11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2019
11th Third Revision Exam 2019
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் கலைக் கொள்ளிக்கு எடுத்துக்காட்டு?
சோடியம் குளோரேட்
சோடியம் ஆர்சின்ட்
(அ) மற்றும் (ஆ)
இவற்றுள் எதுவுமில்லை
2.
ஹேலோ அமிலங்கள் ஆல்கஹாலுடன் புரியும் வினையின் வேகத்தின் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
\(HI>HBr>HCI\)
\(HCI>HBr>HF\)
\(HBr>HI>HCI\)
\(HF>HCI>HBr\)
3.
கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை
நீராவி வாலை வடித்தல்
பின்ன வாலை வடித்தல்
கொதிநிலை மாறா வாலை வடித்தல்
வகையீட்டு வடித்து இறக்குதல்
4.
q=0 என்பது
வெப்பமாறா செயல்முறை
வெப்பநிலை மாறா செயல்முறை
திறந்த அமைப்பு
மூடிய அமைப்பு
5.
அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை
25% பாராவும் 75% ஆர்த்தோவும்
1% பாரா 99% ஆர்த்தோ
75% பாராவும் 25% ஆர்த்தோவும்
99% பாரா 1% ஆர்த்தோ
6.
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை மற்றும் நுண்துகளின் ஈரியல்பு தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது எது?
மரபு இயக்கவியல்
குவாண்டம் இயக்கவியல்
நியூட்டனின் இயக்கவியல்
இவற்றுள் எதுவுமில்லை
7.
A + B ⇌ C என்ற சமநிலையில் உள்ள மீள்வினையினைக் கருதுவோம், A மற்றும் B ஆகிய வினைபடுபொருட்களின் செறிவினை இருமடங்காக உயர்த்தினால், சமநிலை மாறிலியின் மதிப்பு
இருமடங்காகும்
நான்கில் ஒரு பங்காகிறது
பாதியாகும்
மாறாமலிருக்கும்
8.
(A) என்ற ஆல்கைல் புரோமை டு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து 4,5 - டை எத்தில் ஆக்டேனை த் தருகின்றது (A) என்ற சேர்மமானது.
CH3(CH2)3Br
CH3(CH2)5 Br
CH3(CH2)3 CH(Br)CH3
\({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)
9.
பின்வருவனவற்றுள் எந்த ஒரு வாயுவானது மிகக்குறைந்த ஹென்றி விதி மாறிலி மதிப்பைப் பெற்றுள்ளது?
N2
He
CO2
H2
10.
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் தொகுதியினைக் குறிப்பிடாதது எது?
BF3, H2O, NH2-
AlCl3, BF3, NH3
CN-, RCH2-, ROH
H+, RNH3+, :CCl2
11.
பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?
XeF4
AlCl3
SF6
SCl2
12.
கீழ்காணும் கூற்றுகளை கருதுக.
i) காற்றழுத்தம் கடல் மட்டத்தினை விட மலை உச்சியில் குறைவு
ii) வாயுக்கள் திட மற்றும் திரவங்களை விட அதிக அளவில் அழுத்தத்திற்கு உட்படுகின்றன.
iii) காற்றின் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும் போது பாதரசமட்டம் அதிகரிக்கின்றது
சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்
I மற்றும் II
II மற்றும் III
I மற்றும் III
I, II மற்றும் III
13.
நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)
Ca(CN)3
CaN2
Ca(CN)2
Ca3N2
14.
1.7 g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
6.022 × 1023
\(\frac{6.022\times10^{22}}{1.7}\)
\(\frac{6.022\times10^{24}}{1.7}\)
\(\frac{6.022\times10^{23}}{1.7}\)
15.
ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)
| IE1 | IE2 | IE3 | IE4 | IE5 |
| 577.5 | 1,810 | 2,750 | 11,580 | 14,820 |
இத்தனிமானது
பாஸ்பரஸ்
சோடியம்
அலுமினியம்
சிலிகான்
16.
பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
(i) SF6
(ii) PCl5
17.
கார்பாக்சில் நீக்க வினையை எழுதுக.
18.
பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
(i) Na (ii) Ba (iii) Fe
19.
சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?
20.
A என்ற திடப்பொருள் மற்றும் அதன் மூன்று கரைசல்கள் (i) ஒரு தெவிட்டிய கரைசல், (ii) ஒரு மீ தெவிட்டிய கரைசல் ஆகியன உன்னிடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த கரைசல் என்ன வகையானது என எவ்வாறு கண்டறிவாய்?
21.
ஒருவர் தான் பயன்படுத்திய நீரினால் மலமிளக்குதல் விளைவால் பாதிக்கப்பட்டார் எனில் அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்?
22.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ஆக்ஸிஜனேற்றி, இது பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்ஸிஜனேற்றம் செய்து, நீராக ஒடுக்கமடைகிறது. இதற்காக சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
23.
ஒரு கார உலோகம் (X) அதன் நீரேற்றிய சல்பேட் X2SO4.10H2O ஐ உருவாக்குகிறது.அந்த உலோகம் சோடியமாகவோ அல்லது பொட்டாசியமாகவோ இருக்க வாய்ப்புள்ளதா?
24.
செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?
25.
பின்வரும் சமநிலை வினைகளின் சமநிலை மாறிலிகளைத் தொடர்புபடுத்துக.
\((i){ N }_{ 2 }+{ O }_{ 2 }\rightleftharpoons { 2NO;K }_{ 1 }\\ (ii)2NO+{ O }_{ 2 }\rightleftharpoons 2NO_{ 2 };{ K }_{ 2 }\\ (iii){ N }_{ 2 }+2O_{ 2 }\rightleftharpoons { 2NO }_{ 2 };{ K }_{ 3 }\)
26.
குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
அ. ஹலேஜனேற்றம்
ஆ. நைட்ரோ ஏற்றம்
இ.சல்போனேற்றம்
ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை
27.
C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.
28.
தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
(அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
(b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.
29.
பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
[அ]
[ஆ]
[இ]
[ஈ]
இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.
30.
பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை
(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை
31.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.
32.
எவரெஸ்ட் மலையின் உச்சியின் மீதுள்ள ஒருவர் உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது எளிதா?
33.
கனநீரின் பயன்களைத் தருக
34.
பின்வருவனவற்றை விளக்குக.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு
35.
நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.
36.
+E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.
37.
100 கிராம் கார்பன் டைசல்பைடில் 2.56 கிராம் சல்பர் கரைக்கப்பட்டுள்ளது. இந்த கரைசல் 319. 692 K இல் கொதிக்கிறது. கரைசலில் சல்பரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? CS2 இன் கொதிநிலை 319. 450K. CS2 இன் Kb மதிப்பு 2.42 K Kg mol-1என கொடுக்கப்பட்டுள்ளது.
38.
வினைகளின் தன்னிச்சை தன்மை மீது வெப்ப நிலையின் விளைவை எடுத்துக்காட்டுடன் விவரி.
39.
ஆக்சிஜனேற்ற எண்ணை வரையறு. பின்வரும் சமன்பாட்டை ஆக்சிஜனேற்ற எண் முறையை பயன்படுத்தி சமன்செய்க.
AS2S3+ HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
40.
5000C ல், \({ Ca }{ CO }_{ 3 }(s)\rightleftharpoons CaO(S)+{ CO }_{ 2 }(g)\) என்ற வினையில் CO2ன் பகுதி அழுத்தம்
1.017 × 10–3 atm ஆகும். இவ்வினை யில் 6000Cல், KP க்கான மதிப்பினை கணக்கிடுக. இவ்வினையின் \(\triangle\)H 181KJ mol-1 மேலும் கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எல்லையில் இதன் மதிப்பு மாறுவதில்லை.
41.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
42.
துகள் ஒன்றின் நிலையில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மையின் அளவீடானது அதன் டீபிராக்ளி அலைநீளத்திற்குச் சமம் எனில், அதன் திசைவேகத்தில் ஏற்படும் குறைந்த பட்ச நிச்சயமற்றத் தன்மை திசைவேகத்தின் 1/4\(\pi\) மடங்குக்குச் சமம் எனக் காட்டுக.
43.
பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள ஒரு முதல் தொகுதி உலோகம் (A) ஆனது (B) உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தினைத் தருகிறது. இச்சேர்மத்தில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. (B) ஆனது (D) என்ற வாயுவுடன் வினைப்பட்டு அனைத்துக் கரைப்பானான (E) ஐத் தருகிறது. சேர்மம் (D) ஆனது (A) உடன் வினைப்பட்டு (F) என்ற ஒரு வலிமையான காரத்தினைத் தருகிறது. A, B, C, D, E மற்றும் F யைக் கண்டறிக. வினைகளை விளக்குக
1.
(c)
(அ) மற்றும் (ஆ)
2.
(a)
\(HI>HBr>HCI\)
3.
(b)
பின்ன வாலை வடித்தல்
4.
(a)
வெப்பமாறா செயல்முறை
5.
(a)
25% பாராவும் 75% ஆர்த்தோவும்
6.
(c)
நியூட்டனின் இயக்கவியல்
7.
(d)
மாறாமலிருக்கும்
8.
(d)
\({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)
9.
(a)
N2
10.
(c)
CN-, RCH2-, ROH
11.
(d)
SCl2
12.
(d)
I, II மற்றும் III
13.
(c)
Ca(CN)2
14.
(a)
6.022 × 1023
15.
(c)
அலுமினியம்
16.
(i) SF6

(ii) PCl5

17.

18.
(i) 2 Na + 2H2O \(\rightarrow\) 2 NaOH + H2 \(\uparrow \)
(ii) Ba + 2H2O \(\rightarrow\) Ba(OH)2 + H2\(\uparrow \)
(iii) 3Fe + 4H2O \(\rightarrow\) Fe3O4 + 4H2 \(\uparrow \)
நீரானது உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது.
19.
சமநிலையை அடைந்த பின்னர் மீளும் தன்மையுடைய வேதிவினைகள் நீகழாமல் நின்றுவிடுவதில்லை.
சமநிலையில் முன்னோக்கிய வினை மற்றும் பின்னோக்கிய வினை ஆகிய இரண்டும் சமமான வேகத்தில் நிகழ்ந்து கொண்டுருக்கின்றன.
பேரளவு மாற்றங்கள் ஏதும் உணரப்படுவதில்லை. எனவே வேதிச் சமநிலையானது இயங்குச் சமநிலை என அழைக்கப்படுகிறது.
20.
(i) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருள் கரைய முடியாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல்.
(ii) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மேலும் கரைபொருளைக் கரைக்க முடிந்த கரைசல் தெவிட்டாத கரைசல், இக்கரைசல் தெவிட்டும் நிலை அடையும் வரை இதனுடன் கரைபொருளைச் சேர்க்க முடியும்.
(iii) குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலைவிட அதிகமான கரைபொருளைக் கொண்ட கரைசல் மீ தெவிட்டிய கரைசல்.
21.
அவர் பயன்படுத்திய நீரில் சல்பேட்டுகள் அதிக செறிவில் (>500 ppm) இருந்திருக்கலாம்.
22.

1H2O2 + 2Fe2+ → Fe3+ + H2O
⇒ H2O2 + 2Fe2+ + 2H+ → 2Fe3+ + 2H2O
23.
1.படிக சல்பேட்டை எளிதில் உருவாக்கும் உலோகம் சோடியம் ஆகும்.எனவே x என்பது சோடியம்.
2. இதன் நீரேற்றிய சல்பேட் Na2SO4.10H2O ஆகும்.
24.
வெளிக்கூட்டில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களால் உணரப்படும் நிகர அணுக்கரு மின்சுமை செயலுறு அணுக்கர மின்சுமை என்றழைக்கப்படுகிறது.
Zசெயலுறு =Z -S
25.
\((i)\quad { K }_{ 1 }=\frac { \left[ NO \right] ^{ 2 } }{ \left[ { N }_{ 2 } \right] \left[ { O }_{ 2 } \right] } \)
\((ii){ K }_{ 2 }=\frac { \left[ NO_{ 2 } \right] ^{ 2 } }{ \left[ { N }O \right] ^{ 2 }\left[ { O }_{ 2 } \right] } \)
\(\Rightarrow { K }_{ 1 }\times { K }_{ 2 }={ K }_{ 1 }=\frac { \left[ NO \right] ^{ 2 } }{ \left[ { N }_{ 2 } \right] \left[ { O }_{ 2 } \right] } \times \frac { \left[ NO_{ 2 } \right] ^{ 2 } }{ \left[ { N }O \right] ^{ 2 }\left[ { O }_{ 2 } \right] } \)
\(=\frac { \left[ NO_{ 2 } \right] ^{ 2 } }{ \left[ { N } \right] ^{ 2 }\left[ { O }_{ 2 } \right] } ={ K }_{ 3 }\\ \therefore { K }_{ 3 }={ K }_{ 1 }\times { K }_{ 2 }\)
26.

27.
28.
(i) 1.5 மோல் CoCl2 ன் நிறை = 1.5 x 129.9
= 194.85 கி
∴ 194.85 கி நீரற்ற கோபால்ட் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு லிட்டர் திட்டக்குடுவையில் பயன்படுத்தி கரைசல் தயாரிக்கப்பட்ட வேண்டும்.
(ii) 6% \(\frac { v }{ v } \) கரைசலானது கரைசலில் 6g மெத்தனாலைக் கொண்டுள்ளது.
∴ 500 ml 6% \(\frac { v }{ v } \) மெத்தனால் கரைசலைத் தயாரிக்க 500ml திட்டக்குடுவையில் 30g மெத்தனால் எடுத்துக்கொள்ளப்பட்டு போதுமான அளவு நீர் சேர்க்கப்பட்டு 500ml கரைசல் தயாரிக்கப்படுகிறது.
29.

1. கொடுக்கப்பட்டுள்ள p3 எலக்ட்ரான் அமைப்புகளுள் (அ) அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது.
2. இதுவே (அ) நிலையான நிலையை கொண்டதாக கருதப்படுகிறது.
30.
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை

(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை

31.
(i) என்ட்ரோபி கூற்று:
1. ஒரு தன்னிச்சை செயல்முறை நிகழும்போது ஒரு தனித்த அமைப்பின் என்ட்ரோபி அதிகரிக்கிறது.
2. என்ட்ரோபி என்பது ஒரு அமைப்பின் மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற தன்மையை அளவிடும் வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பு.
(ii) கெல்வின்-பிளாங்க் கூற்று
1.ஒரு சுற்றுச்செயல் முறையில் சூடான வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி அவ்வெப்பத்தின் ஒரு பகுதியை குளிர்ந்த நிலையிலுள்ள மூலத்திற்கு மாற்றாமல் முழுவதும் வேலையாக மாற்றக்கூடிய இயந்திரத்தினை வடிவமைக்க இயலாது.
(iii) கிளாசியஸ் கூற்று
எந்த ஒரு வேலையும் செய்யாமல் குளிர்ந்த வெப்ப மூலத்திலிருந்து சூடான வெப்ப மூலத்திற்கு வெப்பத்தை மாற்ற முடியாது.
32.
1. மலையின் மீது உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது சற்று கடினம் ஏனெனில் குறைந்த வளிமண்டல அழுத்தம் காரணமாக நீரை மேலே உறிஞ்சுவதுகடினம்
2. உறிஞ்சியின் மூலம் நீரினை உறிஞ்சும்போது வாயில் உள்ள அழுத்தம் குறைகிறது.ஆகவே வளிமண்டல அழுத்தம் நீரினை மேலே வரச் செய்கிறது
3. ஆனால் மலையின் மீது குறைந்த அழுத்தம் உள்ளதால் உறிஞ்சயின் மூலம் நீரை உறிஞ்சுவது கடினம்
33.
1. அணுக்கரு உலைகளில் வேகமாகச் செல்லும் நியூட்டரான்களின் ஆற்றலை, கனநீர் குறைப்பதால் இது மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.
2. கரிம வினைகளின் வினைவழி முறைகளை கண்டறிதல் மற்றும் உடல் செயற் வினைகளின் வழிமுறைகளை தீர்மானிப்பதில் இது சுவடறிவானாகப் பயன்படுகிறது.
3. அணுக்கரு உலைகளில் வெளிப்படும் வெப்ப ஆற்றலை உறிஞ்சும் தன்மையினை இது பெற்றிருப்பதால் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.
34.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு:
1. ஒரு முப்பரிமாண வடிவமைப்பினை இரு பரிமாணத்தில் இம்முறை குறித்துக்காட்டுகிறது.
2.இம்முறையில் சீர்மையற்ற கார்பன் அணுக்கள் தாளின் தளத்தில் குறிக்கப்படுகின்றன.
3. கிடைமட்ட கொட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவை நோக்கி அமையும்.
4.செங்குத்துக் கோட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவரிடமிருந்து விலகி அமைகின்றன. டார்டாரிக் அமிலத்தின் பிஷர் அமைப்பு வாய்ப்பாடு பின்வருமாறு:

(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு :
1. இம்முறையில் இரு கார்பன் அணுக்களுக்கிடையே பிணைப்பானது முலை விட்டவாக்கில் சற்றே நீட்டமாக வரையப்படுகின்றது.
2. கீழ் இடது புறம் உள்ள கார்பன் முன்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
3.மேலும் மேல் வலது புற கார்பன் பின்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
4. இரு அடுத்தடுத்த அணுக்களுக்கு இடையே உள்ள தொகுதிகளின் புறவெளி அமைவிட தொடர்பை பிஷர் அமைப்பு வாய்ப்பாடு விளக்க இயலவில்லை.
5.சாஹார்ஸ் அமைப்பு தொகுதிகளுக்கு இடையேயான அமைவிடம் பற்றிய அறிவைத் தருகிறது.

(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு :
1.இம்முறையில் மூலக்கூறுகள் கார்பன்-கார்பன் \(\sigma \) பிணைப்பு அச்சின் வழியே நோக்கப்படுகிறது.
2.சிக்மா பிணைப்பை உருவாக்கும் இரு கார்பன்கள் இரு வட்டங்களால் குறிப்பிடப்படுகின்றன.
3. ஒன்று மற்றதன் பின்னால் அமைவதால் முன்புறமுள்ள கார்பன் மட்டுமே பார்க்க இயலும்.
4.கண்களுக்கு அருகில் உள்ள கார்பன் ஒரு புள்ளியாகவும், தொலைவில் உள்ள கார்பன் வட்டமாகவும் குறிக்கப்படுகின்றது.
5.எனவே முன்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து அதே நேரத்தில் பின்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் சுற்றளவிலிருந்தும் குறித்துக்காட்டப்படுகின்றன.
6.இவற்றிக்குக்கிடையேயான கோணமதிப்பு 120o ஆகும்.

35.
(i) நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் அமைப்பினை நாம் வரைவோம்.
(ii) அணுக்களின் அமைவு அமைப்பு

(iii) HNO3 ல் உள்ள ஒட்டு மொத்த இணைதிற எலக்ட்ரான்கள் =[(ஹைட்ரஜன்)+[1 க்ஸ் 5(நைட்ரஜன்)]+[3 x 6(ஆக்சிஜன்)]=1+5+18=24
(iv) அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்பினை வரைக. படத்தில் காட்டியுள்ளவாறு நான்கு பிணைப்புகளை வரைய இயலும். இது எட்டு எலக்ட்ரான்களால் (4 பிணைப்பு இரட்டை) உருவாக்கப் பட்டதாகும்.

(v) மீதமுள்ள 16 எலக்ட்ரான்களை (24-8=16) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய ஆக்சிஜன் துவங்கி ஒவ்வொரு அணுவும் எட்டு எலக்ட்ரான்கள் பெறும் வகையில் பங்கீடு செய்ய வேண்டும். ஆறு தனித்த ஜோடி எலக்ட்ரான்கள், வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஒவ்வொரு ஆக்சிஜன் மீதும் தலா மூன்று ஜோடி தனித்த எலக்ட்ரான்கள் எட்டு எலக்ட்ரான் விதியை நிறைவு செய்யும் வகையில் பங்கிடப்படுகின்றது.
மீதமுள்ள இரு தனித்த இரட்டைகளை ஹைட்ரஜனோடு இணைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மீது பங்கிடுவதன் மூலம் அது எட்டு எலக்ட்ரானை பெறும்.

(vi) அனைத்து அணுக்களும் எட்டு எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேற்கண்டுள்ள பங்கீட்டில், நைட்ரஜனானது எட்டு எலக்ட்ரான்களுக்கு இரு எலக்ட்ரான்களை குறைவாக பெற்றுள்ளது. எனவே வடிவமைப்பில் இறுதியில் உள்ள ஆக்சிஜனிலிருந்து ஒரு தனித்த இரட்டையினை நகர்த்துவதன் மூலம் அந்த ஆக்சிஜனுக்கும், நைட்ரஜனுக்கும் இடையே மற்றொரு பிணைப்பினை உருவாக்குக.

36.
(i) +E விளைவு:
1. தாக்கும் வினைக் காரணியை நோக்கி \(\pi\) எலக்ட்ரான் மாற்றப்பட்டால் அவ்விளைவு +E விளைவு எனப்படும்.

2. மேற்கண்டுள்ள ஆல்கீனுடன் H+ சேர்த்தல் +E விளைவுக்கு ஒரு உதாரணமாகும்.
(ii) +E விளைவு:
1. தாக்கும் காரணியிலிருந்து அதற்கு அப்பால் எலக்ட்ரான்கள் மாற்றப்படின் அவ்விளைவு -E விளைவு எனப்படும்.

2. மேலே தரப்பட்டுள்ள சயனைடு அயனி கார்பனைல் கார்பனை தாக்குதல் -E விளைவுக்கு எடுத்துக்காட்டாகும்.
37.
W2 = 2.56 g
W1 = 100 g
T = 319.692 k
Kb = 2.42 k kg mol-1
ΔTb = (319.692 - 319.450) K
= 0.242 K
⇒ M2 = \(\frac { { K }_{ b }\times { W }_{ 2 }\times 100 }{ \Delta { T }_{ b }\times { W }_{ 1 } } \)
= \(\frac { 2.42\times 2.56\times 1000 }{ 0.242\times 100 } \)
M2 = 256 g mol-1.
38.
| \(\triangle H_r\) | \(\triangle S_r\) | \(\triangle G_r=\triangle H_r-T\triangle S_r\) | விளக்கம் | விளக்கம் |
| - | + | -(at all T)அனைத்து வெப்பநிலைகளிலும் | அனைத்து வெப்பநிலைகளிலும் தன்னிசையானது | \(2O_3(g)\rightarrow 3O_2(g)\) |
| - | - | -(at low T)குறைந்த வெப்பநிலையில் | குறைந்த வெப்பநிலையில் தன்னிசையானது | வாயுக்கள் பரப்பு கவரப்படுத்தல் |
| +(at highT)உயர் வெப்பநிலையில் | உயர் வெப்பநிலையில் தன்னிச்சையற்றது | |||
| + | + | -(at low T)குறைந்த வெப்பநிலையில் | குறைந்த வெப்பநிலையில் தன்னிச்சையற்றது | ஒரு திண்மம் உருகுதல் |
| -(athighT)உயர் வெப்பநிலையில் | உயர் வெப்பநிலையில் தன்னிசையானது | |||
| + | - | +(at all T)அனைத்து வெப்பநிலைகளிலும் | அனைத்து வெப்பநிலைகளிலும் தன்னிச்சையற்றது | \(2H_2O(g)+O_2(g)\rightarrow 2H_2O_2(l)\) |
இந்த அட்டவணையானது\(\triangle H\) மற்றும் \(\triangle S\) ஆகியவை அனைத்து வெப்ப நிலைகளிலும், மேற் குறிப்பிட்டுள்ளவாறு இருப்பதாக கருத்திற்கு கொண்டுள்ளது. அவ்வாறாகவே இருக்க வேண்டும் என அவசியமில்லை.ஒரு வேதி வினையின் தன்னிச்சைதன்மையானது, மேலே குறிப்பிட்டுள்ளவாறு வினை நிகழ்வதற்கான வாய்ப்பினை மட்டும் தருகிறது. இத்தகைய செயல்முறைகளின் வேகமானது வெப்ப இயக்கவியல் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட, வினை வேகவியல் வெப்ப இயக்கவியல் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட, வினை வேகவியல் காரணிகளால் (Kinetic factors)தீர்மானிக்கப்படுகிறது.
39.
ஆக்சிஜனேற்ற எண்: ஒரு மூலக்கூறில் பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அனுவின் மீதமுள்ள எஞ்சிய மின்னோட்டமே, தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் ஆகும்.
படி 1: AS2S3+ HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
படி 2: As யின் ஆக்சிஜனேற்ற எண் 2 அதிகரிக்கிறது
N யின் ஆக்சிஜனேற்ற எண் 3 குறைகிறது.

படி 3: AS2S3 யை மூன்றாலும், HNO3 யை இரண்டாலும் பெருக்குக.
3AS2S3+ 2HNO3 + H2O \(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO
படி 4: H மற்றும் O வை தவிர பிற அணுக்களைச் (As, S, N)சரி சமன் செய்க
3AS2S3+ 2HNO3 + H2O \(\rightarrow \) 6H3AsO4 + 9H2SO4 + 2NO
படி 5: இருபுறமும் O மற்றும் H ன் குறைபாடுகளைக் கண்டறிந்து சமன் செய்க.
3AS2S3+ 28HNO3 + 4H2O \(\rightarrow \) 6H3AsO4 + 9H2SO4 + 28NO
40.
PCO2 = 1.017 x 10-3 atm T = 5000C
Kp = PCO2
\({ K }_{ { p }_{ 1 } }\) = 1.017 x 10-3 T = 500 + 273 = 773 K
\({ K }_{ { p }_{ 2 } }\) = ? T = 600 + 273 = 873 K
\(\triangle\)H0 = 181 KJ mol-1
\(log\left( \frac { { K }_{ { P }_{ 2 } } }{ { K }_{ { P }_{ 1 } } } \right) =\frac { \triangle { H }^{ 0 } }{ 2.303R } \left( \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 1 }{ T }_{ 2 } } \right) \)
\(log\left( \frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \right) =\frac { 181\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314 } \left( \frac { 873-773 }{ 873\times 773 } \right) \)
\(log\left( \frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \right) =\frac { 181\times { 10 }^{ 3 }\times 100 }{ 2.303\times 8.314\times 873\times 773 } \)
\(\frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \) = antilog of (1.40)
\(\frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \) = 25.12
\({ K }_{ { p }_{ 2 } }\) = 25.12 x 1.017 x 10-3
\({ K }_{ { p }_{ 1 } }\) = 25.54 x 10-3
41.
42.
கொடுக்கப்பட்டுள்ளவை \(\Delta x=\Delta v=?\)
\(\Delta x.\Delta p\ge\frac{h}{4\pi}\)
\(\lambda.(m\Delta v)\ge \frac{h}{4\pi}\)
\(\Delta v\ge\frac{h}{4\pi(m\lambda)}\)
\(\Delta v\ge \frac{h}{4\pi\times m\times \frac{h}{mv}} \) [\(\therefore \lambda=\frac{h}{mv}\)]
\(\Delta v\ge\frac{v}{4\pi}\)
எனவே,
திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்றத் தன்மை=\(\frac{v}{4\pi}\)
43.
1. பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள முதல் தொகுதி உலோகச்சோடியம் (Na) ஆகும். A ஆனது சோடியம் (Na)
2. சோடியம் ஆனது ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ரைட்டை தருகிறது
(A) (B) (C)
2Na + H2 \(\rightarrow\) 2NaH
(A) (B) (C)
3. இதில் ஹைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் - 1 ஆகும்.
4. ஹைட்ரஜனானது ஆக்ஸிஜனுடன் வினைப்பட்டு நீரைத் தருகிறது.
(B) (C) (D)
2H2 + O2 \(\rightarrow \) 2H2 O
(B) (C) (D)
5. நீர் ஒரு அனைத்துக் கரைப்பான ஆகும்.
6. நீரானது, சோடியத்துடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது.
(D) (A) (E)
2H2O + 2Na \(\rightarrow \) 2NaOH + H2
(D) (A) (E)
7. சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு வலிமையான காரம்
முடிவு:
| குறியீடு | பெயர் | வாய்பாடு |
|---|---|---|
| A | சோடியம் | Na |
| B | ஹைட்ரஜன் | H2 |
| C | சோடியம் ஹைட்ரைட் | NaH |
| D | நீர் | H2O |
| E | சோடியம் ஹைட்ராக்ஸைடு | NaOH |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards