11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 Full Test Model Question
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
களவாடர்களால் வடிவமைக்கப்ட்டு சட்டப்புறம்பாக அணுகி சேதத்தை ஏற்படுத்தும் மென்பொருள்
திம்பொருள்
ஒற்றயறி
வன்பொருள்
மென்பொருள்
2.
ப்ளூடூத்தை எடுத்துக்காட்டாக கொண்ட வலையமைப்பின் வகையை கண்டறிக
தனிப்பட்ட பகுதி வலை (PAN)
குறும்பரப்பு வலையமைப்பு (LAN)
மெய்நிகர் தனி வலையமைப்பு (VPN)
இதில் எதுவுமில்லை
3.
கூடுதலாக உருவாக்கப்படும் சில்லுகளில் எந்த கூறானது இடம் பெறாது?
Insert Chart
Insert Movie
Insert Picture
Insert Grid
4.
நிகழத்துதல் கருவிகளில், ஒரு சில்லுவின் நுழைவு விளைவு மற்றொரு சில்லை நிகழ்த்துதலில் மாற்றுகிறது.எந்த தேர்வு இச்செயலை செய்கிறது?
Animation
Slide Transistion
Custom Animation
Rehearse Timing
5.
வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?
பட்டியல்
வடிகட்டுதல்
வடிவமைத்தல்
செல்லுபடியாக்கல்
6.
பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?
Ctrl
Shift
Alt
tab
7.
கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்
அட்டவனைச் செயலி
தரவுத்தளம்
சொற்செயலி
லினக்ஸ்
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்
நினைவகம்
செயலி
I/O சாதனங்கள்
இவை அனைத்தும்
9.
இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்
முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய
இவை அனைத்தும்
10.
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8GB
2.2 GB
11.
NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
12.
ASCII என்பதன் விரிவாக்கம்:
American School Code for Information Interchange
American Standard Code for Information Interchange
All Standard Code for Information Interchange
American Society Code of Information Interchange
13.
வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?
Mozilla / Netscape
LDAP Address Data
Outlook Address Book
Windows System Address Book
14.
Insert பட்டிப்பட்டையிலுள்ள எந்த கட்டளை ஆவணத்தில் பக்க முறிவு சேர்க்க உதவும்?
Manual Break
Hard Page Break
Section Break
Page Break
15.
திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?
பணிப்பட்டை
தலைப்புப் பட்டை
நிலமைப் பட்டை
கருவிப்பட்டை
16.
உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?
17.
உபுண்டு(Ubuntu) என்றால் என்ன?
18.
சுட்டியின் பலவகைகள் யாவை?
19.
பொருத்துக
| அ | ஆ | ||
|---|---|---|---|
| அ | வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் | 1 | தனித்த நுண்ணறை |
| ஆ | நுண்ணறை சுட்டி | 2 | நிலைமைப் பட்டை |
| இ | தேர்ந்தெடுப்பு நிலை | 3 | செந்தரக் கருத்திப்பட்டை |
| ஈ | $A$5 | 4 | இயங்கு கலம் |
20.
தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக
21.
கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக
22.
சில்லு அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?
23.
வரைபடம் என்றால் என்ன?
24.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
25.
ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?
26.
நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.
27.
இணையப் பயன்பாட்டின் வழிக்காட்டிகள் யாவை?
28.
கம்பித் தொழில் நுட்பத்தை வரைய தரவுப்பரிமாற்றத்தில் உள்ள பிணைக்கப்பட்ட ஊடகத்தின் பொதுவான வகைகளை விவரிக்கவும்.
29.
விற்பனையாளர் தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?
30.
அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக
31.
5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக
32.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
33.
இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்
34.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
35.
அட்டவணையின் அளவை எப்படி மாற்றுவாய்?
36.
மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?
37.
மையச் செயலகம் என்றால் என்ன?
38.
மின்னஞ்சல் என்றால் என்ன?
39.
நிகழத்துதலில் ஒரு சில்லுவை நீக்கும் வழிமுறை யாது?
40.
பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக
41.
ஓபன் ஆஃபீஸ் கால்க் – குறிப்பு வரைக
42.
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
43.
கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 645
44.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
45.
ஒரு ஆவணத்தை திறந்து,அதில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை கண்டுபிடி
1.
(a)
திம்பொருள்
2.
(a)
தனிப்பட்ட பகுதி வலை (PAN)
3.
(a)
Insert Chart
4.
(a)
Animation
5.
(a)
பட்டியல்
6.
(a)
Ctrl
7.
(a)
அட்டவனைச் செயலி
8.
(a)
நினைவகம்
9.
(a)
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
10.
(a)
4.7 GB
11.
(a)
அடிப்படை வாயில்
12.
(a)
American School Code for Information Interchange
13.
(a)
Mozilla / Netscape
14.
(a)
Manual Break
15.
(a)
பணிப்பட்டை
16.
1. Ctrl +A அல்லது Edit →Select All தேர்வு செய்து முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்கவும்.
2. வடிவூட்டலை நீக்க, Ctrl+M கிளிக் செய்யவும்.
17.
1. உபுண்டு இயக்க அமைப்பு, லினக்ஸ் இயக்க அமைப்பின் அடிப்படையில் அமைந்ததாகும்.
2. இது கணிப்பொறி, வலையமைப்பு சேவையகம், ஸ்மார்ட் கைபேசிக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்க அமைப்பாகும்.
3. இந்த இயக்க அமைப்பை U.K நிறுவனமான, கானோனிக்கல் லிமிட் (Canonical Ltd.,) உருவாக்கியது.
18.
1. இயந்திரவியல் (Mechanical)`சுட்டி
2. ஒளியியல் சுட்டி (Optical Mouse)
3. லேசர் (Laser)சுட்டி
4. ஏர் சுட்டி (Air Mouse)
5. 3D சுட்டி
6. தொடுப்புலன் சுட்டி (Tactile)
7. ஏர்கொனொமிஸ் சுட்டி(Ergonomic Mouse)
8. கேமிங் சுட்டி (Gaming Mouse)
19.
பொருத்துக
| அ | ஆ | ||
|---|---|---|---|
| அ | வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் | 1 | செந்தரக் கருத்திப்பட்டை |
| ஆ | நுண்ணறை சுட்டி | 2 | இயங்கு கலம் |
| இ | தேர்ந்தெடுப்பு நிலை | 3 | நிலைமைப் பட்டை |
| ஈ | $A$5 | 4 | தனித்த நுண்ணறை |
20.
1.தமிழை உலகெங்கிலும் இணையத்தின் வழியே கொண்டு சேர்க்கும் நோக்குடன், 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாளில், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
2. தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இணையத்தின்வழியை தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வழங்குவதற்காக, மழலையர் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை பல்வேறு கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
3. இணைய முகவரி : http://www.tamilvu.org/index.php
21.
வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் முனையம் எனப்படும். இவை தகவலை அனுப்பவும் பெறவும் முடியும்.
22.
1.முதன்மை (Impress) சன்னலில் உள்ள பணிப்பலகத்தின் ஒரு பகுதியே சில்லு அமைப்பு (Layout) ஆகும்.
2.முன்னரே தொகுக்கப்பட்ட சில்லு அமைப்புகள் Layout ல் காட்டப்பட்டுள்ளது.
3.இதில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, மாற்றம் செய்து தனித் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
23.
வரைபடம் என்பது திறன்மிக்க முறையில் தரவுகளைப் படிப்பதற்கு எளிதாகப் புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்.
24.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
25.
1. எந்த இடத்தில் படத்தை சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert\(\rightarrow \)Picture\(\rightarrow \)From file என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
3. Insert Picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன்(Picture gallery) தோன்றும்.அதில் தேவையான படத்தைத் தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
26.
1. நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மூலம்:
(i) USB flash இயக்கியை USB ல் நேரடியாக இணைக்கவும்.
(ii) இணைக்கப்பட்ட இயக்கி தானாக திறக்கவில்லை எனில்,கீழ்காணும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
(iii) Start→ Computer க்ளிக் செய்யவும்.
(iv) நீக்கக்கூடிய இயக்கியுடன் தொடர்புடைய USB flash இயக்கியை இரு கிளிக் செய்யவும் இப்போது, USB இயக்கி திறக்கப்படும்.
(v) நகலெடுக்க வேண்டிய கோப்பின் மீது சுட்டியின் வலது பொத்தானை கிளிக் செய்து தோன்றும் மேல் மீட்புப் பெட்டியிலிருந்து Copy தேர்வைக் கிளிக் செய்யவும்.
(vi) இப்போது, USB இயக்கிக்கு திரும்பி, காலி இடத்தில் சுட்டியின் வலது பொத்தானை க்ளிக் செய்து கிடைக்கும் மேல் மீட்புப் பட்டியிலிருந்து, Paste என்றத் தேர்வை கிளிக் செய்யவும்.
2. Send To மூலம்:
(i) USB flash இயக்கியை நேரடியாக USB ல் இணைக்கவும்.
(ii) கோப்புகள் அடங்கியுள்ள கோப்புறையைத் திறந்து கொள்ளவும்.
(iii) மாற்றப்பட வேண்டிய கோப்பின் மீது சுட்டியின் வலது பொத்தானை கிளிக் செய்க.
(iv) தோன்றும் மேல்மீட்பு பட்டியில்,Send To என்ற தேர்வைக் கிளிக் செய்து, அதில் தொடர்புடைய USB flash இயக்கியைத் தேர்வு செய்யவும்.
27.
இணைய பயன்பாட்டின் வழிக்காட்டிகள்:
1. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கணினியைப் பயன்படுத்தக் கூடாது.
2. பிற பயனர்களின் வேலையில் குறுக்கிடும் வகையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த கூடாது.
தகவல்களைத் திருடக் கூடாது.
1.கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது.
2.மென்பொருளை நகலெடுத்தல் அல்லது உரிமையில்லா நகலாக்கத்தை (Printed copies) வாங்கக் கூடாது. இலவசம் இல்லா மென்பொருளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
3.அனுமதியின்றி பிறருடைய கணிப்பொறி வணங்களைப் பயன்படுத்தக் கூடாது.
4.பிறருடைய வேலையை தன்னுடையது என்று உரிமைக் கோரக் கூடாது.
5. ஒரு மென்பொருளை உருவாக்குவதற்கு முன் அதன் சமுதாய தாக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவும்.
6.கணினியை தொடர்புக்குப் பயன்படுத்தும் பொழுது, இருக்கும் உறுப்பினர்களுடன் மரியாதையாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்.
28.
தரவுகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கம்பிகள் மூலம் அனுப்ப படுவதற்குப் பயன்படும் தொழில்நுட்பம் கம்பித் தொழில்நுட்பம் எனப்படும்.
எல்லைக்குட்பட்ட / வழிகாட்டு ஊடகம் :
தரவுப் பரிமாற்றத்தில் மூன்று வகையான எல்லைக்குட்பட்ட ஊடகங்கள் உள்ளன.அவை
1. முறுக்கிய இரட்டை வடம் (Twisted-Pair Cable)
2. அணையச்சு வடம் (Coaxial Cable)
3. இழை ஒளியியல் வடம் (Fibre-Optic Cable)
4. Twisted Pair மற்றும் Co axial cable வடங்கள் உலோக கடத்திகளைப் பயன்படுத்தி மின்னோட்ட முறையில் சமிக்ஞைகளைப் பெற்று இடம்பெயரச் செய்கிறது.
5. Fibre - optic ஒளி முறையில் சமிக்ஞைகளைப் பெற்று இடம் பெயரச் செய்கிறது.
முறுக்கிய இரட்டை வடம் (Twisted Pair Cable)
1. ஒரு Twisted-pair ஆனது இரு கடத்திகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதனுடைய நெகிழி காப்பீட்டால் ஒன்றோடொன்று முறுக்கப்பட்டுள்ளது.
2. இதிலுள்ள ஒரு கம்பியானது பெறுநருக்கான சமிக்ஞைகளையும் மற்றொன்று தரைக் குறிப்புக்காக மட்டும் பயன்படுகிறது.
3. ஒரு கம்பியில் அனுப்புநர் அனுப்பும் சமிக்ஞைகளுடன் தடங்கல் சத்தம் மற்றும் குறுக்கீடு பேச்சு இரைச்சல் தேவையற்ற சமிக்ஞைகளை உருவாக்கலாம்.
Twisted pair-ன் இரண்டு வகைள் :
1. பாதுகாப்பற்ற முறுக்கிய இரட்டை வடம் (Unshielded Twisted Pair (UTP))
2. பாதுகாப்பான முறுக்கிய இரட்டை வடம் (Shielded Twisted Pair (STP)).
பாதுகாப்பற்ற முறுக்கிய இரட்டை வடம் :
1. இரண்டு காப்பீட்டு செம்புக் கம்பிகளைக் கொண்டிருக்கும்.
2. ஒரே மாதிரியான இணைப்பின் மின் குறுக்கீட்டைக் குறைக்க இந்தக் கம்பிகள் சுருள் வளைய வடிவில் ஒன்றோடொன்று குறுக்கப்பட்டிருக்கும்.
3. நெகிழிக் காப்பீடுகள் வண்ணமிடப்படுவதின் காரணம் அடையாளம் காண்பதற்கு ஆகும்.
பாதுகாப்பான முறுக்கிய இரட்டை விடம் (Shielded Twisted Pair Cable) :
1. இந்த வடம் உலோகத்தகடு மற்றும் பின்னப்பட்ட கம்பி வலையைக் கொண்டிருக்கும்.
2. மின் காந்த சத்தம் ஊடுருவல் உலோக உறை மூலம் தடுக்கப்படுகிறது.
3. உலோக உறையானது குறுக்கீடுகளை நீக்குகிறது.
4. பாதுகாப்பற்ற முறுக்கிய இரட்டை மற்றும் இணையச்சுகளை விட வேகமானது.
5. ஒப்புமை மற்றும் இலக்க வகை பரிமாற்றத்திற்குப் பயன்படுகிறது.
இணையச்சு வடம் (Coaxial cable) :
1. ஒன்றுக்கொன்று இணையான இரண்டு கடத்திகளைக் கொண்டிருப்பதால் இது இணையச்சு வடம் என அழைக்கப்படுகிறது.
2. மையக்கடத்தியாக இதில் செம்பு பயன்படுகிறது. PVC யால் சூழப்பட்டுள்ளது.
3. வெளிப்புற உலோக மடக்கு சத்தத்திற்கு எதிராக கேடயமாகவும், சுற்றுகளை முடிக்கும் கடத்தியாக இரண்டாம் மடக்கு பயன்படுகிறது.
4. வெளிப்புறக் கடத்தி காப்புறையில் உறையிடப்பட்டிருக்கிறது. வெளிப்புறப் பகுதி என்பது முழுக் கம்பிகளையும் பாதுகாக்கின்ற நெகிழி உறையாகும்.
பொதுவான இணையச்சு தரங்களாவன :
1. 50-Ohm RG-7 அல்லது RG-11 : அடத்தியான ஈதர்நெட் பயன்படும்.
2. 50-Ohm RG-58 : மெல்லிய ஈதர்நெட்டுடன் பயன்படும்.
3. 75-Ohm RG-59 : கேபிள் தொலைகாட்சியில் பயன்படுகிறது.
4. 93-Ohm RG-62 : ARCNET-ல் பயன்படுகிறது.
நிறைகள் :
1. மிக அதிக தொலைவில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் பயன்படுகிறது.
2. இலக்க சமிக்ஞைகளை 10 Mbps அதிக வேகத்தில் கடத்துகிறது.
3. அதிகமான சத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது.
4. எந்தத் தரவையும் உருக்குலைவு இல்லாமல் (distortion) கடத்துகிறது.
இழை ஒளியியல் வடம் (Fiber Optic Cable) :
1. கண்ணாடி அல்லது நெகிழியால் ஆனது. ஒளி வடிவில் சமிக்ஞைகளை கடத்துகிறது.
2. Fibre Optical Cable ல் ஒளி ஒரு வழியில் மட்டுமே நகர்கிறது.
3. இருவழித் தகவல் தொடர்பில் - சாதனங்களுக்கு இடையில் இரண்டாவது தகவல் தொடர்பு. கண்டிப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
4. இது பிரதிபலிப்பு முறையில் ஒளியை ஊடகத்தின் வழியாக வழி நடத்துகிறது.
5. கண்ணாடி அல்லது நெகிழியின் மையம் குறைந்த அடர்த்தியான கண்ணாடி அல்லது நெகிழி வெளியுறையால் சூழப்பட்டுள்ளது.
6. இரண்டு பொருள்களின் அடர்த்திக்கு உள்ள வேறுபாடு, மையத்தின் மூலமாக நகரும் ஒளிக்கற்றையானது வெளியுறையின் மீது ஒளிவிலகல் ஆகாமல் பிரதிபலித்து செல்வது போல இருக்க வேண்டும்.
இழை ஒளியியல் வட இணைப்பான்கள் :
1. கேபிள் டிவிக்கு சந்தாதாரர் இணைப்பு (Subscriber Channel (SC)) பயன்படுத்தப்படுகிறது.
2. இது தள்ளு இழு பூட்டு முறையைப் பயன்படுத்துகிறது.
3. வலையமைப்பு சாதனங்களில் உள்ள கம்பிகளை இணைக்க நேரான முனை (Straight-Tip (St)) இணைப்பான் பயன்படுத்துகிறது.
4. MT-RJ என்ற இணைப்பான் இரண்டு இழைகளைப் பயன்படுத்தி அவற்றை ஒரே வடிவமாக ஒருங்கிணைத்து RJ45 இணைப்பான் போல தோற்றமளிக்கச் செய்கிறது.
29.
1. விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் மற்றும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் நிகழ்த்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. விற்பனையாளர், தனது தயாரிப்புகளை விளக்கக் கூடிய, நிகழ்த்தலை வாடிக்கையாளர்கள் மற்றும் மேலாண்மையாளர்களுக்கு சிறந்த முறையில் தர முடியும்.
30.
வடிவூட்டல் கருவிப் பட்டையிலுள்ள பணிக்குறிகள் :
1.எழுத்துரு கீழிறக்கு பெட்டி : பலவேறு எழுத்து வடிவுகளை இந்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
2.எழுத்து அளவு கீழிறக்கு பெட்டி: இது எழுத்துருக்களின் அளவை மாற்றி அமைக்கப் பயன்படுகிறது.
3. எழுத்துருக்களை தடிமனாக்குதல் பணிக்குறி: இதனைப் பயன்படுத்தி தரவுகளை தடித்த எழுத்துக்களில்
காட்டலாம் இதற்கான குறுக்குவழி Ctrl+B.
4. சாய்வெழுத்து பணிக்குறி : இது தரவுகளை சாய்ந்த வடிவில் காட்டப்பயன்படும். இதற்கான குறுக்கு
வழி Ctrl+I.
5. அடிக்கோடிக்கல் பணிக்கறி : இது தரவுகளை அடிக்கோடிட்டுக் காட்டப் பயன்படுகிறது, இதற்கான
குறுக்குவழி Ctrl+U.
6. இசைவு பணிக்கறிகள் - இவை தரவுகளை இடது, வலது, மையம் மற்றும் நேர்த்தி இசைவுகளில்
ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதற்கான குறுக்கு வழிகள் இடது-Ctrl+L. வலது-Ctrl+R. மைய-Ctrl+E மற்றும் நேர்த்தி-Ctrl+J.
7.எண் வடிவமைப்பு பணிக்குறிகள் :
பணக் குறியீடு (Currency) பணிக்குறி, சதவீதம் (Percent) பணிக்குறி, இயல்பு நிலை (Standard) பணிக்குறி,
தசம புள்ளியைச் சேர்த்தல். தசம புள்ளியை குறைத்தல் போன்ற பணிக்குறிகளைப் பயன்படுத்தலாம். இவற்றுள்,
பணக் குறியீடு, சதவீதம் மற்றும் இயல்பு நிலைக்கு முறையே Ctrl+Shift+4, Ctrl+Shift+5 மற்றும் Ctrl+Shift+6 குறுக்கு
வழிகளைப் பயன்படுத்தலாம்.
8. வன் தன்னால் மிகுப்பு மற்றும் குறைப்புப் பணிக்குறிகள் : நுண்ணறையில் உள்ள தரவுகளை
உள்தள்ளப் பயன்படுகிறது.
9.எல்லைப் பணிக்குறி (Border) : எல்லையின் வகை. பின்புற நிறம் மற்றும் எழுத்து நிறம்
பணிக்குறிகள் முறையே அட்டவணைத்தாள் கோடுகளின் நிறம், பின்புற வண்ணம் மற்றும் தரவுகளின்
நிறத்தை மாற்றப் பயன்படுகிறது.
31.
1.அட்டவணைத் தாளில் வேண்டிய அளவு நுண்ணறைகளைத் தேர்வு செய்து கொள்ளவும்.
எ. கா : A1 முதல் A20 வரையிலான நுண்ணறைப் பரப்பைத் தேர்வு செய்யலாம்.
2.Edit -->Fill --> Series என்றக் கட்டளையைத் தேர்வு செய்தால் Fill Series உரையாடல் பெட்டி தோன்றும்.
3. அதில் Direction என்பதில் Down என்ற தேர்வுப் பொத்தானை தேர்வு செய்யவும்.
4. Series Type என்பதில் 'Growth' என்ற தேர்வுப் பொத்தானையும் தேர்வு செய்யவும்,
5. Start Value என்பதில் 5 என்று உள்ளிடவும்.
6. End Value என்பதில் 2560 என்று உள்ளிடவும்.
7.Increment என்பதில் 2 என்று உள்ளிட்டு, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
8. படத்தில் உள்ளவாறு எண்வரிசை உருவாக்கப்படும்.
| A | |
| 1 | 5 |
| 2 | 10 |
| 3 | 20 |
| 4 | 40 |
| 5 | 80 |
| 6 | 160 |
| 7 | 320 |
| 8 | 640 |
| 9 | 1280 |
| 10 | 2560 |
32.
I. பரவல் இயக்க அமைப்பு: டிஜிட்டல் பிணையம் (இணைய தளம்/உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட தரவு மற்றும் பயன்பாடுகளை இந்த அம்சம் கவனித்து கொள்கிறது.
பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் இருக்கும் கோப்புகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவைக் கையாள முடியும். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியில் உள்ள கோப்புகளைக் கையாளுவதைப் போன்று உணருவர்.
II. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1. ஓரே இடத்தில் உள்ள ஒரு பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றோரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2. பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்.
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
4. புரவலன்/புரவலர்(Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
33.
கணிப்பொறி நினைவகம் என்பது மனித மூளையைப் போன்றதாகும். கணிப்பொறி நினைவகம் தரவுகளையும் கட்டளைகளையும் சேமித்து வைக்கப் பயன்படுகிறது. நினைவத்தில் சேமித்து வைக்கப்பட்ட தரவுகளும் கட்டளைகளும் இரண்டு வகையில் கையாளப் படுகின்றன. (படிக்க/எழுத) அவை :
1. தொடர்ச்சியான அணுகல் முறை
2.நேரடி அணுகல் முறை
1. தொடர்ச்சியான அணுகல் முறை :
நினைவகம் முதலிலிருந்து கடைசி வரை ஒவ்வொன்றையும் வரிசையாக அணுகும்.
2.நேரடி அணுகல் முறை:
நினைவகம் ஒவ்வொன்றாக அணுகுவதற்குப் பதிலாக நேரடியாக அணுகும்.

34.
| கணிப்பொறியின் தலைமுறை |
காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் |
நிறை / குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை |
1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes ) |
1.அளவில் பெரியது. |
| இரண்டாம் தலைமுறை |
1955-64 | திரிதடையகம் (Transistors ) |
1.முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. eg :IBM 1620,UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை |
1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC ) |
1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது . |
| நான்காம் தலைமுறை |
1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1. சிறியது மற்றும் வேகமானது. 2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது . 3. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின . |
| ஐந்தாம் தலைமுறை |
1980-இன்று வரை | மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் Ultra Large Scale Integration (ULSI) |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3.கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது . 4. நிழற்பட்டங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன். 5.செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் . |
| ஆறாவது தலைமுறை |
எதிர் காலத்தில் | செயற்கை அறிவு | 1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. 2.கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும். 3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல். 4. இயற்கை மொழிச் செயலாக்கம். 5. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல். |
35.
அட்டவணையின் அளவை விரைவாக மாற்ற, அட்டவணையின் ஒரத்திற்கு சுட்டெலியை நகர்த்தினால் சுட்டியின் சுட்டி இரு தலை கொண்ட அம்பு குறியாக மாறும். சுட்டியை அழுத்தி அட்டவணையின் எல்லையை புதிய அளவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
1. வரிசையின் உயரத்தை மாற்றியமைக்க:
செருகும் புள்ளியை உயரம் மாற்றப்பட வேண்டிய வரிசையின் கிடைக்கை எல்லையின் மீது நகர்த்தினால், செருகும் புள்ளி இரு தலை கொண்ட அம்புகுறியாக மாறும், இதை அழுத்திக் கொண்டே நகர்த்தினால் வரிசையின் உயரத்தை மாற்ற முடியும்.
2. நெடுவரிசையின் அகலத்தை மாற்றியமைக்க:
செருகும் புள்ளியை அகலம் மாற்றப்பட வேண்டிய நெடுவரிசையின் நெடுக்கை எல்லையின் மீது நகர்த்தினால், செருகும் புள்ளி இரு தலை கொண்ட அம்புகுறியாக மாறும், இதை அழுத்திக் கொண்டே நகர்த்தினால் நெடுவரிசையின் அகலத்தை மாற்ற முடியும்.
3. உரையாடல் பெட்டியின் மூலம் நெடுவரிசையின் அகலத்தை மாற்றியமைக்க:
(i) நெடுவரிசையில், மாற்றியமைக்கப்பட வேண்டிய அகலத்தை துல்லியமாகத் தேர்வு செய்த பின் அதை மாற்ற Table→Table Properties என்ற கட்டளையை தேர்வு செய்தால் Table Format உரையடால் பெட்டி தோன்றும்.
(ii) நெடுவரிசையின் அகலத்தை மாற்றியமைக்க Columns என்ற தொகுதியை தேர்வு செய்து Column Width சுழற்ப்பெட்டியில் நெடுவரிசையின் புதிய அகலத்தை மாற்றலாம்.
(iii) OK பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
(iv) நெடுவரிசையின் அகலம் புதிய மதிப்பில் மாற்றப்பட்டிருக்கும்.
36.
1. திரைமுகப்பிலிருந்து, மறுசுழற்சி தொட்டியைத் திறக்கவும்.
2. அதில், அழிக்கப்பட்ட கோப்புகள் அல்லது கோப்புறைகள் தோன்றும், மீட்டெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் மீது வலது கிளிக் செய்யவும், அப்போது தோன்றும் மேல் மீட்புப் பெட்டியிலிருந்து Restore தேர்வைக் கிளிக் செய்யவும்.
3. மறுசுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளையும் மீட்டெடுக்க , Restore all என்ற பணிக்குறியை கிளிக் செய்யவும்.
37.
1. மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும்.
2. இது நினைவகம், உள்ளீடு, மட்டும் வெளியீடு போன்ற மற்ற அனைத்துச் சாதனங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.
3. இது தரவை உள்ளீடாகப் பெற்று கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
38.
1. மின்னஞ்சல் என்பது மக்கட்களுக்கிடையே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் வழிமுறையாகும்.
2. கணினி வலையமான இணையத்தின் மூலம் மின்னஞ்சல் இயக்கப்படுகிறது.
3. மின்னஞ்சல் சேவையகம் செய்திகளை ஏற்றுக்கொள்ளுதல், முன்னோக்குதல், வழங்கல் மற்றும் சேமித்து வைக்கிறது.
மின்னஞ்சல் முகவரியின் அமைப்பு serrname @ domain name
எ.கா : raman @ gmail.com
4. மின்னஞ்சல் முகவரி @ குறியீட்டால் இரண்டு பகுதிகளாகக் குறிக்கப்படுகிறது. முதல் பகுதி raman என்பது பயனர் பெயர். இது முகவரியை அடையாளப் படுத்துகிறது.
5. இரண்டாம் பகுதி gmail. com மின்னஞ்சல் சேவையகத்தின் களப்பெயராகும்.
39.
1.நீக்க விரும்பும் சில்லுவை தேர்ந்தெடுக்கவும்.
2.Edit --> Delete slide என்ற கட்டளை மூலம். சில்லின் மீது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தி வரும் மேல் மீட்புப் பட்டியில் Delete slide என்பதைத் தேர்வு செய்து நீக்க வேண்டும்.
3. Delete பொத்தானை அழுத்த வேண்டும்.
40.
அடிக்குறிப்பை உருவாக்குதல் :
1. Format--> page என்றக் கட்டளையின் மூலம் Page style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
2. Footer தொகுதியைக் கிளிக் செய்து, Footer on தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும்.
பக்க எண்களைச் சேர்த்தல் :
1. Edit - Headers & Footers கட்டளையைத் தேர்வு செய்தால் Headers/Footers உரையாடல் பெட்டி தோன்றும்.
2. Footer தொகுதியைத் தேர்வு செய்து, Footer கீழிறங்கு பட்டியில் பெட்டியில் Page 1 என்பதைத் தேர்வு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
41.
1.கால்க் (Calc) என்பது ஓபன் ஆபீஃஸ் (Open Office) தொகுப்பில் உள்ள அட்டவணை செயலியாகும்.
2. இது ஒரு பிரபலமான திறந்த மூல அட்டவணைச்செயலி ஆகும்.
3. இதனை தற்போது 'அபாச்சி' நிறுவனம் பராமரித்து வருகிறது.
4. 1985ல் ஜெர்மன் நிறுவனமான டிவிஷன் உருவாக்கிய Staroffice Cale ஓபன் ஆஃபிஸ் கால்கின் மூலப் பயன்பாடகும்.
42.
| CD | DVD |
|---|---|
| 1. ஒரு சாதாரண CDன் கொள்ளளவு 700MB ஆகும். |
DVD-4.7GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6-CDக்களின் கொள்ளளவுக்குச் சமமாகும். |
| 2. தரவு எழுதும்/ படிக்கும் வேகம் குறைவு. |
தரவு எழுதும்/ படிக்கும் வேகம் அதிகம். |
| 3. CD-Drive மற்றும் DVD Drive களில் இயக்க முடியும். |
DVD - Drive களில் மட்டுமே இயக்க முடியும். |
| 4. இது பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனது |
இது கண்ணாடியிழை வட்டு ஆகும் |
43.
எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்ற, ஒவ்வொரு எண்ணிலை எண்ணிற்கும் நிகரான இருநிலை எண்களை மூன்று பிட்டுகளில் எழுத வேண்டும்.
உ) \({ \left( 645\right) }_{ 8 }\quad \longrightarrow { \left( ? \right) }_{ 2 }\)

\(\therefore \quad { \left( 645\right) }_{ 8 }=\quad { \left( 110100101\right) }_{ 2 }\quad \)
44.
கணிப்பொறிகள் பயன்பத்தப்படும் பல்வேறு துறைகளில் சில:
1. கல்வி மற்றும் ஆராய்ச்சி
2. சுற்றுலா
3. வானிலை முன்னறிவிப்பு
4. சமூக வலைதளம்
5. மின் வணிகம் (e-commerce)
6. இரயில்,வானுர்தி மற்றும் திரைப்படம் முன்பதிவு
7. பொழுதுபோக்கு
45.
1. File\(\rightarrow \)Properties\(\rightarrow \)Statistics விருப்பத்தை தேர்வு செய்யவும்.
2. முழு ஆவணத்தில் உள்ள சொல்லின் எண்ணிக்கை மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்த ஆவணத்தின் பண்புகளைக் காட்டும் உரையாடல் பெட்டியில் காணலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards