11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
11th First Revision Test
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பின்வருவனவற்றில் ஒரு நிலையான அலைக்குப் பொருந்தும்?
ஏதொரு தளத்தின் குறுக்கேயும் மொத்த ஆற்றல் பரிமாற்றம் இல்லை
எல்லாத் துகள்களும் அதன் சராசரி நிலையில் ஒரே நேரத்தில் கடக்கின்றன
ஒவ்வொரு துகளிலும் விசையூட்டப்பட்ட வீச்சு உள்ளது
மேற்கண்ட அனைத்தும்
2.
வாயுவின் சராசரி வேகம் SO2 ஐப் போல் நான்கு மடங்கு எனில் [மூலக்கூறு நிறை 64]
He [மூலக்கூறு நிறை 64]
O2[மூலக்கூறு நிறை 4]
M2[மூலக்கூறு நிறை 32]
CH4[மூலக்கூறு நிறை 16]
3.
ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள A0C அறையின் வெப்பநிலை B அறையைவிட 4 குறைவாக உள்ளது. எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்?
அறை A
அறை B
இரண்டு அறைகளிலும் ஒரே அளவுள்ள காற்று இருக்கும்
கண்டறிய இயலாது
4.
சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.
ஒரு நீள்வட்டம்
ஒரு வட்டம்
ஒரு நேர்க்கோட்டு
ஒரு பரவளையம்
5.
தனிஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளபோது, சீரிசை அலை இயற்றியை போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4m தொலைவில் ஊசல் குண்டின் முடுக்கமானது 16ms-1 எனில் அதன் அலைவுநேரம்_______.
2s
1s
2\(\pi\)s
\(\pi\)s
6.
சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத் தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்துகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்.
7.
வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே _____.
அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்
அதிகரிக்கும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் அதிகரிக்கும்
குறையும் மற்றும் குறையும்
8.
கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சம பரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்வித்தியானது _____ மாறா விதிப்படி அமைந்துள்ளது.
நேர்கோட்டு உந்தம் (Linear momentum)
கோண உந்தம் (Angular momentum)
ஆற்றல்
இயக்க ஆற்றல்
9.
இயங்கும் துகள் ஒன்றின் கடந்த தொலைவும் இடப்பெயர்ச்சியும் சமமாக அமைய, அது இயங்க வேண்டிய பாதை____
வட்டம்
பரவளையம்
நேர்கோடு
அதிபரவளையம்
10.
\(\overrightarrow { F } =4\hat { i } +5\hat { j } -6\hat { k } \) என்ற விசையானது (2, -2, -2) என்ற புள்ளியில் அமைந்த நிலை வெக்டரின் மீது செயல்படுகின்றது. ஆதியைப் பொருத்து திருப்புவிசையின் மதிப்பு
\(-8\hat { i } -4\hat { j } -7\hat { k } \)
\(-4\hat { i } -\hat { j } -8\hat { k } \)
\(-7\hat { i } -8\hat { j } -4\hat { k } \)
\(-7\hat { i } -4\hat { j } -8\hat { k } \)
11.
m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?
\(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)
\(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)
\({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)
\({{m}_{1}\over{m}_{2}}\)
12.
ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.
\(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)
\(F=\beta x\)
\(F=-\beta x\)
\(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)
13.
மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
எப்பொழுதும் சுழி
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு
முடிவு செய்ய இயலாது
14.
15.
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.
இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்
சுழற்சி இயக்கத்தை குறைக்கும்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
16.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி கண்டறியக் காரணம் யாது?
17.
ஒரு உலோகத்தின் பாய்சன் விகிதம் 0.5.இவ்உலோகத்தால் செய்யப்பட்ட கம்பியின் மீது செலுத்தப்படும்போது 4% அதன் குறுக்குப் பரப்பில் குறைவு ஏற்படுகிறது. நீளத்தில் ஏற்படும் சதவீத உயர்வு யாது?
18.
தொடுவிசை, தொடாவிசை விவரி.
19.
பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை ms1 இல் மாற்றுக.
20.
கோண இடப்பெயர்ச்சி மற்றும் கோணத்திசை வேகம் இவற்றை வரையறு
21.
10 m s-1 வேகததில் இ்யங்கும் ஒரு நிறை குறைவான பொருள் அதன நிறையைப் போன்று இரு மடங்கு மற்றும் அதன வேகததில் பாதி்யளவு கொண்ட அதே திசையில் இ்யங்கும் மறறொரு பொருளின் மீது மோதுகிறது .மோதலானது ஒரு பாரிமாண மீட்சி மோதல் எனக் கருதுக.மோதலுக்குப் பிறகு இரு பொருள்களின் வேகம் என்ன?
22.
கீழ்க்கண்ட அமைப்புகளில் செயல்படும் அக மற்றும் புறவிசைகளை காண்க.
a) புவியை மட்டும் தனியாகக் கொண்ட அமைப்பு
b) புவி மற்றும் சூரியன் இணைந்த அமைப்பு
c) நடக்கும் மனிதன் - என்ற அமைப்பு
d) நமது உடல் மற்றும் புவி இணைந்த அமைப்பு.
23.
சறுக்குதலுக்கும் நழுவுதலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
24.
ஒரு மெல்லிய தண்டின் புறக்கணிக்கத்தக்க நிறையும், குறுக்குப் பரப்பு 4 X 10-6 உடையது. 1000C ல் 5 நீளமுள்ள ஒருமுனை குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. 00C ல் குளிர்வடையும்போது சுருங்குவதைக் தடுக்க அதன் கீழ்முனையில் ஒரு நிறை இணைக்கப்படுகிறது. நிறை , தண்டின் சேகரிக்கப்பட்ட ஆற்றல் காண்க. Y =10X 1011 Nm -2நீரின் விரிவு குணகம் =10-5k -1 g =10ms-2
25.
ஒரு துகளின் நிலை r\(=2.00t\hat { i } -1.00{ t }^{ 2 }\hat { j } +3.00\hat { k } \)எனக் கொடுக்கப்பட்டுள்ளது. t செகண்டுகளிலும். குணகங்கள் அதற்கேற்ற அலகுகளையும், r என்பது மீட்டரிலும் உள்ளது. துகளின் i) திசைவேகத்தையும், முடுக்கத்தையும் கண்டுபிடி ii) t=2s களில் துகளின் திசைவேகத்தின் எண் மதிப்பு மற்றும் திசைகளையும் யாது?
26.
25g நிறையுடைய ஒரு துப்பாக்கிக் குண்டு 400 ms-1 திசை வேகத்துடன் ஒரு அட்டையைத் தாக்குகிறது. அதன் மறு முனை வழியாக 300 ms-1 என்ற திசைவேகத்துடன் வெளியேறுகிறது. அட்டையின் வழியே செல்ல செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடு.
27.
வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின்மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையை பெறுக.
28.
29.
ஒரு மோல் அளவுள்ள ஏதேனும் ஒரு வாயுவின் பருமனை படித்தர வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (STP) காண்க. மேலும் அதே மூலக்கூறுகளின் பருமனை அறைவெப்பநிலை (300k) மற்றும் ஒரு வளி மண்டல அழுத்தத்தில் (1atm) கணக்கிடுக.
30.
y = sin(x − a) என்ற அலை \(a = 0, a ={\pi\over4},a={\pi\over2},a={2\pi\over2}\) மற்றும் a = π என்ற மதிப்புகளுக்கு எவ்வாறு இருக்கிறது என வரைபடங்கள் மூலம் காட்டுக.
31.
எடையின்மை என்பதை மின் உயர்த்தி இயக்கத்தை பயன்படுத்தி விளக்குக.
32.
இரு துகள்கள் P மற்றும் Q என்பனவற்றின் நிறைகள் முறையே 1 kg மற்றும் 3 kg அவற்றிற்கு இடையேயான கவர்ச்சி விசையினால் 30 m s-1 மற்றும் 6 m s-1 என்ற திசைவேகங்களுடன் ஒன்றை ஒன்று நோக்கி நகர்கின்றன. அவற்றின் நிறைமையங்களின் திசைவேகங்கள் என்ன?
33.
50 kg நிறையுடைய பொருள் தளம் ஒன்றில் ஓய்வுநிலையில் உள்ளது. அப்பொருளினை நகர்த்த அதன் மீது 5 N விசை செலுத்தப்படுகிறது. எனினும் பொருள் நகரவில்லை. இந்நிலையில் பொருள் வைக்கப்பட்டுள்ள தளம், பொருளின் மீது செலுத்தும் உராய்வு விசையைக் கண்டுபிடி.
34.
வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது செயல்படும் விசையானது (F) பொருளின் நிறை (m), திசைவேகம் (v), மற்றும் வட்டப்பாதையின் ஆரம் (r) ஆகியவற்றைப் பொருத்தது, எனில் விசைக்கான சமன்பாட்டை பரிமாண பகுப்பாய்வு முறையில் பெறுக. (மாறிலி k = 1)
35.
பொறியியல் பயன்பாடுகளில் அதிர்வு இயக்கத்தின் முக்கியத்துவம் யாது?
36.
30 மீ ஆழத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் 20 மெட்ரிக் டன் நிலக்கரியை துக்கக்கூடிய ஒரு என்ஜினின் திறனைக் கணக்கிடு.
37.
நிறை மையம் எவ்வடிவங்களில் மூலை விட்டங்களில் அமைந்திருக்கும்.
38.
கோட்பாடுகளும், ஆய்வகச் செயல்முறைகளும் பயன்பாட்டில் எங்கனம் ஒன்றையொன்று முழுமையாக்குகின்றன?
39.
நல்லியல்பு வாயு ஒன்றின் சுழற்சி நிகழ்வினைக் காட்டும் பின்வரும் படத்திலிருந்து, கீழ்கண்டவற்றைக் காண்க.
a. வாயுவால் செய்யப்பட்ட வேலை
b. வாயுவின் மீது செய்யப்பட்ட வேலை
c. இந்நிகழ்வில் செய்யப்பட்ட தொகுபயன் வேலை

40.
அலைகள் என்றால் என்ன?
41.
நியூட்டனின் ஈர்ப்பியல் பொது விதியை தருக.
42.
இரண்டு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் பற்றி சிறுகுறிப்பு வரைக.
43.
10 m வளைவு ஆரம் கொண்ட வட்ட வடிவச் சாலையில் செல்லும் கார், 50 ms-1 திசைவேகத்தில் வளைகிறது அக்காரினுள்ளே அமர்ந்திருக்கும் 60 kg நிறையுடைய மனிதர் உணரும் மையவிலக்கு விசையைக் காண்க.
1.
(d)
மேற்கண்ட அனைத்தும்
2.
(a)
He [மூலக்கூறு நிறை 64]
3.
(a)
அறை A
4.
(c)
ஒரு நேர்க்கோட்டு
5.
(d)
\(\pi\)s
6.
(d)
7.
(c)
குறையும் மற்றும் அதிகரிக்கும்
8.
(b)
கோண உந்தம் (Angular momentum)
9.
(c)
நேர்கோடு
10.
(d)
\(-7\hat { i } -4\hat { j } -8\hat { k } \)
11.
தானாக கீழே விழும் பொருள், தரையை அடையும் போது பெற்றிருக்கும் திசை வேகம்
\(v=\sqrt{2 g h}\)
அதாவது \( v_1=\sqrt{2 g h_1}\) மற்றும்
\(v_2=\sqrt{2 g h_2}\)
எனவே, \(\frac{m_1 v_1}{m_2 v_2}=\frac{m_1 \sqrt{h_1}}{m_2 \sqrt{h_2}}=\frac{m_1}{m_2} \sqrt{\frac{h_1}{h_2}}\)
12.
நிலை ஆற்றல் \(P.E =\alpha-\frac{\beta}{2} x^2 \)
P.E = வேலை = Fx
\(\mathrm{P} =\alpha-\frac{\beta}{2} x^2 \)
விசை \(=\frac{d p}{d x} \)
\(=\frac{d}{d x}\left(\alpha-\frac{\beta}{2} x^2\right) \)
\(=0-\frac{\beta}{2} \times 2 x \)
\(=\beta x\)
13.
(b)
சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
14.
(c)
15.
(d)
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
16.
1. குளிர்ச்சியான பொருளிலிருந்து சூடான பொருளுக்கு வெப்ப ஆற்றல் பாய்வதையும் வெப்ப இயக்கவியலின் முதல் விதி அனுமதிக்கிறது.
2. எடுத்துக்காட்டாக 5J ஆற்றல் சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு அல்லது குளிர்ச்சியான பொருளிலிருந்து சூடான பொருளுக்கு பாய்ந்தாலும் தொகுபயன் அமைப்பின் மொத்த அக ஆற்றல் மாறாது.
3. ஆனால் 5J வெப்பம் குளிர்ச்சியான பொருளிலிருந்து வெப்பமான பொருளுக்கு எப்போதும் பாயாது. இயற்கையாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு திசையில் மட்டுமே நடைபெறும். எதிர்த்திசையில் நடைபெறுவதில்லை.
4. இந்நிகழ்வுகள் எந்தத்திசையில் நடைபெற்றாலும் அமைப்பின் மொத்த ஆற்றல் மாறாமல் இருக்கும். இருப்பினும் எதிர்த்திசையில் இந்நிகழ்வு நடைபெறாது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
5. வெப்ப இயக்கவியலின் முதல் விதி ஒரு இயற்கை நிகழ்வு எதிர்த்திசையில் ஏன் நடைபெறுவதில்லை என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்கவில்லை பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் மேதைகள் எதிர்த்திசையில் ஒரு நிகழ்வு நடைபெறாததற்கான விளக்கத்தைக் கொடுக்க முனைந்தார்கள். அதன் பயனாக இயற்கையின் ஒரு புதிய விதியினைக் கண்டறிந்தார்கள். அதுதான் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி.
17.
A = \(\pi \)r2 எனவே \(\frac { \triangle A }{ A } =2\frac { \triangle }{ r } =\frac { 4 }{ 100 } \)
\(\sigma =\frac { \frac { \triangle r }{ r } }{ \frac { \triangle l }{ l } } =\frac { 1 }{ 2 } \)
\(\frac { \triangle l }{ l } =2\frac { \triangle r }{ r } =\frac { 4 }{ 100 } \)
\(\therefore \) %நீளத்தில் உயர்வு \(\frac { \triangle l }{ l } \times 100=\frac { 4 }{ 100 } \times 10\) = 4%
18.
(i)தொடுவிசை:
இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் விசை தொடு விசை ஆகும். விசையை ஏற்படுத்தும் காரணியும் பொருளும் ஒன்றுக்கொன்று தொடுவதன் மூலம் ஏற்படும் தொடு விசையால் பொருளின் இயக்கமானது ஏற்படுகிறது.
(ii) தொடாவிசை: சூரியனை புவி சுற்றி வருவதை கருதுவோம். சூரியனும் புவியும் ஒன்றை ஒன்று தொடவில்லை என்றாலும் அவை ஒன்றையொன்று இடைவினை புரிகின்றன. அதன் காரணமாக புவியானது சூரியனின் ஈர்ப்பு விசையை உணர்கிறது. இவ்வகை ஈர்ப்புவிசை ஒரு தொடா விசை ஆகும்.
19.
n1 = 72 kmh-1 n2 = ?
L1 = 1 km L2 = 1m
T1 = 1h T2 = 1s
\({ n }_{ 2 }={ n }_{ 1 }{ \left[ \frac { { L }_{ 1 } }{ { L }_{ 2 } } \right] }^{ a }{ \left[ \frac { { T }_{ 1 } }{ { T }_{ 2 } } \right] }^{ 6 }\)
திசைவேகத்தின் பரிமாண வாய்ப்பாடு
[M0 L T1] = [L T1]
a = 1 b = -1
\({ n }_{ 2 }=72{ \left[ \frac { 1km }{ 1m } \right] }^{ 1 }{ \left[ \frac { 1h }{ 1s } \right] }^{ 1 }\)
\({ n }_{ 2 }=72{ \left[ \frac { 1000m }{ 1m } \right] }^{ 1 }{ \left[ \frac { 3600s }{ 1s } \right] }^{ 1 }\)
= 72 \(\times\) 1000 \(\times\) 1/3600 = 20 m s-1
72 km h-1 = 20 m s-1
20.
கோண இடப்பெயர்ச்சி:
புள்ளி ஒன்றைப் பற்றி வட்டப்பாதை இயக்கம் மேற்கொள்ளும் துகள் ஒன்று ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்புள்ளியில் அல்லது வட்டத்தின் மையத்தில் தோற்றுவிக்கும் கோணம் கோண இடப்பெயர்ச்சி எனப்படும். இதன் அலகு ரேடியன் எனப்படும்.
கோண திசைவேகம்:
கோண இடப்பெயா்ச்சி மாறும் வீதம் கோணத் திசைவேகம் எனப்படும்.
இதன் அலகு rad s-1 ஆகும்.
\(\omega=\frac{d \theta}{d t}\)
21.
.png)
முதல் பொருளின் நிறை m என்க, மற்றும் அதன் தொடக்க திசைவேகம் u1 = 10 m s-1. எனவே இரண்டாேது பொருளின் நிறை 2 m மற்றும் அதன தொடக்க திசைவேகம்
\({ u }_{ 2 }=\frac { 1 }{ 2 } { u }_{ 1 }=\frac { 1 }{ 2 } \left( 10ms^{ -1 } \right) \)
\({ V }_{ 1 }=\left( \frac { { m }_{ 1 }-{ m }_{ 2 } }{ { m }_{ 1 }-{ m }_{ 2 } } \right) { u }_{ 1 }+\left( \frac { 2{ m }_{ 2 } }{ { m }_{ 1 }-{ m }_{ 2 } } \right) { u }_{ 2 }\)
\({ V }_{ 1 }=\left( \frac { { m }-{ 2m } }{ { m }+{ 2m } } \right) 10+\left( \frac { 2{ \times 2m } }{ { m }+2{ m } } \right) 5\)
\({ V }_{ 1 }=-\left( \frac { 1 }{ 3 } \right) 10+\left( \frac { 4 }{ 3 } \right) 5=\frac { -10+20 }{ 3 } =\frac { 10 }{ 3 } \)
\({ V }_{ 1 }=3.33ms^{ -1 }\)
\({ V }_{ 2 }=\left( \frac { 2{ m }_{ 1 } }{ { m }_{ 1 }+{ m }_{ 2 } } \right) { u }_{ 1 }+\left( \frac { { m }_{ 2 }-{ m }_{ 1 } }{ { m }_{ 1 }+{ m }_{ 2 } } \right) { u }_{ 2\\ }\)
\({ V }_{ 2 }=\left( \frac { { 2m } }{ { m }+{ 2m } } \right) 10+\left( \frac { 2{ m-m } }{ { m }+2{ m } } \right) 5\)
\({ V }_{ 2 }=-\left( \frac { 2 }{ 3 } \right) 10+\left( \frac { 1 }{ 3 } \right) 5=\frac { 20+5 }{ 3 } =\frac { 25 }{ 3 } \)
V2 =8.333 ms-1
v1 மற்றும் v2 ஆகி்ய இரு வேகங்களும் நேர்க்குறியாக உள்ளதால் அவை இரண்டும் முறையை 3.33 m s-1 மற்றும் 8.33 m s-1 என்ற திசை வேகங்களுடன் மோதலுக்கு முன் இயங்கிய திசையிலேயே இயங்குகின்றன.
22.
(a) புவி மட்டும் கொண்ட அமைப்பு
சூரியனின் ஈர்ப்பு விசையினால், புவி சூரியனைச் சுற்றிவருகிறது. புவியினைத் தனித்த அமைப்பு எனக்கருதினால், சூரியனின் ஈர்ப்பு விசையை புறவிசையாகக் கருதலாம். நிலவையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலவும் புவியின் மீது ஒரு புறவிசையைச் செலுத்தும்.
.jpg)
(b) புவி மற்றும் சூரியன் இணைந்த அமைப்பு
இந்நேர்வில், இரண்டு அகவிசைகள் செயல் - எதிர்ச்செயல் விசை சோடியாக செயல்படுகின்றன. ஒன்று சூரியன் புவியின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசை , மற்றொன்று புவி சூரியனின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை ஆகும்.
.jpg)
(c) நடக்கும் மனிதன் - என்ற அமைப்பு
நடக்கும் போது, நாம் புவியின் மீது ஒரு விசையை செலுத்தும் அதே நேரத்தில் புவியும் இதற்குச் சமமான எதிர்விசை ஒன்றை நம்மீது செலுத்துகிறது. நமது உடலை மட்டும் ஒரு அமைப்பாகக் கருதினால் புவி நம்மீது செலுத்தும் எதிர்விசையை புறவிசை எனக்கருதலாம்.
.jpg)
(d) நமது உடல் மற்றும் புவி இணைந்த அமைப்பு
இந்நிகழ்வில், இரண்டு அக விசைகள் அமைப்பில் உள்ளன. ஒன்று நாம் புவியின் மீது செலுத்தும் விசை, மற்றொன்று புவி நம்மீது செலுத்தும் சமமான எதிர்விசை.
.jpg)
உந்த மாறா விதியின் பொருள்
1) உந்த மாறா விதி ஒரு வெக்டர் விதியாகும். இவ்விதி மொத்த நேர்க்கோட்டு உந்தத்தின் எண் மதிப்பு மற்றும் திசை மாறாதவை எனக்காட்டுகிறது. சில நேர்வுகளில் மொத்த நேர்க்கோட்டு உந்தம் சுழி மதிப்பையும் பெறலாம்.
2) பொருளொன்றின் இயக்கத்தினைப் பகுப்பாய்வு செய்யும் போது நியூட்டனின் இரண்டாம் விதி அல்லது நேர்க்கோட்டு உந்த மாறா விதியை நாம் பயன்படுத்தலாம். நியூட்டனின் இரண்டாவது விதியைப்பயன்படுத்த வேண்டுமானால் நாம் பொருளின் மீது செயல்படும் விசைகளைக் குறிப்பிட வேண்டும். நடைமுறைச் சூழலில் இது கடினமாகும். ஆனால் உந்த மாறா விதியில், இவ்வாறு விசைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே உந்த மாறா விதி பயன்படுத்துவதற்கு எளிமையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எடுத்துக்காட்டாக, இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிகழ்வில் அவ்விரண்டு பொருட்களும் ஒன்றின்மீது மற்றொன்று செலுத்தும் விசையைக் குறிப்பிடுவது சற்றே கடினமாகும். ஆனால் மோதலின் போது உந்த மாறா விதியை பயன்படுத்துவது எளிமையாகும்.
.jpg)
23.
| எண் | நழுவுதல் | சறுக்குதல் |
| 1. | இதில், சுழற்சி இயக்கத்கை விட நோ்க்கோட்டு இயக்கம் அதிகம். |
இதில், சுழற்சி இயக்கம் நேர்க்கோட்டு இயக்கத்தை விட குறைவு. |
| 2. | இயங்கும் ஊர்திகளுக்கு திடீரென தடை அளிக்கப்படும்போது, நழுவுதல் சாலையில் செல்லும். | இயங்கும் ஊா்திகள் திடீரென, அடிநிலையில் இருந்து கிளம்பி மண்சாலையில் நிற்கும். |
24.
(i) A =4X 10-6 m 2, l =0.5 m
T = 100-0 =1000C =100K
Y = 1011 Nm-2, a = 10-5 k-1
நீளத்தில் மாற்றம்
\(\Delta l=la\Delta T=0.5\times 10^{ 5 }\times 100=5\times 10^{ -4 }m\)

தகைவு =\(\cfrac { Y\Delta l }{ l } =Y\times a\Delta T\)
= 1011X 10-5X 100 =108 Nm-2
நீட்சி விசை
F = தகைவு X பரப்பு = 108X 10-6
= 4 X 102 N
F = Mg = \(\therefore \) M =4 X 102 N
\(M=\cfrac { 4\times { 10 }^{ 2 } }{ g } =\cfrac { 4\times { 10 }^{ 2 } }{ 10 } =40\quad kg\)
(ii) தண்டில் சேமிக்கப்பட்ட ஆற்றல்
=\(\cfrac { 1 }{ 2 } F\times \Delta l\)
= \(\cfrac { 1 }{ 2 } \times 4\times { 10 }^{ 2 }\times 5\times { 10 }^{ -4 }\)
= 0.1 J
25.
துகளின் நிலைத்தொடர் \(\overrightarrow { r } \)
\(\overrightarrow { r } =2.00t\hat { i } -1.00{ t }^{ 2 }\hat { j } +3.00\hat { k } \)
(i) துகளின் திசைவேகம்
\(\overrightarrow { v } (t)=\frac { d\overrightarrow { r } }{ dt } =\frac { d }{ dt } (\overrightarrow { r } )\)
\(=\frac { d }{ dt } (2.00t\hat { i } -1.00{ t }^{ 2 }\hat { j } +3.00\hat { k } )\)
\(\overrightarrow { v } (t)=2.0\hat { i } -2.0\hat { j } +0\)
துகளின் முடுக்கம் \(\overrightarrow { a } (t)\)
\(\overrightarrow { a } (t)=\frac { d\overrightarrow { v } }{ dt } (t)=\frac { d }{ dt } \overrightarrow { v } (t)\)
\(=\frac { d }{ dt } (2.0\hat { i } -2.0t\hat { j } )\)
\(=0-2\hat { j } \)
\(\overrightarrow { a } (t)=-2\hat { j } ms^{ -2 }\)
(ii) t=2s ல்
\(\overrightarrow { v } =2.0\hat { i } -2.0t\hat { j } \)
\(\overrightarrow { v } =2.0\hat { i } -2.0\times 2\hat { j } \)
\(=2.0\hat { i } -4.0\hat { j } \)
\(\therefore \)எண் மதிப்பு \(v=\sqrt { { (2.0) }^{ 2 }+{ \left( -4.0 \right) }^{ 2 } } \)
\(\sqrt { 4+16 } =\sqrt { 20 } =4.47{ ms }^{ -1 }\)
x அச்சுடன் v உண்டாக்கும் கோணம் \(\theta \)எனில்
\(tan\theta =\frac { { v }_{ y } }{ { v }_{ x } } =\frac { -4.0 }{ 2.0 } =-2\)
\(tan\theta =-2=-tan63.{ 5 }^{ o }\)
\(\theta \)=63.5o x அச்சுக்குக் கீழே
26.
துப்பாக்கிக் குண்டின் நிறை (m) = 25
தொடக்க திசைவேகம் (m) = 400 ms-1 1
இறுதித் திசைவேகம் (v) = 300 ms-1 1
செய்யப்பட்ட வேலை (w) = ?
வேலை - ஆற்றல் தோற்றத்திலிருந்து செய்யப்பட்ட வேலை = இயக்க ஆற்றலில் இழப்பு,
\(W=\frac { 1 }{ 2 } m({ u }^{ 2 }-{ v }^{ 2 })\)
\(=\frac { 1 }{ 2 } \times \frac { 25 }{ 1000 } kg\times ({ 400 }^{ 2 }-{ 300 }^{ 2 })\)
\(=\frac { 1 }{ 2 } \times 0.025\times (16\times { 10 }^{ 4 }-9\times { 10 }^{ 4 })\)
\(=\frac { 1 }{ 2 } \times 0.025\times (7\times { 10 }^{ 4 })\)
= 0.0125 \(\times\)(7\(\times\)104)
செய்யப்பட்ட வேலை (W) = 875 J
27.
வாயு ஒன்றினால் ஏற்படும் அழுத்தத்திற்கான கோவை
l பக்க அளவு கொண்ட கனசதுரக் கொள்கலன் ஒன்றினுள் N எண்ணிக்கையுடைய ஓரணுவாயு மூலக்கூறுகள் உள்ளன. ஒவ்வொரு மூலக்கூறின் நிறையும் m என்க.
1. வாயு மூலக்கூறுகள் ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளதால், அவை ஒன்றுடன் ஒன்று மோதுவது மட்டுமின்றி, அடைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலனின் சுவருடன் மோதுகின்றன. இம்மோதல்கள் அனைத்தும் முழுமீட்சியுறும் மோதல்கள்.

2.இவ்வாறு வாயு மூலக்கூறு சுவரின்மீது மோதும்போது, ஒரு உந்தத்தை சுவரின் மீது செலுத்துகிறது. இந்த உந்த மாற்றத்தினால் கொள்கலனின் சுவர் ஓரலகு பரப்பில் உணரும் விசை,சுவரின் மீது வாயுவால் ஏற்படும் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. ஒரு சிறிய நேர இடைவெளியில் வாயு மூலக்கூறுகளால் சுவரின் மீது மாற்றம் செய்யப்பட்ட மொத்த உந்தத்தை பின்வருமாறு கணக்கிடலாம்
3.m நிறையும், \(\overline v \) திசைவேகமும் கொண்ட வாயுமூலக்கூறு ஒன்று வலதுபக்கச் சுவரின் மீது மோதுகிறது, அதன் திசைவேகக்கூறுகள் (\({ v }_{ x },{ v }_{ y },{ v }_{ z }\))ஆகும். முழு மீட்ச்சியுறும் மோதல் என நாம் கருதுவதால், வாயு மூலக்கூறுகள் அதே வேகத்துடன் பின்னோக்கி வரும். அதன் x கூறு மட்டும் எதிர்குறி மதிப்பினைப்பெறும் மோதலுக்குப் பின்பு வாயு மூலக்கூறின் திசைவேகக்கூறுகள் (\(-{ v }_{ x },{ v }_{ y },{ v }_{ z }\))ஆகும்.
4. மோதலுக்கு முன்பு வாயு மூலக்கூறின் உந்தத்தின் x கூறு =mvx
மோதலுக்கு பின்பு வாயு மூலக்கூறின் உந்தத்தின் x கூறு =-mvx
x திசையில் வாயுமூலக்கூறின் உந்த மாறுபாடு=இறுதி உந்தம் -ஆரம்ப உந்தம் =-mvx -mvx=2-mvx
உந்தமாறா விதியின்படி, சுவரின் உந்தமாறுபாடு =+2mvx
5. \(\triangle t \) என்ற சிறிய நேர இடைவெளியில் வலதுபக்கச் சுவரின்மீது மோதும் வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
6.வலது பக்கச் சுவரிலிருந்து vx\(\triangle t \) தொலைவிலுள்ள வாயு மூலக்கூறுகள், வலது பக்கமாகச் சென்று \(\triangle t \) என்ற நேர இடைவெளியில் சுவரின் மீது மோதும். \(\triangle t \) என்ற நேர இடைவெளியில் வலதுபக்கச் சுவரின் மீது மோதும் வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது, பருமன் (AVx \(\triangle t \))மற்றும் மூலக்கூறுகளின் எண்ணடர்த்தி (n) ஆகியவற்றின் பெருக்கல்பலனுக்குச் சமமாகும்.
7.இங்கு A என்பது சுவரின் பரப்பாகும் மற்றும் n என்பது ஓரலகு பருமனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையாகும் \(\left( \frac { N }{ V } \right) \)கனசதுரக் கொள்கலன் முழுமைக்கும் வாயு மூலக்கூறுகளின் எண்ணடர்த்தி மாறிலியாக உள்ளது எனக் கருதுவோம்.

8.எனவே \(\triangle t \) நேர இடைவெளியில் வலதுபக்கச் சுவரின் மீது மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
\(\frac { n }{ 2 } \) AVx \(\triangle t \)....(1)
9.இதே \(\triangle t \) நேர இடைவெளியில் மூலக்கூறுகளால் சுவருக்கு மாற்றம் செய்யப்பட்ட மொத்த உந்தம்
\(\triangle p =({n\over2}AV_x\triangle t )\times 2mv_x=AV_x^2mv\triangle t\)....(2)
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியின்படி, ஒரு சிறு நேர இடைவெளியில் உந்தத்தில் ஏற்பட்ட மாற்றம் விசையைக் கொடுக்கும். எனவே மூலக்கூறுகளால், சுவரின்மீது செலுத்தப்பட்ட விசையின் என்மதிப்பு
\(F=\left( \frac { \triangle p }{ \triangle t } \right) =nmA{ v }_{ x }^{ 2 }\)...(3)
இவ்வாறே அழுத்தம்
\(P=\left( \frac { F }{ A } \right) =nm{ v }_{ x }^{ 2 }\)....(4)
10. இங்கு மூலக்கூறுகள் அனைத்தும் ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளதால், அவை அனைத்தும் ஒரே வேகத்தில் இயங்க இயலாது. எனவே சமன்பாடு (4) இல் உள்ள \({ v }_{ x }^{ 2 }\) என்ற பதத்தை சராசரி \(\bar { { v }_{ x }^{ 2 } } \) என மாற்றியமைக்க வேண்டும்.
\(P=nm\bar { { v }_{ x }^{ 2 } } \)...(5)
11.இங்கு வாயு ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளது எனக் கருதுவதால் அதன் இயக்கத்திசையையும் வரையறுக்க இயலாது. மூன்று திசைகளிலும் வாயு மூலக்கூறுகளின் சராசரி வேகம் சமமாகும். எனவே \(\bar { { v }_{ x }^{ 2 } } =\bar { { v }_{ y }^{ 2 } } =\bar { { v }_{ z }^{ 2 } } \) இதுபோன்றே \(\overline {v ^ 2}=\bar { { v }_{ x }^{ 2 } } +\bar { { v }_{ y }^{ 2 } } +\bar { { v }_{ z }^{ 2 } } =3\bar { { v }_{ x }^{ 2 } } \)ஆகும். எனவே வாயு மூலக்கூறுகளின் சராசரி இருமுடி வேகத்தை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\bar { { v }_{ x }^{ 2 } } =\frac { 1 }{ 3 } \bar { { v }_{ 6 }^{ 2 } } \)
சமன்பாடு (5) ஐப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்.
\(P=\frac { 1 }{ 3 } nm\bar { { v }^{ 2 } } \)அல்லது \(P=\frac { 1 }{ 3 } \frac { N }{ V } nm\bar { { v }^{ 2 } } \)
ஏனெனில் \(\left[ n=\frac { N }{ V } \right] \)
வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகளை இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
28.

29.
படித்தர வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில், வெப்பநிலை (T = 273K அல்லது 0°C) மற்றும் அழுத்தம் (P = 1 atm அல்லது 101.3 kPa)
நல்லியல்பு வாயுச்சமன்பாட்டை இங்கு பயன்படுத்தும்போது \(V=\frac { \mu RT }{ P } \).
இங்கு \(\mu \)=1 mol மற்றும் R = 8.314 J/mol.K.
இம்மதிப்புகளை சமன்பாடடில் பிரதியிடும்மபாது
\(V=\frac { \left( 1mol \right) \left( 8.314\frac { J }{ mol } K \right) \left( 273K \right) }{ 1.013\times { 1 }0^{ 5 }{ Nm }^{ 2 } } \)
= 22.4 × 10-3 m3
நாம் அறிந்தபடி 1 லிட்டர் (L)= 10-3 m3
இதிலிருந்து 1 மோல் அளவுள்ள எந்த ஒரு நல்லியல்பு வாயுவின் பருமன் 22.4 லிட்டர் என நாம் அறிந்து கொள்ளலாம்.
அறை வெப்பநிலையில் ஒரு மோல் அளவுள்ள வாயுவின் பருமனைக்கான 22.4 லிட்டரை \(\frac { 300K }{ 273K } \) ஆல் பெருக்க வேண்டும். அவ்வாறு கணக்கிடும்போது, வாயுவின் பருமன் 24.6 லிட்டர் எனக்கிடைக்கும்.
30.
மேற்கண்ட படங்களிலிருந்து நாம் அறிவது y = sin(x − a)\(a = 0, a ={\pi\over4},a={\pi\over2},a={2\pi\over2}\), a = π க்கு வரையப்பட்டுள்ளது. y = sin (x−a) ஆனது வலப்பக்கம் நகர்கிறது.
மேலும் a=vt மற்றும் \(v ={\pi \over 4}\)என எடுத்துக்கொண்டு t = 0s, t = 1s, t = 2s எனப் பொருத்தி வரைபடம் வரைந்தால் மீண்டும் y = sin(x−vt) வலப்பக்கம் நகர்கிறது. எனவே y = sin(x−vt) என்பது ஒரு பயணிக்கும் அல்லது முன்னேறு அலை. இது வலப்பக்கம் நகர்கிறது.
y = sin(x−vt) எனக் கொண்டால் முன்னேறு (பயணிக்கும்) அலை இடப்பக்கம் நகர்கிறது. இதனால் சார்பு y = f(x−vt) அலை வலப்பக்கம் நகர்வதையும் சார்பு y = f(x+vt) என்பது அலை இடப்பக்கம் நகர்வதையும் குறிக்கிறது.
31.
மின் உயரத்தியில் நிற்கும் மீது இரு விசைகள் செயல்படுகின்றன.
(i) கீழ்நோக்கி செயல்படும் ஈர்ப்பு விசை. நாம் செங்குத்து திசையினை நேர் y அச்சு திசை என எடுத்துக்கொண்டால், அந்த மனிதர் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசை \(\overset { \rightarrow }{ { F }_{ G } } =-mg\hat { j } \)
(ii) மின் உயர்த்தியின் தளத்தினால் மனிதர் மீது செலுத்தப்படும் மேல்நோக்கிய செங்குத்து விசை \(\overrightarrow { N } =N\hat { j } \)
நிகழ்வு (i) மின் உயர்த்தி ஓய்வு நிலையில் உள்ளபோது:
மனிதரின் முடுக்கம் சுழி ஆகும். எனவே மனிதர் மீது செயல்படும் மொத்த விசையும் சுழியாகும். நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
\(\overrightarrow { { F }_{ G } } +\overrightarrow { N } =0\)
\(-mg\hat { j } +N\hat { j } =0\)
வெக்டர் கூறுகளை ஒப்பிட்டால் நாம் பெறுவது N-mg =0 அல்லது N = mg என எழுதலாம். எனவே எடை W = N என்பதால் மனிதரின் தோற்ற எடை அவரின் உண்மை எடைக்கு சமம்.
நிகழ்வு (ii) மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி மின்உயர்த்தி சீராக இயங்கும்போது: சீரான இயக்கத்தின்போது (மாறாத திசைவேகம்) மனிதர் மீது செய்ல்படும் மொத்த விசையும் சுழியே. எனவே இந்த நிகழ்வின்போதும் மனிதரின் தோற்ற எடை அவரின் உண்மை எடைக்குச் சமம்.
நிகழ்வு (iii) மின் உயர்த்தி மேல்நோக்கி முடுக்கப்படும்போது:
மேல்நோக்கிய முடுக்கத்துடன் \(\left( \overrightarrow { a } =a\hat { j } \right) \) மின் உயர்த்தி இயங்குகிறது எனில் தரையைப் பொறுத்து (நிலைமக் குறிப்பாயம்) நியூட்டனின் இரண்டாம் விதியை பயன்படுத்தினால், நமக்கு கிடைப்பது \(\overrightarrow { { F }_{ G } } +\overrightarrow { N } =m\overrightarrow { a } \)
மேற்கண்ட சமன்பாட்டை செங்குத்து திசையின் அலகு வெக்டர்களை பயன்படுத்தி எழுதுவோம்.
\(-mg\hat { j } +N\hat { j } =ma\hat { j } \)
வெக்டர் கூறுகளை ஒப்பிட N = m(g + a)
எனவே மனிதரின் தோற்ற எடை அவரின் உண்மை எடையைவிட அதிகம்.
நிகழ்வு (iv) மின் உயர்த்தி கீழ்நோக்கி முடுக்கப்படும்போது:
மின்உயர்த்தியானது கீழ்நோக்கிய முடுக்கத்துடன் (\(\overrightarrow { a } =a\hat { j } \)) இயங்கிறது எனில் நியூட்டனின் இரண்டாம் விதியை பயன்படுத்தி நாம் பெறுவது \(\overrightarrow { { F }_{ G } } +\overrightarrow { N } =m\overrightarrow { a } \)
மேற்கண்டசமன்பாட்டை செங்குத்து திசையின் அலகு வெக்டர்களை பயன்படுத்தி எழுதுவோம்.
\(-mg\hat { j } +N\hat { j } =ma\hat { j } \)
வெக்டர் கூறுகளை இருபுறமும் ஒப்பிட நாம் பெறுவது N = m(g - a)
எனவே மனிதரின் தோற்ற எடை
{W = N = (m(g - a)} அவரின் உண்மை எடையை விட குறைவு.
தானே கீழே விழும் பொருள்களின் எடையின்மை:
தானே கீழே விழும் பொருள்கள் ஈர்ப்பியல் விசையை மட்டுமே உணர்கின்றன. தடையின்றி தானே விழுவதால் அவை எந்த பரப்புடனும் தொடர்பு இல்லாமல் உள்ளன. (காற்றின் உராய்வு விசை புறக்கணிக்கப்படுகிறது). எனவே பொருளின் மீது செயல்படும் செங்குத்து விசை சுளியாகும். பொருளின் கீழ்நோக்கிய முடுக்கம் புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்குச் சமம். அதாவது a = g.
\(\therefore N=m(g-g)=0\)
இதனையே எடையின்மை நிலை என்கிறோம். மின் உயர்த்தி கீழ் நோக்கிய முடுக்கம் (a = g) ல் விழும்போது, மின் உயர்த்தியின் உள்ளே இருக்கும் மனிதர் எடை யின்மை நிலையை அல்லது தானாகவே கீழே விழும் நிலையை உணர்வார்.
32.
ஒரு துகளின் நிறை = 1 kg
மற்றொரு துகளின் நிறை = 3 kg
தொகுதியின் நிறைமையம் \(= \frac{1 \times x_1+3 \times x_2}{1+3} \)
\(\text {C.M. } =\frac{x_1+3 x_2}{4}\)
கவர்ச்சி விசையால் இரு துகள்களும் ஒன்றையொன்று நோக்கிச் செல்கின்றன. எனவே, நிறை மையத்தில் திசைவேகம் சுழி.
33.
பொருள் ஓய்வு நிலையில் உள்ளபோது, பொருளின் மீது செலுத்தப்படும் வெளிப்புற விசையும், பொருள் வைக்கப்பட்டுள்ள தளம் பொருளின்மீது செலுத்தும் உராய்வு விசையும் ஒன்றுக்கொன்று சமம் மற்றும் எதிரெதிராகச் செயல்படும்
இவ்விரு விசைகளின் எண் மதிப்புகளும் சமமாகும்
fs = Fext
எனவே, பொருளின் மீது செயல்படும் ஓய்வு நிலை உராய்வு விசை
f5 = 5N.
உராய்வு விசையின் திசை, வெளிப்புற விசையின் திசைக்கு Fext எதிர்த் திசையில் இருக்கும்.
34.
F ∝ ma νb rc
F = k ma νb rc
இங்கு k என்பது பரிமாணமற்ற மாறிலி. மேற்கண்ட சமன்பாட்டில் பரிமாணங்களையும், k = 1, எனவும் பிரதியிட,
[MLT-2] = [M]a [LT-1]b [L]C
= [Ma Lb T-b LC]
[MLT-2] = [M]a [Lb+C] [T-b]
இருபுறமும் M, L மற்றும் T -ன் படிகளை சமன்செய்ய
a = 1; b + c = 1 -b = -2
2 + c = 1 b = 2
சமன்பாடுகளை தீர்க்க a = 1 b = 2 மற்றும் c = -1
a,b,c –இன் மதிப்புகளை கீழ்க்கண்ட சமன்பாட்டில் பிரதியிட
F = ma νb rc
F = m1v2r-1
அல்லது \(F={mv^2\over r }\)
35.
கட்டிடங்கள் கூட்டமைப்பு மற்றும் எந்திரவியல் கருவிகளை வடிவமைத்தல் போன்ற பொறியியல் பயன்பாடுகளில் அதிர்வு இயக்கம் பற்றிய கற்றல் மிகவும் முக்கியத்துவத்தை பெறுகிறது.
36.
நிறை m = 20 மெட்ரிக்டன் = 20 \(\times\) 1000
h = 30 m, t = 1 h = 60 \(\times\) 60 வினாடி = 3600 வினாடி
திறன் (P) = \(\frac { w }{ t } =\frac { mgh }{ t } =\frac { (20\times 1000)\times 9.8\times 30 }{ 3600 } \)
= 1633.3 w = 1.63 kw.
37.
சதுரம் செவ்வகம் கனசதுரம் மற்றும் கன செவ்வகம் பொருட்களுக்கு ஸ்வற்றின் மூலை விட்டார்கள் சந்திக்கும் புள்ளியில் இருக்கும்.
38.
மனித உடலுக்கு ஊரு விளைவிக்காத பொருட்களை கொண்டு மாற்று உறுப்புகள் தயாரிப்பதற்கு குவாண்டம் இயற்பியல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆய்வு கூட ஆராய்ச்சி செயல் முறையில் ஆராயும் முன் குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி பொருத்தமான பொருட்களை முன்னறியும் முறை நவீன சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஒன்றையொன்று முழுமையாக்குகின்றன.
39.
a) வாயுவால் செய்யப்பட்ட வேலை (ABவழியே)
WAB = area (∆ABC] + area [BC × B6]
= (1/2 × AC × CB) = (CB × B6)
= (1/2 × 200 × 3 ) + 3 (400)
= 300 + 1200 = 1500J
WAB = 1.5 KJ
b) வாயுவின் மீது செய்யப்பட்ட வேலை (BCவழியே)
WBc = - P∆V
= -400 × (6-3) ⇒1200 J (or) -1.2 kJ
c) இந்நிகழ்வில் செய்யப்பட்ட தொகுபயன் வேலை
W = WAB + WBc
= 1.5 + (-1.2)
= 0.3 kJ
W = 300 J
(a) W = +1.5kJ
(b) W = −1.2kJ
(c) W = +300J
40.
ஊடகத்தின் துகள்கள் வெளியில் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு ஊடகம் மாற்றப்படாமல் ஆற்றல் மற்றும் உந்தத்தை எடுத்துச் செல்லும் நிகழ்வு அலை எனப்படும்.
41.
M நிறையுடைய துகள், அண்டத்தில் உள்ள அனைத்து துகள்களையும் குறிப்பிட்ட விசையுடன் ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு விசையின் வலிமையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையேயான தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும் என்பதே நியூட்டனின் ஈர்ப்பியல் விதியாகும்.
கணிதவியல் வடிவில் ஈர்ப்பியல் விசையினை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
\(\vec { F } =\frac { G{ M }_{ 1 }{ M }_{ 2 } }{ { r }^{ 2 } } \hat { r } \)
42.
இரு வெக்டர்களின் எண் மதிப்புகள் மற்றும் அவ்விரண்டு வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தின் கொசைன் மதிப்பு ஆகியவற்றின் பெருக்கல் ஸ்கேலா் பெருக்கல் எனப்படும்.
\(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஆகிய இரு வெக்டர்களுக்கு இடையேயான கோணம் θ எனில் \(\vec { A } \).\(\vec { B } \)=AB cosθ. A மற்றும் B என்பவை வெக்டா் \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஆகியவற்றின் எண்மதிப்புகள்.
(i) இது பரிமாற்று விதிக்கு உட்படும், அதாவது \(\vec { A } \).\(\vec { B } \)=\(\vec { B } \)\(\vec { A } \).
(ii) இது பங்கீட்டு விதிக்கு உட்படும், அதாவது \(\vec{A} \cdot(\vec{B}+\vec{C})=\vec{A} \cdot \vec{B}+\vec{A} \cdot \vec{C} \cdot\)
(iii) வெக்டர்கள் இணையாண உள்ளபோது θ = 0o. அந்நிலையில் \((\bar{A} \cdot \bar{B})\)பெருமம் =0
(iv) வெக்டர்கள் ஒன்றுக்கொன்று எதிராக உள்ளபோது θ - 180o, அந்நிலையில \((\bar{A} \cdot \bar{B})\)சிறுமம் =-AB
(v) வெக்டா்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருந்தால் θ - 90o. அந்நிலையில் \(\vec { A } \).\(\vec { B } \)= 0
(vi) செங்குத்து ஓரலகு வெக்டா்களை கருதும் போது \(\hat{i} . \hat{i}=\hat{j} . \hat{j}=\hat{k} \cdot \hat{k}=1.\)
(vii) இதேப்போன்று \(\hat{i} . \hat{j}=\hat{j} \cdot \hat{k}=\hat{k} \cdot \hat{i}=1.1 \cos 90^{\circ}=0.\)
(viii) புள்ளி பெருக்கலுக்கு எடுத்துக்காட்டு வேலை.
43.
மையவிலக்கு விசை \(\mathrm{F}=\frac{m v^2}{r} \)
\(F=\frac{60 \times(50)^2}{10} \)
\(=\frac{60 \times 2500}{10}=15000 \mathrm{~N} \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards