11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 08/01/2019
HSC Eleventh Standard Completed Study Materials
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.
2.
உபுண்டுவின் கூறுகளை விவரி அல்லது உபுண்டுவின் லான்ச்சரில் (Launcher) உள்ள பணிக்குறிகளை விவரி.
3.
உபுண்டுவின் (Ubuntu) சிறப்பு அம்சங்களைப் பட்டியலிடு.
4.
விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.
5.
விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.
6.
கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.
7.
ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.
8.
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
9.
மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.
10.
இணையப் பயன்பாட்டின் வழிக்காட்டிகள் யாவை?
11.
மின்னஞ்சலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி
12.
இணையத்திலுள்ள சேவைகள் விவரி?
13.
நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்
14.
கம்பித் தொழில் நுட்பத்தை வரைய தரவுப்பரிமாற்றத்தில் உள்ள பிணைக்கப்பட்ட ஊடகத்தின் பொதுவான வகைகளை விவரிக்கவும்.
15.
இணைப்பு அமைப்பை வரையறு,திட்ட வரைபடத்தப் பயன்படுத்தி வேறுபட்ட இணைப்பு அமைப்புகளை விவரிக்கவும்
16.
நிகழத்துதலில் Master Page-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு விவரி?
17.
பல்லூடக கோப்புகளை நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விளக்குக
18.
நிகழத்துதலில் உள்ள வரைகலை பொருள்கள் பற்றி (Graphics Objects) விரிவாக விவரிக்கவும்
19.
சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?
20.
விற்பனையாளர் தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?
21.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்
22.
ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக
23.
ஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக
24.
அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக
25.
கீழ்க்கண்ட புலங்களைக் கொண்ட மாணவர் தரவுத்தளத்தை அட்டவணைத் தாளில் உருவாக்குக.வரிசை எண்,பெயர்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல்,மொத்தம்,சராசரி
26.
5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக
27.
காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக
28.
விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.
29.
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக
30.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
31.
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக
32.
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
33.
பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: (-210) – (-610)
34.
இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10
35.
NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.
36.
அடிப்படை வாயில்களை அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.
37.
கழிக்க: 11010112 – 1110102
38.
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க -135
39.
மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.
40.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
41.
ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.
42.
முகவரி புத்தகத்தில் (Address Book) உள்ள அம்சங்களை விவரி
43.
அட்டவணையில் உள்ள தரவுகளின் கூட்டுத்தொகையை வாய்ப்பாட்டு மூலம் எவ்வாறு செய்வது என்பதை பற்றி வழிகளை எழுதுக.
44.
படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?
45.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
46.
உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.
47.
ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக
48.
பக்க இசைவின் வகைகளைப் பற்றி எழுதுக.
49.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
50.
1.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் தலைப்புபட்டை , பட்டி பட்டை, செந்தரக் கருவிப்பட்டை, வடிவூட்டல் கருவிப்பட்டை, ரூலர், பணியிடம் மற்றும் நிலைமைப்பட்டை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
1. தலைப்புபட்டை (Title bar):
(i) தலைப்பு பட்டை சன்னல் திரையின் மேல் பகுதியில் தோன்றும். இதில் ஆவணத்தின் தலைப்பு மற்றும் பயன்பாட்டின் பெயர் தோன்றும் ஆவணத்திற்கு பெயரிடப்படவில்லையெனில் Untitled 1 என்ற பெயர் தானமைவாக அமையும்.
2. பட்டி பட்டை (Menu bar):
(i) தலைப்பு பட்டையின் கீழே உள்ள பட்டிப்பட்டையில் பல்வேறு விருப்பங்களுடன் கூடிய பட்டிகள் உள்ளன. எ.கா. File, Edit.
3. கருவிப்பட்டை(Toolbar):
பட்டிப்பட்டையின் கீழ் இரண்டு கருவிப்பட்டைகள் உள்ளன,அவை:
(i) செந்தர கருவிப்பட்டை
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை
4. ரூலர் (Ruler):
பக்க ஓரங்களைக் காட்டும் அடிக்கோளாக ரூலர் வடிவூட்டல் கருவிப்பட்டையின் கீழ் உள்ளது. இரண்டு வகையான ரூலர்கள் உள்ளன.
(i) கிடைமட்ட ரூலர்
(ii) செங்குத்து ரூலர்
5. தட்டச்சு செய்யும் இடம் (Workspace):
(i) இது கோப்பின் உள்ளடக்கத்தைத் தட்டச்சு செய்யப் பயன்படும் காலி இடமாகும். இப்பகுதியில் விட்டு விட்டு தோன்றும் நெடும்பட்டை, செருகும் இடம் என அழைக்கப்படுகிறது.
6. நிலைப்பட்டை (Status bar) :
(i) சன்னல் திரையின் கீழ் உள்ள நிலைப் பட்டையில் ஆவணத்தின் தற்போதைய நிலை தெரியும்.
(ii) அந்த நிலைப்பட்டையில் பக்க எண்ணிக்கை, தற்போதைய பக்க எண், இயல்பு மொழி போன்றவை தோன்றும்.
2.
1. கணிப்பொறியில் தேடல் பணிக்குறி (Search your Computer Icon):
இதில் கோப்பு அல்லது கோப்புறையின் பெயரைக் கொடுத்துத் தேடலாம்.
2. கோப்புகள்:
இங்கிருந்து நேரடியாக முகப்புத்திரை,ஆவணங்கள் போன்றவற்றிற்கு செல்லலாம்.
3. ஃபயர்பாக்ஸ் இணைய உலாவி:
இந்த பணிக்குறியை கிளிக் செய்து நேரடியாக இணையத்தில் உலவலாம்.
4. லிபரே ஆஃபிஸ் ரைட்டர் (Libre Office Writer):
இந்த பணிக்குறியைப் பயன்படுத்தி நேரடியாக ஒரு உரை ஆவணத்தை உருவாக்கலாம்.
5. லிபரே ஆபிஸ் கால்க் (Libre Office Calc):
லிபரே ஆபிஸ் கால்க் பயன்பாட்டை இந்த பணிக்குறியின் மூலம் திறக்கலாம்.
6. லிபரே ஆபிஸ் இம்ப்ரஸ்(Libre Office Impress):
இந்த பணிக்குறியை கிளிக் செய்து லிபரே ஆபிஸ் இம்ப்ரஸ்-யை தொடங்கி உபுண்டுவில் ஒரு நிகழ்த்துதலை உருவாக்கலாம்.
7. உபுண்டு மென்பொருள் பணிக்குறி :
இந்த பணிக்குறியை பயன்படுத்தி மேலும் பல பயன்பாடுகளை இணைக்க முடியும். இந்த செயலை திரையின் மேல் வலது ஓரத்தில் உள்ள Update விருப்பத்தை கிளிக் செய்து பெறலாம்.
8. ஆன்லைன் ஷாப்பிங் பணிக்குறி (Online shopping Icon):
இந்த பணிக்குறியை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்க மற்றும் விற்கும் வசதியைப் பெறலாம்.
9. கணிப்பொறி அமைப்புகள் (System Settings)பணிக்குறி:
இந்த பணிக்குறி விண்டோஸ் இயக்க அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு பலகம் போன்றதாகும். உபுண்டுவில் இதைப்பயன்படுத்தி பயனர் கடவு சொல்லைக் கொடுக்க வேண்டும்.விண்டோஸ் அமைப்பில் மாற்றுவது போல இதில் எளிதாக மாற்ற முடியாது.
10. மறுசுழற்சி தொட்டி:
இதில் பயனர் நீக்கிய அனைத்து கோப்புகள் மற்றும் கோப்புறைகள் நகர்த்தப்படும்.
3.
1. உபுண்டு-வின் திரை முகப்பு பதிப்பு, Windowsன் திரைமுகப்பைப் போல ஃபயர்பாக்ஸ் (Firefox),குரோம் (chrome) மற்றும் VLC போன்ற பயன்பாடுகளை ஆதரிக்கும்.
2. இந்த இயக்க அமைப்பு, அலுவலகத்தில் பயன்படுத்தப் படும் நிரல் அமைப்பான லிப்ரே ஆபிஸ் (Libre Office)யை பயன்படுத்த ஆதரிக்கும்.
3. உபுண்டு-ல் உள்ளிணைந்த மின்னஞ்சல் மென் பொருளாக தண்டர்பேர்டு (Thunderbird) உள்ளது. இதில், மின்அஞ்சல் பயன்பாட்டிற்கான எக்ஸேஞ்ச் (Exchange),ஜிமெயில் (Gmail).ஹாட்மெயில் (Hotmail) போன்றவற்றை இயக்க வசதி உள்ளது.
4. ஒளிக்காட்சியைப் பார்க்க, பதிப்பிக்க, மேலாண்மை மற்றும் பகிரப் பயனருக்கும் விலையில்லா பயன்பாடுகள் இதில் உள்ளது
5. உபுண்டுவின் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு, சாமர்த்தியமான தேடுதல் (Smart Search)வசதி உள்ளது.
6. உபுண்டு ஒரு விலையில்லா இயக்க அமைப்பு. மேலும் பெரிய திறந்த மூல சமூகத்தின் ஆதரவு பெற்றது. இதுவே இதன் மிகச்சிறந்த பண்பாகும்.
4.
1. நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மூலம்:
(i) நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்யவும்.
(ii) Edit→Copy அல்லது Ctrl+C அல்லது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Copy என்ற கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும்.
(iii) புதிய இடத்தில் கோப்புறையை ஒட்டுவதற்கு Edit→Paste அல்லது Ctrl+V யைக் கிளிக் செய்ய வேண்டும். அல்லது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Paste என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
2. இழுத்து விடுதல்மூலம்:
(i) வலது சாளரப் பகுதியில் நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
(ii) தேர்வு செய்த கோப்பு மற்றும் கோப்புறையை, இடது சாளரப் பகுதியில் கோப்புறைப்பட்டியில் இழுத்து விட வேண்டும்.
5.
1. தலைப்புப்பட்டை: திறந்துள்ள ஆவணத்தின் பெயரும், பயன்பாட்டின் பெயரும்தலைப்புப் பட்டையில் தோன்றும்.
2. பட்டிப்பட்டை: தலைப்புப் பட்டையின் கீழ் புறம் பட்டிப்பட்டை காணப்படும். பட்டிப்பட்டையை அணுக Alt பொத்தான் அல்லது F10 பொத்தானை அழுத்தினால் மெனுபட்டையில் உள்ள முதல் மெனு கவனத்திற்கு கொண்டு வரப்படும்.
3. பணித்தளம்: ஒரு ஆவணத்தில் உரையை தட்டச்சு செய்யும் ஆவண சன்னல் திரையின் பகுதி பணித்தளம் ஆகும்.
4. உருளல் பட்டை: உருளல் பட்டைகள் பணித்தளத்தை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் உருளச் செய்யப் பயன்படுகிறது.

5. மூலை மற்றும் எல்லை: விண்டோஸில் அளவை மாற்றி அமைக்க மூலை மற்றும் எல்லை உதவி செய்கிறது.
6.
1. கோப்பு மேலாண்மை என்பது தரவுகைள சேமிக்கும் தொழில் நுட்பங்களைக் கையாளும் ஒரு முக்கிய செயல்பாடாகும்.
2. இயக்க அமைப்பு ஒரு கணினியில் கோப்புகள், கோப்புறைகள் மற்றும் அடைவு அமைப்புகள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
3. ஒரு கணிப்பொறியில் எந்த வகைத் தரவுகளும் கோப்பு ஒதுக்கீடு அட்டவணை (FAT - File Allocation Table) மூலம் கோப்பு மற்றும் அடைவுகள்/ கோப்புறைகள் வடிவத்தில் சேமிக்கப்படும்.
4. கொப்புப்பெயர், வகை (உரை அல்லது பைனரி), அளவு, ஆரம்ப முகவரி மற்றும் அணுகல் பயன்முறை போன்றக் கோப்பின் பொதுத் தகவல்கள் FATல் கொடுக்கப்படும்.
5. இயங்குதளத்தின் உருவாக்க, திருத்த, நகலெடுக்க கோப்புகளுக்கு நினைவகத்தை ஒதுக்க உதவுகிறது. மேலும் கோப்பு ஒதுக்கீடு அட்டவணையை மேம்படுத்தப்படுகிறது.
6. இயக்க அமைப்பு கோப்புகளைக் பிடிக்க அல்லது திருத்துவத்துக்கான சரியான அணுகல் உரிமைகளுடன் திறக்கப்படும் கோப்புகளை கவனித்துக் கொள்கிறது.
7. அடுத்த தலைமுறை கோப்பு முறைமை NTFS மற்றும் ext 12)(லினக்ஸ் ) போன்ற சில கோப்பு மேலாண்மை நுட்பங்களும் உள்ளன.
7.
1. பயனர் இடைமுகமானது நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் இருக்க பயனர் விரும்புவர்,
2. இடைமுகம் பயனரின் தேவைகளை திருப்தி செய்ய வேண்டும்.
3. தட்டச்சு செய்யும் நேரத்தை குறைக்க, வரைகலை கூறுகளான பட்டிகள், சன்னல் திரைகள், தத்தல், பணிக்குறி போன்றவற்றின் மூலம் பயனரின் விலைமதிப்பற்ற நேரத்தை குறைப்பது இயக்க அமைப்பின் கூடுதல் பயனாகும்.
4. எந்தவொரு தயாரிப்பின் இறுதி நோக்கமும், வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதாகும்.அதேபோல் பயனர் இடைமுகமும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும்.
5. பயனர் செய்யும் தவறுகளை இடைமுகம் குறைக்க வேண்டும். அதே போல் பயனர் குறைந்த பயிற்சியிலும், தவறுகள் குறையும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
8.
இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் தரவு மற்றும் நிரல்களை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகின்றன.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்:
1. வன்வட்டுகள் (Hard disk)
2. குறுவட்டு (Compact Disk - CD)
3. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/ டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD)
4. ஃபிளாஷ் நினைவக சாதனங்கள்
5. ப்ளூ-ரே வட்டு (BIu - Ray Disc)
I. வன்வட்டுகள் (Hard disk):
1. வன்வட்டு ஒரு காந்தவட்டாகும். இதில் தரவுகளைச் சேமிக்கலாம்.
2. வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும்.
II. குறுவட்டு (CD):
1. CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும்.
2. மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும்.
3. CD ல் தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits " எனப்படும். இவை அடுக்கின் மேல் ஒரு சுருள் பாதையில் வடிவமைக்கப் பட்டிருக்கும், இரண்டு pits-களுக்கு இடையே உள்ள இடைவெளி "lands" என்று அழைக்கப்படும்.
4. CD-யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டர் CD-யை சுழற்றும்.
5. ஒரு சாதாரண CD-ன் கொள்ளளவு 700 MB ஆகும்.
III. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/ டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD):
1. DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc)
2. இது ஒரு 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும்.
3. திரைப்ப்டங்களை சிறந்த முறையில் DVD-களில் சேமித்து, லேசர் மூலம் படிக்க முடிகின்றது .
4. ஒரு 12 செ.மீ விட்டம் உள்ள வட்டு ஒரு பக்க மற்றும் ஒரு அடுக்கு உள்ள வட்டு சுமார் 4.7GB கொள்ளளவாகவும் மேலும் ஒரு பக்க இரு அடுக்கு உள்ள வட்டு 8.5GB கொள்ளளவாக இருக்கும்.8 cm உள்ள DVD 1.5GB கொள்ளளவைக் கொண்டது.
5. ஒரு DVD ROM-ன் கொள்ளளவு அதில் உள்ள தரவுப் பக்க எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
IV. ஃபிளாஷ் நினைவக சாதனங்கள் (Flash Memory Devices) :
1. ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும்.
2. ஃபிளாஷ் நினைவகம் ஒரு EEPROM அல்லது EPROM வகைப்படும் . எ.கா : பென் டிரைவ், மெமரி கார்டு.
3. ஃபிளாஷ் நினைவகம் வேகமான அணுகல் நேரத்தை வழங்குகிறது.
4. ஃபிளாஷ் நினைவகம் 1 ஜிகா பைட்ஸ் (GB)-யிலிருந்து 2 டெரா பைட்ஸ்(TB) கொள்ளளவு வரையில் கிடைக்கும்.
V .ப்ளூ-ரே வட்டு (BIu - Ray Disc):
1. ப்ளூரே வட்டு அதிக அடர்த்தியானக் கண்ணாடி இழை வட்டு வடிவமைப்பு பெற்ற DVD-யை ஒத்ததாகும்.
2. ப்ளூரே வட்டு பெரும்பாலும் விளையாட்டு மென்பொருட்களை உயர் வரையறைத் திரைப்படங்களைச் சேமிக்கப் பயன்படுகிறது
3. ஒரு இரண்டு அடுக்கு ப்ளூரே வட்டில் 5.5 GB வரை தரவுகளைச் சேமிக்கலாம். இதன் கொள்ளளவு 5 DVD மற்றும் 70CD க்குச் சமமாகும்.
4. இந்த வடிவமைப்பு பதிவை இயக்குவதற்கும் , மீண்டும் எழுதுவதற்க்கும் . உயர் வரையறை வீடியோவை இயக்குவதற்கும், மேலும் மிக அதிகத் தரவுகளைச் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
5. ப்ளூரே வட்டு ப்ளூ- வைலட் லேசர்-ஐ தரவை எழுதுவதற்க்கு பயன்படுத்துவதால் ப்ளூ-ரேஎன்று பெயர் பெற்றது.
9.
| சுட்டியின் வகைகள் | இயங்கும் முறை | உருவாக்கம்/அறிமுகம் |
|---|---|---|
| இயந்திரவியல் சுட்டி (Mechanical ) ![]() |
ஒரு சிறிய கடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொறுத்தப்பட்டிருக்கும் . அது அந்தச் சுட்டியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும் பொது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிக்ஞைகளாக மாற்றப்பட்டுக் கணிப்பொறிக்கு அனுப்பப் படுகிறது . |
டெலிபன்கன், ஜெர்மானிய நிறுவனம் 02/10/1968 (Telefunken, Company) German |
| ஒளியியல் சுட்டி (Optical ) ![]() |
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration ) அளவிடப்படும். சுட்டி நகர்வத்தைத் தீர்மானிக்கப் பந்துக்குப் பதிலாக ஒளிப் பயன்படுத்தப்படுகிறது ஒளியியல் சுட்டியில் மூன்று பொத்தான்கள் உள்ளன. ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது |
1980-ல் ரிச்ர்ட்டு லயன் (Richard Lyon ), ஸ்டீவ் கிரீஸ் (Steve Kirsch). |
| லேசர் சுட்டி (Laser ) ![]() |
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration ) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்த உணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
--- |
10.
இணைய பயன்பாட்டின் வழிக்காட்டிகள்:
1. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கணினியைப் பயன்படுத்தக் கூடாது.
2. பிற பயனர்களின் வேலையில் குறுக்கிடும் வகையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த கூடாது.
தகவல்களைத் திருடக் கூடாது.
1.கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது.
2.மென்பொருளை நகலெடுத்தல் அல்லது உரிமையில்லா நகலாக்கத்தை (Printed copies) வாங்கக் கூடாது. இலவசம் இல்லா மென்பொருளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
3.அனுமதியின்றி பிறருடைய கணிப்பொறி வணங்களைப் பயன்படுத்தக் கூடாது.
4.பிறருடைய வேலையை தன்னுடையது என்று உரிமைக் கோரக் கூடாது.
5. ஒரு மென்பொருளை உருவாக்குவதற்கு முன் அதன் சமுதாய தாக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவும்.
6.கணினியை தொடர்புக்குப் பயன்படுத்தும் பொழுது, இருக்கும் உறுப்பினர்களுடன் மரியாதையாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்.
11.
இணையத்தில் மின்னஞ்சலின் செயல்பாடு :
1. இணைய மின்னஞ்சலை அனுப்ப இணைய இணைப்பும் மற்றும் அஞ்சல் சேவையக அணுகலும் தேவைப்படுகிறது.
2. இணைய மின்னஞ்சலை அனுப்புவதற்கான நிலையான நெறிமுறை SMTP (Simple Mail Transfer Protocal) ஆகும்.
3. இணையத்தில் மின்னஞ்சல் செய்திகளை அனுப்பவும் பெறவும் பயன்படுகிறது.
4. மின்னஞ்சல் பயனரால் செய்திகள் SMTP சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது.
5. மின்னஞ்சல் பெறுவோர் உள்ளூராக இருந்தால் அனுப்பப்படும் செய்தி சேவையகத்தில் வைக்கப்பட்டு பின்னர் POP IMAP அல்லது மின்னஞ்சல் சேவைகள் மூலம் அனுப்பப்பட்டு மீட்கப்படுகிறது.
6. பெறுநர் தொலை தூரமாக (மற்றொரு com காம்) இருந்தால் SMTP சேவையகம் DNS யைத்தொடர்பு கொண்டு சரியான IPல் முகவரியை கண்டுபிடித்து அந்த IP - க்கான களத்திற்கு அனுப்புகிறது.
7. IP முகவரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் SMTP சேவையகம் தொலைதூர SMTP சேவையகத்துடன் இணைக்கப்பட்டு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
8. SMTP சேவையகம் அனுப்பும் அஞ்சல் தொலைதூர SMTP சேவையகத்துடன் இணைக்கப்பட முடியவில்லை என்றால் செய்தியானது மீண்டும் முயற்சிக்கப்பட்டு அனுப்பப்படும்.
9. செய்தியானது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு (30 மணி நேரம் தோராயமாக) அனுப்பப் படவில்லை எனில் அந்தச் செய்தி, பெறுநருக்குத் திருப்பி அனுப்பப்படும்.
மின்னஞ்சல் செய்தியின் கட்டமைப்பு :
To : இந்த புலம் யாருக்கு செய்தியை அனுப்ப வேண்டுமோ அவருடைய முகவரியைக் கொண்டிருக்கும். இது கட்டாயமாகும்.
CC : இது தட்டச்சு நகலாகும் (Carbon copy) இது விருப்பத் தேர்வாகும். இதன் மூலம், செய்தி நகலைத் தேவையான செய்தி பெறுநர், இந்த நகலைப் பெறும் அனைத்து பெறுநர்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.
BCC : இதன் விரிவாக்கம் Block carbon copy ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெறுநர் இந்தச் செய்தி நகலானது பிற பெறுநருக்கு பகிரப்பட்தை மறைக்கிறது. இது விருப்பத் தேர்வாகும்.
Subject : மின்னஞ்சலின் நோக்கத்தைக் குறிக்கிறது.
Attachment : இந்த இணைப்பு மின்னஞ்சல் உடன் இணைப்பு ஆவணங்கள், படங்கள் போன்றவற்றை இணைக்கிறது.
Body : இது மின்னஞ்சல் செய்தியில் முக்கியப் பகுதி. இது செய்தியின் உரை, படங்கள் மற்றும் பிற தரவுகளையும் உள்ளடக்கியது.
Signature : அனுப்புநரின் பெயர்.
12.
இணையத்தில் உள்ள சேவைகள் :
1. தரவு மாற்றம்
2 .இணைய வங்கி
3. மின் வணிகம்
4. மின்கற்றல்
5. மின் அரசாண்மை
6. உலவுதல் மற்றும் அரட்டை
7. மின்னஞ்சல்
1. தரவு மாற்றம் :
(i) தரவு மாற்றம் என்பது கணித உத்திகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மின்னணு அல்லது ஒப்புமைத் தரவுகளை ஒரு கணினி முனையத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுவதாகும்.
(ii) தரவானது பிட் அல்லது பைட்களில் இலக்க அல்லது ஒப்புமை ஊடகத்தில் இணையத்தில் அனுப்பப் படுகிறது.
2. இணைய வங்கி:
(i) உலகத்தில் நிகழ்நிலை வங்கி (online Banking) பெரும் பங்கு வகிக்கிறது.
(ii) இதனை இணைய வங்கி, மின் வங்கி அல்லது மாய வங்கி (Virtual Banking) என்றும் அழைக்கலாம்.
(iii) இது ஒரு மதிப்பு கூட்டுப் பயன்பாடு, மைய வங்கி அமைப்போடு இது இணைக்கிறது மற்றும் சுய வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நிலை மூலம் வழங்குகிறது.
3. மின் வணிகம் :
(i) மின் வணிகம் என்பது இணைய வழி கொள் முதல் அல்லது விற்பனை செய்யும் முறையாகும்.
(ii) மின் வணிகம் பின்வரும் தொழில் நுட்பங்களைக் கவருகிறது.
(iii) கைப்பேசி வணிகம், மின் பணப் பரிமாற்றம், இணையச் சந்தை, இணையவழி பரிமாற்றம் செயலாக்கல், மின் தரவுப் பரிமாற்றம் (Electronic data interchange EDI), பொருள் இருப்பு பராமரிப்பு அமைப்பு மற்றும் தானியங்கு தரவு சேகரித்தல் அமைப்பு.
4. மின் கற்றல் :
(i) மின் வளங்களை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அமைப்பானது மின் கற்றல் எனப்படும்.
(ii) கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடு மின் கற்றலில் முக்கிய பங்காற்றுகிறது.
5. மின் - அரசாண்மை என்றால் என்ன ?
மின் - அரசாண்மை என்பது (ICT) அரசு சேவைகள் வழங்கல், தகவல் பரிமாற்றம் தகவல் தொடர்பு பரிமாற்றம், பல்வேறு தனிநிலை அமைப்புகளை ஒருங்கிணைத்தல், மற்றும் அரசு - குடிமக்கள் சேவைகள் (G2-C), அரசு தொழிலாளர்கள் (G2E) அது மட்டுமல்லாமல் தரவுகளைச் சேகரித்து வழங்கல் மற்றும் அரசு முழு கட்டமைப்புடன் தொடர்பை ஏற்படுத்துதல் போன்றவற்றைச் செய்யப் பயன்படும் தகவல் மற்றும் தொடர்புக்கான தொழில் நுட்பத்தின் பயன்பாடாகும்.
6. இணைய வழி அரட்டையடித்தல்:
இணைய வழி அரட்டை என்பது எந்த ஒரு தகவலையும் அனுப்புநர் மற்றும் பெறுநர் இடையே உரைத் தகவல்களாக நிகழ்நேர மாற்றுகளாக இணையத்தின் மூலம் வழங்குவதாகும்.
13.
கம்பியில்லாத் தகவல் தொழில் நுட்பத்தின் வகைகள் :
கம்பியில்லாத் தொலைபேசி, செல்பேசி, GPS) அலகுகள், கம்பியில்லா கணினி பகுதிகள் மற்றும் செயற்கை கோள் தொலைக்காட்சி ஆகியவை.
I. புளுடூத் (Bluetooth) :
1. இது டேனிஷ் ராஜா ஹரால்டு புளுடூத் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
2. கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் மூலம் தரவைப் பரிமாறிப் பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.
3. வெவ்வேறு மின்சாதனங்களை இணைக்க புளுடூத் பயன்படுகிறது.
4. அலைபேசியை, கை பயன்படாத காது கருவிகள், (handfree ear tools) கம்பியில்லா விசைப்பலகை, சுட்டி, ஒலிபெருக்கி மூலம் மடிக் கணினியை இணைத்துக் தகவல்களை ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கு பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது.
II. அகச்சிவப்பு தொழில்நுட்பம் :
1. அகச்சிவப்பு கதிர்வீச்சுகளின் வழியாக அகச்சிவப்பு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சாதனங்களுக்கு இடையில் தரவு பரிமாற்றத்திற்கான கம்பியில்லா தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு வகையாகும்.
2. கம்பியில்லாத் தரவு பரிமாற்றத்தில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. சுட்டி, கம்பியில்லா விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற சாதனங்களில் பயன்படுகிறது.
III. வை-யை (Wi-Fi) :
1. கம்பியில்லா மிகக்குறைந்த செலவு கொண்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும்.
2. Wi-Fi அமைப்பு கம்பியில்லா திசைவியைக் (Router) கொண்டுள்ளது.
3. இது தொடர்பு மையமாக செயல்பட்டு எடுத்துச் செல்லத்தக்க ( (portable) சாதனத்தை இணையத்துடன் இணைக்கிறது.
4. ரவுட்டர் (Router) கட்டமைப்பைப் பொறுத்து பல சாதனங்களின் இணைப்பை இந்த வலையமைப்பு நிர்ணயிக்கிறது.
IV. வானொலி இணைப்பு (Radio Link) :
வானொலி இணைப்பு என்பது தரவு வலையமைப்பில் உள்ள இரண்டு முனையங்கள் (அ ) வானொலி அலகுகளுக்கு இடையில் உள்ள கம்பியில்லா இணைப்பாகும். (கம்பியில்லா முனையம்- முனையம் (point-to-point) இணைப்பு).
V. நுண்ணலை இணைப்பு (Microwave Link) :
வானொலி அலைகளின் அதிக அதிர்வெண் கற்றைகளைப் பயன்படுத்தி ஒலி, ஒளி மற்றும் தரவுத் தகவல்களை அனுப்ப மற்றும் பெறக்கூடிய அதிவேக தகவல் தொடர்பு இணைப்புகளை வழங்குகிறது.
VI. செயற்கைக்கோள் இணைப்பு (Statellite Link):
1. செயற்கைக்கோள் உதவியுடன் சமிக்ஞைகளை அனுப்புநரிடமிருந்து பெறுனருக்கு பரிமாற்றம் செய்ய உதவும் கம்பியில்லா தொழில்நுட்பமே செயற்கைக்கோள் தகவல் தொடர்பு எனப்படும்.
2. உலகம் முழுவதும் பரவி, பயனர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் மெய்நிகராக (Virtualy) இணைப்பில் இருக்க அனுமதிக்கிறது.
14.
தரவுகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கம்பிகள் மூலம் அனுப்ப படுவதற்குப் பயன்படும் தொழில்நுட்பம் கம்பித் தொழில்நுட்பம் எனப்படும்.
எல்லைக்குட்பட்ட / வழிகாட்டு ஊடகம் :
தரவுப் பரிமாற்றத்தில் மூன்று வகையான எல்லைக்குட்பட்ட ஊடகங்கள் உள்ளன.அவை
1. முறுக்கிய இரட்டை வடம் (Twisted-Pair Cable)
2. அணையச்சு வடம் (Coaxial Cable)
3. இழை ஒளியியல் வடம் (Fibre-Optic Cable)
4. Twisted Pair மற்றும் Co axial cable வடங்கள் உலோக கடத்திகளைப் பயன்படுத்தி மின்னோட்ட முறையில் சமிக்ஞைகளைப் பெற்று இடம்பெயரச் செய்கிறது.
5. Fibre - optic ஒளி முறையில் சமிக்ஞைகளைப் பெற்று இடம் பெயரச் செய்கிறது.
முறுக்கிய இரட்டை வடம் (Twisted Pair Cable)
1. ஒரு Twisted-pair ஆனது இரு கடத்திகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதனுடைய நெகிழி காப்பீட்டால் ஒன்றோடொன்று முறுக்கப்பட்டுள்ளது.
2. இதிலுள்ள ஒரு கம்பியானது பெறுநருக்கான சமிக்ஞைகளையும் மற்றொன்று தரைக் குறிப்புக்காக மட்டும் பயன்படுகிறது.
3. ஒரு கம்பியில் அனுப்புநர் அனுப்பும் சமிக்ஞைகளுடன் தடங்கல் சத்தம் மற்றும் குறுக்கீடு பேச்சு இரைச்சல் தேவையற்ற சமிக்ஞைகளை உருவாக்கலாம்.
Twisted pair-ன் இரண்டு வகைள் :
1. பாதுகாப்பற்ற முறுக்கிய இரட்டை வடம் (Unshielded Twisted Pair (UTP))
2. பாதுகாப்பான முறுக்கிய இரட்டை வடம் (Shielded Twisted Pair (STP)).
பாதுகாப்பற்ற முறுக்கிய இரட்டை வடம் :
1. இரண்டு காப்பீட்டு செம்புக் கம்பிகளைக் கொண்டிருக்கும்.
2. ஒரே மாதிரியான இணைப்பின் மின் குறுக்கீட்டைக் குறைக்க இந்தக் கம்பிகள் சுருள் வளைய வடிவில் ஒன்றோடொன்று குறுக்கப்பட்டிருக்கும்.
3. நெகிழிக் காப்பீடுகள் வண்ணமிடப்படுவதின் காரணம் அடையாளம் காண்பதற்கு ஆகும்.
பாதுகாப்பான முறுக்கிய இரட்டை விடம் (Shielded Twisted Pair Cable) :
1. இந்த வடம் உலோகத்தகடு மற்றும் பின்னப்பட்ட கம்பி வலையைக் கொண்டிருக்கும்.
2. மின் காந்த சத்தம் ஊடுருவல் உலோக உறை மூலம் தடுக்கப்படுகிறது.
3. உலோக உறையானது குறுக்கீடுகளை நீக்குகிறது.
4. பாதுகாப்பற்ற முறுக்கிய இரட்டை மற்றும் இணையச்சுகளை விட வேகமானது.
5. ஒப்புமை மற்றும் இலக்க வகை பரிமாற்றத்திற்குப் பயன்படுகிறது.
இணையச்சு வடம் (Coaxial cable) :
1. ஒன்றுக்கொன்று இணையான இரண்டு கடத்திகளைக் கொண்டிருப்பதால் இது இணையச்சு வடம் என அழைக்கப்படுகிறது.
2. மையக்கடத்தியாக இதில் செம்பு பயன்படுகிறது. PVC யால் சூழப்பட்டுள்ளது.
3. வெளிப்புற உலோக மடக்கு சத்தத்திற்கு எதிராக கேடயமாகவும், சுற்றுகளை முடிக்கும் கடத்தியாக இரண்டாம் மடக்கு பயன்படுகிறது.
4. வெளிப்புறக் கடத்தி காப்புறையில் உறையிடப்பட்டிருக்கிறது. வெளிப்புறப் பகுதி என்பது முழுக் கம்பிகளையும் பாதுகாக்கின்ற நெகிழி உறையாகும்.
பொதுவான இணையச்சு தரங்களாவன :
1. 50-Ohm RG-7 அல்லது RG-11 : அடத்தியான ஈதர்நெட் பயன்படும்.
2. 50-Ohm RG-58 : மெல்லிய ஈதர்நெட்டுடன் பயன்படும்.
3. 75-Ohm RG-59 : கேபிள் தொலைகாட்சியில் பயன்படுகிறது.
4. 93-Ohm RG-62 : ARCNET-ல் பயன்படுகிறது.
நிறைகள் :
1. மிக அதிக தொலைவில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் பயன்படுகிறது.
2. இலக்க சமிக்ஞைகளை 10 Mbps அதிக வேகத்தில் கடத்துகிறது.
3. அதிகமான சத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது.
4. எந்தத் தரவையும் உருக்குலைவு இல்லாமல் (distortion) கடத்துகிறது.
இழை ஒளியியல் வடம் (Fiber Optic Cable) :
1. கண்ணாடி அல்லது நெகிழியால் ஆனது. ஒளி வடிவில் சமிக்ஞைகளை கடத்துகிறது.
2. Fibre Optical Cable ல் ஒளி ஒரு வழியில் மட்டுமே நகர்கிறது.
3. இருவழித் தகவல் தொடர்பில் - சாதனங்களுக்கு இடையில் இரண்டாவது தகவல் தொடர்பு. கண்டிப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
4. இது பிரதிபலிப்பு முறையில் ஒளியை ஊடகத்தின் வழியாக வழி நடத்துகிறது.
5. கண்ணாடி அல்லது நெகிழியின் மையம் குறைந்த அடர்த்தியான கண்ணாடி அல்லது நெகிழி வெளியுறையால் சூழப்பட்டுள்ளது.
6. இரண்டு பொருள்களின் அடர்த்திக்கு உள்ள வேறுபாடு, மையத்தின் மூலமாக நகரும் ஒளிக்கற்றையானது வெளியுறையின் மீது ஒளிவிலகல் ஆகாமல் பிரதிபலித்து செல்வது போல இருக்க வேண்டும்.
இழை ஒளியியல் வட இணைப்பான்கள் :
1. கேபிள் டிவிக்கு சந்தாதாரர் இணைப்பு (Subscriber Channel (SC)) பயன்படுத்தப்படுகிறது.
2. இது தள்ளு இழு பூட்டு முறையைப் பயன்படுத்துகிறது.
3. வலையமைப்பு சாதனங்களில் உள்ள கம்பிகளை இணைக்க நேரான முனை (Straight-Tip (St)) இணைப்பான் பயன்படுத்துகிறது.
4. MT-RJ என்ற இணைப்பான் இரண்டு இழைகளைப் பயன்படுத்தி அவற்றை ஒரே வடிவமாக ஒருங்கிணைத்து RJ45 இணைப்பான் போல தோற்றமளிக்கச் செய்கிறது.
15.
வலையமைப்பை ஒழுங்குபடுத்தி, கம்பி இணைப்பு மூலம் பல்வேறு முனையங்களை (அனுப்புநர் மற்றும் பெறுநர்) இணைப்பது வலைய இணைப்பு அமைப்பாகும்.
1. பாட்டை இணைப்பு அமைப்பு (Bus Topology) :
1. ஒவ்வொரு கணிப்பொறியும் மற்றும் வலைச்சாதனங்களும் ஒரு பொதுவான பின்புல நேர்கோட்டு கம்பியில் (back bone) இணைக்கப்பட்டிருக்கும்.
2. அதிகபட்சமாக 30 முனையங்களை இணைக்க முடியும்.
பாட்டை இணைப்பு அமைப்பின் தனிச்சிறப்புகள்
1. தரவுகளை ஒரே திசையில் பரிமாற்றம் செய்யும்.
2. ஒவ்வொரு சாதனமும் ஒரே ஒரு கம்பி மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
2. நட்சத்திர இணைப்பு அமைப்பு (Star Topology) :
1. அனைத்து கணிப்பொறிகளும் ஒரு கம்பி மூலம் ஒரு மையத்துடன் (hub) அல்லது இணைப்பியுடன் (switch ) இணைக்கப்பட்டிருக்கும்.
2. இந்த மையமே நடு முனையாகும். இதனுடன் அனைத்து முனையங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
நட்சத்திர வலையின் சிறப்பம்சங்கள்
1. இந்த வகையில் ஒவ்வொரு முனையமும் மையத்துடன் தனது தனிப்பயன் (dedicated) இணைப்பில் இருக்கும்.
2. மையம் தரவுப் பாய்வின் LDDI உருவாக்கமாக (repeater) செயல்படுகிறது.
3. மர இணைப்பு அமைப்பு (TreeTopology) :
1. இந்த வகை இணைப்பு அமைப்பு. ஒரு மர அமைப்பு வடிவத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
2. இதில் உயர்மட்ட நிலையில், பெற்றோர் முனையம் உள்ளது. இது இரண்டாம் நிலையில் குழந்தை முனைகளுடன் தொடர்புடையது.
3. இந்த இரண்டாம் நிலை முனையங்கள் மூன்றாம் நிலை முனையங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
4. அதே போல, மூன்றாம் நிலை. நான்காம் நிலையோடு இணைக்கப்பட்டு,இந்த இணைப்பு நிலை தொடரும்.
5. உயர்மட்டநிலைய முனையத்தைத் தவிர மற்ற அனைத்து நிலை முனையங்களுக்கும் பெற்றோர் முனையம் உள்ளது.
இது படிநிலை இணைப்பு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது .
மர இணைப்பு அமைப்பின் சிறப்பம்சங்கள்
1. பணி நிலையங்கள் அல்லது முனையங்கள் குழுக்களில் அமைந்தால் சிறந்தது.
2. பரந்த வலையமைப்பில் பயன்படுகிறது.
16.
நிகழ்த்துதலில் முதன்மை சில்லு (Master slide) அல்லதுஸ்லைடு மாஸ்டர் அல்லது மாஸ்டர் பக்கம் (Master page) என்பது மற்ற சில்லுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் சில்லு என்பதைக் குறிக்கும்.
1. நிகழ்த்துதலின் பக்க அமைவு முதன்மைப் பக்கத்தைப் பயன்படுத்தி வரையறுக்கம்.
2. Impress-ல் முன்னரே தொகுக்கப்பட்ட முதன்மை பக்கங்கள் இருக்கும்.
3. கொடா நிலை முதன்மைப் பக்கம் வெற்றிடம் (Blank slide) என்பதாகும். மற்றவைக் குறிப்பிட்ட பின்னணி உடையவை.
4. Master slide என்பது மற்ற சில்லுகளுக்குத் தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தப்படும் சில்லுவாகும்.
5. இது அடிப்படையில் அனைத்து சில்லுகளுக்கும் அடிப்படை வடிவமைப்பைக் கட்டுப்படுத்துகிறது.
6. இது பின்னணி நிறம், வரைகலை அல்லது சாய்வு, பொருள்கள், பின்னணி, தலைப்பு அடிக்குறிப்புகள், உரையாடல் மற்றும் உரைச் சட்டங்கள் அளவு மற்றும் உரை வடிவமைத்தல் போன்ற வரையறுக்கப்பட்ட தொகுப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
7. Slide Master -ன் பாணிகள், அந்த Slide Master -லிருந்து உருவாக்கிய அனைத்து சில்லுகளுக்கும் கிடைக்கின்றன.
8. ஒரு சில்லுவின் பாணியை Slide Master -ல் மாற்றம் செய்தால், அடிப்படையில் அனைத்து சில்லுகளின் பாணிகளும் மாற்றங்கள் பெறும்.
17.
1. பல்லூடகக் கோப்புகளான படம், ஒலி மற்றும் ஒளிக்காட்சிக் கோப்புகளை Impress-ல் சேர்க்கலாம்.
2. ஒரு படத்தைச் செருகுவதற்கு படம் செருக வேண்டிய இடத்தில் சுட்டியை வைக்கவும். பின்னர் Insert --> Picture --> From File என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Open Office Impress, Insert picture உரையாடல் பெட்டியைக் காண்பிக்கும், குறிப்பிட்ட இடத்திலிருந்து படத்தைத் தேர்ந்தெடுத்து, Open பொத்தானைக் கிளிக் செய்தால் குறிப்பிட்ட இடத்தில் படம்) செருகப்படும்.
4. ஆடியோ ஒலி மற்றும் ஒளிக்காட்சிக் கோப்புகளை Insert--> Movie and Sound என்ற பட்டிப் பட்டைத் தேர்வின் மூலம் செருகலாம்.
18.
Impresse ல் கிடைக்கக்கூடிய வரைபடக் கருவிகளைப் பயன்படுத்திச் சொந்தமாக வரைகலையை உருவாக்க முடியும். வரைகலை (Drawing) கருவிப்பட்டையில் வரைகலை படங்களை உருவாக்கப் பயன்படும் கருவிகள் உள்ளன.
இக்கருவிப்பட்டை காட்டப்படவில்லை எனில், முதன்மைப் பட்டியில் View --> Toolbars --> Drawing என தேர்ந்தெடுக்கவும்.
1. Select : குறிப்பிட்ட பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். சுட்டி இழுப்பதன் மூலம் பல பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. Line: ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.
3. Arrow : ஒரு அம்புக்குறியைக் கொண்டு முடியும் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.
4. Rectangle : ஒரு செவ்வகத்தை வரைகிறது. ஒரு சதுரத்தை வரைய Shift பொத்தானை அழுத்தவும்.
5. Ellipse : ஒரு நீள்வட்டம் வரைகிறது. வட்டத்தை வரைவதற்கு Shift பொத்தானை அழுத்தவும்.
6. Text : ஒரு உரைப் பெட்டி, கிடைமட்டமாக சீரமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
7. Vertical Text : ஒரு உரைப்பெட்டி, செங்குத்தாக சீரமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
8. Curve : ஒரு வளைவை. வரைகிறது.
9. Connectors : இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஒரு இணைப்பு வரியை வரைகிறது. கூடுதல் இணைப்பிகளுக்கு கருப்பு முக்கோணத்தை கிளிக் செய்யவும்.
19.
1.Slider Master-ன் - உதவியுடன் சிவபாலன் இந்தத் தவறைச் சரி செய்ய முடியும். அல்லது அனைத்துச் சில்லுகளையும் தேர்வு செய்து.
2. Edit –-> Find & Replace என்றப் பட்டிப் பட்டைத் தேர்வின் மூலம் தேட வேண்டிய சொல்லையும், மாற்றும் சொல்லையும் கொடுத்து சரி செய்யலாம்.
20.
1. விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் மற்றும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் நிகழ்த்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. விற்பனையாளர், தனது தயாரிப்புகளை விளக்கக் கூடிய, நிகழ்த்தலை வாடிக்கையாளர்கள் மற்றும் மேலாண்மையாளர்களுக்கு சிறந்த முறையில் தர முடியும்.
21.
1. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்பவை அட்டவணைத் தாளின் பரப்பிற்கு வெளியே, தாளின் மேல் மற்றும்
கீழ் ஓரத்தில் அச்சிடப்படும் முன்னரே வரையறுக்கப்பட்ட உரைத் துணுக்கு ஆகும்
2. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்பது சில தலைப்புகள் (ஆவணத்தலைப்பு, நூலாசிரியர் பெயர் அல்லது மேற்கோள்கள் (அதாவது பக்க எண். பக்கங்களில் எண்ணிக்கை, தேதி) அல்லது குறிப்புரைகள் ஆகியவை பக்கத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டால் தலைப்பு எனவும், பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டால், அடிக்குறிப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.
3 .தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் பக்க வடிவமைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
4. அட்டவணைத்தாளிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்க வடிவமைப்பை வரையறுக்க முடியும்.
5. வெவ்வேறு தாட்களுக்கு வெவ்வேறு வடிவமைப்பைக் கொள்ள வேண்டும்.
6. Format - Page கட்டளை மூலம் Page Style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
7. அதில் Header தொகுதியைத் தேர்வு செய்து, Header on தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
8. அதேபோல் Footer தொகுதியைத் தேர்வு செய்து Footer on தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவும். பின் OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
9. Calc ன் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு. உரைக்கென மூன்று நெடுவரிசைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நெடுவரிசையிலும் வெவ்வேறு உள்ளடக்கத்தை வைத்துக் கொள்ள முடியும்.
10. Edit --> Headers & Footers என்றக் கட்டளை மூலம் இதைச் செய்ய முடியும்.
22.
Insert --> Function கட்டளை அல்லது Ctrl+F2 விசைப் பலகை குறுக்குவழியின் மூலம் Function wizard
உரையாடல் பெட்டியை பெறலாம்.
1. Category கீழறங்குப் பெட்டியிலிருந்து செயற்கூறின் வகையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். Function பட்டியல்,
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கூறு வகையின். செயற்கூறுகளை மட்டும் பட்டியலிடும். இதிலிருந்து தேவையான
செயற்கூறைத் தேர்ந்தெடுக்கவும்.
2. செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதற்கான விளக்கம் உரையாடல் பெட்டியின் வலதுபுறம் தோன்றும்.
தேவையான செயற்கூறின் மீது இரட்டை கிளிக் செய்யவும்.
3. இப்பொழுது உரையாடல் பெட்டியில் தோன்றும் உரைப்பெட்டியில் தேவையான தரவை உள்ளிட்டால் Result
உரைப்பெட்டியில் அதன் விடை தோன்றும்.
எ.கா : Category வகையிழுப் பட்டியிலுள்ள Mathematical தேர்வின் மூலம் கணித கணக்கீடுகளைச் செய்யும்
பல்வேறு செயற்கூறுகளை பெறலாம்.
23.
1. வரைபடத்திற்குத் தேவையானத் தரவுள்ள நுண்ணறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Insert --> Chart அல்லது கருவிப்பட்டையிலுள்ள Insert Chart பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
3. வரைபடம் அமைப்பதற்கான படிநிலைகளில் பட்டியல் :
1.வரைபடம் சேர்ப்பதற்கான படிகள்
2.வரைபட வகை பட்டியல்
3. ஒவ்வொரு வரைபடத்திற்கான தேர்வுகள். ஒவ்வொரு வரைபடத்திற்கான விருப்பத் தேர்வுகள் எந்த நேரத்திலும் முன் படிநிலைக்குச் சென்று தேர்வு செய்தத் தேர்வுகளை மாற்றலாம்.
4. வரைபட வகையையும் அதன் விருப்பத் தேர்வுகளையும் தேர்ந்தெடுத்தப்பின் Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. படிநிலை 2 - ல் Data Range மூலம் தரவுகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள தவறுகளை சரி செய்ய முடியும்.
1.Data series in Rows அல்லது Data series in column இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2..First row as label அல்லது First column as label ஆகியத் தேர்வு பெட்டிகளில் ஒன்றையோ அல்லது
இரண்டையும் தேர்ந்தெடுக்கலாம்.
3.பிறகு Finish பொத்தான் அல்லது Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6. Data series பட்டியல் பெட்டி தற்போது வரைப்படத்தின் அனைத்துத் தரவு வரிசைகளின் பட்டியலைக்
கொண்டுள்ளது.
1.தரவு வரிசையை ஒழுங்குப்படுத்த, பட்டியிலிருந்து ஒரு உள்ளீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
2.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீட்டிற்கு கீழே தரவு வரிசைகளைச் சேர்க்க Add பொத்தானைக் கிளிக் செய்யவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்க்கப்பட்ட புதிய தரவு ரிசையும் ஒரே வகையினமாக இருக்கும்.
3.தரவு வரிசையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீட்டை நீக்குவதற்கு Remove பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீட்டை மேல் மற்றும் கீழ் நகர்த்துவதற்கு மேல் மற்றும் கீழ் அம்பு குறிகள் பயன்படுகிறது.
தரவு மூல அட்டவணையின் வரிசை முறையை மாற்றாது. மாறாக வரைபடத்தை சீரமைக்கும் போது வரிசை
முறை மாறும்.
7. Chart Elements Page-ல் - தலைப்பையும், விருப்பப்பட்டால் துணைத் தலைப்பையும் கொடுக்கலாம். வரைப்படத்தின்
நோக்கம் பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டுவர தலைப்பு பயன்படுகிறது.
8. இறுதியாக Finish பொத்தானைக் கிளிக் செய்யவும்.
24.
வடிவூட்டல் கருவிப் பட்டையிலுள்ள பணிக்குறிகள் :
1.எழுத்துரு கீழிறக்கு பெட்டி : பலவேறு எழுத்து வடிவுகளை இந்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
2.எழுத்து அளவு கீழிறக்கு பெட்டி: இது எழுத்துருக்களின் அளவை மாற்றி அமைக்கப் பயன்படுகிறது.
3. எழுத்துருக்களை தடிமனாக்குதல் பணிக்குறி: இதனைப் பயன்படுத்தி தரவுகளை தடித்த எழுத்துக்களில்
காட்டலாம் இதற்கான குறுக்குவழி Ctrl+B.
4. சாய்வெழுத்து பணிக்குறி : இது தரவுகளை சாய்ந்த வடிவில் காட்டப்பயன்படும். இதற்கான குறுக்கு
வழி Ctrl+I.
5. அடிக்கோடிக்கல் பணிக்கறி : இது தரவுகளை அடிக்கோடிட்டுக் காட்டப் பயன்படுகிறது, இதற்கான
குறுக்குவழி Ctrl+U.
6. இசைவு பணிக்கறிகள் - இவை தரவுகளை இடது, வலது, மையம் மற்றும் நேர்த்தி இசைவுகளில்
ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதற்கான குறுக்கு வழிகள் இடது-Ctrl+L. வலது-Ctrl+R. மைய-Ctrl+E மற்றும் நேர்த்தி-Ctrl+J.
7.எண் வடிவமைப்பு பணிக்குறிகள் :
பணக் குறியீடு (Currency) பணிக்குறி, சதவீதம் (Percent) பணிக்குறி, இயல்பு நிலை (Standard) பணிக்குறி,
தசம புள்ளியைச் சேர்த்தல். தசம புள்ளியை குறைத்தல் போன்ற பணிக்குறிகளைப் பயன்படுத்தலாம். இவற்றுள்,
பணக் குறியீடு, சதவீதம் மற்றும் இயல்பு நிலைக்கு முறையே Ctrl+Shift+4, Ctrl+Shift+5 மற்றும் Ctrl+Shift+6 குறுக்கு
வழிகளைப் பயன்படுத்தலாம்.
8. வன் தன்னால் மிகுப்பு மற்றும் குறைப்புப் பணிக்குறிகள் : நுண்ணறையில் உள்ள தரவுகளை
உள்தள்ளப் பயன்படுகிறது.
9.எல்லைப் பணிக்குறி (Border) : எல்லையின் வகை. பின்புற நிறம் மற்றும் எழுத்து நிறம்
பணிக்குறிகள் முறையே அட்டவணைத்தாள் கோடுகளின் நிறம், பின்புற வண்ணம் மற்றும் தரவுகளின்
நிறத்தை மாற்றப் பயன்படுகிறது.
25.
1.Start → All program → Openoffice → Openoffice Calc என்றக் கட்டளை மூலம் புதிய அட்டவணைத் தாளைத் திறக்கவும்.
எ.கா : 10 மாணவர் தரவுகளைக் கொண்ட தரவுத்தளத்தை உருவாக்கலாம்.
2.A 1 நுண்ணறையில் 'வரிசை எண் என்றுத் தட்டச்சு செய்யவும்.
3.B1 நுண்ணறையில் 'பெயர்" என்றும்,
C1 நுண்ணறையில் 'தமிழ்' என்றும்,
D1 நுண்ணறையில் 'ஆங்கிலம்' என்றும்,
E1 நுண்ணறையில் 'கணிதம்" என்றும்,
F1 நுண்ணறையில் அறிவியல்' என்றும்,
G1 நுண்ணறையில் 'சமூக அறிவியல்',
H1 நுண்ணறையில் 'மொத்தம்" என்றும்,
I1 நுண்ணறையில் 'சராசரி' என்றும் தலைப்புகளைத் தட்டச்சு செய்யவும்.
3. A2 நுண்ணறையில் 1 என்று தட்டச்சு செய்து, AutoFil1 வசதி ' மூலம் A3:A11 நுண்ணறைப் பரப்பில்
2 முதல் 10 வரை வரிசை எண்களை உருவாக்கவும்.
4.B2:G11 நுண்ணறைப் பரப்பில் மாணவர்களின் பெயர் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,
சமூக அறிவியல் பாடங்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அந்தந்த நெடுவரிசையில் தட்டச்சு செய்யவும்.
5. H2 நுண்ணறையில் = sum(C2:G2) என்ற வாய்ப்பாட்டைத் தட்டச்சு செய்ய வேண்டும். இதனை H3 முதல் H11 என்ற நுண்ணறையில் நகல் எடுக்க வேண்டும்.
6.I2 நுண்ணறையில் = Average(C2:G2) என்ற வாய்ப்பாட்டைத் தட்டச்சு செய்ய வேண்டும். இதனை 13 முதல் 111 என்ற நுண்ணறையில் நகல் எடுக்க வேண்டும்.
7. File-->Save கட்டளை மூலம் என்று கோப்பின் பெயர் கொடுத்து சேமிக்கவும்.
26.
1.அட்டவணைத் தாளில் வேண்டிய அளவு நுண்ணறைகளைத் தேர்வு செய்து கொள்ளவும்.
எ. கா : A1 முதல் A20 வரையிலான நுண்ணறைப் பரப்பைத் தேர்வு செய்யலாம்.
2.Edit -->Fill --> Series என்றக் கட்டளையைத் தேர்வு செய்தால் Fill Series உரையாடல் பெட்டி தோன்றும்.
3. அதில் Direction என்பதில் Down என்ற தேர்வுப் பொத்தானை தேர்வு செய்யவும்.
4. Series Type என்பதில் 'Growth' என்ற தேர்வுப் பொத்தானையும் தேர்வு செய்யவும்,
5. Start Value என்பதில் 5 என்று உள்ளிடவும்.
6. End Value என்பதில் 2560 என்று உள்ளிடவும்.
7.Increment என்பதில் 2 என்று உள்ளிட்டு, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
8. படத்தில் உள்ளவாறு எண்வரிசை உருவாக்கப்படும்.
| A | |
| 1 | 5 |
| 2 | 10 |
| 3 | 20 |
| 4 | 40 |
| 5 | 80 |
| 6 | 160 |
| 7 | 320 |
| 8 | 640 |
| 9 | 1280 |
| 10 | 2560 |
27.
வழிமுறை : 1
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற விரும்பு புகின்றோமோ அந்த நெடுவரிசையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format –> Column –> Width என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
4. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 2
1 அகலம் மாற்றப்பட வேண்டிய நெடுவரிசைத் தலைப்பில் சுட்டியை வைத்து வலது கிளிக் செய்யவும்.
2. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
3. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 3
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற வேண்டுமோ. அந்த நெடு வரிசையை, அடுத்த வரிசையிலிருந்து
பிரிக்கும் கோட்டிற்கு சுட்டியை எடுத்துச் செல்லவும்.
2. சுட்டெலியின் சுட்டி இருதலை அம்புக்குறியாக மாறுவதைக் காணலாம்.
3. அந்த நிலையில் கிளிக் செய்து சுட்டியை இடப்புறம் அல்லது வலப்புறம் இழுத்து
அகலத்தைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்யலாம்.
28.
| பதிப்புகள் | சின்னம் | ஆண்டு | முக்கிய சிறப்பியல்புகள் |
| விண்டோஸ் 1.X | ![]() |
1985 | 1. 16பிட்டுகளில் வரைகலை பயனர் இடைமுகம் அறிமுகம் செய்யப்பட்டது. 2. சுட்டி, உள்ளீட்டு சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. |
| விண்டோஸ் 2.X | ![]() |
1987 | 1. சன்னல் திரையை சிரிதாக்குதல், அல்லது பெரிதாக்குதல் வசதி. 2.தனிப் பயனாக்குதல் விருப்பத் தேர்வுகள்(Customising Options) மற்றும் கணிப்பொறி அமைப்பு (Computer System Setting )மாற்றுதல் போன்ற சிறப்பம்சங்களுடன் "கட்டுப்பாட்டு பலகம்" (Control Panel) அறிமுகம் செய்யப்பட்டது |
| விண்டோஸ் 3.X | ![]() |
1992 | 1. விண்டோஸ்-ல் "பல்பணி கருத்துரு"(Concepts of Multitasking) அறிமுகம். 2.256 வண்ணங்கள் இயக்கும் திறனோடு மிகநவீன வண்ணமயமானது. |
| விண்டோஸ் 95 | ![]() |
1995 | 1. தொடக்க பொத்தான், பணிப்பட்டை, விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தொடக்கபட்டி அறிமுகம். 2. 32 பிட் நுண்செயலி அறிமுகம் மற்றும் பல்பணி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 98 | ![]() |
1998 | 1. இயக்க அமைப்புடன், ஒருங்கிணைந்த இணைய உலவி Internet Explorer அறிமுகம். 2.DOS அடிப்படையிலான விளையாட்டுகள் மறையத் தொடங்கி, விண்டோஸ் அடிப்படையிலான விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டது. 3.செருகி உபயோகித்தல் சிறப்பம்சம் அறிமுகம். |
| விண்டோஸ் NT | ![]() |
1.வலையமைப்பில் சேவையகமாக வடிவமைக்கப்பட்டது. | |
| விண்டோஸ் ME | ![]() |
2000 | 1. தானியங்கு கணிப்பொறி பரிசோதித்தல் மற்றும் மீட்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. |
| விண்டோஸ் 2000 | ![]() |
2000 | 1. வணிக கணிப்பொறி மற்றும் மடிக் கணினிகளில் இயக்க அமைப்பாக சேவையற்றியது. 2. விண்டோஸ் 2000ல் நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. 3. Professional (வணிக மேஜைக் கணிப்பொறி மற்றும் மடிக்கணினிகள்) 4.Server (இணைய சேவையகம் மற்றும் அலுவலக சேவையகம்) 5. Advanced Server (தொழில்துறை பயன்பாட்டிற்காக) 6. Data Center Server (உயர் போக்குவரத்து (high-trafic) கணிப்பொறி சேவையகம் ) |
| விண்டோஸ் XP | ![]() |
2001 | 1. 64பிட் நுண்செயலிகள் அறிமுகம். 2.விண்டோஸ் தோற்றம் மற்றும் நிலையான பணித்தளம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் Vista | ![]() |
2006 | 1.விண்டோஸ் தோற்றம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 7 | ![]() |
2009 | 1. கணிப்பொறியின் தொடங்குதல் நேரம் மேம்படுத்தப்பட்டது. 2. ஏரோ பீக் (Aero Peek).பணிப்பட்டையில் பயன்பாடுகளை இணைத்தல் (pinning programs to taskbar),கையெழுத்து உணருதல் (Handwriting recognition) Internet Explorer 8 போன்ற புதிய பயனர் இடைமுக வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 8 | ![]() |
2012 | 1. முந்தைய விண்டோஸ் -ன் பதிப்புகளை விட விண்டோஸ் 8 மிகவும் வேகமாக செய்லபடக்கூடியது. 2.தொடக்க பொத்தான் நீக்கப்பட்டது. 3. கைபேசி மற்றும் கணிப்பொறிகளுக்கான பொதுவான பணிமேடையாக செயல்படுகிறது. |
| விண்டோஸ் 10 | ![]() |
2015 | 1. தொடக்க பொத்தான் மீண்டும் சேர்க்கப்பட்டது . 2. ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பு. 3."செயலி அறிவிப்பு" மற்றும் "விரைவு நடவடிக்கை செயலிக்கான மத்திய அறிவிப்பு மையம்" அறிமுகம். |
| 'கார்டான' குரல் செயலியக்க தனி உதவியாளர் வசதி (Cortana voice activated Personal assistant) | |||
29.
I. நன்மைகள்:
1. இலவசமாக பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மாற்றிடக் கூடியதாகும்.
2. உருவாக்கிய மூல நிறுவனத்தையோ அல்லது உருவாக்கிய அறிஞரையோ சார்ந்திருப்பதில்லை. நிறுவனம் இயங்கவில்லை என்றாலும் இயக்க அமைப்பின் குறிமுறை தொடர்ந்து இருக்கும் மற்றும் அதன் பயனர்களால் மேலும் புதுப்பிக்கப்படும்.
II. தீமைகள் :
1. வணிக தனி உரிம இயக்க அமைப்புகள் போல பயனர் எளிதாகப் பயன்படுத்த முடியாது.
2. திறந்த மூல இயக்க அமைப்பு மற்றும் தனி உரிம இயக்க அமைப்பு இரண்டிலும் இயங்கக் கூடிய பயன்பாட்டு மென் பொருள்கள் குறைவு.
3. எனவே திறந்த மூல இயக்க அமைப்புக்கு மாறினால், தனி உரிம இயங்கு தளத்தில் இயங்கும் மென்பொருள்களின் ஒத்தியங்கும் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல் வேண்டும்.
4. திறந்த மூல இயக்க அமைப்புகளின் உருவாக்கம் இணையாக சென்று கொண்டிருக்கும். இது எந்த பதிப்பில் எந்த வகையான செயல்பாடு உள்ளதெனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
5. திறந்த மூல இயக்க அமைப்புகள் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பிதில்லை.
6. தற்போது கிடைக்க கூடிய வன்பொருள்கள் திறந்த மூல இயங்கு தளங்களில் ஒத்துப்போவதில்லை.
30.
I. பரவல் இயக்க அமைப்பு: டிஜிட்டல் பிணையம் (இணைய தளம்/உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட தரவு மற்றும் பயன்பாடுகளை இந்த அம்சம் கவனித்து கொள்கிறது.
பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் இருக்கும் கோப்புகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவைக் கையாள முடியும். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியில் உள்ள கோப்புகளைக் கையாளுவதைப் போன்று உணருவர்.
II. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1. ஓரே இடத்தில் உள்ள ஒரு பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றோரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2. பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்.
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
4. புரவலன்/புரவலர்(Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
31.
I. படிக்க மட்டும் நினைவகம் (ROM):
1. படிக்க மட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம்.இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்ய முடியாது .
2. ROMல் கணனியை துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்கள சேமிக்கப்படும்.
3. ஒரு முறைத் தரவுகளை இதில் எழுதிவிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் படிக்க மட்டும் முடியும்.
4. ROM ன் உள்ளடக்கம் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை. இதனால் ROM அழியா நினைவகம் என்று அழைக்கப்படுகிறது .
II. நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (Programmable Read-Only Memory - PROM):
1. நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும்.இதில் தரவுகளை ஒருமுறை மட்டும் எழுத முடியும்.
2. PROM-ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும், PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
3. PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவமாக தயாரிக்கப்படும், ஆனால் P R O Mல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி எழுதப்படுகின்றது. இந்த வகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
III. நிரலாக்கு அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EPROM) Erasable Programmable Read-Only Memory :
1. அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
2. EPROM -ல் தகவல்கள் புற ஊதா ஓளி செலுத்தும் வரை சேமித்து வைக்கப்படுகின்றன.புற ஊதா ஓளியை செலுத்தி EPROM- ன் உள்ளடக்கத்தை அழித்து, மீண்டும் வேறு நிரல்களை எழுதலாம்.
3. EPROM பொதுவாக தனியாள் கணினியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உற்பத்தியலார்கள் கணினியை வழங்கும் முன் PROM-ன் உள்ளடக்கத்தை மாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்க வேண்டியவற்றை அழிக்க முடியும்.
IV. மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EEROM)Electrically Erasable Programmable Read-Only Memory :
1. ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும் .
2. இதில் உள்ளத் தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். மற்றும் PROM வகையைபோலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது.
3. மற்ற வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.
32.
1. மையச் செயலகம் (CPU) தரவு நினைவகப் பதிவேடுகளையும் (MDR) மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் கொண்டுள்ளது.
2. நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கும் இடையே தேவையானத் தரவைத் தரவு நினைவகப் பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
3. நினைவக முகவரி பாட்டை - நினைவக இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது .
4. தரவுப் பாட்டை - தரவை மையச் செயலகத்திற்கும் நினைவகத்திற்கும் கொண்டு செல்ல உதவும்.
5. கட்டுப்பாட்டு பாட்டை-படிக்க மற்றும் எழுதும் செயலைக் கட்டுப்படுத்தும்.
6. படிக்கும் செயல் நினைவகத்திலிருந்து தரவை எடுத்து MDRக்கு கொண்டு செல்லும்.
7. ஓரே ஒரு கட்டுப்பாட்டு இணை 0 மற்றும் 1 மதிப்புகளை ஏற்று படித்தல்/ எழுதுதல் வேலைகளைச் செய்யும்.
8. எழுதுதல் செயல் தரவை MDRல் இருந்து நினைவகத்திற்கு கொண்டு செல்லும்.
9. RAMல் உள்ள வேர்டின் அளவும், நினைவகத் தரவு பதிவேட்டின் அளவும் ஒன்றாகும்.
10. நினைவக தரவு பதிவேட்டின் அளவு 8 பிட்டாக இருந்தால் நினைவகத்தில் இதை 8-பிட் அளவிலான ஒரு வேர்டுடன் இணைக்கலாம்.
11. நினைவகத் தரவு பதிவேட்டிலிருந்து ஒரு வேர்டிற்கும் அல்லது வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேட்டிற்கும் தரவு பரிமாற்றம் செய்ய தரவுப் பாட்டை 8 இணைக் கம்பிகள் கொண்ட கட்டுப்பாட்டின் (படிக்க அல்லது எழுத) அடிப்படையாகச் செயல்படுகிறது.
12. இந்த கட்டளை சமிக்கை R /W என்று பெயரிடப்பட்டிருக்கும். இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டைக் குறிக்கும்.

33.
படிநிலை 1: 2 மற்றும் 6- ஐ இருநிலைக்கு மாற்றவும்
2 ன் இருநிலை மதிப்பு 8 பிட் வடிவில் :00000010
6 ன் இருநிலை மதிப்பு 8 பிட் வடிவில் :00000110
படிநிலை 2: 2 ன் நிரப்பு முறை மதிப்பை கண்டுபிடித்தல் .
| 210 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 |
| 1 ன் நிரப்பி | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 1 |
| 2 ன் நிரப்பி | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 |
படிநிலை 3: -2 மற்றும் +6 க்கான கூட்டல் இருநிலை .
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | |||
| -210 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 0 | |
| +610 | 1 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 | |
| +410 (விடை ) |
1 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 |
↳ அதிகப்படியான பிட் எனவே விட்டு விட வேண்டும் .
ஃ -210 + 610 =+ 410
34.
படிநிலை 1: -21 மற்றும் 5யை இருநிலை எண் வடிவில் மாற்றுதல்:
| 2110 | ||||||||||||
| (1) 23 – 16 = 7 (2) 7 – 4 = 3 (3) 3 – 2 = 1 (4) 1 – 1 = 0 |
||||||||||||
2110 = 000101012 |
| 510 | ||||||||
510 = 000001012 |
படிநிலை 2:
| 2110 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 | 1 |
| 1ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 0 |
| 2ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
படிநிலை 3:
-21 மற்றும் 5க்கான இருநிலை கூட்டல்:
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | 1 | ||||
| -2110 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 510 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 |
| -1610 (விடை) | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
35.
36.
37.

\(\therefore \quad { \left( 1101011 \right) }_{ 2 }-{ \left( 111010 \right) }_{ 2 }={ \left( 110001 \right) }_{ 2 }\)
38.
\({ \left( 135 \right) }_{ 10 }={ \left( 10000111 \right) }_{ 2 }\)
| 135- க்கு நிகரான இருநிலை மதிப்பு (9bits) | 0 | 1 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 |
| 1-ன் நிரப்பி | 1 | 0 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 0 |
| குறைமதிப்பு பிட்டுடன் 1ஐ கூட்டுதல் | + | 1 | |||||||
| 2-ன் நிரப்பி | 1 | 0 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 |
-135 ன் 1'ன் நிரப்பி 101111000
-135 ன் 2'ன் நிரப்பி 101111001
39.
"2ன் தொடர் பெருக்கல் முறை" யைப் பயன்படுத்திப் கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை இருநிலை எண்ணாக மாற்றலாம்.
படிநிலை 1: மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை 2ஆல் பெருக்கி வரும் விடை மதிப்பின் முழு எண் பகுதியை தனியாக குறித்து வைக்க வேண்டும். முழு எண் பகுதி 0 அல்லது 1 ஆக மட்டுமே இருக்கும்.
படிநிலை 2: படிநிலை 1ல் கிடைக்கப்பெற்ற விடை மதிப்பின் முழு எண் பகுதியை, கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி எண்ணிலிருந்து கழித்து விட்டு, மீதமுள்ள மிதப்புப் புள்ளி மதிப்புகளை மீண்டும் 2ஆல் பெருக்கி,அதன் விடை மதிப்பின் முழு எண் பகுதியைத் தனியாக குறித்து வைக்கவும்.
படிநிலை 1: மட்டும் 2ஐ, இறுதி மதிப்பு 0 என வரும் வரையோ அல்லது தொடர்ந்து சில இலக்கங்கள் வரையோ மீண்டும், மீண்டும் பின்பற்ற வேண்டும்.
படிநிலை 2: படிநிலை 1 மற்றும் 2ன் படி தனியே எழுதி வைக்கப்பட்டுள்ள அனைத்து 0 மட்டும் 1-களை மேலிருந்து கீழாக எழுத வேண்டும். இதுவே கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி எண்னுக்கு நிகரான இருநிலை எண் ஆகும்.

விடையாகக் கிடைக்கப்பெற்ற அனைத்து, முழு எண்களையும், மேலிருந்து கீழாக எடுத்து எழுதவும். அதுவே, கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி எண்னுக்கு நிகரான இருநிலை எண் ஆகும்.
(0.25)10=(0.01)2
40.
| கணிப்பொறியின் தலைமுறை |
காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் |
நிறை / குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை |
1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes ) |
1.அளவில் பெரியது. |
| இரண்டாம் தலைமுறை |
1955-64 | திரிதடையகம் (Transistors ) |
1.முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. eg :IBM 1620,UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை |
1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC ) |
1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது . |
| நான்காம் தலைமுறை |
1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1. சிறியது மற்றும் வேகமானது. 2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது . 3. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின . |
| ஐந்தாம் தலைமுறை |
1980-இன்று வரை | மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் Ultra Large Scale Integration (ULSI) |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3.கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது . 4. நிழற்பட்டங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன். 5.செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் . |
| ஆறாவது தலைமுறை |
எதிர் காலத்தில் | செயற்கை அறிவு | 1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. 2.கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும். 3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல். 4. இயற்கை மொழிச் செயலாக்கம். 5. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல். |
41.

உள்ளீட்டகம் :
உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது .எ.கா : விசைப்பலகை,சுட்டிப் போன்றவை.
மையச் செயலகம்:
1. மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும். இது தரவை உள்ளீடாகப் பெற்று கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
2. மையச்செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
i. கட்டுப்பாட்டகம்
ii. கணித ஏரணச் செயலகம்
iii. நினைவகம்.
(CU-Control Unit), கணித ஏரணச் செயலகம் (ALU- Arithmetic and Logic Unit ) மற்றும் (MU-Memory Unit ) நினைவகம் ஆகும்.
கணித ஏரணச் செயலகம் :
மையச்செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம். பல கணிப்பீட்டு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் மற்றும் சுருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது .
கட்டுப்பாட்டகம் :
மையச்செயலகம்-நினைவகம் மற்றும் உள்ளீடு /வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
வெளியீட்டகம்:
பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும்.
எ .கா: திரையகம்,அச்சுப்பொறி.
நினைவகம்:
தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.எ.கா: RAM தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம்நிலை நினைவகம் பயன்படுகிறது.
எ .கா : வன்வட்டு, CD-ROM.
42.
1. முகவரிப் புத்தகம் என்பது கணினிப் பயனருக்காக, பயனர் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறத் தொட்ர்புத் தகவல்கள் சேமிக்கப்பட்ட ஒரு தரவுத்தளம் ஆகும்.
2. முகவரிப் புத்தகம் மூலத்தரவு எனவும் அறியப்படுகிறது.
3. ஒரு மூலத்தரவு என்பது அஞ்சல் பட்டியலைத் தருவிக்கப் பயன்படும் பெயர்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கியத் தரவுத்தளம் அல்லது மற்றத் தகவல்களின் பதிவுகளாகும்.
4. ஓப்பன் ஆஃபீஸ் மெயில் மெர்ஜில் அட்டவணைத்தாள் உரை ஆவணங்கள் MySQL ,Adabas மற்றும் ODBC போன்ற தரவுத்தளங்கள் போன்ற பல்வேறு வகையில் மூலதரவுகளை அணுக முடியும்.
5. ஓப்பன் ஆஃபீஸ் பொதுவாக அட்டவணை வடிவில் உள்ள முகவரித் தரவுகள் மூலத்தரவாக உருவாக்கப்படுகின்றன.
6. ஓப்பன் ஆஃபீஸ் உள்ள Mailmerge Wizard மூலம் மெயில் மெர்ஜ்-க்கான ஆவணத்தை உருவாக்கும் போது, ஏற்கனவே உள்ள முகவரிப் பட்டியலைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய முகவரிக் கோப்பை உருவாக்கலாம்.
43.
1. அட்டவணையிலுள்ள தரவிற்கு கணக்கீடு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற தரவுகளுடன் ஒரு அட்டவணையை உருவாக்குக.
| விற்கப்பட்ட பொருள்கள் |
ஜனவரி | பிப்ரவரி | மொத்தம் |
|---|---|---|---|
| புத்தகங்கள் | 15 | 70 | |
| பேனாக்கள் | 30 | 50 | |
| அளவுகோல் | 25 | 25 | |
| மொத்த பொருள்கள் |
2. எந்த சிற்றரையில் கணக்கீடு செய்ய வேண்டுமோ அதில் கிளிக் செய்யவும்.
3. Table → Formula என்ற கட்டளை அல்லது F2 கிளிக் செய்தால்,அட்டவணைச் செயலியில் உள்ளது போன்ற Formula உள்ளீட்டு பகுதியுடன் கூடிய கருவிப்பட்டை தோன்றும்.
4. சிற்றரை B2 விலிருந்து B4 வரை ஒரு குழுவாக தேர்வு செய்ய, தற்போதைய சிற்றரையில்
=< B2 : B4> என்று தட்டச்சு செய்து Enter சாவியை அழுத்தவும். கீழே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் உள்ள மொத்த எண்ணிக்கை உடைய அட்டவணை தோன்றும்.
| விற்கப்பட்ட பொருள்கள் |
ஜனவரி | பிப்ரவரி | மொத்தம் |
|---|---|---|---|
| புத்தகங்கள் | 15 | 70 | |
| பேனாக்கள் | 30 | 50 | |
| அளவுகோல் | 25 | 25 | |
| மொத்த பொருள்கள் | = |
| விற்கப்பட்ட பொருள்கள் |
ஜனவரி | பிப்ரவரி | மொத்தம் |
|---|---|---|---|
| புத்தகங்கள் | 15 | 70 | = |
| பேனாக்கள் | 30 | 50 | |
| அளவுகோல் | 25 | 25 | |
| மொத்த பொருள்கள் | 70 |
5. கணக்கீடு செய்யப்படும் தனிப்பட்ட சிற்றரைகளின் பெயரை '<>' என்ற அடைப்புக் குறியில் அமர்த்த வேண்டும்.
6. அட்டவணை அமைப்பில் நெடுவரிசைகள் A,B,C....... என்றும் வரிசைகள் 1,2,3,.....என்ற எண்ணிலும் பெயரிடப்பட்டிருக்கும் . உதாரணமாக முதல் சிற்றரை A1,B1 ...... போன்று பெயரிடப்பட்டிருக்கும்.
7. மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்கப்பட்ட புத்தகங்ளின் கூட்டுத்தொகை கணக்கீடு செய்ய =
44.
சேர்க்கப்பட்ட படத்தின் வடிவூட்டத்தை மாற்ற ரைட்டரில் உள்ள Picture கருவிப்பட்டை உதவுகிறது. படத்தின் மேல் கிளிக் செய்தால் Picture கருவிப்பட்டை தோன்றும்.இதன் உதவியுடன் படத்தின் அளவு மாற்றலாம். எல்லைகளை அமைக்கலாம். படத்தின் உயரம் மற்றும் அகலம் பின்னணி போன்ற பல்வேறு வடிவூட்டல்களை படத்திற்கு செய்யலாம்.
1. படத்தின் நான்கு மூலைகளை கிளிக் செய்து இழுத்தால் அதன் அளவை பெரிதாக்க மற்றும் சிறிதாக்க முடியும்.
2. Crop விருப்பத்தை தேர்வு செய்தால் Cropping கைப்பிடிகள் தோன்றும். இவற்றை கிளிக் செய்து இலுத்தால் படத்தை வேண்டிய அளவிற்கு வெட்டலாம்.
3. Crop கட்டளையை கிளிக் செய்தால் Crop கருவி தேர்வு நீக்கப்பட்டுவிடும்.
4. Default கீழிறங்கு பெட்டியில் அம்புகுறியை கிளிக் செய்தால் Black and White, Grey and Scale அல்லது Water Mark ( Background) போன்ற விருப்பங்கள் தோன்றும். இதில் Default விருப்பம் அசல் படத்தை காட்டும்.
5. Flip Horizontally பணிக்குறியைக் தேர்வு செய்தால் படம் கிடைக்கை திசையில் புரட்டப்பட்டிருக்கும்.
6. Flip Vertically பணிக்குறியைக் தேர்வு செய்தால் படம் கிடைக்கை திசையில் புரட்டப்பட்டிருக்கும்.
7. Transparency பணிக்குறி உதவியுடன் படத்தின் தோற்றத் தெளிவை சதவீதத்தில் ( % ) மாற்றலாம்.
45.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
46.
ஒரு பக்கத்தின் இடது மற்றும் வலது ஓரத்திற்கும் இடையே உள்ள தூரம் உள்தள்ளல் எனப்படும். உள்தள்ளல், ஒரு பத்தியை படிப்பதற்கு எளிமையாகவும் மற்றும் படிப்பதற்கு தூண்டுவதாகவும் உள்ளது. நான்கு வகையான உள்தள்ளல்கள் உள்ளன:
1. இடது புற உள்தள்ளல்- இடது ஓரத்திலிருந்து பத்தி அமைந்துள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்தும்.
2. வலதுபுற உள்தள்ளல்- வலது ஓரத்திலிருந்து பத்தி அமைந்துள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்தும்.
3. முதல்வரி உள்தள்ளல்- பத்தியின் முதல் வரியை உள்தள்ளும்.
4. தொங்கும் உள்தள்ளல்- ஒரு சிறப்பு உள்தள்ளல். பத்தியின் முதல் வரியானது இதர வரிகளைக் காட்டிலும் இடது ஓரத்திலிருந்து வெளியே இருக்கும்.
(i) உரையை உள் தள்ளிட Format \(\rightarrow \)Paragraph என்றக் கட்டளையைத் தேர்வு செய்து பின் Indents & Spacing தத்தலைத் தேர்வு செய்யவும்.
(ii) Before text சுழல் பெட்டியில் இடது உள்தள்ளளுக்கான அளவைத் தட்டச்சு செய்யவும். Increase Indent பணிக்குறி மூலமும் இடது உள்தள்ளலைச் செய்யலாம்.
(iii) ஒவ்வொரு முறை பணிக்குறியை கிளிக் செய்தால் பத்தி இடது ஓரத்திலிருந்து 1/2 அங்குலம் உள்ளே நகர்த்தப்படும்.
(iv) After text சுழல் பெட்டியில் வலது உள்தள்ளலுக்கான அளவைத் தட்டச்சு செய்யவும்.
(v) First Line தேர்வில்,ஒரு நெர்மதிப்பைத் தட்டச்சு செய்தால் பத்தியின் முதல் வரியை மட்டும் உள் தள்ள முடியும்.
(vi) First Line தேர்வில்,ஒரு எதிர்மதிப்பைத் தட்டச்சு செய்தால் தொங்கும் உள்தள்ளல் தோன்றும். பத்தியின் முதல் வரியானது இதர வரிகளைக் காட்டிலும் இடது ஓரத்திலிருந்து வெளியே இருக்கும்.
47.
சொற்செயலியின் ஒரு முக்கியப் பணி பக்க வடிவூட்டலாகும்.
1. பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம்,பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும்.
2. ரைட்டரில் பல்வேறு பக்க வடிவூட்டல் தேர்வுகள் Page style உரையாடல் பெட்டியின் மூலம் செய்யப்படுகிறது.
3. Format \(\rightarrow \)Page என்றக் கட்டளையின் மூலம் Page style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
1. பக்க அளவு மற்றும் பக்க அமைவை மாற்று:
1. Page style உரையாடல் பெட்டியில், Page தொகுதியைத் தேர்வு செய்யவும்.
2. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது Width மற்றும் Height என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
3. Orientation குழுவில் Portrait அல்லது Landscape பொத்தானைத் தேர்வு செய்து பக்கத்தின் அமைவை மாற்றலாம்.
2. பக்கத்தின் நிறத்தை மாற்று:
Page style உரையாடல் பெட்டியில் உள்ள Background தொகுதியிலுள்ள Color கீழிறங்கு பெட்டியைக் கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு அல்லது "graphic" தேர்வு செய்தால் பக்கத்தின் பின்னணியில் வண்ணம் அல்லது படத்தைச் சேர்க்கலாம்.
3. எல்லையை மாற்று:
Page style உரையாடல் பெட்டியிலுள்ள Borders தொகுதியைத் தேர்வு செய்து.பயனர் வரையறுத்த பகுதியில் உள்ள எல்லைகளின் அளவு. எல்லைக் கோடுகளின் பாணி எல்லைகளின் நிறம் ஆகியவற்றை மாற்றியமைக்கலாம்.
4. தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளைச் சேர்க்க:
Insert \(\rightarrow \)Header\(\rightarrow \)Default என்ற கட்டளையைப் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்யவும்.
1. தற்போது தலைப்பு பகுதியும், பணியிடத்தில் தட்டச்சு செய்த பகுதியும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருக்கும்.
2. தலைப்பு பகுதியில் நேரடியாகவே தலைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது Insert \(\rightarrow \)Fields\(\rightarrow \)Title என்ற கட்டளையைத் தேர்வு செய்து தலைப்பை தட்டச்சு செய்யலாம்.
3. Insert \(\rightarrow \)Footer\(\rightarrow \)Default என்ற கட்டளையைத் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்தால் அடிக்குறிப்பு உருவாகும்.அடிக்குறிப்பில் செருக்கும் புள்ளியை வைத்து கிளிக் செய்யவும்.
4. Select Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \) Date என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் எல்லா பக்கங்களிலும் கணிப்பொறியின் தேதி புகுத்தப்படும்.
48.
ஒரு பத்தியின் வரிகள் தட்டச்சு செய்யப்படும் பக்கத்தின் எந்த திசையில் (இடது அல்லது வலது ) அமைய வேண்டும் என்பது பத்தி இசைவு எனப்படும். ஒவ்வொரு பத்தியின் அமைவையும் பத்தி இசைவு கட்டுப்படுத்துகிறது. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில்
1. இடது (Left)
2. வலது (Right)
3. மைய (Center)
4. நேர்த்தி (Justify)
என்ற நான்கு வகையான இசைவுகள் உள்ளன.
1. Format \(\rightarrow \)Paragraph கட்டளையைப் பயன்படுத்தினால் வரும் பத்தி உரையாடல் பெட்டி மூலம் பத்தி வடிவூட்டலை செய்யலாம்.
2. பத்தி இசைவு பணிக்குறிகள் மற்றும் குறுக்கு வழி சாவிகள் மூலம் மாற்றுதல் :
| இசைவு | செயல் | பணிக்குறி | குறுக்கு வழிச்சாவி |
|---|---|---|---|
| இடது | இடது இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+L |
| வலது | வலது இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+R |
| மையம் | மைய இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+E |
| நேர்த்தி | நேர்த்தி இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+J |
49.
1. தலைப்பு என்பது ஒரு பக்கத்தின் மேல் பகுதியைக் குறிக்கும். தலைப்புப் பகுதியில் தலைப்பு மற்றும் நூலாசிரியர் பெயர் போனற்வற்றைச் சேர்க்கலாம்.
2. அடிக்குறிப்பு என்பது ஒரு பக்கத்தின் கீழ்பகுதியைக் குறிக்கும். அடிக்குறிப்பில் பக்க எண்கள்,தேதி, நேரம் போன்றவற்றைச் சேர்க்கலாம். இவ்வாறுச் சேர்க்கப்பட்ட, தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் எல்லா பக்கங்களிலும் தோன்றும்.
3. செருகும் புள்ளியை அடிக்குறிப்பில் கொண்டு சென்று கிளிக் செய்யவும்.
4. Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \)Page Number என்ற கட்டளையைப் பயன்படுத்தினால் எல்லா பக்கங்களிலும் பக்க எண்கள் சேர்க்கப்படும்.
அடிக்குறிப்பில் உள்ள பக்க எண்களை வடிவூட்டம் செய்ய.
1. Format \(\rightarrow \)Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page style உரையாடல் பெட்டி தோன்றும்.
2. இதில் Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. Layout Settings-ல் தோன்றும் Format, கீழிறங்கு பட்டிப் பெட்டியில் உள்ள விருப்பமான வடிவூட்டல் வகையைத் தேர்வு செய்து, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
50.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards