11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
11th Revision Test Model
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
எந்த வலையகமாக இருந்தாலும் உலகளாவிய வகையில் கணினிகளை இணைப்பது எது?
இணையம்
புற இணையம்
அக இணயம்
WWW
2.
கட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக
LAN
WAN
MAN
மேலே கூறிய எவையுமில்லை
3.
உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?
விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்
குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு
அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு
4.
வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transistion
(அ) அல்லது (ஆ)
5.
வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?
பட்டியல்
வடிகட்டுதல்
வடிவமைத்தல்
செல்லுபடியாக்கல்
6.
ஒற்றைத் தாளை நீக்க எந்த கட்டளையத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
File→Sheet→Delete
Delete→Sheet→Delete
Sheet→ Delete
Edit→Sheet→Delete
7.
கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்
அட்டவனைச் செயலி
தரவுத்தளம்
சொற்செயலி
லினக்ஸ்
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்
நினைவகம்
செயலி
I/O சாதனங்கள்
இவை அனைத்தும்
9.
இயக்க அமைப்பானது ---------------------
பயன்பாட்டு மென்பொருள்
வன்பொருள்
அமைப்பு மென்பொருள்
உபகரணம்
10.
CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?
தொகுதி
பகுதி
பிட்ஸ்
தடங்கள்
11.
இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சை்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?
பூலியன் இயற்கணிதம்
வாயில்
அடிப்படை வாயில்கள்
தருவிக்கப்பட்ட வாயில்கள்
12.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
13.
பட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது?
View
Format
Table
Tools
14.
Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?
Ctrl + F5
Ctrl + F8
Ctrl + F10
Ctrl + F12
15.
திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?
பணிப்பட்டை
தலைப்புப் பட்டை
நிலமைப் பட்டை
கருவிப்பட்டை
16.
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
17.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?
18.
கணிப்பொறியின் பகுதிகள் யாவை?
19.
TSCII என்றால் என்ன?
20.
மின்னணு வணிகம் என்றால் என்ன?
21.
ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
22.
வரைபடம் என்றால் என்ன?
23.
நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?
24.
ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?
25.
ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.
26.
விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.
27.
சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?
28.
கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்
29.
சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?
30.
அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக
31.
பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்
| A | B | C | D | E | |
| 1 | Year | Chennai | Madurai | Tiruchi | Coimbatore |
| 2 | 2012 | 1500 | 1250 | 1000 | 500 |
| 3 | 2013 | 1600 | 1000 | 950 | 350 |
| 4 | 2014 | 1900 | 1320 | 750 | 300 |
| 5 | 2015 | 1850 | 1415 | 820 | 200 |
| 6 | 2016 | 1950 | 1240 | 920 | 250 |
2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரஙகளில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தரவுகளின் அடிப்படையில்,பின்வருவனவற்றுக்கு வாய்ப்பாடுகளை எழுதுக
(1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
(2) 2012 முதல் 2016ம் வரை கோயம்பத்தூரின் மொத்த விற்பனை
(3) 2015 முதல் 2016ம் ஆண்டுகளில் மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
(4) 2015 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை
(5) கோவையை ஒப்பிடுகையில்,சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யபட்டது
32.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.
33.
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
34.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
35.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
36.
பணிப்பட்டை என்றால் என்ன?
37.
வருடி (Scanner) குறிப்பு வரைக.
38.
WWW செயல்படும் முறை யாது?
39.
Master slide – என்பதை வரையறு
40.
தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக
41.
ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக
42.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்பு முகங்களை எழுதுக.
43.
கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65
44.
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
45.
ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.
1.
(a)
இணையம்
2.
(a)
LAN
3.
(a)
விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்
4.
(a)
Custom Animation
5.
(a)
பட்டியல்
6.
(a)
File→Sheet→Delete
7.
(a)
அட்டவனைச் செயலி
8.
(a)
நினைவகம்
9.
(a)
பயன்பாட்டு மென்பொருள்
10.
(a)
தொகுதி
11.
(a)
பூலியன் இயற்கணிதம்
12.
(a)
645
13.
(a)
View
14.
(a)
Ctrl + F5
15.
(a)
பணிப்பட்டை
16.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரை தேர்வு செய்யப்பட்டப்பின் Shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
17.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியில் இருந்து மறு சுழற்சி தொட்டியில் தங்காமல் நீக்க SHIFT விசையுடன் Delete விசையும் சேர்த்து அழுத்த வேண்டும்.
18.
1. கணிப்பொறி என்பது வன்பொருள் மற்றும் மென்பொருளின் கலவையாகும்.
2. வன்பொருள் என்பது கணிப்பொறியில் உள்ள பருப்பொருள்களான மதர்போர்ட் (motherboard), நினைவகம்(memory), திரையகம்(monitor) மற்றும் விசைப்பலகை.
3. மென்பொருள் என்பது கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளை அல்லது கட்டளைகளின் தொகுப்பு ஆகும்.
19.
1. கணிப்பொறி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் நமது தமிழ் மொழியைக் கையாள உருவாக்கப்பட்ட முதல் குறியீட்டு முறை தான் TSCII (Tamil Seript Code for Information Interchange) என்பதாகும்.
2. இந்த குறியீட்டு முறை 2007ம் ஆண்டில், ICANN-ன் IANA (Internet Assigned Numbers Authority) யில் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குறியீட்டு முறை தழுவியே தமிழுக்கான முறையும் வடிவமைக்கப்பட்டது.
20.
மின்-வணிகம் (e-commerce) எனும் கருத்துரு மின்னனு சாதனங்களில் தொழிலைக் கையாள்வது (business deals) குறித்து வழிக்காட்டுதலை அனுமதிக்கிறது.
21.
| சில்லு | சில்லுக் காட்சி Slideshow |
| உரை, படங்கள், ஒளிக் காட்சிகள், அசைவுப் படங்கள்,இணைப்பு ஒலி வரை,படங்கள், பட்டியல்கள் அட்ட வணைகள் போன்ற கூறுகளைக் கொண்ட நிகழ்த்தலுக்கான அடிப்படை உறுப்பாகும். | ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை வரை படச் சில்லுகளாகவோ ஆவணப் பக்கங்களாகவோ கொடுக்கும் ஒரு காட்சியாகும். |
22.
வரைபடம் என்பது திறன்மிக்க முறையில் தரவுகளைப் படிப்பதற்கு எளிதாகப் புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்.
23.
அட்டவணைத்தாள் முழுவதும் நகர்த்தக் கூடிய செவ்வக வடிவிலான பெட்டி போன்ற அமைப்பு "நுண்ணறைச் சுட்டி" என்று அழைக்கப்படுகிறது.
24.
ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
25.
1. ஆவணத்தில் எந்த இடத்தில் சிறப்பு எழுத்துக்கள் தோன்ற வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert→Special Character என்ற கட்டளையைத் தேர்வு செய்தால், தோன்றும் Special Character உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான சிறப்பு எழுத்தின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
3. தேவையான சிறப்பு எழுத்து கண்டறிய முடியவில்லை எனில் வேறு எழுத்துரு வகையைத் தேர்ந்தெடுத்து அந்த சிறப்பு எழுத்தைப் பெறலாம்.
4. OK பொத்தானை கிளிக் செய்யவும்.
26.
1. நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மூலம்:
(i) நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்யவும்.
(ii) Edit→Copy அல்லது Ctrl+C அல்லது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Copy என்ற கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும்.
(iii) புதிய இடத்தில் கோப்புறையை ஒட்டுவதற்கு Edit→Paste அல்லது Ctrl+V யைக் கிளிக் செய்ய வேண்டும். அல்லது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Paste என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
2. இழுத்து விடுதல்மூலம்:
(i) வலது சாளரப் பகுதியில் நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
(ii) தேர்வு செய்த கோப்பு மற்றும் கோப்புறையை, இடது சாளரப் பகுதியில் கோப்புறைப்பட்டியில் இழுத்து விட வேண்டும்.
27.
1. நேர்மை : இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது பயனர். உண்மையாக இருத்தல் பண்பு சார்ந்த நன்னடத்தையாகும்.
2. நம்பகத்தன்மை : முக்கியமானத் தகவல்களை அனுமதியற்ற நபர்களுடன் பகிர்வதைத் தடுப்பதன் மூலம் நம்பகத் தன்மை பராமரிக்கப் படுகிறது.
3.மரியாதை : பிற பயனர்களின் தனிமையை (Privacy) மதிக்க வேண்டும்.
4.தொழில் சார் மனப்பாண்மை : பயனர் தொழிற்சார் நடத்தை மற்றும் சிறந்த நன்னடத்தை அணுகுமுறையையும் பராமரிக்க வேண்டும்.
5.சட்டத்தை மதிக்கல் : கணினி பயன்பாட்டில் கண்டிப்பாக பயனர் சட்டத்தை மதிக்க வேண்டும்.
6.பொறுப்புத் தன்மை : பயனர் உரிமை தன்மை மற்றும் பொறுப்பு நம்பகத் தன்மை மற்றும் உண்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
28.
கணிப்பொறி வலையமைப்பானது நான்கு வகைப்படும். அவையாவான :
1. தனிப்பட்ட வலை பகுதி
2. குறும் பரப்பு வலையமைப்பு
3. நகரப் பரப்பு வலையமைப்பு
4. பரந்த வலையமைப்பு
தனிப்பட்ட வலை பகுதி (Personal area network):
1. தனிப்பட்ட பகுதி வலை அல்லது PAN என்பது கணிப்பொறி சாதனங்களுக்கிடையேயான தொடர்பைச் செயல்படுத்தும் வலையமைப்பாகும்.
2. PANI என்பது கம்பி இணைப்பாகவோ (அதாவது USBI Fireware) அல்லது கம்பி இல்லாத இணைப்பாகவோ இருக்கலாம். (அதாவது அகச்சிவப்பு infrared, ZigBee, ப்ளுடூத் புறபரப்பு (ultra wide band) UWB.
3. இதன் பரப்பு சில மீட்டர்களே ஆகும். கம்பியில்லா PAN அல்லது WPAN-க்கு எ.கா : கைப்பேசியின் தலையணி ஒலிவாங்கி (head set) கம்பியில்லா விசைப்பலகைகள், கம்பியில்லா சுட்டிகள், அச்சுப்பொறிகள், பட்டைக் குறிவருடிகள், விளையாட்டு கட்டுப்பாட்டு அமைவு ஆகியவற்றை உள்ளடக்கிய சாதனங்கள் ஆகும்.
குறும்பரப்பு வலையமைப்பு - LAN (Local Area Network) :
1. தனியார்சொந்த கணினி வலை சிறிய புவியியல் பகுதியான வீடு, அலுவலகம் அல்லது கட்டிடங்களை இணைக்கும் வலையமைப்பே குறும்பரப்பு வலையமைப்பு எனப்படும்.
எ.கா : பள்ளி வலையமைப்பு
2. LAN வலையமைப்பு, அச்சுப்பொறிகள், வன்தட்டுகள் போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது.
3. பொதுவாக LANன் அளவு சிறியதாகும். இதில் உள்ள பல்வேறு சாதனங்கள் மைய சாதனங்களோடு (மையம் / இணைப்பி) மூலம் இணைக்கப்படுகிறது.
4. தற்போது LAN கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் நிறுவப்படுகிறது.
5. ஒரு விநாடிக்கு 4 லிருந்து 16 மெகாபிட்டுகள் வரை அதிக வேகத்துடன் தரவுகளைத் தொடர்புபடுத்துகிறது.
நகரப்பரப்பு வலையமைப்பு - Metropolitan Area Network (MAN) :
1. LAN ன் பெரிய வடிவம் MAN ஆகும். ஒரு நகரம் முழுவதையும் இணைக்க விரிவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 100 கி.மீக்கு மேல் விரிவடைந்து இணைக்க வல்லது.
2. ஒரு நகரத்தில் உள்ள பெரிய நிறுவனத்தின் பல்வேறு கிளைகளை இணைப்பதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
3. வேறுபட்ட வன்பொருள் மற்றும் பரிமாற்ற ஊடகங்களின் பிணைப்பு ஆகும்.
4. இது கேபிள் டிவி வலையமைப்பைப் போல தனித்த வலையமைப்பாகவும் அல்லது பெரிய வலையமைப்பில் உள்ள பல LAN களை இணைப்பதாகவும் இருக்கலாம்.
5. எனவே ஒரு LAN லிருந்து மற்றொரு LANனிற்கும். ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கும் வளங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
பரந்த வலையமைப்பு (Wide Area Network) WAN :
1. ஒரு தொலைத்தொடர்பு வலையமைப்பாகும்.
2. LAN வலையமைப்பு எதிர்திசையில் அமைந்திருக்கும் பல கட்டிடங்கள், நாடு) முழுவதும் அல்லது உலகம் முழுவதும் உள்ள பல LAN வலையமைப்புகளை இணைக்கிறது.
3. பரந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறிகள் பொது வலையமைப்பான தொலைபேசி அமைப்பு மூலம் இணைக்கப்படுகின்றன.
4. பிணைப்பு இணைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகின்றன. மிகப் பெரிய பரந்த வலையமைப்பு இணையம் ஆகும்.
29.
1.Slider Master-ன் - உதவியுடன் சிவபாலன் இந்தத் தவறைச் சரி செய்ய முடியும். அல்லது அனைத்துச் சில்லுகளையும் தேர்வு செய்து.
2. Edit –-> Find & Replace என்றப் பட்டிப் பட்டைத் தேர்வின் மூலம் தேட வேண்டிய சொல்லையும், மாற்றும் சொல்லையும் கொடுத்து சரி செய்யலாம்.
30.
வடிவூட்டல் கருவிப் பட்டையிலுள்ள பணிக்குறிகள் :
1.எழுத்துரு கீழிறக்கு பெட்டி : பலவேறு எழுத்து வடிவுகளை இந்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
2.எழுத்து அளவு கீழிறக்கு பெட்டி: இது எழுத்துருக்களின் அளவை மாற்றி அமைக்கப் பயன்படுகிறது.
3. எழுத்துருக்களை தடிமனாக்குதல் பணிக்குறி: இதனைப் பயன்படுத்தி தரவுகளை தடித்த எழுத்துக்களில்
காட்டலாம் இதற்கான குறுக்குவழி Ctrl+B.
4. சாய்வெழுத்து பணிக்குறி : இது தரவுகளை சாய்ந்த வடிவில் காட்டப்பயன்படும். இதற்கான குறுக்கு
வழி Ctrl+I.
5. அடிக்கோடிக்கல் பணிக்கறி : இது தரவுகளை அடிக்கோடிட்டுக் காட்டப் பயன்படுகிறது, இதற்கான
குறுக்குவழி Ctrl+U.
6. இசைவு பணிக்கறிகள் - இவை தரவுகளை இடது, வலது, மையம் மற்றும் நேர்த்தி இசைவுகளில்
ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதற்கான குறுக்கு வழிகள் இடது-Ctrl+L. வலது-Ctrl+R. மைய-Ctrl+E மற்றும் நேர்த்தி-Ctrl+J.
7.எண் வடிவமைப்பு பணிக்குறிகள் :
பணக் குறியீடு (Currency) பணிக்குறி, சதவீதம் (Percent) பணிக்குறி, இயல்பு நிலை (Standard) பணிக்குறி,
தசம புள்ளியைச் சேர்த்தல். தசம புள்ளியை குறைத்தல் போன்ற பணிக்குறிகளைப் பயன்படுத்தலாம். இவற்றுள்,
பணக் குறியீடு, சதவீதம் மற்றும் இயல்பு நிலைக்கு முறையே Ctrl+Shift+4, Ctrl+Shift+5 மற்றும் Ctrl+Shift+6 குறுக்கு
வழிகளைப் பயன்படுத்தலாம்.
8. வன் தன்னால் மிகுப்பு மற்றும் குறைப்புப் பணிக்குறிகள் : நுண்ணறையில் உள்ள தரவுகளை
உள்தள்ளப் பயன்படுகிறது.
9.எல்லைப் பணிக்குறி (Border) : எல்லையின் வகை. பின்புற நிறம் மற்றும் எழுத்து நிறம்
பணிக்குறிகள் முறையே அட்டவணைத்தாள் கோடுகளின் நிறம், பின்புற வண்ணம் மற்றும் தரவுகளின்
நிறத்தை மாற்றப் பயன்படுகிறது.
31.
1 2015 ம் ஆண்டின் மொத்த விற்பனையைக் கணக்கிடப் பயன்படும் வாய்ப்பாடு = SUM (B5 : E5)
2. 2012 முதல் 2016 வரை கோயம்புத்தூரின் மொத்த விற்பனையைக் கணக்கிடப் பயன்படும் வாய்ப்பாடு = SUM (E2 : E6)
3. 2015 மற்றும் 2016 ஆண்டுகளில், மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை = SUM (C5: D6)
4. 2012 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை = AVERAGE (B2 : B6)
5. கோவையை ஒப்பிடுகையில், சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள்
அதிகம் விற்பனை செய்யப்பட்டது = B6 - E6
32.
I. பரவல் இயக்க அமைப்பு: டிஜிட்டல் பிணையம் (இணைய தளம்/உள்வலை) வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட தரவு மற்றும் பயன்பாடுகளை இந்த அம்சம் கவனித்து கொள்கிறது.
பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் இருக்கும் கோப்புகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவைக் கையாள முடியும். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியில் உள்ள கோப்புகளைக் கையாளுவதைப் போன்று உணருவர்.
II. பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1. ஓரே இடத்தில் உள்ள ஒரு பயனர், வலைப்பின்னல் உள்ள மற்றோரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2. பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்.
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
4. புரவலன்/புரவலர்(Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
33.
1. மையச் செயலகம் (CPU) தரவு நினைவகப் பதிவேடுகளையும் (MDR) மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் கொண்டுள்ளது.
2. நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கும் இடையே தேவையானத் தரவைத் தரவு நினைவகப் பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
3. நினைவக முகவரி பாட்டை - நினைவக இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது .
4. தரவுப் பாட்டை - தரவை மையச் செயலகத்திற்கும் நினைவகத்திற்கும் கொண்டு செல்ல உதவும்.
5. கட்டுப்பாட்டு பாட்டை-படிக்க மற்றும் எழுதும் செயலைக் கட்டுப்படுத்தும்.
6. படிக்கும் செயல் நினைவகத்திலிருந்து தரவை எடுத்து MDRக்கு கொண்டு செல்லும்.
7. ஓரே ஒரு கட்டுப்பாட்டு இணை 0 மற்றும் 1 மதிப்புகளை ஏற்று படித்தல்/ எழுதுதல் வேலைகளைச் செய்யும்.
8. எழுதுதல் செயல் தரவை MDRல் இருந்து நினைவகத்திற்கு கொண்டு செல்லும்.
9. RAMல் உள்ள வேர்டின் அளவும், நினைவகத் தரவு பதிவேட்டின் அளவும் ஒன்றாகும்.
10. நினைவக தரவு பதிவேட்டின் அளவு 8 பிட்டாக இருந்தால் நினைவகத்தில் இதை 8-பிட் அளவிலான ஒரு வேர்டுடன் இணைக்கலாம்.
11. நினைவகத் தரவு பதிவேட்டிலிருந்து ஒரு வேர்டிற்கும் அல்லது வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேட்டிற்கும் தரவு பரிமாற்றம் செய்ய தரவுப் பாட்டை 8 இணைக் கம்பிகள் கொண்ட கட்டுப்பாட்டின் (படிக்க அல்லது எழுத) அடிப்படையாகச் செயல்படுகிறது.
12. இந்த கட்டளை சமிக்கை R /W என்று பெயரிடப்பட்டிருக்கும். இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டைக் குறிக்கும்.

34.
| கணிப்பொறியின் தலைமுறை |
காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் |
நிறை / குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை |
1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes ) |
1.அளவில் பெரியது. |
| இரண்டாம் தலைமுறை |
1955-64 | திரிதடையகம் (Transistors ) |
1.முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. eg :IBM 1620,UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை |
1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC ) |
1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது . |
| நான்காம் தலைமுறை |
1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1. சிறியது மற்றும் வேகமானது. 2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது . 3. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின . |
| ஐந்தாம் தலைமுறை |
1980-இன்று வரை | மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் Ultra Large Scale Integration (ULSI) |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3.கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது . 4. நிழற்பட்டங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன். 5.செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் . |
| ஆறாவது தலைமுறை |
எதிர் காலத்தில் | செயற்கை அறிவு | 1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. 2.கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும். 3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல். 4. இயற்கை மொழிச் செயலாக்கம். 5. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல். |
35.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
36.
1. திரைமுகப்பின் கீழே உள்ள கிடைமட்ட பட்டை "பணிப்பட்டை" (Taskbar) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டை, தொடக்கப் பொத்தான், பல்வேறு பயன்பாடுகளின் குறுக்குவழிகள், மற்றும் சிறிதாக்கப்பட்டப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கும்.
2. மேலும் அதன் வலது கோடியில், ஒலி கட்டுப்பாட்டகம், வலையமைப்பு, தேதி மற்றும் நேரம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய "கணினி அமைப்பு தட்டு" (System tray) ஒன்றும் உள்ளது.
3. அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகளை கொண்டிருக்கும் "விரைவு தொடக்க கருவிப்பட்டை" (Quick lauch toolbar),தொடக்க பொத்தானுக்கு அடுத்ததாக உள்ளது.
37.
வருடி: கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. இந்தக் கருவி ஒரு " உலர் மின்நகல் இயந்திரம்" (Xerox machine) போல் செயல்படுகிறது.
2. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறைத் தகவலாக மாற்றியமைக்கிறது.
38.
1.WWW என்பது உலகளாவிய வலை - அணுகல் தகவல், இந்தத் தகவலானது மனித அறிவின் வெளிப்பாடாகும்.
2. இணையத்தில் உள்ள அனைத்து வளங்களும் மற்றும் பயனர்களும் HTTP.Hyper Text Transfer Protocol ஐப் பயன்படுத்துகின்றன.
3.இணையத்தில் கணினிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற வழியாகும். இதன் மூலம் பல்லூடக வளங்களைத் திரட்டி ஒன்று இணைக்கிறது.
39.
1. முதன்மை சில்லு என்பது மற்ற சில்லுகளுக்குத் தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தப்படும் சில்லுவாகும். அனைத்து சில்லுகளுக்கான அடிப்படை வடிவமைப்பைக் கட்டுப்படுத்துகிறது.
2. ஒரு சில்லு நிகழ்த்துதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Slide Master இருக்கலாம்.
3. ஒரு முதன்மை சில்லு. பின்னணி நிறம், வரைகலை அல்லது சாய்வு, பொருள்கள் பின்னணித் தலைப்பு, அடிக்குறிப்புகள், உரையாடல் மற்றும் உரைச்சட்டங்கள் அளவு மற்றும் உரை வடிவமைத்தல் போன்ற வரையறுக்கப்பட்ட தொகுப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
4. சில்லு Master ன் அனைத்து குணங்களும், பாணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
40.
படிநிலை 1:
வரிசையாக்கம் செய்யப்பட வேண்டிய புலத்தில் (நெடுவரிசை) நுண்ணறைச் சுட்டியை இருத்தவும்.
படிநிலை 2:
1.செந்தரக் கருவிப்பட்டையிலுள்ள Sort Ascending அல்லது Sort Descending பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. ஓபன் ஆஃபீஸ் கால்க், தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையிலுள்ள தரவுகளின் அடிப்படையில், அதனுடன் தொடர்புடைய மற்ற நெடுவரிசைகளையும் சேர்த்து வரிசைப்படுத்தும்.
41.
| வடிவூட்டல் தேர்வு | விசைப்பலகை குறுக்கு வழி |
பயன் |
| எழுத்துரு வகை | - | எழுத்துரு வகையை மாற்றப் பயன்படுகிறது. |
| எழுத்துரு அளவு | - | எழுத்துருக்களின் அளவை மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
|
தடிமனாக்குதால் |
Ctrl+B | தரவை தடிமனாக்குவதற்கு பயன்படுகிறது. |
| சாய்வெழுத்தாக்குல் | Ctrl+I | தரவை சாய்வெழுத்தாக மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
| அடிக்கோடிடுதல் | Ctrl+U | தரவுகளை அடிக்கோடிடுவதற்கு, |
| வலது இசைவு | Ctrl+L | நுண்ணறைக்குள் தரவுகளை வலது இசைவில் அமைக்க. |
| இடது இசைவு | Ctrl+R | நுண்ணறைக்குள் தரவுகளை இடது இசைவில் அமைக்க. |
| மைய இசைவு | Ctrl+E | நுண்ணறைக்குள் தரவுகளை மைய இசைவில் அமைக்க. |
| நேர்த்தி இசைவு | Ctrl+J | நுண்ணறைக்குள் தரவுகளை வலது மற்றும் இடது ஓரங்களில் சமமானதாக மாற்றுவதற்கு |
| நுண்ணறை சேர்ப்பு | - | தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணறைகளை, ஒரே நுண்ணறையாக மாற்றுவதற்கு, |
42.
பலவகையான தொடர்பு முகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தொடர் தொடர்பு முகம் (Serial Port) - பழைய கணினிகளில் வெளிக்கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
2. இணையான தொடர்பு முகம் (Parallel Port)- பழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
3. USB தொடர்பு முகம்- கேமராக்கள், ஸ்கேனர்கள் , மொபைல்கள், வெளிப்புற வன்தட்டு மற்றும் அச்சுப்பொறி போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
4. USB 3.0 - பல்வேறு மின்னணுச் சாதனங்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
5. VGA இணைப்பான்- புரொஜெக்டர் அல்லது காட்சித் திரையைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
6. ஆடியோ பிளக்ஸ் (Audio plugs): கணினியுடன் ஒலிபெருக்கி, மைக்ரோ ஃபோன் மற்றும் தலை தொலை பேசி இணைப்பதற்கு பயன்படுகிறது.
7. PS/2 Port: சுட்டி மற்றும் விசைப்பலகையை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
8. SCSI Port : வன்வட்டு, பிணைய இணைப்பிகள் கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
9. HDMI: என்பது ஒளிக்காட்சி கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜெக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
43.
| +65 -ன் இருநிலை மதிப்பு 8 பிட் வடிவில் | 01000001 |
| 1'ன் நிரப்பி | 10111110 |
| குறைமதிப்பு பிட்டுடன் 1ஐ கூட்டுதல் | +1 |
| -65 -ன்2'ன் நிரப்பி | 10111111 |
44.
| ஒளியியல் சுட்டி | லேசர் சுட்டி |
|---|---|
| 1. ஒளிப் பயன்படுத்தப்படுகிறது | அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது |
| 2. இதில் மூன்று பொத்தான்கள் உள்ளன. | அதிகளவாக 12 பொத்தான்கள் வரை இருக்கும். பயனர் தனக்கேற்ற வகையில் அவைகளை நிரலாக்கம் செய்து கொள்ள முடியும் . |
| 3. குறைவான உணர்திறன் கொண்டது. | மிகுந்த உணர்திறன் கொண்டது. |
| 4. கடினமான மேற்பரப்பில் செயல்படாது. | எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
45.
1. தேவையான உரையைத் தேர்வு செய்தபின் Tools→Word Count விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
2. தேர்வு செய்யப்பட்ட உரையில் உள் சொல்லின் எண்ணிக்கை மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை WordCount உரையாடல் பெட்டியில் காணலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards