11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
XI Public Model Question
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஆங்கிலேயர் 1639 ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் _______________ கோட்டையைக் காட்டினர்.
புனித ஜார்ஜ் கோட்டை
புனித வில்லியம் கோட்டை
வேலூர் கோட்டை
கோல்கொண்டா கோட்டை
2.
3.
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.
இராமானந்தர்
மீராபாய்
சூர்தாஸ்
துக்காராம்
4.
பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________
ஹீயோடோரஸ்
ஆண்டியால் சைடல்
வோனேனெஸ்
மித்ரடேட்ஸ்
5.
6.
சேரர்களின் துறைமுக நகரம் _______________
தொண்டி
புகார்
கொற்கை
நெல்கிண்டா
7.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.
மெளரிய
கனிஷ்க்
வர்த்தன
சிசுநாக
8.
வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.
சுரா
சுல்கா
பலி
பாகா
9.
ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.
செம்மை
இரும்பை
வெண்கலத்தை
தங்கத்தை
10.
இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி ………………………….. என்று குறிப்பிடப்பட்டது.
மதுரா கலை
காந்தாரக் கலை
பாக் கலை
பாலா கலை
11.
12.
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது
நாட்டார்
மாநகரம்
நகரத்தார்
ஊரார்
13.
காம்போஜம் என்பது நவீன ………………
அஸ்லாம்
சுமத்ரா
ஆனம்
கம்போடியா
14.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.
கிரகவர்மன்
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
பிரபாகரவர்த்தனர்
போனி
15.
_______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
16.
கரிகாலன் ________________ மகனாவார்
செங்கண்ணன்
கடுங்கோ
இளஞ்சேட்சென்னி
அதியமான்
17.
____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்
மகாவம்சம்
தீபவம்சம்
பிரமாணம்
முத்ராராட்சசம்
18.
____________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
இரும்பு
வெண்கலம்
செம்பு
பித்தளை
19.
20.
________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
க்யூனிபார்ம்
ஹைரோக்ளைபிக்ஸ்
தேவநாகரி
கரோஷ்டி
21.
1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?
22.
23.
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?
24.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
25.
”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.
26.
துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்
27.
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
28.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?
29.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
30.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
31.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
32.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
33.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
34.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வா று நிலை நாட்டியது?
35.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
36.
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணை ப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி.
37.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.
38.
சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன, விவசாய நிர்வாகத் திட்டங்கள் அதிக வருமானத்துக்கு வழிவகுத்தன – ஆராய்ந்து எழுதுக
39.
மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்
40.
கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக
41.
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
42.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.
43.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
44.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
45.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?
46.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
47.
கோல் பழங்குடியினரின் எழுச்சியைப் பற்றி விளக்குக.
48.
சுவாமி விவேகானந்தர்
49.
“தீன் இலாஹி” பற்றி நீவிர் அறிவது யாது?
50.
காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.
51.
இராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?
52.
பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவதை விவரிக்கவும்
53.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக
54.
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
1.
(a)
புனித ஜார்ஜ் கோட்டை
2.
(c)
3.
(d)
துக்காராம்
4.
(a)
ஹீயோடோரஸ்
5.
(c)
6.
(a)
தொண்டி
7.
(d)
சிசுநாக
8.
(c)
பலி
9.
(b)
இரும்பை
10.
(b)
காந்தாரக் கலை
11.
(a)
12.
(b)
மாநகரம்
13.
(d)
கம்போடியா
14.
(b)
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
15.
(b)
சமுத்திரகுப்தர்
16.
(c)
இளஞ்சேட்சென்னி
17.
(a)
மகாவம்சம்
18.
(a)
இரும்பு
19.
(c)
20.
(a)
க்யூனிபார்ம்
21.
1. 1765 இல் கையெழுத்தான உடன்படிக்கை அலகாபாத் உடன்படிக்கை ஆகும். ராபர்ட் கிளைவும், இரண்டாம் ஷாஆலமும் இவ்உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
2. இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்களாம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் தீவாளி (நிலவரி வசூலிக்கும் உரிமை உரிமையைப் பெற்றது.
3. மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது.
4. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
22.
23.
1.1761-ல் நடந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தில் மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது.
2.போர்க்களத்தில் கிட்டத்தட்ட 25,000-க்கும் மேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
3.பின்னர் நடந்த ஆங்கிலேய மராத்தியப் போர்களில் மராத்தியரின் வலிமை முற்றிலுமாக குறைக்கப்பட்டது.
4. சிவாஜியின் வழித் தோன்றலான பிரதாப் சிங் ஒரு சிறிய பகுதிக்கு அரசராகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
24.
(i) சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் விஜயநகர அரசை ஏற்படுத்தினர்.
(ii) இதன் தலைநகர் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது.
(iii) பின்னர் இத் தலைநகரம் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.
(iv) இதன் பின்னர் அவர்கள் தங்களை விஜயநகர அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
25.
i) இந்தோ - கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர். (சுமார் பொ.மு.ஆ. 165/ 145-130) நாட்டின் வடமேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாக தெரிகிறது.
ii) அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரபிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
26.
(i) துருக்கிய படையெடுப்பின் போது வட இந்தியாவில் பல ராஜபுத்திர அரசர்கள் ஆட்சிபுரிந்தனர்.
(ii) முக்கிய ராஜபுத்திர அரசுகளாக சௌகான், கடவாலா, பரமர் மற்றும் சந்தேலர்கள் இருந்தனர்.
(iii) இதில் விக்ரகராஜ், பிருத்திவிராஜ் போன்றோர் சிறந்தர்களாக திகழ்ந்தனர்.
(iv) பரமர் வம்சத்தில் போஜரும், கடவாலாவில் ஜெயசந்திராவும், சந்தேலர்களில் யாசோவர்மனும், கீர்த்திவர்மனும் வறுமையுடன் காணப்பட்டனர்.
27.
(i) ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
(ii) ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
(iii) வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
(iv) ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
(v) கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.
இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.
28.
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்
i) மதுபனி செப்புப் பட்டாயா குறிப்புகள்
ii) சோன் பட்டு செப்பு முத்திரை குறிப்புகள்
iii) பன்ஸ் கெரா செப்பு பட்டாயா குறிப்புகள்
iv) நாளாந்த களிமண் முத்திரை குறிப்புகள்
29.
(i) ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக -ஈரானிய நூல் ஜொராஸ்டிய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
(ii) இந்தோ-ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
(iii) இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
(iv) இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.
30.
1. வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை.
2. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்டஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.
31.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
32.
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளாமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே.
தொல்பொருள்:
1. தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
2. அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
3. துரைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
4. ஆந்திரா - கர்நாடகப் பகிதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.
நாணயச் சான்றுகள்:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்து.
33.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
34.
1. 1639ல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்து அதில் கோட்டைக் கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார் .
2.கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே.
3. சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மீது 1645 ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார். 1687 இல் ஒளரங்கசீப் கோல்கொண்டவைக் கைப்பற்றிக் கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.
4. ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன. குறுகிய காலத்திற்குள் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றாகக் கம்பெனியின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடாக சென்னை மாறியது.
5. அரசர் இரண்டாம் சார்லஸ் திருமணத்தின்போது மாண்கொடையாகப் பெற்ற பம்பாய் தீவு 1668 ல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
6.1683 ஆம் ஆண்டு பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது.
7. 1684 இல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது. 1688 இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் (Aldermen) அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது.
8. 1693 இல் சென்னையைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களையும் 1702 இல் மேலும் ஐந்து கிராமங்களையும் 1702 இல் மேலும் ஐந்து கிராமங்களையும் பெற்றது.
35.
காடு சார்ந்த பொருளாதாரம்:
1. முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.
2. காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது.
3. தச்சர், கப்பல்கட்டுவோர், மேல்பூச்சி சாயம் தயாரிப்போர் ஆகியோருக்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன.
4. நெசவு செய்வோர் உருளைகள் செய்வோர்க்குத் தேவையான பக்குவப்படுத்தப்படாத பட்டையை வழங்கியது.
5. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருவாக்குவோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது.
வேளாண் சார்ந்த பொருளாதாரம்:
1. கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
2. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம்.
3. அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது.
4. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
5. அவுரி முகலாய கால முக்கிய வணிகப் பயிராகும்.
நகைப்புறப் பொருளாதாரம்:
1. நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற்கூடங்களைச் சார்ந்திருந்தது.
2. பஞ்சடித்துப்பட்டை இடுபவர் நூல்நூற்போர்,நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப்பதிப்போர், சலவை செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
3. பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. வங்காளம் உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் முக்கிய மையமாக திகழ்ந்தது.
வர்த்தகமும் வாணிகமும்:
1. நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
2. உபரி பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளும், ஒட்டக வண்டிகளும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
3. பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலை தூரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.
4. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
36.
துணைப்படைத் திட்டத்தின் கூறுகளாவன :
(i) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகாரக (resident) ஏற்க வேண்டும்.
(ii) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும்.அது முடியாதபோது மாகானத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
(iii) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசை பிற ஐரோப்பிய நாடுகளுக்கான தொடர்பை த் துண்டித்துத் கொள்ள வேண்டும்.அதிலும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்ககூடாது.
(iv) பிரிட்டிஷார் அனுமதிக்காமல் மார் ஐரோப்பியறை பணியிலமர்த்தக் கூடாது.
(v) பிற இந்திய அரசுகளாடு கம்பெனியின் அனுமதியில்லாமல் பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடாது.
(vi) எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சிலைகளில் தலையிடக் கூடாது.இவ்வாறு சுதேச அரசுகள் தங்கள் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனி சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.
(vii) துணைப்படைத் திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஓட்டுமொத்த திறனையும் கூட்டியது.அதன் உடனடி விளைவு என்பது சொந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில் முறை போர் வீரர்கள் வேலை இழந்ததே ஆகும்.
(viii)அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட வீரர்கள் கொள்ளைக்கரைகளாக மாறினார்கள்.பிண்டாரிகள் (கூட்டமாக சூறையாடுவோர)எண்ணிக்கை துணைப்படைத் திட்டத்திற்கு பின் கனிசமாக உயர்ந்தது.
(xi ) அரசர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதும், பாதுகாப்பிற்குள்ளிருந்த பல அரசுகளின் நிர்வாகம் திறம்பட இல்லை எனக் குற்றம் சுமத்தி அவற்றை இலகுவாக இணைப்பதும் நடந்தேறியது.
37.
1.பாலாஜி விஸ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720-ல் மன்னர் சா ஹீவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
2. ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ராஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார்.
3.முகலாயர்களின் கட்டப்பட்டிலிருந்து புந்தேல்கண்ட் பகுதியை அவர் விடுவித்தார். அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது.
4.பேஷ்வாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731-ல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டார்.
5. தலைமைத் தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக் கொண்டார்.
6.தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738 ல் போர்த்துகீசியரிடமிருந்து கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
7.இச் சமயத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப் பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையை பெற்றார்கள்.
38.
சோழர் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வளர்ச்சிகளில் ஒன்று வேளாண் விரிவாக்கம் மற்றும் நீர் பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகும்.
1. வேளாண் விரிவாக்கம்
2. நில வருவாய் மற்றும் நில அளவை முறை
3. பாசன வசதிகளை மேம்படுத்துதல்
4. நீர் மேலாண்மை
இவற்றின் சிறப்பான செயல்பாடுகள் அரசின் அதிக வருமானத்திற்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதைக் காண்போம்.
வேளாண் விரிவாக்கம்:
1. மக்கள் பெரும்பாலும் ஆறுகள் நிறைந்த பகுதிகளில் குடி பெயர்ந்தனர். ஆறுகள், நீர்நிலைகள் இல்லாத இடங்களில் குளம், கிணறு, கால்வாய் போன்ற நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
2. இத்தகைய விரிவாக்கம் உணவு, தானிய உற்பத்தியில் உபரி நிலையை ஏற்படுத்தியது. இதற்கென தனி ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு புறவரித் திணைக்களம் என்ற பெயரில் இயங்கியது. அதன் தலைவர் புறவரி திணைக்கள நாயகம் எனப்பட்டார்.
நில வருவாய்:
1. நில வரியை முறைப்படுத்துவதற்காக சோழர்கள் நிலங்களை வளப்படுத்தி அதன் தரத்திற்கு ஏற்ப வரிகளை விதித்தனர்.
2. நிலத்தின் வளம், உரிமையாளரின் சமூக மதிப்பைப் பொறுத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. ஊர் மட்டத்தில் வரி வசூல் செய்திட 'நாட்டாரும்' நியமிக்கப்பட்டுள்ளனர்.
3. முக்கிய வரிகளாக குடிமை வரி, இறை, காணிகடன், இறைகட்டின காணி கடன், கடமை ஒப்படி, இறை கட்டின நெல்லு போன்றவை விளங்கின.
நில அளவை முறை:
1. நிலத்தை அளவிடுவதற்கு குழி, மா, வெளி, பட்டி பாடகம் போன்ற அலகுகள் பயன்பாட்டில் இருந்தது.
இராஜராஜன் வரி வசூலை முறைப்படுத்தி ஒரு வே (6.5 ஏக்கர்) நிலத்திற்கு 100 தளம் வரியாக வசூல் செய்தனர்.
பாசன வசதிகளை மேம்படுத்துதல்:
1. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஏரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுத்திட 16 மைல் நீளமுள்ள கட்டுமானத்தை எழுப்பி அதற்கு ஜலமய ஜெயஸ்தம்பம் எனப் பெயரிட்டார். முதலாம் இராஜேந்திரன், வடி வாய்க்கால் போன்ற பாசன முறைகள் மூலம் விவசாய நிலங்களுக்கு நீரானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.
(ii) கால்வாய்கள்:
1. உத்தமச் சோழன் வாய்க்கால், பஞ்சவன் மாதேவி வாய்க்கால், கணபதி வாய்க்கால், என பல்வேறு கால்வாய்கள் அரசர், அரசியர் மற்றும் கடவுளின் பெயரில் கட்டப்பட்டது. பாசனத்திற்கு பெரிதும் உதவியது. அனைத்து பாசன ஏரிகளையும் அனைத்து பருவங்களிலும், பராமரிப்பு மற்றும் பராமத்து பணிகள் செய்திட வெட்டி, ஆஞ்சி ஆகிய வடிவங்களில் மக்கள் ஊதியமில்லா உழைப்பு தரும் வழக்கம் இருந்தது.
(iii) நீர் மேலாண்மை:
1. கிணறுகள், ஏரிகளிலிருந்து பெறும் நீரினை முறைப்படுத்திட பல வகையான நீர் உரிமைகள் விளங்கின. நீரைப் பங்கீடு செய்வதற்கு அம்முறைப்படுத்தப்பட்டு குமிழ் (மதகு) தலைவாய் (தலையிடை) வழியாக திறந்து விடப்பட்டது, இதனை தலைவாயர் தலைவாய்ச் சான்றோர், ஏரி அரையர்கள் எனப்படும் சிறப்புக் குழுக்கள் நிர்வகித்தனர்.
2. நீராதாரத்தினை ஆக்கிரமித்தல் அரசுக்கு எதிரான செயல்கள் என அரசு அணைகள் எச்சரித்தன குளங்கள் 'குளத்தார்' எனும் மக்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டது.
3. இவ்வாறு சோழ அரசு பல்வேறு நீர்பாசனத் திட்டங்களையும், புதிய ஏரிகள் மற்றும் கால்வாய்கள் உருவாக்கி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த நிர்வாக அமைப்பையும் உருவாக்கிய நாட்டின் வருமானம் பெருகிட வழிவகுத்தது.
39.
அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீதுபடையெடுத்து பஞ்சாப் பகுதியை கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்திய தொடர்பு தொடங்கியது. அலெக்சாண்டருக்குப்பின் அவரது தளபதிகளில் ஒருவரான செல்யூகஸ் நிகேடர் இந்தியாவின் சிந்து பகுதி வரை ஆட்சி செய்தார்.
பின்னர் இந்தோ - கிரேக்க அரசர்களின் முக்கியமானவர்கள் "டெமெட்ரியஸ்", "மினான்ட்ர்", "ஆண்டியோல் சைடஸ்" போன்றோர் எழுச்சி பெற்றனர்.
நாணயங்கள்:
இந்தோ - கிரேக்க அரசர்களின் தனிச் சிறப்பு நேர்த்திமிக்க நாணயங்களை வெளியிடுவது ஆகும். மீனாள்டரின் நாணயங்கள் இந்தியாவில் உத்திரபிரதேசம் வரை கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்தோ - கிரேக்க உறவு எவ்விதம் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைவுச் சின்னங்கள்:
பாடலிபுத்திரத்தில் உற்ற நினைவுச் சின்னங்கள் இந்தோ - கிரேக்க கலவை பிரதிபலிக்கின்றன. மேலும் மௌரிய பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்கர்களுடைய நிர்வாக அமைப்பை ஒத்து இருந்தன.
மேற்கு இந்தியாவில் இந்தோ - கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது ஒரு மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டிடக்கலையின் தனித்தன்மை கொண்ட போக்கை ஏற்படுத்தியது.
அசோகர் காலம்:
அசோகர் காலத்தில் ஏற்பட்ட மௌரிய பேரரசின் விரிவாக்கம் ஆப்கானிஸ்தான் வரை இருந்தது. இதனால் மேற்கே எகிப்து வரை முறையான வாணிபம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது.
தரைவழி வணிகமானது வடமேற்கு ஆப்கானில் வழியாக நடைபெற்றது.
ஏற்றுமதி:
இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை, வேர்த்தைலம், தாளிசப்த்ரி மற்றும் அரியவகை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவ்வாறாக இந்தோ - கிரேக்க வணிகம், பண்பாடு வலுப்படுத்தப்பட்டது.
40.
| கஜினி முகமது | கோரி முகமது |
|---|---|
| 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர் | 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர் |
| 2. கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை அடிக்கும் நோக்கம் கொண்டவை | 2. கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். |
| 3. படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் | 3. அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 4. சிறந்த போர்திறமை பெற்றவர். இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார். | 4. குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது. |
| 5. போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார். | 5. ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார். |
| 6. காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. | 6. நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். |
| 7. படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. | 7. ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர். |
| 8. இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும். | 8. இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும். |
| 9. இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர். | 9. இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினர். |
| 10. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை. | 10. கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார். |
41.
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பொ.ஆ.770-815)
தர்மபாலரும் பௌத்தமும்:
பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடலாயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த மையமாக உருவானது
சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் - ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடலாயத்தையும் காட்டினார்
ஹரிஷபத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
தேவபாலரும் பௌத்தமும்
பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்
சுவரணதீப் அரசன் பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடலாயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
இவரது ஆட்சியில் நாளாந்தா பௌத்தமதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானபிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்
பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்த மடலாயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
42.
ஆசீவகம்:
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பெளத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர். நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினார்.
கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறந்தவர் மக்காலி கோசலர், மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.
புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.
தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்பு ரையாளர்கள் எதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.
புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.
பகுத கச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.
அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு ஆகிய அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.
குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பெளத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு குறைவுதான் என்றாலும் நாடு முழுவதும் பரவியிருந்தது.
43.
அ) மட்பாண்டம் செய்தல்
1. ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
2. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
3. அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நிரைச் சேர்த்து வைக்கும் கலர், துகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
4. நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
5. அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
6. ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.
ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
1. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
2. சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
3. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்ப்புகளைக் குறிப்பிடுகின்றன.
4. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள்,தயக்கட்டைகள் மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
6. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
ஹரப்பா நாகரிக்கப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.
இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
வணிக பரிவர்த்தனைக்கான ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
1. ஹரப்பா நாகரிக்கப்பகுதியிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
3. எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8:16:32 என பின்பற்றப்பட்டுள்ளது,
4. இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
5. சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் =1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விகிதத்தில் அளவு கோலையும் பயன்படுத்திருக்கிறள்.
ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும்:
அ) முத்திரைகள்:
1. ஸ்டீட்டைட், செம்மண், சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிக்கப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
3. பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.
ஆ) எழுத்துமுறை:
1. ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
2. 5000 த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
44.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
45.
இலக்கியச் சான்றுகள்:
1. சங்கநூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்.
2. பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
3. ஆந்திரர் / சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.
4. மகாவம்வம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்.
5. சாதவாகன அரசர் ஹால பிராகிருத மொழியில் எழுதிய காதாசப்தசதி.
46.
1. ஹரப்பா மக்களின் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
2. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
3. வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
4. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
47.
கோல் என்ற பழங்குடி இனத்தினர் பிகார், ஒரிசா, சோட்டாநாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர்.
சோட்டாநாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்கு குத்தகைக்கு விட்டதே கோள்களின் கிளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
1832 ஜனவரி 26 க்குள் சோட்டாநாக்பூர் முழுவதையும் கோல்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் ஆங்கிலேயருடன் நடந்த ஒரு போரில் இந்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
48.
(i) நரேந்திரநாத் தாத்தா எனும் இயற்பெயர் கொண்ட விவேகானந்தர் கல்கத்தாவில் வாழ்ந்தவர்.
(ii) தன்னுடைய குரு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் பெயரிலேயே ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூகத் தொண்டாற்றினார்.
(iii) 1893 -ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று இந்து சமயத்தை உலகறியச் செய்தார்.
(iv) இவருடைய அமைப்பு பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் அமைத்து சமூக சேவையாற்றியது.
49.
1. அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும், பதானியும் பயன்படுத்திய சரியான சொல் தௌகித்- இ- இலாகி (தீன் இலாகி) என்பதாகும்.
2. தௌகித்- இ- இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடாகும்.
3. இது ஒரு புதிய மதமல்ல. ஆனால் இதை சூபி மரபின் ஒரு வகைமுறையாகக் கருதலாம்.
4. பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தௌகித்-இ-இலாகி (தீன் இலாகி) அக்பருக்குப் பின்னர் இல்லாமல் போனது.
50.
(i) வரி வசூலிக்கும் பொறுப்பை பொது நிர்வாகத்திலிருந்தும் நிதித் துறையிலிருந்தும் பிரித்தார்.
(ii) ஆட்சியாளர்களை (collectors ) வரிவசூலிக்கும் பணிக்கு மட்டுமே பணித்து அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
(iii) குற்றவியல் உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன.
(iv)கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.அவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், முர்சிதாபாத் , பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
51.
(i) இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீ விஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றார்.
(ii) இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒரு பகுதியாகும்.
(iii) இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன.
எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.
52.
i) நவீனத்துக்கு முந்தைய அனைத்துப் பொருளாதாரங்களும் பரிமாற்றத்துக்கு ஒரு முக்கியமான ஊடகமாக பண்டமாற்று முறை விளங்கியிருக்கிறது.
ii) அவர்கள் தங்களின் உப்பை பணத்துக்கு விற்காமல் ஏணைய பண்டங்களுகாவும் இதரத் தேவைகளுக்காவும் பண்டமாற்று செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.
iii) இருப்பினும் தரைவழி கடல்வழி வணிகம் ஆகியவற்றின் அளவும் கூடவே நகர அங்காடிகள் குறித்து இலக்கியத்திலுள்ள சித்தரிப்புகளில் பணம்தான் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன.
53.
i) பொ.ஆ.மு. 6 ஆம் நூற்ராண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
ii) கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
iii) வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில்முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய்அமைந்தது.
iv) சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
v) முடியாட்சி அரசுகளும் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
vi) பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
54.
(i) பல்லவர்கால அரசியல் நிர்வாகப் பிரிவின் தலைவர் அரசர் ஆவார்.
(ii) அரசருக்கு உதவ 'மந்திரி மண்டல' என்ற அமைச்சர் குழு இருந்தது.
(iii) மாநில ஆளுநர்களுக்கு அமைச்சர் குழு ஆலோசனை வழங்கியது.
(iv) கிராமங்களில் கிராமமன்றங்கள் நிர்வாகம் செய்தன.
(v) ரகஸ்யதிகரா, கொடுக்காபிள்ளை, கோச அதீயஷா, தர்மாதிகாரி போன்றவர்கள் நிர்வாகத்தினை நடத்தும் மற்ற அதிகாரிகளாவார்.
(iv) மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards