11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
XI Public Model Question
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை
தரகர்
தன் பொறுப்பு முகவர்
பண்டகசாலை வைத்திருப்பவர்
கழிவு முகவர்
2.
அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
அலுவல் சார்ந்த மூலதனம்
தனியார் மூலதனம்
வங்கி மூலதனம்
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர்
ராபர்ட் ஓவென்
H ,C கால்வெர்ட்
டால்மாக்கி
லம்பேர்ட்
4.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
5.
6.
மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது
வெளிநாட்டு வியாபாரம்
உள்நாட்டு வியாபாரம்
மறு ஏற்றுமதி வியாபாரம்
வியாபாரம்
7.
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
நியூயார்க்
இலண்டன்
ஜெனிவா
பிரேசில்
8.
கணக்கீட்டு ஆண்டு என்பது
ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை
ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை
சூலை 1 முதல் சூன் 30 வரை
சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை
9.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
10.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
11.
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
12.
நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
நிதி மேலாண்மை
வங்கி
பண மேலாண்மை
இவற்றில் ஏதுமில்லை
13.
சிறந்த முறையை தேர்ந்தெடுக்கவும், மாற்று முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் உதவ அடையாளம் காட்டும் சிறந்த மாதிரி எது.
வழிகாட்டு மாதிரிகள்
அட்டவணையிட்ட செயல் பாட்டு மாதிரிகள்
சரக்கிருப்பு மாதிரிகள்
மாற்று ஏற்பாடுகள் உள்ளடக்கிய பகுப்பாய்வு மாதிரிகள்
14.
பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை
ஒரு வெளியீட்டின் குறியீடு
பணியாளர்களின் ஈடுபாடு
இணக்க வழிமுறைகளை நிறுவுதல்
இவற்றில் எதுவும் இல்லை.
15.
மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?
வாக்குறுதி அளிப்பவர்
வாக்குறுதி பெறுபவர்
முகவர்
சட்டரீதியான பிரதிநிதி
16.
பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல
கடன் நிதி அளிப்பு
இடர் பகிர்வு
மூலதன திரட்டுதல் உதவி
மட்டுப்படுத்துதல்
17.
போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.
நேரம்
இடம்
ஆள்சார்
அறிவு
18.
செல்லாத ஒப்பந்தம் குறிப்பது
சட்டத்துக்கு முரணான ஒப்பந்தத்தின் இயல்பு
சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியாத உடன்பாடு
சட்ட நடைமுறைகளை மீறுவதான ஒப்பந்தம்
பொதுக் கொள்கைக்கு எதிரான உடன்பாடு.
19.
பண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.
ஆள்சார்
காலத் தடை
இடர்ப்பாட்டு தடை
அறிவுத் தடை
20.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
"முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.
23.
தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?
24.
மின்னணு வங்கியியல் என்றால் என்ன?
25.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
26.
அந்நிய செலாவணி மாற்று பத்திரம் என்றால் என்ன?
27.
நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி
28.
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
29.
வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?
30.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
31.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
32.
இந்திய ஒப்பந்தச் சட்டம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை யாவை
33.
ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?
34.
கப்பல் வாடகை முறி(Charter Party).
35.
தவணை முறை விற்பனை என்றால் என்ன?
36.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.
37.
வியாபாரத்தின் பொருள் தருக
38.
மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.
39.
பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?
40.
சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் யாது?
41.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
42.
உலக வர்த்தக அமைப்பின் நன்மைகள் விவரி?
43.
மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
44.
45.
சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடூம் பணிகள் யாவை?
46.
மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக
47.
ஏற்றுமதி ஆணை நிலையத்தின் பணிகளை விளக்கி எழுதுக.
48.
உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
49.
பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.
50.
சுய உதவிக்குழுக்களின் நோக்கங்களை விவரி
51.
குறிப்பு வரைக
அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம்
ஆ) குத்தகை நிதி
52.
வணிகத்திற்கு உருதுணையானவற்றைச் சுருக்கமாக விவரி
53.
தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி
54.
உருவாக்கம் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?
1.
(b)
தன் பொறுப்பு முகவர்
2.
(d)
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
(a)
ராபர்ட் ஓவென்
4.
(c)
1980
5.
(b)
6.
(c)
மறு ஏற்றுமதி வியாபாரம்
7.
(c)
ஜெனிவா
8.
(a)
ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை
9.
(b)
குடியரசுத் தலைவர்
10.
(c)
25
11.
(c)
கூட்டாண்மைப் பதிவாளர்
12.
(a)
நிதி மேலாண்மை
13.
(b)
அட்டவணையிட்ட செயல் பாட்டு மாதிரிகள்
14.
(a)
ஒரு வெளியீட்டின் குறியீடு
15.
(c)
முகவர்
16.
(c)
மூலதன திரட்டுதல் உதவி
17.
(b)
இடம்
18.
(b)
சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியாத உடன்பாடு
19.
(b)
காலத் தடை
20.
(a)
போக்குவரத்து
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யவும், புதிய தொழில் தொடங்குபவர்களை சந்திக்கும் நிதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டுடனும், ரூ. 3ஆயிரம் கோடி கடன் உத்திரவாத நிதியுடனும் மத்திய அரசால் "குறுந்தொழில் பிரிவுகள் வளர்ச்சி மற்றும் மறுநிதி அளிப்பு முகமை" (முத்ரா வங்கி) தொடங்கப்பட்டது. குறுந்தொழில் முனைவோர் தங்களின் புதிய தொழிலைத் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தும் நிலையில் நிதி நாடுவோர், தொழிலை மேம்படுத்தவும், தொழிலை அடுத்த வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்வோர் தங்களின் தொழிலை விரிவுப்படுத்தி கொள்ளவும் முத்ரா வங்கி கடன்களை வழங்குகிறது.
23.
தங்கம், எண்ணெய், கலப்பை, துணி ஆகியவை வியாபாரம் செய்யப்பட்டதாக அழகர்மலை, புகளர், மாங்குளம் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்- பிராமி கல்வெட்டுகள் விளக்குகின்றன.
24.
தற்போது அனைத்து வங்கிகளும் வங்கி பரிவார்த்தைக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை இணையம் மூலம் வழங்குகின்றன.
(i) தேசிய மின்னணு நிதி [பரிமாற்றம் (NEFT)
(ii) உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்புகள் (RTGS)
(iii) மின்னணு தீர்வக சேவைகள் (Electronic Clearing System)
(iv) கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள்.
(v) இணைய வங்கியியல்
(vi) கைபேசி வங்கியியல்
(vii) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.
25.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
26.
(i) அந்நியச் செலாவணி மாற்று பத்திரம் என்பது உள்நாட்டு பணத்தைத் தவிர, பிற நாட்டு நாணய மதிப்பில் வெளியிடப்படும் சிறப்புமிக்க ஒரு வகை பத்திரம் ஆகும்.
(ii) வேறுவகையில் சொல்வதானால் நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியைப் பெறுவதற்காகவெளியிடுவதே அந்நியச் செலாவணி மாற்றுப்பத்திரம் ஆகும்.
27.
(i) பேரளவு மூலதனம்:
தனியார் வணிகம் மற்றும் கூட்டாண்மையை காட்டிலும் நிறுமத்திற்கு பேரளவு மூலதனத்தைத் திரட்ட இயலும். பேரளவு மூலதனம் என்பது பெரிய அளவு மூலதனத்தை திரட்டி அவற்றை பெரிய தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும்.
(ii) வரையறுக்கப்பட்ட பொறுப்பு:
பங்குதாரர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டதாகும். பங்குதாரரின் இடர் என்பது பங்குகளின் முகமதிப்பில் செலுத்தப்படாத தொகைக்கு மட்டுமே பொறுப்பாகும்.
(iii) பங்குகள் மாற்றம்:
இரண்டு தனிப்பட்ட நபர்கள் இடையே பங்குகள் மாற்றம் என்பது எளிது. ஆகவே முதலீடு என்பது எளிமையான ஒன்றாகும். ஒரு பங்குதாரர் பங்குகளை எளிதாக வாங்கவும், விற்று பணமாக்கவும் முடியும்.
28.
(i) பொருட்களின் தயாரிப்பு , வடிவமைப்பு,
(ii) தளவாட அமைவிடம், சந்தை மூலங்களை தெரிவுசெய்தல்,உற்பத்தி கட்டமைப்பு,
(iii) விநியோகஸ்தர் அல்லது வணிகர் வலையமைப்பு,வடிவமைப்பு,பண்டகசாலை அமைவிடம்,தளவாட வரைபடம் மற்றும் பெயர்ச்சி பங்கீட்டு வடிவமைப்பு,உற்பத்தி திட்டம்,
(iv) சரக்கிருப்பு மேலாண்மை,சரக்கிருப்பின் நிலைகள் போக்குவரத்து வகையைச் தேர்வு செய்தல் சரக்கை கப்பலில் ஈற்றுதலின் அளவு,
(v) வழித்தடத்தை முடிவு செய்தல் மேலும் போக்குவரத்து ஒப்பந்தவியல் தொகுப்பு மூலப் பொருளை கையாளுதல் ஆகும்.
29.
தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாது. அதன் விளைவாக அவரது வியாபாரக் கடன்களை செலுத்த தொழிலின் சொத்துக்கள் போதுமானதாக இல்லையென்றால் தன சொந்த சொத்துக்களிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்த வேண்டும். எனவே அவரின் பொறுப்பு முதலீட்டுத் தொகையுடன் நின்று விடாமல், தன் சொந்த சொத்திற்கு ஈடாகிறது. இதனையே வரையறாப் பொறுப்பு என்கிறோம்.
30.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
31.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
32.
இந்திய ஒப்பந்தச் சட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பொது ஒப்பந்தங்கள், சிறப்பு ஒப்பந்தங்கள்.
33.
ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் அனைவரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தமது கடமைகளைச் செய்ய தவறுதல் ஒப்பந்த மீறுகை எனப்படும்.
34.
கப்பல் வாடகை முறி என்பது கப்பல் உரிமையாளருக்கும் ஏற்றுமதியாளருக்கும் அல்லது அவரது முகவருக்கும் இடையே முழு கப்பலையோ அல்லது கப்பலின் ஒரு பகுதியையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ சரக்கை ஏற்றிச் செல்ல செய்து கொள்ளும் உடன்பாடு ஆகும். குறிப்பிட்ட கப்பல் பயணத்திற்கு உடன்பாடு செய்து கொண்டால் அது கப்பல் பயண வாடகை முறி (Vorahe Chater) எனபப்டும்.. குறிப்பிட்ட காலத்திற்கு உடன்பாடு செய்து கொண்டால் அது கால வாடகை முறி (Time Chater) எனப்படும்.
35.
இம்முறையில் பொருள்களை வாங்கிய உடன் பொருளுக்குரிய பணத்தை உடனடியாக செலுத்தாமல் பல தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் முதல் தவணை செலுத்திய உடனேயே வாங்கியவர் பொருளின் உரிமையாளர் ஆகிறார். இதனை நீட்டிய செலுத்துகை முறை என்று கூறலாம்.
36.
மாநில சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (தமிழ்நாடு) 2017-ன் கீழ் மாநில அரசால் சுமர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
37.
இலாபம் ஈட்டும் நோக்கில் பொருட்களையும் சேவைகளையும் சேவைகளையும் வாங்கி விற்பது மற்றும் பரிமாற்றம் செய்வது வியாபாரம் ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இறுதி நுகர்வோரை சென்றடைய வியாபாரம் உதவுகிறது. வியாபாரம் ஆள்சார் தடையை நீக்குகிறது.
38.
ஒரு நாட்டின் பண மற்றும் வங்கிக் கட்டமைப்பின் உச்சநிலையாகவும், தேசிய பொருளாதார நலனுக்காகவும் சிறந்த முறையில் செயல்படும் வங்கி அந்த நாட்டின் மைய வங்கி எனப்படும். என டிகாக் அவர்கள் இலக்கணம் வகுத்துள்ளார்.
39.
பன்னாட்டு வணிகம் என்பது நாடுகளின் புவியியல் எல்லைகளை கடந்து நடைபெறும் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் குறிக்கும். இது சரக்கு மற்றும் சேவைகளின் பரிமாற்றம் மட்டுமல்லாமல் மூலதனம், பணியாளர்கள், தொழில்நுட்பம், காப்புரிமை, வணிகக் குறி, அறிவுசார் உரிமை மற்றும் பதிப்புரிமைகளை உள்ளடக்கியது.
40.
சமுதாய பொதுநலன் மேம்பாடு கருதி(செயல்படத்தக்க) உரிய நபர், சமுதாய நம்பிக்கைக்குரிய அடிப்படை மேன்மை,சமுதாய ஒற்றுமை,உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் பங்களிப்பை ஏற்படுத்துவது ஆகும்.பீட்டர் எஃப் டிரக்கர்.
41.
(i) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது : பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(ii) பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது : மூலப் பொருட்கள்,எரிபொருள்,உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு உதவுகிறது.
42.
(i) சர்வதேச சமாதானத்தை ஊக்குவிப்பதோடு,பன்னாட்டு வர்த்தகம் நடத்துவதற்கு ஒரு உகந்த சூழலை உருவாக்குகிறது.இது உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் வர்த்தக ரீதியான பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது
(ii) இது தடையற்ற வர்த்தகத்தின் மூலம் வருமானத்தை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(iii) உலக வணிக அமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையே கட்டுப்பாடுகள் மற்றும் கட்டண தடைகளை நீக்கியுள்ளது.இது உறுப்பு நாடுகளுக்கிடையே சுதந்திரமான வர்த்தகம் நடைபெறுவதற்கு உதவுகிறது.உறுப்பு நாடுகளின் செலுத்தல் சமநிலையில் ஏற்படும் நிலையை சரி செய்ய இறக்குமதியில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
(iv) இது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவையான மூலதனத்தை வழங்குவதன் மூலம் வர்த்தக தொடர்புடைய விடயங்களில் அவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது
(v) உலக வணிக அமைப்பு மண்டல மற்றும் சர்வதேச மாநாட்டை ஒழுங்குபடுத்துகிறது.இவ்வாறு வளரும் நாடுகளில் உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்,விதிகள்,ஒழுங்குமுறைகள்,உலகளாவிய ரீதியில் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை உறுப்பு நாடுகள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துகிறது
(vi) உறுப்பினர் நாடுகளிடையே கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் உலக மக்கள் பல்வேறு விதமான பொருட்கள் வாங்கி பயன்படுத்த வகை செய்கிறது.
(vii) உலக வர்த்தக அமைப்பு வர்த்தக தடைகளை குறைத்துள்ளது இதன் மூலம் உலகம் முழுவதும் வர்த்தகம் பெருகி தேசிய வருமானம் மற்றும் மக்களின் வருமானம் ஆகியவை அதிகரிக்க உதவுகிறது
(viii) உறுப்பினர் நாடுகளில் ஒருவரோடு ஒருவர் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை உலக வணிக அமைப்பு வழங்குகிறது.உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் இல்லாத நிலையில் உலகமெங்கிலும் உள்ள பல நாடுகளோடு பல பலதரப்பட்ட உடன்படிக்கைகளச் செய்ய வேண்டியிருக்கும்.இது ஒரு கூரை கீழ் அனைத்து நாடுகளுக்கும் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது
(ix) உலக வர்த்தக அமைப்பு கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது.இது மானியங்கள் மற்றும் குவிப்பு பற்றி விதிகளை உருவாக்கியுள்ளது.
43.
மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை பின்வருமாறு:
(i) அமைவிடம்: போதுமான அளவிற்கு வாடிக்கையாளர்கள் அணுகுவதற்கு ஏற்றவாறு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இக்கடைகள் அமைக்கப்படுகின்றன.
(ii) பொருட்களின் தன்மை: மடங்குக் கடைகள் ஒரே வகையான பொருட்களையும் மற்றும் சிறப்பீடுபாடு கொண்ட பொருள்களையும் அதாவது தரமான மற்றும் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய ஒரு சில வகையான பொருட்களை மட்டும் விற்பனை செய்கின்றன.
(iii) மைய மேலாண்மை: இக்கடைகளில் விற்கப்படும் பொருள்கள் யாவும் ஓரிடத்தில் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலிருந்து மையக் கொள்முதல் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.
(v) விற்பனையாளரின் பணி: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுத்து தெரிவு செய்து வாங்குவதற்கு முழு ஒத்துழைப்பையும் விற்பனையாளர்கள் செய்கின்றன.
44.
45.
சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடும் சேவைகள் பின்வருமாறு:
(i) நிதிவசதி அளித்தல்: மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிகளுக்கு கடன் விற்பனை செய்வதன் மூலம் நிதி வசதி நல்குகிறார். சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரியிடம் கடன் கொள்முதல் செய்து அவற்றை நுகர்வோருக்கு விற்று அவரிடமிருந்து பணத்தைப் பெற்று மொத்த வியாபாரிகளுக்கு செலுத்தும் வண்ணம் நிதி வசதி அளிக்கிறார்.
(ii) தேவையை பூர்த்தி செய்தல்: சில்லறை வியாபாரிகள் சிறு முதலுடனும் மற்றும் சிறிய அளவு இடவசதிகளுடனும் வியாபாரத்தை நடத்துவதால், அவர்களால் பெருமளவில் பல்வேறு வகையான சரக்குகளை வாங்கி இருப்பு வைக்க இயலாது. மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிக்கு அவரின் தேவைக்கு ஏற்ப சிறிய அளவில் பொருட்களை விற்று அவரின் இந்த இடர்பாட்டை போக்குகிறார்.
(iii) புதிய பொருட்களை அறிமுகம் செய்தல்: மொத்த வியாபாரி புதிய பொருட்கள், மற்றும் அவற்றின் உபயோகம் குறித்த தகவல்களை சில்லறை வியாபாரியின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். எனவே பொருளைப்பற்றிய சிறப்பறிவு மற்றும் ஆலோசனைகளை சில்லறை வியாபாரி பெறுகிறார்.
(iv) விலை நிலைப்பாடு: மொத்த வியாபாரிகள் சந்தையின் தேவையை அறிந்து அதற்கேற்ப பொருள்களின் அளிப்பினைக் கட்டுப்படுத்துவதால், விலை வேறுபாடுகள் மூலம் ஏற்படும் நட்டத்திலிருந்து சில்லறை வியாபாரிகளைப் பாதுகாக்கிறார்.
(v) போக்குவரத்து சிக்கனம்: மொத்த வியாபாரி சில்லறை வியாபாரியின் இடத்திற்கே சென்று பொருட்களை வழங்குவதன் மூலம், சில்லறை வியாபாரியின் நேரத்தையும் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்துகிறார்.
(vi0 முறையான விநியோகம்: மொத்த வியாபாரி பெருமளவில் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு முறையாக, சீராக சில்லறை வியாபாரியின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்குகிறார்.
46.
மூலதனக் கணக்கில் மூன்று இனங்கள் உள்ளன. தனியார் மூலதனம் (Private Capital), வங்கி மூலதனம்(Banking Capital),அலுவல் சார்ந்த மூலதனம் (Offical Capital)
தனியார் மூலதனம் : தனியார் மூலதனம் அயல்நாட்டு முதலீடுகள், நீண்ட காலக் கடன்கள் மற்றும் அயல்நாட்டு நாணய வாய்ப்பு ஆகியவற்றைக் உள்ளடக்கியது
வங்கி மூலதனம் ; அந்தியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்ட வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அளவு, வங்கி மூலதனத்தில் அடங்குகிறது
அலுவல்சார்ந்த மூலதனம்: அலுவல்சார்ந்த மூலதனத்தில் அயல்நாட்டு நாணயம், அரசிடம் உள்ள சிறப்பு எடுப்பு உரிமைகள் போன்ற வகைகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் சொத்துகள் போன்றவை அடங்குகின்றது
47.
பணிகள்:
(i) உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கான சந்தையை கண்டறிதல்.
(ii) இறக்குமதியாளர் அல்லது அவரது முகவரை கண்டறிந்து ஏற்றுமதி செய்வதற்கான பதிலை பெறுதல்.
(iii) சரக்கின் வடிவத்தை சந்தை தேவை, தரம், சரக்கை அளிப்பவரின் திறனுக்கு ஏற்றவாறு நிறுவுதல்.
(iv) சரக்கை அனுப்ப போக்குவரத்தை தெரிவு செய்வதற்கு முன் அதன் விலை சேவையின் தரம், பாதுகாப்பை கருத்தில் கொள்ளுதல்.
(v) சரக்கை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப தயார் செய்தல்.
(vi) சரக்கை வாங்குபவரின் கடன் செலுத்துத்திறனை அறிதல்
(vii) சரக்கை காப்பீடு செய்தல்
(viii) வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் சரக்கு மற்றும் சேவைக்கான தொகை செலுத்துதல்.
(ix) பன்னாட்டு வணிகம் தொடர்புடைய ஆவணங்களை தயாரித்தல்.
(x) கோருரிமைகளை தீர்வு செய்தல்.
48.
| அடிப்படை | உள்நாட்டு வணிகம் | பன்னாட்டு வணிகம் |
| 1. பொருள் | உள்நாட்டு வணிகம் ஒரு நாட்டின் எல்லைக்குள்ளே நடைபெறும் வியாபார நடவடிக்கையாகும். |
பன்னாட்டு வணிகம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடைபெறும் வியாபார நடவடிக்கை ஆகும். |
| 2. வியாபாரத்தில் பங்கு பெறுவோர் |
ஒரு நாட்டில் உள்ள மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளில்பங்கேற்கின்றனர். |
ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி உள்ள மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். |
| 3. உற்பத்திக் காரணிகள் இடம் பெயர்தல் |
மூலப் பொருள், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகள் தடைஇன்றி நாட்டின் எல்லைக்குள் இடம் பெயர முடியும். |
மூலப் பொருள், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகள் ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி இடம் பெயர முடியாது. |
| 4. நுகர்வோரின் தன்மை | உள்நாட்டு வணிகத்தில் கலாச்சாரம், நடத்தை சுவை விருப்பம், சட்டமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும். |
பன்னாட்டு வணிகத்தில் கலாச்சாரம், நடத்தை சுவை விருப்பம், சட்டமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை வேறுபட்டதாக இருக்கும். |
| 5. வியாபார முறை | உள்நாட்டு வணிகத்தை ஒரே நாட்டினுடைய விதிகள், சட்டங்கள், கொள்கைகள், வரிவிதிப்பு முறை ஆகியவை நெறிப்படுத்துகின்றன. |
பன்னாட்டு வணிகத்தை பல நாடுகளின் விதிகள், சட்டங்கள் வரிவிதிப்புகள் மற்றும் அளவு ஆகியவை நெறிப்படுத்துகின்றன. |
| 6. பயன்படுத்தும் நாணயம் | உள் நாட்டு வணிகத்தில் உள்ளூர் நாணய மதிப்பில் வியாபார நடவடிக்கைகள் தீர்க்கப்படுகின்றன. | பன்னாட்டு வணிகத்தில் அயல்நாட்டு நாணய மதிப்பில் வியாபார நடவடிக்கைகள் தீர்க்கப் படுகின்றன. |
| 7. போக்குவரத்து முறை | உள்நாட்டு வணிகத்தில் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. |
பன்னாட்டு வணிகத்தில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. |
| 8. இடர் காப்பின்மை | இடரின் அளவு குறைவு. | இடரின் அளவு அதிகம். |
| 9. சந்தையின் அளவு | நாட்டின் எல்லைக்கு உட்பட்டது. | நாட்டின் எல்லையைத் தாண்டி பரந்த அளவு செல்கிறது. |
| 10. சுங்கத் தீர்வை செலுத்துதல் | சுங்கத் தீர்வையும் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய நடைமுறைகளும் மிகவும் குறைவு. |
சுங்கத் தீர்வையும் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய நடைமுறைகளும் அதிகமானவை மற்றும் சிக்கலானவை. |
49.
(i) மதிப்பீட்டிற்குரியவர்: பிரிவு 2(7) "சட்டத்தின் கீழ் யாரால் வருமான வரி அல்லது ஏதேனும் பிற பணத்தொகை செலுத்தப்படத்தக்கதாக உள்ளதோ, அந்நபர் மதிப்பீட்டிற்குரியவராவார்" மேலும் தன்னுடைய வருமானம் அல்லது நட்டம் அல்லது தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகை ஆகியவற்றிற்காக வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு உட்பட்ட ஒவ்வொரு நபரும் மதிப்பீட்டிற்குரியவர் என்ற சொல்லில் அடங்குவர். வருமான வரிச் சட்டம் மூன்று வகையான மதிப்பீட்டிற்குரியவர்களை கண்டுணர்ந்துள்ளது.
(ii) சாதாரண மதிப்பீட்டிற்குரியவர்கள்: இச்சட்டத்தின் கீழ் வட்டி, வரி அல்லது அபராதம் போன்ற ஏதேனும் தொகையை செலுத்த வேண்டிய நபர்.
(iii) பிரிதி நிதித்துவ மதிப்பீட்டிற்குரியவர்: மற்றவரின் வருமானத்தின் மதிப்பீட்டிற்கு பொறுப்பேற்கும் ஒரு நபர், பிரிதிநிதித்துவப் மதிப்பீட்டிற்குரியவர் எனப்படுகிறார். (எ.கா.) மைனர் ஒருவரின் பாதுகாவலர்.
(iv) தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவர் : வருமான வரிச் சட்டத்தின் கீழ், தமது சட்டக் கடமை எதையேனும் நிறைவேற்றத் தவறியவர் தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவராவார் (எ.கா) தமது பணியாளர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை அளிக்கும் எஜமானர் ஒருவர், அச்சம்பளத்தில் இருந்து உரிய வரியை பிடித்தம் செய்தல் வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை எனில், அவர் தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவர் என அழைக்கப்படுவார்.
50.
(i) பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பது
(ii) முறைசாரா கடன் கொடுப்போரின் பிடியிலிருந்து மக்களை மீட்டல்
(iii) பெண்களின் திறமையை உருவாக்கி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட செய்வது
(iv) பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மனங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாகுதல்
(v) பெண்களிடம் தொழில் முனைவோருக்கான திறமைகளை வளர்த்தல் மற்றும் ஊக்குவித்தல்
(vi) கடன் வட்டம் அல்லது சுழல் நிதி மன் றும் சுழற்சி கடன் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்
(vii) உறுப்பணிர்களின் குடும்ப பொருளதாரம் அதிகார மேலாண்மைனா திறமையை வளர்த்தல் மற்றும் கடன் தொடர்புகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்
(viii) உறுப்பினர்கள் தங்களின் பொருளாதார சிக்கலுக்கு அவர்களாவே தீர்வு காண்பதற்கான விழிப்புணர்வு பயிற்சியினை அளித்தல்
(ix) குழு உறுப்பினர்களின் பொதுவான விருப்பங்களை அறிந்து குழு நடவடிக்கைகள் முடிவு செய்தல் திறமையான மற்றும் சிக்கனமான முறையில் நடவடிக்கைளை முன்னேடுத்துச் செல்லுதல்
(x)உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சமூகப் பொருளாதாரத் தடைகளையும் வெற்றியுடன் எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துதல்
(xi) வாழ்க்கை சுழற்சியில் எல்லா நிலைகளிலும் பெண்களுக்கான மனித உரிமைகளை உறுதி செய்தல்
51.
அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம் (Retained Earnings):
(i) எந்த ஒரு நிருமமும் தான் ஈட்டிய ஒட்டு மொத்த லாபத்தையும் பங்குதாரர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில்லை. மாறாக ஈட்டிய வருவாயின் ஒரு பகுதியைப் பங்குநர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள லாபத்தைச் சேமித்து நிறும வளர்ச்சியில் மறுமுதலீடு செய்கின்றன.
(ii) எதற்கு இருத்திவைக்கப்பட்ட ஆதாயம் (அல்லது) இலாபத்தை மறு உழவு செய்தல்(Ploughing Back ஒப்பி Profits) என்று பெயர். அதாவது தனிமனிதன் தான் ஈட்டிய வருவாய் அனைத்தையும் செலவு செய்யாமல் எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளைச் சமாளிக்க, அதில் ஒரு பகுதியைச் சேமித்து வைப்பது போன்று நிறுமங்களும் அவற்றின் வளர்ச்சி, தொழில் விரிவாக்கம், தொழில் பன்முனையாக்கம், புதிய போறும் அறிமுகம் போன்ற பல நடவடிக்கைகளுக்காக இருத்திவைக்கப்பட்ட ஆதாயம் நிதியைப் பயன்படுத்தி வருகின்றது.
(iii) மேலும் நட்டம் வரும் காலங்களில் பங்காதாயம் வழங்கவும் இந்த நிதி பெரிதும் உதவுகிறது. இவ்வகை நிதியை பயன்படுத்துவதில் எந்தவிதச்சட்டச் சடங்குகளும் இல்லை. எனவே இவ்வகை நிதி மிகவும் எளிதாக திரட்டக் கூடியதாகவும் மற்றும் சிக்கனமானதாகவும் கருதப்படுகிறது.
ஆ) குத்தகை நிதி (Lease Finance) :
(i) குத்தகை நிதி என்பது தேவைப்படும் சொத்துகளைக் குத்தகைக்கு எடுத்து உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் செயலைக் குறிக்கும் தொடக்க நிலையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரையில் தளவாடங்கள், கருவிகள் மற்றும் இதர சொத்துக்களை ஒட்டு மொத்தமாக பணம் செலுத்தி வாங்குவது என்பது கடினமான ஒன்றாகும்.
(ii) இப்படிப்பட்ட சூழ்நிலையில் குத்தகை நிதி முறை இந்நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வரமாக விளங்குகிறது. இம்முறையில் தனி நபர் அல்லது நிறுமம் சொத்துகளைத் தன்னுடைய சொந்த முதலீட்டில் வாங்கி அச்சொத்துகளைத் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு வாடகை, அல்லது குத்தகை அடிப்படையில் வழங்கி, அவற்றைப் பயன்படுத்தி அனுமதிக்கிறது.
(iii) சொத்துகளின் மீது உரிமை கொண்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுபவர் என்று பெயர். சொத்துகளைக் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு "குத்தகை எடுத்தவர்" என்று பெயர்.
(iv) இங்கு ஒப்பந்தமானது "குத்தகை ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் குத்தகை தொடர்பான அனைத்துச் சொற்பகர்வுகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.
(v) எடுத்துக்காட்டாக இந்த ஒப்பந்தத்தில் குத்தகை காலம், குத்தகை தொகை, அதை செலுத்தும் முறை, பராமரிப்பு செலவுக்கு ஒதுக்கீடு செய்தல் போன்ற நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
(vi) குத்தகை காலம் முடிந்த பின்பு குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்திய சொத்தை குத்தகை விட்டவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அல்லது மாறாக குத்தகைக்கு விட்டவர் குத்தகைக்கு எடுத்த பொருளின் மீதான முழு பதிப்பை பெற்றுக்கொண்டு குத்தகைக்கு எடுத்தவருக்கு உரிமையை மாற்றி கொடுக்கலாம்.
52.
(i) போக்குவரத்து : உற்பத்தி செய்த பொருட்களை உற்பத்தி செய்த பகுதிலேயே அனைத்தையும் விற்பது அரிது. அவற்றை நாட்டின் (அல்லது) உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருகளுக்குச் சென்று சேர்க்க வேண்டும்.
(ii) வங்கியில்: வங்கிகளின் உதவியின்றி எந்த தொழில் அமைப்பும் இயங்க முடியாத அளவிற்கு வங்கிச்சேவை மகத்துவம் பெற்று விளங்குகிறது. வங்கிகள் தொழில் அமைப்புகளிடம் உள்ள பணத்தை வைப்புகளாகப் பெறுவதுடன் தொழில் அமைப்புக்குத் தேவையான நிதியை பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் கிடைக்க வகை செய்கிறது. வங்கி நிதியின் மூலம் தொழில் அமைப்புகள் நில சொத்து வாங்குதல் சரக்கு கொள்முதல், இயந்திரம் வாங்குதல் இவ்வாறு நடைமுறை செலவுகளைச் செய்ய ஒரு தொழில் அமைப்பிற்கு குருதி ஓட்டமாக செயல்படுகிறது.
(iii) காப்பீடு: வியாபாரம் நடத்துவது என்பது முழுக்க முழுக்க இடர்பாடு செறிந்த செயலாகும். வியாபாரம் நிறுமங்கள் கேட்டார் என்ற கடலில் ஏப்போதும் நீந்திச் செல்லும் கப்பல் ஆகும். எல்லா தொழில் நிறுமங்களும், தீ, களவு, சூறாவளி, நிலா நடுக்கம், கடல் நடுக்கம், வெடிவிபத்து, இயந்திரக் கோளாறு போன்ற பலதரப்பட்ட இடர்பாட்டால் காப்பீடு செய்ய வேண்டிய அவசியமாகிறது.
(iv) பண்டகக் காப்பு செய்தல்: சாதாரணமாக பொருட்கள் யாவும் உற்பத்தி செய்யப்பட்ட உடனே விற்கப்படுவதில்லை மற்றும் நுகரப்படுவதில்லை. பொருட்கள் தேவைப்படும் நேரத்தில் அவை கிடைப்பதற்கு ஏற்றவாரு இருப்பு வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பண்ட காப்பகங்கள் தொடரில் நிறுவனங்களின் பொருட்களை சேமித்து வைக்க பேருதவி புரிகின்றது. பொருட்கள் கிடைக்கச் செய்வதால் விலை சீராக இருக்க வகை செய்யப்படுகிறது.
53.
தொழிலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) பொருளாதார நோக்கங்கள் : தொழில்கள் பொருளாதார நோக்கம் என்பது லாபம் ஈட்டுவதே ஆகும். மேலும் இலாபம் ஈட்டுவதற்கு நுகர்வோரை உருவாக்குதல், புதிய நுட்பங்களை கண்டுபிடித்தல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களே மிக முக்கியமானதாகும்.
(ii) சமூக நோக்கங்கள் : சமூக நலனைப் பேணுவது என்பது சில தொழிலமைப்புகளை, அரிய வகைகளை சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த தொழில் நடவடிக்கைகளையும் சமுதாயத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது.
(iii) நிறுவனம் நோக்கங்கள்: தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம் தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் மயமாக்கம், நுகர்வோருக்கு தரமான பொருள்களை வழங்குதல் நுகர்வோருக்குத் திருப்திப்படுத்துவதில் ஆகியன மூலமாக அமையலாம்.
(iv) மனித நோக்கங்கள்: தொழிலமைப்பு தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். மேலும் இயலாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், நலம் காக்க உதவ வேண்டும். பணியாளர்கள், பொருளாதார, சமூக உளவியல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவையாக அமைய வேண்டும்.
(v) தேசிய நோக்கங்கள்: தொழில் நிறுவனம், ஓரு நாட்டினுடைய மிக முக்கிய அங்கமாக கருதப்படுவதால் அவை நாட்டின் நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகிறது. கடமை வகையில் தன்னுடைய குறிக்கோளை அமைத்துத் தெளிவு வேண்டும். ஒரு நாட்டின் நோக்கம் என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தல், அரசிற்கு வருவாய் ஈட்டுதல், சரக்கு மற்றும் சேவை உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும். எனவே ஒரு தொழில் அமைப்பு தன்னுடைய குறிக்கோளை நிர்ணயம் செய்யும் போது மேற்கூறிய நோக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
54.
வெளிப்படை ஒப்பந்தம் (express contact); ஒபபந்தத்தில் ஈடுபடுவர்கள் அதன் நிபந்தனைகளையும் கூறுகளையும் ஏற்றுக்கொள்வதாக வெளிப்படையாக உடன்பட்டால் அது வெளிப்படையான ஒப்பந்தம் எனப்படுகிறது.ஒப்பந்த த்தை எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழியவோ வெளிப்படுத்தலாம்.வெளிப்படையான வாக்குறுதி வெளிப்படையான ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.எடுத்துக்காட்டக P என்பவர் என்னுடைய மிதிவண்டியை ரூ , 1000 க்கு வாங்கி கொள்கிறாயா? என Q என்பவரிடம் கேட்க Q என்பவர் ஆம் என கூறுகிறார்.
உட்கிடை ஒப்பந்தம் 2(j) (volid contract) : எழுத்து முலமாக இலலாமல் ஈடுபவர்களின் நடத்தை மூலமே ஏற்படும் ஒப்பந்தம் உட்கிடை ஒப்பந்தம் ஆகும்.எழுத்து மூலம் முனைவோ அல்லது ஏற்போ இன்றி செய்யப்படும் ஒப்பந்தம் உட்கிடையான ஒப்பந்தம்மாகும்.எடுத்துக்காட்டு A என்பவர் ஒரு பேருந்து பயணத்திற்கு உண்டான பணத்தை அளிக்க உள்ளார் இது உட்கிடை ஒப்பந்தம் ஆகும்.
போல்வு ஒப்பந்தம்(Quasi contract): இது சட்டத்தால் உருவாக்கப்படும் ஒப்பந்தமாகும் .பொதுவாக இது ஒப்பந்தமே அல்ல.ஒரு நபர் ஒருவரின் இழப்பால் மற்றொவர் தன்னை வளப்படுத்தி கொள்ளக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையிலானது வேறு வகையில் கூறினால் இரு தரப்பினர் வேண்டுகோளுக்கு இனங்க மற்றொருதரப்பினர் ஏற்படும் தன்னிசையான ஒப்பந்தமாகும்.
மறைமுக ஒப்பந்தம்(tacit contact); ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் நடத்தையும் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் ஏற்படும் ஒப்பந்த மறைமுக ஒப்பந்தமாகும். எடுத்துக்காட்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் பணத்தை பெறுதல்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards