11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
துணை ஏடுகள் - II
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
சில்லறை ரொக்க ஏட்டிலிருந்து எடுத்தெழுதல் பற்றி குறிப்பு வரைக.
2.
சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?
3.
ரொக்க ஏட்டின் நன்மைகள் யாவை?
4.
சில்லறை ரொக்க ஏட்டின் வகைகளை எழுதி விளக்குக.
5.
ரொக்க ஏட்டின் முக்கியத்துவம் யாவை?
6.
2017 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளை பிரதீப் என்பவரின் தனிப்பத்தி ஏட்டில் பதியவும்.
| ஏப்ரல் | ரூ | |
| 1 | வணிகம் ரொக்கத்துடன் துவங்கியது | 27,000 |
| 5 | ரொக்கத்திற்கு சரக்குகள் வாங்கியது | 6,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்குகள் விற்றது | 11,000 |
| 13 | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | 5,000 |
| 14 | சங்கீதாவிற்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 9,000 |
| 17 | பிரீத்தி என்பவருக்கு கடனாகச் சரக்கு விற்றது | 13,000 |
| 21 | ரொக்கம் செலுத்தி எழுதுபொருள் வாங்கியது | 200 |
| 25 | முருகனுக்கு ரொக்கம் செலுத்தியது | 14,000 |
| 26 | ரொக்கமாக கழிவு கொடுத்தது | 700 |
| 29 | அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து எடுத்தது | 4,000 |
| 30 | காசோலை மூலம் வாடகை செலுத்தியது | 3,000 |
7.
பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஜன | ரூ | |
| 1 | கை இருப்பு ரொக்கம் | 11,200 |
| 5 | இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது | 300 |
| 7 | வாடகை செலுத்தியது | 30 |
| 8 | ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது | 300 |
| 10 | மோகனுக்கு செலுத்தியது | 700 |
| 27 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 200 |
| 31 | சம்பளம் கொடுத்தது | 100 |
8.
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.
9.
ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
10.
சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.
1.
1. தொடக்கத்தில் சில்லறை ரொக்கத்தை முன்பணமாக பெறும் பொழுது, பேரேட்டில் சில்லறை ரொக்க க/கு தனியாக துவங்கப்பட வேண்டும். சில்லறைக் காசாளர் முன்பணம் பெறும் பொழுது, சில்லறை ரொக்க கணக்கில் பற்றும், ரொக்க கணக்கில் பற்றும், ரொக்க கணக்கில் வரவும் செய்தல் வேண்டும்.
2. குறிப்பிடப்பட்ட காலத்தில் செலவுகளுக்கென தனிப்பத்திகளின் கூடுதலைக் கணக்கிடும் பொழுது குறிப்பிட்ட சில்லறைச் செலவுகள் கணக்கில் அதன் மொத்த தொகை பற்றும், சில்லறை ரொக்கக் கணக்கில் அதன் மொத்தம் செலவழித்தத் தொகை வரவும் செய்யப்பட வேண்டும்..
3. சில்லறை ரொக்கக் கணக்கு ரொக்க இருப்பைக் காட்டும். இந்த சில்லறை ரொக்க இருப்பு, இருப்பு நிலைக்குறிப்பில் ரொக்க இருப்பின் ஒரு பகுதியாகக் காட்டப்படும்.
2.
1. குறிப்பிட்ட காலத்தின் இறுதியில் (வாரம் (அ) மாதம் ) மொத்தம் செலவழித்த தொகை பத்தியும், செலவினங்களுக்கான பத்திகள் கூட்டப்படுகின்றன.
2. மொத்தம் செலவழித்த தொகை பத்தியின் கூடுதலும் சமமாக இருக்கும்.
3. பெற்ற தொகை பத்தியின் கூடுதல் தொகையும், மொத்தம் செலவழித்தத் தொகை பத்தியின் கூடுதல் தொகையும் ஒப்பிடப்பட்டு, இருப்பு காணுதல் வேண்டும்.
4. இறுதி இருப்புக்கு நேரமாக இருப்பு கீ/கு என எழுதப்பட வேண்டும். இதனை அடுத்த வாரம்/மாதத்திற்கு கொண்டு செல்லும்போது இருப்பு கீ/கொ என இருப்புக்கு நேராக எழுதப்பட வேண்டும்.
3.
1. ரொக்க நடவடிக்கைகள் முதற்குறிப்பேட்டில் பதிவதற்கு பதிலாக பேரேட்டுக் கணக்கின் அமைப்பை ஒத்துள்ள ரொக்க ஏட்டில் நேரடியாக பதிவுதால் நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகின்றன.
2. எந்த நேரத்தில் நிறுவன உரிமையாளர் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பை அறிய முடியும்.
3. ரொக்க ஏட்டைத் தொடர்ந்து இருப்புக் கட்டுவதால் கையிருப்பு ரொக்கத்தை அறிய முடியும். ரொக்க இருப்பில் முரண்பாடு ஏதேனும் இருப்பின், அதை கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும்.
4.திறமையான ரொக்க மேலாண்மைக் கொள்கையை உருவாக்க ரொக்க ஏடு பெரிதும் உதவுகிறது.
4.
சில்லறை ரொக்க ஏடு இரண்டு வகைப்படும். அவையாவன:
1.சாதாரண சில்லறை ரொக்க ஏடு
2.பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு
1.சாதாரண சில்லறை ரொக்க ஏடு:
1.சாதாரண சில்லறை ரொக்க ஏடு,ஒரு தனிப்பத்தி ரொக்க ஏடு போன்று இருக்கும்.அனால் பத்திகள் வேறுபடும்.
2.பற்றுப்பக்கத்தில் தலைமைக் காசாளரிடம் பெற்ற முன்பணத்தொகை மட்டும் பதிவு செய்யப்படும்.
3.வரவுப் பக்கத்தில் அனைத்து செலவினங்களும் ஒரே பத்தியில் பதிவு செய்யப்படும். இதுவே, சாதாரண சில்லறை ரொக்க ஏடு ஆகும்.
2.பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு:
1.பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டில், வெவ்வேறு தலைப்புகளில் உள்ள செலவினங்களுக்கு ஒரு தனிப்பத்தி ஒதுக்கப்படும்.
2.மொத்த செலவுகளுக்கென்று ஒரு பத்தி ஒதுக்கப்படுகிறது.
3.மொத்த செலவினங்கள் பத்தியில், சில்லறை செலவுகளைப் பதிந்த பிறகு, அதே தொகையை அதற்குரிய செலவுகள் பத்தியில் பதிய வேண்டும். இதுவே, பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு ஆகும்.
5.
1.குறிப்பேடாகவும் மற்றும் பேரேடாகவும் செயல்புரிகிறது:
ரொக்க ஏடு பராமரிக்கப்படும்போது தனியாக ரொக்கக் கணக்கைப் பேரேட்டில் தயாரிக்க வேண்டியதில்லை. ஏனெனில், ரொக்க ஏடே குறிப்பேடாகவும் மற்றும் பேரேடாகவும் செயலாற்றுகிறது.
2.ரொக்க இருப்பு மற்றும் வங்கி இருப்பை அறிய முடிகிறது :
எந்த நேரத்திலும் மொத்த ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ரொக்கம் மற்றும் வங்கி இருப்புகளை அறிய ரொக்க ஏடு உதவுகிறது
3.வேலைப்பகுப்பின் பயன் :
ரொக்க ஏடு ஒரு தனி துணை எடாக செயலாற்றுவதால், அதனை தனிநபர் பராமரிக்கலாம். இதனால் வேலைப்பகுப்பு முறையின் நன்மையை வணிகம் பெறலாம்.
4.செயலூக்கமுடைய ரொக்க மேலாண்மை:
ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மொத்த ரொக்கப் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் பற்றிய விவரங்களை ரொக்க ஏடு காட்டுகிறது.செயலூக்கமுடைய ரொக்க மேலாண்மைக் கொள்கையை உருவாக்க ரொக்க ஏடு உதவுகிறது.
6.
பிரதீப் என்பவரது ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ | தொகை ரூ | நாள் | செலுத்துதல்கள் | பே.ப. எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஏப் 1 | பிரதீப் முதல் க/கு | 27,000 | ஏப்ரல் 5 | கொள்முதல் க/கு | 6,000 | ||
| 10 | விற்பனை க/கு | 11,000 | 13 | வங்கி க/கு | 5,000 | ||
| 14 | விற்பனை க/கு | 9,000 | எழுதுபொருள் க/கு | 200 | |||
| 29 | வங்கி க/கு | 4,000 | முருகன் க/கு | 14,000 | |||
| கழிவு க/கு | 700 | ||||||
| இருப்பு கீ/இ | 25,100 | ||||||
| 51,000 | 51,000 | ||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 25,100 |
7.
குணால் என்பவரின் ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ. | தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | பே.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 11,200 | ஜன 7 | வாடகை க/கு | 30 | ||
| ஜன | இரமேஷ் க/கு | 300 | ஜன | மோகன் க/கு | 700 | ||
| ஜன | விற்பனை க/கு | 300 | ஜன | அறைகலன் க/கு | 200 | ||
| ஜன | சம்பளம் க/கு | 100 | |||||
| ஜன | இருப்பு கீ/இ | 10,770 | |||||
| 11,800 | 11,800 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 10,770 |
8.
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
1. செலவினங்களை நல்லமுறையில் கட்டுப்படுத்த முடியும்.
2. முதன்மை காசாளரின் நேரம் மிச்சமாகிறது.
3. சிறு செலவினங்களால் ரொக்க ஏட்டில் அதிக சுமை இல்லாமல் இருக்கும்.
4. ரொக்க யதிலிருந்து சில்லறை ரொக்க ரொக்க எட்டிலிருந்து பேரேட்டில் எடுத்தெழுதுவது மிகவும் சுலபமானது.
9.
ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு
| வ.எண் | அடிப்படை | ரொக்கத் தள்ளுபடி | வியாபாரத் தள்ளுபடி |
|---|---|---|---|
| 1 | நோக்கம் | பொருளை வாங்கியவர் தொகையை முன்கூட்டி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு ரொக்கத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. | வாங்குபவர் அதிகப்படியான எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும் பொருட்டு அவர்களை ஊக்குவிப்பதற்காக வியாபாரத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. |
| 2 | வழங்கப்படும் காலம் | ரொக்கத் தள்ளுபடி வுற்றவர் அல்லது கடனீந்தோரால் வாங்கியவர் அல்லது கடனளிக்கு தொகையை திரும்ப செலுத்தும்போது வழங்கப்படுகிறது. | வியாபாரத் தள்ளுபடி விற்றவரால் வாங்கியவருக்கு பொருட்களை விற்கும்போது வழங்கப்படுகிறது. |
| 3 | தள்ளுபடி தொகை | ரொக்கத் தள்ளுபடி திரும்ப செலுத்தும் காலத்தை அடிப்படையாக கொண்டது. | வியாபார ட்டிஹல்லுபடி பொருட்கள் வாங்கிய அளவினை அடிப்படையாக கொண்டது. |
| 4 | கணக்கேடுகளில் பதிவு செய்தல் | ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதியப்படுகிறது. | வியாபார தள்ளுபடி கணக்கேடுகளில் பதியப்படுவதில்லை |
| 5 | இடாப்பு மதிப்பில் கழித்து காட்டுதல் | ரொக்கதள்ளுபடி சரக்கின் இடாப்பு மதிப்பிலிருந்து கழித்து காட்டப்படமாட்டது. | வியாபார தள்ளுபடி பட்டியல் விலையிலிருந்து கழித்துக் காட்டப்படும். |
10.
1. சில்லறை காசாளருக்கும் முன்கூட்டி வழங்கப்படும் இத்தொகைக்கு 'முன்பணம்' என்று பெயர்.
2. முன்பணம் என்ற சொல் முன் கூட்டியே பெட்ரா தொகையைக் குறிக்கும்.
3. சில்லறைக் காசாளர் செலவுகளை செய்து, அதனை சில்லறை ரொக்க ஏட்டில் பதிவு செய்கிறார்.
4. ஒரு குறிப்பிட்ட காலத்தின் முடிவில் சில்லைறைக் காசாளர் தலைமைக்கு காசாளரிடம் சில்லறை ரொக்க ஏட்டை சமர்பிப்பார்.
5. தலைமைக்கு காசாளர் சில்லறை செலவினங்களை கூர்ந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு சில்லறை காசாளர் செய்த செலவுகளுக்கு சமமான ஒரு தொகையை அவரிடம் தருவார்.
6. இத்தொகையும், ஏற்கனவே செலவழிக்கப்படாமல் உலா தொகையும் சேர்ந்த மொத்த தொகையானது குறிப்பிட்ட காலத்தின் ஆரம்பத்தில் அவரிடம் தரப்பட்ட தொகைக்கு (முன்பணம்) சமமாக இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards