9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கர்னல் பென்னிகுயிக்.
2.
ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
3.
பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
4.
குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?
5.
கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி
6.
மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
7.
ஆச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.
8.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
9.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
10.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
11.
சீனப் பெருஞ்சுவர்.
12.
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
13.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.
14.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
15.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
16.
கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?
17.
உயிரினச்சிதைவு என்றால் என்ன?
18.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிருப்பு வகைகளை பற்றி எழுதுக
19.
நகரங்களை நோக்கிய இடப்பெடப்பெயர்வு குடிசை பகுதிகளை உருவாகக் காரணமாகிறது- நியாயப்படுத்துக.
20.
லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்னன்ன?
21.
தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?
22.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
23.
அரசமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.
24.
பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.
25.
'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?
26.
விஜய நகர அரசை உருவாக்கியவர் யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
27.
மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.
28.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
29.
பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?
30.
பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.
1. PPP
2. HDI
31.
எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனித வளம் கருதப்பதப்படுவது ஏன்?
32.
இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி
33.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
34.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக
1.
கர்னல் பென்னி குயிக்:
(i) பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப் பணியாளரும், சென்னை மாகாணச சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார்.
(ii) மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.
(iii) ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெற முடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார்.
(iv) அணை கட்டும் பணிகள் 1895-ல் முடிவுற்றன. பெரியார் அணையிலிருந்து கிடைக்கும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
2.
(i) ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள்.
(ii) புகழ் பெற்ற போராளிகளான சாக்கா ஜூலு போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டவர்கள். (iii) ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைப் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர். ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.
3.
(i) அரசால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கலைந்து செல்வதில்லை என உறுதியேற்றதைத் தொடர்ந்து நெருக்கடி முற்றியது.
(ii) அரசர் இவர்களைக் கலைக்கப் படைகளைப் பயன்படுத்த முயன்றார். அவருடைய வீரர்களே அவரது ஆணைகளுக்குப் பணிய மறுத்தனர்.
(iii) இதனைத் தொடர்ந்து தனது நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் லூயி அயல்நாட்டுப் படைகளைத் தருவிப்பதற்கான சதி ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
(iv) இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 1789 ஜூலை 14இல் பாரிஸ் நகரில் கிளர்ச்சியில் இறங்கினர்.
(v) அவர்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர். இது பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி புரட்சியில் முக்கியத் திருப்பு முனையாகும்.
4.
(i) குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்துவ மதக்குழுவின் உறுப்பினர் ஆவர்.
(ii) புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார் அமைப்பையும் எதிர்த்தனர்.
(iii) இவர்கள் போருக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்.
5.
கடல் நீர் இயக்கங்களில் அலைகளே மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகளை உருவாக்கின்றன. காற்றின் வேகம், அது நீடிக்கும் காலம் மற்றும் அதன் திசையைப் பொறுத்து அலைகளின் உயரம் அமைகின்றது. சில நேரங்களில் ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினாலும் அலைகள் உருவாகின்றன. இவ்வகை அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப்பேரலைகள் ஆகும்.
6.
(i) மறுமலர்ச்சியின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு என்பது மனித நேயம் என்ற கருத்தாகும்,
(ii) தனிநபர் வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசிய வாதம் ஆகியவற்றை நோக்கிய ஒரு திட்டவட்டமான நகர்வை அது அடையாளப்படுத்தியது.
(iii) வட்டார மொழியில் எழுதுவது என்பது வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது.
(iv) திருச்சபையின் உலகியல் ரீதியான, ஊழல் மலிந்த நடைமுறைகளை விமர்சிப்பதில் மறுமலர்ச்சி ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியது,
(v) புதிய நிலவழிப்பாதைகளின் கண்டுபிடிப்பிலும் உலக வரைபடத்தை மாற்றியமைப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தது.
(vi) சாகசங்களுக்கான உத்வேகமும் அறிவுக்கான தாகமும் நெடிய கடற்பயணங்களை மேற்கொள்வதற்கு உந்துதலாக அமைந்தது
7.
(i) அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நவீனமயமாதலை வேகப்படுத்தியது. ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் (கி.பி. (பொ. ஆ) 1394 - 1468) என்பவர் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ii) ஒரு கையெழுத்துப் பிரதியின் பல மறுபிரதிகளின் உற்பத்தியை அச்சு இயந்திரம் சாத்தியமாக்கியது; மேலும், மேற்கு ஐரோப்பா முழுவதிலும் அவை பரவுவதற்கும் வழி வகுத்தது.
8.
1. புனித சோபியா ஆலயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்.
2. அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
3. கான்ஸ்டான்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
9.
(i) ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
(ii) வடபகுதியில் பண்பாட்டில் பின் தங்கிய ஆட்சியாளர்களின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல். மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும் செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
10.
திருச்சபையானது படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
திருச்சபையிலிருந்து விலக்கிவைப்பது, மதவிலக்கு செய்வது எனும் இரண்டு கருவிகளைத் திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.
11.
(i)கி மு. (பொ.ஆ.மு) 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன.
(ii) சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது.
(iii)இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
12.
(i) அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
(ii) கி.மு. பொ.ஆ.மு. 250ல் மௌரியத் தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாடு நடைபெற்றது. பௌத்தத்தை மற்ற பகுதிகளில் பரப்ப வேண்டும், மக்களை பௌத்தத்திற்கு மாற்ற சமயப்பரப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கியமான முடிவாகும்.
13.
மும்மணிகள் (திரி - ரத்னார் என்று அழைக்கப்படும். சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்
1.நன்னம்பிக்கை
2. நல்லறிவு
3. நன்னடத்தை
நன்னம்பிக்கை : மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்
நல்லறிவு : கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் இன்றியே இயங்கி வருகிறது. அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
நன்னடத்தை : இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது.
அவையாவன.
1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது.
2. நேர்மையுடன் இருப்பது
3.கருணை
4. உண்மையுடன் இருப்பது
5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.
14.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
15.
(i) தொல்லியல் அகழாய்வுப் பணி என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாக திரட்டி ஆராய்வதாகும்.
(ii) வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து சான்றுகள் கிடைத்துள்ளன.(எ.கா.) தமிழ்நாட்டின் அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிப்பூம்பட்டினம் முதலியன.
16.
கடற்குகை (Sea Cave) :
கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு தவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை கடல் குகைகள் எனப்படுகின்றன.
கடல் வளைவு (Sea Arch):
அருகருகிலுள்ள இரு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள் மேலும் அரிக்கப்படுவதால் அவை இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வளைவுகள் கடல் வளைவுகள் எனப்படுகின்றன.உதாரணம் - நீல் தீவு (அந்தமான் நிக்கோபார்).
17.
1. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுத்லை உயிரினச் சிதைவு எனப்படும்.
18.
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள் - சாலைப் பகுதிகளில்
2. நேர்க்கோட்டுக் குடியிருப்புகள் - சாலையோரங்களில்
3. அரைவட்ட வடிவக் குடியிருப்புகள் - குளத்தைச் சுற்றி
4. குறுக்கு வடிவக் குடியிருப்புகள் - மூன்று சாலை சந்திக்கும் இடம்
19.
நகரப் புறங்களில் குடியிருப்புகள் நெருக்கமாகவும் அதிக மக்கள் தொகையுடனும் காணப்படும். இதனால் நகரப் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்படுகிறது. நகரங்களில் இடநெருக்கடி, வாடகை உயர்வு ஆகியவை காணப்படுவதால் கிராமங்கலிருந்து இடம் பெயர்ந்து செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் புறநகர்ப் பகுதிகளில் குடிசைகளை அமைத்து அங்கெ தங்கி விடுகின்றனர். இங்கு சாலைவசதி, குடிநீர் வசதி, சாக்கடை வெளியேற்ற வசதி கிடையாது. எனவே தெரு முழுவதும் ஓடும் சாக்கடை நீரால் இப்பகுதிகள் அசுத்தமாகின்றன. இவ்வாறு நகரங்களை நோக்கியே இடப் பெயர்வு குடிசைகள் அமையாக் காரணமாகிறது.
20.
1898இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார். தொடர்ந்து சொசைட்டெ ரெனால்ட் ஃபெரெர்ஸ் (ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.
21.
தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. இதனால் டைஃபாயிடு, காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.
22.
1. உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
2. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
3. மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
4. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
5. மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
6. பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
23.
அரசமைப்பின் வகைகள்:
1. எழுதப்பட்ட / எழுதப்படாத அரசமைப்பு
2. கூட்டாட்சி / ஒற்றையாட்சி
3. நெகிழும் தன்மையுடையது / நெகிழும் தன்மையற்றது
24.
நிறைகள்:
1. அதிக மக்கள் உள்ள நாட்டில் ஒவ்வொரு பகுதியினருக்கும் தங்களுக்குரிய கட்சியை அமைத்துக் கொள்ள முடியும்.
2. எல்லா தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
3. மக்கள் தங்களுக்கு விருப்பமான கட்சியை தேர்ந்தெடுக்க முடியும்.
குறைகள்:
1. பல கட்சிகள் இருக்கும்பொழுது ஓட்டுகள் சிதறும்.
2. எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டால் பல கட்சி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
3. அவ்வாறு அமையும் ஆட்சியானது குறை ஆயுள் ஆட்சியாக அமைய வாய்ப்புள்ளது.
4. மக்களிடையே பிரிவினை வாதம் வளர வாய்ப்புள்ளது.
25.
கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு உவபர்ப்பியம் எனப்படும். இது ஆயிரத்தின் பகுதியாக அளவிடப்படுகிறது.
26.
(i) ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜய நகர அரசு உருவாக்கப்பட்டது.
2. சங்கம வம்சம், சாளுவ வம்சம் மற்றும் துளுவ வம்சம், இவ்வரசை ஆட்சி புரிந்தனர்
27.
(i) கி.பி. (பொ. ஆ) 1300 களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும். படைத் தளபதியுமான மாலிக்கபூரின் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
(ii) தென்னக படையெடுப்பில் மாலிக்காபூர் 1306 இல் முதலில் தேவகிரியைப் பிடித்துக் கொண்டான்.
(iii) பின்னர் 1310-ல் தென்னக மேற்குக் கடற்கரைப் பட்டினமான துவாரசமுத்திரத்தைத் தாக்கி கைப்பற்றினார்.
28.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள்:
1. முதன்மைத் துறை,
2. இரண்டாம் துறை,
3. சார்புத்துறை ஆகியன.
29.
1. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.
2. உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் 15 முதல் 60 வயது வரையிலும் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
30.
1. PPP - Purchasing Power parity வாங்கும் திறன் சமநிலை
2. HDI - Human Development Index மனித வள மேம்பாட்டுக் குறியீடு.
31.
1. எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித வளங்கள் அவசியமாகும்.
2. உற்பத்தித் துறையில் பயன்படுத்தக் கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே மனித வளம் என்ற சொல் குறிக்கிறது.
3. மனித வள மேம்பாடு என்பது மனிதனின் உடல்திறன் மற்றும் சுகாதாரத் திறன் களை கல்வியின் மூலம் மேம்படுத்துவது ஆகும்.
4. எனவே மனித வளத்தில் கல்வி மற்றும் உடல் நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை பெறக்கூடிய முதலீடு ஆகும்.
32.
1. இந்தியா உலகின் மிகப்பெரிய சமத்துவ. மதச்சார்பற்ற மக்களாட்சி, குடியரசு நாடாகும்.
2. இந்திய தேர்தல் முறை. இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும்.
3. இந்திய அரசிலமைப்பின் விதிமுறைக்கேற்ப நம்நாட்டின் தேர்தல் முறை அமைக்கப்பட்டிருக்கிறது.
4. நம் நாட்டின் சுதந்திரமான. நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
5. தேர்தல் ஆணையமானது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையும் இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கொண்டுள்ளது.
33.
34.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards