11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
XI Public Model Question
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஒருவர் அனுமதியற்ற கணினி அணுகலை,ஆதாயம் பெற செயல்படும் சொற் கூறு எது?
திம்பொருள்
ஒற்றயறி
களவாடல்
பெருக்கி
2.
பொட்டலங்களில் உள்ள வழிப்படுத்தும் செயல்முறையால் வலையமைப்புகளுக்கு இடையே பொட்டலங்களை அனுப்பும் சாதனங்களை கண்டறிக
ஃபிரிடிஜ்
தீச்சுவர்
திசைவி
மேலே உள்ள அனைத்தும்
3.
படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?
புதிய நிகழத்துததலை உருவாக்கல்
புதிய வரைநிலையை உருவாக்கல்
கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்
மேற்கண்ட எதுவுமில்லை
4.
சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?
F6
F9
F5
F10
5.
ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?
படிவம் (Form)
தரவு (Data)
பட்டியல் (List)
வடிவமைப்பு (Format)
6.
Open Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது?
Format→Row→Show
Format→Show→Row
Format→Display→Row
Format→Row→Display
7.
அட்டவணைத்தாளிற்கு நுண்ணறை சுட்டிடயை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?
Enter
Tab
Shift + Tab
Delete
8.
Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?
Settings
Files
Dash
V Box_Gas_5.2.2
9.
பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?
செயல்முறை மேலாண்மை
நினைவக மேலாண்மை
பாதுகாப்பு மேலாண்மை
நிரல் பெயர்ப்பி சூழல்
10.
CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?
தொகுதி
பகுதி
பிட்ஸ்
தடங்கள்
11.
NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது
NOT(OR)
NOT(AND)
NOT(NOT)
NOT(NOR)
12.
11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?
F
E
D
B
13.
வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?
Mozilla / Netscape
LDAP Address Data
Outlook Address Book
Windows System Address Book
14.
Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?
Text பணிக்குறி
Text Box பணிக்குறி
Draw பணிக்குறி
Draw Box பணிக்குறி
15.
ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?
Ctrl + F1
Ctrl + F4
Ctrl + F5
Ctrl +F7
16.
சொற்செயலாக்கம் என்றால் என்ன?
17.
இழுத்து விடுதல்மூலம் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?
18.
வரைவி என்றால் என்ன?
19.
TSCII என்றால் என்ன?
20.
கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக
21.
Impress யில் வார்ப்புரு –வரையறு
22.
தாளை உறைய செய்தலின் பயன் யாது?
23.
நகலெடுத்தல்,வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
24.
நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
25.
ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.
26.
விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவற்க்கான வழிகளை விவரி.
27.
சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?
28.
இணைப்பு அமைப்பை வரையறு,திட்ட வரைபடத்தப் பயன்படுத்தி வேறுபட்ட இணைப்பு அமைப்புகளை விவரிக்கவும்
29.
முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?
30.
கீழ்க்கண்ட புலங்களைக் கொண்ட மாணவர் தரவுத்தளத்தை அட்டவணைத் தாளில் உருவாக்குக.வரிசை எண்,பெயர்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல்,மொத்தம்,சராசரி
31.
காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக
32.
ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக.
33.
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக
34.
ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.
35.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
36.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows)என்றால் என்ன?
37.
கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
38.
இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?
39.
நிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?
40.
அட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக.
41.
ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக
42.
தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக
43.
(25F)16 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக
44.
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
45.
மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக
1.
(a)
திம்பொருள்
2.
(a)
ஃபிரிடிஜ்
3.
(a)
புதிய நிகழத்துததலை உருவாக்கல்
4.
(a)
F6
5.
(a)
படிவம் (Form)
6.
(a)
Format→Row→Show
7.
(a)
Enter
8.
(a)
Settings
9.
(a)
செயல்முறை மேலாண்மை
10.
(a)
தொகுதி
11.
(a)
NOT(OR)
12.
(a)
F
13.
(a)
Mozilla / Netscape
14.
(a)
Text பணிக்குறி
15.
(a)
Ctrl + F1
16.
சொற்செயலாக்கம் என்பது கணிப்பொறியில் பொருத்தமான ஒரு மென் பொருளைப் பயன்படுத்தி உரை ஆவணங்களை உருவாக்குதல், பதிப்பித்தல், கையாளுதல்,பரிமாற்றுதல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுக்கும் செயற்பாடாகும்.
17.
1. வலது சாளரப் பகுதியில் நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. தேர்வு செய்த கோப்பு மற்றும் கோப்புறையை, இடது சாளரப் பகுதியில் கோப்புறைப்பட்டியில் இழுத்து விட வேண்டும்.
18.
1. வரைவி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் ஆகும்.
2. தாள்களில் வரைகலை வெளியீட்டை அச்சிடப் பயன்படுகிறது
3. படங்களை வரைய ஒற்றை நிறம் அல்லது பல வண்ணம் கொண்ட பேனாக்களைக் பயன்படுத்துகிறது.
19.
1. கணிப்பொறி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் நமது தமிழ் மொழியைக் கையாள உருவாக்கப்பட்ட முதல் குறியீட்டு முறை தான் TSCII (Tamil Seript Code for Information Interchange) என்பதாகும்.
2. இந்த குறியீட்டு முறை 2007ம் ஆண்டில், ICANN-ன் IANA (Internet Assigned Numbers Authority) யில் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குறியீட்டு முறை தழுவியே தமிழுக்கான முறையும் வடிவமைக்கப்பட்டது.
20.
வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் முனையம் எனப்படும். இவை தகவலை அனுப்பவும் பெறவும் முடியும்.
21.
1.வார்ப்புரு (Template) என்பது புதிய நிகழ்த்தலை உருவாக்க முன்னரே வடிவமைக்கப்பட்ட நிகழ்த்தல் வடிவமைப்பாகும்.
2.From Template என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால், புதிய நிகழ்த்தலை உருவாக்க ஏற்கனவே இருக்கக் கூடிய Template ஐப் பயன்படுத்தபட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம்.
3. 'Introducing a New Product' மற்றும் 'Recommendation of a strategy' போன்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட வார்ப்புருவை சில்லுகளின் தொகுப்பாகும்.
22.
1. உறையச் செய்தல் என்பது தேவையான வரிசைகளை அட்டவணைத்தாளின் மேல்பகுதியிலும், தேவையான நெடுவரிசைகளை அட்டவணைத்தாளின் இடது பக்கத்திலும் அல்லது இரண்டையும் நிலைக்கச் செய்தலாகும்.
2. அட்டவணைத்தாளுக்குள் திரை உருளச் செய்யும்போது உறையச் செய்த வரிசைகளும், நெடுவரிசைகளும் காணும் நிலையிலேயே இருக்கும்.
23.
| செயல் | குறுக்குவழிச்சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl +C |
| வெட்டுதல் | Ctrl +X |
| ஓட்டுதல் | Ctrl +V |
24.
நிரலில் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளைகளின் முகவரியை சேமித்து வைக்கப் பயன்படும், மையச்செயலகத்தில் உள்ள ஒரு சிறப்பு பதிவேடே நிரல் கவுண்ட்டர் எனப்படும்.
25.
1. ஆவணத்தில் எந்த இடத்தில் சிறப்பு எழுத்துக்கள் தோன்ற வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert→Special Character என்ற கட்டளையைத் தேர்வு செய்தால், தோன்றும் Special Character உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான சிறப்பு எழுத்தின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
3. தேவையான சிறப்பு எழுத்து கண்டறிய முடியவில்லை எனில் வேறு எழுத்துரு வகையைத் தேர்ந்தெடுத்து அந்த சிறப்பு எழுத்தைப் பெறலாம்.
4. OK பொத்தானை கிளிக் செய்யவும்.
26.
கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்தப் பயன்படும் வழிகள்:
* வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் மூலம்:
27.
1. நேர்மை : இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது பயனர். உண்மையாக இருத்தல் பண்பு சார்ந்த நன்னடத்தையாகும்.
2. நம்பகத்தன்மை : முக்கியமானத் தகவல்களை அனுமதியற்ற நபர்களுடன் பகிர்வதைத் தடுப்பதன் மூலம் நம்பகத் தன்மை பராமரிக்கப் படுகிறது.
3.மரியாதை : பிற பயனர்களின் தனிமையை (Privacy) மதிக்க வேண்டும்.
4.தொழில் சார் மனப்பாண்மை : பயனர் தொழிற்சார் நடத்தை மற்றும் சிறந்த நன்னடத்தை அணுகுமுறையையும் பராமரிக்க வேண்டும்.
5.சட்டத்தை மதிக்கல் : கணினி பயன்பாட்டில் கண்டிப்பாக பயனர் சட்டத்தை மதிக்க வேண்டும்.
6.பொறுப்புத் தன்மை : பயனர் உரிமை தன்மை மற்றும் பொறுப்பு நம்பகத் தன்மை மற்றும் உண்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
28.
வலையமைப்பை ஒழுங்குபடுத்தி, கம்பி இணைப்பு மூலம் பல்வேறு முனையங்களை (அனுப்புநர் மற்றும் பெறுநர்) இணைப்பது வலைய இணைப்பு அமைப்பாகும்.
1. பாட்டை இணைப்பு அமைப்பு (Bus Topology) :
1. ஒவ்வொரு கணிப்பொறியும் மற்றும் வலைச்சாதனங்களும் ஒரு பொதுவான பின்புல நேர்கோட்டு கம்பியில் (back bone) இணைக்கப்பட்டிருக்கும்.
2. அதிகபட்சமாக 30 முனையங்களை இணைக்க முடியும்.
பாட்டை இணைப்பு அமைப்பின் தனிச்சிறப்புகள்
1. தரவுகளை ஒரே திசையில் பரிமாற்றம் செய்யும்.
2. ஒவ்வொரு சாதனமும் ஒரே ஒரு கம்பி மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
2. நட்சத்திர இணைப்பு அமைப்பு (Star Topology) :
1. அனைத்து கணிப்பொறிகளும் ஒரு கம்பி மூலம் ஒரு மையத்துடன் (hub) அல்லது இணைப்பியுடன் (switch ) இணைக்கப்பட்டிருக்கும்.
2. இந்த மையமே நடு முனையாகும். இதனுடன் அனைத்து முனையங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
நட்சத்திர வலையின் சிறப்பம்சங்கள்
1. இந்த வகையில் ஒவ்வொரு முனையமும் மையத்துடன் தனது தனிப்பயன் (dedicated) இணைப்பில் இருக்கும்.
2. மையம் தரவுப் பாய்வின் LDDI உருவாக்கமாக (repeater) செயல்படுகிறது.
3. மர இணைப்பு அமைப்பு (TreeTopology) :
1. இந்த வகை இணைப்பு அமைப்பு. ஒரு மர அமைப்பு வடிவத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
2. இதில் உயர்மட்ட நிலையில், பெற்றோர் முனையம் உள்ளது. இது இரண்டாம் நிலையில் குழந்தை முனைகளுடன் தொடர்புடையது.
3. இந்த இரண்டாம் நிலை முனையங்கள் மூன்றாம் நிலை முனையங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.
4. அதே போல, மூன்றாம் நிலை. நான்காம் நிலையோடு இணைக்கப்பட்டு,இந்த இணைப்பு நிலை தொடரும்.
5. உயர்மட்டநிலைய முனையத்தைத் தவிர மற்ற அனைத்து நிலை முனையங்களுக்கும் பெற்றோர் முனையம் உள்ளது.
இது படிநிலை இணைப்பு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது .
மர இணைப்பு அமைப்பின் சிறப்பம்சங்கள்
1. பணி நிலையங்கள் அல்லது முனையங்கள் குழுக்களில் அமைந்தால் சிறந்தது.
2. பரந்த வலையமைப்பில் பயன்படுகிறது.
29.
1. வார்ப்புருக்கள் என்பவை மென்பொருளில் முன் வடிவமைத்தப் படிவங்கள் ஆகும்.
2. நிகழ்த்தல் உருவமைத்தலில் எளிதான முறை வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உருவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதேயாகும்.
3. Impress - ல் ஐந்து நிகழ்த்துதல் வார்ப்புருக்கள் உள்ளன. Prescntations என்பதன்கீழ் இரண்டு வார்ப்புருக்களும், Presentation backgrounds என்பதன்கீழ்மூன்றுவார்ப்புருக்களும் உள்ளன.
4. இரண்டு வகைகளுக்கான வேறுபாடு, 'Presentation' வார்ப்புருக்கள் மாதிரி தலைப்புகள் மற்றும் விஷயங்களைக் கொண்ட சில்லுகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும், "Presentation Background" வார்ப்புருக்கள் பின்னணி மற்றும் பின்னணிப் பொருட்களை மட்டுமே கொண்டிருக்கும்.
5. இரண்டு வகைகளும் முன் வடிவமைத்த நிகழ்த்துதல் மற்றும் வரைகலைப் பாணிகளைக் கொண்டிருக்கும்.
30.
1.Start → All program → Openoffice → Openoffice Calc என்றக் கட்டளை மூலம் புதிய அட்டவணைத் தாளைத் திறக்கவும்.
எ.கா : 10 மாணவர் தரவுகளைக் கொண்ட தரவுத்தளத்தை உருவாக்கலாம்.
2.A 1 நுண்ணறையில் 'வரிசை எண் என்றுத் தட்டச்சு செய்யவும்.
3.B1 நுண்ணறையில் 'பெயர்" என்றும்,
C1 நுண்ணறையில் 'தமிழ்' என்றும்,
D1 நுண்ணறையில் 'ஆங்கிலம்' என்றும்,
E1 நுண்ணறையில் 'கணிதம்" என்றும்,
F1 நுண்ணறையில் அறிவியல்' என்றும்,
G1 நுண்ணறையில் 'சமூக அறிவியல்',
H1 நுண்ணறையில் 'மொத்தம்" என்றும்,
I1 நுண்ணறையில் 'சராசரி' என்றும் தலைப்புகளைத் தட்டச்சு செய்யவும்.
3. A2 நுண்ணறையில் 1 என்று தட்டச்சு செய்து, AutoFil1 வசதி ' மூலம் A3:A11 நுண்ணறைப் பரப்பில்
2 முதல் 10 வரை வரிசை எண்களை உருவாக்கவும்.
4.B2:G11 நுண்ணறைப் பரப்பில் மாணவர்களின் பெயர் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,
சமூக அறிவியல் பாடங்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அந்தந்த நெடுவரிசையில் தட்டச்சு செய்யவும்.
5. H2 நுண்ணறையில் = sum(C2:G2) என்ற வாய்ப்பாட்டைத் தட்டச்சு செய்ய வேண்டும். இதனை H3 முதல் H11 என்ற நுண்ணறையில் நகல் எடுக்க வேண்டும்.
6.I2 நுண்ணறையில் = Average(C2:G2) என்ற வாய்ப்பாட்டைத் தட்டச்சு செய்ய வேண்டும். இதனை 13 முதல் 111 என்ற நுண்ணறையில் நகல் எடுக்க வேண்டும்.
7. File-->Save கட்டளை மூலம் என்று கோப்பின் பெயர் கொடுத்து சேமிக்கவும்.
31.
வழிமுறை : 1
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற விரும்பு புகின்றோமோ அந்த நெடுவரிசையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format –> Column –> Width என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
4. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 2
1 அகலம் மாற்றப்பட வேண்டிய நெடுவரிசைத் தலைப்பில் சுட்டியை வைத்து வலது கிளிக் செய்யவும்.
2. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
3. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 3
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற வேண்டுமோ. அந்த நெடு வரிசையை, அடுத்த வரிசையிலிருந்து
பிரிக்கும் கோட்டிற்கு சுட்டியை எடுத்துச் செல்லவும்.
2. சுட்டெலியின் சுட்டி இருதலை அம்புக்குறியாக மாறுவதைக் காணலாம்.
3. அந்த நிலையில் கிளிக் செய்து சுட்டியை இடப்புறம் அல்லது வலப்புறம் இழுத்து
அகலத்தைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்யலாம்.
32.
1. கணிப்பொறியை பயன்படுத்தி பயனர் செய்ய விரும்புவதை உறுதிப்படுத்துதல்.
2. பயனர் மற்றும் கணிப்பொறி இடையிலான எளிய ஊடாடுதல்.
3. கணிப்பொறியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட உடன் கணிப்பொறியின் செயல்பாட்டைத் தானாகவே தொடங்குவது (கணிப்பொறி இயக்குதல் Booting ).
4. உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்துவது.
5. முதன்மை நினைவத்தின் பயன்பாட்டை நிர்வகித்தல்.
6. பயனர் நிரல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
33.
I. படிக்க மட்டும் நினைவகம் (ROM):
1. படிக்க மட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம்.இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்ய முடியாது .
2. ROMல் கணனியை துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்கள சேமிக்கப்படும்.
3. ஒரு முறைத் தரவுகளை இதில் எழுதிவிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் படிக்க மட்டும் முடியும்.
4. ROM ன் உள்ளடக்கம் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை. இதனால் ROM அழியா நினைவகம் என்று அழைக்கப்படுகிறது .
II. நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (Programmable Read-Only Memory - PROM):
1. நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும்.இதில் தரவுகளை ஒருமுறை மட்டும் எழுத முடியும்.
2. PROM-ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும், PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
3. PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவமாக தயாரிக்கப்படும், ஆனால் P R O Mல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி எழுதப்படுகின்றது. இந்த வகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
III. நிரலாக்கு அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EPROM) Erasable Programmable Read-Only Memory :
1. அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
2. EPROM -ல் தகவல்கள் புற ஊதா ஓளி செலுத்தும் வரை சேமித்து வைக்கப்படுகின்றன.புற ஊதா ஓளியை செலுத்தி EPROM- ன் உள்ளடக்கத்தை அழித்து, மீண்டும் வேறு நிரல்களை எழுதலாம்.
3. EPROM பொதுவாக தனியாள் கணினியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உற்பத்தியலார்கள் கணினியை வழங்கும் முன் PROM-ன் உள்ளடக்கத்தை மாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்க வேண்டியவற்றை அழிக்க முடியும்.
IV. மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் (EEROM)Electrically Erasable Programmable Read-Only Memory :
1. ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும் .
2. இதில் உள்ளத் தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். மற்றும் PROM வகையைபோலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது.
3. மற்ற வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.
34.

உள்ளீட்டகம் :
உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது .எ.கா : விசைப்பலகை,சுட்டிப் போன்றவை.
மையச் செயலகம்:
1. மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும். இது தரவை உள்ளீடாகப் பெற்று கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
2. மையச்செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
i. கட்டுப்பாட்டகம்
ii. கணித ஏரணச் செயலகம்
iii. நினைவகம்.
(CU-Control Unit), கணித ஏரணச் செயலகம் (ALU- Arithmetic and Logic Unit ) மற்றும் (MU-Memory Unit ) நினைவகம் ஆகும்.
கணித ஏரணச் செயலகம் :
மையச்செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம். பல கணிப்பீட்டு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் மற்றும் சுருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது .
கட்டுப்பாட்டகம் :
மையச்செயலகம்-நினைவகம் மற்றும் உள்ளீடு /வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
வெளியீட்டகம்:
பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும்.
எ .கா: திரையகம்,அச்சுப்பொறி.
நினைவகம்:
தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.எ.கா: RAM தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம்நிலை நினைவகம் பயன்படுகிறது.
எ .கா : வன்வட்டு, CD-ROM.
35.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
36.
1. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மிகவும் பிரபலமான ஒரு "வரைகலை பயனர் இடைமுகம்" (GUI - Graphics User
Interface) இயக்க அமைப்பு ஆகும்.
2. இது பயனர் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இயக்க அமைப்பாகும்.
37.
1. 1837ம் ஆண்டு "அனலடிக்கல் இன்ஜின்" என்ற கருவியை வடிவமைத்த சார்லஸ் பாபேஜ், "கணிப்பொறியின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
2. "அனலடிக்கல் இன்ஜின்" - கணித ஏரணச் செயலகத்தையும், அடிப்படை கட்டுப்பாட்டு அமைவுகளையும். உள்ளிணைந்த நினைவகத்தையும் உள்ளடக்கியது.
3. இவரின் இந்த "அனலடிக்கல் இன்ஜின்" முதல் பொதுப்பயன் கணிப்பொறிகளை வடிவமைக்க அடிப்படையாக அமைந்ததால் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
38.
தேவையான வன்பொருட்கள் :
இணைய வழித் தொடர்பிற்குக் கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்று கட்டாயம் ஆகும்.
1. தொலைபேசி வழி இணைய இணைப்பிற்கு மோடம் (modem) பயன்படுகிறது.
2. NIC - Network Interface Card (கம்பி / கம்பியில்லா) வசதி இணையத்தை இணைக்கத் தேவைப்படும் மிக முக்கியமான வன்பொருளாகும்.
3. செல்லுலார் வலையகம் (cellular network) மூலம் இணையத்தில் இணைய வன்பூட்டு (dongle) பயன்படுகிறது.
4. Wi - Fi திசைவி (Router) அல்லது ஹாட்ஸ்பாட் (Hotspot) கம்பியில்லா வலையகத்தைப் பயன்படுத்தி இணையகத்துடன் இணைக்கப் பயன்படுகிறது.
5. செல்லுலார் வலையகத்தை ஆதரிக்கும் மின்னணு சாதனம் தொலைபேசி இணைப்பி (dial up connection), ISDN, DSL, கேபிள் TV, கம்பியில்லா வலையகம் மூலம் இணையத்தில் இணைத்தல்.
தேவையான மென்பொருள்கள் :
இயக்க அமைப்பானது
1. TCP/IP (Transfer Control Protocol/ Internet Protocol)
2. SMTP (Simple Mail Transfer Protocol)
3. FTP (File Transfer Protocol).
4. HTTP (Hyper Text Transfer Protocol)
5. HTTPS (Hyper Text Transfer Protocol Secured) ) நெறிமுறைகளை ஆதரிக்கிறது.
உலவிகள் (Broswers) மற்றும் இணைய வாடிக்கையாளரான (client) outlook gmail, whatsapp, facebook, twitter மூலம் வலைப் பயன்பாடுகளை அணுகலாம்.
39.
1. முதல் சில்னு பொதுவாக தலைப்பு சில்லுவாக இருக்கும். சில்லுவின் அமைப்பை அதன் நோக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கவும். முன் வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை, பணிப் பலகத்திலுள்ள Layout பிரிவிலிருந்து பயன்படுத்தலாம். பொருத்தமான அமைப்பானது தலைப்பு மற்றும் உள்ளடக்கம் கொண்ட தலைப்பு சில்லுவாகும்.
2. பணிப்பலகத்தின் அமைப்பு பிரிவில் ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்வதன் மூலம் இது பணியிடத்தில் தோன்றும், ஒரு தலைப்பை உருவாக்க 'Click to add-title' ஐ கிளிக் செய்து, பின் உரையைத் தட்டச்சு செய்யவும்.
3. தலைப்பின் வடிவமைப்பிற்கு மாற்றங்கள் செய்வதற்கு F11 விசையை அழுத்தவும். அல்லது தலைப்பு நிகழ்த்துதலை வலது கிளிக் செய்கையில் வரும் மேல் மீட்பு பட்டியில் இருந்து Modify-ஐ தேர்வு செய்யலாம்.
4. தலைப்பு சில்லு அமைப்பைப் பயன்படுத்தினால் "Click to add text" யை கிளிக் செய்து, உரையை தட்டச்சு செய்ய வேண்டும். வடிவமைப்பு மாற்றங்கள் இன்னும் செய்ய இருந்தால் மேல் கூறியதை மீண்டும் செய்யவும்.
40.
1. Format --> Print Ranges --> Edit தேர்வு செய்யவும்.
2. "Edit Print Ranges" உரையாடல் பெட்டியில் "Rows to repeat" க்கு கீழே வரும் உரைப்பெட்டியில் வரிசைகளை உள்ளீடு செய்யவும்.
எ.கா : வரிசை, 1 மற்றும் 2 ஐ மீண்டும் பெற (repeat) $1 : $2 என்று தட்டச்சு செய்தால் "Rows to repeat" என்றத் தேர்வு"_none_"ல் இருந்து "_user defined_" எனத் தானாகவே மாற்றம் பெறும்.
41.
| வடிவூட்டல் தேர்வு | விசைப்பலகை குறுக்கு வழி |
பயன் |
| எழுத்துரு வகை | - | எழுத்துரு வகையை மாற்றப் பயன்படுகிறது. |
| எழுத்துரு அளவு | - | எழுத்துருக்களின் அளவை மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
|
தடிமனாக்குதால் |
Ctrl+B | தரவை தடிமனாக்குவதற்கு பயன்படுகிறது. |
| சாய்வெழுத்தாக்குல் | Ctrl+I | தரவை சாய்வெழுத்தாக மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
| அடிக்கோடிடுதல் | Ctrl+U | தரவுகளை அடிக்கோடிடுவதற்கு, |
| வலது இசைவு | Ctrl+L | நுண்ணறைக்குள் தரவுகளை வலது இசைவில் அமைக்க. |
| இடது இசைவு | Ctrl+R | நுண்ணறைக்குள் தரவுகளை இடது இசைவில் அமைக்க. |
| மைய இசைவு | Ctrl+E | நுண்ணறைக்குள் தரவுகளை மைய இசைவில் அமைக்க. |
| நேர்த்தி இசைவு | Ctrl+J | நுண்ணறைக்குள் தரவுகளை வலது மற்றும் இடது ஓரங்களில் சமமானதாக மாற்றுவதற்கு |
| நுண்ணறை சேர்ப்பு | - | தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணறைகளை, ஒரே நுண்ணறையாக மாற்றுவதற்கு, |
42.
தரவின் அகலத்தைப் பொறுத்து நுண்செயலியைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
8-பிட் நுண்செயலி
16-பிட் நுண்செயலி
32-பிட் நுண்செயலி
64-பிட் நுண்செயலி
43.
| கொடுக்கப்பட்டபதினாறு நிலை மதிப்புகள் | 2 | 5 | F |
| 16 ன் அடுக்கு நிலை மதிப்பு | 162 | 161 | 160 |
| நிறை மதிப்பு | 256 | 16 | 1 |
| பெருக்கல் தொகை | 512 | 80 | 15 |
(25F)16 = 512 + 80 +15
(25F)16 = (607)10
44.
(i) உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
(ii) உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
45.
(i) மெயில் மெர்ஜ் வசதி முகவரித்தரவை ஒருங்கிணைத்து, அதை ஆவணத்தில் ஒன்றிணைத்து தேவையான வடிவமைப்பில் அச்சிடப் பயனருக்கு உதவி செய்கிறது.
(ii) பெயர்கள் மற்றும் முகவரியின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
(iii) ஒரு ஆவணத்தின் (கடிதப் படிவம்) பல நகல்களை பல்வேறு பெறுநர்களுக்கு பின்வரும் வசதிகளால் அனுப்பப்படும்.
1. மெயிலிங் (Mailing)
2. லேபில்ஸ் (Labels)
3. எனவலப்ஸ் (Envelopes)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards