11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 Second Full Test
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் எந்த சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடியும்போது அழைக்கப்படும்?
ஆக்கி
அழிப்பி
உறுப்பு செயற்கூறு
தரவு உறுப்பு
2.
பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
class vehicle
{ int wheels;
public:
void input_ data(float,float);
void output_data( );
protected:
int passenger;
};
class heavy_vehicle : protected vehicle {
int diesel_petrol;
protected:
int load;
protected:
int load;
public:
voidread data(ftoat,ftoat)
voidwrite_data( ); };
class bus: private heavy_vehicle {
charTicket[20];
public:
void fetch_data(char);
voiddisplay_data( ); };
};
bus இனக்குழுவின் பொருள், அணுக கூடிய தரவு உறுப்பு செயற்கூறுகளை குறிப்பிடுக.
input_data( )
read_data( ), output data ( ) write_data( )
fetch_data( )
all of these display_data( )
3.
பின்வருவனவற்றுள் கட்டுருக்களில் அறிவிக்கப்படும் மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தரவினம்
தரவு உறுப்பினர்கள்
செயற்கூறுகள்
செயற்குறிகள்
4.
செய்தி அல்லது தரவினை ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் செயலாக்கவல்ல செயற்கூறின் திறனை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
செயற்கூறு பணிமிகப்பு
செயற்குறி பணிமிகப்பு
உறை பொதியாக்கம்
இவற்றில் ஏதும் இல்லை
5.
ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க கூடியது
கோவைகள்
செயற்கூறுகள்
பாய்வு கட்டுபாடு
செயற்குறிகள்
6.
ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?
தரவு மிகைமை
மறுபயனாக்கம்
மாற்றம்
தொகுத்தல்
7.
C++ என பெயர் சூட்டியவர் யார்?
ரிக் மாஸ்கிட்டி
ரிக் பிஜர்னே
பில் கேட்ஸ்
டென்னிஸ் ரிட்சி
8.
தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
\({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)
11
10
9
8
9.
10.
பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை எது?
மிதிவண்டி பாகங்களை இணைத்தல்
மிதிவண்டியை விவரித்தல்
ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்.
ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்
11.
எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?
windows 7
windows 8
windows 10
MS-Dos
12.
NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது
NOT(OR)
NOT(AND)
NOT(NOT)
NOT(NOR)
13.
கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது
கோப்புகள்
கோப்புறைகள்
அடைவு அமைப்புகள்
இவை அனைத்தும்
14.
CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?
தொகுதி
பகுதி
பிட்ஸ்
தடங்கள்
15.
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
16.
எப்போது உறுப்பு செயற்கூறு அணுக பொருளானது தேவைப்படாது?
17.
While மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
18.
கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
int main()
{
int num[5]={10, 20, 30, 40, 50};
int t=2
cout << num[2] << endl;
cout <<num[3+1] << endl;
cout << num[t=t+1];
}
19.
உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.
20.
அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?
21.
பதின்ம , இருநிலை , எண்ணிலை எண்களுக்கான பட்டியல் இடு.
22.
ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக
23.
நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?
24.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
25.
கோணத்தின் கொள்ளவை கண்டுபிடிப்பதற்கான C++ நிரலை எழுதுக.
26.
Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.
27.
செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.
28.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.
29.
பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.
30.
LCM மற்றும் GDC போன்றவற்றை கணக்கிடுவதற்கான நிரல்களை எழுதுக.
31.
பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக
32.
ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.
33.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
34.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
35.
உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.
36.
மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்?
37.
முன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?
38.
“=” மற்றும் “==” வேறுபடுத்துக.
39.
40.
பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.
41.
தரவு மற்றும் தகவல் விவரி.
42.
ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)
43.
டிமார்கன் தேற்றங்களை எழுதுக.
1.
(b)
அழிப்பி
2.
(c)
fetch_data( )
3.
(b)
தரவு உறுப்பினர்கள்
4.
(a)
செயற்கூறு பணிமிகப்பு
5.
(b)
செயற்கூறுகள்
6.
(b)
மறுபயனாக்கம்
7.
(a)
ரிக் மாஸ்கிட்டி
8.
(a)
11
9.
(b)
10.
(d)
ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்
11.
(d)
MS-Dos
12.
(a)
NOT(OR)
13.
(d)
இவை அனைத்தும்
14.
(c)
பிட்ஸ்
15.
(c)
திரையகம்
16.
ஒரு உறுப்பு செயற்கூறானது அதே இனக்குழுவின் உள்ள மற்றொரு உறுப்பு செயற்கூற்றை அணுக பொருளானது தேவையில்லை.
17.
while ( நிபந்தனை சோதிப்புக் கோவை)
{
மடக்கின் உடற்பகுதி ;
}
கூற்று -x;
18.
வெளியீடு:
30
50
40
19.
(i) உள்ளமை மாறி , ஒரு தொகுதிகள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிகள் இருக்கும்.
(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.
(iii) ஓர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.
(iv)நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது , அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன.வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.
20.
i) தரவு
ii) மாறிகள்
iii) கட்டுப்பாடு ஓட்டம்
iv) செயல்கள்.
21.
| பதின்ம எண் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| இருநிலை எண் | 0000 | 0001 | 0010 | 0011 | 0100 | 0101 | 0110 | 0111 | 1000 | 1001 |
| எண்ணிலை எண் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 10 | 11 |
22.
| வ.எண் | நிபந்தனை | கூற்று |
|---|---|---|
| 1 | இரண்டு வெளியேறும் அம்புக் குறிகளையுடைய ''கூசரந'' மற்றும் ''குயடளந'' என்ற விவரத்தினுக்குகளை கொண்ட ஒரு வைர வடிவ பெட்டியின் உளளே குறிப்பிடப்பட்டுள்ளது | வெளியேறும் ஒற்றைக் அம்புக் குறியுடன் தோன்றும் ஒரு செவவ்க பெட்டியிலுள்ள ஒரு கூற்று அடுத்து இயக்கப்படும் |
| 2 | ![]() |
![]() |
23.
1.நினைவகத்தின் எந்தப் பகுதியைதற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.
2.நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறைமற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.
3.முதன்மைநினைவகத்தில், நிரல்களுக்கு தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல்.(பயனற்ற தரவுகளின் தொகுப்பு)
24.
i) மையச்செயலகம் - நினைவகம் மற்றும் உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
25.
formula = 4/3 πr3
.#include < iostram.h. >
void main ()
{
float r;
cout < "\n enter the value of r";
cin >> r;
cout << "\n volume of sphere is" << ( 4/3*3.4*r*r*r);
}
26.
ஒரு செயற்கூறை அழைக்கும் கூற்று நிரல் பெயர்ப்பியை செயற்கூறுக்கு (வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அடுக்கங்களில் (STACKS) சேமிக்க்கப்படும்) தாவச் செய்து மற்றும் செயற்கூறு செயல்பாட்டின் பின் அழைப்புக்கூறுக்கு அடுத்திருக்கும் கட்டளைக்குத் தாவச்செய்கிறது. இதனால் நிரலின் இயக்க நேரத்தின் வேகம் குறையும். சிறிய செயற்கூறின் வரையறுப்புக்கு அடுக்கங்களைப் பயன்படுத்துவதை குறைக்க Inline செயற்கூறுகள் பயன்படுத்தலாம்.
inline செயற்கூறு மூல நிரலில் சாதாரணச் செயற்கூறு போன்றே தோற்றமளிக்கும். ஆனால் செயற்கூறின் கட்டளைகள் முழுமையும் அழைப்புக் கூற்றுக்குப் பதிலாக அப்படியே நிரலில் செருகப்பட்டுவிடும். Inline சிறப்புச் சொல்லை செயற்கூறின் தலைப்பில் இணைத்து அந்த செயற்கூறை inline செயற்கூற்றாக மாற்ற முடியும்.
தொடரியல்: inline <திருப்பி அனுப்பும் வகை> <செயற்கூறின் பெயர் (தரவு வகை அளபுருக்களின் பெயர் 1... தரவு வகை அளபுருக்களின் பெயர் N -வரை)>
inline செயற்கூற்றுகளின் நன்மைகள்:
(i) inline செயற்கூறுகள் வேகமாக செயல்படும் ஆனால் அதிக நினைவக இடத்தை எடுத்துக் கொள்ளும்.
(ii) அடுக்கங்களை பயன்படுத்தும் போது உள்ள சிக்கல்பாட்டினைக் குறைக்கிறது.
நிரல்:
#include < iostream >
using namespace std;
inline float simpleinterest(float p1,float n1, float r1)
return(si 1);
}
int main ()
{
float si, p,n,r;
cout << "\nEnter the Principle Amounts Rs.:";
cin >>p;
cout << "\nEnter the Number of Years:";
cin>>n;
cout << "\nEnter the Rate Interest:";
cin >>r;
si=simpleinterest(p,n,r);
cout << "\n The Simple Interest=Rs." << si;
return 0;
}
27.
#include< string.h >
#include< iostream >
using namespace std;
class strings
{
public:
char s[20];
void getstring( char str[])
{
strcpy(s,str);
}
void operator+(strings);
};
void strings::operator+(strings ob)
{
strcat(s,ob.s);
cout << "\nConcatnated String is:" << s;
}
int main( )
{
strings ob 1, ob 2;
char string 1[10], string2[10];
cout << "\nEnter First String:";
cin >> string 1;
ob1.getstring(string 1);
cout << "\nEnter Second String:";
cin >> sting2;
ob2.getstring(string2);
//Calling + operator to Join/Concatenate strings
ob1+ob2;
return 0;
}
Enter First String:COMPUTER
Enter Second String:SCIENCE
Concatenated String is:COMPUTERSCIENCE
28.
மறுபயனாக்கம் (RE- usability): ஒரு முறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் இனக்குழு பயன்படுத்தி இதை நிறைவேற்றலாம்.
மிகைமை (Redundancy):
மரபுரிமம் தரவு மிகைமைக்கு சிறந்த சான்றாகும். பல இனக்குழுக்களுக்கு வேவையான ஒரே செயல்பால்பாட்டை ஒரு பொது இனக்குழுவின் மூலம் வரையறுத்து அவற்றை மரபுரிமம் தருவிக்கப்பட்ட இனக் குழுவின் மூலம் தருவித்துக்கொள்ளலாம்.
எளிய பராமரிப்பு (Easy Maintenance) : ஏற்கனவே இருக்கும் குறிமுறையில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய பொருளை உருவாக்க முடியும். மேலும் இதை பராமரிப்பது மாற்றங்கள் செய்வதும் எளிது.
பாதுகாப்பு (Security): தரவு மறைப்பு மற்றும் அருவமாக்கம் தேவையான தரவுகளை மட்டும் கொடுப்பதால் தரவு பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் தீமைகள் (Disadvantages of OOP )
அளவு (Size ): பொருள் நோக்கு நிரலானது மற்ற நிரல்களை விட அளவில் பெரியது.
உழைப்பு (Effort) : பொருள் நோக்கு நிரலை உருவாக்குவதற்கு அதிக உழைப்பு வேவைப்படுகிறது.
வேகம் (Speed): பொருள் நோக்கு நிரல்கள் அதிக அளவின் காரணமாக பிற நிரல்களை விட மெதுவாக செயல்படுகிறது.
29.
(i) private காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் பொது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.

(ii) protected காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு protected என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected மற்றும் public உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாக கருதப்படுகின்றன.

(iii) public காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன.

30.
நிரல்:
# include < iostream.h >
using namespace std;
int main ( )
{
int n1,n2, a ,b,god,1 cm;
cout << " enter two numbers" << endl;
cin >> n1 >> n2;
a = n1;
b = n2;
while (n1 ! = n2 )
{ if (n1 > n2 )
n1 =n1 -n2;
else
n2 n2-n1;
}
god = n1;
cout << '' GOD=" << god << endl;
1 cm = (a*b) / god;
cout << " LCM =" << 1cm;
reeturn 0 ;
}
31.
1. Start மற்றும் END என்று குறிக்கப்பட்ட சிறப்பு பெட்டிகள் ஒரு இயக்கத்தின் மற்றும் முடிவை குறிப்பிடப் பயன்படுகிறது
2. உள்ளீடு மற்றும் வெளியிடுகள், நாற்கர வடிவ பெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
3. வெளியேறும் ஒற்றை அம்புக்குறியுடன் தோன்றும் ஒரு செவ்வகபெட்டியிலுள்ள கூற்று அடுத்து இயக்கப்படும்
4. கட்டுப்பாட்டு கூற்று இரண்டு வெளியேறும் அம்புக்குறிகளை ''true'' மற்றும் ''flase'' என்ற விவரத் துணுக்குகளை கொண்ட ஒரு வைரவடிவ பெட்டியின் உள்ளேகுறிப்பிடப்பட்டுள்ளது
'5. 'true'' என்ற குறிக்கப்பட்ட அம்புக்குறி , கொடுக்கப்பட்ட நிபந்தனை மெய் எனில் , இயக்கப்பட்ட வேண்டிய அடுத்த பெட்டியைகுறிக்கும்
'' false'' என்ற குறிக்கப்பட்ட அம்புக்குறி , கொடுக்கப்பட்ட நிபந்தனை பொய் எனில் , அடுத்து இயக்கப்பட்ட வேண்டிய அடுத்த பெட்டியைகுறிக்கும்
32.
நெறிமுறை வடிவமைப்பாளருக்கும் மற்றும் நெறிமுறைபயனர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தமாக ஒரு நெறிமுறை குறிப்பிடப்படுகிறது, ஏனென்றால் வடிவமைப்பாளர் மற்றும் பயனரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அது வரையறுக்கிறது.
i) உள்ளீடுகளின் தேவையான பண்புகளை திருப்திப்படுத்துவது பயனரின் பொறுப்பு, ஆனால் அது வடிவமைப்பாளரின் உரிமை.
ii) விரும்பிய உள்ளீடு -வெளியீடு உறவு வடிவமைப்பாளரின் பொறுப்பு மற்றும் பயனரின் உரிமை.
iii) பயனர் உள்ளீடுகளின் பண்புகளை முக்கியமாக, திருப்திசெய்யாவிட்டால், விரும்பியஉள்ளீடு வெளியீடு உறவைதிருப்தி செய்யவடிவமைப்பாளரின் கட்டளையிலிருந்து விடுபடலாம்.

33.
1.டிஜிட்டல் பிணையம்(இணைய தளம் / உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்டதரவுகளை, பயன்பாட்டுக்கு இந்தஅம்சம் கவனித்து கொள்கிறது.
2.பரவல்இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் வசிக்கும் கோப்புகளையும் அணுகுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவை கையாளமுடியும். பயனர்கள் தங்கள் சொந்தகணினியில் கோப்புகளை கையாளும் போது உணருவர்.
முக்கிய இயக்க அமைப்பு பின்வருமாறு:
1.யுனிக்ஸ் 2.மைக்ரோசாஃப்ட்வின்டோஸ் 3.லினக்ஸ் 4.டைளு 5.அண்ட்ராய்டு
1.நவீன இயக்க அமைப்புகள் ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தை(முருஐ ) பயன்படுத்துகின்றன.முருஇ-யின் பனிக்குறிகள், பொத்தன்கள், மெனுக்கள் போன்ற எல்லாவற்றையும் தெளிவாகவரைகலையில்(கிராபிக்ஸ்) மற்றும் உரைஉறுப்புகளின் (text elements)வகையைப் பயன்படுத்தி திரையில் கட்டபடுவதை கிளிக் செய்யப்பயன்படுகின்றன.
2.இயக்க அமைப்பு ஓர் வணிகதனி உரிமம் கொண்டதாகவும் அல்லது திறந்தமூலமாகவோ இருக்கலாம்.
3.ஒவ்வொரு இயங்குதளத்தின் வரைகலைபயனர் இடைமுகம் வெவ்வேறு தோற்றம் மற்றும் உணர்வைக்கொண்டுள்ளது, எனவே நாம் வேறு இயக்க அமைப்புக்கு மாற்றினால், இது முதலில் அறிமுகமில்லாததாகதோன்றலாம். இருப்பினும், நவீன இயக்க அமைப்புகள் பயன்பாட்டிற்கு எளிதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் பின்வருமாறு:
1. ஒரே இடத்தில் உள்ள பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றொரு இடத்த்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2.பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது
4.பரவலான/புரவலர்(ழடிளவ) கணினியில் உள்ள சுமையைகுறைக்கிறது
34.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, கணிப்பொறித் துரையின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. பல்வேறு வடிவமைப்பு கட்டங்களின் அடிப்படையில் கணிப்பொறிகளை பல தலைமுறைகளாக வகைப்படுத்தலாம்.
1. கணிப்பொறியின் தலைமுறை : முதலாம் தலைமுறை
காலம் : 1942-1955
பயன்படுத்திய முதன்மைபொருள் : வெற்றிடக் குழல் (Vaccum tude)
நிறை/குறை :
i) அளவில் பெரியது
ii) அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்டது.
iii) அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும்.
iv) இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது.
v) முதல் தலைமுறை கணிப்பொறிகள் - ENIAC, EDVAC, UNIVAC 1, ENAIC -27 டன் எடை, பரப்பளவு 8 x 100 x 3 அடி, மின்சாரத் தேவை 150 வாட்கள்.
2. கணிப்பொறியின் தலைமுறை : இரண்டம் தலைமுறை
காலம் : 1955-1964
பயன்படுத்திய முதன்மைபொருள் : திரிதடையகம்
நிறை/குறை :
i) முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
ii) குறைந்தவெப்பத்தை உருவாக்கியது.
iii) துளையிட்ட அட்டை, உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
iii) முதல் இயக்க அமைப்பு (Operating system) உருவாக்கப்பட்டது. தொகுப்பு செயலாக்க அமைப்பு (Batch Processing and multiprogramming operating system)
iv) இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது.
v) இரண்டாம் தலைமுறை கணிப்பொறிகள் - IBM 1401, IBM 1620, UNIVAC 1108
3. கணிப்பொறியின் தலைமுறை : மூன்றாம் தலைமுறை
காலம் : 1964-1975
பயன்படுத்திய முதன்மைபொருள் : ஒருங்கிணைந்தசுற்றுகள் Integrated Circuits (IC)
நிறை/குறை :
i) கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் அதிக நம்பகத் தன்மையுடையது.
ii) குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
iii) உயர் நிலை மொழி பயன்படுத்தப்பட்டது.
மூன்றாம் தலைமுறை கணிப்பொறிகள் - IBM 360 series, Honeywell 6000 series
4. கணிப்பொறியின் தலைமுறை : நான்காம் தலைமுறை
காலம் : 1975-1980
பயன்படுத்திய முதன்மைபொருள் : நுண் செயலி (மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI)
நிறை/குறை :
i) சிறியது மற்றும் வேகமானது
ii) IBM மற்றும் APPLE போன்ற ண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது
iii) கையடக்ககணிப்பொறிகள் அறிமுகமாகின
5. கணிப்பொறியின் தலைமுறை : ஐந்தாம் தலைமுறை
காலம் : 1980-இன்று வரை
பயன்படுத்திய முதன்மைபொருள் : (மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Ultra Large Scale Integration (ULSI)
நிறை/குறை :
i) இணைசெயலாக்கம் (Parallel processing)
ii) மீ -கடத்தி
iii) கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது.
iv) நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களைப்புரிந்து கொள்ளும் திறன்.
v) தீர்மானத்தில் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
6. கணிப்பொறியின் தலைமுறை : ஆறாவது தலைமுறை
காலம் : எதிர் காலத்தில்
பயன்படுத்திய முதன்மைபொருள் : அறிவு சார்ந்தகணிப்பொறிகள்
நிறை/குறை :
i) இணைமற்றும் பகிர்வு கணிப்பீடு
ii) கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
iii) செயற்கைமனிதர்கள் (சுடிடெவள) உருவாக்குதல்
iv) இயற்கைமொழி செயலாக்கம்
v) குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல்.
35.
| உள்ளார்ந்த அழைப்பு | வெளிப்படையான அழைப்பு |
|---|---|
| இந்த முறையில் எப்பொழுதெல்லாம் பொருள் உருவாக்கப்படுகிறதோ அப்பொழுது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது | இந்த முறையில் ஆக்கியின் பெயரை வெளிப்படையாக கொடுக்கும்போது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி அழைக்கப்படுகிறது. அதனால் பொருளை உருவாக்கி தொடங்கி வைக்க முடிகிறது. |
| எடுத்துக்காட்டு: simple s1 (10, 20); இதில் s1 என்ற பொருளை உருவாக்கும்போது அளபுருவை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது. | எடுத்துக்காட்டு: simple s1 = simple(10,20); //வெளிப்படையான அழைப்பு. |
36.
மரபுரிமத்தின் நன்மைகளாவன:
(i) இது நடைமுறை வாழ்வில் உள்ள உறவு நிலையை சிறப்பாக எடுத்துக்காட்ட உதவுகிறது.
(ii) நிரல் குறிமுறையின் மறுபயனாக்கத்தை சாத்தியமாக்கி உள்ளது.
(iii) இது மாற்றங்களை ஆதரிக்கும்.
37.
மாறியில் தொடக்க மதிப்பிருந்தும் வடிவில் முன்னியல்பு மதிப்பு தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
void defaultvalue (int n1 = 10, n2 = 100);
ஒரு செயற்கூறின் அழைப்புக் கூற்றில் சில செயலுறுப்புகளை விட்டுவிடவோ அல்லது செயலுருபுக்கள் இல்லாமல் அழைக்கவோ முன்னியல்பு செயலுருபுக்கள் வழி வகுக்கின்றன.
எடுத்துக்காட்டு :
defaultvalue (x, y);
defaultvalue (200, 150);
defaultvalue (150);
default value (x, 150);
முன்னி யல்பு மதிப்புகள் செயற்கூறு முன்வடிவில் செயலுருபுப் பட்டியலில் இறுதியாகவோ இடம் பெற வேண்டும்.பட்டியலில் தொடக்கத்திலோ , நடுவிலோ இடம் பெறக்கூடாது.
38.
| = | == |
| இது மதிப்பிருந்து செயற்குறி | இது ஒரு ஒப்பீட்டுச் செயற்குறி. |
| ஒரு மதிப்பிருந்து கூற்றின் வலது பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருந்தும். |
செய்லேற்பிகளிக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. |
| எ.கா. a = b, b யின் மதிப்பு a-ன் மாறியில் இருத்தும் | எ.கா. (a = b) செயலெற்பி a, செயலெற்பி b யுடன் ஒப்பிட்டு ஒப்பீட்டின் அடிப்படையில் 0 அல்லது 1 வரும். |
39.
40.
1. கணிப்பொறி "பயனர் நட்பு"டன் (User Friendly) இயங்கும் ஒரு இடைமுகத்தை கொண்டிருக்கவில்லை எனில் பயனர் தனது அன்றாடவாழ்விலிருந்து கணிப்பொறியின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வர்.
2. இதுவே "வரைகலைபயனர் இடைமுக" (Graphical User Interface-GUI) அடிப்படையிலான இயக்க அமைப்புகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
41.
தரவு :
i) பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் அடிப்படை செய்தித் துணுக்கு தரவு எனப்படும்.
ii) இது தொடர்பு கொள்வதற்கும், விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது.
iii) எடுத்துக்காட்டாக 134, 16 'கவிதா', 'சி' போன்றவை தரவிற்கு உதாரணம்.
தகவல் :
i) தகவல் என்பது முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும்.
ii) சரியான பொருள் கொண்ட / அர்த்தமுள்ள தகவலை தருகின்றது.
iii) எடுத்துக்காட்டாக, கவிதாவின் வயது 16.
42.
length (s)
-- inputs : s
-- outputs : sன் நீளம்
if sல் ஒரு வாடிக்கையாளர் உள்ளார் எனில்
அடிப்படை நிலை
1
else
1 + length (tail (s)) - -தற்சுழற்சி நிலை
43.
டிமார்கனின் (De - morgan)முதல் தேற்றம்
\(\left( \overline { A+B } \right) =\bar { A } .\bar { B } \)
டிமார்கனின் (De - morgan) இரண்டாவது தேற்றம்
\(\left( \overline { A+B } \right) =\bar { A } +\bar { B } \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards