றவை ஆகும்.
(6) நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள்:
(i) அரசியல் தலையீடு ஊக்கமின்மை, ஆர்வமின்மை, குறைந்த கூலி, வரவு செலவுகளை சரிவர முறையாக பயன்படுத்தாமை.
(ii) கிராமப்புற வறுமை கிராமப்புற வேலையின்மை, கிராமப்புற தொழிற்சாலைகள், சிறு நிதி, ஊரக நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
41.
1. இரும்புத் தாது:
1. இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
2. இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10619 மில்லியன் இருப்பு உள்ளது.
3. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
2.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்களாகும்.
3. அலுமினியத்தாது (பாக்சைட்):
1. பாக்சைட்- அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
4.மைக்கா:
1. மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் தனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2. இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்கா தான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
3. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
5. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், பாடர்பூர், நகர்க்காட்டிகா, காசிம்பூர்,பள்ளியரியா, ரூத்ராபூர், சிவசாகர், மார்ன்.
6.தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்சசூரில் ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
7. வைரம்:
1. UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2. அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னுல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
3.புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியுபடா பார்கர் மாவட்டம், மாத்தூர் கிருஷ்ணா பகுதி கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா பகுதி மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
42.
சம அளவு உற்பத்திக் கோட்டின் பண்புகள் :
1. சம உற்பத்திக் கோடு எதிர்மறைச் சரிவைக் கொண்டது.
2. தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
3. சம உற்பத்திக் கோடு ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
4. உயர் சம உற்பத்திக்கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது.
5. சம உற்பத்திக் கோடு X அச்சினையோ (அ) Y அச்சினையோ தொடாது.
சம உற்பத்திக்கு கோடுகள் எதிர்மறைச் சரிவைக் கொண்டது:
1. சம உற்பத்திக் கோடுகள் இடமிருந்து வளமாக மேலிருந்து கீழ்நோக்கி சரிந்து செல்கிறது.
2. சம உற்பத்திக் கோடு சரிவதற்கு காரணம் (MRTS) இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு வீதம் ஆகும்.
3. ஒரு காரணியை (K5) அதிகமாக பயன்படுத்தும் போது மற்றொரு காரணி (L2) குறைகிறது.

தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்:
1. இறுதிநிலை பதிலீட்டு வீதம் அதிகரிக்கும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாகவும் மற்றும் நிலையான இறுதிநிலை பதிலீட்டுவிதம் இருந்தால் நேர்கோடாகவும் அமையும்.
2. இது சம உற்பத்திக் கோட்டின் இயல்பினை பொறுத்தது.
3. குறைந்த அளவு உழைப்பின் அலகுகள் மூலதனத்திற்கு பதிலீடாக பயன்படுத்தப்படும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றூய் நோக்கி குவிந்து அமையும்

சம உற்பத்தி கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது:
1. IQ2சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள C என்ற புள்ளி அதிக உற்பத்தியையும், IQ1 சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள B என்ற புள்ளி குறைவான உற்பத்தியை குறிக்கிறது.
2.சமமற்ற இருவேறு புள்ளிகள் A என்ற புள்ளியில் சமமாகிவிட்டது என்பதாகும்.C=A, B=A என்றால் C=B அனால் C>B, இது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

உயர் சம உற்பத்திக் கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது:
1. சம உற்பத்திக் கோடுகள் உயரச் செல்ல செல்ல அதிக அளவு உற்பத்தியும், கீழே செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியும் கொடுக்கும்.

2. IQ,
சம உற்பத்திக் கோடு X அச்சினையோ அல்லது Y அச்சினையோ தொடாது:
1. எந்த ஒரு சம உற்பத்திக்கோடு X அச்சின் மேலோ அல்லது Y அச்சின் மேலோ அமையாது.
2. IQ, ல் மூலதனம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. IQ,வில் உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. மூலதனம் அல்லது உழைப்பை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுத்துவது இயலாத செயல் என்று கருதப்படுகிறது.

43.
1. ஒரு நிறுவனம் கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை எனில், அந்நிறுவனத்தின் AR மற்றும் MR மாறாமல் அதாவது AR=MR ஆக இருக்கும்.
2. ஒரு நிறுவனம், கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இருக்கும் எனில் AR மற்றும் MR வெவ்வேறு அளவுகளாக இருக்கும்.
மாறாத விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. விலையில் மாற்றம் இல்லையினில், மற்றும் வளைகோடுகள் ஒன்றிணைந்து ஒரே கோடாக இருக்கும்.
2. நிறைவுப் போட்டியில் விலையில் மாற்றம் இருக்காது. எனவே AR மற்றும் MR வளைகோடுகள் X-அச்சுக்கு இணையாக ஒரு படுக்கைக் கோடாக இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகு | விலை P | மொத்த வருவாய்(TR) | சராசரி வருவாய்(AR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 5 | 5 | 5 | 5 |
| 2 | 5 | 10 | 5 | 5 |
| 3 | 5 | 15 | 5 | 5 |
| 4 | 5 | 20 | 5 | 5 |
| 5 | 5 | 25 | 5 | 5 |
| 6 | 5 | 30 | 5 | 5 |

மாறும் விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. ஒரு நிறுவனம் அதிக பண்டங்களை விற்க வேண்டுமெனில், விலை குறைவாக இருக்க வேண்டும்.
2.விலை குறையும் போது AR மற்றும் MRம் குறைந்து கொண்டே செல்லும்.
3. MR ஆனது ARஐ விட அதிகமாக குறைந்து கொண்டே செல்லும்.
4. MR வளைகோடானது AR வளைகோட்டிற்கு கீழே உள்ளது.
5. கீழ் நோக்கி சரிந்து செல்லும் வருவாய் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
6.சில சமயங்களில் வருவாய் கோடுகள் மையத்தை நோக்கி குவிவு வளைவாகவோ (அ) குழியான வளைவாகவோ இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகுகள் (Q) | விலை (P) | மொத்த வருவாய்(TR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 10 | 10 | 10 |
| 2 | 9 | 18 | 8 |
| 3 | 8 | 24 | 6 |
| 4 | 7 | 28 | 4 |
| 5 | 6 | 30 | 2 |
| 6 | 5 | 30 | 0 |
| 7 | 4 | 28 | -2 |
| 8 | 3 | 24 | -4 |
| 9 | 2 | 18 | -6 |
| 10 | 1 | 10 | -8 |

44.
1. உற்பத்தி வாய்ப்பு வளைகோடு:
இரு பொருள்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் எதை எவ்வளவு என்ற வினாவிற்கு பதில் தரும் வகையில் வடிவியல் சாதனம் மூலம் விளக்குவதே, உற்பத்தி வாய்ப்பு வளைகோடு எனப்படும்.
2. எடுகோள்கள்:
1. காலத்தில் மாற்றல் இல்லை,
2. உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் நிலையானது.
3. கொடுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இரு பண்டங்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.|
4. உற்பத்திக் காரணிகளின் அளவும், தரமும் கொடுக்கப்பட்டுள்ளன.
5. உற்பத்தியில் குறைந்துசெல் விதி நிலவுகிறது.
3. உற்பத்தி வாய்ப்பு அட்டவணை:
1. கீழ்காணும் அட்டவணையைப் பயன்படுத்தி ஓர் உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டை வரையலாம்.
| உற்பத்தி வாய்ப்புகள் | டன் கணக்கில் உணவு உற்பத்தியின் அளவு |
மோட்டார் வாகனத்தின் உற்பத்தி எண்ணிக்கை |
| I | 0 | 25 |
| II | 100 | 23 |
| III | 200 | 20 |
| IV | 300 | 15 |
| V | 400 | 8 |
| VI | 500 | 0 |
2. இந்த அட்டவணையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தில் அனைத்து வளங்களும் உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டால் அதிகபட்சம் 500 டன் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்பதை அறியலாம்.
3. உற்பத்தி வாய்ப்பு அட்டவணைக் கொண்டு உற்பத்தி வாய்ப்பு வளைகோடு வரையலாம்

4. வரைபட விளக்கம்:
1.X - அச்சில் உணவின் அளவும், Y- அச்சில் மோட்டார் வாகனத்தின் எண்ணிக்கையும் கட்டப்பட்டுள்ளது.
2. வெவ்வேறு ஆறு வகையான உற்பத்தி வாய்ப்புகளும் P1,P2,P3,P4,P5 மற்றும் P6என்ற புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன.
3. அளிக்கப்பட்ட வளங்களையும், தொழில் நுட்பத்தையும் கொண்டு ஒரு சமுதாயமோ (அ)நிறுவனமோ உற்பத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய வரைபாதையை உற்பத்தி வளைகோடு காட்டுகிறது.
4. உற்பத்தி வாய்ப்பு வளைகோடில் உள்ள P7 போன்ற புள்ளியை சமுதாயத்தால் அடைய முடியும், ஆனால் அப்போது வளங்கள் முற்றிலுமாக பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும்.
5. உணவு உற்பத்தியின் அளவை நிலைபெறச் செய்து மோட்டார் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது ஒரே சமயத்தில் இரண்டின் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்.
5.உற்பத்தி வாய்ப்பு வளைகோடு மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி இடம் பெயர்வதற்கான காரணங்களாவன.
1. உற்பத்தி சாதனங்களின் அளிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும்,
2. தொழில் நுட்ப நிலையில் ஏற்படும் மாற்றம்.
3. வளங்களின் அளிப்பு அதிகரிப்பதாலும், தொழில்நுட்ப மேம்பாட்டினாலும், காலப்போக்கில் பொருளாதாரத்தின் உற்பத்தி ஆற்றல் அதிகரிக்கலாம்.
45.
TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20
தரப்பட்டுள்ளது. இறுதிநிலை செலவுச் சார்பினை காண Qஐ பொருத்து வகைப்படுத்த.
MC(Q)= \({d(TC)\over dQ}\)
= 3Q3-1 -36 (2) Q2-1 + 182(l)Q1-1 + 20
= 3Q2-72Q1 + 182 Qo+ 20
= 3Q2- 72Q + 182 (1) + 20
= 3Q2 -72Q + 182 + 20
= 3Q2-72Q + 202
Q=6 எனில்,
MC (Q) = 3(6)2 - 72 (6) + 202
= 3 (36) - 432 + 202
= 108 - 432 + 202
= 310 - 432
\(\boxed{\therefore MC(Q)=122}\)
TC (Q) = Q3 - 36Q2 +182Q +20
AVC=?
TVC (Q) = Q3 - 36Q2 + 182Q என அறிகிறோம்.
(மாறிலி மதிப்பு என்பது மாறாச் செலவு ஆகும் )
AVC (Q) = TVC (Q) /Q
\(={Q^3-36Q^2+182Q\over Q}\)

= Q2-36Q+182
Q = 6 எனில்,
AVC (Q) = (6)2 - 36 (6) +182
= 36 - 216 + 182
=218-216
\(\boxed {AVC (Q) =2}\)
குறிப்பு:
மாறாச்செலவு =20
சராசரி மாறாச் செலவு =\({20\over Q }\)

=Q2-36Q+182+\({20\over Q }\)
46.
1.மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிக்கின்றது.
2.நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது.
3.மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.

4. சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100-க்கும் குறைவு.ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் தொகை அடர்த்தியானது 1951ல் 117ஆக இருந்து உயர்ந்து பின் 2001-ல் 325 ஆக அதிகரித்தது.
47.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
48.
1. ஒரு உற்பத்தி முறையை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.
2. ஓர் அங்காடியின் விரிவு வேலைப்பகுப்பு முறையின் அளவைத் தீர்மானிக்கின்றது.
உதாரணம்;
1. ஒரு தையல்காரர், ஒருவர் மட்டும் ஒரு சட்டையை தைக்கும்போது அவர் நாளொன்றுக்கு ஒரு சட்டையை மட்டும் தயாரிக்க முடியும்.ஆனால் இதனை வேலைப்பகுப்பு முறையின் மூலம் வேலையை பகிர்ந்து தைத்தால் நாளொன்றுக்கு 100 சட்டைகளை தைக்க முடியும்.
49.
(i) சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும்.
(ii) நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகங்களாகும்.
(iii) மேலும் 23 சிறு துறைமுகங்களும் உள்ளன.
(iv) தற்போது ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டவை.
(v) 24% அனைத்து சிறிய துறைமுகங்களும் தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
(vi) சென்னை துறைமுகம் கன்டெயினர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகமாகும்.
(vii) இது 4,00,000 வாகனங்களைக் கையாளக்கூடிய அர்ப்பணிப்பு முனையமாக தற்போது மேம்படுத்தப்பட்டு அனைத்து விதமான நிலக்கரி மற்றும் கனிம போக்குவரத்துக்களை கையாள்கிறது.
50.
(i) பசுமைப்புரட்சி என்பது வேளாண் துறை தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது
(ii) 1960 க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில் நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன.
(iii) ஆரம்பமாகா 1960 -61 ல் ஏழு மாவட்டங்களில் ''வழிநடத்தும் திட்டம் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது
(iv) அதிக விளைச்சல் தரும் ரகங்களைஉற்பத்தி செய்வதற்கான திட்டம் (HYVP)
51.
கீன்ஸ் கூற்றுப்படி, நீர்மை விருப்பத்திற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அவை,
பரிமாற்ற நோக்கம்:
(i) மக்கள் அன்றாட பரிவர்த்தனைக்காக பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதன் விருப்பமே பரிமாற்ற நோக்கமாகும்.
(ii) இந்த நோக்கத்திற்காக பணம் சேமிக்கும் அளவு வருமான அளவைச் சார்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நோக்கம்:
(i) நோய்வாய்படுதல், விபத்து, தீப்பற்றுதல், திருட்டு போன்ற எதிர்பாராத செலவுகளை சந்திப்பதற்காக மக்கள் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதற்கான இந்த நோக்கம் முன்னெச்சரிக்கை நோக்கம் எனப்படும்.
ஊக நோக்கம்:
(i) முதலீட்டு சந்தையில் பங்குகள் மற்றும் பத்திரங்களின் எதிர்கால விலை மாற்றத்திற்கேற்ப அதனுடைய நன்மைகளைப் பெற பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்க தேவையான பணத்தை மக்கள் ரொக்கமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதுவே ஊக நோக்கமாகும்.
(ii) இந்த நோக்கத்திற்காக கையில் சேமிப்பாக வைத்திருக்கும் தொகையின் அளவு வட்டி விகிதத்தைப் பொறுத்து அமையும்.
(iv) (எ.கா) (Ms=450-100i) இங்கு நீர்மை விருப்பத்திற்கும் வட்டி விகிதத்திற்கும் எதிர்மறையான உறவாகும்.
52.
(i) இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மற்றும் முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
(ii) பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
(iii) நகர்புறத்திற்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
(iv) ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நாற்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
(v) வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம் ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலை வாய்ப்புகளையம் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க முடியும்.
(vi) கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பு தேடி திறமைசாலிகள் இடம் பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிபெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
(vii) ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
(viii) கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினைகுறைக்க முடியும்.
53.
(i) விவசாயப் பொருட்களுக்கான அங்காடிக்குழு, வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது கால்நடைப் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பு ஆகும்.
APMC-ன் செயல்பாடுகள்
(i) வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியார்களிடையே கூட்டுறவை வளர்ச்சிப் பெறச் செய்தல்.
(ii) சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.
(iii) விலை நிர்ணயம் மற்றும் அங்காடிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருதல்.
(iv) விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதே நாளில் விவசாயிகளுக்குப் பணம் செலுத்துவதை உறுதி செய்தல்.
(v) வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
(vi) வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துதல்.
54.
| வ.எண் | வெளியுறு செலவு | உள்ளுறு செலவு |
| 1. | உற்பத்திக் காரணிகளை வாங்கு மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும். | நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும். |
| 2. | ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்கு தேவையான காரணிகளை விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு அமர்த்தியோ உற்பத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒட்டு மொத்த செலவு வெளிப்படையான செலவு. | நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் மற்றும் சுய உழைப்பிற்கான செலவுகள் உள்ளார்ந்த செலவுகள். |
| 3. | வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு அல்லது பணச் செலவு என்று அழைக்கப்படும். | உள்ளார்ந்த செலவு என்பது மறைந்திருக்கும் செலவு அல்லது எட்டுச் செலவு என்றழைக்கப்படும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards