11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 Full Test ( Public Model )
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குடிநீரில் சல்பேட்டின் அளவு அதிகமாக இருப்பின் ஏற்படும் விளைவு?
சிறுநீரக பாதிப்பு
எலும்பு (ம) பற்களின் சேதம்
மலமிளக்குதல்
நீலக்குழந்தை நோயிக்குறி
2.
ன் IUPAC பெயர்
1புளுரோ 3அயோடோ 4 புரோமோ பென்சீன்
1அயோடா 2புரோமோ 2புரோமோ 5புளுரோ பென்சீன்
1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்
இவற்றுள் எதுவுமில்லை
3.
கரிம திடப்பொருள்களை தூய்மைப்படுத்துவதற்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முறை.
படிகமாக்குதல்
பதங்கமாக்கல்
வாலைவடித்தல்
வடித்து இறக்குதல்
4.
q=0 என்பது
வெப்பமாறா செயல்முறை
வெப்பநிலை மாறா செயல்முறை
திறந்த அமைப்பு
மூடிய அமைப்பு
5.
பின்வருவனற்றை கவனி:
I. டியூட்ரியம் ஆக்சைடு
II. கனநீர்
இவற்றுல், டியூட்ரியம் தயாரிக்கப் பயன்படுவது
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
இரண்டுமே இல்லை
6.
பின்வருவனவற்றை கவனி
I. மின்புலம் II. காந்தப்புலம்
Px,Py,Pz ஆர்பிட்டால்கள் சம ஆற்றலைப் பெற்றுள்ளன. மேற்கண்ட எந்த காரணத்தினால் இதன் சம ஆற்றல் பண்பு இழக்கப்படுகிறது.
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
இரண்டும் இல்லை
7.
கரைசலில் n கரைப்பான் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது, இணைதல் வீதத் திற்கான சரியான சமன்பாடு
\(\alpha =\frac { n(i-1) }{ n-1 } \)
\({ \alpha }^{ 2 }=\frac { n(i-1) }{ (n-1) } \)
\({ \alpha }=\frac { n(i-1) }{ 1-n } \)
\({ \alpha }=\frac { n(1-i) }{ n(1-i) } \)
8.
\(\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } -\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } \overset { (A) }{ \longrightarrow } CH\equiv CH\), இங்கு A,
Zn
Conc H2SO4
ஆல்கஹால் கலந்த. KOH
நீர்த்த H2SO4
9.
AB (g) ⇌ A(g) + B(g) என்ற வினையின், சமநிலையில் மொத்த அழுத்தம் P-ல் AB ஆனது 20% சிதைவடைந்தால், எந்த சமன்பாட்டினால் சமநிலை மாறிலி KP யானது மொத்த அழுத்தம் Pயுடன் தொடர்படுத்தப்படும்
P = 24 KP
P = 8 KP
24 P = KP
இவற்றில் எதுவுமில்லை
10.
மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே
25, 25,33.3,50
50,50,33.3,25
50,25,33.3,50
50,25,25,50
11.
பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?
sp2
spd2
sp3
sp2d
12.
கீழ்கண்டவற்றுள் குறிப்பிட்ட எடையுள்ள நல்லியல்பு வாயுவின் பண்புகளை சரியாகக் குறிக்கும் படம் எது?



அனைத்தும்
13.
சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 ஐ குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C ) உருவாகிறது. (C) ஐ வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனத
CaCO3
Ca(OH)2
Na2CO3
NaHCO3
14.
பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?
7.5 g ஈத்தேன்
8 g மீத்தேன்
(அ) மற்றும் (ஆ)
எதுவுமில்லை
15.
Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol-1 ஆகும்.AI-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்
760kj mol-1
575kj mol-1
801kj mol-1
419kj mol-1
16.
பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
(i) SF6
(ii) PCl5
17.
சாபாடியர் - சண்டர்சன்ஸ் வினையை எழுதுக.
18.
பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
(i) Na (ii) Ba (iii) Fe
19.
வான்ட் ஹாஃப் சமன்பாட்டினை வருவி.
20.
வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி
21.
பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
(i) BOD மற்றும் COD
(ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்
22.
முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.
23.
ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.
24.
மெக்னீசியம் அடுத்தடுத்து எலக்ட்ரான்களை இழந்து Mg+, Mg2+ மற்றும் Mg3+ அயனிகளை தருகிறது.இதில் அதிக அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படும் படி எது? ஏன்?
25.
நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.
26.
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?
27.
வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.
28.
20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.
29.
298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
N2O4(g) ⇌ 2NO2(g);
வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.
30.
வெப்ப இயக்கவியல் முதல் விதியின் பல்வேறு கூறுகள் யாவை?
31.
ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.
32.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
33.
அமைதி நிலையில் உள்ள ஒரு எலக்ட்ரான் 100V மின்னழுத்த வேறுபாட்டைக் கொண்டு முடுக்குவிக்கப்படும் போது, அந்த எலக்ட்ரானின் டிபிராக்ளி அலைநீளத்தைக் கண்டறிக.
34.
தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தை நியாயப்படுத்துக
35.
மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.
36.
அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது?
37.
0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக.
38.
200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1
39.
பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
[அ]
[ஆ]
[இ]
[ஈ]
இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.
40.
பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை
(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை
41.
ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 10 எனில் \(\triangle G\) மதிப்பின் குறியீடு என்ன?அவ்வினை தன்னிச்சையாக நிகழுமா?
42.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயு ஒன்றின் கனஅளவு 3.8dm3 ஆகும்.அதனை OoCயில் உள்ள பனிக்கட்டி நீரில் மூழ்க வைக்கும் போது அதன் கனஅளவு 2.27dm3 எனில் அதன் ஆரம்ப வெப்பநிலை என்ன?
43.
டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக
1.
(c)
மலமிளக்குதல்
2.
(c)
1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்
3.
(a)
படிகமாக்குதல்
4.
(a)
வெப்பமாறா செயல்முறை
5.
(c)
இரண்டும்
6.
(c)
இரண்டும்
7.
(c)
\({ \alpha }=\frac { n(i-1) }{ 1-n } \)
8.
(c)
ஆல்கஹால் கலந்த. KOH
9.
(a)
P = 24 KP
10.
(a)
25, 25,33.3,50
11.
(a)
sp2
12.
(c)

13.
(b)
Ca(OH)2
14.
(c)
(அ) மற்றும் (ஆ)
15.
(b)
575kj mol-1
16.
(i) SF6

(ii) PCl5

17.

18.
(i) 2 Na + 2H2O \(\rightarrow\) 2 NaOH + H2 \(\uparrow \)
(ii) Ba + 2H2O \(\rightarrow\) Ba(OH)2 + H2\(\uparrow \)
(iii) 3Fe + 4H2O \(\rightarrow\) Fe3O4 + 4H2 \(\uparrow \)
நீரானது உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது.
19.
சமநிலை மாறிலியின் மதிப்பு வெப்பநிலையினைப் பொறுத்து அமைவதற்கான அளவியல் தொடர்பினை இச்சமன்பாடு தருகிறது. திட்டக்கட்டிலா ஆற்றல் மாற்றத்திற்கும் சமநிலை மாறிலிக்கும் இடையேயானத் தொடர்பு.
\(\triangle G^{ o }=-RTInK....(1)\)
\({ \triangle G }^{ o }=DH^{ o }-TDS^{ o }...(2)\)
என நாம் அறிவோம்
(2) ஐ (1) பிரதியிட
-RTIn K = DHo - TDSo
மாற்றியமைக்க
\(InK=\frac { -\triangle H^{ o } }{ RT } +\frac { \triangle { S }^{ o } }{ R } ...(3)\)
சமன்பாடு (4) ஆனது வாண்ட்ஹாஃப் சமன்பாட்டின் வகையீட்டு வடிவம் எனப்படும்.
சமன்பாடு (4) ஐ T1 மற்றும் T2 மற்றும் அவ்வெப்பநிலைகள் சமநிலை மாறிலிகள் முறையே K1 மற்றும் K2 ஆகிய எல்லைகளுக்கிடிடயே தொகையீடு செய்க.
\(\int _{ { K }^{ 1 } }^{ { K }^{ 2 } }{ d(InK)=\frac { \triangle H^{ o } }{ R } } \int _{ { T }_{ 1 } }^{ { T }_{ 2 } }{ \frac { dT }{ { T }^{ 2 } } } \)
\(\left[ Ink \right] _{ { K }_{ 1 } }^{ { K }_{ 2 } }=\frac { \triangle H^{ o } }{ R } \left[ -\frac { 1 }{ T } \right] _{ { T }_{ 1 } }^{ { T }_{ 2 } }\)
\(In{ K }_{ 2 }-In{ K }_{ 1 }=\frac { \triangle H^{ o } }{ R } -\left[ \frac { 1 }{ { T }_{ 2 } } +\frac { 1 }{ { T }_{ 1 } } \right] \)
\(log\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { \triangle H^{ o } }{ 2.303R } \left[ \frac { { T }_{ 2 }{ -T }_{ 1 } }{ { T }_{ 2 }{ T }_{ 1 } } \right] \)...(5)
சமன்பாடு (5) ஆனது வான்ட் ஹாஃப் சமன்பாட்டின் தொகையீட்டு வடிவமாகும்.
20.
(i) மோலாலிட்டி (m):
(1) ஒரு கரைசலின் மொலாலிட்டி (m) என்பது 1000 கிராம் (அ) 1kg. கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை ஆகும்.
(2) 
(ii) நார்மாலிட்டி (N):
(1) ஒரு கரைசலின் (அ) 1000ml கரைசலின் கரைந்துள்ள கரைபொருளின் கிராம்-சமான நிறையின் எண்ணிக்கை ஆகும்.
(2) 
21.
| (i) | BOD | COD |
| 1. | 200 சி வெப்பநிலையில் 5 நாள்கள் கால இடைவெளியில், ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிம கழிவுகளை சிதைக்க நுண்ணியிர்களால் நுகரப்படும் மொத்த ஆக்சிஜனின் மில்லிகிராம் அளவு உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD) என்றழைக்கப்படுகிறது. | குறிப்பிட்ட நீர் மாதிரியுள்ள கரிம பொருட்களை, அமில ஊடகத்தில், 2 மணிநேர கால இடைவெளியில் K2Cr2O7 போன்ற வலிமையான ஆக்ஸிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவானது வேதி ஆக்ஸிஜன் தேவை (COD) |
| (ii) | உயிருள்ள துகள் பொருள்கள் | உயிரற்ற துகள் பொருள்கள் |
| 1. | காற்றில் விரவியுள்ள பாக்டீரியா, பூஞ்சை, நுண்பூஞ்சை, பாசி போன்ற நுண்ணுயிர்களாகும். | சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலை பெற்றுள்ள திரவ மூலக்கூறுகளாகும். |
| 2. | சில பூஞ்சைகள் மனிதர்களுக்கு ஒவ்வாமையும் தாவரங்களில் நோய்களையும் உண்டாக்குகின்றன. | தூசி, மூடுபனி, கரும்புகை போன்றவை மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பவை. |
22.
1.கார உலோகங்களின் புளூரைடுகள் பின்வரும் கரைதிறன் வரிசையைக் கொண்டுள்ளன.
LiF < NaF < Kf < RbF < CsF
2.LiF ன் கரைதிறன் மிகக்குறைவு.Li+ மற்றும் F- ன் சிறிய உருவளவு காரணமாக மிகக்குறைந்த கரைத்திறனைக் கொண்டுள்ளது.
23.
| ஆக்சிஜனேற்றம் | ஒடுக்கம் | |
|---|---|---|
| (i) | ஆக்சிஜனேற்ற சேர்த்தல் மற்றும் ஹைட்ரஜனை நீக்குதல் | ஹைட்ரஜனை சேர்த்தால் மற்றும் ஆக்சிஜனை நீக்குதல் |
| (ii) | எலக்ட்ரானை இழத்தல் \(Fe^{2+}\to Fe^{3+}+e^-\) |
எலக்ட்ரானை ஏற்றல் \(Cu^{2+}+2e^-\to Cu\) |
| (iii) | ஆக்சிஜனேற்ற எண் அதிகரித்தல் | ஆக்சிஜனேற்ற எண் குறைத்தல் |
24.
Mg+ முதல் அயனியாக்கும் ஆற்றல் ⟶ Mg + 1e- ........(1)
Mg+ + இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் ⟶ Mg2+ + 1e- ......(2)
Mg2+ + மூன்றாம் அயனியாக்கும் ஆற்றல் ⟶ Mg3+ + 1e- ......(3)
(i) மேற்கண்ட மூன்று படிகளிலும், 3வது அதிக அயனியாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
(ii) Mg2+ -ல் 10 எலக்ட்ரான்கள் உள்ளன. இது (2,8) என்ற நிலையான ஆர்கான மந்தவாயு (z=10)-ன் எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளது.
(ii) முழுவம் நிரம்பிய ஆற்றல் மட்டத்திலிருந்து எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
25.
(i) நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் அமைப்பினை நாம் வரைவோம்.
(ii) அணுக்களின் அமைவு அமைப்பு

(iii) HNO3 ல் உள்ள ஒட்டு மொத்த இணைதிற எலக்ட்ரான்கள் =[(ஹைட்ரஜன்)+[1 க்ஸ் 5(நைட்ரஜன்)]+[3 x 6(ஆக்சிஜன்)]=1+5+18=24
(iv) அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை வரைக. படத்தில் காட்டியுள்ளவாறு நான்கு பிணைப்புகளை வரைய இயலும். இது எட்டு எலக்ட்ரான்களால் (4 பிணைப்பு இரட்டை) உருவாக்கப் பட்டதாகும்.

(v) மீதமுள்ள 16 எலக்ட்ரான்களை (24-8=16) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய ஆக்சிஜன் துவங்கி ஒவ்வொரு அணுவும் எட்டு எலக்ட்ரான்கள் பெறும் வகையில் பங்கீடு செய்ய வேண்டும். ஆறு தனித்த ஜோடி எலக்ட்ரான்கள், வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஒவ்வொரு ஆக்சிஜன் மீதும் தலா மூன்று ஜோடி தனித்த எலக்ட்ரான்கள் எட்டு எலக்ட்ரான் விதியை நிறைவு செய்யும் வகையில் பங்கிடப்படுகின்றது.
மீதமுள்ள இரு தனித்த இரட்டைகளை ஹைட்ரஜனோடு இணைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மீது பங்கிடுவதன் மூலம் அது எட்டு எலக்ட்ரானை பெறும்.

(vi) அனைத்து அணுக்களும் எட்டு எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேற்கண்டுள்ள பங்கீட்டில், நைட்ரஜனானது எட்டு எலக்ட்ரான்களுக்கு இரு எலக்ட்ரான்களை குறைவாக பெற்றுள்ளது. எனவே வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஆக்சிஜனிலிருந்து ஒரு தனித்த இரட்டையினை நகர்த்துவதன் மூலம் அந்த ஆக்சிஜனுக்கும், நைட்ரஜனுக்கும் இடையே மற்றொரு பிணைப்பினை உருவாக்குக.

26.
1.நீண்ட கார்பன் தொடரை தெரிவு செய்யா வேண்டும்(மூலவார்த்தை) இச்சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற அனைத்துத் தொகுதிகளையும் பதிலிகளாகக் கருத வேண்டும்.
2.நீண்ட கார்பன் சங்கிலிக்கு எண் இட வேண்டும்.
3. பதிலிகளுக்கு பெயரிடுதல் (முன்னொட்டு அல்லது பின்னொட்டு)
4. பதிலிகளை ஆங்கில அக்கறை வரிசையில் வைக்க.
5.பெயரை பின்வருமாறு எழுத வேண்டும்.
முன்னொட்டு +மூலவார்த்தை +முதன்மை பின்னொட்டு +இரண்டாம் நிலை பின்னொட்டு.
27.
1. இச்செயல் முறையில், சகப்பிணைப்பானது சீரற்ற முறையில் பிளவுபடுகிறது. இதில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருந்த அணுக்களில் ஒரு அணு பிணைப்பு இரட்டை எலட்ரான்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.
2. இதன் விளைவாக ஒரு நேர் அயனி மற்றும் ஒரு எதிஅயனி உருவாகும். பிணைக்கப்பட்டிருந்த அணுக்களில் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட அணு எதிர் அயனியாகவும் மற்றொன்று நேர் அயனியாகவும் மாற்றமடைகிறது.
3. இப்பிளவானது அதிக எலக்ட்ரான் கவர்தன்மையுடைய அணுவினை நோக்கிய ஒரு வளைவான அம்புக்குறியால் குறிப்பிடப்படுகிறது.
4. எடுத்துக்காட்டாக, மூவிணைய பியூட்டைல் புரோமைடில் புரோமின் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை பெற்றிருப்பதால் C-Br பிணைப்பானது முனைவுள்ள பிணைப்பாகும்.
5. C-Br பிணைப்பில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான்கள் கார்பனைக் காட்டிலும் புரோமினால் அதிக அளவு கவரப்படுகின்றது.
6. எனவே, C-Br பிணைப்பானது நீராற்பகுத்தலில், சீரற்ற பிளப்பிற்கு உட்பட்டு மூவிணைய பியூட்டைல் நேர் அயனியினைத் தருகிறது.

7. ஆல்டிஹைடு அல்லது கீட்டோன்களில் காணப்படும் C-H பிணைப்பு பிளவுபடுதலை நாம் கருதுவோம். ஹைட்ரஜனைக் காட்டிலும் கார்பன் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது என நாம் அறிவோம் எனவே C-H பிணைப்பின் சீரற்ற பிளவால் கார்பன் எதிர் அயனி உருவாகிறது.
8. எடுத்துக்காட்டாக ஆல்டால் குறுக்க வினையில் OH- அயனியானது \(\alpha\)-ஹைட்ரஜனைக் கவர்வதால் பின்வரும் எதிர் அயனி உருவாகிறது.

28.
மொத்த அழுத்தம் = 1 atm
PN2 = \(\left( \frac { 80 }{ 100 } \right) \\ \) x அதிக அழுத்தம்
= \(\frac { 80 }{ 100 } \) x 1 atm
= 0.8 atm
PO2 = \(\left( \frac { 20 }{ 100 } \right) \) x 1
= 0.2 atm
ஹென்றி விதிப்படி,
Pகரைபொருள் = KH x கரைசலின் கரைபொருள்
PN2 = (KH)நைட்ரஜன் x கரைசலின் நைட்ரஜன் மோல் பின்னம்
⇒ \(\frac { 0.8 }{ 8.5\times { 10 }^{ 4 } } ={ X }_{ { N }_{ 2 } }\\ \)
⇒ \({ X }_{ { N }_{ 2 } }\\ \) = 9.4 x 10-6
இதைப்போலவே
\({ X }_{ { O }_{ 2 } }=\frac { 0.2 }{ 4.6\times { 10 }^{ 4 } } \)
= 4.3 x 10-6
29.
30.
வெப்ப இயக்கவியலின் முதல்விதி
1.வெப்ப இயக்கவியலின் முதல் விதியானது ஆற்றல் அழிவின்மை விதி என அறியப்படுகிறது.இவ்விதிப்படி, ஒரு வகையான ஆற்றல் மற்றொருவகை ஆற்றலாக மாறினாலும், ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி ஆகும்.
2. ஒரு அமைப்பானது நிலை 1லிருந்து நிலை 2க்கு மாற்றமடையும் போது அதன் அகஆற்றலானது U1 லிருந்து U2 க்கு மாற்றமடைகிறது. எனவே அகஆற்றல் மாற்றம்
\(\triangle U=U_2-U_1\)
3.அமைப்பு ஆற்றலை உறிஞ்சுவதாலோ அல்லது உமிழ்வதாலோ அல்லது அமைப்பானது வேலை செய்வதாலோ அல்லது அமைப்பின் மீது வேலை செய்யப்படுவதாலோ இந்த அக ஆற்றல் மாற்றம் நிகழ்கிறது.
4.அமைப்பின் மொத்த ஆற்றல் மாறிலியாக இருக்க வேண்டும்.எனவே, முதல் விதியினை பின்வருமாறு கணிதவியல் கூற்றாக எழுத முடியும்.
\(\triangle U=q+w\)
5.இங்கு q-அமைப்பிற்கு கொடுக்கப்பட்ட வெப்பத்தின் அளவு; w-அமைப்பின் மீது செய்யப்பட்ட வேலை
6.வெப்ப இயக்கவியலின் முதல் விதியின் பல்வேறு கூற்றுகள்:
7. எப்பொழுதெல்லாம், ஒரு ஆற்றலின் ஒரு குறிப்பிட்ட வகை மறைகிறதோ அதற்கு சமமான அளவுள்ள மற்றொரு வகையான ஆற்றல் கண்டிப்பாக உருவாகும்.
8.ஒரு அமைப்பு மற்றும் சூழல் ஆகியவற்றின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி (அல்லது அழிவாற்று இருக்கும்).
9."ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்றலாம்".
10 "ஒரு மூடிய அமைப்பின் அக ஆற்றல் மாற்றம் என்பது அதன் எல்லையின் வழியே பரிமாறப்படும் வெப்பம் அல்லது வேலைக்குச் சமம்."
11"வெப்பம் மற்றும் வேலை ஆகியவை ஒரு அமைப்பின் அகஆற்றலை மாற்றும் இரு வழிகளாகும்."
31.
(i) ஒரு தனித்த தனிமத்தின் (அதவாது வேறெந்த தனிமத்துடனும் பிணைத்துக்காத நிலையில்) ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
எடுத்துக்காட்டு: H2, C12, Na, S8 ஆகியவற்றில் காணப்படும் அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
(ii) ஓரணுவினைக் கொண்ட அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை என்பது அந்த அயனியின் மீதுள்ள நிகர் மின்சுமைக்குச் சமம்.
எடுத்துக்காட்டு:
Na+ அயனியில் உள்ள சோடியத்தின் ஆக்சிஜனேற்ற எண் +1 ஆகும்.
Cl- அயனியில் உள்ள குளோரின் ஆக்சிஜனேற்ற எண் -1
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து உள்ள அனைத்து அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்யமாகும். அயனிகளைப் பொறுத்தவரையில் இக் கூடுதல் மதிப்பு அயனியின் மீதுள்ள நிகர மின்சுமைச் சமம்.
எடுத்துக்காட்டு:
H2SO4 ல் , (2 X H -ன் ஆக்சிஜனேற்ற எண்) +(S- ஆக்சிஜனேற்ற எண்) +(4x ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்)=0
\({ SO }_{ 4 }^{ 2- }\)ல் (1 X S-ன் ஆக்சிஜனேற்ற எண்)+(4 X O-ன் ஆக்சிஜனேற்ற எண்) =-2
(iv) உலோக ஹைட்ரைடுகளைத் தவிர பிற அனைத்துச் சேர்மங்களிலும் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1, உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
ஹைட்ரஜன் குளோரைடில் (HCl), ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1
சோடியம் ஹைட்ரைடில் (NaH) ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் -1
(V) அனைத்துச் சேர்மங்களிலும் புளூரினானது -1 ஆக்சிஜனேற்ற நிலையினைக் கொண்டுள்ளது.
(Vi) பெரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜன் -2 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது. பெராக்சைடுகள், சூப்பர் ஆக்சைடுகள், புளூரினின் சேர்மங்கள் ஆகியன இதற்கு விதிவிலக்காக அமைகின்றன.
எடுத்துக்காட்டுகள்: ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்
நீரில் (H2O) -2 [2 (+ 1)+ x = 0; x = -2]
ஹைட்ரஜன் பெராக்ஸைடில் (H2O2)
H2O2
2 (+ 1) + 2x = 0;
⇒2x =-2;
⇒x =-1
KO2 போன்ற சூப்பர் ஆக்சைடுகளில் -\(\frac {1}{2}\)+1 + 2x = 0·,
2X =-1; X=--\(\frac {1}{2}\)
ஆக்சிஜனின் டைபுளூரைடில் (OF2) + 2.
x + 2 (-1) = 0; x = + 2
(vii) அனைத்துச் சேர்மங்களிலும், கார உலோகங்கள் +1 ஆக்சிஜனேற்ற நிலையினையும், காரமண் உலோகங்கள் +2 ஆக்சிஜனேற்ற நிலையினையும்,பெற்றுள்ளன.
32.
33.
மின்னழுத்த வேறுபாடு = 100 V
=100x1.6x10-19 J
\(\lambda=\frac{\mathrm{h}}{\sqrt{2 \mathrm{mev}}}\)
=\(\frac{6.626\times10^{-34}Kgm^{2}s^{-1}}{\sqrt{2\times9.1\times10^{-31}kg\times100x1.6x10^{-19}J}}\)
λ=1.22x10-10m
34.
1. ஹைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு 1S1 ஆகும்.
2. இதுகார உலோகங்களின் பொதுவான இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பான nS1 ஐ ஓத்திருக்கிறது.
3. மேலும், ஹைட்ரஜன் கார உலோகங்களின் பண்புகளையும் ஒத்துள்ளது.
(i) கார உலோகங்களைப் போன்றே ஒற்றை நோமின்சமை உடைய அயனியை (H+) உருவாக்குகிறது.
(ii) கார உலோகங்களைப் போன்றே ஹைட்ரஜனும் ஹேலைடு ஆக்சைடுகள் (H2O), பெராக்சைடுகள் (H2O2) மற்றும் சல்பைடுகளை (H2S) உருவாக்குகின்றன.
(iii) கார உலோகங்களைப் போன்றே, ஹைட்ரஜனும் ஒடுக்க வினைபொருளாகச் செயல்படுகிறது.
4. எனவே ஹைட்ரஜன் தனிம வரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
35.
| மீளும் வினை | சமநிலை மாறிலி |
| முன்னோக்கு வினைக்கு \(xA+yB\rightleftharpoons lC+mD\) |
KC என்க |
| வினையை மருதிசையில் மாற்றி எழுதும்போது,\(lC+mB\rightleftharpoons xA+yB\) | \({ K }_{ C }^{ 1 }=\frac { 1 }{ { K }_{ C } } \) |
| \(\begin{matrix} A\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons B } & B\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons C } \\ C\overset { { K }_{ 3 } }{ \rightleftharpoons D } & A\overset { { K }_{ 4 } }{ \rightleftharpoons D } \end{matrix}\) எனில் |
\({ K }_{ 4 }={ K }_{ 1 }{ K }_{ 2 }K_{ 3 }\) |
36.

37.
கரிம சேர்மத்தின் எடை=0.24 g
Mg2P2O7 ன் எடை=0.66 g
222 g Mg2P2O7 ல் 62 g P உள்ள
0.66 ல் உள்ள \({62\over 222}\times {0.66\over 0.24}\)
P ன் சதவீதம் \({62\over 222}\times {0.66\over 0.24}\times 100=76.80\%\)
38.
கரைபொருளின் மோலார் நிறை

\(={1000\times 1.86\times 1\over 0.24\times 200}\)
= 38.75 g mol-1
= 38.75 g mol
NaCl யின் கருத்தியலான மோலார் நிறை = 58.5

=1.50
39.

1. கொடுக்கப்பட்டுள்ள p3 எலக்ட்ரான் அமைப்புகளுள் (அ) அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது.
2. இதுவே (அ) நிலையான நிலையை கொண்டதாக கருதப்படுகிறது.
40.
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை

(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை

41.
Keq = 10
R= 8.314 JK-1 mor-1
T= 300 k
\(\triangle G^o\) = -RT In k
1. k, Tமற்றும் R ஆகியவை நேர்குறி மதிப்பை உடையவை. ஆகவே Go எதிர்குறி மதிப்பைப் பெறும்
2. \(\triangle G\) எதிர்குறி மதிப்பை பெற்றால் அவ்வினையானது தன்னிச்சையானது மற்றும் நிகழக்கூடியது.
42.
V1 = 3.8 dm3 V2 = 2.27 dm3
T1 = ? T2 = 00 C = 273 K
\({V_1\over T_1}={V_1\over T_2}\)
\(V_1\times\left(T_2\over V_2\right)=T_1\)

T1=457K
43.
1. வினை நிகழும் சூழலைப் பொறுத்து, டியூட்டிரியமானது ஹைட்ரஜனின் சேர்மங்களிலுள்ள ஹைட்ரஜனை, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ மீள் முறையில் பதிலீடு செய்கிறது.
2. இவ்வினைகள் டியூட்டிரியம் அல்லது கனநீரைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகின்றன .
CH4 + 2D2 \(\rightarrow\) CD4 + 2H2
2NH3 + 3D2 \(\rightarrow\) 2ND3 + 3H2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards