9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
Term 3 SA Model Question
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________ ஆகும்.
2.
காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.
3.
பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ________ ஆகத் தோன்றும்.
4.
ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .
5.
ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
6.
கீழ்காண்பவனவற்றை வரையறு
நோய்க்கிருமி
7.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
8.
மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.
9.
SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக
10.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
11.
உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.
12.
மனிதனுக்கு டைபாய்டு ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள் செல்லும் பண்பைப் பெற்றுள்ள து? இதனைக்கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.
13.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
14.
மிதத்தல் விதிகளைக் கூறு.
15.
கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
16.
கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
17.
கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
18.
கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
19.
ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?
34
20
15
0.2
20.
பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு (தேனீக்கள்) இனம் அல்ல?
ஏபிஸ் மெல்லிபெரா
ஏபிஸ் டார்சோட்டா
ஏபிஸ் ப்ளோரா
ஏபிஸ் சிரானா
21.
தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .
அமோனியாவாதல்
நிலைப்படுத்துதல்
நைட்ரேட்டாதல்
நைட்ரேட் வெளியேற்றம்
22.
இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.
நிமோனியா
காசநோய்
காலரா
ரேஃபிஸ்
23.
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
பாலிஸ்டைரீன்
பி.வி.சி
பாலிபுரோப்பலீன்
எல்.டி.பி.இ
24.
ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.
25.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
26.
AYUSH பற்றி நீ அறிவது என்ன?
27.
‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.
28.
சுற்றுக்காலம் வரையறு
29.
தகவமைப்பு என்றால் என்ன?
30.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
31.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
32.
அதிர்வெண்
33.
திசைவேகம்
34.
மீயொலி
35.
LINUX
36.
Keyboard
37.
DPT
38.
ORS
39.
ஓரு பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
40.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
41.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக
42.
750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி)
1.
( )
நின்ஹைட்ரின்
2.
( )
விப்ரியே காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா
3.
( )
குறைவு
4.
(b)
5.
(a)
6.
நோயினை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் நோய்க்கிருமி எனப்படும்.
7.
காற்றை விட ஹீலியம் அடர்த்தி குறைவாக உள்ளதாலும் ஹீலியமானது அதிக மிதப்பு விசையை பெற்றுள்ளதாலும் ஹீலியம் பலூன் காற்றில் மிதக்கிறது.
8.
| வ.எண் | தமிழ் பெயர் | தாவரவியல் பெயர் | மருந்து | பயன்படும் பகுதிகள் | குணப்படுத்தும் நோய்கள் |
|---|---|---|---|---|---|
| 1 | கற்றாழை | அலோ விரா | ஆந்தராக்குயினோன் | இலைகள் | காயங்களை சரிபடுத்துதல்தோல் நோய், புற்றுநோய். |
| 2. | துளசி | ஆசியம் சாங்டம் | பயன்பாட்டு எண்ணெய் | இலைகள் | சளி, காய்ச்சல் தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் |
| 3. | நன்னாரி | ஹெமிடெஸ்மஸ் இன்ட்கஸ் | டெர்பீன் | வேர்கள் | பாக்டீரியத் தோற்று வயிற்றுப்போக்கு. |
| 4. | நிலவேம்பு | ஆன்ட்ரோரி கிராஹிஸ், பேனிகுளேட்டா | டெர்பினாய்டுகள் | அனைத்து பாகங்கள் | டெங்கு காய்ச்சல்,நீரிழவு நோய், சிக்கன குனியா. |
| 5. | வெப்பாலை | ரைட்டியா டிங்டோரியா | பிளவினாய்டுகள் |
மரப்பால் இலைகள் |
படர் தாமரை, வயிற்றுபோக்கு வீக்கம். |
| 6. | சின்கோனா மரம் | சின்கோனா அபிசினாலிஸ் | குயினைன் | மரப்பட்டைகள் | மலேரியா , நிமோனியா காய்ச்சல். |
| 7. | சிவன் அவல் பொறி | ரவுல்பியா செர்பன்ட்னா | ரிசெர்பைன் | வேர்கள் | இரத்த அழுத்தம் குறைய பாம்பின் விஷ முறிவுக்கு |
| 8. | தைலமரம் | யூக்கலிப்ட்ஸ் குளோலஸ் | யூக்கலிப்ட்ஸ் எண்ணெய் | இலைகள் | காய்ச்சல் தலைவலி |
| 9 | பப்பாளி | காரிகா பப்பாயா | பாப்பைன் | இலைகள் , விதைகள் | டெங்கு காய்ச்சல் |
| 10. | நித்திய கல்யாணி | கேத்தராந்தஸ், ரோலியஸ் | அல்கலாய்டுகள் | அணைத்து பகுதிகள் | இரத்தப் புற்றுநோய் (லுயுக்கேமியா ) |
9.
(i) சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலிகளைப் பரப்பக்கூடிய சாதனமும், மீயொலிகளை உணரக்கூடிய உணர்வியும் உள்ளன. அவை படகு மற்றும் கப்பல்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பியானது மீயொலிகளை உருவாக்கி பரப்புகிறது. இவ்வலைகள் நீருக்குள் பயணித்து, கடலின் அடித்தளத்தில் உள்ள பொருட்களின் மீது (அதாவது கடல் படுகை, மீன்களின் கூட்டம்) பட்டு எதிரொலிப்படைந்து மீண்டும் வரும் பொழுது உணர்வியினால் உணரப்படுகிறது. உணர்வியானது மீயொலிகளை மின்சார சைகைகளாக மாற்றமடையச் செய்கின்றது. அவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நீரில் ஒலியின் திசைவேகம் மற்றும் பரப்பப்பட்ட ஒலிக்கும், பெறப்பட்ட எதிரொலிக்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, அதன் மூலம் நீருக்குள்ளிருந்து மீயொலி அலைகளை எதிரொலித்த, பொருளின் தொலைவைக் கணக்கிடலாம்.
(ii) பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 't' எனவும், நீரின் வேகத்தை 'v' எனவும் கொண்டால், மீயொலியானது கடந்த தொலைவு 2d=vxt ஆகும். இவ்வாறு பொருள்களின் தொலைவைக் கண்டறியும் முறை எதிரொலி நெருக்கம் (echo-ranging) எனப்படும். கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றை இடம் கண்டறிவதற்கு இந்த முறையானது பயன்படுகின்றது.
10.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
11.
ஆவியாதல்: ஆவியாதல் என்பது தண்ணீர் ஆவியாக மாறும் ஒரு வகையாகும்.இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது.பூமியின் மேற்பரப்பு பெருங்கடல்கள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
பதங்கமாதல் : பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒருபொறுக்க திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
நீராவிப்போக்கு (Transpiration) : தாவரங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை , பட்டைத்துளை முதலியன ) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகின்றன.
குளிர்வித்தல்: நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகல்வாகும்.உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாக காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது.இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும் பனிமூட்டங்களும் உருவாகின்றன.
மழைப் பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாக பொழிகின்றன.தூறல் மழை , பனி , ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
தரைமேல் வழிந்தோடும் நீர்: மழைப்பொழிவு ஏற்பட்டவுடன் பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள் , ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.
ஊடுருவல்: மழை நீரானது வழிந்தோடியவுடன் சில பகுதி நீரானது மண்ணுள் உட்புகுகின்றது. இது மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.
உள் வழிந்தோடல்: மழை நீரின் மற்றோரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது.
12.
i . மனிதனுக்கு டைபாய்டு நோயினை உண்டாக்கும் நோய்க்கிருமியின் பெயர் சால்மோனெல்லா டைப்ஃபி என்ற பாக்டீரியா ஆகும்.
ii. இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் கழிவுகள் கலக்கப்பட்ட நீர் மற்றும் உணவினால் நோயானது பரப்பப்படுகிறது.
நோய் அறிகுறிகள்: அதிக காய்ச்சல், பலவீனம், அடிவயிற்றில் வலி, தலைவலி, பசியின்மை, நெஞ்சுப்பகுதி மற்றும் மேல்வயிற்றுப் பகுதியில் அரிப்பு போன்றவை.
பாதிக்கப்படும் உறுப்புகள் : பாதிக்கப்படும் உறுப்பு சிறுகுடல் ஆகும்.
13.
ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்): உயர் வெப்பநிலையில் காரப்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றனது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
2C(s) + O2(g) ➝ 2 CO(g) + வெப்பம்
C(s) + O2(g) ➝ CO2(g) + வெப்பம்
CH4(g) + 2O2(g) ➝ CO2(g) + 2H2O(g) வெப்பம்
நீராவியுடன் வினை: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) ➝ CO(g) + H2(g)
கந்தகத்துடன் வேதி வினை: உயர்வெப்பநிலை கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.
C(s) + S(g) ➝ CS2(g)
உலகத்துடன் வேதி வினை: உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.
W(s) + C(g) ➝ WC2(s)
14.
1. பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
2. (i) மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்புவிசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
(ii) மிதப்புவிசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படுகிறது.

15.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
16.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
17.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
18.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
19.
(b)
20
20.
(a)
ஏபிஸ் மெல்லிபெரா
21.
(d)
நைட்ரேட் வெளியேற்றம்
22.
(d)
ரேஃபிஸ்
23.
(c)
பாலிபுரோப்பலீன்
24.
அ) பாலுன் மெலெழும்பும் போது காற்றின் அடர்த்தி குறைகிறது.
ஆ) பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட காற்றின் எடையைக் காட்டிலும் பலூனின் எடை குறைவாக உள்ளபோது அது மிதக்கிறது.
இ) பாய்மத்தி
25.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
26.
அநேக மருத்துவ முறைகளான ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற மருத்தவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பய்னபடுத்தப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
27.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. எனவே அவை உட்புற சூரிய மண்டத்தை அமைக்கின்றன. மேலும் அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்து உள்ளதால் அவை நிலம் சார் கோள்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில் ஒரே வடிவில் உருவானவை. மேலும் அவை எந்த அமைப்பில் உள்ளவை. இவற்றிற்கு வளையங்கள் இல்லை.
28.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

29.
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.
30.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
31.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு.
32.
ஹெர்ட்ஸ்
33.
மீட்டர் / விநாடி
34.
20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
35.
இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
36.
உள்ளீட்டு கருவி
37.
Diphtheria Pertussis Tetanus
டிப்தீரியா; பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு)
38.
Oral rehydration solutions
வாய் வழி நீர்ப்போக்கு கரைசல்
39.
பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. எனவே அந்த பயிர் நிலமானது அமிலத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே. காரத்தன்மை வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட், கால்சியம் பாஸ்பேட், யூரியா போன்ற வேதியியல் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நிலமானது நடுநிலையாக இருக்கும். பயிர்கள் நன்றாக வளர்ச்சியடையும்.
40.
1. அனோபிலஸ் கொசு - மலேரியா
2. ஏடிஸ் ஏஜிப்டி - சிக்கன்குனியா
41.
கக்குவான் இருமல், காசநோய்
42.
ஒலியின் திசைவேகம் = 340 மீ / வி
கோபுரத்தின் உயரம் = 750 மீ
கல் நகர்ந்த தொலைவு = 2 \(\times\) 750
= 1500 மீ
= 4.4 வினாடிகள்
4.4 வினாடிகளுக்குப் பின்னர் குளத்து நீரில் கல் விழுந்த ஒலியினை கேட்கலாம்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards