11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
காலாண்டு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்" என்ற கட்டுரையை அறிமுகப்படுத்திய ஆண்டு
1923
1985
1918
1948
2.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும்,அது _______யே குறிப்பிடுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மொத்த நாட்டு உற்பத்தி
நிகர உள்நாட்டு உற்பத்தி
நிகர நாட்டு உற்பத்தி
3.
______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
உண்மைச் செலவு
பணச் செலவு
பொருளாதாரச் செலவு
மாறாச் செலவு
4.
_________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.
மொத்த பயன்பாடு
இயல்பெண் பயன்பாடு
சராசரி பயன்பாடு
மேற்கூறிய அனைத்தும்
5.
_______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.
இயல்புரை
நெறியுரை
எதிர்மறை
எதுவுமில்லை
6.
இரண்டு வார்த்தை 'ISO' மற்றும் 'quant' எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
இலத்தீன்
பிரான்சு
கிரேக்க
மேற்கூறிய அனைத்தும்
7.
புதிய நுகர்வோரை கவருபவர்______
உற்பத்தியாளர்
உழைப்பாளர்
வெற்றிகரமான தொழில்முனைவோர்
எதுவுமில்லை
8.
நிலையற்ற தன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாட்டின் ஆசிரியர்__________ஆவார்.
F.B.கிளார்க்
A.சும்பீட்டர்
J.B.கிளார்க்
H.நைட்
9.
"வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" என்ற நூலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1930
1936
1920
1980
10.
_________ முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர்.
முற்றுரிமை
இருமுகமுற்றுரிமை
இருமுக சில்லோர்
முற்றுரிமை போட்டி
11.
நிறைகுறைப் போட்டியின் வகைகள் _______
முற்றுரிமை
இருவர் முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை
முற்றுரிமைப் போட்டி
மேற்கூறிய அனைத்தும்
12.
13.
எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்
பரிமாற்ற நோக்கம்
முன்னெச்சரிக்கை நோக்கம்
ஊக நோக்கம்
தனிப்பட்ட நோக்கம்
14.
இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.
சமதர்மச் சிந்தனை
ஒழுக்க நெறி அடிப்படை
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நௌரோஜி
15.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது
GNP
GDP
NNP
தலாவருமானம்
16.
சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி
சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்
சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்
அதிகரிக்கும்
அ மற்றும் இ
17.
கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.
மாறா
மாறும்
இறுதிநிலை
வாய்ப்பு
18.
சமநிலை விலை என்பது அந்த விலையில்
எல்லாம் விற்கப்படுகிறது
வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
மிகைத்தேவை பூஜ்ஜியம்
19.
மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்
ஆடம் ஸ்மித்
இலயனல் ராபின்ஸ்
ஆல்ஃபிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
20.
தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.
375
175
200
50
21.
V.K.R.V.ராவ் அவர்களின் மூன்று முக்கியக் கருத்துக்களை எழுதுக.
22.
பணிகளின் இயல்புகள் யாவை?
23.
சம அளவு உற்பத்தி என்றால் என்ன?
24.
இறுதி நிலை உற்பத்தி திறன் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?
25.
பணக்கூலி மற்றும் உண்மைக் கூலியை வேறுபடுத்துக.
26.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி
27.
இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க
28.
திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை எழுதுக.
29.
சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.
30.
நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.
31.
வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக.
32.
நிறைவுப் போட்டி மற்றும் முற்றுரிமை போட்டியின் ஒற்றுமையை விளக்குக
33.
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
34.
பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?
35.
B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக
36.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
37.
நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.
38.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
39.
கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.
40.
பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.
41.
பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு
1.
(c)
1918
2.
(a)
மொத்த உள்நாட்டு உற்பத்தி
3.
(b)
பணச் செலவு
4.
(b)
இயல்பெண் பயன்பாடு
5.
(b)
நெறியுரை
6.
(c)
கிரேக்க
7.
(c)
வெற்றிகரமான தொழில்முனைவோர்
8.
(d)
H.நைட்
9.
(b)
1936
10.
(b)
இருமுகமுற்றுரிமை
11.
(e)
மேற்கூறிய அனைத்தும்
12.
(a)
13.
(b)
முன்னெச்சரிக்கை நோக்கம்
14.
(b)
ஒழுக்க நெறி அடிப்படை
15.
(b)
GDP
16.
(b)
சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்
17.
(b)
மாறும்
18.
(c)
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
19.
(c)
ஆல்ஃபிரட் மார்ஷல்
20.
(d)
50
21.
1.தேசிய வருமானம்.
2.உணவு,ஊட்டச்சத்து மற்றும் பண்டங்களின் பகிர்வு.
3.வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பகிர்வு.
22.
பணிகளின் இயல்புகள்.
1. புலனாகாப் பொருட்கள்
2. பலதரப்பட்ட பண்டங்கள்
3. பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது
4. அழியக் கூடியவை.
23.
1. ஒன்றுக்கு மேற்பட்ட மாறும் உற்பத்திக் காரணிகளை பல்வேறு இணைப்பில் ஈடுபடுத்தி ஒரு குறிப்பிட்டஅளவு உற்பத்திச் செய்வதை காட்டும் கோடு சம அளவு உற்பத்திக்கோடு எனப்படும்.
2. ஐசோ(ISO),குவான்ட (quant) என்றும் இணைப்புத்தான் சம அளவு உற்பத்திக் கோடு என்று அழைக்கப்படுகிறது.
24.
(i) நடைமுறையில் உற்பத்திக் காரணிகள் ஒருமித்த தன்மை கொண்டதாக இருக்காது.
(ii) காரணிகளை ஒன்றுக்கொன்று பதிலீடு செய்து கொள்ள முடியாது.
(iii) நீண்ட காலத்திற்கு மட்டுமே இவ்விதி பொருந்தும் குறுகிய காலத்திற்கு பொருந்தாது.
25.
| பணக்கூலி | உண்மைக்கூலி | |
| 1 | பணக்கூலி | உண்மைக்கூலி என்பது பணத்தால் பெறக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளைக் குறிக்கும். |
| 2 | பணத்தின் வாங்கும் சக்தியை பொறுத்து அமையும். |
தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் அவர்கள் உண்மைக்கூலியை பொறுத்து அமையும். |
26.
விலையில் ஏற்படும் பிரதிபலிப்பின் காரணமாக தேவை ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை\((EP= \alpha)\)
2.முற்றிலும் நெகிழ்ச்சியுற்ற தேவை \((EP= 0)\)
3. மிகை தேவை நெகிழ்ச்சி \((EP>1)\)
4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத்தேவை நெகிழ்ச்சி \((EP<1)\)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி \((EP=1)\)
27.
1. இயல்புரை அறிவியல், உள்ளதை உள்ளவாறு கூறுகிறது.
2. நிரூபிக்க இயலும்
3. காரண காரியங்களை தொடர்புபடுத்துகிறது.
4. உண்மையின் அடிப்படையில் அமைந்தது
5. வெளிப்படையானது, என்ன என்பதைக் கூறுகிறது.
28.
பொது நிதி:
திருவள்ளுவர் பொதுநிதி பற்றி பொது வருவாய்,பொதுச்செலவு, நிதி நிர்வாகம் ஆகிய தலைப்பில் விரிவாக எழுதியிருக்கிறார்.
1.வருவாய் உருவாக்குதல்.
2.வருவாயை சேகரித்தல்.
3.வருவாய் நிர்வாகம்
4.பொதுச் செலவு பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார்.
29.
சராசரி மாறும் செலவு (AVC) :
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2.மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC\over Q}}\)
TVC =மொத்த மாறும் செலவு
AVC =சராசரி மாறும் செலவு
Q =உற்பத்தி அளவு
அட்டவணை:
| Q | TVC | \(AVC={TVC\over Q}\) |
| 0 | 0 | 0/0=0 |
| 1 | 200 | 200/1=200 |
| 2 | 300 | 300/2=150 |
| 3 | 400 | 400/3=133 |
| 4 | 600 | 600/4=150 |
| 5 | 900 | 900/5=180 |

1.AVC ஆரம்பத்தில் குறைந்து,பின் உற்பத்தி அதிகரிக்கும் போது AVC அதிகரிக்கிறது.
2.விளைவு விதி செயல்பாட்டின் காரணமாக AVC குறைந்து பின்பு அதிகரிக்கிறது. ஆகையால் AVC 'U' வடிவத்தில் உள்ளது.
30.
நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாடு:
(i) அமெரிக்க பொருளியல் வல்லுநர் A.பிராங்க் H.ஹைட் (Frank H.Night) நிலையின்மைக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) இவரின் கூற்றுப்படி, நிச்சயமற்ற தன்மையைத் தாங்குவதற்கான வெகுமதியே இலாபம் ஆகும்.
(iii) காப்பீடு இடர்பாடு மற்றும் காப்பீடற்ற இடர்பாடு என இடர்பாடுகளை இரு வகைப்படுத்துகிறார்.
காப்பீடு இடர்பாடு:
(i) சில இடர்பாடுகள் அளவிடக்கூடியவை.
(ii) (எ.கா) தீ விபத்து மற்றும் கொள்ளை.
(iii) இதற்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கிவிடும்.
(ii)காப்பீடற்ற இடர்பாடு:
(i) சில இடர்பாடுகள் அளவிட முடியாதவை.
(ii) நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அனுமானிக்க முடியாது.
(iii) (எ.கா) நிறுவனங்களுக்கிடையே போட்டி, சந்தை நிலை, தொழில் நுட்பமாற்றம் போன்றவை.
(iv) இதற்கு காப்பீடு நிறுவனம் இழப்பை ஏற்காது.
31.
(i) ஒரு அங்காடி அமைப்பில் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்க ஒருவரே இருப்பதால் அது வாங்குவோர் முற்றுரிமை எனப்படும்.
(ii) சில பண்டங்களுக்கு ஒருவரே வாடிக்கையாளராக இருப்பதால் அந்த அங்காடியில் வாங்குபவர் மிகுந்த சக்தியுடன் காணப்படுவார்.
(iii) முற்றுரிமையும், வாங்குபவர் முற்றிமையும் ஒரே மாதிரி இருந்தாலும், வாங்கும் முற்றுரிமையாளர் அங்காடியின் தேவை பக்கத்திலும், முற்றுரிமையாளர் அங்காடியில் அளிப்புப் பக்கத்திலும் ஆதிக்கத்துடன் இருப்பர்.
32.
(i) முற்றுரிமை போட்டி மற்றும் நிறைவுப் போட்டி அங்காடிகள் இரண்டும் உச்ச நிலை அங்காடி கட்டமைப்பை கொண்டதாகும்.
(ii) இவ்விரண்டிற்கும் இடையே சில அங்காடி ஒற்றுமைகள் உள்ளன.
(iii) இவ்விரண்டும் உற்பத்தி பணிகளில் செலவைக் குறைத்து இலாபத்தை உச்சமாக்க முயலும்.
(iv) நிறைவுப் போட்டியில் விலை, இறுதிநிலைச் செலவிற்கு சமமாக இருக்கும்போது நிறுவனத்தின் பொருளாதார இலாபம் பூஜ்ஜியமாக இருக்கும்.
(v) முற்றுரிமை போட்டி அங்காடியில் விலை, இறுதிநிலைச் செலவை விட அதிகம் நிர்ணயிக்கப்படுவதால் நிறுவனத்தின் பொருளாதார இலாபம் அதிகமாக இருக்கும்.
(vi) நிறைவுப் போட்டியில் விலை மற்றும் உற்பத்தி அளவு சமநிலையில் இருக்கும்போது பொருளாதாரம் திறம்பட செயல்படும்.
முற்றுரிமை போட்டி மற்றும் நிறைவுப் போட்டியின் ஒற்றுமை விளக்கப்படம்
QM = முற்றுரிமை போட்டி அங்காடியின் அளவு
QPC = நிறைவுப் போட்டி அங்காடியின் அளவு
PPC = நிறையப் போட்டியின் விலை
PM = முற்றுரிமை போட்டி அங்காடியின் விலை
33.
| வ.எண் | வெளியுறு செலவு | உள்ளுறு செலவு |
| 1. | உற்பத்திக் காரணிகளை வாங்கு மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும். | நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும். |
| 2. | ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்கு தேவையான காரணிகளை விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு அமர்த்தியோ உற்பத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒட்டு மொத்த செலவு வெளிப்படையான செலவு. | நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் மற்றும் சுய உழைப்பிற்கான செலவுகள் உள்ளார்ந்த செலவுகள். |
| 3. | வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு அல்லது பணச் செலவு என்று அழைக்கப்படும். | உள்ளார்ந்த செலவு என்பது மறைந்திருக்கும் செலவு அல்லது எட்டுச் செலவு என்றழைக்கப்படும். |
34.
1. பயன்பாடு உளவியல் சார்ந்தது.
2. பயன்பாடும், உபயோகமும் ஒன்றானவை அல்ல.
3. பயன்பாடு தனித்தும், சார்ந்தும் இருக்கும்.
4. பயன்பாடு மனித விருப்பத்தின் தீவிரத்தைச் சார்ந்தது.
5. பயன்பாடு ஒரு உளவியல் கருத்தாகும்
6. பயன்பாடு நீதிநெறி, ஒழுக்க நெறியில் முக்கியத்துவம் கொண்டதல்ல.
7. பயன்பாடும் மகிழ்ச்சியும் ஒன்றானவை அல்ல.
35.
B.R.அம்பேத்கர் அவருடைய பொருளாதார கருத்துக்கள் நான்கு தலைப்புகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.நிதிப் பொருளாதாரம்.
2.வேளாண்மை பொருளாதாரம்.
3.மதப் பொருளாதாரம்.
4.சமதர்ம பொருளாதாரம்.
1.நிதிப் பொருளாதாரம்:
1.அம்பேத்கருடைய பெரும்பாலான நூல்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த 1913-1923 வரையிலான காலத்தில் எழுதப்பட்டவை.
2.நிதிப் பொருளாதாரம் குறித்து நிறைய எழுதி இருக்கிறார் மாகாண நிதி பெருக்கத்தை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்.
1.ஒப்படைப்பு வரவு செலவுத் திட்டம் (1871-72முதல் 1876-77)முடிய.
2.ஒதுக்கீடு வரவு செலவு திட்டம் (1877-78முதல் 1881-82முடிய )
3.வருவாய் பங்கீடு வரவு செலவுத் திட்டம் (1882-83 முதல் 1920-21முடிய)
2.வேளாண்மை பொருளாதாரம்:
1. 1918ல் அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள் என்ற கட்டுரையை எழுதினார்."
2.ஆடம்ஸ்மித்தின் நாடுகளில் செல்பத்தை போல் நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை கூறுகிறார்.
3.மதப் பொருளாதாரம்:
1.சமூக முன்னேற்றத்திற்கு சாதி மிகப் பெரிய தடையாக இருப்பதாக அம்பேத்கர் நம்பினார்.
2.சாதி முறை அரசியல் ஜனநாயகத்தை விடவும் சமூக ஜனநாயகத்தை அமைப்பதில் தோல்வியடைந்திருக்கிறது என்று அவர் கூறகிறார்.
4. சமதர்ம பொருளாதாரம்:
1.அம்பேத்கர் ஒரு சமதர்மவாதி சமூக நீதியின் பாதுகாவலர் அவர் அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்றும் நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2.அம்பேத்கர் மிகச் சிறந்த பொருளியல் அறிஞர் என்பதில் ஐயமில்லை.இருப்பினும் சட்டம் மற்றும் அரசியல் அவருடைய அளப்பரிய பங்களிப்பு அவருடைய பொருளாதார பங்களிப்பை குறைத்து காட்டிவிட்டன.
3.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி.
36.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
37.
நிலையான சமநிலை:
1. சமநிலை என்பது மாற்றமில்லா நிலையை அடைவது என்று ஸ்டிக்லர் குறிப்பிடுகிறார்.
2. நுகர்வோர் உச்ச மனநிலைவை பெருகின்றபோது சமநிலையடைகிறார்.
3.உற்பத்தியாளர் உச்ச இலாபம் பெறுகின்ற போது சமநிலையடைகிறார்.
4.உற்பத்தி காரணிகள் முழு வேலை வாய்ப்பையும்,உச்ச வெகுமதியையும் பெறும் போது சமநிலை அடைகின்றன.
5.எனவே, நிலையான சமநிலை என்பது நிலையான வேலை, அளவு,வருமானம்,தொழில்நுட்பம்,மக்கள் தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

வரைபட விளக்கம்:
1. X- அச்சு தேவை மற்றும் அளிப்பின் அளவையும்,
Y- அச்சு விலையையும் குறிக்கிறது.
2. DD-என்பது கீழ்நோக்கி சரியும் தேவைக்கோடு மற்றும்
SS-என்பது மேல்நோக்கி செல்லும் அளிப்பு கோடு ஆகும்.
3.OP-என்பது சமநிலை விலை.
4.OM-என்பது சமநிலை அளவு ஆகும்.
5.புள்ளி-E-ல் தேவை கோடும்,அளிப்புக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கிறது.
6.புள்ளி-E-ல் தேவையும், அளிப்பும் சமமாகி சமநிலை அடைகிறது.
38.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
39.
(i) கடன் நிதிக்கோட்பாடு, புதிய தொன்மைக்கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது
(ii) பொருளியல் வல்லுநர்கள் விக்செல் பெர்டில் ஓலின் வைனர் மற்றும் குன்னர் மிர்தால் ஆகியோர் மேம்படுத்தினார்.
(iii) கடன் அங்காடியில் கடன் நிதியின் தேவை மற்றும் அளிப்பின் சமநிலைப்புள்ளியில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் தேவை:
(i) முதலீட்டுத் தேவை
(ii) நுகர்வுத் தேவை
(iii) பதுக்குவதற்கான தேவை
கடன் நிதியின் அளிப்பு
(i) சேமிப்பு
(ii) வங்கிக்கடன்
(iii) பதுக்கியதை மீட்டல்
(iv) முதலீடு செய்யாதிருத்தல்
சமநிலை:
தேவை மற்றும் அளிப்பின் சமநிலையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் அளிப்பு =சேமிப்பு +வங்கிக்கடன்(BC)+பதுக்கியது மீட்டல் (DH)+முதலீடு செய்யாதிருத்தல்
=S+BC+DH+DI
கடன் நிதிகளின் தேவை =முதலீடு (I) +நுகர்வு (C) +பதுக்குதல்(H )
=I+C+H
வரைபட விளக்கம்:
(i) x அச்சில் கடன்நிதிகளின் தேவை மற்றும் அளிப்பு குறிக்கப்படுகின்றன. y அச்சில் வட்டி விகிதம் குறிக்கப்படுகிறது. IS கொடு மொத்த கடன் நிதிகளின் அளிப்பு கோடாகும். இது சேமிப்புக்கொடு (S) வங்கி கடன்கோடு(BC) பாதுக்காதிருத்தல் கோடு (DH) மற்றும் முதலீடு செய்யாதிருத்தல் கோடு(DI) ஆகியவற்றின் ஒட்டு மொத்தமே ஆகும்.
(ii) இந்த LD கோடு LS கோடும் E என்ற புள்ளியில் வெட்டி கொள்கின்றன.
(iii) இது சமநிலைப்புள்ளி ஆகும்.
(iv) இந்த புள்ளியில் வட்டி விகிதம் OR கடன் நிதிகளின் அளவு OM.
குறைபாடு:
(i) வட்டி வீதத்தினை நிர்ணயிக்கும் பல காரணிகள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனாலும் சரியான செய்திப் பரவலின்மை, ஒழுக்கக் கோடுகள் போன்ற காரணிகள் இன்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) வருமான அளவை முன்கூட்டியே தெரியாமல் கடன்நிதிக்கோட்பாட்டை தீர்மானிக்க இயலாது.
(iii) உண்மை காரணிகளை சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை பணம் சார்ந்த காரணியான வங்கிக்கடன் நீர்மை விருப்பம் ஆகியவற்றின் தொடர்புபடுத்துவது கடினம் .
40.
1. ஒரு நிறுவனம் கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை எனில், அந்நிறுவனத்தின் AR மற்றும் MR மாறாமல் அதாவது AR=MR ஆக இருக்கும்.
2. ஒரு நிறுவனம், கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இருக்கும் எனில் AR மற்றும் MR வெவ்வேறு அளவுகளாக இருக்கும்.
மாறாத விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. விலையில் மாற்றம் இல்லையினில், மற்றும் வளைகோடுகள் ஒன்றிணைந்து ஒரே கோடாக இருக்கும்.
2. நிறைவுப் போட்டியில் விலையில் மாற்றம் இருக்காது. எனவே AR மற்றும் MR வளைகோடுகள் X-அச்சுக்கு இணையாக ஒரு படுக்கைக் கோடாக இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகு | விலை P | மொத்த வருவாய்(TR) | சராசரி வருவாய்(AR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 5 | 5 | 5 | 5 |
| 2 | 5 | 10 | 5 | 5 |
| 3 | 5 | 15 | 5 | 5 |
| 4 | 5 | 20 | 5 | 5 |
| 5 | 5 | 25 | 5 | 5 |
| 6 | 5 | 30 | 5 | 5 |

மாறும் விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. ஒரு நிறுவனம் அதிக பண்டங்களை விற்க வேண்டுமெனில், விலை குறைவாக இருக்க வேண்டும்.
2.விலை குறையும் போது AR மற்றும் MRம் குறைந்து கொண்டே செல்லும்.
3. MR ஆனது ARஐ விட அதிகமாக குறைந்து கொண்டே செல்லும்.
4. MR வளைகோடானது AR வளைகோட்டிற்கு கீழே உள்ளது.
5. கீழ் நோக்கி சரிந்து செல்லும் வருவாய் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
6.சில சமயங்களில் வருவாய் கோடுகள் மையத்தை நோக்கி குவிவு வளைவாகவோ (அ) குழியான வளைவாகவோ இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகுகள் (Q) | விலை (P) | மொத்த வருவாய்(TR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 10 | 10 | 10 |
| 2 | 9 | 18 | 8 |
| 3 | 8 | 24 | 6 |
| 4 | 7 | 28 | 4 |
| 5 | 6 | 30 | 2 |
| 6 | 5 | 30 | 0 |
| 7 | 4 | 28 | -2 |
| 8 | 3 | 24 | -4 |
| 9 | 2 | 18 | -6 |
| 10 | 1 | 10 | -8 |

41.
பொருளியில், நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1. நுகர்வு:
1. மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
2. மனித விருப்பங்களின் இயல்புகளின் அடிப்படையில், நுகர்வோரின் நடத்தை குறைந்துசெல் பயன்பாடு, நுகர்வோரின் உபரி போன்ற பல விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
2.உற்பத்தி:
1. உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
2. நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு மேலும் உள்ளீடு, வெளியீடுகளுக்கிடையேயான உறவு ஆகியவையாகும்.
3. பரிமாற்றம்:
1. பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
2. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்றபோதுதான் பரிமாற்றம் சாத்தியமாகிறது.
4.பகிர்வு:
1. பகிர்வு என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
2. பகிர்வு என்னும் பகுதி உற்பத்தி காரணிகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை விளக்குகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards