11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
புதுக்கவிதை என்பது யாது?
3.
உயிர்முதல், மெய்முதல் - விளக்குக.
4.
உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
5.
இனம், மொழி ஆகியன குறித்து இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
6.
பேச்சுமொழி, எழுத்துமொழியைக்காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது. ஏன்?
7.
மொழிமுதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
8.
சு. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது?
9.
'என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
10.
11.
நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியினையும் எழுத்துமொழியினையும் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை விவரிக்க.
12.
13.
14.
15.
பின்வரும் சொற்களில் எது தமிழ்ச் சொல்லாகும்?
றெக்கை
ராக்கி
டப்பா
கோதை
16.
இந்திரனின் இயற்பெயர் ____________.
இராசேந்திரன்
இராசமாணிக்கம்
இராசகோபாலன்
இராசதுரை
17.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் _________.
வால்ட் விட்மன்
மல்லார்மே
பாப்லோ நெரூடா
எர்னஸ்ட் காசிரர்
18.
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
பன்னிரண்டு
பதினெட்டு
இருபத்து நான்கு
இருபத்து இரண்டு
19.
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு ________
பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
தமிழனின் கவிதை இயல்
புல்லின் இதழ்கள்
உயிர்த்தெழும் காலத்துக்காக
20.
கலைகளின் உச்சம் _________
கதை கூறுதல்
பாட்டு
நடனம்
கவிதை.
21.
ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து
மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்
பேச்சு மொழி, எழுத்து மொழியைத் திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
எழுத்து மொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது.
பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.
22.
"யுகத்தின் பாடல்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'ஏடு தொடக்கி' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
2.
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.
3.
வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாய் இருந்தால் அஃது உயிர்முதல் எனப்படும். வருமொழியின் முதல் எழுத்து மெய்யாய் இருந்தால் மெய்முதல் எனப்படும்.
4.
உயிரெழுத்து : (து - த் + ௨) - இச்சொல்லில் 'உ' என்னும் உயிரெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
பன்னிரண்டு : (டு - ட் + ௨) - இச்சொல்லில் 'உ' என்னும் உயிரெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
திருக்குறள் : ள் - இச்சொல்லில் மெய்யெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
நாலடியார் : ர் - இச்சொல்லில் மெய்யெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
5.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை,
(i) வேரில்லாத மரம்,
(ii) கூடில்லாத பறவை
என இனம், மொழி குறித்து இரசூல் கம்சதோவ் குறிப்பிடுகிறார்.
6.
எழுத்து மொழியில், எழுதுவதை மட்டுமே மனிதனின் கை செய்கிறது.
பேச்சுமொழியில், முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக்காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாய் அமைந்துள்ளது.
எனவே, பேச்சுமொழி எழுத்துமொழியைக்காட்டிலும் மிகுந்த உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது.
7.
பன்னிரண்டு உயிரெழுத்துகளும் ௧, ச, த, ந, ப, ம, வ, ய ஞ, ங ஆகிய பத்து உயிர் ஏறிய மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும். (எ-டு) : அணி, ஆடை, இலை, ஈகை, உரல், ஊசல், எடு, ஏடு, ஐயம், ஒன்று, ஓடம், ஒளவை.
(எ-டு) : கனி, காவல், கிளி, கீரை, குயில், கூடு, கெடு, கேடு, கை, கொடு, கோவில், கெளவை.
சங்கு, சால்பு, சிலை, சீற்றம், சுருள், சூழ்ச்சி, செறு, சேய், சையம் (பொருள்), சொல், சோறு, செளரியம் (வீரம்).
தளிர், தாழ்வு, திரு, தீமை, துன்பம், தூற்று, தெரு, தேவை, தையல், தொழில், தோகை, தெளவை
நன்றி, நாடு, நிழல், நீர், நுங்கு, நூல், நெகிழ்ச்சி, நேயம், நைதல், நொய்ம்மை, நோய், நெளவி (மான்).
பழம், பாவை, பிடி, பீர்க்கு, புதுமை, பூமி, பெருமை, பேழை, பைய, பொழில், போக்கு, பெளவம் (கடல்.
மண், மான், மின், மீன், முதுமை, மூன்று, மென்மை, மேன்மை, மையல், மொக்கு, மோழை, மெளவல் (அரும்பு),
உயிர் பன்னிரண்டும் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய மெய் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றுமாக இருபத்து நான்கு எழுத்துகள் தமிழில் மொழிக்கு ஈற்றில் வரும்.
உயிர் தனித்தும் மெய்யோடு சேர்ந்தும் மொழிக்கு ஈற்றில் வரும்.
(எ-டு) : ஆ, ஈ, ஊ, ஏ; ஐ, ஒ, ஒள. ௮, இ, ௨, ௭, ஒ. (உயிர் தனித்து ஈறாயின) விள, பலா, கரி, தீ, கடு, பூ, சே௭, தே, தை, நொ, போ, வெள - உயிர், மெய்யோடு சேர்ந்து ஈறாயின,. உறிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், தமிழ், வாள் - மெய் ஈறாயின. எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.
8.
காலநேரம் கருதாது தமிழ்ப் பயிர் தழைத்தோங்க வியர்வை சிந்த உழைத்தவர், தமிழ்த்தாய் தன் திருவடிகளைத் தொழுத தமிழ்ப் பற்றாளர்,
தமிழ் வயலினை ஆழ அறிவால் உழுதவர்,
பயனளிக்கும் நல்ல கருத்துகளை விதைத்தவர், ஆகியோருக்கெல்லாம் நிறைமணிகளாகிய இலக்கியச் செல்வங்களைத் தந்தவள், தமிழ்த்தாய்.
அத்தகைய தமிழ்த்தாயைப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும்,
எண்ணற்ற இலக்கிய வளங்களைக் கொண்டிருந்த கபாடபுரத்தைக் கடல் காவு கொண்டு விழுங்கிய பின்னும் நிலைத்து நிற்பவள், தமிழ்த்தாய்.
எதிர்ப்புக்காற்றைத் தாண்டி, தடுத்து நிற்கும் அலைகடல், நெருப்பாறு, மலைமுகடு போன்ற சக்திகளை வென்று, தமிழ் செல்லட்டும் என்னும் பாடலைப் பாடத்தான் வேண்டும்.
காலத்தால் அழியாத தொல் கனிமங்கள் தமிழ் பற்றிக் கூறும் உரமான செய்திகளையெல்லாம் சேர்த்துக்கொண்டு பாடத்தான் வேண்டும்.
இவ்வாறு சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.
9.
(i) இளமைப்பருவத்தில் என் நாவை அசைத்துமே மழலையெனும் குழலிசையை வளர்த்த மொழி, என்னுயிர் தமிழ்மொழி என்பேன்.
(ii) அறிவெனும் கண்களை அகலத்திறந்து வைத்து, உலகோடு கலந்து உறவாடச் செய்த மொழி.
(iii) மங்காத செல்வமாம் சங்க இலக்கியத்தை வாரி என் முன்னே வைத்திட்ட நன்பொழி.
(iv) கம்பனும் இளங்கோவும், தம்மிரு தோள்களில் தூக்கி எனை வைத்து வளர்த்திடச் செய்த மொழி. இலக்கணத்தோணியாம் நன்னூலில் எனை ஏற்றி இலக்கியக்கடலினில் உலவிடச் செய்த மொழி, தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தமென அருள்நூல்கள் ஒளியேற்றி வழிகாட்டச் செய்த மொழி.
(v) செம்மொழிக்கு உரியதெனும் பதினொரு கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னிகர் இல்லா மொழி என்னுயிர் தமிழ்மொழி என்பேன்.
10.
11.
(i) பேச்சுமொழி என்பது, முன் நிற்கும் ஒருவரை நோக்கியோ, சிலரை நோக்கியோ, பலரை நோக்கியோ, பல்லாயிரக்கணக்கானவரை நோக்கியோ நிகழ்வதாய் இருக்கும்.
(ii) எதிரே இருப்பவர் எத்தனை பேர் என்றாலும் 'பேச்சுமொழிக்கு' ஈன்று சில 'தகுதிகள்' அமைந்துவிடுகின்றன.
(iii) பேச்சைக் கேட்பவர் பேசுகிறவர் என்ன கருத்தை, என்ன செய்தியைச் சொல்ல முயல்கிறார் என்பதில் தான் கவனம் செலுத்துவாரே தவிர, அவர் பேச்சில் ஒருமைபன்மை ஒழுங்குற அமைத்துள்ளனவா, கருத்தைச் சுமந்து வருகின்ற சொற்றொடரிலுள்ள சொற்கள் ஒழுங்குமுறையில் அமைந்துள்ளனவா, எழுத்தின் ஒலிப்பு முறை தவறின்றி அமைந்துள்ளதா என்று கவனிக்கமாட்டார்
(iv) ஆனால், எழுத்து வடிவில் ஒரு நூலினைப் படிக்கையில், அந்நூல் என்ன கூறுகிறது என்பதோடு, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை ஆகியன இல்லாமல் அமைந்துள்ளனவா என்பதையும் அறிகிறோம்.
(v) எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை ஆகியன உள்ளனவா என்னும் நோக்கில் நாம் படிக்கவில்லை என்றாலும், இடறும் கற்கள் போல அவை நமக்குத் தோன்றி, படிக்கும் வேகத்தைத் தடை செய்கின்றன.
(vi) இலக்கணம், இலக்கியம் கற்ற பெருமக்கள் அறியக்கூடிய செறிவான அரிய, சொற்களால் நூல்நடை அமைவதே சிறந்தது என்று கருதுவது தவறு.
(vii) பலரும் அறிந்த எளிய சொற்களில் நூல்நடை அமைவதே பெரிதும் வரவேற்கத்தக்கது,
(viii) அது கருத்தைப் பரவலாய் எல்லாரும் அறியச்செய்ய ஏற்ற வழியாகும்.
12.
(d)
13.
(c)
14.
(c)
15.
(d)
கோதை
16.
(a)
இராசேந்திரன்
17.
(a)
வால்ட் விட்மன்
18.
(d)
இருபத்து இரண்டு
19.
(d)
உயிர்த்தெழும் காலத்துக்காக
20.
(d)
கவிதை.
21.
(c)
எழுத்து மொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது.
22.
ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
விரல்முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம்
எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards