11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
Class 11 Revision Exam
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ஒரு வணிகர் வணிகத்தை தொடங்குவதன் முக்கிய நோக்கம் __________________ ஈட்டுவதாகும்.
இலாபம்
நட்டம்
செலவுகள்
நற்பெயர்
2.
வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
இவை எதுவுமில்லை
3.
கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________
ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை
இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்
இவை இரண்டும்
இரண்டும் இல்லை
4.
கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________.
இருப்பு கீ/கொ
இருப்பு கீ/இ
இருப்பு மு/தூ
இருப்பு பி/தூ
5.
________ குறிமுறைகள்,காசோலை,இடாப்பு போன்ற பல மூல ஆவணங்கள் முதன்மையாக குறிப்பிடப்படுகிறது.
தொடர்ச்சியான
தொகுப்புக்
மதியோட்டு
இவை அனைத்தும்
6.
நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது?
இலாபத்திலிருந்து
முதலிலிருந்து
எடுப்பிலிருந்து
கை ரொக்கத்திலிருந்து
7.
ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது
பற்றுத்தன்மை
வரவப்புதன்மை
ரொக்கத்தன்மை
இவற்றில் ஏதும் இல்லை
8.
இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.
அடக்க விலையில்
சந்தை விலையில்
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
9.
கணினியை கணக்கியலில் பொதுவாக உபயயோகப்படுத்தப்படும் பகு
வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்
சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்
பண்டகச் சாலைக் கணக்கியல்
மேலே கூறிய அனைத்தும்
10.
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
கொள்முதலோடு கூட்டப்படும்
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
முதலோடு கூட்டப்படும்
முதலிலிருந்து கழிக்கப்படும்
11.
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
மேற்கூறிய எதுவுமில்லை
12.
கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்முதல் கணக்கு
அனாமத்துக் கணக்கு
கடனீந்தோர் கணக்கு
மேற்கண்டது ஏதும் இல்லை
13.
நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?
இலாப நட்டக் கணக்கு
நிலைச் சொத்து கணக்கு
தேய்மானக் கணக்கு
வங்கி கணக்கு
14.
பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல
காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு
சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
15.
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்
கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்
16.
கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
18.
GAAP என்பது:
பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
இவற்றுள் ஏதுமில்லை
19.
ரொக்க ஏடு ஒரு
துணை ஏடு
முதன்மை ஏடு
உரிய குறிப்பேடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
21.
இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?
22.
கணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.
23.
இடாப்பு என்றால் என்ன?
24.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
25.
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அவற்றைத்
திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.
(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.350 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்திலுள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தம் ரூ.420 பேரேட்டில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(இ) கொள்முதல் ஏட்டின் ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகை ரூ.5,353 அடுத்த பக்கத்திற்கு முன் எடுத்து எழுதும் போது ரூ.5,533 என எழுதப்பட்டுள்ளள்ளது.
(ஈ) சம்பள சம்பளம் ரூ.2,400 பேரேட்டில் ரூ.24,000 என எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) செம்பியன்மாதேவியிடமிருந்து கடனுக்கு ரூ.180 க்கு சரக்கு வாங்கியது அவர் கணக்கில் ரூ.1,800 என எடுத்து எழுதப்பட்டுள்ளது
26.
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
27.
கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.
| இயந்திரம் வாங்கிய விலை | ரூ. 2,00,000 |
| மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் | ரூ. 50,000 |
| எதிர்நோக்கும் இறுதி மதிப்பு | ரூ. 15,000 |
| எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் | 5 வருடங்கள் |
28.
வரவு குறிப்பு என்றால் என்ன?
29.
குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்பதன் பொருள் என்ன?
30.
வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?
31.
குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.
| ரொக்கம் | ரூ 2,000 |
| இயந்திரம் | ரூ 50,000 |
| அறைகலன் | ரூ 5,000 |
| கடனீந்தோர்கள் | ரூ 13,000 |
| கடனாளிகள் | ரூ 18,000 |
32.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
33.
31.12.2016 அன்று ஜெயின் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இறுதிக் கணக்குகள் தயார் செய்யவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| முதல் | 20,000 | அலுவலக ஊதியம் | 6,600 |
| கடனாளிகள் | 8,000 | நிறுவுகைச் செலவுகள் | 4,500 |
| கடனீந்தோர் | 10,500 | விற்பனைச் செலவுகள் | 2,300 |
கொள்முதல் |
60,000 | அறைகலன் | 10,000 |
| விற்பனை | 80,000 | வங்கி ரொக்கம் | 2,400 |
| ஜெயினுக்குரிய வருமான வரி செலுத்தியது | 500 | இதர வரவுகள் | 600 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 12,000 | எடுப்புகள் | 4,800 |
சரிக்கட்டுதல்கள்
(அ) 2016 டிசம்பர் 31 அன்று கொடுபட வேண்டிய சம்பளம்பளம் ரூ 600
(ஆ) அறைகலன் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
(இ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க வேண்டும்.
(ஈ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 14,000
34.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் | 21,05,000 | அளித்த தள்ளுபடி | 30,000 |
| வியாபாரச் செலவுகள் | 20,000 | அலுவலக மின் கட்டணம் | 19,800 |
| விற்பனை மீதான தூக்குக்கூலி | 1,00,000 | பெற்ற கழிவு | 14,400 |
| அலுவலகச் சம்பளம் | 2,38,000 | கடன் மீதான வட்டி | 22,000 |
| அலுவலக அஞ்சல் கட்டணம் | 2,200 | அலுவலக எழுதுபொருள் | 14,000 |
| சட்டச் செலவுகள் | 4.000 | விற்பனை மீதான ஏற்றுமதி வரி | 23,000 |
| தணிக்கையாளர் கட்டணம் | 16,000 | இதர வரவுகள் | 5,000 |
| நன்கொடை அளித்தது | 11,000 | விற்பனை குறித்த பயணச் செலவுகள் | 66,000 |
| பற்பலச் செலவுகள் | 3,600 | விற்பனைச் செலவுகள் | 53,200 |
35.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்
| A | B | C | D | E | F | |
|---|---|---|---|---|---|---|
| 1 | Asset | Cost of purchase | Installation charge | Transportation charge | Salvage value | Life in years |
| 2 | Machinery | 200000 | 20000 | 5000 | 25000 | 10 |
| 3 | Furniture | 50000 | 4000 | 2000 | 5000 | 8 |
36.
ஜுலை 1, 2015 ஒரு நிறுவனம் ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 20% தேய்மானம் நீக்கப்பட வேண்டும். நிறுவனம் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கிறது. 31.12.2017 வரை இயந்திரக் கணக்கு தயாரிக்கவும்.
37.
பின்வரும் செலவினங்களை முதலினம், வருவாயினம், நீள்பயன் வருவாயினச் செலவினங்களாக, வகைப்படுத்தவும்.
(i) மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு.
(ii) கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம்.
(iii) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு.
38.
இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.
(அ) விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ.2,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) இயந்திரம் ரூ.3,000-க்கு கொள்முதல் செய்தது கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
(இ) மதிக்கு ரூ.450-க்கு சரக்கு விற்றது அவரது கணக்கில் ரூ.540என எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் ம் மொத்தம் ரூ.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.1,122 பேரேட்டில் ரூ.1,222 என எடுத்தெழுதப்பட்டுள்ளது
39.
ராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.
| 2018 மார்ச் 1 | செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.9,000 |
| 5 | முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது | 4,500 |
| 9 | ரொக்க விற்பனை | 6,000 |
| 18 | மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது | 3,200 |
| 23 | முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு அவரிடமிருந்து தொகை பெறப்பட்டது |
4,000 |
40.
சந்திரன் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய 2018 மார்ச் மாத நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவை களைக் கொண்டு குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.
| மார்ச் | ரூ | |
| 1 | ரொக்கத்துடன் வியாபாரம் தொடங்கியது | 4,00,000 |
| 2 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | 3,00,000 |
| 3 | இரவியிடமிருந்து சரக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு இணைய வங்கி மூலம் செலுத்தப்பட்டது | 90,000 |
| 4 | குமாருக்கு விற்பனை செய்யப்பட்டது அத்தொகையை அவர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் செலுத்தினார் | 10,000 |
| 5 | விவேக்கிற்கு விற்பனைச் செய்ததற்கான தொகையினை, அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்துகிறார் | 60,000 |
| 6 | கீர்த்தனாவிற்கு சரக்குகள் விற்றத் தொகை கடன் அட்டை மூலம் செலுத்தப்பட்ட து | 50,000 |
| 7 | பங்காதாயம் நேரடியாக வங்கியால் பெறப்பட்டது | 2,000 |
| 8 | தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் ரொக்கம் எடுத்தது | 3,000 |
| 9 | சம்பளம் மின்னனு பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டது | 6,000 |
| 10 | அறக்கட்டளைக்கு கிரிக்கெட்மட்டைகள் வழங்கியது | 10,000 |
41.
ஆனந்த் அவர்களின் 2017 மார்ச் 31 ஆம் நாளன்றைய ரொக்க ஏடு 1,12,500 இருப்பைக் காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்
(அ) 2017 மார்ச் 28 அன்று விடுத்த காசோலை ரூ.23,000 -இல் ரூ 9,000 மதிப்பிலான காச�ோலை மட்டுமே இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
(ஆ) 2017 மார்ச் 27 அன்று வங்கியில் செலுத்திய காசோலை ரூ 6,300. 2017 ஏப்ரல் 5 அன்று வசூலித்து வரவு வைக்கப்பட்டது.
(இ) பெ பெற்ற காசோலை ரூ 12,000 ரொக்க ஏட்டில் பதியப்பெற்றிருப்பினும் வங்கியில் செலுத்தப்படவில்லை.
(ஈ) 2017 மார்ச் 30 அன்று வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது ரூ 2,000
(உ) 2017 மார்ச் 30, அன்று ஏற்கனவே வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ 3,000 மதிப்புள்ள மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது குறித்து எந்தப் பதிவும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(ஊ) வங்கியால் நேரடியாக பெறப்பட்ட கடன் பத்திரம் மீதான வட்டி ரூ 700
(எ) ரொக்க விற்பனை ரூ 4000 தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்பட்டது.
42.
சோழன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவுசெய்க.
| 2017 ஏப்ரல் | ரூ | |
| 1 | சோழன் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 50,000 |
| 2 | வங்கியில் நடப்புக் கணக்கு துவங்கியது | 32,000 |
| 10 | ரொக்க விற்பனை | 14,000 |
| 11 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | 10,000 |
| 19 | அலுவலகத் தேவைக்காக கணிப்பொறி காசோலை மூலம் வாங்கியது | 24,000 |
| 22 | வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது | 9,000 |
| 25 | காசோலை மூலம் சரக்குகள் வாங்கியது | 7,600 |
| 27 | வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி, வங்கி எடுத்துக்கொண்டது | 350 |
| 28 | அலுவலக பணியாளர்கள் சம்பளத்தை மின்னணு தீர்வை முறை மூலம் செலுத்தியது | 30,000 |
| 30 | வீட்டுச் செலவினங்களுக்காக ரொக்கம் எடுத்துக் கொண்டது | 6,500 |
43.
பிரபு என்பவரின் ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும். ஏதேனும் வேறுபாடு இருப்பின் அதனை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி | 250 | பெற்ற கடன் | 7,000 |
| கை ரொக்கம் | 4,200 | மின் கட்டணம் | 12,000 |
| முதல் | 50,000 | கழிவு கொடுத்தது | 3,000 |
| சம்பளம் | 12,000 | கொள்முதல் | 29,050 |
| அறைகலன் | 7,500 | விற்பனை | 35,000 |
44.
பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:
| 2017 மார்ச் 1 |
மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம் | |
| 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் | |
| இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக | |
| மார்ச் 7 | இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம் | |
| 10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் | |
| மார்ச் 21 | காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் | |
| 15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம் | |
| இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250 | |
| இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக. | |
| மார்ச் 25 | சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து |
| 2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம் அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது. |
45.
கணக்கியலின் பணிகளை விளக்குக.
46.
இறுதிக் கணக்குகள் என்றால் என்ன? அதன் பகுதிகள் யாவை?
47.
முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி குறித்து சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
48.
ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை 2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
(இ) ரொக்க ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
(ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
49.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
| ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.62,000 |
| 3 | ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது | ரூ.12,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.10,000 |
| 12 | கூலி ரொக்கமாகச் செலுத்தியது | ரூ.4,000 |
| 25 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | ரூ.6,000 |
50.
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
(அ) ஆனந்துக்கு ரூ.1,000 த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது, விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை.
(ஆ) இயந்திரம் பழுதுபார்ப்புக்கு ரூ.400 செலுத்தியது, தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) காந்திராஜ்-க்கு ரூ.2,000 சம்பளம் செலுத்தியது, பேரபேரேட்டில் தவறாக அவருடைய கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
51.
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.
52.
பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஜன | ரூ | |
| 1 | கை இருப்பு ரொக்கம் | 11,200 |
| 5 | இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது | 300 |
| 7 | வாடகை செலுத்தியது | 30 |
| 8 | ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது | 300 |
| 10 | மோகனுக்கு செலுத்தியது | 700 |
| 27 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 200 |
| 31 | சம்பளம் கொடுத்தது | 100 |
53.
“இருப்பாய்வு என்பது கணக்கேடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் முதல் ஆதார ஆவணமாகும்” என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? காரணம் கூறவும்.
54.
கணக்கு என்றால் என்ன? கணக்குகளை வகைப்படுத்தி, தகுந்த உதாரணங்களுடன் கூறுக.
1.
(a)
இலாபம்
2.
(b)
வருவாயினச் செலவு
3.
(a)
ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை
4.
(a)
இருப்பு கீ/கொ
5.
(a)
தொடர்ச்சியான
6.
(b)
முதலிலிருந்து
7.
(a)
பற்றுத்தன்மை
8.
(d)
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
9.
(d)
மேலே கூறிய அனைத்தும்
10.
(d)
முதலிலிருந்து கழிக்கப்படும்
11.
(a)
முதலினச் செலவு
12.
(b)
அனாமத்துக் கணக்கு
13.
(b)
நிலைச் சொத்து கணக்கு
14.
(d)
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
15.
(a)
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
16.
(b)
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
17.
(c)
18.
(b)
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
19.
(d)
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
(b)
காரியதரிசிகளின் கணக்கியல்
21.
ஒரு வணிக நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை கீழ்க்கண்ட இரண்டு வழிமுறைகளில் தயாரிக்கலாம்.
(அ) கிடைமட்ட முறையில்
(ஆ) செங்குத்து முறையில்
22.
1. கணக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தயாரிப்பதை இக்கருத்துக்கு குறிக்கிறது.
2. உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், கடனீந்தோர், பணியாளர்கள் மற்றும் அரசு ஆகியோர் அவ்வபோது நிறுவனங்களின் செயல்திறனை அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வதால் கணக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொதுவாக ஒரு ஆண்டிற்கு தயாரிக்கப்பட வேண்டும்.
3. இக்கருத்து, உரிமையாளர்களுக்கு வணிகத்தின் வருமானத்தை பகிர்ந்தளிக்கவும் மற்றும் வெவ்வேறு காலங்களில் நிறுவனத்திறனை ஒப்பிட்டு பார்க்கவும், மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.
23.
சரக்கை விற்கும் பொழுது விற்பவர் ஒரு அறிக்கை போன்ற சீட்டைத் தயாரித்து வாங்குநரிடம் அளிப்பார் இதில் பற்றிய விவரம், அளவு, விலை, எடை, குறியீடு, மொத்தம் செலுத்த வேண்டிய தொகை, அளித்த தள்ளுபடி, நிகரமாக செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். இவ்வறிக்கையே இடாப்பு எனப்படுகிறது.
24.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
25.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 350 | ||
| விற்பனை க/கு | 350 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.350 குறைவாக கூட்டப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஆ | அளித்த தள்ளுபடி க/கு | ப | 420 | ||
| அனாமத்துக் க/கு | 420 | ||||
| (அளித்த தள்ளுபடியின் கூட்டுத்தொகை பேரேட்டில் எடுத்து எழுத தவறியது திருத்தம் செய்தது) | |||||
| இ | கொள்முதல் க/கு | ப | 1,500 | ||
| அனாமத்துக் க/கு | 1,500 | ||||
| (கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை பேரேட்டில் எடுத்து எழுத தவறியது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | அனாமத்துக் க/கு | ப | 21,600 | ||
| சம்பளக் க/கு | 21,600 | ||||
| (சம்பளக் கணக்கில் கூடுதல் தொகை எடுத்துக் பதிவு செய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | செம்பியன்மாதேவி க/கு | 1,620 | |||
| அனாமத்துக் க/கு | 1,620 | ||||
| (செம்பியன்மாதேவி கணக்கில் கூடுதல் தொகை பதிவு செய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) |
26.
(i) வணிகத்தின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் வருவாயின வரவுகளாகும்.
(ii) இது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது. இவ்வாறு பெறப்படும் தொகையானது பொதுவாக சிறிய அளவிலான தொகையாக இருக்கும்.
உதாரணங்கள்
1. சரக்கு விற்பதனால் கிடைக்கும் தொகை
2. முதலீடுகள் மீது பெற்ற வட்டி
27.

\(={2,50,000-15,000\over 5}={2,35,000\over 5}\)= ரூ. 47,000

\(={47,000\over 2,50,000}\times=18.8\% \)
28.
வரவுக்குறிப்பு என்பது விற்பனையாளர், வாடிக்கையாளரிடமிருந்து சரக்கினைப் பெற்றுக் கொண்டதற்கான அறிக்கை ஆகும். இதில், திருப்பிப்பெறப்படும் சரக்கின் விவரம், திருப்பும் அளவு மற்றும் அதன் மதிப்பு போன்ற விவரங்கள் இருக்கும்.
29.
1. குறிப்பேடு என்பது ஒரு தோற்றப்பதிவேடு. இதில் வணிக நடவடிக்கைகள் நாள் வரிசையில் பதிவுச் செய்யப்படுகின்றன. அதாவது, நடவடிக்கைகள் நிகழ்ந்த கால வரிசையில் பதியப்படுகின்றன.
2. நடவடிக்கைகள் முதன் முதலில் குறிபற்றில் தான் மதியப்படுகின்றன. குறிப்பேட்டில் பதிவு செய்வதற்கு ஆதார ஆவணங்கள் அடிப்படையாக உள்ளன.
3. நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்வதை குறிப்பிட்டு பதிவு என்கிறோம்.குறிப்பேட்டில் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் முறையினை குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்கிறோம்.
30.
1. பொருளை அளிப்பவர், அப்பொருளை வாங்கியவருக்கு பட்டியல் விலையில் குறைதல் அல்லது விலைபட்டியலில் உள்ள விலையைவிட குறைவாக வழங்கினால் அதுவே வியாபாரத் தள்ளுபடி ஆகும்.
2. இது வியாபார வழக்கப்படி அல்லது வாங்குபவர் அதிக எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும்போது அளிக்கப்படுகிறது. இத்தள்ளுபடி இடாப்பில் கழித்துக் காட்டப்படும்.
31.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| ரொக்கக் க/கு | ப | 2,000 | |||
| இயந்திரக் க/கு | ப | 50,000 | |||
| அறைகலன் க/கு | ப | 5,000 | |||
| கடனாளிகள் க/கு | ப | 18,000 | |||
| கடனீந்தோர் க/கு | 13,000 | ||||
| முதல் க/கு | 62,000 | ||||
| (இருப்புத் தொகை) (சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கொணரப்பட்டது) |
32.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
33.
ஜெயினின் ஏடுகளில்
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| த�ொடக்கச் சரக்கிருப்பு | 12,000 | விற்பனை | 80,000 | ||
| கொள்முதல் | 60,000 | இறுதிச் சரக்கிருப்பு | 14,000 | ||
| மொத்த இலாபம் கீ/இ | 22,000 | ||||
| 94,000 | 94,000 | ||||
| அலுவலக ஊதியம் | 6,600 | ம�ொத்த இலாபம் கீ/கொ |
22,000 | ||
| கூட்டுக க�ொடுபட வேண்டியது | 600 | 7,200 | இதர வரவுகள் | 600 | |
| நிறுவுகைச் செலவுகள் | 4,500 | ||||
| விற்பனைச் செலவுகள் | 2,300 | ||||
| அறைகலன் மீது தேய்மானம் (10000 x 10/100) | 1,000 | ||||
| முதல் மீது வட்டி(20,000 x 5/100) | 1,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
6,600 | ||||
| 22,600 | 22,600 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 20,000 | அறைகலன் | 10,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 6,600 | கழிக்க: தேய்மானம் | 1,000 | 9,000 | |
| கூட்டுக: முதல் மீது வட்டி | 1,000 | இறுதிச் சரக்கிருப்பு | 14,000 | ||
| 27,600 | கடனாளிகள் | 8,000 | |||
| கழிக்க: எடுப்புகள் (4,800 + வருமான வரி 500) | 5,300 | 22,300 | வங்கி ரொக்கம் | 2,400 | |
| கடனீந்தோர் | 10,500 | ||||
| கொடுபட வேண்டிய அலுவலக ஊதியம் | 600 | ||||
| 33,400 | 33,400 |
34.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| வியாபாரச் செலவுகள் | 20,000 | மொத்த இலாபம் கீ/கொ | 21,05,000 |
| விற்பனை மீதான தூக்குக்கூலி | 1,00,000 | பெற்ற கழிவு | 14,400 |
| அலுவலகச் சம்பளம் | 2,38,000 | இதர வரவுகள் | 5,000 |
| அலுவலக அஞ்சல் கட்டணம் | 2,200 | ||
| சட்டச் செலவுகள் | 4,000 | ||
| தணிக்கையாளர் கட்டணம் | 16,000 | ||
| நன்கொடை அளித்தது | 11,000 | ||
| பற்பலச் செலவுகள் | 3,600 | ||
| விற்பனைச் செலவுகள் | 53,200 | ||
| அளித்த தள்ளுபடி | 30,000 | ||
| அலுவலக மின் கட்டணம் | 19,800 | ||
| கடன் மீதான வட்டி | 22,000 | ||
| அலுவலக எழுதுபொருள் | 14,000 | ||
| விற்பனை மீதான ஏற்றுமதி வரி | 23,000 | ||
| விற்பனை குறித்த பயணச் செலவுகள் | 66,000 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 15,01,6000 | ||
| 21,24,400 | 21,24,400 |
35.
செயல்முறை
(i) MS-Excel ல் புதிய விரிதாளை திறக்கவும்
(ii) எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உள்ளீடு செய்யவும்
(iii) அறை G1ல் ‘Total Cost’ எனவும் அறை H1 ல் ‘ Annual Depreciation’ எனவும் உள்ளீடு செய்யவும்
(iv) அறை G2 ல் கீழ்க்கண்ட சூத்திரத்தின்படி ம�ொத்த அடக்கவிலையை கணக்கிடவும்
= sum (B2: D2), அறை G3ல் இந்த சூத்திரத்தை நகலெலெடுக்கவும்
(v) அறை H2ல் கீழ்க்கண்ட சூத்திரத்தின்படி ஆண்டுத் தேய்மானத்தைக் கணக்கிடவும்
=SLN (G2,E2,F2)
அறை H3ல் இந்த சூத்திரத்தை நகலெலெடுக்கவும்
| A | B | C | D | E | F | G | H | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | Asset | Cost of purchase | Installation charge | Transportation charge | Salvage value | Life in years | Total cost | Annual depreciation |
| 2 | Machinery | 200000 | 20000 | 5000 | 25000 | 10 | 225000 | 20,000 |
| 3 | Furniture | 50000 | 4000 | 2000 | 5000 | 8 | 56000 | 6,375 |
36.
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 1.07.2015 | வங்கி | 1,00,000 | 31.12.2015 | தேய்மானம் க/கு (1,00,000 x \({20\over 100}\times {6\over 12}\)) | 10,000 |
| 31.12.2015 | இருப்பு கீ/இ | 90,000 | |||
| 1,00,000 | 1,00,000 | ||||
| 1.1.2016 | இருப்பு கீ/கொ | 90,000 | 31.12.2016 | தேய்மானம் க/கு (90,000 x \({20\over 100}\)) | 18,000 |
| 31.12.2016 | இருப்பு கீ/இ | 72,000 | |||
| 90,000 | 90,000 | ||||
| 1.1.2017 | இருப்பு கீ/கொ | 72,000 | 31.12.2017 | தேய்மானம் க/கு | 14,400 |
| 31.12.2017 | இருப்பு கீ/இ | 57,600 | |||
| 72,000 | 72,000 | ||||
| 1.1.2018 | இருப்பு கீ/கொ | 57,600 |
37.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு. | நீள்பயன் வருவாயினச் செலவு |
| (ii) | கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம். | முதலினச் செலவு |
| (iii) | பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு. | முதலினச் செலவு |
38.
| விவரம் | பே.ப. எ | பற்று ரூ | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 2,000 | ||
| விற்பனைக் க/கு | 2,000 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாகக் கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | இயந்திரக் க/கு | ப | 3,000 | ||
| கொள்முதல்க/கு | 3,000 | ||||
| (இயந்திரம் வாங்கியது தவறாக கொள்முதல் ஏட்டில் பதிவுசெய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| இ | அனாமத்துக் க/கு | ப | 9 | ||
| மதி க/கு | 9 | ||||
| (மதி கணக்கில் கூடுதலாகப் பற்று வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| ஈ | கொள்முதல் திருப்பக் க/கு | ப | 200 | ||
| அனாமத்துக் க/கு | 200 | ||||
| (கொள்முதல் திருப்ப ஏட்டில் அதிகமாகக் கூட்டுத்தொகை எடுக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| உ | விற்பனைக் க/கு | ப | 100 | ||
| அனாமத்துக் க/கு | 100 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை அதிகமாக எடுத்து எழுதியது திருத்தம் செய்யப்பட்டது.) |
39.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2018 | தொடக்கக் க/கு | ப | 9,000 | ||
| மார்ச் 1 | விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
9,000 | |||
| 5 | முரளி க/கு | ப | 4,500 | ||
| விற்பனை க/கு (கடன் விற்பனை) |
4,500 | ||||
| 9 | ரொக்கக் க/கு | ப | 6,000 | ||
| விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
6,000 | ||||
| 18 | கொள்முதல் க/கு | ப | 3,200 | ||
| மணி க/கு (கடன் கொள்முதல்) |
3,200 | ||||
| 23 | ரொக்கக் க/கு | ப | 4,000 | ||
| அளித்த தள்ளுபடி க/கு | ப | 500 | |||
| முரளி க/கு (முரளியின் கணக்கு தீர்க்கப்பட்டது) |
4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | விற்பனை க/கு | 9,000 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 19,000 | ||
| 9 | விற்பனை க/கு | 6,000 | |||||
| 23 | முரளி க/கு | 4,000 | |||||
| 19,000 | 19,000 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 19,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 19,500 | 2018 மார்ச் 1 | ரொக்கக் க/கு | 9,000 | ||
| 5 | முரளி க/கு | 4,500 | |||||
| 9 | ரொக்கக் க/கு | 6,000 | |||||
| 19,500 | 19,500 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 19,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | விற்பனை க/கு | 4,500 | 2018 மார்ச் 23 | ரொக்கக் க/கு | 4,000 | ||
| 23 | அளித்த தள்ளுபடி | 500 | |||||
| 4,500 | 4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 18 | மணி க/கு | 3,200 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3,200 | ||
| 3,200 | 3,200 | ||||||
| 2018 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 3,200 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3,200 | 2018 மார்ச் 18 | கொள்முதல் க/கு | 3,200 | ||
| 3,200 | 3,200 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 3,200 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 23 | முரளி க/கு | 500 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 500 | ||
| 500 | 500 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 500 |
40.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | ரொக்கக் க/கு சந்திரன் முதல் க/கு (சந்திரன் முதலிட்டது) |
ப | 4,00,000 | 4,00,000 | |
| 2 | வங்கி க/கு ரொக்கக் க/கு (வங்கியில் பணம் செலுத்தியது) |
ப | 3,00,000 | 3,00,000 | |
| 3 | கொள்முதல் க/கு வங்கி க/கு (கொள்முதல் செய்து இணைய வங்கி மூலம் பணம் செலுத்தியது) |
ப | 90,000 | 90,000 | |
| 4 | வங்கி க/கு விற்பனை க/கு (சரக்கு விற்பனை செய்து பணம் வைப்பு இயந்திரம் மூலம் ரொக்கம் பெற்றது) |
ப | 10,000 | 10,000 | |
| 5 | வங்கி க/கு விற்பனை க/கு (விற்பனை செய்து எடுப்பு அட்டை மூலம் பணம் பெற்றது) |
ப | 60,000 | 60,000 | |
| 6 | வங்கி க/கு விற்பனை க/கு (சரக்கு விற்பனை செய்து கடன் அட்டை மூலம் பணம் பெற்றது) |
ப | 50,000 | 50,000 | |
| 7 | வங்கி க/கு பங்காதாயம் க/கு (பங்காதாயம் வங்கியால் நேரடியாக பெறப்பட்டது) |
ப | 2,000 | 2,000 | |
| 8 | ரொக்கக் க/கு வங்கி க/கு (தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் எடுத்தது) |
ப | 3,000 | 3,000 | |
| 9 | சம்பளக் க/கு வங்கி க/கு (மின்னனு பரிமாற்றம் மூலம் சம்பளம் வழங்கியது) |
ப | 6,000 | 6,000 | |
| 10 | நன்கொடை க/கு கொள் முதல் க/கு (அறக்கட்டளைக்காக கிரிக்கெட் மட்டைகள் நன்கொடையாக வழங்கியது) |
ப | 10,000 | 10,000 |
41.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 1,12,500 | |
| கூட்டுக: | ||
| காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தப்படாதது |
14,000 | |
| வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது |
2,000 | |
| கடன் பத்திரம் மீதான வட்டி | 700 | 16,700 |
| 1,29,200 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்திய காசோலை | 6,300 | |
| பெற்ற காசோலை வங்கியில் செலுத்தப்படாதது |
12,000 | |
| மாற்றுச் சீட்டு தள்ளுபடி செய்யப்பட்டது |
3,000 | |
| தவறுதலாக பதியப்பட்டது | 4,000 | 25,300 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 1,03,900 |
42.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | பெற்ற தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | ||||||||
| 2017 ஏப் 1 | சோழன் முதல் க/கு | 50,000 | 2017ஏப் 2 | வங்கி க/கு | 'எ' | 32,000 | |||||||
| 2 | ரொக்க க/கு | 'எ' | 32,000 | 11 | வங்கி க/கு | 'எ' | 10,000 | ||||||
| 10 | விற்பனை க/கு | 14,000 | 19 | கணிப்பொறி க/கு | 24,000 | ||||||||
| 11 | ரொக்க க/கு | 'எ' | 10,000 | 22 | ரொக்க க/கு | 'எ' | 9,000 | ||||||
| 22 | வங்கி க/கு | 'எ' | 9,000 | 25 | கொள்முதல் க/கு | 7,600 | |||||||
| 30 | இருப்பு கீ/கொ | 28,950 | 27 | வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி | 350 | ||||||||
| 28 | சம்பளம் | 30,000 | |||||||||||
| 30 | எடுப்புகள் க/கு | 6,500 | |||||||||||
| 30 | இருப்பு கீ/இ | 24,500 | |||||||||||
| - | 73,000 | 70,950 | - | 73,000 | 70,950 | ||||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 24,500 | மே 1 | இருப்பு கீ/கொ | 28,950 | ||||||||
43.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | அளித்த தள்ளுபடி | 250 | ||
| 2 | கை ரொக்கம் | 4,200 | ||
| 3 | முதல் | 50,000 | ||
| 4 | சம்பளம் | 12,000 | ||
| 5 | அறைகலன் | 7,500 | ||
| 6 | பெற்றக் கடன் | 7,000 | ||
| 7 | மின் கட்டணம் | 12,000 | ||
| 8 | கழிவு கொடுத்தது | 3,000 | ||
| 9 | கொள்முதல் | 29,050 | ||
| 10 | விற்பனை | 35,000 | ||
| 11 | அனாமத்துக் கணக்கு | 24,000 | ||
| மொத்தம் | 92,000 | 92,000 |
44.
| நாள் | விவரம் | இடாப்பு எண் |
பே.ப.எ | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | மோ கன் அறைகலன் நிறுவனம், மதுரை | ||||
| மார்ச் 1 | 20 நாற்காலிகள் ஒன்று ரூ. 450 வீதம் | 9,000 | |||
| 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் | 2,000 | ||||
| 11,000 | |||||
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி @ 10% | 1,100 | 9,900 | |||
| மார்ச் 7 | ரமேஷ் நிறுவனம், ராயப்பேட்டை | ||||
| 2 மர நாற்காலி ஒன்று ரூ.500 வீதம் | 1,000 | ||||
| 10 சுழலும் நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் | 2,000 | ||||
| 3,000 | |||||
| கூட்டுக: வண்டிக்கட்டணம் & அனுப்புகைச் செலவுகள் | 150 | 3,150 | |||
| மார்ச் 21 | கமால் நிறுவனம், காரைக்கால் | ||||
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் | 7,500 | ||||
| 15 இரும்பு அலமாரிகள் ஒன்று ரூ. 1,500 வீதம் | 22,500 | ||||
| 30,000 | |||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி ஒன்று 10% | 3,000 | ||||
| 27,000 | |||||
| கூட்டுக: கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் | 250 | 27,250 | |||
| கொள்முதல் க/கு ப | 40,300 | ||||
45.
கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன:
(i) அளவிடுதல்:
வணிக நடவடிக்கைகள் குறித்து முறையான ஆவணங்களை வைத்திருத்தல், பதிவு செய்தல் எடுத்தெழுதுதல், கடைசியாக இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் ஆகியவையே கணக்கியலின் முதன்மையான பணியாகும்.
(ii) முன்னறிதல்:
வணிக நிறுவனங்களின் எதிர்கால செயல் திறன் மற்றும் நிதிநிலை பற்றி கணக்கியலின் பல்வேறு கருவிகளின் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது.
(iii) ஒப்பிடுதல்:
கணக்கியல், நிகழ்ந்த செயல்திறனுடன், திட்டமிட்ட செயல்திறனை ஒப்பிட உதவுகிறது. மேலும், இது கணக்கியல் கொள்கைகளுடனும் ஒப்பிட உதவுகிறது.
(iv) முடிவெடுத்தல்:
திட்டமிடுதல், செயல்திறன் மதிப்பீடு, கட்டுப்பாடு ஆகிய மேலாண்மை பணிகளுக்கான தகவல்களை நிர்வாகத்திற்கு கணக்கியல் வழங்குகிறது.
(v) கட்டுப்பாடு:
கணக்கியல் ஒரு கட்டுப்பாட்டுக்கு கருவியாக இருப்பதால், கையாண்ட பல்வேறு வழிமுறைகள் குறித்த பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, கருத்து தெரிவிக்க முடிகிறது. மேலும், வணிக கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்யும் கருவியாக இது பயன்படுகிறது.
46.
(i) வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் வணிக நடவடிக்கைகளின் முடிவுகளையும், நிதி சார்ந்த நிலைப்பு தன்மையும் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகின்றன. அதாவது வணிகத்தின் இலாபத் தன்மையையும் நிதிநிலையையும் அறிந்து கொள்ள விரும்புகின்றன. அதாவது, வணிகத்தின் இலாபத் தன்மையையும் நிதிநிலையையும் அறிந்து கொள்ள விரும்புகின்றன. இவற்றை இறுதிக் கணக்குகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
(ii) இருப்பாய்வு காட்டும் பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் அடிப்படையில் இறுதிக் கணக்குகள் ஒவ்வொரு ஆண்டிறுதியில் வழக்கமாக தயாரிக்கப்படுகிறது.
(iii) இறுதிக் கணக்குகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
(அ) வருமான அறிக்கை அல்லது வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு.
(ஆ) நிதி நிலை அறிக்கை அல்லது இருப்புநிலைக் குறிப்பு.
47.
முதல் மீது வட்டி:
| விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|
| முதல் மீது வட்டி க/கு | ப | xxx | ||
| முதல் க/கு | xxx | |||
| (முதல் மீது வட்டி சரிக்கட்டப்பட்டது) |
எடுப்புகள் மீது வட்டி:
| விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|
| முதல் க/கு | ப | xxx | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு | xxx | |||
| (எடுப்புகள் மீது வட்டி சரிக்கப்படப்பட்டது) |
48.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 12,000 | |
| கூட்டுக: காசோலை புத்தகத்திற்கான கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்பட்டவில்லை | 200 | |
| பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம் வங்கியால் பற்று வைக்கப்பட்டது | 1,000 | 1,200 |
| 13,200 | ||
| கழிக்க: வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட பங்காதாயம் | 3,000 | |
| விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 7,000 | |
| ரொக்க ஏட்டின் பற்றிருப்பு தவறுதலாக வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது | 8,200 | 18,200 |
| வங்கி அறிக்கையின் படி சாதகமான இருப்பு | -5,000 |
49.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | முதல் க/கு | 62,000 | 2018 ஜன 3 | கொள்முதல் க/கு | 12,000 | ||
| 10 | விற்பனை க/கு | 10,000 | 12 | கூலி க/கு | 4,000 | ||
| 25 | அறைகலன் க/கு | 6,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 50,000 | |||||
| 72,000 | 72,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
50.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | ஆனந்த் க/கு | ப | 1,000 | ||
| விற்பனைக் க/கு | 1,000 | ||||
| (ஆனந்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதியாதது திருத்தப்பட்டது) | |||||
| ஆ | பழுதுபார்ப்பு க/கு | ப | 400 | ||
| இயந்திரக் க/கு | 400 | ||||
| (பழுதுபார்ப்புச் செலவு தவறாக இயந்திரக் கணக்கில் பற்று வைத்தது திருத்தப்பட்டது) | |||||
| இ | சம்பளக் க/கு | ப | 2,000 | ||
| காந்திராஜ் க/கு | 2,000 | ||||
| (சம்பளம் செலுத்தியது தவறாக காந்திராஜ் கணக்கில் பற்று வைத்தது திருத்தப்பட்டது) |
51.
சொத்தின் அடக்க விலை = 9,000 + 1,000 = ரூ. 10,000
தேய்மான விகிதம் = 15%
சொத்தின் வாங்கிய நாள் = 1.1.2018
சொத்து பயன்படுத்திய மாதங்கள் = 1.1.2018 முதல் 31.3.2018 வரை 3 மாதங்கள்
தேய்மானத் தொகை = 10,000 மீது 15%, 3 மாதங்களுக்கு
= 10,000 × 15% × 3/12 = ரூ. 375
52.
குணால் என்பவரின் ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ. | தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | பே.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 11,200 | ஜன 7 | வாடகை க/கு | 30 | ||
| ஜன | இரமேஷ் க/கு | 300 | ஜன | மோகன் க/கு | 700 | ||
| ஜன | விற்பனை க/கு | 300 | ஜன | அறைகலன் க/கு | 200 | ||
| ஜன | சம்பளம் க/கு | 100 | |||||
| ஜன | இருப்பு கீ/இ | 10,770 | |||||
| 11,800 | 11,800 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 10,770 |
53.
(i) ஆம் இருபாய்வு என்பது கணக்கீடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் ஆதாரமாகும்.
(ii) இரட்டைப் பதிவுமுறையில் கணக்கேடுகளை பராமரிக்கும் அடிப்படைக் கோட்பாடானது ஒவ்வொரு பற்றிற்கும் அதற்கு நிகரான மற்றும் சரியான வரவும், அது போன்று ஒவ்வொரு வரவிற்கும் அதற்கு நிகரான மற்றும் சரியான பற்றும் இருக்க வேண்டும் என்பதாகும்.
(iii) எனவே கணக்குகளை இருப்புக்கட்டும் பொழுது, அதன் பற்று இருப்புகளின் மொத்தமும் மற்றும் வரவு உறுப்புகளின் மொத்தமும் சமமாக இருக்கும்.
(iv)அவ்வாறு பற்று இருப்பின் மொத்த தொகையும் சமமாக இருக்குமேயானால் கணக்கீடுகள் பராமரிப்பு பணியில் ஒரு குறிப்பிட்ட நாளில் பதிவுகளின் கணக்கீடு சரியாக இருக்கிறதா என்பதனை உடனடியாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு சான்றாகவும் அமைகிறது.
54.
1. கணக்கு என்பது கணக்கியலில் அடையாளம் காண உதவும் ஒரு அடிப்படை அலகாகும்.
2. கணக்கு என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நபர் சார்ந்த தகவல்களை ஒரேய இடத்தில ஒரு தலைப்பின் கீழ் ஒழுங்குபடுத்தி வழங்கும் ஒரு பதிவாகும்.
கணக்குகளின் வகைப்பாடு:
இரட்டைப்பதிவு முறையில் பல்வேறு வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் நோக்கில் கணக்குகளை ஆள்சார் க/கு மற்றும் ஆள்சார கணக்கு க/கு எனப் பிரிக்கலாம்.
ஆள்சார் கணக்கு:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது தனிநபர், சட்டமுறை அமைப்பு, பிரதிநிதித்துவ அமைப்பு எனப் பிரிக்கப்படுகிறது.
(i) தனிநபர்:
இது மனிதர்கள் சார்ந்த கணக்கு, எ.கா. ரமேஷ் கணக்கு, ராதா கணக்கு
(ஈ) சட்டமுறை அமைப்பு:
இது மனிதர்கள் அல்லாத சட்டத்தால் ஏற்கப்படும் செயற்கை நபர்கள் சார்ந்த கணக்கு.
எ.கா. வங்கி கணக்கு HMT Ltd., ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
(iii) பிரதிநிதித்துவ அமைப்பு
இது இயற்கை அல்லது செயற்கை தன்மையுடைய நபரையோ அல்லது குழுவையோ குறிக்கிறது.
எ.கா.: கொடுப்பட வேண்டிய சம்பளக் கணக்கு, முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு கணக்கு.
ஆள்சாரா கணக்குகள்:
ஆட்கள் சார்பில்லாக கணக்குகள் அனைத்தும் இதில் அடங்கும். இவைகள் சொத்துக் கணக்கு மற்றும் பெயரளவுக் கணக்கு எனப் பிரிக்கப்படுகிறது.
(i) சொத்து கணக்குகள்:
புலனாகும் மற்றும் புலனாக சொத்துக்களின் கணக்குகள் மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்துக் கணக்குகள் எனப்படுகின்றன.
புலனாகும் சொத்து - எ.கா: நிலம், கட்டிடம், அறைகலன்
புலனாக சொத்து - எ.கா: நற்பெயர், பதிப்புரிமை
(ii) பெயரளவுக் கணக்குகள்:
இக்கணக்குகளுக்கு எவ்வித வருவமும், வடிவமும் கிடையாது.இவைகள் வணிகத்தின் வருமானம் செலவு ஆதாயம் மற்றும் நாட்டம் சார்புடையதாகும்
எ.கா: வாடகை, சம்பளம், கூலி, பங்காதாயம், வட்டி
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards