11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
HSC Class 11 Tissue and Tissue System Full Study Materials
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இலைத் துளைக்கு அடுத்து உட்புறமாகக் காணப்படுகின்ற காற்றையானது சுவாச அறை அல்லது _____ எனப்படும்.
எபிபிளமா
இலைத்துளை கீழறை
ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்
பாஸ்ட் நார்கள்
2.
வேரின் வெளிப்புற அடுக்கு பிளிஃபெரஸ் அடுக்கு அல்லது ______ எனப்படும்.
எபிபிளமா
இலைத்துளை கீழறை
ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்
பாஸ்ட் நார்கள்
3.
செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது ______ எனபப்டும்.
கேலோஸ்
எளியத்திசு
சின்சைட்
பாஸ்ட் நார்கள்
4.
ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரங்கைமா நார்கள் ஃபுளோயம் நார்கள் அல்லது ______ எனபப்டும்.
கேலோஸ்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
பாஸ்ட் நார்கள்
5.
முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் _____ எனப்படும் பொருளால் அடைக்கப்பட்டுள்ளது.
கேலோஸ்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
6.
சைலம் நார்கள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.
வெளி நோக்கி சைலம்
லிப்ரிஃபார்ம் நார்கள்
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
7.
ஹேபர்லேண்ட் சைலத்தை ஹேட்ரோம் எனவும் ஃபுளோயத்தை ____ எனவும் பெயரிட்டழைத்தார்.
வெளி நோக்கி சைலம்
லிப்ரிஃபார்ம் நார்கள்
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
8.
______ இறந்த செல்களாகும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
9.
ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
10.
தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
11.
துணை செல்கள் பற்றி எழுதுக.
12.
உவர்நாட்டவுயிரிகள் என்றால் என்ன?
13.
ஸ்டீல் பற்றி எழுதுக.
14.
அகத்தோல் என்றால் என்ன?
15.
சைலத்தின் நான்கு வகையான செல்கள் யாவை?
16.
கூட்டுத்திசு என்றால் என்ன?
17.
லிப்ரிபார்ம் நார்கள் பற்றி எழுதுக.
18.
நார்கள் வரையறு.
19.
கோலங்கைமா என்றால் என்ன?
20.
நிலைத் திசுக்கள் பற்றி எழுதுக.
21.
இலை நீர்ச்சுரப்பிகள் அல்லது ஹைடதோடுகள் பற்றி எழுதுக.
22.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினை எழுதுக
23.
பெரிசைக்கிள் என்றால் என்ன?
24.
வழிசெல்கள் பற்றி எழுதுக.
25.
ஃபுளோய செல்லின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
26.
ஃபுளோயம் பற்றி எழுதுக.
27.
டிரக்கீடுகள் என்றால் என்ன?
28.
சைலம் வரையறு.
29.
கோண கோலங்கைமா பற்றி எழுதுக.
30.
பாரங்கைமா என்றால் என்ன?
31.
டிரக்கீடுகள், நார்களுக்குடையேயான வேறுபாட்டினை எழுதுக.
32.
கோலங்கைமா, ஸ்கிலிரங்கைமா இடையேயான வேறுபாட்டினை எழுது.
33.
ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாட்டினை எழுதுக.
34.
ஒரு விதையிலைத் தாவர வேரின் முதன்நிலை அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
1.
(b)
இலைத்துளை கீழறை
2.
(a)
எபிபிளமா
3.
(c)
சின்சைட்
4.
(d)
பாஸ்ட் நார்கள்
5.
(a)
கேலோஸ்
6.
(b)
லிப்ரிஃபார்ம் நார்கள்
7.
(a)
வெளி நோக்கி சைலம்
8.
(d)
ஸ்கிலிரைடுகள்
9.
(b)
எளியத்திசு
10.
(a)
செல்
11.
(i) சைலக் குழாய்களுடன் இணைந்து காணப்படுகின்ற மெல்லிய சுவருடைய நீண்ட சிறப்பு வகையான பாரங்கைமா செல்கள் துணைச் செல்கள் எனப்படும்.
(ii) இச்செல்கள் உயிருள்ளவை சைட்டோபிளாசத்தையும் தெளிவான உட்கருவையும் கொண்டுள்ளன.
(iii) இவை சல்லடை குழாய்களின் பக்கசுவரில் உள்ள குழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
12.
(i) உவர் சுற்றுச்சூழலில் வளரும் தாவரங்கள் உவர்நாட்டவுயிரிகள் எனபப்டுகின்றன.
(ii) உவர் வாழிடத்தில் (saline habitat) வளரும் தாவரங்கள் உவர் அழுத்தத்திற்கு ஏற்ப பல தகவமைப்புக்களைப் பெற்றுள்ளன.
13.
(i) அகத்தோலுக்கு உட்புறமாகக் காணப்படும் அனைத்துத் திசுபகுதியும் சேர்ந்து ஸ்டீல் அல்லது மைய உருலை எனப்படும்.
(ii) இது பெரிசைக்கிள், வாஸ்குலத் தொகுப்புகள் பித் போன்றவற்றை உள்ளடக்கியது.
14.
(i) புறணியின் கடைசியடுக்கு அகத்தோல் ஆகும்.
(ii) இது புறணியை ஸ்டீலிருந்து பிரிக்கிறது. அகத்தோல் ஓரடுக்கு பீப்பாய் வடிவ, செல் இடைவெளிகள் அற்று நெருக்கமாக அமைந்த பாரங்கைமா செல்களாலானது.
15.
சைலத்தின் நான்கு வகையான செல்கலைக் கொண்டது. அவை
(i) டிரக்கீடுகள்
(ii) சைலக்குழாய்கள் அல்லது டிரக்கியா
(iii) சைலம் நார்கள்
(iv) சைலம் பாரங்கைமா
16.
(i) ஒரு குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளப் பல்வேறு வகையான செல்களின் ஒரு கூட்டமைப்பே கூட்டுத்திசு எனப்படும்.
(ii) இது ஒரு வகைப்படும். அவை சைலம் மற்றும் ஃபுளோயம்.
17.
(i) இந்த நார்கள் எளிய குழிகளுடன் கூடிய குறைவான லிக்னினை கொண்ட இரண்டாம் நிலை தடிப்புகளை கொண்டவை.
(ii) இந்த நார்கள் நீண்டவை, குறுகியவை.
18.
(i) நீண்ட, கூர்முனைகளைக் கொண்ட ஸ்கிலிரங்கைமா செல்கள் நார்கள் எனப்படும்.
(ii) நார்கள் குறுகிய செல் அறைகள், லிக்னின் செல் சுவர் ஆகியவை கொண்ட உயிரற்ற செல்களாகும். இவை எளிய குழிகலைக் கொண்டது.
19.
(i) கோலங்கைமா எளிய, உயிருள்ள உறுதியளிக்கும் திசு.
(ii) கோலங்கைமா பொதுவாக இரு விதையிலை தண்டின் புறத்தொலடித்தோல் பகுதியில் காணபப்டுகின்றது.
(iii) இத்திசு வேர்களில் காணப்படுவதில்லை. ஆனால் இலைக்காம்புகள், பூக் காம்புகளில் காணப்படுகிறது.
20.
(i) நுனி ஆக்குத் திசுவிலிருந்து நிலைத் திசுக்கள் தோன்றுகின்றன.
(ii) இவை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ செல்பகுப்பு பண்பினை இழந்துவிடுகின்றது.
(iii) இது இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
(1) எளிய நிலைத் திசுக்கள் (simple permanent tissues)
(2) கூட்டு நிலைத் திசுக்கள் (complex permanent tissues)
21.
(i) பொதுவாக உயர்தாவரங்களில் காணப்படும் ஒரு வகையான புறத்தோல் துளைகள் நீர்க்சுரப்பிகள் எனப்படும்
(ii) இவைகள் இலைத்துளையின் மறுபாடடைந்த அமைப்பு ஆகும். பொதுவாக இவைகள் இலையின் நுனி அல்லது விளிம்பு பகுதியிலும் குறிப்பாக இலையின் பற்கள் போன்ற விளிம்பு பகுதியிலும் காணப்படுகின்றன.
22.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றிற்கு இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள்.
| வ.எண் | பண்புகள் | வேர் | தண்டு |
| 1. | புறத்தோல் | புறத்தோல் துளைகள், கியூட்டிகிள் காணப்படுகின்றன. ஒரு செல்லாலான வேர்தூவிகள் காணப்படுகின்றன. |
புறத்தோல் புறத்தோல் துளைகள், கியூட்டிகிள் காணப்படுகின்றன. ஒரு செல்லாலான பல செல்களாலான டிரைகோம்கள் (புறவளரிகள்) காணப்படுகின்றன |
| 2. | வெளிப்புறப் புறணி செல்கள் | குளோரங்கைமா காணப்படுவதில்லை. | குளோரங்கைமா காணப்படுகிறது. |
| 3. | அகத்தோல் | தெளிவாக காணப்படுகிறது. | தெளிவாகக் காணப்படுவதில்லை அல்லது முற்றிலும் காணப்படுவதில்லை |
23.
(i) பெரிசைக்கிள் என்பது அகத்தோலுக்கு உட்புறமாகக் காணப்படுகின்ற, பொதுவாக, ஓரடுக்கு பாரங்கைமா செல்களால் ஆனது.
(ii) இது ஸ்டீலின் வெளிப்புற அடுக்காகும். பக்க வேர்கள் பெரிசைக்களிலிருந்து தோன்றுகின்றன. எனவே பக்கவேர்கள் அகத்தோன்றிகள் (endogenous) ஆகும்.
24.
(i) புரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிரில் உள்ள அகத்தோல் செல்களில் மெல்லிய செல்சுவருடன், காஸ்பேரிய பட்டைகளின்றி காணப்படும்.
(ii) இச்செல்கள் வழிசெல்கள் (Passage Cells) எனப்படும். இவற்றின் பணி நீரையும் மற்றும் கரைந்த உப்புகளையும் புறணியிலிருந்து புரோட்டோசைலத்திற்கு கடத்துவதாகும்.
25.

26.
(i) வாஸ்குல தாவரங்களில் உணவுப் பொருட்களைக் கடத்துகின்ற கூட்டுத் திசு ஃபுளோயம் ஆகும்.
(ii) ஃபுளோயம்என்ற சொல்லை C.நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். புரோ கேம்பியத்திலிருந்து உண்டாகும்.
(iii) ஃபுளோயம் முதலாம் நிலை ஃபுளோயம்எனப்படும். வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் ஃபுளோயம்இரண்டாம் நிலை ஃபுளோயம்எனப்படும்.
27.
(i) டிரக்கீடுகள் நீண்ட கூர் முனைகளை உடைய லிக்னினை கொண்ட உயிரற்ற செல்களாகும். இதன் செல் அறையானது நார்களைக் காட்டிலும் அகலமானது. இது குறுக்கு வெட்டில் பல கோண வடிவமானது.
(ii) பல்வேறு விதமான செல் தடிப்புகள் இரண்டாம் நிலை சுவர்படிம பொருட்களால் ஆனது. அவை வளையத் தடிப்பு, சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலை பின்னல் தடிப்பு, குழித்தடிப்பு (குழிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் சீராக தடித்த சுவருடையவை) ஆகியவை.
28.
(i) வாஸ்குலத் தாவரங்களில் நீரைக் கடத்துகின்ற முதன்மையான திசு சைலம் ஆகும். சைலம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். இது "சைலோஸ் கட்டை" (GK, Xylos-wood) என்ற கிரேக்கச் சொல் ஆகும்.
(ii) புரோகேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் முதலாம் நிலை சைலம் (primary xylem) என்றும் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் இரண்டாம் நிலை சைலம் (secondary xylem) என்றும் அழைக்கப்படுகின்றன.
29.
(i) இது பொதுவான கோலங்கைமா வகையாகும். இங்கு செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும்.
(ii) இதில் செல்கள் இணையும் கோணத்தில் அல்லது விளிம்பில் தடிப்புகள் காணப்படும்.
(iii) எடுத்துக்காட்டு: டாட்டூரா
30.
(i) பாரங்கைமா தாவரத்தின் அனைத்துப் பாகங்களிலும் காணப்படுகிறது. இது தாவரத்தின் அடிப்படை திசுவினை உண்டாக்குகிறது.
(ii) பாரங்கைமா செல்கள் உயிருள்ளவை, மெல்லிய செல் சுவர் உடையவை. இதன் செல் சுவர் செல்லுலோஸினால் ஆனது.
(iii) பாரங்கைமா செல்கள், முட்டை, பலகோணம், உருளை, ஒழுங்கற்ற நீண்ட அல்லது கை வடிவமுடையது.
31.
| டிரக்கீடுகள் மற்றும் நார்கள் இடையேயான வேறுபாடுகள் | |
| டிரக்கீடுகள் | நார்கள் |
| 1. குறுகியவை | 1. மிக நீண்ட செல்கள் |
| 2. சாய்வான முனைச்சுவர்களை கொண்டவை | 2. மழுங்கிய முனைகளைக் கொண்ட முனைச் சுவர்களைக் கொண்டவை. |
| 3. செல் சுவர்கள் நார்களில் உள்ளது போல தடிப்பற்று இருப்பதில்லை. |
3. செல் சுவர் தடிப்பானது, லிக்னினால் ஆனது. |
| 4. பல்வேறு வகையான செல் தடிப்புகளைக் கொண்டது. |
4. குழித் தடிப்புகளை மட்டும் கொண்டது. |
| 5. கடத்துதல், தாங்கு வலிமைக்குக் காரணமாகிறது. | 5. தாங்கு வலிமையைத் தருகிறது. |
32.
| கோலங்கைமா, ஸ்கிலிரங்கைமா இடையேயான வேறுபாடுகள் | |
| கோலங்கைமா | ஸ்கிலிரங்கைமா |
| 1. உயிருள்ள செல்கள். | 1. உயிரற்ற செல்கள். |
| 2. செல்கள் புரோட்டாபிளாசம் கொண்டுள்ளது. | 2. வெற்றிடமாகக் காணப்படும். |
| 3. செல் சுவர் செல்லுலோஸினால் ஆனது. | 3. செல் சுவர் லிக்னினால் ஆனது. |
| 4. தாவர உடல் தடிப்புகள் ஒழுங்கற்றது. | 4. செல்சுவர் தடிப்பு ஓழுங்கானவை. |
| 5. தாவர உடல் மென்மையானது | 5. தாவர உடல் கடினமானது |
| 6. சில நேரங்களில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. | 6. பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. |
33.
| ஆக்குத் திசுக்கள் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாடுகள் | |
| ஆக்குத் திசுக்கள் | நிலைத்திசுக்கள் |
| 1. செல்கள் மீண்டும் மீண்டும் பகுப்படைகின்றன. | 1. செல்கள் படுப்படைவதில்லை. |
| 2. வேறுபாடு அற்ற செல்கள் | 2. சேலைகள் முழுவதுமாக வேறுபாடு அடைந்துள்ளன. |
| 3. செல்கள் சிறியவை மற்றும் ஓத்த குறுக்களவு கொண்டவை |
3. செல்கள் வடிவம், அமைப்பில் வேறுபாடு கொண்டவை |
| 4. நுண் குமிழ்ப்பைகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. | 4. நுங்குமிழ்ப்பைகள்காணப்படுகின்றன. |
| 5. மெல்லிய செல் சுவர் உடையவை. | 5. செல் சுவர் மெல்லியது (அ) தடித்தது |
| 6. சைட்டோபிளாசா கனிமப் பொருட்கள் காணப்படுவதில்லை. | 6. சைட்டோபிளாசா கனிமப் பொருட்கள் காணப்படுகின்றன. |
34.

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards