9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் யாவை?
2.
சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் யாவை?
3.
திசைகள்-தகுந்த படம் வரைந்து விளக்குக.
4.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
5.
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
6.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.
7.
இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக;
8.
தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.
9.
வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.
10.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.
11.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
12.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
13.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
14.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
15.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
16.
அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் உள்ள வேறுபாட்டினை எழுதுக.
17.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
18.
1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.
19.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
20.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
21.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?
22.
நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.
23.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
24.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?
25.
புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
26.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
27.
கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?
28.
கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
29.
புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.
30.
மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின - விவாதி.
31.
" தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்" விளக்கவும்.
32.
இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சியினை விளக்குக.
33.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
34.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
35.
மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
36.
சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
37.
பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக
38.
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலைவாய்ப்பை ஒப்பிடுக
39.
புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள் - வேறுபடுத்துக
40.
இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்
41.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?
42.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி
43.
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக
44.
இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?
45.
இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக
46.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
47.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு
48.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக
49.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு
50.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
51.
நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி
52.
வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக
53.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
54.
எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி
55.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
56.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
57.
நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?
58.
நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றோரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது என்ன?
59.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?
1.
1. வளர்ந்து குழந்தைகள் கற்க குறுக்கெழுத்து ஒரு சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு கல்வி குறுக்கெழுத்துப் போட்டியை இணையத்தில் காணலாம்.
2. யூகிக்கும் விளையாட்டை விளையாடு - சாலையில் கேட்கும் சத்தம் எது தொடர்பானது எனக் கேட்டு விளையாடுவது.
3. சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு குழந்தைகளை ஓடவிட்டு யாரவது சிவப்பு விளக்கு எனச் சொல்ல குழந்தைகள் ஓடுவதை நிறுத்த வேண்டும். பச்சை விளக்கு எனச் சொல்லும் வரை அவர்கள் ஓடிக் கூடாது.
2.
ஓட்டுனர்:
அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குதல். சாலை விதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.
பாதசாரிகள்:
கவனக் குறைவு. கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது.
பயணிகள்:
கரம், சிரம், புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது, இறங்குவது. படியில் பயணம் செய்வது. ஓடுகிற வண்டியில் ஏறுவது.
வாகனங்கள்:
வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்பது, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.
சாலையின் நிலை:
குழிகள். சேதமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத் தடைகள்.
வானிலை:
மூடுபனி,பனி,கனமழை, புயல், ஆலங்கட்டி மழை போன்றவை சாலை விபத்துக்கான முக்கியமான காரணிகள் ஆகும்.
3.
திசைகள் :
1. பொதுவாக வரைபடங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
2. ஒரு நிலவரைபடத்தில் வடக்குத்திசை எப்போதும் புவியின் வடதுருவத்தை நோக்கியே உள்ளது.
3. நீ வடதுருவத்தைப் பார்த்து நின்றால் உனது வலக்கை கிழக்குத் திசையையும், இடக்கை மேற்கு திசையையும் உன் பின்புறம் தெற்குத் திசையையும் காட்டும்.
4. இவை அடிப்படைத் திசைகளாகும்.
5. பொதுவாக நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
6. அடிப்படைத் திசைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் வாக்கியம்.
4.
கிராமக் குடியிருப்புகள்:
முதன்மைத் தொழில்களான வேளாண்மை, வனத்தொழில், கனிமத் தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகிறது.
இவை நிலைத்த நிரந்தரக் குடியிருப்புகளாகும்.
இவைகளின் தனித்தன்மை அதைச் சுற்றியிருக்கும் பரந்த பசுமையும் மாசற்ற சுற்றுச் சூழலும் ஆகும்.
கிராமக் குடியிருப்பு வகைகள்:
1. செவ்வகவடிவக் குடியிருப்புகள்
2. நேர்கோட்டுக் குடியிருப்புகள்
3. வட்டவடிவ அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள்
4. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள்
6. T வடிவ. Y வடிவ, சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவ குடியிருப்புகள்
7. மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
சம வெளிப் பகுதிகளிலும் , பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும்.
இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் வெல்லும்.
2. நேர்க்கோட்டு குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப்பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.
3. வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள் குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன .
4. நட்சத்திர வகை குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது கப்பியிடப்படாத சாலை அமைப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன,
இவை நட்சத்திர வடிவத்தில் எல்லா திசைகளிலும் பரவிக் காணப்படும்.
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.
6. T வடிவ Y வடிவ சிலுவை வடிவ குறுக்கு வடிவக் குடியிருப்புகள் :
T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும்.
Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் காணப்படுகிறது.
குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.
7. முலக்கரு வடிவக் குடியிருப்புகள் :
இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிய கூடியதாகவும் இருக்கும்.
கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ ஆழ்ந்து மசூதி , கோவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள அமைந்திருக்கும்.
5.
மக்கள் தொகைப் பரவல்:
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகைப் பரவலாகும்.
உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.
காரணிகள்:
1. இயற்கை காரணிகள்
2. வரலாற்றுக் காரணிகள்'
3. பொருளாதாரக் காரணிகள்
இயற்கைக் காரணிகள்:
மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள். கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான இயற்கைக் காரணிகளாகும்.
வரலாற்றுக் காரணிகள்:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள். போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.
பொருளாதாரக் காரணிகள்:
கல்விக் கூடங்கள். வேலை வாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள். வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவலுக்கான பொருளாதாரக் காரணிகளாகும்.
6.
1. பிறப்பு இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
2. பெரும்பாலும் அனைவரும் அதிகமான நேரங்களில் ஓர் இடம் விட்டு இன்னொரு இடம் நகர்ந்து கொண்டே இருப்பதால் இடம் பெயர்தலைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
3. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடியாகும்.
4. அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
5. பொதுவாக இடப்பெயர்வு நகரப் பகுதிகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஆனால் தமிழ்நாட்டில் மக்களின் நகர்வு நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
7. மேலும் தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்களில் மட்டுமே இடப்பெயர்வு மிக அதிக அளவு காணப்படுகிறது.
8. திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வுகளுமே பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
9. வியாபாரம், வணிகம், வேலை. கல்வி போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
10. ஏழைகள் வாழ்வாதாரத்திற்காகவும். வசதி வாய்ப்பு உடைய மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இடம் பெயர்கின்றனர்.
11. அண்மைக் காலங்களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.
12. தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கும் 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம் பெயர்ந்துள்ளனர்.
13. அதிக அளவிலான இடம்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினை பிரதிபலிக்கிறது.
14. எனவே ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
7.
மணி : மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
ரவி : பிறப்பு, இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
மணி : இடப்பெயர்வு என்றால் என்ன?
ரவி : ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மனிதர்கள். விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெயரும் நிகழ்வு இடப்பெயர்வு ஆகும்.
மணி : மனிதர்கள் ஏன் இடம் பெயர்கின்றனர்?
ரவி : மனிதர்கள் வேலை. கல்வி, திருமண வாழ்வு மற்றும் பல காரணங்களுக்காக பெயர்கின்றனர்.
மணி : இடப்பெயர்வு எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
ரவி : பிறப்பிடம் அடிப்படையிலும் வாழிடம் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.
மணி : தமிழ்நாட்டின் இடப்பெயர்வு பற்றி சற்று விளக்கமாக கூறுங்களேன்?
ரவி : 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடியாகும்
அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்களாவர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களைவிட மக்களின் நகர்வு கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
பெண்களில் 53% என்றும் ஆண்களில் 23% என்றும் கணக்கிடப்பட்டுள்ளன.
மணி : பெண்களின் இடப்பெயர்வு அதிகமாக இருக்கக் காரணம் என்ன?
ரவி : திருமணமும் திருமணம் சார்ந்ததும் பெண்களின் இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
மணி : தமிழ்நாட்டில் எங்கு அதிக இடப்பெயர்வு நிகழ்கின்றது?
ரவி : சென்னை மாவட்டம்.
மணி : வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றி கூறுங்களேன்?
ரவி : தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
அவர்களில் 20% சிங்கப்பூரிலும் 18% ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% சவுதி அரேபியா மற்றும் 13% பேர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.
மேலும் மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா. குவைத், கத்தார். ஓமன் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
மணி : உலகில் எந்த இரு நாடுகளுக்கிடையே இடப்பெயர்வு அதிகம் நிகழ்கிறது?
ரவி : மெக்ஸிகோ அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
மணி : தமிழ்நாட்டின் இடப்பெயர்தல் அளவை எவ்வாறு குறைக்கலாம்?
ரவி : ஏழ்மையை அகற்றுதல்.
வளர்ச்சித் திட்டங்கள்.
மற்றும் பாதுகாப்பு அளித்தல் மூலம் இடம் பெயர்தலைக் குறைக்கலாம்.
8.
1. நெல்
2. மக்காச் சோளம்
3. சோளம்
4. கம்பு
5. கேழ்வரகு
6. வரகு
7. தென்னை
8. சாமை
9. கரும்பு
10. வாழை
11. பருத்தி
12. வேர்க்கடலை
13. உளுந்து
14. துவரை
15. பாசிப்பயிறு
16. காப்பி
17. தேயிலை
9.
1. தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை.
2. தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தேன்மேற்குப் பருவ மழைகளிலிருந்து பெறுகிறது.
3. தென்மேற்கு பருவமழைப் பொழிவு அபரிமிதமாக இருந்தால் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள கர்நாடக அணைகள் நிரம்பி விட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பெருகும்.
4. தமிழகத்திற்கு பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்கு பருவ மழையாகும்.
5. வடகிழக்குப் பருவமழை நீரை நீர்த்தேக்கங்களிலும், கண்மாய்கள் மற்றும் ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
6. தமிழக வேளாண்மைக்கான நீரை கால்வாய்கள், ஏரிகள், குளங்கள். கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
7. தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
8. இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
10.
ஆப்பிரிக்கா காலனியாதல் :
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன.
(ii) ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.
(iii) 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது.
(iv) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
(v) இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
(vi) 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
(vii) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது.
(viii) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடாபுடைய பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
கனத்து
(ix) காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
(x) பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.
11.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
12.
1. நமது மக்களாட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படையாகும்.
2. உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு நிலை, அவற்றின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத் தத்தினை அளிக்கிறது.
3. இருப்பினும் அவற்றின் செயல்பாடுகளில் ஒரு சில நெருக்கடிகள் உள்ளன.
சிக்கல்களும் சவால்களும்:
1. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
2. நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
3. உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.
4. மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.
13.
1. ஊராட்சி மற்றும் நகராட்சிகள் 'உள்ளாட்சி அமைப்பு' நிறுவனங்களாகச் செயல்படும்.
2. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் மற்றும் பகுதிக் குழுக்கள் இயங்குகின்றன.
3. வட்டாரம். மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
4. சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
5. நேரடித் தேர்தவின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுதல்.
6. பட்டியல் இனத்தவர் மற்றும் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தல்,
7. பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள் தொகை விகிதாச்சார
8. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
9. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம்.
10. ஆட்சி கலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.
14.
இங்கிலாந்து தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் :
(i)18ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
(ii) நூற்பு நெசவுத் தொழில் ஆகியன இங்கிலாந்தில் பெரும் வளர்ச்சியடைந்தன.
(iii) வங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டு கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.
(iv) உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து தீர்வை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
(v) இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர். மேலும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை இந்தியச் சந்தைகளில் குவித்தனர்.
(vi) கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்துவிட்டது.
(vii) இந்திய நாடு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது.
(viii) 19ம் நூற்றாண்டில் முதல் கால் பகுதியில் டாக்கா மஸ்லின் துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது.
(ix) பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டது.
(x) எனவே இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்கள் ஆயினர்.
15.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கான காரணங்கள் :
i) இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் 10வயதில் இருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார்.
(ii) அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றவுடன் இவர் 1789-ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாக குடியேறினார்.
(iii) ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மோசஸ் பிரௌனிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டதும் அவரது ஆலை 1793இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(iv) இது அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை ஆகும்.
(v) 1800 வாக்கில், சிலேட்டரின் துணி ஆலையினைக் கண்டு மேலும் பலர் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர்.
(vi) அமெரிக்க அதிபர் ஆண்ட்ரு ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை’ என்று புகழ்ந்தார்.
(vii) ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகு போக்குவரத்தை தொடங்கினார்.
(viii) சாமுவேல் மோர்ஸ் தந்தியைக் கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ix) 1869-ல் கண்டங்களை இணைக்கும் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
(x) இரயில் போக்குவரத்து மக்கள், சரக்கு மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்வதற்கு பயன்பட்டது.
(xi) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்கு (1879) அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தார் (1888). இப்புதிய கண்டுபிடிப்புகள், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவை அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிகோலியது.
16.
1. அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிவாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்.
2. அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
3. இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா இலங்கை போன்ற நாடுகளில் உள்ளது.
| அதிபர் மக்களாட்சி முறை | நாடாளுமன்ற ஆட்சி முறை |
| 1. குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். | பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார். |
| 2. அதிபரே அதிகாரம் படைத்தவர் | மத்திய சட்டமன்ற அதிகாரம் படைத்தது |
| 3. அதிகாரப் பிரிவினை | அதிகாரப் பிரிவினை மைய்யப்படுத்தாமல் இருப்பது |
| 4. சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள் | தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் |
| 5. மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார் | அரசின் தலைவர் - குடியரசுத் தலைவர் |
| 6. தனி நபர் தலைமை | கூட்டுத் தலைமை |
| 7. மாகாசபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்கமாட்டார் | கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் |
| 8. பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் | ஐந்து ஆண்டுகள் |
17.
ஒற்றையாட்சி முறை :
ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
ஒற்றை ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன.
1. சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
3. ஒற்றை ஆட்சிமுறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
4. ஒற்றை ஆட்சிமுறை குறைந்த செலவுடையது
5. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்
6. ஒற்றுமை சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
18.
பிரெஞ்சு தத்துவஞானிகளின் பங்களிப்பு :
(i) பிரெஞ்சு தத்துவஞானிகளான வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் பிரான்ஸின் நிலைமைகளை விமர்சித்தனர்.
(ii) வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்.
(iii) கான்டீட் (Candide) வால்டேரின் புகழ்பெற்ற நூலாகும்.
(iv) அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் "முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்க முடியும்
(v) வால்டேரின் சமகாலத்தவரும் மகத்தான எழுத்தாளருமான ஜூன் ஜேக்ஸ் ரூசோ ஆவார்.
(vi) அவருடைய அரசியல் கருத்துக்கள் மக்கள் புதிய முடிவுகள் எடுப்பதில் பெரும்பங்கு வகித்தது.
(vii) பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்ததில் இவரின் முக்கிய பங்கு வகித்தது.
(viii) இவர் எழுதிய நூல் "சமூக ஒப்பந்தம்” (Social Contract) அதில் அவரின் புகழ்பெற்ற கூற்று "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்' என்பதாகும்.
(ix) மாண்டெஸ்கியூவில் 'பாரசீக மடல்கள்', 'சட்டத்தின் சாரம்' என்னும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
(x) இவர் 'அதிகாரப் பிரிவினை' எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
(xi) எந்த ஒரு அரசின் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகக் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசில் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
19.
(i) 1774இல் குடியேற்ற நாடுகளின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
(ii) குடியேற்றவாதிகள் விடுதலைப் பெறுவதற்காகப் போரை தொடங்கவில்லை. வரிவிதிப்பும், வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயரின் உரிமைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
(iii) "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
(iv) பாஸ்டைன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு 'சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது.
(v) அதில் இச்சட்டத்தை மீறும் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் என கூறப்பட்டிருந்தது.
(vi) 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில் தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.
(vii) இதற்கு எதிர்வினையாக ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்தார்.
(viii) அதன் பின்பு உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டது. - மற்ற குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர்.
(ix) 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் முதல் கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது.
(x) குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன் சகிக்க முடியாத சட்டம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(xi) கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமை பிரகடனத்தை ஏற்றது.
20.
மக்களாட்சியின் நிறைகள்:
1. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் மக்களுக்கான ஆட்சியாகும்.
2. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.
3. அனைத்து குடிமகன்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
4. அனைத்து மக்களுக்கான சம உரிமை வழங்கப்படுகிறது.
5. நாட்டின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களுக்கும் பலன் கிடைக்கிறது.
மக்களாட்சியின் குறைகள்:
1. தகுதியில்லாத தலைவர்கள் தமக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது.
2. திறமையில்லாத நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சியும் குறையுள்ளதாக இருக்கும்.
3. லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.
4. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் கூட்டாட்சியோ, குறை ஆயுள் ஆட்சியோ அமைய வாய்ப்புள்ளது.
5. எண்ணற்ற படித்தவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை.
21.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலை
கைவினைக் கலைகள்:
(i) கைவினைத் தயாரிப்புகளும், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்களும் நகர வாழ்வின் முக்கியமான அடையாளங்களாகும்.
(ii) சங்க காலத்தில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர்.
(iii) பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள் தொழிற் கூடங்கள் ஆகும்.
மட்கலங்கள் செய்தல்:
(i) மட்கலங்கள் செய்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பலவிதமான மட்கலங்கள் தேவையாக இருந்தன.
(ii) கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன.
இரும்பு உருக்குத் தொழில்:
(i) இரும்பைக் கொண்டு கருவிகள் செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்திருக்கிறது.
(ii) இரும்பை உருக்கும் உலைகளும் இருந்தன. அகழாய்வு மேற்கொண்ட பல இடங்களில் கொல்லுலைகள், உருக்கு உலைகள் ஆகியன இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) இரும்பில் கருவிகள் செய்தோர் குறித்து சங்க இலக்கியத்திற்கும் குறிப்புகள் உள்ளன.
iv) உழுகருவிகளும், வாள், ஈட்டி கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.
கல்லில் செய்த அணிகலன்கள்:
(i) சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டனர்.
(ii) எளிய மக்கள் பூக்களையும் இலை தழைகளையும் சூடிக் கொண்டதுடன், சுட்ட களிமண், உலோகம் ஆகியவற்றிலும் அணிகலன்கள் செய்து அணிந்தனர்.
(iii) செல்வர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அழகுபடுத்தி அணிந்தனர்.
தங்க ஆபரணங்கள்:
(i) ரோமானியர்களின் நாணயங்களைக் கொண்டும் நகைகள் செய்யப்பட்டன.
(ii) கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
கண்ணாடி மணிகள்:
(i) கண்ணாடி மணிகள் செய்யும் முறையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர்.
(ii) சிலிக்கா மற்றும் பிற பொருள்களை உலையிலிட்டு உருக்கி நீண்ட சிறிய குழல்களாக்கிப் பின்னர் அவற்றைச் சிறுசிறு மணிகளாக நறுக்கினர்.
(iii) கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன.
முத்துக்குளித்தலும் சங்க வளையல்களும்:
(i) கீழடி அகழாய்வின் போது ஒரு முத்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ii) சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்தது.
(iii) பாம்பன் கடல் பகுதிகளில் சங்குகளைச் சேகரித்தனர். கைவினைக் கலைஞர்கள் அவற்றை அழகுற அறுத்து எழிலான வளையல்களைச் செய்தனர்.
(iv) பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்திருந்தது குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.
துணி நெசவு:
(i) துணி நெசவு இன்னொரு முக்கியத் தொழிலாகும். நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன.
(ii) கலிங்கம் மற்றும் பிற வகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
(iii) பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.
22.
1. வங்கிச் சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் சென்று படிவம் நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப் பதிலாக, பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) மூலமாக
2. தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை (ATM card) பயன்படுகிறது.
3. இதன்மூலம் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் எந்த நேரமும் நமக்குத் தேவையான பணத்தை நமது கணக்கிலிருந்து நாம் எடுத்துக் கொள்ளலாம்.
4. இதே போன்று வங்கிக்குச் செல்லாமலே நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதி சில வங்கிகளில் உள்ளது.
5. இதே போன்று முன்னதாகப் பணம் பெற்று, பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை (Credit Card) பயன்படுத்தப்படுகிறது.
6. பணப் பரிமாற்றம் செய்வதற்குக் காசோலை (Cheque) அல்லது கேட்பு வரைவோலை (Demand Draft) போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இணைய வழி பரிமாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.
7. இதன்மூலம் நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
8. இதேபோல் அலைபேசி மூலம் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
23.
| S.No | அடிப்படை உரிமைகள் | வாழ்க்கை அனுபவம் (சொந்த அனுபவத்தை எழுதவும்) |
| 1. | சமத்துவ உரிமை | நான் வாழும் இடத்தில் முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன். |
| 2. | சுதந்திர உரிமை | நான் மதுரையில் பிறந்தேன். இப்பொழுது சேலத்தில் வசிக்கிறேன். |
| 3. | சுரண்டனுக்கு எதிரான உரிமை | சிற்றுண்டி சாலை நடத்தும் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 14 வயது உடைய பையனுக்கோ பெண்ணுக்கோ வேலை கொடுத்தால் நான் சண்டையிடுவேன். |
| 4. | சமயம் மற்றும் மதத்ச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை |
நாங்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். ஆனாலும் நாங்கள் புனித ஆலயம், குருத்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்கிறோம். |
| 5. | சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை | நான் இப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவோடும் இலட்சியத்தோடும் உள்ளேன். |
| 6. | அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை | எதிர்காலத்தில் நான் எனது தங்கை யாழினிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். |
24.
அடிப்படைக் கடமைகள்:
1. அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.
2. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
3. 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அவை 11 அடிப்படைக் கடமைகளைக் குறிக்கின்றன.
பள்ளி வளாகத்தில் அடிப்படைக் கடமைகள்:
1. பள்ளியின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பேன்.
2. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு உரிய மதிப்பளிப்பேன்.
3. சமய, மொழி. மண்டல அல்லது மாணவியர்களிடமும் சகோதரமனப்பான்மையுடன் பழகுவேன்.
4. பிரிவு-வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மாணவ மாணவிகளை இழிவு செய்யும் செயல்களில் ஈடுபட மாட்டேன்.
5. அறிவியல் உணர்வு. மனிதநேயம் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க பிற மாணவர்களுடன் இணைந்து செயல்படுவேன்.
6. பொதுச் சொத்தான பள்ளியின் சொத்துகளைப் பாதுகாக்கும் பொருட்டு வன்முறையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்.
7. நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட -தேசிய மாணவர் படை- யில் சேர்ந்து பயிற்சி பெறுவேன்.
8. பள்ளியின் புறச்சூழலைப் பாதுகாக்க "நாட்டுநலப் பணித்திட்டத்தில்' சேர்ந்து பணியாற்றுவேன்.
9. அனைத்து மாணவர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவேன்.
25.
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி:
1. நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதியில் காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும் மற்றும் இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன.
2. நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியினை நன்னீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகைகளாக வகைப்படுத்துகிறோம்.
நன்னீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி:
1. நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர், நீர்ப்பாசனம். சுகாதாரம் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியைச் சார்ந்தே உள்ளனர்.
கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி:
1. புவியில் காணப்படும் மிகப்பெரிய நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி கடல்நீர் பல்லுயிர்த்தொகுதியாகும்.
2. கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக இத்தொகுதி உள்ளது.
3. பவளப்பாறைகள் போன்ற இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்கள் இதில் உள்ளன.
4. கடற்கரைப் பகுதிகள் மற்றும் கழிமுகங்களில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலந்த சூழலில் வளரும் நீர்வாழ் பல்லுயிர்களும் உள்ளன.
5. நீர்நிலையானது கடல்வாழ் உயிரினங்களின் வேகமான இடமாற்றத்திற்கு உதவியாக உள்ளது.
6. நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் மிக முக்கியமானதாக உள்ளது.
7. மனித இனம் இத்தொகுதியை நீர். உணவு. பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
26.
சூழ்நிலை மண்டலத்தின் மூன்று கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள்
2. உயிருள்ள கூறுகள்
3. ஆற்றல் கூறுகள்
உயிரற்ற கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள் சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற கரிம, இயற்பியல், இரசாயனக் காரணிகளை உள்ளடக்கியதாகும்.
2. உதாரணமாக நிலம், காற்று. நீர். சுண்ணாம்பு. இரும்பு போன்றவை.
உயிருள்ள கூறுகள்:
1. உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள், விலங்கினாங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும்.
2. இவை உற்பத்தியாளர். நுகர்வோர் மற்றும் சிதைப்போர் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3. மேலும் நுகர்வோர். தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் மற்றும் தாவர உண்ணியையும். ஊன் உண்ணியையும் உணவாகக் கொள்ளக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆற்றல் கூறுகள்:
1. உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
2. உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக் கூடியதாக உள்ளது.
3. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது.
27.
கடல் வளங்கள்:
கடல் நீர் மற்றும் கடலின் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை நாம் கடல் வளங்கள் என்கிறோம்.
வகைகள்:
(i) கடல் வளங்கள் உயிரியல் வளங்கள், கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் வளங்கள் என
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(ii) மீன்கள், பிளாங்டன், கடற்புற்கள் மற்றும் பவளப் பாறைகள் போன்றவகைள் உயிரியல் வளங்களாகும்.
(iii) பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உலோகத் தாதுக்கள், மணல் மற்றும சரளைக் கற்கள் போன்றவை கனிம வளங்களாகும்.
(iv) எரிசக்தி, கனிமங்கள், ஓத ஆற்றல், அலை ஆற்றல் போன்றவைகள் ஆற்றல் வளங்களாகும்.
தாக்கங்கள் :
(i) கடல் வளங்கள் சமூகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. (ii) பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுகின்றன.
(iii) ஆற்றல், கனிம வளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல் வளங்களையே அதிகம் சார்ந்துள்ளன.
28.
கடல் நீரோட்டங்கள்:
(i) பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.
(ii) பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் எதிர்க் கடிகார திசையிலும் நகருகின்றன.
வகைகள்:
கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வெப்ப நீரோட்டங்கள்:
தாழ் அட்சக்கோட்டுப் பகுதிகளிலிருந்து (வெப்ப மண்டலம்) உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை (மித வெப்பமண்டலம், துருவமண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு அட்லாண்டிக் பெருங்கடலின் வளைகுடா நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம்.
குளிர் நீரோட்டங்கள்:
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம் மற்றும் துருவ மண்டலம்) தாழ் அட்சப்பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள லாப்ரடார் நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம்.
29.
(i) புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப்பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம். போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தது.
(ii) ஸ்பானியர்களின் புதிய உலகக் கண்டுபிடிப்பு மெக்ஸிகோவையும் தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்வதற்கு இட்டுச் சென்றது.
(iii) கரும்பின் அறிமுகம், தென் அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் கரும்புத் தோட்டங்கள் அமைய வழிவகுத்தது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்யவேண்டி நேர்ந்தது.
(iv) காம்பியா, செனகல், கோரீ, எல்மினா, காங்கோ ஆகிய நாடுகள் ஆப்பிரிக்காவில் அடிமை
வர்த்தகத்தின் முக்கியமான மையங்களாக மாறின.
(v) அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது.
(vi) ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலை கொடுத்து வாங்கின.
(vii) இதற்குப் பதிலாக அமெரிக்காவிலிருந்து அவை சர்க்கரை மற்றும் பிற கச்சாப் பொருட்களைப்
பெற்றன. இந்த வர்த்தகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவற்ற லாபம் ஈட்டின.
(viii) புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் வணிகப்புரட்சிக்கு இட்டுச் சென்றன. இந்த வணிகப் புரட்சியின் தலையாய அம்சங்கள் வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகியவையே இவ்வணிகப் புரட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.
(ix) 'மெர்கண்டலிசம்' என்பது அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் வணிகரீதியில் லாபத்தையே குறியாகக் கொண்ட ஏகபோக வர்த்தகம் ஆதிக்கம் செலுத்தும்.
(x) புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் விளைவாக, பதினேழாம் நூற்றாண்டு பல்வேறு கிழக்கிந்திய நிறுவனங்களின் உருவாக்கத்தைக் கண்டது. ஆங்கிலக் கிழக்கிந்தியக்கம்பெனி, டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஃப்ரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி போன்றவை அத்தகைய நிறுவனங்களாகும்.
(xi) இந்தியாவுக்கு ஒரு புதிய கடல்வழியைக் கண்டுபிடித்ததற்குப் பின்னர் போர்ச்சுகீசியர்கள், கிழக்கிந்திய நறுமணப்பொருள் வர்த்தகத்தில் அராபியர்கள், எகிப்தியர்கள், பெனீசியர்கள் ஆகியோரின் போட்டிகளை படைபலத்தைக் கொண்டு முறியடித்துவிட்டு தங்களுடைய ஏகபோகத்தை நடைமுறைப்படுத்தினர்.
(xii) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தி மாபெரும் செல்வத்தை குவித்தது.
30.
மறுமலர்ச்சி:
(i) மறுமலர்ச்சி என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Renaissance என்பது மறுபிறப்பு எனப்பொருள்படும். இத்தாலியச் சொல்லான Renascita என்பதிலிருந்து தோன்றியது.
(ii) மறுமலர்ச்சி என்று இது அழைக்கப்படுவதற்குக் காரணம், கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தில் ஒரு மறுபிறப்பு அல்லது புத்தாக்கம் நிலவியதாகும்.
மதச் சீர்த்திருத்தம் :
(i) இடைக் காலங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு வலிமை நிறைந்த நிறுவனமாயிருந்தது.
ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் திருச்சபை அதிகாரங்களை அனுபவித்துக்
கொண்டிருந்தது.
(ii) திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர். அவருடைய அப்பதவி பபாசி (Papacy) என்று அறியப்பட்டிருந்தது. அவர் ஓர் இளவரசரைப் போன்ற ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
(iii) அவருடைய அதிகாரிகளுள் பலர் ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்; திருச்சபையின் பதவிகள் ஒவ்வொன்றும் விலைகூறி விற்கப்பட்டன.
(iv) அதோடு மட்டுமின்றி மக்கள் தங்களின் பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவமன்னிப்புக் கோருவார்களெனில் அவர்கள் பாவச்சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்றும் மக்களை நம்பச் செய்திருந்தது.
(v) மதச்சீர்திருத்தக்காரர்கள், திருச்சபையின் ஊழல் மிக்க நடைமுறைகளைக் கடுமையாகக் கண்டித்து பிரசுரங்களை விநியோகித்தனர்; புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
புவியியல் சார் கண்டுபிடிப்புகள்:
(i) புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப் பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
(ii) பதினான்காம் நூற்றாண்டில், தாலமியின் 'ஜியாகரபி' (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி, பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்குக் கொண்டுவரப்பட்ட போது ஓர் புத்தார்வம் ஏற்பட்டது.
31.
(i) சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும்.
(ii) இக்காலத்தில் வணிகமும் பொருளாதாரமும் விரிவடைந்தன. நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது.
(iii) சோழர்கள் காலத்தில் நிர்வாக இயந்திரமானது மறுசீரமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் (ஊர்) ஆகும். அதற்கு அடுத்தவை ஊர்களின் தொகுப்பான 'நாடு' மற்றும் 'கோட்டம்' (மாவட்டம்) என்பனவாகும்.
(iv) பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் 'பிரம்மதேயம்' என்றறியப்பட்டன. சந்தைக் கூடுமிடங்களும் சிறுநகரங்களும் 'நகரம்' என்றழைக்கப்பட்டன.
(v) ஊர், நாடு, பிரம்மதேயம், நகரம் ஆகிய ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மன்றத்தைக் (சபை) கொண்டிருந்தது.
(vi) நிலங்களையும், நீர்நிலைகளையும், கோவில்களையும் பராமரித்து மேலாண்மை செய்வது. உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை வசூல் செய்வது ஆகியவை, இம்மன்றங்களின் பொறுப்புகளாகும்.
(vii) வேளாண்மை மற்றும் வணிகத் துறைகளில் பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
(viii) அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டன. இது இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஒன்று புதிய கோவில்கள் கட்டப்பட்டன. இரண்டாவது ஏற்கனவே உள்ள கோவில்கள் பலமுனைச் செயல்பாடுகளைக் கொண்ட சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறியதாகும்.
(ix) கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்களாக மட்டுமல்லாமல் முக்கிய பொருளாதாரப் பண்புகளைக் கொண்ட நிறுவனங்களாகவும் மாறின.
32.
வணிகம்:
(i) மிகப்பெரும் உற்பத்தித் துறையானது முக்கியமாக சொந்தப் பயன்பாட்டிற்காக அல்லாமல் பரிமாற்றத்திற்காகவே பொருட்களை உற்பத்தி செய்தது.
(ii) பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. செலாவணி என்பது பண்டமாற்றமாகவே இருந்தது.
வணிக மையங்கள் :
(i) நகரங்கள் எப்போதும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்டன. இந்நகரங்கள் பல சாலைகளால் இணைக்கப்பட்டிருந்ததால் வணிகத்தில் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.
(ii) இத்தரைவழி வணிகத்தோடு நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப்பகுதி வணிகத்தில் சிறு கப்பல்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
கடல் வணிகம்:
(i) நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் (சூரத், மசூலிபட்டிணம், கோழிக்கோடு) கடல்சார் வணிக முனையங்களாகவும் செயல்பட்டன.
(ii) இந்தியப்பெருங்கடலின் குறுக்காக, கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை விரிந்து பரந்திருந்த கடல் வணிகம் நூற்றாண்டுகளுக்கு செழித்தோங்கியது.
(iii) பதினேழாம் நூற்றாண்டில் குஜராத்தில் சூரத், கோல்கொண்டா, ஆந்திராவில் மசூலிபட்டினம் வங்காளத்தில் சிட்டகாங், சோழமண்டலக் கடற்கரையில் புலிக்காட் (பழவேற்காடு), நாகப்பட்டினம். கேரளக் கடற்கரையில் கோழிக்கோடு ஆகியன ஆசிய வணிகத்தின் முக்கியத் துறைமுகங்களாகும்.
ஏற்றுமதி:
(i) துணி, மிளகு, விலைமதிப்புமிக்க நவரத்தினக்கற்கள் சற்றே விலைமதிப்புக் குறைந்த நவரத்தினக் கற்கள்-முக்கியமாக வைரம் அதுவும் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய வைரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ததில் இந்தியாவும் ஒரு முக்கிய ஏற்றுமதி நாடாக இருந்தது.
ii) இரும்பையும் எஃகையும் ஏற்றுமதி செய்த நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்றாகும்.
இறக்குமதி:
(i) சீனாவிலிருந்து பட்டு, சீன செராமிக் ஓடுகள், தங்கம்,நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள். கற்பூரம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. பட்டு, மருந்து வகைகள், சாய மரங்கள், சர்க்கரை ஆகியன பாரசீகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியப்பொருட்களாகும். தங்கம், தந்தம் ஆகியவை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
(ii) ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் இந்திய வணிகர்களோடு தங்களுக்குத் தேவையானப் பொருட்களைப் பெற்றுத்தரவும் தாங்கள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்தவற்றை விற்றுத்தரவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
(iii) ஐரோப்பிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்திய வணிகர்கள் பயனடைந்தனர்.
33.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
34.
ஏதென்ஸின் எழுச்சி:
(i) ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக குழு ஆட்சியும். கொடுங்கோலாட்சியும் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
(II) ஏதென்சில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், சுதந்திர மக்கள் (Freemm) பங்கேற்கும் மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
(iii) நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(iv) இம்முறை சமூகத்தின் மேல்தட்டு மக்களால் வெறுக்கப்பட்டது. அவர்கள் மக்களாட்சியைக் கும்பலின் ஆட்சி எனக் கருதினர்.
(v) பல கிரேக்க நகர அரசுகளின் வரலாறு பணம்படைத்த நிலப்பிரபுக்கள் மக்களாட்சியை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டங்களாகவே அமைந்தது.
(vi) இவற்றில் விதிவிலக்காக இருந்தது ஏதென்ஸ் மட்டுமே. அங்கு மக்களாட்சிமுறை 200 ஆண்டுகள் நீடித்தது.
வளர்ச்சி:
(i) ஏதென்ஸ் நகர் பெரிகிளிஸ் என்னும் மாபெரும் தலைவரைப் பெற்றிருந்தது. அவர் முப்பதாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தார்.
(ii) இவருடைய ஆட்சியின் போது ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் பெலப்போனேசியப் போர்கள் என அறியப்பப்பட்டன.
(iii) ஸ்பார்டாவோடு பகைமை, அந்நகர அரசு செய்த இடையூறுகள் ஆகியவை இருந்தபோதிலும் அவற்றையும் மீறி ஏதென்ஸ் பிரமிக்கச் செய்யும் கட்டடங்களைக் கொண்ட உன்னதமான நகரமாக மாறியது.
(iv) மாபெரும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நகரத்தில் இருந்தனர். ஆகவே வரலாற்று அறிஞர்கள் இக்குறிப்பிட்ட காலத்தைப் 'பெரிகிஸிசின் காலம்' என அழைக்கின்றனர்.
கொடைகள்:
(i) புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்டசும், அவர் பின்வந்த தூசிடைடிசும் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(ii) பெரிகிளிசின் சகாப்தத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களுள் மகத்தானவர் சாக்ரடீஸ் ஆவார்.
(iii) பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெமோகிரைட்ஸ். எபிகியூரஸ் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(iv) பிளாட்டோவின் சீடரான அரிஸ்டாட்டில், இயற்பியல் உலகம், சமூக உலகம் பற்றிய கண்டுணர்ந்த அனுபவ அறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
35.
மங்கோலியர்கள்:
(i)மங்கோலியர்கள் ஆசிய ரஷ்யாவின் ஸ்டெப்பிஸ் மேய்ச்சல் நிலப்பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்குள் நாடோடிகளாக வந்தவர்கள்.
(ii)அவர்கள் கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
(iii)போர்த்திறன் கொண்ட அவர்கள் செங்கிஸ்கான் எனும் மகத்தான தலைவனை உருவாக்கினார்கள்.
சீனாவில் மங்கோலிய ஆட்சி :
(i)சுங் வம்சத்தவர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, யுவான் வம்சத்தினர் என்ற பெயரில் மங்கோலியர்கள் சீனாவில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.
(ii)பாரசீகத்தையும் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் விட்டுவைக்கவில்லை. கி.பி. (பொ.ஆ). 1252 - இல் மாபெரும் 'கான்' ஆக மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
(iii)யுரேசியாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பரவியிருந்த மங்கோலியரின் ஆதிக்கம், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இதர வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்புவதற்கு உதவியது.
(iv)பெய்ஜிங்கிலிருந்த மங்கோலியரின் அரச சபை மார்க்கோபோலோ போன்ற வெளிநாட்டவரிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும் விவசாயிகள் தொடர்ந்து வறுமையில் வாடினர்.
(v)சில மதம் சார்ந்த அமைப்புகளும் ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின. முடிவில் 'சிகப்பு தலைப்பாகைகள்' என்ற அமைப்பின் தலைவரான சூ யுவான் சங், தலைநகர் பெய்ஜிங்கைக் கைப்பற்றி கி.பி. (பொ .ஆ) 1369 இல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
36.
சோகுனேட்களின் ஆட்சி உருவாதல் :
(i) ஜப்பானில் தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ என்பவர் வெற்றி பெற்றார்.
(ii) கி.பி. (பொ.ஆ.பி) 1192 இல் பேரரசர் இவருக்கு செய் - ய் -தாய் - சோகன் என்னும் பட்டத்தைச் சூட்டினார்.
(iii) இப்பட்டம் பரம்பரை பரம்பரையாக ஆட்சி நடத்தும் உரிமையைக் கொண்டிருந்தது.
(iv) காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரானார். இவ்வாறு சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
எழுச்சி:
(i) யோரிடோமா தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினர். இதனால் முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
(ii) வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது. பேரரசர் ஓர் அலங்காரத் தலைமையாக மட்டுமே இருந்தார்.
(iii) நிலப்பிரபுத்துவ ராணுவத்தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப்பட்டது. மங்கோலியரை சோகாேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
(iv) இருந்தபோதிலும் இவ்வம்சத்தின் சரிவு தொடங்கியது. கி.பி. (பொ.ஆ) 1338-இல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது.
(v) சோகுாேட்டுகளில் வேறொரு பிரிவைச் சேர்ந்த 'அஷிக்காகா' சோகுனேட்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர்களின் ஆட்சி 235 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
(vi) இறுதியில் மூவர் ஜப்பானை நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர். அவர்கள் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் அல்லது ஹிடயோஷி எனப்பட்ட விவசாயி, தொகுகவா இய்யாசு என்ற அக்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபு ஆகியோராவர்.
(vii) 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பான் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.
37.
| பொதுத்துறை | தனியார் துறை |
|---|---|
| சேவை நோக்கம் கொண்டது. | இலாப நோக்கம் கொண்டது |
| சொத்துக்கள் அரசாங்கத்திற்குச் சொந்தம் | சொத்துக்கள் தனிநபர்களுக்குச் சொந்தமானது |
| ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. | ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகிறது. |
| நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம், பாரத தொலைபேசி நிறுவனம் போன்றவை பொதுத் துறை நிறுவனங்கள். | டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட், டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை போன்றவை தனியார் நிறுவனங்கள். |
38.
| ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் | ஒழுங்கமைக்கப்படாத துறைகள் |
| பதிவு செய்யப்பட்டதும். அரசாங்க விதி களையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும். ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ஒழுங்கமைக்கப்பட்ட துறை எனப்படும். |
ஒழுங்கமைக்கப்படாத துறைகள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவைகள் அல்ல. மேலும் இவற்றிற்கு விதிகளும் ஒழுங்கு முறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. |
| வங்கிகள், ரயில்வே. காப்பீடு, உற்பத்தித் தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளாகும். |
வீட்டு உபயோகப் பொருள்கள் சிறு மற்றும் குடிசைத்தொழில்கள், தெருக்களில் விற்பனை செய்வோர். பழுதுகள் சரி பார்ப்போர் போன்ற சிறிய அளவிலான தொழில் செய்யும் மக்களை இத்துறை உள்ளடக்கியுள்ளது. |
| இந்தத் துறைகள், சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் படி செயல்படுகின்றன. |
இதற்கு விதிகளும், ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. |
| ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு உண்டு. | வேலை உத்தரவாதம் கிடையாது. |
| நல்ல ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம். ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவை வழங்கப்படும். |
குறைந்த கூலி, பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது. பெரும்பாலும் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு. மருத்துவ விடுப்பு போன்றவை கிடையாது. |
39.
| புதுப்பிக்க தக்க வளங்கள் | புதுப்பிக்க தகாத வளங்கள் |
|---|---|
| புதுப்பிக்கத்தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது. | புதுப்பிக்கத்தகாத வளங்கள் சூழலை மாசுபடுத்தவும். சேதப்படுத்தவும் செய்கின்றன. |
| இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறுகிய நேரத்தை எடுத்துக் கொள்கிறது. | இந்த வளங்கள் உருவாக்குவதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன. |
| எடுத்துக்காட்டு: சூரியசக்தி, காற்றுசக்தி, நீர்,மரம், காகிதம். | எடுத்துக்காட்டு: உலோகங்கள், கண்ணாடி. புதைப்படிவ எரிபொருள்கள் (நிலக்கரி, பெட்ரோல். இயற்கை வாயு, டீசல்) |
40.
1. இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
2. காற்று, நீர் மாசுபாடு.கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைத் தீர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
3. இந்தியா குறைந்த வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
4. நிலையற்ற காலநிலை குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு அணுகு முறைகளில் மாற்றம் கொண்டு. இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
5. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி. நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
41.
1. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் கட்சிகள் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன.
2. கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்களிடையே தான் கடும் போட்டிகள் நிலவுகின்றன.
3. கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும். திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றன.
4. நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன.
5. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில சட்டமன்றங்களிலும் முறையாக விவாதிக்கப்பட்டு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
6. அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றன.
7. தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்க்கட்சியாக பங்களிப்பு செய்கின்றன.
8. எதிர்க்கட்சிகள் அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைத்து விமர்சனம் செய்கின்றன.
9. மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. மேலும் அவை முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன.
42.
(அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்குழல் வடிவத்தில் குவியும் காற்று ஆறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது.
(1) புவியின் கழற்சியினால் சூராவாணி வட அரைகோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும், தென் அரைகோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது. குறாவளிகள் மூன்று வகைப்படும். அவைகள். வெப்பச்சூறாவளிகள் மிதவெப்பச்சூறாவர்கள் கூடுதல்வெப்பர்சூறாவளிகள்
அ) வெப்பச்சூறாவளிகள்!
(1) வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும்
Laari (Inter Tropical Cimvangenee Zones(ITCZ) Rzadkien.
(I) இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன.
(1) இலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பரிபிர்பெருங்கடலில் ஸ்டபூன்கள் |Typom) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லெண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் Hurricaner) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேசியுஸ் (Ragnion) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wity Wily) என்றும் அழைக்கப்படுகிறது.
(v) வெப்ப ாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும். பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்
ஆ) மிதவெப்பக்சூராவளிகள்
(1) 35 முதல் 65" வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிகொற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன.
மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது
(iii) இச்ாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப் பகுதி வரை புரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று மேற்கத்திய இடையூறு காற்று (Wism Disturbance என்று அழைக்கப்படுகிறது.
இ) கூடுதல்வெப்பக்சூராவளிகள்:
அடுநல் வெப்பர் சூறாவளிகள் என்பது 30 முதல் 60 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப் பகுதிகளில் வீசுகின்றன. இது 'மைய அட்ச சூறாவளிகr (Late Cyc என்றும் அழைக்கப்படுகின்றன
(II) இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mil முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிலையும் (Harry hall) இடியுடன் கூடிய மழைப்பொழிலையும் பனிப்பொழிலையும் ) மற்றும் சுழல் காற்றுகளையும்(Tomatoes) அளிக்கின்றன
43.
வளிமண்டல அடுக்குகள்:
i) வளிமண்டலம் புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(ii) இவ்வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. அவை வளிமண்டல கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும்.
அ) வளிமண்டல கீழடுக்கு:
(i) இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும்.
(ii) இவ்வடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ உயர வரையிலும் காணப்படுகிறது.
(iii) இவ்வடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும்.
(iv) இவ்வடுக்கில்தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
ஆ) மீள்அடுக்கு:
(i) கீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது.
(ii) இது வளிமண்டலத்தில் 50 கி.மீ. வரை பரவியுள்ளள்ளது.
(iii) இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது 'ஓசோனோஸ்பியர்' என்று அழைக்கப்படுகிறது.
(iv) இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கின்றது. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.
இ) இடையடுக்கு:
(i) இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வரை காணப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகின்றது
ii) புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
(iii) புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன.
ஈ) வெப்ப அடுக்கு:
(i) இடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு, வெப்ப அடுக்கு ஆகும். இது சுமார் 600 கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது.
(ii) வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது 'ஹோமோஸ்பியர் (Homosphere) என அழைக்கப்படுகின்றது.
(iii) ஆனால் வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி 'ஹெட்ரோஸ்பியர்'(heterosphere) என அழைக்கப்படுகின்றது.
(iv) இவ்வடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உ) வெளியடுக்கு:
(i) வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வெளிஅடுக்கு என்று அழைக்கப்படுகிறது.
(ii) இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(iii) அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்ற விநோத ஒளிநிகழ்வுகள் இவ்வடுக்கில் நிகழ்கின்றன.
44.
இந்தியாவில் மக்களாட்சி:
1. இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும்.
2. இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்ட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
3. இது நாட்டிற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குகிறது.
4. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும். ஒப்புதல் அளிப்பதும் இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கியக் கூறுகளாகும்.
5. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும்.
6. இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கியக் கெள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
7. அவை இறையாண்மை, சமதர்மம், மதச் சார்பின்மை, மக்களாட்சி. மற்றும் குடியரசு.
8. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறான்.
9. சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
45.
1. ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்கள் கிடைக்கச் செய்ய அதிகாரம் அளித்தல்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும். பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
3. மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூகத் தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.
4. மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமை மிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.
5. பொது மக்களின் கருத்து வலுவாக இருத்தல்.
6. மக்களிடையே சகிப்புத்தன்மையும் மத நல்லிணக்கமும் நிலவுதல்.
7. அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்,
8. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
9. வலுவான பொறுப்பு மிக்க எதிர்க் கட்சி இருத்தல்.
46.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
47.
அ) ஹரோகிளிபிக்ஸ்:
(i) எகிப்தியர்கள் தமது எழுத்து முறைக்காகப் புகழ்பெற்றவர்கள். இவர்களது எழுத்து ஹரோகிளிபிக் என்று அழைக்கப்படுகிறது.
(ii) இந்த எழுத்து வகை நினைவுச்சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் பயன்படுத்தப்பட்டது.
(iii) பொதுவான தகவல் தொடர்புக்கு ஹெரிடிக் எழுத்து பயன்படுத்தப்பட்டது. இது பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவமாகும்.
(iv) இது சுமார் கி.மு.(பொ.ஆ.மு) 3000ல் உருவாக்கப்பட்டது. இந்த எழுத்தைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களும் பிரதிகளும் எழுதப்பட்டன.
ஆ) க்யூனிபார்ம்:
(i) சுமேரிய எழுத்து முறை கியூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது.
(ii)எழுத்துகள் ஆப்பு வடிவில் இருப்பதால், இப்பெயர் இடப்பட்டது.
(iii) கி.மு.(பொ.ஆ.மு) காலகட்டத்தில் உருவான இம்முறை, உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்றாகும்.
(iv) வணிகப் பரிமாற்றங்களுக்கும்,கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கும் இந்த எழுத்து முறையைச் சுமேரியர்கள் பயன்படுத்தினார்கள்.
(v) இந்த எழுத்துகள் எழுதப்பட்ட சுட்ட களிமன் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
48.
சமண சமயம்:
(1) சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமானார் ஆவார்.
(ii) இவர் மூன்று ரத்தினம் எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தையை போதித்தார்.
(iii) அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) மகாவீரர் சாதிமுறையை ஏற்கவில்லை அனைத்து மதமும் சமம் என்றார்.
(vi) சமண சமயத்தின் இரு பிரிவுகள்
(i) திகம்பரர்கள் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்)
(ii) சுவேதாம்பரர்கள் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்)
(vii) சமணர்கள் தங்கள் கொள்கைகளை வட்டார மொழிகளிலே போதித்தனர்.
(viii) சந்திரகுப்தர், மகேந்திரவர்ம பல்லவன் சமண சமயத்தை தழுவியவர்கள்.
புத்த சமயம்:
(i) புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர்.
(ii) இவரின் எண் வழிப்பாதை நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன் முயற்சி, நற்சிந்தனை மற்றும் நல்ல தியானம் ஆகும்.
(iii) அன்பை அகிம்சை வழியில் எல்லா உயிரினங்களும் வெளிப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) சாதிமுறையை ஏற்கவில்லை.
(vi) புத்த சமயம் மஹாயானம் மற்றும் ஹீனயானம் என்று இரு பிரிவுகளாக பிரிந்தது.
(vii) புத்தர், மக்கள் பேசும் பிராகிருத மொழியில் தனது போதனைகளை போதித்தார்.
(viii) அசோகர், கனிஷ்கர் புத்த சமயத்தை தழுவியவர்கள்.
49.
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
1. மனிதத்தன்மை
2. நேர்மை
3. நன்னடத்தை
4. மெய்யறிவு
5. நம்பகத்தன்மை
(i) மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
(ii) ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(iii) கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
(iv) குழந்தைகள் பெற்றோருக்கும், மனைவி கணவனுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், دو ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்' என்று தெளிவாக கூறினார்.
(v) 'ஒரு அரசுக்கு மூன்று விசயங்கள் அவசியமானவை, நாட்டில் போதுமான உணவு, இராணுவத் தளவாடங்கள் மற்றும் மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
50.
(i) சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது,
(ii) இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர்.
(iii) இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்,
(iv) வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
மூவேந்தர்:
(i) சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
(ii) அக்காலத்தில் பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்கு கீழேயே இருந்தன.
சேரர்:
(i) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
(ii) தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. (iii) சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
(iv) வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.
சோழர்:
(i) காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
(ii) காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகம் ஆகும்.
(iii) சோழ மன்னர்களின் தலைச்சிறந்தவர் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்பெருக்கைப் பயன்படுத்தி பாசன வசதிகள் செய்து விவசாயம் தழைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
(iv) சோழர்களின் இலச்சினை புலி, அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
பாண்டியர்:
(i) பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
(ii) தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
(iii) பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
வேளிர் / குடித்தலைமை:
(i) தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
(ii) குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்
(iii) வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
51.
நிலத்தடி நீரின் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்:
(i)டெர்ரா ரோஸா (இத்தாலிய மொழியில் செம்மண்) : சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களி உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்ற பின்னர் அதிலுள்ள எஞ்சிய செம்மண் இங் படியவைக்கப்படுவதால் இந்நிலத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. இம்மண் சிகப்பு நிறம காணப்படுவதற்கு அதிலுள்ள இரும்பு ஆக்ஸைடு காரணமாகும்.
(ii)லேப்பீஸ் : கரடு முரடாக உள்ள கண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடு போது நீண்ட அரிப்புக் குடைவுகள் ஏற்படுகின்றன. இக்குடைவுகளே லேப்பீஸ்கள் என் அழைக்கப்படுகின்றன.
iii) உறிஞ்சு துளைகள்: சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்க உறிஞ்சு துளைகள் எனப்படுகின்றன. இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீட்டர் வரை காணப்படு
iv) குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள் : குகைகளும், அடிநிலக் குகைகளும் சுண்ணாம் பிரதேசங்களில் நிலத்தடியில் காணப்படும் நிலத் தோற்றங்களாகும். கரியமில அமிலம் கண்ணாட பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது. இவை உருவத்திலு அளவிலும் வேறுபட்டுக் காணப்படும். அடிநிலைக் குகைகளின் தரைப்பகுதி சமமற்றுக் காணப்படு (உதாரணம்) மேற்கு பீஹாரிலுள்ள குப்ததாம்.
v) குகைகளிலும், அடிநிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன. ட்ரேவர்டைன், டூஃபா மற்றும் சொட்டுப்படிவுக ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.
vi) குகைகள், யுவாலாக்கள், போலின்கள், போல்ஜேக்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உலகின் பி பகுதிகளில் காணப்படும் சுண்ணாம்பு நிலப்பிரதேச நிலத்தோற்றங்கள் ஆகும்.
52.
வானிலைச் சிதைவு:
வளிமண்டல நிகழ்வுகளேடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும் அழிதலுக்கும் உட்படுகின்றன. இச்செயல்பாடுகளையே வானிலைச்சிதைவு என அழைக்கிறோம்.
வானிலைச் சிதைவு மூன்று வகைப்படும்.
அ) இயற் சிதைவு
ஆ) வேதியியல் சிதைவு
இ உயிரினச் சிதைவு
அ) இயற் சிதைவு:
(i) இயற் சக்திகளால் பாறைகள் வேதியியல் மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற் சிதைவு எனப்படுகிறது.
(ii) பகல் நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன. இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன.
(iii) இத்தொடர்ச்சியான நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன.
(iv) பாறை உரிதல், பாறைப் பிரிந்துடைதல் மற்றும் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் ஆகியன இயற் சிதைவின் வகைகளாகும்.
ஆ) வேதியியல் சிதைவு:
(i) பாறைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலே வேதியியல் சிதைவு எனப்படுகிறது.
(ii) அதிக வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட நில நடுக்கோட்டுப் பகுதிகள், வெப்பமண்டலப்
பகுதிகள் மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் வேதியியல் சிதைவுறுதல் அதிகமாக
நடைபெறுகிறது.
(iii) ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆகிய செயல்பாடுகளினால் வேதியியல் சிதைவு ஏற்படுகிறது.
(iv) ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வேதியியல் சிதைவறுதலின் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
இ) உயிரினச் சிதைவு:
(i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.
(ii) மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
53.
எரிமலையின் விளைவுகள்.
அ) நன்மைகள்:
(i) எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது.
(ii) அதனால் வேளாண் தொழில் மேம்படுகிறது.
(iii) எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை (Geothreniral energy) பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
(iv) உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகில் சிறந்த சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
(v) எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது.
ஆ) தீமைகள்:
(i) எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
(ii) வெகுதூரம் பயணிக்கும் பாறைக்குழம்பானது தன் பாதையில் உள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
(iii) அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
(iv) எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
54.
எரிமலை செயல்படும் / வெடிக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
அ) செயல்படும் எரிமலை (Active Volcano )
ஆ உறங்கும் எரிமலை ( Dormart Volcano )
இ தணிந்த / செயலிழந்த எரிமலை ( Extinot Volcano )
அ) செயல்படும் எரிமலை:
நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் எனப்படுகின்றன (எ.கா) செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆ) உறங்கும் எரிமலை:
(i)நீண்ட காலமாக எரிமலைச் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் எனப்படும்.
(ii) இவை திடீரென்று வெடிக்கும் தன்மையுடையது.
(iii) இவ்வாறான எரிமலைகள் வெடிக்கும் பொழுது அதிகமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. (எ.கா.) ஃபியூஜி எரிமலை - ஜப்பான்.
இ) தணிந்த / செயலிழந்த எரிமலை:
எந்தவித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் தணிந்த / செயலிழந்த எரிமலைகள் ஆகும். (எ.கா.) கிளிமஞ்சாரோ எரிமலை - தான்சானியா.
55.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
56.
அ) விவசாயம் (அல்லது) வேளாண்மை:
1. இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள்.
2.ஆடு மாடுகளையும் வளர்த்தார்கள்.
3.தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாசன நிருவாகம் மேம்பட்டது.
4.ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள், நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன ஆற்றுப்படுகைகளில் பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது.
ஆ) மட்பாண்டங்கள்:
1.தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.
2.இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப்
பயன்படுத்தினார்கள்.
3.மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன.
4.கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
இ) உலோகக் கருவிகள்:
1.பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
2.வாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
3.இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
4.இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
5. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
57.
அறையில் மூலையில் குத்துகாலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
58.
1. நிலநடுக்கத்தின்போது பொருள்கள் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. கண்ணடி ஜன்னல், கதவுகள், மதில், மின்விளக்குகள் நம் மேலே விழ வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் நாம் மேஜைக்கு அடியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
2. நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அதிர்ச்சியால் நாம் உருண்டோடிய இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மேஜையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
3. பொருட்கள் தலையில் விழுந்து தலைக்காயம் ஏற்படாமல் இருக்க தலையைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
59.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ஏனென்றால், நமது நில வரைபடத்தின் கூறுகள் இவற்றின் மூலம் தெளிவாக அளவிடப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் உலகளாவிய பயணம் செயற்கை கோள் மூலமே சாத்தியமாகியுள்ளது. உலக அமைவிட கண்டறியும் தொகுதி செயற்கை கோளின் மிக முக்கிய பயன்பாடாகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards