9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 17/09/2019
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
தொகுதி முதுகெலும்பற்றவைகளின் வழிமுறை படத்தின் (flow chart) சுருக்கமான வருணனையைத் (out line) தருக.
2.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
3.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?
4.
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.
5.
வரைபட முறையைப் ப பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.
6.
டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.
7.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
8.
ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
9.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
10.
ஒளிவிலகல் விதிகளைக் கூறு.
1.

2.
மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உணவானது தூய்மையானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மற்றும் எந்த வித கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான மற்றும் பாதுக்காப்பான உணவை கிடைக்கச் செய்வது நமது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும். இந்திய அரசாங்கம் 1954 - ஆம் ஆண்டு ' உணவு கலப்படம் தடுப்புச் சட்டம்' மற்றும் 1955 - ஆம் ஆண்டு ' உணவுக் கலப்பட தடுப்பு விதிகள்' போன்ற உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நுகர்வோருக்குத் தூய்மையான மற்றும் முழு உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த உணவுப்பாதுகாப்பு சட்டம் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு உணவு இந்த குறைந்த பட்ச தர நிர்ணயத்தை உறுதிப்படுத்தவில்லையோ அந்த உணவு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் கலப்படம் செய்த பொருள்களை உருவாக்கும் மற்றும் விற்பனையில் ஈடுபடும் விநியோயோகஸ்தர்களை தண்டனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் இத்தகைய விநியோகஸ்தர்களை தடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ISI, AGMARK (அக்மார்க்), FPO, FCI மற்றும் இதர சுகாதாரத் துறைகள் போன்றவை நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்தபட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது.
3.
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது. அவையாவன
தரவு சேகரிப்பு
தரவு சேமித்தல்
தரவு வரிசைப்படுத்தல்
தரவு செயலாக்கம்
தரவு பகுப்பாய்வு
தரவு விளக்கமும் முடிவுகளும்
4.
போரின் அணு மாதிரி:
i) ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப் பாதையில் அணுக்கருவை சுற்றி வருகின்றன. இவ்வட்டப்பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் எனப்படுகின்றன.
ii) ஒரே வட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
iii) வட்டப் பாதைகள் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N,....என பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் முதன்மை குவாண்டம் எண்கள் (n) எனப்படும்.
iv) உட்கருவிற்கு அருகாமையில் இருக்கும் K கூடு (n = 1) குறைந்த ஆற்றலை உடையது L,M,N,... ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும். உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
v) ஒவ்வொரு ஆர்பிட்டும் நிலையான அளவு ஆற்றலைப் பெற்றுள்ளது.
vi) உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டுகளின் அளவும் அதிகரிக்கும்.
vii) ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n' ஆகும். இங்கு n என்பது அந்த ஆர்பிட்டின் முதன்மை குவாண்டம் எண் ஆகும்.
viii) எலக்ட்ரான் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
ix) உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலக்ட்ரான் இடம் பெயரும் போது ஆற்றலை வெளியிடுகிறது.
5.
திசைவேகம் - காலம் வரைபடத்திலிருந்து இயக்கச் சமன்பாடுகளை தருவித்தல்.

மேற்கண்ட வரைபடம் சீராக முடுக்கப்பட்ட பொருள் ஒன்று காலத்தைப் பொறுத்து அடையும் திசைவே மாற்றத்தைக் காண்பிக்கிறது. வரைபடத்தில் D என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து 'u' என்ற திசைவேகத்துடன் இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து 't' காலத்திற்குப் பின் 'B' என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
பொருளின் தொடக்கத் திசைவேகம் (u) = OD = EA
பொருளின் இறுதித் திசைவேகம் (v) = OC = EB
காலம் (t) = OE = DA
வரைபடத்திலிருந்து = AB = DC ஆகும்.
(i) முதல் இயக்கச் சமன்பாடு :
வரையறைப்படி முடுக்கம் (a) = திசைவேக மாறுபாடு / காலம்
= (OC - OD) / OE = DC / OE
a = DC/ t
DC = at = AB
வரைபடத்திலிருந்து EB = EA + AB
v = u + at
இது முதல் இயக்க சமன்பாடு ஆகும்.
(ii) இரண்டாம் இயக்கச் சமன்பாடு:
வரைபடத்திலிருந்து 't' காலத்தில் பொருள் ஒன்று கடந்த தொலைவான நாற்கரத்தின் பரப்பளவு DOEB மூலம் கொடுக்கப்படுகிறது.
S = நாற்கரத்தின் பரப்பளவு (DOEB)
= செவ்வகத்தின் பரப்பளவு (DOEA) + முக்கோணத்தின் பரப்பளவு (DAB)
\(=(A E \times O E)+1 / 2 \times(A B \times D A)
\)
\(\mathrm{S} =\left(\mathrm{ut}+1 / 2 \mathrm{at}^{2}\right)
\)
இது இரண்டாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.
(iii) மூன்றாம் இயக்கச் சமன்பாடு :
't' காலத்தில் பொருள் கடந்த தொலைவை வரைபடத்தில் நாற்கரம் DOEB யின் பரப்பளவானது குறிக்கிறது. இங்கு DOEB என்பது சரிவகத்தையும் குறிக்கிறது.
S = சரிவகம் DOEBன் பரப்பளவு
\(=1 / 2 \times(O D+B E) \times O E\)
\(S=1 / 2 \times(u \times v) \times t\)
ஆனால் முடுக்கம்
\(a=(v-u) / t\)
அல்லது \(t=(v-u) / a\)
எனவே, \(\mathrm{s}=1 / 2 \times(\mathrm{v}+\mathrm{u}) \times(\mathrm{v}-\mathrm{u}) / \mathrm{a}\)
\(2 \mathrm{as} =\mathrm{v}^{2}-\mathrm{u}^{2} \\
\mathrm{v}^{2} =\mathrm{u}^{2}+2 \mathrm{as}\)
மூன்றாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.
6.
(1). டிண்டால் விளைவு:
(i) டிண்டால் என்பவர் ஒரு வலுவான ஒளிக்கற்றைகளை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தார். மேலும் கூழ்மத்துகள்களால் ஒளி சிதறடிக்கப்படுகிறது. இதுவே டிண்டால் விளைவு ஆகும்.
(ii) எ.கா: ஒளிக்கற்றையானது தூய நீர் வழியாக செல்லும்போது கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால் கூழ்மக் கரைசலின் வழியே செல்லும்போது ஒளிக்கற்றை கண்களுக்குபுலப்படுகிறது
.
(2). பிரௌனியன் நகர்வு:
(i) கூழ்மக் கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியில் பார்க்கும் போது கூழ்மத்துக்கள்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு எனப்படும்.
(ii) எ.கா: பிரௌனியன் இயக்கத்திற்கு காரணம் பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளுடன், பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமமற்ற முறையில் தாக்குவதே ஆகும்.

7.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
8.
வேகம் = 90 கிமீ/மணி
\(90\times \frac { 5 }{ 18 } =25m/s\)
முடுக்கம் = -0.5 ms-2
V2 = u2 + 2 as
s = \(\frac { { v }^{ 2 }{ -u }^{ 2 } }{ 2as } \frac { 0-(25)^{ 2 } }{ 2\times (-0.5) } \)
=\(\frac { -625 }{ -1 } =625\)
s = 625 மீட்டர்
9.
பொருளின் நிறை = எடை / புவியீர்ப்பு மதிப்பு
= 98 / 9.8
= 10 கி.கி.
10.
i) படுகதிர், விலகுகதிர், படு புள்ளியில் இரு ஒளி புகும் ஊடகங்களுக்கு இடையில் தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
ii) படுகோணத்தில் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு ஒரு மாறிலி.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards