11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 First Revision Test Model
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வேர் அழுத்தக் கோட்பாட்டினை எழுதுக.
2.
வழிசெல்கள் பற்றி எழுதுக.
3.
செல்சவ்வு தேர்வு கடத்துச் சவ்வாக செய்லபட உதவுவது எது?
4.
கரப்பான் பூச்சியின் இதயத்தின் அமைப்பைக் கூறு.
5.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
6.
எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?
7.
ஒருவரின் கண்பரிசோதகர் அவருடைய கண் உள்ளழுத்தம் அதிகளவில் உள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையின் பெயரென்ன?அதற்குக் காரணமான திரவம் எது?
8.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
9.
10.
11.
வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?
12.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
13.
புரோட்டோசோவா தொகுதியை சார்ந்த ____ என்னும் உயிரி, பெப்ரின் என்ற அபாயகரமான நோயை பட்டுப்புழுக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.
ஏரி அல்லது ஸ்பன் வகை பட்டு
பட்டுத் தொழில்
நொசீமா பாம்பிசிஸ்
பெப்ரின்
14.
கிளைக்கோலைடிக் இழைகளில் மையோசின் ATP யேஸ் செயல்பாடு இருந்தாலும் அதிக அளவு ATP உருவாவதில்லை.
நிதானமான-ஆக்ஸிஜனேற்ற இழைகள்
துரித ஆக்ஸிஜனேற்ற இழைகள்
துரித-கிளைக்கோலைடிக் இழைகள்
கிளைக்கோலைடிக் தசையிழைகள்
15.
பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
16.
இலைத் துளைக்கு அடுத்து உட்புறமாகக் காணப்படுகின்ற காற்றையானது சுவாச அறை அல்லது _____ எனப்படும்.
எபிபிளமா
இலைத்துளை கீழறை
ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்
பாஸ்ட் நார்கள்
17.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
| 1) மனிதச் சிறுநீர் | i) ஆக்சின் B |
| 2) மக்காச்சோள எண்ணெய் | ii) GA3 |
| 3) பூஞ்சைகள் | iii) அப்சிசிக் அமிலம் II |
| 4) ஹெர்ரிங் மீன் விந்து | iv) கைனடின் |
| 5) இளம் மக்காச்சோளம் | v ) ஆக்சின் A |
| 6) இளம் பருத்திக் காய் | vi) சியாடின் |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | iv | v | vi | i | ii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | v | vi | i | ii | iv |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| ii | iii | v | vi | iv | i |
18.
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்
Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்
19.
டிக்டியோ சோம்கள் எனப்படுபவை தாவரசெல்களில் காணப்படும் ______ ஆகும்
மைட்டோகாண்ட்ரியா
லைசோசோம்
எண்டோபிளாசா வலை
கோல்கை உடலம்
20.
துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?
பின்னோக்கு வளர் உருமாற்றம்
மறைமுக கருவளர்ச்சி
டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.
இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.
21.
அடிவயிற்று கட்டிகளில் காணப்படுவது.
காற்று சுவாசிகள்
காற்றுணா சுவாசிகள்
நிலைமாறும் காற்று சுவாசிகள்
நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்
22.
இரத்தச் சீரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது ______.
தைராக்ஸின்
FSH
கணையம்
தைராய்டு மற்றும் பாராதைராய்டு
23.
சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?
பெளமானின் கிண்ணம்
ஹென்லே வளைவின் நீளம்
அண்மை சுருள் நுண்குழல்
கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு
24.
கொழுப்பு செரிமானத்தின் முதல் படி _______.
பால்மமாதல்
நொதி செயல்பாடு
லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்
அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு
25.
கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..
நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது
புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர் மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.
26.
கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.
உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு
மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை
27.
கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?
மாஞ்சிஃபெரா
பாம்புசா
மியூசா
அகேவ்
28.
மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.
ஒப்பீட்டு உள்ளமைப்பியல்
உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை
ஒப்பீட்டு செல்லியல்
பரிணாம உறவுமுறை
29.
பரிவு நரம்பு மண்டலத்திற்கும் இணைப்பரிவு மண்டலத்திற்கும் இடையேயான வேறுபாடுகள்
30.
காற்று சுவாசித்தலின் போது CO2 வெளியிடுவதை நிரூபிக்க ஆய்வினை எழுதுக.
31.
பாக்டீரியாவில் எவ்வாறு இணைவு முறையில் பால் இனப்பெருக்கம் செய்கிறது என்பதை விளக்குக.
32.
தவளையின் புறத்தோற்ற அமைப்பை படத்துடன் விளக்குக.
33.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.
34.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.
35.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
36.
தானியங்கு நரம்பு செல் திரள் பற்றி குறிப்பு வரைக.
37.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
38.
நாளொன்றுக்கு சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு யாது?
39.
சயனோபாக்டீரியாவின் இனப்பெருக்க முறைகளைக் கூறு.
40.
சமச்சீர் மலர் என்றால் என்ன?
41.
ஏழு உலக வகைப்பாட்டில் அடங்கியுள்ள ஏழு உலகங்கள் யாவை?
42.
கலவிப்பறப்புக்குப்பின் ஆண்தேனீக்களில் நடைபெறுவதென்ன?
43.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
44.
மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் எது?
45.
பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.
1.
நன்கு நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட தாவரத்தினை தரைமட்டத்திலிருந்து சில அங்குல உயரத்தில் துண்டிக்கும்போது, துண்டிக்கப்பட்ட பகுதியிலிருந்து சிறிது விசையுடன் நீர் வருவதைக் காணலாம்.
இது நீர்வடிதல் (Bleeding) எனப்படும்.
தாவர செயலியலின் தந்தையான ஸ்டீபன் ஹேலஸ் இதனைக் கண்டறிந்து "வேர் அழுத்தம்" என்ற சொல்லை பயன்படுத்தினார்.
2.
(i) புரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிரில் உள்ள அகத்தோல் செல்களில் மெல்லிய செல்சுவருடன், காஸ்பேரிய பட்டைகளின்றி காணப்படும்.
(ii) இச்செல்கள் வழிசெல்கள் (Passage Cells) எனப்படும். இவற்றின் பணி நீரையும் மற்றும் கரைந்த உப்புகளையும் புறணியிலிருந்து புரோட்டோசைலத்திற்கு கடத்துவதாகும்.
3.
1.செல்சவ்வின் பாஸ்போலிப்பிடு நீர் விரும்பும் மற்றும் நீர் வெறுக்கும் பகுதிகள் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.
2.செல் சவ்வில் இவை இரு அடுக்கில் அமைந்திருக்கும் விதம் அதைத் தேர்வு செலுத்து சவ்வாக செயல்பட உதவுகிறது.
4.
1. இதயம் தசையாலானது.
2. 13 அறைகளை கொண்ட குழல்வடிவமுடையது.
3. ஒவ்வொரு அறையின் இரண்டு புறங்களிலும் ஆஸ்டியா எனும் துளைகள் காணப்படுகிறது.
4. உடற்குழியில் உள்ள இரத்தம் ஆஸ்டியாவின் வழியாக இதயத்திற்குள் நுழைகிறது.
5.
இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
பிரிவு அ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)400-450nm இடைப்பட்ட ஒளி அலைநீளம் நீல நிற ஒளி சேர்க்கை ஆகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.
பிரிவு ஆ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)500-550 இடைப்பட்ட ஒளி அலைநீளத்தில் பச்சை நிற ஒளி சேர்க்கை கதிர்வீச்சாகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் குறைவகவே நடைப்பெறுகின்றது. பச்சையம் உரிஞ்சப்படுவது இல்லை.
6.
(i) வசந்தக் காலத்தில் கேம்பியத்தின் அதிகமான செயல்பாடே அகன்ற உள்வெளி கொண்ட திக எண்ணிக்கை சைலக்கூறுகளையும் வெசல்கள்/டிராக்கீடுகள் கொண்ட அதிக அளவிலான சைலக்கூறுகளையும் தோற்றுவிக்கின்றன.
(ii) இவற்றில் சைலக்கூறுகள் மிகவும் மெல்லிய சுரவ் கொண்டவை. இந்தக் காலத்தில் உருவாகும் கட்டை வசந்தகாலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை (spring wood or early wood) எனப்படும்.
(iii) குளிர் காலத்தில் கேம்பியத்தின் செயல்பாடு வெகுவாகக் குறைந்து, குறுகலான செல் உள்வெளி கொண்ட வெசல்கள்/டிராக்கீடுகளை பெற்ற, குறைந்த அளவிலான சைலக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றன.
(iv) இவற்றில் சைலக்கூறுகள் மிகவும் தடித்த சுவர் கொண்டவை. இந்தக் காலத்தின் உருவாகும் கட்டை குளிர்காலக் கட்டை அல்லது பின்பருவாக் கட்டை (autumn wood or late wood) எனப்படும்.
7.
1.ஒருவரின் கண் உள்ளழுத்தம் அதிகளவில் இருந்தால் அந்நிலை குளுக்கோமா எனப்படும். அதற்கு "முன்கண் திரவம்" காரணமாகும்.
2. ஏனெனில், அத்திரவம் லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்து, லென்சு, கார்னியா மற்றும் விழித்திரை செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பும் வேலையை மேற்கொள்கிறது.
3. அந்நிலையில், இடையில் ஏதேனும் அடைப்பு ஏற்படின், உள்ளழுத்தம் அதிகமாகலாம்.
8.

9.
10.
11.
| வேர் ஏறு கொடிகள் | தண்டு ஏறு கொடிகள் | |
| 1. | தாவரங்களின் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி தாவரங்கள் ஏறுகின்றன. |
இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டு ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றன. |
| 2. | எ.கா. பைப்பர் பிடல் பைப்பர் நைக்ரம் ஹீடிரா ஹீடிரா ஹெலிக்கஸ், போதாஸ் |
எ.கா. ஐபோமியா, கண்வால்வுலஸ், டாலிகஸ், கிளைட்டோரியா குவிஸ் குவாலிஸ். |
12.
| வ.எண் | திரள் கனி | கூட்டுக்கனி |
| 1 | ஓர் தனிமலரின் இணையாத சூலகங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு தனி சூல்கமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. |
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் |
| 2 | எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பாலியால்தியா | எ.கா: அன்னாசி, பலா, மல்பெரி, ஃபைகஸ். |
13.
(c)
நொசீமா பாம்பிசிஸ்
14.
(c)
துரித-கிளைக்கோலைடிக் இழைகள்
15.
(a)
வீரிய சுவாசம்
16.
(b)
இலைத்துளை கீழறை
17.
(b)
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
18.
(a)
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
19.
(d)
கோல்கை உடலம்
20.
(a)
பின்னோக்கு வளர் உருமாற்றம்
21.
(d)
நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்
22.
(d)
தைராய்டு மற்றும் பாராதைராய்டு
23.
(b)
ஹென்லே வளைவின் நீளம்
24.
(a)
பால்மமாதல்
25.
(c)
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
26.
(b)
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
27.
(b)
பாம்புசா
28.
(d)
பரிணாம உறவுமுறை
29.
| வ.எண் | பரிவு நரம்பு மண்டலம் | இணை பரிவு நரம்பு மண்டலம் |
|---|---|---|
| 1. | தண்டுவடத்தின் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் தொடங்குகிறது. | மூளையின் கபாலப் பகுதியிலும் தண்டுவடத்தின் திருவெலும்பு பகுதியிலும் தொடங்குகிறது. |
| 2. | நரம்பு செல்திரள்கள் இணைக்கப்பட்டுச் சங்கிலித் தொடராக உள்ளன. | நரம்பு செல் திரள்கள் தனித்தனியானவை. |
| 3. | முன் நரம்பு செல் திரள் நரம்பிழை குட்டையானது. பின் நரம்பு செல்திரள் நரம்பிழை நீளமானது. | முன் நரம்பு செல்திரள் நரம்பிழை நீளமானது, பின் நரம்பு செல்திரள் நரம்பிழை குட்டையானது. |
| 4. | செயல்படு உறுப்புகளில் உள்ள பின் நரம்பு செல்திரள் நரம்பிழையின் முனைப் பகுதியிலிருந்து நார்-அட்ரினலின் உற்பதியாகிறது. எனவே இந்நரம்பிழைகள் அட்ரினர்ஜிக் வகையைச் சார்ந்தன. | செயல்படு உறுப்பிலுள்ள பின் நரம்பு செல்திரள் நரம்பிழையின் முனைப்பகுதியிலிருந்து அசிட்டைல் கோலைன் உற்பத்தியாகிறது. எனவே இந்நரம்பிழைகள் கோலினர்ஜிக் வகையைச் சார்ந்தன . |
| 5. | அவசரக்கால மற்றும் அழுத்தம் அதிகரித்த நிலைகளில் தீவிரமாகச் செயல்பட்டு அந்நிலைமையை எதிர்கொள்ள உடலைத் தயார் செய்கிறது. | அழுத்தத்திற்குப் பிந்தைய ஓய்வு அல்லது நீட்சிக்காலத்தில் தீவிரமமாகச் செயல்பட்டு இயல்பு நிலைகுத் திரும்ப உதவுகிறது. |
| 6. | மொத்தத்தில் இந்நரம்புகள் கிளர்ச்சி மற்றும் வினையைத் தூண்டுவனவாகும். | மொத்தத்தில் இந்நரம்புகள் வினையை தடைபடுத்துவனவாகும். |
| 7. | இம்மண்டலம் போராடு அல்லது விலகு மண்டலம் என்று பெயர். | இம்மண்டலத்தை ஓய்வாக இருந்து செரித்தல் அல்லது உண்டு, பெருக்கு மண்டலம் என்று கருதுவர். |
30.
ஏதாவது விதையினை (நிலக்கடலை அல்லது மொச்சை விதைகள்) சிறிதளவு எடுத்து ஊறவைத்து முளைத்தலுக்கு உட்படுத்த வேண்டும். முளைத்தலுக்கு பின் கூம்புக்குடுவையினுள் வைக்க வேண்டும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட 4அட பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) கரைசலைச் சிறிய கண்ணாடி குடுவையில் எடுத்துக் கூம்புக் குடுவையினுள் நூலின் உதவியால் தொங்க விட்டு ஒரு துளை தக்கையினால் இறுக்கமாக மூட வேண்டும். வளைக்கப்பட்ட கண்ணாடி குழாயை எடுத்துச் சிறிய முனைப்பகுதியை நீர் நிரப்பிய பீக்கரினுள்ளும் மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். வளைக்கப்பட்ட கண்ணாடி குழாயின் ஆரம்ப நிலையின் நீரின் அளவினைக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பினை இரண்டு மணி நேரத்திற்கு வைத்திருந்து விதைகளை முளைக்க விட வேண்டும்.இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, கண்ணாடி குழாயில் நீரின் அளவு உயர்கிறது. ஏனெனில் காற்று சுவாசத்தின் போது முளைக்கப்பட்ட விதைகளால் CO2 வெளியேறுவதால் KOH கரைசலால் உறிஞ்சப்படுவதால் நீரின் அளவு கண்ணாடி குடுவையினுள் உயர்கிறது.
நிலக்கடலை அல்லது மொச்சை விதைகளின் உயர்த்தப்படும் நீரானது குறைவாகக் காணப்படும் ஏனெனில் இந்த விதைகள் கொழுப்பு மற்றும் புரதத்தினை சுவசாத் தளப்பொருளாக பயன்படுத்துவதால் மிகச் சிறிய அளவு CO2 வெளிப்படுகிறது. ஆனால் கோதுமை விதைகளில் உயர்த்தப்படும் நீரின் அளவு அதிகமாகக் காணப்படும் ஏனெனில் கார்போ ஹைட்ரேட்டை சுவசாத் தளப்பொருளாக பயன்படுத்துவதால். கார்போஹைட்ரேட்டுகளை தளப்பொருளாக பயன்படுத்துவதால் சமமான வீதத்தில் CO2 வெளியேற்றமும் O2 பயன்பாடும் நடைபெறும்.

31.
இணைவு:
1.1946 ஆம் ஆண்டு J.லெடர்பர்க், எட்வர்டு L.டாட்டம் ஆகியோர் பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு முறையின் செயல்பாட்டை முதன்முதலில் விளக்கினர்.
2.இந்த மரபணு மாற்ற முறையில், கொடுநர் செல் நுண்சிலும்புகளின் மூலமாக ஏற்பி செல்லுடன் இணைகிறது.
3.நுண் சிலும்புகள் நன்கு வளர்ந்து இணைவுக் குழலைத் தோற்றுவிக்கிறது.
4.F+(வளமான காரணி) உடைய கொடுநர் செல்லின் பிளாஸ்மிட் இரட்டிப்படைகிறது.
5.இரட்டிப்பான பிளாஸ்மிட் இழையில்ஒன்று மட்டும் ஏற்பி செல்லிற்கு இடம் மாறுகிறது.
6.பின்னர் இந்த இழைக்கு ஏற்பி செல் உற்பத்தி செய்து கொள்கிறது.
32.
1. தவளையின் உடல் படகு போன்று நீரில் நீந்துவதற்கு ஏற்றதாக உள்ளது.
2. முதுகுப்புறம், வயிற்றுப்புறம் அச்சுவாக்கி தட்டையாக உள்ளது.
3. உடலானது தலை மற்றும் உடல் எனும் இப்பகுதிகளை கொண்டது.
4. உடல் தோல் மென்மையாகவும் வழுவழுப்பு தன்மையுடையதாகவும் தளர்வாக உடலோடு இணைக்கப்பட்டுள்ளது.
5. முதுகுப்புற தோல் அடர் பச்சை நிறமுள்ளது
6. வயிற்றுப்புற தோல் வெளிறிய நிறமுள்ளது.
7. தலை முக்கோண வடிவிலானது.
8. தலையின் முன்முனைப்பகுதியில் அகன்ற பெரியவாய் உள்ளது.
9. முகப்பகுதியின் முதுகுபுறத்தில் மையக்கோட்டின் இருபுறமும் பக்கத்திற்கொன்றாக புறநாசித் துளைகள் உள்ளன.
10. நாசித்துளைகளுக்கு சற்று பின்னே பெரிய, ஓர் இணை கண்கள்புடைத்த நிலையில் காணப்படுகிறது.
11. இமைகள் கண்களை பாதுகாக்கிறது. மேல் இமை அசைவற்றது.
12. கீழ் இமை அசையும் தன்மையுடையது, கண்களைப் பாதுகாக்கிறது.
13. மூன்றாவது இமை நிக்டிடேடிவ் சவ்வு ஒளி ஊடுருவாக் கூடியது. நீரில் இருக்கும் போது கண்களைப் பாதுகாக்கின்றது.
14. கண்களுக்குப் பின்னால் இரண்டு பக்கங்களிலும் செவிப்பறை காணப்படுகின்றன.
15. தவளையில் புறச்செவி, கழுத்து மற்றும் வாழ் இல்லை.
16. ஓரிணை முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால்கள் உண்டு
17. முதுகுப்புறத்தின் பின் முனையில் பின்னங்கால்களுக்கிடையே செரிமான, சிறுநீரக இனப்பெருக்கப் பொதுக்கழிவு புழை அமைந்துள்ளது.
18. குட்டையான தடிமனான முன்னங்கால்கள் உடல் எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளன.
19. தாவளின் முடிவில் தரையிறங்கும் போது நிலத்தில் ஊன்ற இக்கால்கள் பயன்படுகின்றன.
20. முன்னங்கால்களில் மேற்கை, முன்னகை மற்றும் கை ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன.
21. கையில் நான்கு விரல்கள் உண்டு.
22. பின்னங்கால்கள் நீண்டு பெரியதாக உள்ளன.
23. பின்னங்காலில் தொடை கீழ்கால் மற்றும் பாதம் என மூன்று பகுதிகள் உண்டு.
24. பாதத்தில் விரலிடைச் சவ்வு கொண்ட 5 விரல்களும் 6வது விரல் எனக் கருதப்படுகிற சிறிய புடைப்பும் உள்ளது.
25. நீரில் இருக்கும் போது நீந்துவதற்கும் நிலத்தில் தாவிக் குதிப்பதற்குமான தகவமைப்பாக பின்னங்கால்கள் உள்ளது.
26. ஓய்வு நிலையில் தன் பின்னங்கால்களை Z வடிவத்தில் மாய்த்து வைத்துக் கொள்கிறது.
27. இனப்பெருக்க காலங்களில் தவளைகளின் பால்வழி வேறுபாட்டு தன்மை தெளிவாக தெரிகிறது.
28. ஆண் தவளையை 1 இணை குரல்பை, கரகர ஒலியை எழுப்புகிறது.
29. ஆண் தவளையின் முன்னங்கால் முதல் விரலின் கீழே கலவித் தீண்டும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
30. பெந்தவளையில் கலவித்திண்டு, குரல்பை காணவில்லை.
33.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை:
(i) பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachysclerids or Stone cells):
இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சியல் கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)
(ii) மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):
இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளி உறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.
(iii) ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):
இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:பைசம் மற்றும் ஹேகியா (Kakea) விதை உறைகள்.
(iv) ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):
எவை கிளைத்த பிரிவுகலைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்.
(v) டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):
இவை மெல்லிய சுவர் கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: நிம்பையா, இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.
34.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை நைட்ரஜன் கழிவுப்பொருள் நிர்ணயிக்கிறது.
இது அமோனியா, யூரியா மற்றும் யூரிக் அமிலம் அடிப்படையில் வேறுபடுகிறது.
யூரியோடெலிக் உயிரிகள் - பாலூட்டிகள், நிலவாழ் இருவாழ்விகள்
யூரிகோடெலிக் உயிரிகள் - ஊர்வன, பறப்பன, நிலவாழ் நத்தைகள்.
35.
வளரியல்பு: பின்னுக் கொடி
வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்து மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது
தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி
இலை: ஒற்றைப்படை ஒருமடிககூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு , இலையடிச் செதிலுடையது .வலைப் பின்னால் இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும் அதைப்புடையன.
மஞ்சுரி ; கக்க மலர்
மலர் : பூவடிச்செதிலுடையது. புககாம்புச் செதிலுடையது . புககாம்புச் செதில்கள் அளவில் பெரியது,மலர்காம்புடையது.இரு பூவிதழடுக்குடையது.முழுமையானது, இருபால்மலர் , ஐந்தங்கமலர். இரு பக்கச்சிருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.
புல்லிவட்டம் ; புல்லிகள் 5,இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைத்துள்ளது .தனிப்புள்ளி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும் .
அல்லிவட்டம்: அல்லிகள் 5,வெண்மை அல்லது நீல நிறத்தாலானது.தனித்தது ,ஒழுங்கற்றவை , வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை இறங்குதழுவு இதழமைவில் உள்ளன
மகர்ந்ததாள் வட்டம் : மகர்ந்ததாள் கள் 10 இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகர்ந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வந்து தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன.மகரந்தப்பை ஈரறையுடையது. தாள்அடி இணைந்தவை.நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.
சூலவட்டம் : ஒற்றச்சூலக இலையானது மேல்மட்டசூலகம், ஒரு சூலக அறை ,சூல்கள் பல விளிம்பு சூள் ஒட்டு முறையில் அமைத்துள்ளன.சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது , சூலக முடி தூவிகளுடையது கனி: இருபுற வெடிகனி
விதை :சிறுநீரக வடிவிலானது.கருவூன் அற்றது
36.
இச்செயல் திரளில் முன் நரம்பு செல் திரள் நியூரானின் அக்ஸான்களும் பின் நரம்பு செல்திரள் நியூரான்களின் உடல்பகுதியும் அடங்கியுள்ளன.
37.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
38.
1000 - முதல் 1500 மி.லிட்டர்.
39.
தழை வழி உடல இனப்பெருக்கம் மட்டுமே காணப்படுகிறது.
1.உறக்க நகரவித்துகள்
2.ஹார்மோகோன்கள்
3.பிளவுறுதல்
4.அகவித்துகள் போன்றவற்றின் மூலம் நடைபெறுகிறது.
40.
ஒரு மலரை மையத்தின் வழியாக எந்த ஒரு தளத்தில் இரு சமபாதியாகப் பிரிக்க முடிந்தாலும் அது சமச்சீர் மலர் எனப்படும்.
41.
1. யூபாக்டீரியா
2. ஆர்க்கி பாக்டீரியா
3. புரோட்டோசோவா
4. குரோமிஸ்டா
5. பூஞ்சை
6. பிளான்டே
7. அனிமாலியா
42.
மொய்த்திரளின் போது இராணித்தேனீயை பின்தொடரும் ஆண் தேனீ இராணி தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின் இறந்து விடும்.
43.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் ஆன்டிடையூரிக் ஹார்மோன், ரெனின் மற்றும் ஆஞ்சியோடென்சின் ஆகும்.
44.
மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் கிரியாட்டினின் ஆகும்
45.
பறவைகளின் எலும்புகள் யாவும் காற்றறைகளுடன் காணப்படுகிறது. இதற்கு நுமாட்டிக் எலும்புகள் என்றுபி பெயர். இதனால் அகச்சட்டகத்தின் எடைகுறைவாக இருக்கும். இது பறத்தலுக்கான தகவமைவாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards