11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 Full Test ( Public Portion)
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வினையூக்க அமினோவாக்கம் பற்றி எழுதுக.
2.
நீரியல் திறன் என்றால் என்ன?
3.
ஃபுளோய செல்லின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
4.
நொதியின் செயலில் முடிவுப் பொருள் தடுப்பு என்றால் என்ன?
5.
கரப்பான்பூச்சியில் காணப்படும் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளும் ஓர் தொகுப்பு.
6.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
7.
கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?
8.
கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை?கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை?நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?
9.
பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.
10.
திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.
11.
12.
வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?
13.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
14.
இவை முட்டை உற்பத்திக்காகவே வளர்க்கப் படுகின்றன.
பறவை பண்ணை
வணிக ரீதியிலான
முட்டையிடுபவை
லெக்ஹார்ன்
15.
பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
16.
ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
17.
தாவரங்களின் விதை உறக்கம்______.
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
வளமான விதைகளை உருவாக்குதல்
வீரியத்தை குறைகிறது
விதைச்சிதைவை தடுக்கிறது
18.
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்
Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்
19.
இதனைத் தவிர பிற இருந்த செல்களும் செயல்திறன் உள்ளவைகளாகும்
தாவரங்களில் சைலக்குழாய்கள்
விலங்குகளின் கொம்பு செல்கள்
தாவரங்களில் டிரக்கிடுகள்
விலங்குகளின் நகங்கள்
20.
விலங்குலகத்தின் இரண்டாவது பெரிய தொகுதி எது?
தொகுதி: மெல்லுடலிகள்
தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்
தொகுதி: அன்னலிடா
தொகுதி: துளையுடலிகள்
21.
சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலை பிராடிகார்டியா என்று பெயர்
வெண்டிரிக்கிள்கள் சுருங்கும் போது லப் எனும் இதய ஒலி உருவாகிறது.
ஆரிக்கிள்கள் சுருங்கும் போது டப் எனும் இதய ஒலி உருவாகிறது
லப் மற்றும் டப் ஒலிக்கு காரணம் இரத்தம், வால்வுகள் மீது மோதுவதால்
22.
N - அசிட்டைல் குளுக்கோஸமைனின் பலபடிஇதன் செல்சுவரில் காணப்படுவது.
(I) பாக்டீரியா
(II) பூஞ்சைகள்
(III) மைக்கோபிளாஸ்மா
(IV) தாவரசெல்
I,III
II,III
III,IV
I,II
23.
எலும்பு தசை நாரில் உள்ள தடித்த இழையில் காணப்படும் புரதம்
ட்ரோபோமையோசின்
மையோசின்
ஆக்டின்
ட்ரோபோனின்
24.
உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.
ஒழுங்குப்படுத்துதல்
உடல் சமநிலை பேணுதல்
ஒருங்கிணைப்பு
ஹார்மோன்களின் கட்டுப்பாடு
25.
கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?
சிலிக்கேட்டுகள்
தாது உப்புகள்
கால்சியம் கார்பனேட்
கால்சியம் ஆக்சலேட்
26.
கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியத்தைக் குறிப்பிடவும்.
பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது
கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள செரிக்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்
கணையநீர் லிப்பிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.
என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பை தூண்டுகிறது
27.
கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.
பிரைமேட்டா
ஆர்த்தோப்டீரா
டிப்டிரா
இன்செக்டா
28.
கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?
மாஞ்சிஃபெரா
பாம்புசா
மியூசா
அகேவ்
29.
மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.
ஒப்பீட்டு உள்ளமைப்பியல்
உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை
ஒப்பீட்டு செல்லியல்
பரிணாம உறவுமுறை
30.
அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில் பற்றி எழுதுக?
31.
சுவாசித்தலின் ஒட்டு மொத்த சுருக்க வரைபடம் வரைக?
32.
கரப்பான் பூச்சியின் கழிவு நீக்க மண்டலத்தின் அமைப்பை விளக்குக.
33.
வைரஸ்களின் பல்வேறு வகுப்புகளை அட்டவைப்படுத்து.[அல்லது] டேவிட் பால்டிமோர் 1971 இல் வெளியிட்ட வைரஸ் வகைப்பாட்டை அட்டவணைப்படுத்து.
34.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.
35.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.
36.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
37.
மின்முனைப்பியக்க நீக்கம் - வரையறு.
38.
முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.
39.
அல்லி ஆணக இடைக்கணு என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.
40.
உயிர்க்கோளன புவியை தனிச் சிறப்படையச் செய்வது எது?
41.
இரைப்பையில் காணப்படும் 3 பகுதிகள் எவை?
42.
வரிசை என்பது யாது?
43.
தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு
44.
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?
45.
முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?
46.
டிரக்கோஃபோர் லார்வா காணப்படும் தொகுதி யாது?
1.
(i) குளுட்டாமேட் அமினோ அமிலானது அம்மோனியாவுடன் வினைபுரிந்து குளுட்டாமைன் எனும் அமைடினை உருவாக்குகிறது.
(ii) குளுட்டாமைன்-கீட்டோகுளூட்டாரிக் அமிலத்துடன் வினைபுரிந்து இரண்டு மூலக்கூறு Formula குளுட்டோமேட்டை உருவாக்குகிறது.
2.
நீரியல் திறன் பற்றிய கருத்தாக்கம் ஸ்லேடையார் மற்றும் டெயிலர் ஆகியோரால் 1960 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீரியல் திறன் என்பது ஒரே குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை, தூய நீரின் நீரியல் ஆற்றலுடன் ஒப்பிடுவதாகும்.
ஒரு அமைப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் எந்த அளவிற்கு எளிதாக இடம்பெயர்கிறது என்பதை அளவிடும் குறியீடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
3.

4.
1.ஒரு வளர்ச்சிதை மாற்ற வழித் தடத்தின் முடிவு பொருள் சேகரம் அடையும்போது அது அந்த வழித்தடத்தின் முதல் படியை வேற்றுத்தள தடுப்பான இருந்து தடுக்கிறது.
2.இவ்வாறு விளைபொருளின் சேகரம்,தனது உற்பத்தியைத் தானே நிறுத்திக் கொள்கிறது.
3.விளைபொருள் பயன்பாட்டிற்குப்பின் அதன் அளவு குறையும் போது மீண்டும் அதன் உற்பத்தி தொடர்கிறது.
4.இதற்கு முடிவுப் பொருள் தடுப்பு எனப்படும்.
5.
| வ.எண் | கண்டம் | காணப்படும் உறுப்பு |
|---|---|---|
| 1 | முன்மார்பு நடுமார்பு பின்மார்பு கண்டம் | 3 இணை கால்கள் |
| 2 | நடுமார்பு பின்மார்பு | 2 இணை இறக்கைகள் |
| 3 | 9வது கண்டம் | மலவாய் நீட்சிகள் |
| 4 | 10வது கண்டம் | மலப்புழைத் தண்டுகள் |
| 5 | மார்பு பகுதி, வயிற்றுப் பகுதி | இதயம் 13 அறைகள் |
| 6 | 4வது 6வது வயிற்றுக் கண்டங்கள் | 1 இணை விந்தகங்கள் |
| 7 | 2லிருந்து 6வது வயிற்றுக்கு கண்டங்கள் | 1 இணை அண்டகங்கள் |
| 8 | 7, 8, 9வது வயிற்றுக் கண்டம் | இனப்பை |
6.
இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
பிரிவு அ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)400-450nm இடைப்பட்ட ஒளி அலைநீளம் நீல நிற ஒளி சேர்க்கை ஆகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.
பிரிவு ஆ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)500-550 இடைப்பட்ட ஒளி அலைநீளத்தில் பச்சை நிற ஒளி சேர்க்கை கதிர்வீச்சாகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் குறைவகவே நடைப்பெறுகின்றது. பச்சையம் உரிஞ்சப்படுவது இல்லை.
7.
1. கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக்கட்டை அல்லது டியூரமென் எனப்படும்.
2. சாற்றுக்கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
3. ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால், நீர் அதன் வழியாகக் கடத்தப்படுவதில்லை.
4. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
8.
நீரம் அழுத்தம் கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசையாகும்.
கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் மற்றும் கிளாமருலார் கிண்ணங்களில் நீரம் அழுத்தம் ஆகியவை கிளாமருலார்
நிகர வடிக்கட்டலுக்கான அழுத்தம் - கிளாமருலாரின் அழுத்தம் - (கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் + கிளாமருலர் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்)
நிகர வடிக்கட்டலுக்கான அழுத்தம் = 55mm Hg - (30 mm Hg + 15mm Hg )=10mm Hg
9.
| வ.எண். | சைகோசீலோமேட் | என் டீரோசீலோமேட் |
|---|---|---|
| 1. | நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்றது | மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகின்றது. |
| 2. | பிளவு உடற்குழி என அழைக்கப்படுகிறது. | உணவுப்பாதை உடற்குழி என அழைக்கப்படுகிறது. |
| 3. | எ.கா. வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள் | முட்தோலிகள், அரை நாணிகள், முதுகு நாணிகள் |
10.
| வ.எண் | திறந்த வகை சுற்றோட்டம் | மூடிய வகை சுற்றோட்டம் |
| 1 | இந்த வகை சுற்றோட்ட மண்டலத்தில் சுற்றோட்ட திரவ ஹீமோலிம்ப் காணப்படுகிறது. | இதயத்தினால் உந்தித்தள்ளப்படும் இரத்தம் இரத்த நாளங்கள் வழியே செல்கிறது. |
| 2 | இவ்வகை சுற்றோட்டத்தில் இரத்தம் திசு செல்களை நேரிடையாக தொடர்பு கொள்கிறது. | இவ்வகை சுற்றோட்டத்தில் இரத்தம் திசு செல்களை நேரிடையாக தொடர்பு கொள்ளாது. |
| 3 | இரத்தக் குழாய்கள் இல்லை | இரத்தக் குழாய்கள் உண்டு |
| 4 | எ.கா:காணுக்காலிகள், பெரும்பான்மையான மெல்லுடலிகள் | எ.கா: வளைத் தசைப் புழுக்கள், தலைக்காலிகள், முதுகெலும்பிகள் |
11.
12.
| வேர் ஏறு கொடிகள் | தண்டு ஏறு கொடிகள் | |
| 1. | தாவரங்களின் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி தாவரங்கள் ஏறுகின்றன. |
இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டு ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றன. |
| 2. | எ.கா. பைப்பர் பிடல் பைப்பர் நைக்ரம் ஹீடிரா ஹீடிரா ஹெலிக்கஸ், போதாஸ் |
எ.கா. ஐபோமியா, கண்வால்வுலஸ், டாலிகஸ், கிளைட்டோரியா குவிஸ் குவாலிஸ். |
13.
14.
(c)
முட்டையிடுபவை
15.
(a)
வீரிய சுவாசம்
16.
(b)
எளியத்திசு
17.
(a)
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
18.
(a)
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
19.
(d)
விலங்குகளின் நகங்கள்
20.
(a)
தொகுதி: மெல்லுடலிகள்
21.
(b)
வெண்டிரிக்கிள்கள் சுருங்கும் போது லப் எனும் இதய ஒலி உருவாகிறது.
22.
(d)
I,II
23.
(b)
மையோசின்
24.
(b)
உடல் சமநிலை பேணுதல்
25.
(d)
கால்சியம் ஆக்சலேட்
26.
(a)
பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது
27.
(a)
பிரைமேட்டா
28.
(b)
பாம்புசா
29.
(d)
பரிணாம உறவுமுறை
30.
31.

32.
1. கரப்பான் பூச்சியின் முதன்மை கழிவு நீக்க உறுப்பாக மால்பீஜியன் நுண்குழல்கள் செயலாற்றுகின்றன.
2. நைட்ரஜன் கழிவு பொருட்களை யூரிக் அமில வடிவத்தில் வெளியேற்றுவதால் இவைகள் யுரிகோடெலிக் (யூரிக் அமில நீக்கிகள்) உயிரிகள்.
3. மால்பீஜியன் நுண்குழல்கள் தவிர கொழுப்பு உறுப்புகள், நெஃப்ரோசைடுகள், கியூட்டிகிள் மற்றும் யுரிகோஸ் சுரப்பிகளும் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன.
4. மால்பீஜியன் நுண்குழல்கள் மெல்லிய நீண்ட நூலிலை போன்ற வடிவத்துடன் மஞ்சள் நிறமாக காணப்படுகின்றன.
5.இக்குழல்கள் உணவுப் பாதையில் நடுக்குடல் மற்றும் பின்கூடல் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளன.
6. இக்குழல்கள் எண்ணிக்கையில் 100-150வரை, 6 முதல் 9 தொகுப்பாக உள்ளது.
7. ஒவ்வொரு நுண்குழல்கள் சுரப்புச் செல்கள் மற்றும் குற்றிழை செல்களை கொண்டவை.
8.இவற்றால் சேகரிக்கப்படும் கழிவுகள் பின்கூடல் வழியாக வெளியேற்றப்படுகின்றன.
9. மால்பீஜியன் நுண்குழல்களில் உள்ள சுரப்பு செல்கள் நீர், உப்பு, CO2 மற்றும் N2 கழிவுகளை ஹீமோலிம்பிலிருந்து பிரித்தெடுத்து நுண்குழலின் உட்பகுதிக்கு அனுப்புகிறது.
10. நுண்குழலின் செல்கள் நீர் மற்றும் கனிம உப்புக்கழிவுகளை மீண்டும் உறிஞ்சுகின்றன.
11. அதே சமயத்தில் நுண்ணிழைகள் சுருங்குவதனால் N2 கழிவுகள் சிறுகுடல் பகுதிக்கு கடத்தப்பட்டு அதிகப்படியான நீர் உறிஞ்சுப்படுகிறது.
12. மீதமுள்ள கழிவுப் பொருட்கள் மலக்குடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ திடத்தன்மை பெற்ற யூரிக் அமிலம், மலக்கழிவுகளோடு சேர்ந்து வெளியேற்றப்படுகிறது.
33.
| வைரஸ்களின் பல்வேறு வகுப்புகள் | |
| வகுப்பு | எடுத்துக்காட்டு |
| வகுப்பு 1 - dsDNA கொண்ட வைரஸ்கள் | அடினோ வைரஸ்கள் |
| வகுப்பு 2 - வெளிப்பாடடையும் ssDNA கொண்ட வைரஸ்கள் | பார்வோ வைரஸ்கள் |
| வகுப்பு 3 - dsRNA கொண்ட வைரஸ்கள் | ரியோ வைரஸ்கள் |
| வகுப்பு 4 - வெளிப்பாடடையும் ssRNA கொண்ட வைரஸ்கள் | டோகோ வைரஸ்கள் |
| வகுப்பு 5 - வெளிப்பாடடையும் ssRNA கொண்ட வைரஸ்கள் | ராப்டோ வைரஸ்கள் |
| வகுப்பு 6 - வெளிப்பாடடையும் ssRNA - RT ; கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில் DNA வுடன் பெருக்கம் அடைபவை. |
ரெட்ரோ வைரஸ்கள் |
| வகுப்பு 7 - dsRNA -RT ; கொண்ட வைரஸ்கள், வாழ்க்கைச் சுழற்சியில் RNA-வுடன் பெருக்கம் அடைபவை |
ஹெபாட்னா வைரஸ்கள் |
34.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை:
(i) பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachysclerids or Stone cells):
இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சியல் கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)
(ii) மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):
இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளி உறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.
(iii) ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):
இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:பைசம் மற்றும் ஹேகியா (Kakea) விதை உறைகள்.
(iv) ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):
எவை கிளைத்த பிரிவுகலைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்.
(v) டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):
இவை மெல்லிய சுவர் கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: நிம்பையா, இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.
35.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை நைட்ரஜன் கழிவுப்பொருள் நிர்ணயிக்கிறது.
இது அமோனியா, யூரியா மற்றும் யூரிக் அமிலம் அடிப்படையில் வேறுபடுகிறது.
யூரியோடெலிக் உயிரிகள் - பாலூட்டிகள், நிலவாழ் இருவாழ்விகள்
யூரிகோடெலிக் உயிரிகள் - ஊர்வன, பறப்பன, நிலவாழ் நத்தைகள்.
36.
வளரியல்பு: பின்னுக் கொடி
வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்து மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது
தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி
இலை: ஒற்றைப்படை ஒருமடிககூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு , இலையடிச் செதிலுடையது .வலைப் பின்னால் இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும் அதைப்புடையன.
மஞ்சுரி ; கக்க மலர்
மலர் : பூவடிச்செதிலுடையது. புககாம்புச் செதிலுடையது . புககாம்புச் செதில்கள் அளவில் பெரியது,மலர்காம்புடையது.இரு பூவிதழடுக்குடையது.முழுமையானது, இருபால்மலர் , ஐந்தங்கமலர். இரு பக்கச்சிருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.
புல்லிவட்டம் ; புல்லிகள் 5,இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைத்துள்ளது .தனிப்புள்ளி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும் .
அல்லிவட்டம்: அல்லிகள் 5,வெண்மை அல்லது நீல நிறத்தாலானது.தனித்தது ,ஒழுங்கற்றவை , வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை இறங்குதழுவு இதழமைவில் உள்ளன
மகர்ந்ததாள் வட்டம் : மகர்ந்ததாள் கள் 10 இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகர்ந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வந்து தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன.மகரந்தப்பை ஈரறையுடையது. தாள்அடி இணைந்தவை.நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.
சூலவட்டம் : ஒற்றச்சூலக இலையானது மேல்மட்டசூலகம், ஒரு சூலக அறை ,சூல்கள் பல விளிம்பு சூள் ஒட்டு முறையில் அமைத்துள்ளன.சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது , சூலக முடி தூவிகளுடையது கனி: இருபுற வெடிகனி
விதை :சிறுநீரக வடிவிலானது.கருவூன் அற்றது
37.
செல் வெளி திரவத்திற்குச் செல்லும் பொட்டாசிய அயனிகளின் வீதத்தை விட ஆக்ஸோபிளாசத்தினுள் செல்லும் சோடியம் அயனிகளின் வீதம் அதிகரிப்பதால், ஆக்ஸோலெம்மாவின் உட்பகுதி நேர்மறை மின்னூட்டத் தன்மையையும் வெளிப்பகுதி எதிர்மறை மின்னூட்டத்தையும் பெறுகின்றன. இவ்வாறு மின்முனைப்பியக்கத் தன்மையில் ஏற்பட்ட மாற்றம் மின் முனைப்பியக்க நீக்கம் எனப்படும்.
38.
| முழு வளர்ச்சி வீதம் | ஒப்பீட்டு வளர்ச்சி வீதம் |
|---|---|
| குறிப்பிட்ட காலத்தில் ஒரு தாவர உறுப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை இது குறிக்கிறது. | குறிப்பட்ட காலத்தில் ஒரு தாவரத்தில் இரு நிலைகளில் உள்ள ஓர் உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை ஓப்பிட்டு அளவிடுதலை இது குறிக்கிறது |
39.
மலரில், அல்லி வட்டத்திற்கும் மகரந்ததாள் வட்டத்திற்கும் இடையே உள்ள இடைக்கணுப் பகுதி நீண்டு காணப்பட்டால் அல்லி ஆணக மலர் எனப்பெயர்.
எ.கா:க்ரூவியா
40.
உயிருள்ள பொருட்களும், உயிரற்ற பொருட்களும் ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைந்து காணப்படுவது நமது உயிர் கோளான புவியைத் தனிச்சிறப்படையச் செய்கிறது.
41.
1. கார்டியாக் பகுதி.
2. ஃபன்டிக் பகுதி.
3. பைலோரிக் பகுதி.
42.
சில பொதுவான பண்புகளைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல குடும்பங்களின் தொகுப்பு வரிசை எனப்படும்.
எ.கா: கார்னிவோரா
43.
1. இராணி தேனீ,
2. ஆண் தேனீக்கள்
3. வேலைக்கார தேனீக்கள்
44.
சிறுநீரக தமனி சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழையாகும்.
எடுத்துச்செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
45.
மின்னழுத்தம் இயல்பான அளவான அளவையும் தாண்டி, அளவிற்குச் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மையுடைகிறது. எனவே, முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை பெறுகிறது.
46.
தொகுதி: அன்னலிடா (வளைதசை அல்லது கண்டங்களையுடைய புழுக்கள்).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards