11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
Introduction to Spreadsheet Completed Material Tamil Medium
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஏற்கனவே செய்த செயலை தவிர்கக்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?
Ctrl +E
Ctrl + U
Ctrl + Z
Ctrl + n
2.
இவற்றுள் எந்த பகுதி செயற்பாட்டின் பெயரை திரையின் மேல் புறத்தில் காட்டும்?
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பத்த வடிவூட்டம்
3.
ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?
Ctrl + F1
Ctrl + F4
Ctrl + F5
Ctrl +F7
4.
5.
ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?
Find
Find All
Replace
Replace All
6.
Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?
File
Edit
Tools
Format
7.
உரையின் கொடாநிலை தோற்றத்தை மாற்றுவது?
உரை வடிவூட்டம்
பக்க வடிவூட்டம்
சிறப்பு வடிவூட்டம்
பத்த வடிவூட்டம்
8.
ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?
Head
Foot
Header
Footer
9.
திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?
பணிப்பட்டை
தலைப்புப் பட்டை
நிலமைப் பட்டை
கருவிப்பட்டை
10.
Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும்
File ⟶ Table properties
Format ⟶ Table properties
Table ⟶ Table Properties
Edit ⟶ Table Properties
11.
பக்க வடிவூட்டல் என்றால் என்ன?
12.
Open Office Writer-ல் உள்ள பல்வேறு வரி இடைவெளித் தேர்வுகளைப் பட்டியலிடு.
13.
உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?
14.
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
15.
சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
16.
ரைட்டர் சன்னல் திரையின் பாகங்கள் யாவை?
17.
சொற்செயலி என்றால் என்ன?
18.
ஆவணத்தில் எவ்வாறு திருத்தங்கள் செய்வாய்?
19.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?
20.
உரை வடிவூட்டம் என்றால் என்ன?
21.
ரைட்டர் ஆவணத்தில் அடிக்குறிப்பில் பக்க எண்களை எவ்வாறு வடிவூட்டல்செய்வாய் ?
22.
ரைட்டர் ஆவணத்தில் எல்லைகளை எவ்வாறு மாற்றியமைப்பாய் ?
23.
பக்க அளவை எவ்வாறு மாற்றுவாய்?
24.
புல்லட்குறி மற்றும் எண் வரிசையின் பயன் யாது?
25.
உரையை உயர்த்திக்காட்டுதல் பற்றிக் குறிப்பு வரைக.
26.
Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .
27.
பதிப்பாய்விற்குரிய குறுக்கு வழிச் சாவி,பணிக்குறி மற்றும் அவற்றின் செல்பாடுகளைப் பட்டியலிடு
28.
உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
29.
புதிய உரையை ஆவணத்தின் இடையில் எவ்வாறு சேர்ப்பாய்?
30.
தமிழ் தட்டச்சு செய்யப் பயன்படும் தமிழ் இடைமுகத்தின் நன்மைகள் யாவை?
31.
ஏற்கனவே உள்ள ஆவணத்தை எவ்வாறு திறப்பாய்?
32.
சொல் மடிப்பு என்றால் என்ன?
33.
ரூலர்-குறிப்பு வரைக.
34.
ரைட்டரில் உள்ளமைந்த கருவிப்பட்டைகள் யாவை?விளக்குக.
35.
தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலியைப் பட்டியலிடு.
36.
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
37.
ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை?
38.
புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?
39.
பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?
40.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
41.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளின் பயன்களை எழுதுக.
42.
உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி.
43.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.
44.
உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.
45.
ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக
46.
பக்க இசைவின் வகைகளைப் பற்றி எழுதுக.
47.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
48.
1.
(a)
Ctrl +E
2.
(a)
பட்டிப்பட்டை
3.
(a)
Ctrl + F1
4.
(a)
5.
(a)
Find
6.
(a)
File
7.
(a)
உரை வடிவூட்டம்
8.
(a)
Head
9.
(a)
பணிப்பட்டை
10.
(a)
File ⟶ Table properties
11.
பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம்,பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும்.
12.
Open Office Writer-ல் 7 வரி இடைவெளித் தேர்வுகள் உள்ளன.அவை
1. Single
2. 1.5 lines
3. Double
4. Proportional
5. At least
6. Leading
7. Fixed
13.
1. Ctrl +A அல்லது Edit →Select All தேர்வு செய்து முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்கவும்.
2. வடிவூட்டலை நீக்க, Ctrl+M கிளிக் செய்யவும்.
14.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரை தேர்வு செய்யப்பட்டப்பின் Shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
15.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. சுட்டெலியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும்.
3. உரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொத்தானை விட்டு விட வேண்டும்.
16.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரை தலைப்புபட்டை , பட்டி பட்டை, செந்தரக் கருவிப்பட்டை, வடிவூட்டல் கருவிப்பட்டை, ரூலர், பணியிடம் மற்றும் நிலைமைப்பட்டை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
17.
ஒரு உரை ஆவணத்தை உருவாக்குதல், பதிப்பித்தல், கையாளுதல், பரிமாற்றம் செய்தல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுத்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்யும் கணிப்பொறி மென்பொருள் "சொற்செயலி" ஆகும்.
18.
1. Backspace பொத்தான்: செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்கும்.
2. Delete பொத்தான்: செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்கும்.
19.
ஓபன் ஆஃபீஸ் பல்வேறு அலுவலக தொகுப்புகள் உருவாக்கக்கூடிய கீழ்க்கண்ட மென்பொருள்களை கொண்டுள்ளது.
1. ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் (OpenOffice Writer)
(i) உரை ஆவணங்களை உருவாக்கப் பயன்படும் சொற்செயலி.
2. ஓபன் ஆஃபீஸ்கால்க் (OpenOffice Calc)
(i) அட்டவணைத் தாள்களை உருவாக்கப் பயன்படும் அட்டவணை செயலி.
3. ஓபன் ஆஃபீஸ் பேஸ் (OpenOffice Base)
(i) தரவு தளங்களை உருவாக்கப் பயன்படும்.
4. ஓபன் ஆஃபீஸ் இம்ப்ரெஸ் (Open Office Impress)
(i) நிகழ்த்துதலை உருவாக்கப் பயன்படும்.
5. ஓபன் ஆஃபீஸ் ட்ரா (OpenOffice Draw)
(i) படங்கள் வரையப் பயன்படும் மென் பொருள்.
6. ஓபன் ஆஃபீஸ் பார்முலா (OpenOffice Formula)
(i) வாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடுகளை உருவாக்கப் பயன்படுகிறது.
20.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடாநிலையாக உள்ள எழுத்துவகை, அளவு , நிறம்,வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது "உரை வடிவூட்டல்" எனப்படும்.
எ.கா: தடிமனாக்குதல்,சாய்வெழுத்தாக்குதல், அடிக்கோடிடல் போன்றவை பொதுவான வடிவூட்டல் தேர்வுகளாகும்.
21.
1. Format →Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page style உரையாடல் பெட்டி தோன்றும்.
2. இதில் Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. Layout Settings-ல் தோன்றும் Format, கீழிறங்கு பட்டிப் பெட்டியில் உள்ள விருப்பமான வடிவூட்டல் வகையைத் தேர்வு செய்து, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
22.
1. Format→Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page Style உரையாடல் பெட்டி தோன்றும்.
2. அதில் Borders தொகுதியைத் தேர்வு செய்து.பயனர் வரையறுத்த பகுதியில் உள்ள எல்லைகளின் அளவு. எல்லைக் கோடுகளின் பாணி எல்லைகளின் நிறம் ஆகியவற்றை மாற்றியமைக்கலாம்.
23.
1. பக்க அளவை மாற்றுவதற்கான பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format→Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page Style உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது Width மற்றும் Height என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
24.
1. முக்கிய குறிப்புகளைப் பட்டியலிட, எளிதாகப் படிக்க மற்றும் பின்பற்ற புல்லட் மற்றும் எண் வரிசைப் பயன்படுகிறது.
2. படிப்பவருக்கு தகவலைப் பட்டியலிட்டு, பிரித்து மற்றும் ஒருங்கிணைப்பதற்கு மிகவும் சிறந்த முறையாகும்.
3. பத்திநிலை பண்புகளான புல்லட் குறியீடு மற்றும் எண் வரிசையின் மூலம்,பத்தியின் தொடக்கத்திற்கு புல்லட்குறி அல்லது எண் வரிசையிடலாம்.
4. ஆவணத்திலுள்ள முக்கியமானப் பகுதிகளைப் பட்டியலிடுவதற்கு புல்லட் குறி பயன்படுகிறது.
5. உரையை வரிசைப்படுத்த எண் வரிசையிடல் மிகப் பொருத்தமான முறையாகும்.
6. எண் வரிசையிடப்பட்ட பட்டியலில், பயனர் ஒரு பத்தியைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்தால் பட்டியல் தானாகவே எண்களை மாற்றிக் கொள்ளும்.
25.
(i) ஒரு உரையின் முக்கியமான பகுதிகளை படிப்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உரையை உயர்த்திக் காட்டுதல் பயன்படுகிறது.
(ii) தேர்வு செய்யப்பட்ட உரையை உயர்த்திக் காட்ட, Highlighting பணிக்குறியை கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு தோன்றும். அதில் தேவையான வண்ணத்தைத் தேர்வு செய்து உரையை உயர்த்திக்காட்டலாம்.
(iii) உயர்த்திக் காட்டப்பட்ட உரையை அதன் இயல்பு தோற்றத்திற்கு மாற்ற, உயர்த்திக் காட்டப்பட்ட உரையை தேர்வு செய்து, வண்ணத்தட்டில் No fill தேர்வை கிளிக் செய்யவும்.
26.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் பல்வேறு விதமான உதவிகளை வழங்குகின்றது.
1. F1 அல்லது பட்டிப்பட்டையில் உள்ள Help-ஐ தேர்வு செய்தால் உதவித்திரை தோன்றும்.
2. கருவிப் குறிப்புகள் (Tools tips) நீட்டிக்கப்பட்ட குறிப்புகள் (Extended tips).உதவி முகவர் செயல்படுத்த Tools→Options→ Open Office என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. மேலும் விரிவான விளக்கத்திற்கு Help →What's this? என்பதைக் தேர்வு செய்ய வேண்டும்.
27.
| செயல் | செயல்பாடு | பணிக்குறி | குறுக்கு வழிச் சாவி |
|---|---|---|---|
| Cut நீக்க | தேர்ந்தெடுத்த உரையை நீக்க | ![]() |
Ctrl+X |
| Copy நகலெடுக்க | தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க | ![]() |
Ctrl+C |
| Paste ஒட்ட | நகர்த்தல் (அ) நகலெடுத்தல் செயல்பாட்டிற்கு பிறகு உரையை ஒட்ட |
![]() |
Ctrl+V |
| Undo செயல் தவிர் | நிகழப்பட்ட முந்தைய செயல்பாட்டை ரத்து செய்ய | ![]() |
Ctrl+Z |
28.
இரு முறையில் உரையைத் தேர்வு செய்யலாம்.
1. தொடர்ச்சியாக உள்ள உரையைத் தேர்வு செய்ய.
2. வெவ்வேறு இடங்களில் உள்ள உரையைத் தேர்வு செய்ய.
1. தொடர்ச்சியாக உள்ள உரையைத் தேர்வு செய்ய:
(i) உரையின் தொடக்கத்திற்கு செருகும் புள்ளியை கொண்டு செல்லவும்.
(ii) Shift பொத்தானை அழுத்தியவாறு சுட்டியை அழுத்தியவாறு தேவையான உரையைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்டபின் Shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
2. வெவ்வேறு இடங்களில் உள்ள உரையைத் தேர்வு செய்ய:
(i) செருகும் புள்ளியை உரையின் தொடக்கத்திற்கு கொண்டு செல்லவும்.
(ii) Ctrl பொத்தானை அழுத்தியவாறு சுட்டியை அழுத்தியவாறு தேவையான உரையைத் தேர்வு செய்யவும் . தேர்வு செய்யப்பட்டபின் Ctrl பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
29.
1. புதிய உரையை மேல் அச்சிடல் முறை அல்லது செருகல் முறை ஆகியவற்றின் மூலம் சேர்க்கலாம்.
2. Insert பொத்தானைப் பயன்படுத்தி இரு முறைகளுள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
3. செருகல் முறையில் செருகும் புள்ளியை வேண்டிய இடத்தில் வைத்து தட்டச்சு செய்தால் புதிய உரை சேர்க்கப்பட்டு ஏற்கனவே உள்ள உரை வலது பக்கத்திற்கு நகரும்.
4. மேல் அச்சிடல் முறையில் புதிய உரை சேர்க்கப்படும் போது, செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அழியும்.
30.
1. தமிழ் தட்டச்சு இடைமுகம் முறையில் Unicode தொழில்நுட்பம் பின்பற்றுவதால், தமிழ் தட்டச்சு செய்யும் முறை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2. எந்த ஒரு செயலியிலும் எளிதாக ஆவணத்தைத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
3. "Arial Unicode" போன்ற Unicode எழுத்துகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமில்லாத மற்ற இந்திய மொழிகளிலும், அந்தமொழியின் இடைமுகமாக ஆதரவளிக்கும்.
31.
1. சேமிக்கப்பட்ட ஒரு ஆவணத்தை மீண்டும் திறப்பதற்கு File→Open அல்லது Ctrl +O கட்டளையைப் பயன்படுத்த வேண்டும்.
2. Open உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயரை File Name உரைப்பெட்டியில் தட்டச்சு செய்து Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
32.
ஆவணத்தில் உரையைத் தட்டச்சு செய்யும் பொழுது செருகும் புள்ளி வலது புறமாக நகர்ந்து கொண்டே இருக்கும். ஒரு வரியின் கடைசி வரைதட்டச்சு செய்து விட்டால் அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்கள் தானாகவே மடிந்து அடுத்த வரியின் தொடக்கத்திற்கு செல்லும். இந்த வசதி சொற்செயலியில் "சொல் மடிப்பு" என்று அழைக்கப்படும்.
33.
பக்க ஓரங்களைக் காட்டும் அடிக்கோளாக ரூலர் வடிவூட்டல் கருவிப்பட்டையின் கீழ் உள்ளது. இரண்டு வகையான ரூலர்கள் உள்ளன.
1. கிடைமட்ட ரூலர்(Horizontal): பக்க இடது மற்றும் வலது ஓரங்களை மாற்றியமைக்கப் பயன்படுகிறது.
2. செங்குத்து ரூலர்(vertical):பக்க மேல் மற்றும்கீழ் ஓரங்களை மாற்றியமைக்கப் பயன்படுகிறது.
34.
ரைட்டரில் உள்ளமைந்த இரண்டு கருவிப்பட்டைகள் உள்ளன,அவை:
1. செந்தர (Standard) கருவிப்பட்டை
2. வடிவூட்டல் (Formatting) கருவிப்பட்டை
1. செந்தர கருவிப்பட்டை: பட்டிப்பட்டையின் கீழ் உள்ளது. வெட்டுதல் நகலெடுத்தல்,ஒட்டுதல் போன்ற அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடிய குறுக்கு வழிப் பணிக்குறிகள் உள்ளன.
2. வடிவூட்டல் கருவிப்பட்டை: செந்தர கருவிப்பட்டையின் கீழ் இது உள்ளது.உரையை வடிவமைப்பதற்கான பணிக்குறிகளைக் கொண்டுள்ளது.
35.
தனி உரிமை ஆதார சொற்செயலிகள் :
| மென்பொருள் தொகுப்பு | உருவாக்கியவர் |
|---|---|
| 1. மைக்ரோ சாஃப்ட் வேர்டு (Microsoft Word) |
மைக்ரோ சாஃப்ட் கார்ப்பரேசன் (Microsoft Corporation) |
| 2. WPS வேர்டு | கிங் சாப்ட் (Kingsoft) |
| 3. வேர்டுப்ரோ (WordPro) | லோட்டஸ் கார்ப்பரேசன் |
திறந்த மூல சொற்செயலிகள்
| மென்பொருள் தொகுப்பு | உருவாக்கியவர் |
|---|---|
| 1.ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் (OpenOffice Writer) |
அப்பாச்சி (Apache) |
| 2.லிபரே ஆஃபீஸ் ரைட்டர் (Libre Office Writer) |
தி டாக்குமென்ட் பெளண்டேசன் (The document foundation) |
| 3. அபிவேர்டு (Abiword) | அபி ஸோர்ஸ் (Abisource) |
36.
வழிமுறை1:
தேவையான உரையைத் தேர்வு செய்து வலது பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் மேல் மீட்பு பட்டிப்பட்டையில் உள்ள Line Spacing என்றத் தேர்வை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் Single, 1.5 அல்லது Double போன்ற ஏதேனும் வரி இடைவெளியை தேர்வு செய்யலாம்.
வழிமுறை 2:
1. Edit\(\rightarrow \)Select All கட்டளையைப் பயன்படுத்தி முழு ஆவணத்தையும் தேர்வு செய்யவும்.
2. Format \(\rightarrow \)Paragraph கட்டளையைபக் கிளிக் செய்யவும்.
3. Paragraph உரையாடல் பெட்டி தோன்றும்,இதில் Indents & Spacing தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Line Spacing வகையிழு பட்டியில் தேவையான வரி இடைவெளியைத் தேர்வு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
37.
1. File \(\rightarrow \)Save அல்லது File \(\rightarrow \)SaveAs அல்லது Ctrl+S கிளிக் செய்தால் "SaveAs" என்ற உரையாடல் பெட்டி தோன்றும்.
2. ஆவணத்தை சேமிக்கும் இடத்ததைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. ஆவணத்தின் பெயரை File Name உறைப்பு பெட்டியில் தட்டச்சு செய்ய வேண்டும்.
4. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள அனைத்து ஆவணங்களும் .odt நீட்டிப்புடன் சேமிக்கப்படும். பயனர் ஓபன் ஆஃபீஸ் ஆவணத்தை மைக்ரோசாப்ட்வேர்டு (Microsoft Word) ஆவணம் அல்லது PDF வடிவில் சேமிக்கலாம்.அவ்வாறு செய்ய "Save As type" பட்டியல் பெட்டியில் உள்ள கோப்பு வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
5. இறுதியாக Save பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
38.
1. புல்லட் மற்றும் எண்வரிசை நீக்க வேண்டிய உரையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Bullets பணிக்குறியை
கிளிக் செய்தால் புல்லட் நீங்கும்.
3. Numbering பணிக்குறியை
கிளிக் செய்தால் எண் வரிசை நீங்கும்.
39.
இரு வகையான பக்க அமைவுகள் உள்ளன:
1. பக்கவாக்கு வடிவம் (Landscape):
(i) ஆவணத்தின் அகலம் அதன் நீளத்தை விட பெரியதாக இருந்தால் பக்கவாக்கு வடிவம் எனப்படும்.
(ii) தொழில்முறை புகைப்படங்கள்.அழைப்பிதழ்கள் போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
2. நீளவாக்கு வடிவம் (Portrait):
(i) கொடாநிலையாக ஒரு ஆவணத்தின் பக்க அமைவானது நீளவாக்கில் இருக்கும்.
(ii) இந்த அமைவில் ஆவணத்தின் நீளம் அதன் அகலத்தை விட பெரிதாக இருக்கும். புத்தகங்கள்,செய்தித்தாள்கள் இந்த வடிவத்தில் அச்சிடப்படும்.
40.
| நகர்த்தல் | நகலெடுத்தல் |
|---|---|
| 1. இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரையானது மூல இடத்திலிருந்து நீக்கப்பட்டு, இலக்கு இடத்தில் வைக்கப்படும். |
இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரை, மூல இடத்திலிருந்துநகலெடுக்கப்பட்டு, இலக்கு இடத்தில்அனுப்பப்படும்.. |
| 2. Cut மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
Copy மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
41.
1. File - கோப்பு மேலாண்மை பணிகளான, ஒரு புதிய கோப்பை உருவாக்க (New), திறக்க (Open), மூட(Close), சேமிக்க(Save), கோப்பை வேறு பெயரில் சேமிக்க(Save as), அச்சிட(Print), கோப்பு ஏற்றம் செய்ய போன்ற பல்வேறு விருப்பங்கள் உள்ளன.
2. Edit - பதிப்பித்தலுக்குத் தேவையான நகல் எடுத்தல் (Copy), வெட்டுதல் (Cut), ஒட்டுதல் (Paste), செயல்தவிர் (Undo), மீண்டும் செய் (Redo), போன்ற விருப்பங்கள் உள்ளன.
3. View - வலை வடிவமைப்பு (Web Layout), அச்சு வடிவமைப்பு (Print Layout), நேவிகேட்டர் போன்ற ரைட்டரின் சூழலை மாற்றப் பயன்படும் விருப்பங்கள் உள்ளன.
4. Insert - படங்கள் (Picture), அட்டவணைகள் (Tables), வரைபடங்கள் (Charts), கருத்துகள் (Comments), தலைப்புகள் (Header), அடிக்குறிப்புகள் (Footer), சிறப்பு குறியீடுகள் (Special Character).குறுக்கு மேற்கோள் போன்ற பல்வேறு கூறுகளை செருகுவதற்கான கட்டளைகள் உள்ளன.
5. Format- வடிவமைப்புப் பட்டிப்பட்டையில் உரை மற்றும் பக்க வடிவமைப்பிற்கான பக்க அளவு,அமைப்பு, எழுத்துரு பண்புகள், புல்லட் குறி மற்றும் எண் வரிசை போன்ற அம்சங்கள் உள்ளன.
6. Tables- அட்டவணையை உருவாக்குதல்,வரிசைகள், நெடுவரிசைகளைச் சேர்த்தல், சிற்றரைகளாக பிரித்தல், சிற்றரைகளை இணைத்தல் மற்றும் அட்டவணையை நிர்வகிக்கவும், கையாளவும் பல்வேறு கருவிகள் உள்ளன.
7. Tools- எழுத்துப் பிழை சரிப்பார்த்தல், குறுநிரல்கள் , அஞ்சல் இணைப்பு, இறுதிக் குறிப்புகள்/அடிக்குறிப்புகள் போன்ற பல கருவிகள் மற்றும் செயல் கூறுகளைக் கொண்டுள்ளது.
8. Window- புதிய Window திறக்க, மூட, பிரிக்க மற்றும் செயலிழக்கச் செய்வற்கான விருப்பங்கள் உள்ளன.
9. Help- உள்ளமைந்த உதவி அம்சங்கள் உள்ளன.
42.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடாநிலையாக உள்ள எழுத்துவகை, அளவு, நிறம், வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது "உரை வடிவூட்டல்" எனப்படும்.
| செயல் | செயல்பாடு | பணிக்குறி | குறுக்குவழி |
|---|---|---|---|
| தடிமனாக்குதல் | உரையை தடித்த எழுத்துக்களாக மாற்றுவதற்கு |
![]() |
Ctrl + B |
| சாய்வெழுத்தாக்குதல் | உரையை சாய்ந்த எழுத்துக்களாக மாற்றுவதற்கு | ![]() |
Ctrl + I |
| அடிக்கோடிடுதல் | உரையை அடிக்கோடிட | ![]() |
Ctrl +U |
1. Times New Roman என்பது கொடாநிலை எழுத்து வகையாகும். எழுத்து வகையை மாற்ற பணிக்குறியைப் கிளிக் செய்யவும்.

2. எழுத்தின் கொடாநிலை அளவு 12 புள்ளியாகும்.
எழுத்தின் அளவை மாற்ற எழுத்து அளவு பணிக்குறியைப் கிளிக் செய்து மாற்றலாம்.

3. எழுத்தின் கொடா நிலை நிறம் கருப்பு
என்ற ணிக்குறியைப் கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு (Color Palette) திரையில் தோன்றும். இதில் தேவையான நிறத்தைத் தேர்வு செய்யலாம்.
தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ளவாறு மாற்றிக் கொள்ள முடியும்.
(i) Uppercase *toggle case *sentence case
(ii) lower case *Capitalize every word
மேற்கண்டவாறு மாற்றுவதற்கு
4. மாற்ற வேண்டிய உரையை தேர்ந்தெடுக்கவும்.
5. Format→Change case என்பதைத் தேர்வு செய்யவும்.
6. ஒரு உரையின் முக்கியமான பகுதிகளை படிப்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உரையை உயர்த்திக் காட்டுதல் பயன்படுகிறது.
7. தேர்வு செய்யப்பட்ட உரையை உயர்த்திக் காட்ட, Highlighting பணிக்குறியை கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு தோன்றும். அதில் தேவையான வண்ணத்தைத் தேர்வு செய்து உரையை உயர்த்திக்காட்டலாம்.
8. உயர்த்திக் காட்டப்பட்ட உரையை அதன் இயல்பு தோற்றத்திற்கு மாற்ற, உயர்த்திக் காட்டப்பட்ட உரையை தேர்வு செய்து, வண்ணத்தட்டில் No fill தேர்வை கிளிக் செய்யவும்.
43.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் தலைப்புபட்டை , பட்டி பட்டை, செந்தரக் கருவிப்பட்டை, வடிவூட்டல் கருவிப்பட்டை, ரூலர், பணியிடம் மற்றும் நிலைமைப்பட்டை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
1. தலைப்புபட்டை (Title bar):
(i) தலைப்பு பட்டை சன்னல் திரையின் மேல் பகுதியில் தோன்றும். இதில் ஆவணத்தின் தலைப்பு மற்றும் பயன்பாட்டின் பெயர் தோன்றும் ஆவணத்திற்கு பெயரிடப்படவில்லையெனில் Untitled 1 என்ற பெயர் தானமைவாக அமையும்.
2. பட்டி பட்டை (Menu bar):
(i) தலைப்பு பட்டையின் கீழே உள்ள பட்டிப்பட்டையில் பல்வேறு விருப்பங்களுடன் கூடிய பட்டிகள் உள்ளன. எ.கா. File, Edit.
3. கருவிப்பட்டை(Toolbar):
பட்டிப்பட்டையின் கீழ் இரண்டு கருவிப்பட்டைகள் உள்ளன,அவை:
(i) செந்தர கருவிப்பட்டை
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை
4. ரூலர் (Ruler):
பக்க ஓரங்களைக் காட்டும் அடிக்கோளாக ரூலர் வடிவூட்டல் கருவிப்பட்டையின் கீழ் உள்ளது. இரண்டு வகையான ரூலர்கள் உள்ளன.
(i) கிடைமட்ட ரூலர்
(ii) செங்குத்து ரூலர்
5. தட்டச்சு செய்யும் இடம் (Workspace):
(i) இது கோப்பின் உள்ளடக்கத்தைத் தட்டச்சு செய்யப் பயன்படும் காலி இடமாகும். இப்பகுதியில் விட்டு விட்டு தோன்றும் நெடும்பட்டை, செருகும் இடம் என அழைக்கப்படுகிறது.
6. நிலைப்பட்டை (Status bar) :
(i) சன்னல் திரையின் கீழ் உள்ள நிலைப் பட்டையில் ஆவணத்தின் தற்போதைய நிலை தெரியும்.
(ii) அந்த நிலைப்பட்டையில் பக்க எண்ணிக்கை, தற்போதைய பக்க எண், இயல்பு மொழி போன்றவை தோன்றும்.
44.
ஒரு பக்கத்தின் இடது மற்றும் வலது ஓரத்திற்கும் இடையே உள்ள தூரம் உள்தள்ளல் எனப்படும். உள்தள்ளல், ஒரு பத்தியை படிப்பதற்கு எளிமையாகவும் மற்றும் படிப்பதற்கு தூண்டுவதாகவும் உள்ளது. நான்கு வகையான உள்தள்ளல்கள் உள்ளன:
1. இடது புற உள்தள்ளல்- இடது ஓரத்திலிருந்து பத்தி அமைந்துள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்தும்.
2. வலதுபுற உள்தள்ளல்- வலது ஓரத்திலிருந்து பத்தி அமைந்துள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்தும்.
3. முதல்வரி உள்தள்ளல்- பத்தியின் முதல் வரியை உள்தள்ளும்.
4. தொங்கும் உள்தள்ளல்- ஒரு சிறப்பு உள்தள்ளல். பத்தியின் முதல் வரியானது இதர வரிகளைக் காட்டிலும் இடது ஓரத்திலிருந்து வெளியே இருக்கும்.
(i) உரையை உள் தள்ளிட Format \(\rightarrow \)Paragraph என்றக் கட்டளையைத் தேர்வு செய்து பின் Indents & Spacing தத்தலைத் தேர்வு செய்யவும்.
(ii) Before text சுழல் பெட்டியில் இடது உள்தள்ளளுக்கான அளவைத் தட்டச்சு செய்யவும். Increase Indent பணிக்குறி மூலமும் இடது உள்தள்ளலைச் செய்யலாம்.
(iii) ஒவ்வொரு முறை பணிக்குறியை கிளிக் செய்தால் பத்தி இடது ஓரத்திலிருந்து 1/2 அங்குலம் உள்ளே நகர்த்தப்படும்.
(iv) After text சுழல் பெட்டியில் வலது உள்தள்ளலுக்கான அளவைத் தட்டச்சு செய்யவும்.
(v) First Line தேர்வில்,ஒரு நெர்மதிப்பைத் தட்டச்சு செய்தால் பத்தியின் முதல் வரியை மட்டும் உள் தள்ள முடியும்.
(vi) First Line தேர்வில்,ஒரு எதிர்மதிப்பைத் தட்டச்சு செய்தால் தொங்கும் உள்தள்ளல் தோன்றும். பத்தியின் முதல் வரியானது இதர வரிகளைக் காட்டிலும் இடது ஓரத்திலிருந்து வெளியே இருக்கும்.
45.
சொற்செயலியின் ஒரு முக்கியப் பணி பக்க வடிவூட்டலாகும்.
1. பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம்,பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும்.
2. ரைட்டரில் பல்வேறு பக்க வடிவூட்டல் தேர்வுகள் Page style உரையாடல் பெட்டியின் மூலம் செய்யப்படுகிறது.
3. Format \(\rightarrow \)Page என்றக் கட்டளையின் மூலம் Page style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
1. பக்க அளவு மற்றும் பக்க அமைவை மாற்று:
1. Page style உரையாடல் பெட்டியில், Page தொகுதியைத் தேர்வு செய்யவும்.
2. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது Width மற்றும் Height என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
3. Orientation குழுவில் Portrait அல்லது Landscape பொத்தானைத் தேர்வு செய்து பக்கத்தின் அமைவை மாற்றலாம்.
2. பக்கத்தின் நிறத்தை மாற்று:
Page style உரையாடல் பெட்டியில் உள்ள Background தொகுதியிலுள்ள Color கீழிறங்கு பெட்டியைக் கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு அல்லது "graphic" தேர்வு செய்தால் பக்கத்தின் பின்னணியில் வண்ணம் அல்லது படத்தைச் சேர்க்கலாம்.
3. எல்லையை மாற்று:
Page style உரையாடல் பெட்டியிலுள்ள Borders தொகுதியைத் தேர்வு செய்து.பயனர் வரையறுத்த பகுதியில் உள்ள எல்லைகளின் அளவு. எல்லைக் கோடுகளின் பாணி எல்லைகளின் நிறம் ஆகியவற்றை மாற்றியமைக்கலாம்.
4. தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளைச் சேர்க்க:
Insert \(\rightarrow \)Header\(\rightarrow \)Default என்ற கட்டளையைப் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்யவும்.
1. தற்போது தலைப்பு பகுதியும், பணியிடத்தில் தட்டச்சு செய்த பகுதியும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருக்கும்.
2. தலைப்பு பகுதியில் நேரடியாகவே தலைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது Insert \(\rightarrow \)Fields\(\rightarrow \)Title என்ற கட்டளையைத் தேர்வு செய்து தலைப்பை தட்டச்சு செய்யலாம்.
3. Insert \(\rightarrow \)Footer\(\rightarrow \)Default என்ற கட்டளையைத் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்தால் அடிக்குறிப்பு உருவாகும்.அடிக்குறிப்பில் செருக்கும் புள்ளியை வைத்து கிளிக் செய்யவும்.
4. Select Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \) Date என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் எல்லா பக்கங்களிலும் கணிப்பொறியின் தேதி புகுத்தப்படும்.
46.
ஒரு பத்தியின் வரிகள் தட்டச்சு செய்யப்படும் பக்கத்தின் எந்த திசையில் (இடது அல்லது வலது ) அமைய வேண்டும் என்பது பத்தி இசைவு எனப்படும். ஒவ்வொரு பத்தியின் அமைவையும் பத்தி இசைவு கட்டுப்படுத்துகிறது. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில்
1. இடது (Left)
2. வலது (Right)
3. மைய (Center)
4. நேர்த்தி (Justify)
என்ற நான்கு வகையான இசைவுகள் உள்ளன.
1. Format \(\rightarrow \)Paragraph கட்டளையைப் பயன்படுத்தினால் வரும் பத்தி உரையாடல் பெட்டி மூலம் பத்தி வடிவூட்டலை செய்யலாம்.
2. பத்தி இசைவு பணிக்குறிகள் மற்றும் குறுக்கு வழி சாவிகள் மூலம் மாற்றுதல் :
| இசைவு | செயல் | பணிக்குறி | குறுக்கு வழிச்சாவி |
|---|---|---|---|
| இடது | இடது இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+L |
| வலது | வலது இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+R |
| மையம் | மைய இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+E |
| நேர்த்தி | நேர்த்தி இசைவாக மாற்ற | ![]() |
Ctrl+J |
47.
1. தலைப்பு என்பது ஒரு பக்கத்தின் மேல் பகுதியைக் குறிக்கும். தலைப்புப் பகுதியில் தலைப்பு மற்றும் நூலாசிரியர் பெயர் போனற்வற்றைச் சேர்க்கலாம்.
2. அடிக்குறிப்பு என்பது ஒரு பக்கத்தின் கீழ்பகுதியைக் குறிக்கும். அடிக்குறிப்பில் பக்க எண்கள்,தேதி, நேரம் போன்றவற்றைச் சேர்க்கலாம். இவ்வாறுச் சேர்க்கப்பட்ட, தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் எல்லா பக்கங்களிலும் தோன்றும்.
3. செருகும் புள்ளியை அடிக்குறிப்பில் கொண்டு சென்று கிளிக் செய்யவும்.
4. Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \)Page Number என்ற கட்டளையைப் பயன்படுத்தினால் எல்லா பக்கங்களிலும் பக்க எண்கள் சேர்க்கப்படும்.
அடிக்குறிப்பில் உள்ள பக்க எண்களை வடிவூட்டம் செய்ய.
1. Format \(\rightarrow \)Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page style உரையாடல் பெட்டி தோன்றும்.
2. இதில் Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. Layout Settings-ல் தோன்றும் Format, கீழிறங்கு பட்டிப் பெட்டியில் உள்ள விருப்பமான வடிவூட்டல் வகையைத் தேர்வு செய்து, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
48.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards