11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
11th Full Test Model Question
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை
தரகர்
தன் பொறுப்பு முகவர்
பண்டகசாலை வைத்திருப்பவர்
கழிவு முகவர்
2.
அலுவல் சார்ந்த மூலதனம் என்பது
இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு
அரசின் சிறப்பு எடுப்பு உரிமை
அ மற்றும் ஆ இரண்டும்
அயல் நாட்டு மூலதனம்
3.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
4.
இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.
இடாப்பு
சரக்காணை
விசாரணை
கப்பல் வாடகை முறி
5.
கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம்
வரம்பற்ற உறுப்பினர்
ரொக்க வியாபாரம்
தவறான நிர்வாகம்
இழப்பு ஏற்படுவதால்
6.
உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்
மூன்று
நான்கு
இரண்டு
ஐந்து
7.
உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
மேலாண்மைக்குழு
பொதுக்குழு
நிர்வாகக்குழு
பொதுச்சபை
8.
வருமான வரி என்பது
வியாபார வரி
நேரடி வரி
மறைமுக வரி
சேவை வரி
9.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
10.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
11.
இந்து கூட்டுக் குடும்பத் தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்?
கர்த்தா
கூட்டு வாரிசுதாரர்
தலைமுறை
கூட்டாளிகள்
12.
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.
பங்காதாயம்
இலாபம்
வட்டி
இவை எதுவும் இல்லை
13.
பணியமர்த்தல், கடன் சேகரிப்பு, ஆலோசனை போன்ற முழுமையான சேவைகள் வழங்குவதற்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு நிபந்தனை _______ என்று அழைக்கப்படுகிறது.
முதிர்வு ஏட்டுக்கடன் தரகு வணிகம்
தேசிய ஏட்டுக்கடன் வணிகம்
அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்
துணை நாடாத ஏட்டுக்கடன் வணிகம்
14.
பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை
ஒரு வெளியீட்டின் குறியீடு
பணியாளர்களின் ஈடுபாடு
இணக்க வழிமுறைகளை நிறுவுதல்
இவற்றில் எதுவும் இல்லை.
15.
மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?
வாக்குறுதி அளிப்பவர்
வாக்குறுதி பெறுபவர்
முகவர்
சட்டரீதியான பிரதிநிதி
16.
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
17.
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
வழிச் சீட்டு
சரக்கு குறிப்பு
சார்ட்டர்
ஒப்பந்த இரசீது
18.
செல்லுபடியாகக்கூடிய ஏற்பு
அறுதியிட்டுக் கூறுதல்
தகுதியற்றது
அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
நிபந்தனையுடையது.
19.
பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.
சந்தையிடுதல்
வரிசைப்படுத்துதல்
வழங்கல்
விற்பனை செய்தல்
20.
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
இறக்குமதி வணிகத்தில் பயன்படுத்தபப்டும் பல்வேறு ஆவணங்கள் யாவை? ( ஏதேனும் 3 )
23.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.
24.
தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?
25.
வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.
26.
உலகளாவிய வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக
27.
அரசு நிறுமம் என்றால் என்ன?
28.
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
29.
தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி
30.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
31.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
32.
ஏற்பு என்றால் என்ன?
33.
பணிக்கு ஏற்ற தொகையைப் பெற கோரிக்கைவிடக் கூடிய சூழ்நிலைகள் யாவை?
34.
தவணை முறை விற்பனை என்றால் என்ன?
35.
மறைமுக வரியின் பொருள் தருக.
36.
TVS நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்கு மோட்டார் பைக்குகளை விற்பது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு
37.
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
38.
39.
சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் யாது?
40.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
41.
பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகளை குறிப்பிடுக.
42.
துறைவாரிப் பண்டக சாலையின் நன்மைகளை விளக்குக.
43.
44.
45.
சில்லறை வியாபாரிகளின் பண்பு நலன்கள் யாவை?
46.
47.
48.
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
49.
நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.
50.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
51.
வணிக வங்கிகளால் வழங்கப்படும் குறுகிய கால நிதி ஆதாரங்களை சுருக்கமாக விளக்குக
52.
வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி
53.
தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி
54.
சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்தம் ஒன்றின் இன்றியமையாத கூறுகள் யாவை?
1.
(b)
தன் பொறுப்பு முகவர்
2.
(c)
அ மற்றும் ஆ இரண்டும்
3.
(c)
1980
4.
(a)
இடாப்பு
5.
(c)
தவறான நிர்வாகம்
6.
(c)
இரண்டு
7.
(b)
பொதுக்குழு
8.
(b)
நேரடி வரி
9.
(b)
குடியரசுத் தலைவர்
10.
(c)
25
11.
(b)
கூட்டு வாரிசுதாரர்
12.
(c)
வட்டி
13.
(c)
அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்
14.
(a)
ஒரு வெளியீட்டின் குறியீடு
15.
(c)
முகவர்
16.
(c)
கப்பல் சார் காப்பீடு
17.
(a)
வழிச் சீட்டு
18.
(c)
அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
19.
(c)
வழங்கல்
20.
(a)
அங்காடி
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
இறக்குமதி உரிமம்,சரக்காணை, நாணய உறுதி கடிதம், நுழைவுச்சீட்டு, பார்வைச் சீட்டு, துறைமுக கட்டணஇரசீது, கப்பல் இரசீது, மாற்றுச் சீட்டு, குறிப்புரை.
23.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பல வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அவையாவன
(i) வணிக வங்கிகள்: பொதுத்துறை வங்கிகள் (எ.கா) பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, தனியார் துறை வங்கி (எ.கா) ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் பாங்க், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
(ii) வட்டார ஊரக வங்கிகள்:(எ.கா) பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, வள்ளலார் கிராம வங்கி.
(iii) கூட்டுறவு வங்கிகள்:(எ.கா) தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி (TNSC Bank) மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்.
(iv) குறும நிதி நிறுவனங்கள்: (எ.கா) முத்ரா வங்கி
24.
தங்கம், எண்ணெய், கலப்பை, துணி ஆகியவை வியாபாரம் செய்யப்பட்டதாக அழகர்மலை, புகளர், மாங்குளம் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்- பிராமி கல்வெட்டுகள் விளக்குகின்றன.
25.
முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.வைப்புகளை ஏற்றல்,கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல், கடனை உருவாக்குதல்.
வைப்புக்களை ஏற்றல்:
இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.பெரிய அளவிலான வைப்பு கணக்குகளை கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகளாக வகைப்படுத்தலாம்.
(i) கேட்பு வைப்புகள்: இந்த வைப்புகள் எந்த நாளிலும் கேட்கும்போது திருப்பி அளிக்கப்பட வேண்டும்.இது சேமிப்பு வைப்புக்கள் மற்றும் நடப்பு வைப்புகளை உள்ளடக்கியது.
(ii) சேமிப்பு வைப்புகள்: பொதுமக்கள் இந்தக் கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு தனிநபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் இந்தக் கணக்கினைத் தொடங்கலாம்.
(iii) நடப்பு வைப்புகள்: நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.|
(iv) கால வைப்புகள்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்புச் செலுத்துகின்ற வகையில் உள்ள நிலையான வைப்புகள்,தொடர் வைப்புகள் அடங்கும்.
(v) நிலையான வைப்புகள்: ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதைக் குறிக்கும்.நிலையான வைப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
(vi) தொடர் வைப்புகள்: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது இந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்வதைக் குறிக்கும்.
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் முன் பணம்:
வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டுகளை தள்ளுபடி செய்தல்.
கடன்கள்: குறுகிய கால மற்றும் நடுத்தரக் காலக் கடன்களை வணிக வங்கிகள் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.வீட்டுக் கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன், கல்விக் கடன்,நகைக் கடன்,இரண்டாம் நிலை பணிகள், முகமைப் பணிகள்,பொதுப்பயன்பாட்டுப் பணிகள்.
26.
(i) இது மற்ற மாற்றுமுறை சாதனங்களை போலவே தடையின்றி வியாபாரம் செய்யப்படும் மாற்றுமுறை பிணையாகும்.
(ii) உலகளாவிய வைப்பு இரசீதுகள் அனைத்து நாட்டு முதலீட்டாளர்களுக்கு அவர்கள் நாட்டு செலாவணியில் அல்லது பொதுவாக ஏற்கப்படும் செலாவணியில் வெளியிடப்படுகிறது.
(iii) உலகளாவிய வைப்பு இரசீதை வைத்திருப்பவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்கிற்கு உரிய பங்காதாயம் மற்றும் பங்கு மேலுதியம் பெற உரிமை பெற்றவராவர்.
27.
(i) பொதுத்துறை நிறுவனங்களை 1956 ஆம் ஆண்டு இந்திய நிறுமச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அது அரசு நிறுமம் எனப்படும். இவ்வகை நிறுமங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமானது.
(ii) 1956-ஆம் ஆண்டு இந்திய நிறுமச்சட்டம் பிரிவு 617 அரசு நிறுமங்கள் என்பது 51% க்கு மேலாக (செலுத்தப்பட்ட மூலதனம்) மத்திய அரசு, மத்திய (அ) மாநில அரசு, பகுதி மத்திய அரசு மற்றும் பகுதி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநில அரசு வைத்திருந்தால், அது அரசு நிறுமங்கள் ஆகும்.
(iii) (எ.கா.) இந்திய இரும்பு எஃகு ஆணையம், இந்திய எண்ணெய்க்கு கழகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், பாரத மிகு மின் நிறுவனம் ஆகும்.
28.
(i) பொருட்களின் தயாரிப்பு , வடிவமைப்பு,
(ii) தளவாட அமைவிடம், சந்தை மூலங்களை தெரிவுசெய்தல்,உற்பத்தி கட்டமைப்பு,
(iii) விநியோகஸ்தர் அல்லது வணிகர் வலையமைப்பு,வடிவமைப்பு,பண்டகசாலை அமைவிடம்,தளவாட வரைபடம் மற்றும் பெயர்ச்சி பங்கீட்டு வடிவமைப்பு,உற்பத்தி திட்டம்,
(iv) சரக்கிருப்பு மேலாண்மை,சரக்கிருப்பின் நிலைகள் போக்குவரத்து வகையைச் தேர்வு செய்தல் சரக்கை கப்பலில் ஈற்றுதலின் அளவு,
(v) வழித்தடத்தை முடிவு செய்தல் மேலும் போக்குவரத்து ஒப்பந்தவியல் தொகுப்பு மூலப் பொருளை கையாளுதல் ஆகும்.
29.
(i) தனிநபர் உரிமை : இது தனி நபரால் நடத்தக் கூடிய அமைப்பாகும். தனியாள் வணிகர் ஒருவரே தேவையான மூலதனத்தை செலுத்துகிறார். தனியாள் வணிகத்தில் அவர் ஒருவரே உரிமையாளராக செயல்படுகிறார்.
(ii) தலையீடற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு: தனியாள் வணிகர் தனது வியாபாரத்தில் தலையீடின்றிச் செயல்படுகிறார். அதனால் அவர் வணிகம் சார்ந்த முடிவுகளை விரைவாக எடுக்கிறார்.
(iii) குறைந்த மூலதனம்: தனியாள் வணிகத்தில் அவர் குறைந்த முதலீடு செய்தால் போதுமானது. தொழிலை தொடங்கலாம்.
30.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
31.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
32.
ஏற்பு 2 (b) (Acceptaince) முன்மொழிதல் யாருக்கு செய்யப்பட்டதோ அவரே ஏற்றுக்கொள்வதாகக் கூறியவுடன் அவ்வாறு செய்யப்பட்ட முன்மொழிதல் ஏற்றுக்கொள்ளப்ப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
33.
(i) ஒரு ஒப்பந்தம் செல்லாதது என கண்டுபிடிக்கப்படும் பொழுது.
(ii) கைமாறு கருதாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஏதேனும் செய்யப்படும் பொழுது.
(iii) ஒரு நபர் முழு ஒப்பந்தத்தையும்நிறைவேற்ற தவறுதல் அல்லது நிறைவேற்றாமல் விட்டு விடும் பொழுது.
(iv) ஒரு ஒப்பந்தம் பிரித்தளிக்ககூடியதாக இருந்தால்
(vi) ஒரு ஒப்பந்தம் மோசமாக நிறைவேற்றப்பட்டால்.
34.
இம்முறையில் பொருள்களை வாங்கிய உடன் பொருளுக்குரிய பணத்தை உடனடியாக செலுத்தாமல் பல தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் முதல் தவணை செலுத்திய உடனேயே வாங்கியவர் பொருளின் உரிமையாளர் ஆகிறார். இதனை நீட்டிய செலுத்துகை முறை என்று கூறலாம்.
35.
சரக்குகள் மற்றும் சேவைகளின் மீது வரிவிதிக்கப்பட்டு விற்பனையனரால் வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு பின்னர் அரசுக்கு செலுத்தப்படும் வரியே மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.
36.
டிவிஎஸ் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது இரு சக்கர மோட்டார் வாகனங்களை ஏற்றுமதி செய்வதால், இது ஒரு ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
37.
(i) கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் தொழில்கள் பல நூற்றாண்டாக இருந்து வருகின்றன.
(ii) உலக வர்த்தகத்தில் சேவைத் தொழில்கள் 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
(iii) உலகப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துறையாகச் சேவைத் துறை உருவாகியுள்ளது.
38.
39.
சமுதாய பொதுநலன் மேம்பாடு கருதி(செயல்படத்தக்க) உரிய நபர், சமுதாய நம்பிக்கைக்குரிய அடிப்படை மேன்மை,சமுதாய ஒற்றுமை,உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் பங்களிப்பை ஏற்படுத்துவது ஆகும்.பீட்டர் எஃப் டிரக்கர்.
40.
(i) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது : பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(ii) பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது : மூலப் பொருட்கள்,எரிபொருள்,உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு உதவுகிறது.
41.
பன்னாட்டு நாணய நிதியத்தின் செயல்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
(i) இது பன்னாட்டு அளவில் குறுகிய கால் கடன் நிறுவனமாக செயல்படுகிறது
(ii) இது பரிமாற்ற விகிதங்களில் சாதாரண சரிக்கட்டுதல்களை செய்வதற்கு உதவுகிறது
(iii) இது உறுப்பு நாடுகளின் நாணயங்களை தன்னகத்தே வைத்துள்ளது.அதிலிருந்த்து கடன் வாங்க கூடிய உறுப்பினர் நாடுகள் நாணய மதிப்பை பெற்று கொள்ளலாம்
(iv) நல்ல வலுவான பொருளாதார மற்றும் நிதிக்கொள்கையை பின்பற்றும் நாடுகளுக்கு பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது
(v) உறுப்பு நாடுகளின் பயனுள்ள கொள்கைகளை வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி அளிக்கிறது.வங்கியியல்,நிதி,நாணய மற்றும் பரிமாற்றக் கொள்கைகளை வடிவமைப்பதில் தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது
(vi) உறுப்பினர் நாடுகளின் வாணிக சமநிலையில் ஏற்படும் சமமற்ற தன்மையை சரி செய்ய உதவுகிறது.
42.
(i) மகிழ்வுடன் வாங்குதல்: ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான அனைத்து வகைப் பொருட்களையும் வாங்க வெவ்வேறு இடங்களுக்குச் செல்லாமல் ஒரே கூரையின் கீழ் வாங்கி கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளரின் நேரமும் உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகின்றன.
(ii) சிறந்த சேவைகள்: ஓய்வறைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு அரங்கங்கள் தொலைபேசி மூலம் வரும் ஆணைகளை ஏற்றல் மற்றும் வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகம் செய்தல் போன்ற அதிகபட்ச சேவைகளையும் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இது வழங்குகிறது.
(iii) மைய இட அமைவு: பொதுவாக துறைவாரிப் பண்டக சாலைகள் நகரின் மையப் பகுதியில் தான் அமைந்திருக்கும். ஆகவே நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் நுகர்போர் எளிதாக வந்து செல்ல முடிகிறது.
(iv) இடைநிலையர்கள் நீக்கம்:
தயாரிப்பாளர்களிடமிருந்து பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து சொந்த பண்டகக் காப்பகங்களில் சேர்த்து வைத்து விற்பனை செய்வதால் முகவர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் உள்ளிட்ட இடைநிலையர்கள் தவிர்க்கப்படுகின்றன .அதனால் விலை குறைவாக தரமானப் பொருட்களை வாங்க முடிகிறது.
(v) பேரளவு செயல்பாட்டினால் உண்டாகும் சிக்கனங்கள்: துறைவாரிப் பண்டக சாலைகள் பெரிய அளவில் ஏற்படுத்தப்படும் ஒரு அமைப்பு ஆகும்.அதாவது பொருட்களை பேரளவில் கொள்முதல் செய்வதால் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற முடிகிறது.
43.
44.
45.
பின்வருபவை சில்லறை வியாபாரிகளின் பண்பு நலன்கள் ஆகும்.
(i) சில்லறை வியாபாரிகள் பல்வேறு வகையான பொருட்களின் வணிகத்தில் ஈடுபட்டிருப்பார்.
(ii) சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் மொத்தமாகப் பொருட்களை வாங்கி, அவற்றை சிறு அளவில் நுகர்வோருக்கு விற்பனை செய்கிறனர்.
(iii) முக்கிய சந்தைப் பகுதிக்கு உள்ளேயோ அல்லது அருகிலேயோ சில்லறை விற்பனை நிலையங்கள் இடம் பெரும்.
(iv) பொதுவாக மொத்த வியாபாரியிடம் கடன் அடிப்படையில் சரக்குகளை வாங்கி, நுகர்வோருக்கு ரொக்கத்திற்கு விற்கின்றனர்.
(v) சில்லறை வியாபாரிகள் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பிலும், உற்பத்தியாளரிடமிருந்து விலகியும் இருப்பார்.
46.
47.
48.
நிலவியல் சிறப்பு தேர்ச்சி: உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் கனிம வளங்கள், நீர் மின்சக்தி, உலோக வளங்கள் போன்றவை அதிகமாகவும் வேறு சில நாடுகளில் முன்னேறிய உற்பத்தி தொழில்நுட்பம், திறமையான மக்கள் தொகை, மூலதன கருவிகள் ஆகியவை அதிகமாகவும் இருக்கும். எனவே, தன்னிடம் உபரியாக உள்ள வளங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அங்கிருந்து பற்றாக்குறையான வளங்களைப் பெற்று கொள்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
(ii) வளங்களை தேவையான அளவிற்குப் பயன்படுத்துதல்: எந்த நாடு தன்னால் திறமையாக பொருட்களை தயாரிக்க இயலவில்லையோ அது மற்ற நாடுகளிலிருந்து அதாவது திறமையாக பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நாடுகளிலிருந்து உபரியாக உள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற கோட்பாட்டின்படிதான் பன்னாட்டு வணிகம் செயல்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வளங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்த உதவுகிறது.
(iii) பொருளாதார வளர்ச்சி: வளரும் நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் மூலமாக விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் காரணமாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட பன்னாட்டு வணிகத்தின் இறக்குமதி செய்து முடிவற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கும்.
(iv) வேலைவாய்ப்பை உருவாக்குதல்: வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் பன்னாட்டு வணிகம் உதவுவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பையும், அனுப்புகை மற்றும் அகற்றீட்டு முகவர்கள், தேவைக் குறிப்பீட்டகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் புற ஒப்படைப்பு முகமைகள் போன்றவற்றிற்கும் மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
(v) வாழ்க்கைத் தரம் மேம்படுதல்: உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுவிதமான பொருட்கள் அல்லது சேவைகளை பன்னாட்டு வணிகத்தின் மூலம் மக்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடிகிறது. நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(vi) விலை சமனிலைப்படுத்தல்: உலகச் சந்தையில் தினந்தோறும் விலை மாற்றம் அடையக்கூடிய பல்வேறு பொருட்களின் விலையை பன்னாட்டு வணிகம் சமப்படுத்துகிறது. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்டப் பொருட்களின் விலை உள் நாட்டில் உயருகிறதோ அப்பொழுது மற்ற நாடுகளிலிருந்து அப்பொருட்களை இறக்குமதி செய்து விலையைச் சமன் செய்கிறது. அதே போன்று குறிப்பிட்ட பொருள்களின் விலை குறையும் போதெல்லாம் அந்த பொருள்களை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விலையை நிலைப்படுத்துகிறது. உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிக ஏற்றத்தாழ்வாக இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
(vii) அதிக இலாபத்திற்கான வாய்ப்பு: அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பன்னாட்டு சந்தையில் பல்வேறு நாடுகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. ஏதன் பயனாக அதிக இலாபத்தை ஈட்ட முடிகிறது.
(viii) முழுத் திறனையும் பயன்படுத்துதல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிக அளவில் சரக்கு மற்றும் பொருட்களை உலகச் சந்தையில் விற்பதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் தன்னுடைய இயந்திரம் மற்றும் தொழில் நுட்பத்தை முழுமையான அளவில் பயன்படுத்துகிறது.
(ix) பன்னாட்டு அமைதி: உலக நாடுகள் தனித்தனியே இயங்கினாலும் பன்னாட்டு வணிகத்தினால் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிறது. கலாச்சாரம், கருத்துகள் மற்றும் பரஸ்பர புரிந்துணருந்தல் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. பன்னாட்டு வணிகம் உலக மக்களிடையே கலாச்சார சமூக உறவுகளை வளர்க்க உதவுகிறது. ஒட்டு மொத்தமாக உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
49.
(i) எந்த விதமான பயனையும் நேரடியாக திரும்பப் பெறும் எதிர்பார்ப்பற்ற, அரசால் சமுத்தப்படும் ஓர் கட்டாயக் கட்டணமே வாரியாக. அதாவது, மக்களால் அரசுக்கு அளிக்கப்படும் ஓர் கட்டாயக் கட்டணம் அல்லது பங்களிப்பே வரியாகும்.
(iiஒரு நபர் வரிக் கட்ட வேண்டிய நிலையில் இருப்பார் எனில், அவ்வரியைக் கட்ட வேண்டியது அவரது சட்டக் கடமையாகும்.
(iii) அரசனுடைய மிக முக்கிய வருவாய் வரியின் மூலமாகவே ஈட்டப்படுகிறது. இவ்வரி வருவாயானது குடிமக்களின் நலதிட்டங்களுக்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) சிறந்த ஓர் வரைமுறை, மக்களின் பணிபுரிதல் சேமித்தல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றில் உள்ள வர்களின் விருப்பம் தகுதி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. இல்லையெனில், அது வணிகம், தொழில் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையே பாதித்து விடும்.
வரிகளின் வகைகள்:
இந்தியாவில் வரிகள் பின்வரும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பபட்டுள்ளது.
நேர்முக வரி:
(i) வருமான வரி
(ii) நிறும வரி
(iii) சொத்து வரி
(iv) அன்பளிப்பு வரி (நன்கொடை வரி)
(v) பண்ணை வரி
(vi) பயன்கள் வரி
நேர்முக வரிகள்:
நேர்முக வரிகள் என்பது யார் மீது விதிக்கப்படுகிறது அவரே அவ்வரியைச் செலுத்துவதாகும். அதாவது நேர்முக வரியில் வரிதாக்கமும் , வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழுகின்றன. இவ்வாறு, வரித் தாக்கமும், வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழும் வகையைகி சார்ந்த வரிகள் நேர்முக வரிகள் எனப்படும் அதாவது தனி நபரின் வருமானம் அல்லது அவரின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு அவரால் செலுத்தப்படும் வரியாகும் இந்தியாவில் அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மறைமுக வரிகள்:
(i) மறைமுக வரிகளின் கீழ், வரித்தாக்கமும், வரிநிலைப்பாடும் வேறுபட்ட நபர்களின் மீது விழுகின்றன. இவை யார் மீது விதிக்கப்படுகின்றனவோ அவர்களால் சுமக்கப்படுவதில்லை. இவை மற்றவர்களுக்கு மாற்றி அளிக்கப்படுகின்றன.
(ii) அதாவது சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர் மீது வரி விதிக்கப்பட்டு அவற்றை வாங்குபவரால் செலுத்தப்படும் வரியே மறைமுக வரியாகும். உதாரணம் சரக்கு சேவை வரி (GST).
50.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
51.
(i) கடன்களும் முன்பணங்களும் (Loan and Advances) : கடன் என்பது கடன் கோருபவரின் கடன் கணக்கில் ஒட்டு மொத்தக் கடன் தொகையையும் ஒரே வீச்சில் வரவு வைக்கப்பட்ட தொகையைக் குறிக்கும்.கடன் பெறுநர் அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொகையை, அனைத்தையும் ஒட்டு மொத்தமாக பெற்று பயன்படுத்துகிறார்.கடன் பெற்ற தொகையை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தவணைகளில் திருப்புச் செலுத்துவார்.ஆனால் இந்தக் கடனுக்கான வட்டி, கடன் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து திருப்பி அடைக்கும் நாள் வரையிலான காலத்திற்கு மொத்தக் கடன் தொகையின் மீது கணக்கிடப்படும்.இவ்வகை கடன்கள் பிணையத்தை வைத்துக் கொண்டோ அல்லது பிணையம் இல்லாமலும் வழங்கப்படலாம்.கடன் மற்றும் முன்பணங்கள் வழக்கமாக நிலைவைப்பு ரசீது, சரக்குரிமை ஆவணங்கள், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் போன்ற ஒரு சில பிணையங்களை ஈடாக பெற்றுக்கொண்டு வழங்கப்படுகிறது.
(ii) வங்கிமேல்வரைப்பற்று (Bank Overdraft): வங்கி மேல்வரைப்பற்று என்பது வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு ஒரு வாடிக்கையாளரின் வங்கி நடப்பு கணக்கில் வரவில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை எடுத்துப் பயனப்டுத்திக்கொள்ளும் ஓரி ஏற்பாடு ஆகும்.எவ்வளவு தொகை கடனாகப் பெறப்படுகிறதோ அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.ஒவ்வொரு வடிக்கையாளருக்கான உரிய மேல்வரைப்பற்றின் உச்ச வரம்பு அவரின் நடப்பு கணக்கில் சராசரியாக புழக்கத்திலுள்ள வரவிருப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
(iii) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் (Discounting the Bill of Exchange) : சரக்குகளை கடன் அடிப்படையில் விற்கும்போது,விற்பவர் வாங்குபவரின் பேரில் மாற்றுச்சீட்டை எழுதுகிறார்.மாற்றுச்சீட்டு சராசரியாக 15 நாள் முதல் அதிகபட்சம் 180 நாட்கள் வரையிலான காலத்திற்கு வரையப்படுகிறது.இந்நிலையில் சரக்கைக் கடனுக்கு விற்ற விற்பனையாளர் மாற்றுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு முன்பாக பணத்தைப் பெற முடியாத நிலையில், மாற்றுச் சீட்டை தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் தள்ளுபடி செய்து, பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்.மாற்றுச் சீட்டை தள்ளுபடி செய்தல் என்பது, அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாக வங்கிகளிடம் தள்ளுபடியில் விற்கப் பணம் பெரும் ஒரு நடவடிக்கையைக் குறிக்கிறது.
(iv) தூயக் கடன் / பிணையமற்ற கடன் (Clean Loan) : தூய / பிணையமற்ற கடன் என்பது எவ்விதமான பிணையங்களையும் ஈடாகப் பெறாமல் கடன் பெறுநரின் குணநலன்கள், திருப்புச் செலுத்தும் திறன் மற்றும் அவரின் செயல் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுவதாகும்.
(v) வணிகத்தாள் (Commercial paper) : வாக்குறுதித் தாளின் வடிவத்தில் எவ்விதப் பிணையமும் இல்லாமல் நிறுமங்களால் பங்குச் சந்தையில் வெளியிடப்படும்.ஓர் ஆவணத்திற்கு வணிகத்தாள் என்று பெயர்.கூட்டுப் பங்கு நிறுமங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு பெற்ற முதன்மை முகவர்கள் (Primary Dealers) மற்றும் அனைத்திந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை வணிகத்தாளை வெளியிட தகுதி பெற்ற நிறுவனங்களாகும்.இவ்வகை வணிகத்தாள் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.இவ்வகைத் தாள்கள் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் விரிவு 45w ன் கீழ் வெளியிடப்படுகிறது.இது ஒரு குறுகிய கால நிதி திரட்டும் ஆவணமாக செயல்படுகிறது.குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 365 நாட்கள் தவணையில் முதிர்வடையுமாறு இவ்வகை பத்திரங்கள் வெளியிடப்படுகிறது.
52.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதே வணிகம் எனப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்கள் வாங்குதலும் விற்றாலும் முடிவுற்ற பொருட்கள் பரிமாற்றமும் கொண்டதே வணிகம்.
(iii) இலாப நோக்கம்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இலாப நோக்குடன் விற்பதே வணிகம் ஆகும்.
(iv) வணிகத்தின் சேவை: வணிகம் என்பது வியாபாரம் மட்டுமல்லாமல் இதர சேவைகளை செய்கிறது. போக்குவரத்து, பண்டகக் காப்பு, கட்டுமப் பணி, காப்பீட்டு, வங்கிச் சேவை , விற்பனை அதிகரிப்பு உள்ளீட்டை அடங்கும்.
(v) வணிகத்தின் வகைகள் : வணிகம் என்பது இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று வியாபாரம் செய்வது மற்றொன்று வியாபாரம் செய்வதற்கு உறுதுணைபுரிபவை ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இறுதி நுகர்வோரிடம் செல்லும் வரை வியாபாரம் துணைச் செய்கிறது. நுகர்வோருக்கு சேவைகளையும் வழங்குகிறது.
53.
தொழிலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) பொருளாதார நோக்கங்கள் : தொழில்கள் பொருளாதார நோக்கம் என்பது லாபம் ஈட்டுவதே ஆகும். மேலும் இலாபம் ஈட்டுவதற்கு நுகர்வோரை உருவாக்குதல், புதிய நுட்பங்களை கண்டுபிடித்தல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களே மிக முக்கியமானதாகும்.
(ii) சமூக நோக்கங்கள் : சமூக நலனைப் பேணுவது என்பது சில தொழிலமைப்புகளை, அரிய வகைகளை சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த தொழில் நடவடிக்கைகளையும் சமுதாயத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது.
(iii) நிறுவனம் நோக்கங்கள்: தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம் தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் மயமாக்கம், நுகர்வோருக்கு தரமான பொருள்களை வழங்குதல் நுகர்வோருக்குத் திருப்திப்படுத்துவதில் ஆகியன மூலமாக அமையலாம்.
(iv) மனித நோக்கங்கள்: தொழிலமைப்பு தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். மேலும் இயலாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், நலம் காக்க உதவ வேண்டும். பணியாளர்கள், பொருளாதார, சமூக உளவியல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவையாக அமைய வேண்டும்.
(v) தேசிய நோக்கங்கள்: தொழில் நிறுவனம், ஓரு நாட்டினுடைய மிக முக்கிய அங்கமாக கருதப்படுவதால் அவை நாட்டின் நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகிறது. கடமை வகையில் தன்னுடைய குறிக்கோளை அமைத்துத் தெளிவு வேண்டும். ஒரு நாட்டின் நோக்கம் என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தல், அரசிற்கு வருவாய் ஈட்டுதல், சரக்கு மற்றும் சேவை உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும். எனவே ஒரு தொழில் அமைப்பு தன்னுடைய குறிக்கோளை நிர்ணயம் செய்யும் போது மேற்கூறிய நோக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
54.
பிரிவு 10-ன்படி அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களாகும் எப்பொழுது எனில் உடன்படிக்கை நபர்களின் தன்னிச்சையான இசைவு தகுதி வாய்ந்த நபர்கள், சட்டபூர்வமான நோக்கம், சட்டபூர்வமான மறுபயன் மற்றும் செல்லாத ஒப்பந்தம் என அறிவிக்கப்படாத ஒப்பந்தம் ஆகியவை இன்றியமையாத கூறுகள் இருக்க வேண்டும்.
(i) முனைவும் ஏற்பும் (Offer and Acceptance): ஒரு ஒப்பந்தத்திற்கு இரண்டு நபர்கள் தேவை அவர்களின் ஒரு நபர் முனைவு மற்றொருவர் ஏற்பும் செய்கின்றனர்.
(ii) சட்ட உறவு முறை (Legal Relationship): ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் உள் நோக்கம் தமக்கிடையே ஓர் சட்ட உறவுமுறையை உருவாக்குவதற்காக இருக்க வேண்டும். சமூக தன்மையுடைய உடன்படிக்கைகளில் சட்ட உறவுமுறை என்பதால், அவை ஒப்பந்தங்களாக முடியாது.
(iii) சட்டபூர்வமான மறு பயன் (பிரிவு 2(d) (Lawful Consideration): மறுபயன் என்பது எதையெனும் திரும்பப்பெறுதல் ஆகும். மறுபயன் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ, சேவையாகவோ, அறிவாகவோ இருக்கலாம். மறுபயன் என்பது சட்டத்துக்கு புறம்பானதாகவோ அல்லது ஒழுக்கக் கேடானதாகவோ அல்லது பொது கொள்கைக்கு எதிரானதாகவோ இருக்கக்கூடாது.
(iv) சட்டபூர்வமான நோக்கம் (Lawful Object) (பிரிவு 23): உடன்பாட்டின் நோக்கம் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் இதன் நோக்கம் சட்டத்துக்கு புறம்பானதாகவோ அல்லது ஒழுக்ககேடானதாகவோ அல்லது பொது நலனுக்கு புறம்பாகவோ ஒப்பந்தம் மேற்கொள்ள இயலாது.
(v) தன்னிச்சையான இசைவு (Free consent) (பிரிவு 13 மற்றும் 14): உடன்படிக்கை நபர்களின் தன்னிச்சையான இசைவால் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களிடம் மனமொத்த இசைவு தர வேண்டும். அவர்கள் ஒரு விஷயத்தை ஒரே நேரத்தில், ஒரே நோக்குடன் உடன் பட வேண்டும். பின்வரும் காணங்களால் ஏற்படாத இசைவு தன்னிச்சையான இசைவு எனலாம். அவை வலுக்கட்டாயம், தகாத செல்வாக்கு மோசடி, திரித்துக் கூறுதல் அல்லது தவறு ஆகியவற்றை கூறலாம்.
(vi) ஓப்பந்தத் தகுதி (Capacity of Parties) (பிரிவு 11): ஒப்பந்தத்தில் ஈடுபடத் தேவையான தகுதியை உடைய நபர்களால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மட்டுமே ஒப்பந்தமாகின்றது. பின் வரும் நபர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதியுடையவர் என சட்டம் கூறுகின்றது. (அ) சட்டப்படி உரிமை வயது அடைந்தவர் (ஆ) மனச் சமநிலை உடையவர் (இ) சட்டத்தினால் தகுதியற்றவர் என அறிவிக்கப்படாத நபர்கள்.
(vii) தெளிவுடைமை (Certainly) (பிரிவு 29): ஒரு ஒப்பந்தம் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும் எனில் அதன் நிபந்தனைகள் தெளிவாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக A என்பவர் "நான் என்னுடைய சீருந்தை விற்க ஒப்புகொள்கிறேன்" என B யிடம் கூறுகிறார்.A என்பவருக்கு நான்கு சீருந்து உள்ளன. இங்கே A எந்த சீருந்தை விற்க போகிறார்? என குறிப்பிடப்படவில்லை. இந்த ஒப்பந்ததில் நிபந்தனைகள் தெளிவாக இல்லை.
(viii) நிறைவேற்றம் தன்மை (possibility of Performance) (பிரிவு 56): செய்து கொள்ளும் உடன்பாடு நிறைவேற்றப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். செயல்படுத்த முடியாத ஒன்றை செய்வதாக மேற்கொள்ளும் உடன்பாடு செல்லாத ஒன்றாகும். எடுத்துக்காட்டாக ஒரு புதிய கிரகத்தைக் கண்டறியவதாக A என்பவர் B க்கு வாக்களிக்கிறார். இந்த உடன்படிக்கை ஆரம்ப நிலையிலே செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்ற இயலாது.
(ix) செல்லாது என அறிவிக்கப்படவில்லை (Not declared Void): சட்டத்தால் செயல்[செயல்படுத்தப்படும் திறன் கொண்டதாக ஒப்பந்தம் இருத்தல் வேண்டும். சட்டத்தால் சில உடன்படிக்கைகள் சட்டவிரோதமானது அல்லது செல்லாதது என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(x) தேவையான சட்டச் சடங்குகள் (Necessary Legal Formalties): ஒரு ஒப்பந்தம் வாய்மொழி அல்லது எழுத்தில் இருக்கலாம். எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து மற்றும் சான்றிதழ் பெறவேண்டும். சட்டபூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளாவிட்டால், ஒப்பந்தத்தை சட்டத்தால் செயல்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு காலம் கடந்த கடனை வழங்குவதற்கான வாக்குறுதி அளித்த ஒருவர் அதை எழுத்தில் அளித்தல் வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards