11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/12/2018
Volume12&3 Marks
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\triangle\)ABCஇல் \(\frac { { a }^{ 2 }{ - }c^{ 2 } }{ { b }^{ 2 } } =\frac { sin(A-C) }{ sin(A+C) } \) என நிறுவுக.
2.
ஒரு தேர்வில் 10 பல்வாய்ப்பு விடையளி வினாக்கள் உள்ளன. கீழ்க்காணும் நிபந்தனைக்குட்பட்டு எத்தனை வழிகளில் இத்தேர்விற்கு விடையளிக்கலாம்.
(i) ஒவ்வொரு வினாவிற்கும் நான்கு வாய்ப்புகள் உள்ளன.
(ii) முதல் நான்கு வினாக்களுக்கு மூன்று வாய்ப்புகளும் மீதமுள்ள வினாக்களுக்கு ஐந்து வாய்ப்புகளும் உள்ளன.
(iii) n ஆவது வினாவிற்கு n + 1 வாய்ப்புகள் உள்ளன.
3.
A = { 1,2,3,4 } மற்றும் B = {a,b,c,d} எனில் பின்வரும் ஒவ்வொன்றிற்கும் A ⟶ B -க்கு ஒரு சார்பு உதாரணமாகத் தருக.
ஒன்றுக்கொன்று ஆனால் மேற்கோர்த்தல் அல்ல.
4.
A = { 1,2,3,4 } மற்றும் B = {a,b,c,d} எனில் பின்வரும் ஒவ்வொன்றிற்கும் A ⟶ B -க்கு ஒரு சார்பு உதாரணமாகத் தருக.
ஒன்றுக்கொன்று அல்ல ஆனால் மேற்கோர்த்தல்
5.
3x + 4y - 12 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு i) செங்குத்தான ii) இணையான நேர்க்கோடுகளின் தொகுப்பினைக் காண்க
6.
சாய்சதுரத்தின் ஒரு முனை புள்ளி (-4, 7), மேலும் 5x - y + 7 = 0 என்ற கோடு ஒரு மூலை விட்டத்தின் சமன்பாடு எனில்,மற்றொரு மூலைவிட்டத்தின் சமன்பாட்டைக் காண்க.
7.
ஒரு நேர்க்கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக்கோட்டின் நீளம் 12 அலகுகள், அச்செங்குத்துக்கோடு x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 300 எனில், அந்த நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
8.
பின்வரும் அடுக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. \(e^{\frac{1}{2}x}\).
9.
பின்வரும் அடுக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. e5x
10.
y = x2 என்ற வளைவரையிலிருந்து y = 3(x-1)2+5 என்ற வளைவரையை காணும் படிநிலைகளை எழுதுக.
11.
பின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க.
\((5+x^2)^{2/3}\).
12.
ஒரு வட்டத்தின் விட்டம் 40 செ .மீ., ஒரு நாணின் நீளம் 20 செ .மீ., எனில், சிறிய வில்லின் நீளத்தைக் காண்க.
13.
(i) y = x2
(ii) y = -x2 என்னும் சார்புகளைக் கருதுக.
14.
\(\frac { 1 }{ { (1+3x) }^{ 2 } } \)ஐ x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவாக்கம் சரியாக இருப்பதற்கான x-ன் நிபந்தனையைக் காண்க.
15.
தீர்வு காண்க: 2x2 + x - 15 ≤ 0
16.
கீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x - 9 ≥ 0, 4x - 10 ≤ 6
17.
நிறுவுக: (sec A – cosec A) (1 + tan A + cot A) = tan A sec A – cot A cosec A.
18.
n-ன் மதிப்பை காண்க. (n + 1)! = 20(n - 1)!
19.
10 மாணவர்களுக்கு 12 வெவ்வேறான பரிசுகளை எத்தனை வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்?
20.
ஒருவர் இரவு விருந்திற்காக ஒரு உணவு விடுதிக்கு சென்றார். அங்கிருந்த உணவு பட்டியலில் 10 இந்திய மற்றும் 7 சீன உணவு வகைகள் இருந்தன. ஒரு இந்திய அல்லது ஒரு சீன உணவை அவர் எத்தனை வகைகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
21.
n - ஆவது உறுப்பு an ஐக் கொண்ட பின்வரும் தொடர்முறைகளின் முதல் 6 உறுப்புகளைக் காண்க ..png)
22.
சுருக்குக.\(\frac { \sin{ 75 }^{ 0 }-\sin15^{ 0 } }{ \cos{ 75 }^{ 0 }+\cos{ 15 }^{ 0 } } \)
23.
5x-4y+3 = 0 என்ற கோட்டிற்கு இணையாக, x -அச்சின் வெட்டுத்துண்டு 3 எனக் கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
24.
\(\sin { \theta } =-\frac { \sqrt { 3 } }{ 2 } \) -ன் பொது தீர்வை காண்க
25.
f(x) = x2 + 5x + 4 - ஐ வர்க்கங்களின் கூடுதலாக எழுதுக.
26.
A x A என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன. மேலும் அதிலுள்ள இரு உறுப்புகள் (1, 3) மற்றும் (0, 2) எனில், A –ன் உறுப்புகளைக் காண்க
27.
மதிப்புகளைக் காண்க: tan 120°
28.
(2x+3)⁵ -ன் விரிவாக்கம் காண்க .
29.
|2x-17| = 3-ன் தீர்வு காண்க
30.
கணம் A ஆனது A = {x : x = 4n + 1, 2 < n < 5, n ∈ N} எனில், A–ன் உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.
31.
\(^{ \left( n+2 \right) }{ C }_{ 7 }:^{ \left( n+1 \right) }{ P }_{ 4 }=13:24\) எனில், n-ன் மதிப்பைப்பைக் காண்க
32.
ஒரு கைபேசியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு கைபேசி கோபுரங்கள் அமைந்துள்ளன. ஒரு கைபேசியின் எல்லைக்குட்பட்ட இரண்டு கைபேசி கோபுரங்கள் கிழக்கு மேற்காக 6 கி.மீ இடைவெளியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நோர்க்கோட்டில் அமைந்துள்ளன மற்றும் கைபேசி நெடுஞ்சாலைக்கு வடக்கே உள்ளது. கைபேசிக்கு வரக்கூடிய சமிக்கைகள் முதல் மற்றும் இரண்டா ம் கோபுரத்திலிருந்து 5 கி.மீ. மற்றும் 31 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கிலிருந்து வடக்காக முதல் கோபுரத்திலிருந்து எந்த நிலையில் உள்ளது மற்றும் கைபேசி நெடுஞ்சாலைக்கு எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் காண்க.

33.
\(\triangle\) ABCஇல் \(\frac { sinA }{ sinB } =\frac { sin(A-B) }{ sin(B-C) } \) எனில்,a2, b2, c2 ஆகியவை ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமையும் என நிறுவுக.
34.
ஒரு பெட்டியில் இரண்டு வெள்ளைப் பந்துகள், மூன்று கருப்புப் பந்துகள் மற்றும் நான்கு சிவப்புப் பந்துகள் உள்ளன. பெட்டியில் இருந்து மூன்று பந்துகளைத் தேர்ந்தெடுக்கும் பந்து, அவற்றில் குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து இருக்குமாறு எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?
35.
8 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் ஓர் வரிசையில் நிற்கிறார்கள்.
(i) எவரும் எந்த இடத்திலும் நிற்கலாம் என்ற வகையில் எத்தனை வழிகளில் நிற்கலாம்?
(ii) 6 ஆண்களும் அடுத்தடுத்து வருமாறு எத்தனை வழிகளில் நிற்கலாம்?
(iii) எந்த இரு ஆண்களும் ஒன்றாக நிற்காமல் எத்தனை வழிகளில் நிற்கலாம்
36.
1 ≤ r ≤ n எனில் nx(n-1) Cr-1 = (n-r+1)x nCr-1 என நிறுவுக
37.
\(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. செங்குத்து வடிவம்
38.
\(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. வெட்டுத்துண்டு வடிவம்
39.
7-4√3-ன் வர்க்கமூலம் காண்க
40.
800 x 800 x 720 அலகுகள் பரிமாணம் கொண்ட கனசெவ்வக வடிவம் கொண்ட ஒரு பேரங்காடியில், படத்தில் கண்டவாறு புள்ளியிட்ட பாதையில் நகரும் படிக்கட்டு (escalator) அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது எனில்,
i) நகரும் படிக்கட்டின் மொத்த மீச்சிறு நீளத்தினைக் காண்க.
ii) எந்தெந்த உயரத்தில் நகரும் படிக்கட்டானது திரும்புகின்றது எனக் காண்க.
iii) நகரும் படிக்கட்டுகள் திரும்பும் இடங்களில் அதன் சாய்வுகளைக் காண்க.

41.
\(\sin ^{ 2 }{ \frac { \pi }{ 18 } } +\sin ^{ 2 }{ \frac { \pi }{ 9 } } +\sin ^{ 2 }{ \frac { 7\pi }{ 18 } } +\sin ^{ 2 }{ \frac { 4\pi }{ 9 } } =2\) எனக் காண்பி.
42.
ஒரு பொருளை P என்ற இடத்திலிருந்து ஒரு இலக்கைத் தாக்கச் சீரான வேகத்தில் ஏவப்படுகிறது. அது இலக்கைத் தாக்குவதற்கு 15 வினாடிக்கு முன் 1400 மீட்டர் தூரத்திலும் மற்றும் 18 ஆவது வினாடியில் 800 மீட்டர் தூரத்திலும் இருக்கிறது எனில்,
i) இலக்கிற்கும் அந்த இடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு என்ன?
ii) 15ஆவது வினாடியில் எவ்வளவு தொலைவு கடந்திருக்கும்?
iii) இலக்கைத் தாக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
43.
x + y \(\ge \) 3, 2x-y \(\le \)5 மற்றும் -x + 2y \(\le \)3 ஆகிய அசமன்பாடுகளின் தொகுப்பிற்கு வரைபடப் பகுதியாகத் தீர்வு காண்க.
44.
கீழ்க்காண்பவைகளிற்கு தீர்வு காண்க. (5,4) மற்றும் (2,0) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்
45.
\({ \left( { x }^{ 2 }+\frac { 1 }{ { x }^{ 3 } } \right) }^{ 10 }\)-ன் விரிவில் x15 -ன் கெழுவைக் காண்க.
46.
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும்: \(\frac{x+1}{x^2(x-1)}\)
47.
மதிப்புக் காண்க. 994
48.
A = { 0, 1, 2, 3 } என்க. A-ல் கீழ்க்காணும் வகையில் தொடர்புகளை அமைக்கவும்.
(i) தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு அல்லாத தொடர்பு.
(ii) தற்சுட்டு மற்றும் சமச்சீர் அல்லாமல் கடப்பு தொடர்பு.
1.
\(\frac { { a }^{ 2 }-{ c }^{ 2 } }{ { b }^{ 2 } } =\frac { \sin { \left( A-C \right) } }{ \sin { \left( A+C \right) } } \)
\(\frac { a }{ \sin { A } } =\frac { b }{ \sin { B } } =\frac { c }{ \sin { C } } =k\) என்க.
⇒ a = k sin A. b = k sin B, c = k sin C
L.H.S = \(\frac { { a }^{ 2 }-{ c }^{ 2 } }{ { b }^{ 2 } } =\frac { { k }^{ 2 }\sin ^{ 2 }{ A } -{ k }^{ 2 }\sin ^{ 2 }{ C } }{ { k }^{ 2 }\sin ^{ 2 }{ B } } \)
= \(\quad \frac { \sin ^{ 2 }{ A } -\sin ^{ 2 }{ C } }{ \sin ^{ 2 }{ B } } =\frac { \sin { \left( A+B \right) \sin { \left( A-C \right) } } }{ \sin ^{ 2 }{ \left( 1180-\left( A+C \right) \right) } } \)
= \(\frac { \sin { \left( A+C \right) \sin { \left( A-C \right) } } }{ \sin ^{ 2 }{ \left( A+C \right) } } =\frac { \sin { \left( A-C \right) } }{ \sin { \left( A+C \right) } } \)
= R.H.S (∵ sin(180 - (A +C) = sin (A+C))
2.
(i) ஒரு வினாவிற்கான வாய்ப்புகள் = 4
10 வினாக்களுக்கான வாய்ப்புகள் = 4 x 4 x 4 x 4 x 4 x 4 x 4 x 4 x 4 x 4 = 410
(ii) முதல் நான்கு வினாக்களுக்கான வாய்ப்புகள் = 3 x 3 x 3 x 3 = 34
மீதமுள்ள ஆறு வினாக்களுக்கான வாய்ப்புகள் = 5 x 5 x 5 x 5 x 5 x 5 = 56
மொத்த வினாக்களுக்கான வாய்ப்புகள் = 34 x 56
(iii) n ஆவது வினாவிற்கு n + 1 வாய்ப்புகள் எனில்
10 வினாக்களுக்கு 10 + 1 வாய்ப்புகள் = 11 வழிகள்
3.
f :A ⟶ B ஒன்றுக்கொன்று எனில் A உள்ள ஒவ்வொரு உறுப்பும் B-ல் ஒவ்வொரு உறுப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது அது மேற்கோர்த்தல் ஆகும். எனவே ஒன்றுக்கொன்று ஆனால் மேற்கோர்த்தல் அல்ல என்பது ஒரு சார்ப்பாகாது.
4.
A = { 1,2,3,4 }, B = {a,b,c,d} எனில் f = A ⟶ B ஒரு சார்பு அல்ல. ஒரு சார்பு மேற்கோர்த்தல் எனில் அது ஒன்றுக் கொன்றாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒன்றுக்கொன்று அல்ல என்பதால் இது சார்பாக இருக்க முடியாது.
5.
i) 3x + 4y -12 = 0 கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் சமன்பாடு
செங்குத்தான கோட்டின் சமன்பாடு 4x - 3y + k = 0
நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு = 4x - 3y + k = 0, K\(\in \)R
ii) 3x + 4y - 12 = 0ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 3x + 4y +k1 = 0 ஆகும். இது நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாட்டினைக் குறிப்பதால் நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு.
=3x + 4y + k1 = 0, k1 \(\in \) R
6.
B முனை (-4, 7), மற்றும் மூலைவிட்டம் AC =5-y+7=0 என்க.
மூலைவிட்டம் BD=x+5y+k =0 ஆகும்.
\(\therefore \)(AC\(\bot \) BD)
BD என்ற கோடு (-4, 7) என்ற புள்ளி வழி செல்வதால் நமக்கு கிடைப்பது
-4+5(7)+k =0
31+k=0
k=-31
\(\therefore \)மற்றொரு மூலை விதத்தில் சமன்பாடு=x +5y-31=0
7.
கொடுக்கப்பட்டது \(\alpha \) = 30, P = 12
நேர்கோட்டின் சமன்பாடு = x cos \(\alpha \) + y sin \(\alpha \) = p
\(\Rightarrow xcos30°+ysin30°=12\)
\(\Rightarrow x\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) y\left( \frac { 1 }{ 2 } \right) =12\)
\(\Rightarrow \frac { \sqrt { 3 } x+y }{ 2 } =12\)
\(\Rightarrow\)\(\sqrt { (3) } x+y\)=24

8.
\({ e }^{ \frac { 1 }{ 2 } x }=1+\frac { \left( \frac { x }{ 2 } \right) }{ 1! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 2 } }{ 2! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 3 } }{ 3! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 4 } }{ 4! } +\frac { \left( \frac { x }{ 2 } \right) ^{ 5 } }{ 5! } +...\)
=\(1+\frac { x }{ 2 } +\frac { x^{ 2 } }{ 8 } +\frac { { x }^{ 3 } }{ 48 } +\frac { { x }^{ 4 } }{ 384 } +\frac { x^{ 5 } }{ 3840 } +...\)
9.
ex=\(1+\frac { x }{ 1! } +\frac { x^{ 2 } }{ 2! } +\frac { { x }^{ 3 } }{ 3! } +..\)
e5x=\(1+\frac { 5x }{ 1! } +\frac { (5x)^{ 2 } }{ 2! } +\frac { (5x)^{ 3 } }{ 3! } +\frac { (5x)^{ 4 } }{ 5! } +....\)
=\(1+5x+\frac { 25x^{ 2 } }{ 2 } +\frac { 125{ x }^{ 3 } }{ 6 } +\frac { 625{ x }^{ 4 } }{ 24 } +\frac { 3125{ x }^{ 5 } }{ 120 } +...\).
10.
படி 1
y = x2யின் வரைபடம் வரைக.

படி 2: y =(x-1)2 ஓரலகு வலது புறத்தில் நகர்த்தப்பட்டு வரையப்படுகிறது.
படி 3:y = 3(x-1)2-ன் வரைபடம் y-அச்சை நோக்கி அழுத்தப்பட்டு அதாவது x அச்சிலிருந்து விலகுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் (x-1)2ஆனது 3ஆல் பெருக்கப்பட்டு பெறப்படுகிறது.3>1
படி 4:y = 3(x-1)2+5-ன் வரைபடம் 5அலகுகள் மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
11.
\((1+x)^{ \frac { p }{ q } }=\left[ 1+\frac { p }{ q } x+\frac { \frac { p }{ q } \left( \frac { p }{ q } -1 \right) }{ 2! } { x }^{ 2 }+\frac { \left( \frac { p }{ q } \right) \left( \frac { p }{ q } -1 \right) \left( \frac { p }{ q } -2 \right) }{ 3! } { x }^{ 2 }+... \right] \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left( 1+\frac { { x }^{ 2 } }{ 5 } \right) ^{ \frac { 2 }{ 3 } }\)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left( 1+\frac { 2 }{ 3 } \left( \frac { { x }^{ 2 } }{ 5 } \right) +\frac { \left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { 2 }{ 3 } -1 \right) }{ 2! } \left( \frac { { x }^{ 2 } }{ 5 } \right) ^{ 2 }+\frac { \left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { 2 }{ 3 } -1 \right) \left( \frac { 2 }{ 3 } -2 \right) }{ 3! } \left( \frac { { x }^{ 2 } }{ 5 } \right) ^{ 3 }+... \right) \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left[ 1+\frac { 2x^{ 2 } }{ 15 } +\left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { -1 }{ 3 } \right) .\frac { { x }^{ 4 } }{ 50 } +\left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { -1 }{ 3 } \right) \left( \frac { -2 }{ 3 } \right) \frac { { x }^{ 6 } }{ 125\times 6 } +.... \right] \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left[ 1+\frac { 2x^{ 2 } }{ 5 } -\frac { 2x^{ 2 } }{ 9\times 50 } +\frac { 4 }{ 3\times 3\times 3 } \frac { { x }^{ 6 } }{ 125\times 6 } .... \right] \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left[ 1+\frac { 2x^{ 2 } }{ 5 } -\frac { { x }^{ 4 } }{ 225 } +\frac { 2x^{ 6 } }{ 10125 } ..... \right] \).
இந்த விரிவு ஏற்புடையதாக இருக்க வேண்டுமெனில் \(\left| \frac { { x }^{ 2 } }{ 5 } \right| \)<1 ⇒ x2<5 இருக்க வேண்டும்.
12.

வட்டத்தின் விட்டம் = 40 செ.மீ.
r = 20 செ. மீ
AB = 20
OA = OB = AB = 20 செ.மீ
∴ OAB -ல்
θ = \(\frac { \pi }{ 3 } \)
θ = \(\frac { l }{ r } \) ⇒ l = rθ
= 20 x \(\frac { \pi }{ 3 } \) = 20 x \(\frac { 22 }{ 7 } \times \frac { 1 }{ 3 } \)
= 20.95 செ.மீ. (தோராயமாக).
13.

f(x) = x2 என்ற சார்புக்கு\(-f(x)=-x^2\) ஆகும். ஆகையால் x -அச்சினைப் பொறுத்து y = x2 –ன் பிரதிபலிப்பு y = -x2 ஆகும்.
14.
3x = y எனில்\(\frac { 1 }{ { (1+3x) }^{ 2 } } =\frac { 1 }{ { (1+y) }^{ 2 } } \)
இப்போது,\(\frac { 1 }{ { (1+y) }^{ 2 } } \) ஐ ஈருறுப்புத் தேற்றத்தின் மூலம் y-ன் அடுக்குகளாக எழுதலாம் |y|<1 எனவுள்ள எல்லா y மதிப்புகளுக்கும் இது பொருந்தும். பின்பு y-க்கு 3x எனப் பிரதியிட |3x|<1 எனவுள்ள எல்லா x மதிப்புகளுக்கும் \(\frac { 1 }{ { (1+3x) }^{ 2 } }\) -ன் விரிவு ஏற்புடையதாகும். \(\left| x \right| <\frac { 1 }{ 3 } \) ஐ நிறைவு செய்யும் x-ன் மதிப்புகளுக்கு மட்டுமே இந்த விரிவுபொருந்தும்.
\(\frac { 1 }{ { (1+3x) }^{ 2 } } ={ (1+3x) }^{ -2 }\)
\(=1-2(3x)+\frac { 2(2+1) }{ 2! } ({ 3x) }^{ 2 }-\frac { 2(2+1)(2+2) }{ 3! } ({ 3x) }^{ 3 }+\frac { 2(2+1)(2+2)(2+3) }{ 4! } ({ 3x) }^{ 4 }-...\)
எனவே,\(\frac { 1 }{ { (1+3x) }^{ 2 } } =1-6x+27{ x }^{ 2 }-108{ x }^{ 3 }+405{ x }^{ 4 }-...\left| x \right| <\frac { 1 }{ 3 } \)
15.

2x2 + x- 15 ≤ 0
\(\Rightarrow (x+3)(2x-5)\le 0\Rightarrow 2(x+3)\left( x-\frac { 5 }{ 2 } \right) \le 0\)
\(\therefore \) மாறுநிலைப் புள்ளிகள் \(-3,\frac { 5 }{ 2 } \)
\(\therefore \) அச்சமன்பாடு நிறைவு செய்யும் சாதகமான இடைவெளிகள்
\((-\infty ,-3)\left( -3,\frac { 5 }{ 2 } \right) \left( \frac { 5 }{ 2 } ,\infty \right) \)
| இடைவெளி | (x +3)ன் குறியீடு | \(\left( x-\frac { 5 }{ 2 } \right) \)ன் குறியீடு | 2x2+x -15ன் குறியீடு |
| \((-\infty ,-3)\) x =- 4 என்க | - | - | + |
| \(\left( -3,\frac { 5 }{ 2 } \right) \) x = 0 என்க | + | - | - |
| \(\left( \frac { 5 }{ 2 } ,\infty \right) \) x = 3 என்க | + | + | + |
அசமன்பாடு நிறைவு செய்யும் இடைவெளி \(\left( -3,\frac { 5 }{ 2 } \right) \)
16.
3x - 9 ≥ 0 ⇒ 3x ≥ 9 அதாவது, x ≥ 3 எனக் கிடைக்கும்.
அதேபோன்று 4x - 10 ≤ 6-லிருந்து,4x ≤ 16 எனக் கிடைக்கும். அதாவது x ≤ 4.
தீர்வுகள் [3,∞) மற்றும் (-∞,4]-ன் வெட்டுகணமாகும். எனவே, தீர்வு [3,4]
17.
இடப்புறம் = \((\frac{1}{cosA}-\frac{1}{sinA})[1+\frac{sinA}{cosA}+\frac{cosA}{sinA}]\)
= \(\frac{\sin^3A-\cos^3A}{\sin^2A\cos^2A}\) ......(i)
வலப்புறம் = \(\frac{\sin A}{\cos^2A}-\frac{\cos A}{\sin^2A}=\frac{\sin^3A-\cos^3A}{\sin^2A\cos^2A}\) ......(ii)
(i) மற்றும் (ii) இலிருந்து நமக்குத் தேவையான தீர்வு கிடைத்துள்ளது.
18.
(i) (n + 1)! = 20 (n - 1)! கொடுக்கப்பட்டுள்ளது
\(\Rightarrow \) (n + 1) (n) (n - 1)! = 20 (n - 1)!
\(\Rightarrow \) (n + 1) (n) = 20
\(\Rightarrow \) n2 + n - 20 = 0
\(\Rightarrow \) (n + 5) (n - 4) = 0
n = -5 ஆக இருக்க முடியாது
\(\therefore \) n = 4
19.
ஒவ்வொரு முதல் பரிசும் எந்த ஒரு மாணவர்களுக்கும் 10 வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்
\(\therefore \) 12 பரிசுகளை ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும்
= 10 x 10 x 10 x 10 x 10 x 10 x10 x 10 x 10 x 10
= 1012 வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்
20.
ஒருவர் 10 இந்திய உணவை 10 வழியிலும் 7சீன உணவை 7 வழியிலும் தேர்வு செய்ய முடியும்.
\(\therefore \) கூட்டுதலின் அடிப்படைக் கொள்கையின் படி 10 இந்தியன் மற்றும் 7 சீன உணவை (10 + 7) = 17 வழிகளில் தேர்வு செய்யலாம்.
21.
a1=1
a2=2
a3=3
a4=2+3=5
a5=3+5=8
a6=5+8=13
∴ முதல் 6 உறுப்புகள் 1,2,3,5,8,13, .....
22.
\(\frac { \sin{ 75 }°-\sin15^{ 0 } }{ \cos{ 75 }^{ 0 }+\cos{ 15 }^{ 0 } } =\frac { 2\cos\left( \frac { { 75 }^{ 0 }+{ 15 }^{ 0 } }{ 2 } \right) \sin\left( \frac { { 75 }^{ 0 }-{ 1 }5^{ 0 } }{ 2 } \right) }{ 2\cos \left( \frac { { 75 }^{ 0 }+{ 15 }^{ 0 } }{ 2 } \right) \cos\left( \frac { { 75 }^{ 0 }-{ 1 }5^{ 0 } }{ 2 } \right) } \)
\(=\frac { 2\cos{ 45 }°\sin{ 30 }° }{ 2\cos45°\cos30° }= \tan30°=\frac { 1 }{ \sqrt { 3 } } \)
23.
x வெட்டு 3 எனில், A(3, 0) தேவையான கோட்டின் மீதுள்ள புள்ளியாகும்.
5x-4y+3=0 என்ற கோட்டிற்கு இணையான கோடு 5x-4y+k =0 ஆகும்
(3, 0) என்ற புள்ளியை (1)-ல் பிரதியிட.
5x3-4x0+k=0 \(\Rightarrow \)15+k=0 \(\Rightarrow \)k=-15
\(\therefore \)தேவையான கோட்டின் சமன்பாடு 5x-4y-15=0
24.
\(\sin { \theta } =\sin { \alpha } ,\alpha \in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) இன் பொது தீர்வு \(\theta =n\pi +{ \left( -1 \right) }^{ n } \alpha ,n\in Z\)
\(\sin { \theta } =-\frac { \sqrt { 3 } }{ 2 } =\sin { \left( -\frac { \pi }{ 3 } \right) } \)
எனவே, பொது தீர்வு ஆனது
\(\theta =n\pi +{ \left( -1 \right) }^{ n }\left( -\frac { \pi }{ 3 } \right) =n\pi +{ \left( -1 \right) }^{ n+1 }\left( \frac { \pi }{ 3 } \right) ;n\in Z\) ....(1)
25.
y = f(x) = x2 + 5x + 4 என்க.
\({ x }^{ 2 }+5x+\left( \frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\left( \frac { 5 }{ 2 } \right) ^{ 2 }+4\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\frac { 25 }{ 4 } +4\)
\(=\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\frac { 25+16 }{ 4 } =\left( x+\frac { 5 }{ 2 } \right) ^{ 2 }-\left( \frac { 3 }{ 2 } \right) ^{ 2 }\)
26.
A x A-ல் என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன எனில் A-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 4 ஆகும்.
\(\Rightarrow n(A)=4\)
A x A -ல் உறுப்புகள் (1,3),(0,2) எனில்
A-ல் உள்ள உறுப்புகள் A = {0, 1, 2, 3}} என இருக்கலாம்.
27.
tan 120° = tan(180° - 60°) = - tan(60°) = \(-\sqrt { 3 } \)
(அல்லது) tan 120° ஐ tan(90° + 30°) என எழுதி மதிப்பைக் காண்க.
28.
(a+b)n என்ற ஈருறுப்புத் தேற்றத்தின் விரிவில் a = 2x, b = 3 மற்றும் n = 5 எனப் பிரதியிட
(2x + 3)5 = (2x)5+ 5(2x)43 + 10(2x)332 +10(2x)233 +5(2x)34 + 35
= 32x5 + 240x4 + 720x3 + 1080x2 + 810x + 243
29.
| 2x-17 | = 3 எனில் 2x - 17 = \(\pm \) 3
அதாவது, x = 10 அல்லது x = 7
30.
A = {x : x = 4n + 1, n = 2,3,4,5} = {9,13,17,21} எனவே (n)A = 4 = n(p(A)) = 2⁴ = 16
31.
\(^{ \left( n+2 \right) }{ C }_{ 7 }:^{ \left( n+1 \right) }{ P }_{ 4 }=13:24\)
\(\frac { ^{ \left( n+2 \right) }{ C }_{ 7 } }{ ^{ \left( n+1 \right) }{ P }_{ 4 } } =\frac { 13 }{ 24 } \)
\(\frac { \left( n+2 \right) ! }{ \left( n-5 \right) !\times 7! } \times \frac { \left( n-5 \right) ! }{ \left( n-1 \right) ! } =\frac { 13 }{ 24 } \Rightarrow \frac { \left( n+2 \right) \left( n+1 \right) n\left( n-1 \right) ! }{ \left( n-1 \right) !\times 7! } =\frac { 13 }{ 24 } \)
\(\left( n+2 \right) \left( n+1 \right) \left( n \right) =\frac { 13 }{ 24 } \times 7!=\frac { 13 }{ 24 } 7\times 6\times 5\times 4\times 3\times 2\times 1\)
\(\left( n+2 \right) \left( n+1 \right) \left( n \right) =13\times 14\times 15\)
\(n+2=15\Rightarrow n=13.\)
32.
முதல் கோபுரத்திலிருந்து கைபேசியின் நிலை வடக்கிலிருந்து கிழக்கிற்கு ஏற்படுத்தும் கோணம் \(\theta\) என்க.
கொசைன் சூத்திரத்தை ப் பய ன்படுத்த, நமக்குக் கிடைப்பது,
\({ \left( \sqrt { 31 } \right) }^{ 2 }\) = 52 + 62 - 2 x 5 x 6 cos\(\theta\)
31 = 25 + 36 – 60 cos\(\theta\)
\(\cos { \theta } =\frac { 1 }{ 2 } \Rightarrow \theta ={ 60 }^{ o }\)
நெடுஞ்சாலையிலிருந்து கைபேசியின் தூரம் x என்க.
\(\sin { \theta } =\frac { x }{ 5 } \Rightarrow x=5\sin { \theta } =5\sin { { 60 }^{ o } } =\frac { 5\times \sqrt { 3 } }{ 2 } \) கி.மீ.
33.
sin சூத்திரம் \(\cfrac { sin\quad A }{ a } =\cfrac { sin\quad B }{ b } =\cfrac { sin\quad C }{ c } =k\)
= sin A=ak,sin B =bk,sin C=ck
= \(\cfrac { sin\quad A }{ sin\quad C } =\cfrac { sin(A-B) }{ sin(B-C) } \) என கொடுக்கப்பட்டுள்ளது.( sin A= sin (B+C),sin C= sin (A+B))
\(\Rightarrow \cfrac { sin(B+C) }{ sin(A+B) } =\cfrac { sin(A-B) }{ sin(B-C) } \)
\(\Rightarrow sin(B+C).sin(B-C)=sin(A+B)sin(A-B)\)
\(\Rightarrow sin^{ 2 }B-sin^{ 2 }C=sin^{ 2 }A-sin^{ 2 }B\)
\(\Rightarrow \) k2b2-k2c2=k2a2-k2b2
\(\Rightarrow \) b2-c2=a2-b2
\(\Rightarrow \) 2b2=a2+c2
\(\Rightarrow \) a2,b2,c2 ஒரு கூட்டுத் தொடர்
34.
வெள்ளைப் பந்துகள் = 2
கருப்பு பந்துகள் = 3
சிவப்பு பந்துகள் = 4
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய பந்துகள் = 3 (கருப்புப் பந்து + 2)
வேறு நிறப்பந்துகள்
| வெள்ளை பந்துகள் (2) | கருப்புப் பந்து (3) | சிவப்பு பந்து (4) | சேர்வு |
|---|---|---|---|
| 2 | 1 | 0 | 2C2 x 3C2 x 4C0 |
| 0 | 1 | 2 | 2C0 x 3C1 x 4C2 |
| 1 | 1 | 1 | 2C1 x 3C1 x 4C1 |
| 1 | 2 | 0 | 2C1 x 3C2 x 4C0 |
| 0 | 2 | 1 | 2C0 x 3C2 x 4C3 |
| 0 | 3 | 0 | 2C0 x 3C3 x 4C0 |
தேவையான வழிகள் = \(\left( { 2 }_{ { c }_{ 2 } }\times { 3 }_{ { c }_{ 1 } }\times { 4 }_{ { c }_{ 0 } } \right) +\left( { 2 }_{ { c }_{ 0 } }\times { 3 }_{ { c }_{ 1 } }\times { 4 }_{ { c }_{ 2 } } \right) +\left( { 2 }_{ { c }_{ 1 } }\times { 3 }_{ { c }_{ 1 } }\times { 4 }_{ { c }_{ 1 } } \right) +\left( { 2 }_{ { c }_{ 1 } }\times { 3 }_{ { c }_{ 2 } }\times { 4 }_{ { c }_{ 0 } } \right) +\left( { 2 }_{ { c }_{ 0 } }\times { 3 }_{ { c }_{ 2 } }\times { 4 }_{ { c }_{ 1 } } \right) +\left( { 2 }_{ { c }_{ 0 } }\times { 3 }_{ { c }_{ 3 } }\times { 4 }_{ { c }_{ 0 } } \right) \)
= 1 x 3 x 1 + 1 x 3 x 6 +2 x 3 x 4 + + 2 x 3 x 1 + 1 x 3 x 4 + 1 x 1 x 1
= 3 +18 + 24 + 6 +12 + 1 = 64
35.
(i) எவரும் எந்த இடத்திலும் நிற்காமல் எனில் 8 பெண்கள் , 6 ஆண்கள் நிற்கும் வழிகள் = 8 + 6 = 14 = 14p14 = 14!
(ii) 6 ஆண்களும் அடுத்தடுத்து வருமாறு எனில் மொத்தம் 6 ஆண்களும் ஒரே குழுவாக கருதினால் 8 பெண்கள் + 1 ஆண்கள் = 9! அமைக்கலாம்.
இந்த 6 ஆண்களும் அவர்களுக்குள் 6! வழிகளில் நிற்கலாம்.
\(\therefore \) மொத்த அமைப்பு = 9! x 6!
(iii) எந்த இரு ஆண்களும் ஒன்றாக நிற்காமல் இருக்க வேண்டுமெனில்
x குறி ஆண்கள் நிற்பதற்குரிய இடங்கள் = 9
மொத்த ஆண்கள் = 6
\(\therefore \) மொத்த வழிகளின் எண்ணிக்கை = 9P6 x 8!
36.
LHS = n x (n - 1)Cr-1 = \(n\times \frac { \left( n-1 \right) ! }{ \left( r-1 \right) !\left( n-1-r+1 \right) ! } \)
= \(n\times \frac { \left( n-1 \right) ! }{ \left( r-1 \right) !(n-r)! } =n\times \frac { \left( n-1 \right) !(n-r+1) }{ \left( n-r+1 \right) \left( r-1 \right) \left( n-r \right) ! } \) (n- r + 1) ஆல் பெருக்கி வகுக்க )
= \(\frac { n!\left( n-r+1 \right) }{ \left( n-r+1 \right) !\left( r-1 \right) ! } \) [ \(\because\) n (n- 1)! = n! (n -r + 1) (n - r)! = (n - r + 1)! ]
= (n - r + 1) \(\frac { n! }{ \left( r-1 \right) !\left( n-r+1 \right) ! } \)
= (n - r + 1) x nCr-1 = RHS \(\left[ \because { n }C_{ r }=\frac { n! }{ r!\left( n-r \right) ! } \right] \) எனவே நிரூபிக்கப்பட்டது.
37.
செங்குத்து வடிவம்
\(\sqrt { 3 } x-y+4=0\)
⇒ (-\(\sqrt { 3 } \))x+y=4 (6.17)-ஐ
Ax+By+C=0 என்ற சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது
A =-\(\sqrt { 3 } \) மற்றும் B =1 ∴ \(\sqrt { { A }^{ 2 }+{ B }^{ 2 } } \)=2
சமன்பாடு (6.17) -ஐ இருபுறமும் 2 ஆல் வகுக்க
⇒ \(-\frac { \sqrt { 3 } }{ 2 } x+\frac { 1 }{ 2 } y\) (6.18)-ஐ
x cosα+y sinα = p இச்சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது
cosα=\(-\frac { \sqrt { 3 } }{ 2 } \), sinα =\(\frac { 1 }{ 2 } \) மற்றும் p =2 என்க.
⇒ α =150° =\(\frac { 5\pi }{ 6 } \) மற்றும் p =2
செங்குத்து வடிவத்தின் சமன்பாடு
\(xcos\frac { 5\pi }{ 6 } +ysin\frac { 5\pi }{ 6 } \)=2 ஆகும்.
38.
வெட்டுத்துண்டு வடிவம்
\(\sqrt { 3 } \)x-y+4=0
\(\sqrt { 3 } \)x-y =-4
⇒ \(\frac { -\sqrt { 3 } }{ 4 } x+\frac { y }{ 4 } \)=1
⇒ \(\frac { x }{ \left( -\frac { 4 }{ \sqrt { 3 } } \right) } +\frac { y }{ 4 } \) (6.16)- ஐ
\(\frac { x }{ a } +\frac { y }{ b } \)=1 என்ற சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது x -ன் வெட்டுத்துண்டு =-\(\frac { 4 }{ \sqrt { 3 } } \), மற்றும் y -ன் வெட்டுத்துண்டு = 4
39.
\(\sqrt{7-4\sqrt{3}}=a+b\sqrt{3}\) என்க.
இங்கு a,b ஆகியவை விகிதமுறு எண்கள்
இருபுறமும் வர்க்கப்படுத்த,
7-4√3=a2 + 3b2 + 2ab√3 எனக் கிடைக்கும்.
எனவே, a2+3b2=7 மற்றும் 2ab=-4
எனவே, a=\(\frac{-2}{b}\)
a2+3b2=7-லிருந்து \((\frac{-2}{b})^2+3b^2=7\) எனக் கிடைக்கிறது.
⇒ \(\frac{4}{b^2}+3b^2\) = 7 அல்லது 3b4-7b2+4=0
b2-க்கு தீர்வு காண b2=\(\frac{(7\pm\sqrt{49-48})}{6}\) எனக் கிடைக்கிறது
⇒ b2=1 அல்லது b2=\(\frac{4}{3}\)
ஆகையால், b=土1 அல்லது b=\(\pm\frac{2}{\sqrt{3}}\)
b ஒரு விகிதமுறு எண் என்பதால் b=士1.
எனவே, b-ஐக் கொண்டு கிடைக்கும் a-ன் மதிப்புகள் ∓2
\(\sqrt{7-4\sqrt{3}}>0\) என்பதால், \(\sqrt{7-4\sqrt{3}}=2-\sqrt{3}\) எனக் கிடைக்கிறது
40.
i) நகரும் படிக்கட்டின் மொத்த மீச்சீறு நீளம்
பேரங்காடியின் வடிவம் ஒரு கனச் செவ்வகம். கனச் செவ்வகத்தை பிரித்தால் அதன் தளமானது கீழ்கண்டவாறுஅமையும்.

நகரும் படிக்கட்டின் பாதையானது OA விலிருந்து AB, AB யிலிருந்து BC க்கு, BC யிலிருந்து CD க்கும் செல்கிறது எனில் \(\Delta\) OAE-யில் OA2 = AE2 + OE2
\(\Rightarrow { OA }^{ 2 }={ \left[ \frac { 1 }{ 4 } (720) \right] }^{ 2 }+{ OE }^{ 2 }\)
OA2 = 1802 + 8002
=(20 \(\times\) 9)2 + (20 \(\times\) 40)2
=202(92 + 402)
=202(1681)
=202(412)
\(\Rightarrow\) OA = 20 \(\times\) 41 = 820
\(\therefore\) நகரும் படிக்கட்டின் மொத்த நீளம் = OA + AB + BC + CD
=4 \(\times\) OA
= 4 \(\times\) 820
மீச்சிறு நீளம் =3280 அலகுகள்.
ii) எந்தெந்த உயரத்தில் நகரும் படிக்கட்டானது திருப்புகின்றது.
நகரும் படிக்கட்டு திரும்புகின்ற உயரம்
\(AE=\frac { 1 }{ 4 } (720)=180\) அலகுகள்
\(BE=\frac { 1 }{ 2 } (720)=360\) அலகுகள்
\(GE=\frac { 3 }{ 4 } (720)=540\) அலகுகள்
iii) நகரும் படிக்கட்டுகள் திருப்பும் இடங்களில் அதன் சாய்வுகள்.
\(=\frac { AE }{ DE } =\frac { 180 }{ 800 } =\frac { 9 }{ 40 } \)
A என்ற புள்ளியின் சாய்வு = \({ \frac { 9 }{ 40 } }\)
\(\Delta\)OAE \(\equiv \)\(\Delta\)ABB'\(\equiv \)\(\Delta\)BCC'\(\equiv \) \(\Delta\)CDD'
\(\therefore \) BC என்ற புள்ளிகளில் சாய்வு \(\frac { 9 }{ 40 } \)
41.
LHS = \(\sin ^{ 2 }{ \frac { \pi }{ 18 } } +\sin ^{ 2 }{ \frac { \pi }{ 9 } } +\sin ^{ 2 }{ \frac { 7\pi }{ 18 } } +\sin ^{ 2 }{ \frac { 4\pi }{ 9 } } \)
= \(\sin ^{ 2 }{ \left[ \frac { \pi }{ 18 } +\frac { \pi }{ 9 } +\frac { 7\pi }{ 18 } +\frac { 4\pi }{ 9 } \right] } \)
\(=\sin ^{ 2 }{ \left[ \frac { \pi }{ 18 } \times \frac { 180 }{ \pi } \right] } +\sin ^{ 2 }{ \left[ \frac { \pi }{ 9 } \times \frac { 180 }{ \pi } \right] } +\sin ^{ 2 }{ \left[ \frac { 7\pi }{ 18 } \times \frac { 180 }{ \pi } \right] } +\sin ^{ 2 }{ \left[ \frac { 4\pi }{ 9 } \times \frac { 180 }{ \pi } \right] } \)
= sin2 100 + sin2 200 + sin2 700 + sin2800
= [sin (900 - 800)]2 + [sin (90 - 70)]2 + sin2 700 + sin2 800
= cos2 800 + cos2 700 + sin2 700 + sin2 800
= 1 + 1 = 2 = RHS
42.
i)
| நேரம் | தொலைவு |
|---|---|
| 15 | d -1400 |
| 18 | d -800 |
d என்பது இலக்கிற்கும் இடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு என்க.

\(\Rightarrow \) 6(d -1400) = 5(d - 800)
\(\Rightarrow \) 6d -8400=5d - 4000
\(\Rightarrow \) d = 1400 மீ.
ii)
15 வது வினாடியில் கடந்த தொலைவு:
| நேரம் | தொலைவு |
|---|---|
| 15 | d-1400=4400-1400=3000 |
| 18 | d-800=4400-800=3600 |
இருபுள்ளி வடிவம் சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(\Rightarrow \frac { y-15 }{ 18-15 } =\frac { x-3000 }{ 3600-3000 } \)

\(\Rightarrow y-15=\frac { x-3000 }{ 200 } \)
நேரம் 15 வினாடிகள் எனில்
15-15 = \(\frac { x-3000 }{ 200 }\)
\(\Rightarrow 0=\frac { x-3000 }{ 200 } \)
\(\Rightarrow x-3000=0\Rightarrow x=3000\) மீ.
iii) இலக்கை தாக்க எடுத்துக் கொள்ளும் நேரம்
T1(15 ஆவது வினாடி) D1(1400 மீ)
T2(18 ஆவது வினாடி) D2(800 மீ)
இரு புள்ளி வடிவம் பயன்படுத்தி
\(\Rightarrow \frac { T-{ T }_{ 1 } }{ { T }_{ 2 }-{ T }_{ 1 } } =\frac { D-{ D }_{ 1 } }{ { D }_{ 2 }-{ D }_{ 1 } } \Rightarrow \frac { T-15 }{ 18-15 } =\frac { D-1400 }{ 800-1400 } \)
\(\Rightarrow \frac { T-15 }{ 3 } =\frac { D-1400 }{ -600 } \)
\(T-15=\frac { 1400-D }{ 200 } \)
\(T=\frac { 1400-D }{ 200 } +15\) .....(1)
D = 0 என (1)-ல் பிரதியிட.
\(T=\frac { 1400-0 }{ 200 } +15=7+15=22\) வினாடிகள்
43.

கோட்டின் மீதுள்ள இரு புள்ளிகள் தெரியுமானால் அக்கோட்டை வரைய இயலும்.
x + y = 3 - ன் மீது (3, 0) மற்றும் (0, 3) ஆகிய புள்ளிகள் அமையும் என்பதை எளிதில் கண்டறியலாம்.
x +y = 3, 2x - y = 5 மற்றும் -x + 2y = 3 ஆகிய மூன்று கோடுகளையும் வரைக.
இப்போது, (0,0) புள்ளி x + y \(\ge \) 3 - ஐ நிறைவு செய்யாது. (0, 0)ஐ தன்னகத்தே பெற்றிருக்காத x + y = 3 பகுதியே x + y \(\ge \) 3 இன் தீர்வு கணமாகும்.
இதேபோன்று, 2x - y \(\le \) 5 ஐ ஆதிப்புள்ளி நிறைவு செய்து ஆதியைக் கொண்ட பகுதியே 2x - y\(\le \) 5 இன் தீர்வுக் கணமாகும்.
மேலும், -x + 2y\(\le \)3 ஆதிப்புள்ளி நிறைவு செய்வதால் ஆதியைக் கொண்ட பகுதியே -x + 2y \(\le \) 3 இன் தீர்வுக் கணமாகும்.
மூன்று பகுதிகளுக்கும் பொதுவான பகுதியே கொடுக்கப்பட்ட ஒருபடி அசமன்பாடுகளின் தொகுப்பிற்குத் தீர்வுக் கணமாகும்
44.
(x1,y1) மற்றும் என்பதை (5, 4) மற்றும் (2, 0) என்க.
புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் D = \(\sqrt { ({ x }_{ 2 }-{ x }_{ 1 })^{ 2 }+({ y }_{ 2 }-{ y }_{ 1 })^{ 2 } } \)
= \(\sqrt { { 3 }^{ 2 }+{ 4 }^{ 2 } } =5\)
45.
\({ \left( { x }^{ 2 }+\frac { 1 }{ { x }^{ 3 } } \right) }^{ 10 }\), n=10, x=x2, a=\(\frac { 1 }{ { x }^{ 3 } } \)
∴ பொது உறுப்பு Tr+1=nCrxn-rar
⇒ Tr+1=10Cr(x2)10-r\(\left( \frac { 1 }{ { x }^{ 3 } } \right) ^{ r }\)
=10Crx20-2rx-3r
=10Crx20-5r .....(1)
x15 ன் கெழுவினைக் காண,
20-5r=15 என பிரதியிட
⇒ 20-15=5r
⇒ r=1 என (1) ல் பிரதியிட
T2=10C1x20-5=10C1x15
x15 ன் கெழு 10.
46.
\(\frac{x+1}{x^2(x-1)}=\frac{A}{x}+\frac{B}{x^2}+\frac{C}{x-1}\)என்க.
எனவே, x+1=Ax(x-1)+B(x-1)+cx2
x = 0 எனும்போது B=-1, x=1 எனும்போது C=2
x = -1 எனும்போது 2A-2B+C=0 ⇒ A=-2
எனவே, \(\frac{x+1}{x^2(x-1)}=\frac{-2}{x}-\frac{1}{x^2}+\frac{2}{x-1}\)
47.
∵ (a-b)n=nC0an+nC1an-1b+nC2an-2b2+..........nCna0bn
⇒ 994=(100-1)4
=1004-4C11003+4C21002-4C3100(13)+14
=100000000-4(1000000)+\(\frac { 4\times 3 }{ 2\times 1 } \)(10000)-4(100)+1
=100000000-4000000+60000-400+1
=96,059,601
48.
(i) (1, 2) என்ற உறுப்பின் மூலம் “சமச்சீர் அல்ல” என உருவாக்கப் பயன்படுத்துவோம். மேலும் {(1, 2)} என்ற தொடர்பு , வரையறையின்படி கடப்பு ஆகும். (2, 3)ஐ சேர்த்து, (1, 3)ஐ நீக்கினால் தொடர்பானது கடப்பு அல்ல. எனவே தொடர்பு {(1,2),(2,3)} என்பது தற்சுட்டு அல்ல, சமச்சீர் அல்ல மற்றும் கடப்பும் அல்ல. இதே போன்று பல உதாரணங்கள் கொடுக்க இயலும்.
(ii) வரையறையின் படி, தொடர்பு {(1,2)} என்பது கடப்பு தொடர்பாகவும் அதே நேரத்தில், தற்சுட்டு மற்றும் சமச்சீர் அல்லாமலும் உள்ளதை அறிவோம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards