9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 2 வடிவியல்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஆரம் 12 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 2\(\sqrt {11}\) செமீ தொலைவில் உள்ள நாணின் நீளம் காண்க
2.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் xo மற்றும் yo இன் மதிப்பைக் காண்க.

3.
வட்ட நாற்கரம் PQRS இல் \(\angle PSR\) =70o மற்றும் \(\angle QPR \) =40o எனில், \(\angle PRQ \) ஐக் காண்க.
4.
கீழ்க்காணும் படங்களில் xo இன் மதிப்பைக் காண்க.
(i)

(ii)

(iii)

(iv)

5.
பொது மைய வட்டங்களில், வெளி வட்டத்தின் நாண் AB ஆனது உள் வட்டத்தைப் படத்தில் உள்ளவாறு C மற்றும் D இல் சந்திக்கின்றது. எனில், AB -CD =2AC என நிறுவுக.
6.
பக்க அளவு 6 செ.மீ அளவுகளுள்ள சமபக்க முக்கோணம் வரைக. மேலும் அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் உள்வட்ட மையத்தைக் குறிக்கவும். இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?
7.
AB=6 செ.மீ, \(\angle B=110°\) மற்றும் AC= 9 செ.மீ அளவுகளுள்ள \(\triangle ABC\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க.
8.
முக்கோணம் ABC யை வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க. இங்கு A இல் செங்கோணம், AB =4 செ.மீ மற்றும் AC =3 செ.மீ
9.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O ஆனது வட்டமையம், \(\angle OQR\) =48o எனில், \(\angle P \) இன் அளவு என்ன?

10.
படத்தில் வட்ட மையம் O மற்றும் \(\angle ABC\) =30o எனில் \(\angle AO C\) ஐக் காண்க.
1.
நாண் AB மற்றும் AB இன் நடுப்புள்ளி C என்க.
ஆகை யால், OC ⏊ AB ,
OA மற்றும் OCயை இணைக்க . ஆரம் OA.
OC = 2 \(\sqrt {11}\) செ மீ மற்றும் OA = 12செ மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கோண ΔOAC இல் பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்த,
AC2 =OA2 −OC2
= 122 - ( 2 \(\sqrt {11}\) )2
= 144 - 44
= 100செ மீ
AC2 = 100செ மீ
AC = 10செ மீ
ஆகவே , நாண் AB இன் நீளம் = 2AC
= 2 × 10செ மீ
= 20செ மீ
2.
வட்ட நாற்கரத்தின் வெளிக் கோணங்களின் பண்பின்படி,
நாம் பெறுவது, yo =100o மேலும்,
xo+30o =60o ஆகையால், xo =30o
3.
வட்ட நாற்கரம் PQRS இல் \(\angle PSR\)=70o கொடுக்கப்பட்டுள்ளது.
\(\angle PSR\)+\(\angle PQ R\) =180o (காரணம் கூறுக_____ )
70o +\(\angle PQ R\) =180o
\(\angle PQ R\)=180o -70o
\(\angle PQ R\) =110o
Δ PQR இல் நாம் பெறுவது
\(\angle PQ R\)+\(\angle PRQ\)+\(\angle QPR\)=180o (காரணம் கூறுக _____ )
110o+\(\angle PRQ\) +40o=180o
\(\angle PRQ\)=180o-150o
\(\angle PQ R\)=30o

4.
(i) ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லைத் தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும் என்ற தேற்றத்தைப் பயன்படுத்துகிறோம்.
\(\angle POR=2\)|PQR
xo = 2x 50o
xo =100o

(ii) ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லைத் தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும் என்ற தேற்றத்தைப் பயன்படுத்துகிறோம்.
\(\angle MNL\)= \(\frac { 1 }{ 2 } \) பின்வளை \(\angle MOL\)
=\(\frac { 1 }{ 2 } \)x 260o
xo =130o
(iii) ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லைத் தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும் என்ற தேற்றத்தைப் பயன்படுத்துகிறோம்.
XY ஆனது வட்டத்தின் விட்டம்.
எனவே, \(\angle XYZ \) =90o
(அரை வட்டத்தில் அமையும் கோணம்)
Δ XYZ இல்
xo + 63o +90o =180o
xo =27o

(iv) ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லைத் தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும் என்ற தேற்றத்தைப் பயன்படுத்துகிறோம்.
OA =OB =OC (ஆரங்கள்)
Δ OAC இல்
\(\angle OAC \)= \(\angle OCA \) = 35o
(சமமான பக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் சமம்)
\(\angle ACB \)=\(\angle OCA \) +\(\angle OCB \)
xo =20o +35o
xo =55o

5.
கொடுக்கப்பட்டவை : வெளி வட்டத்தின் நாண் AB ஆனது உள் வட்டத்தை C மற்றும் D இல் சந்திக்கின்றது.
நிறுவ வேண்டியது : AB - CD =2AC
அமைப்பு : OM ⏊ AB வரைக.
மெய்ப்பித்தல் : இங்கு, OM ⏊ AB
மேலும், OM ⏊ CD
ஆகவே, AM = MB .... (1)
(ஏனெனில், மையத்திலிருந்து வரையப்படும் செங்குத்து நாணை இருசமக் கூறிடும்.)
CM =MD ..... (2)
இப்பொழுது, AB -CD = 2AM - 2CM
=2(AM - CM ) (1) மற்றும் (2) இலிருந்து
AB - CD = 2AC
6.

படி 1 : AB = BC =CA =6 செ.மீ அளவுகளுள்ள \(\Delta\)ABC வரைக
படி 2 : ஏதேனும் இருபக்கங்களுக்கு (AB மற்றும் BC) மையக்குத்துக்கோடுகள் வரைந்து ABன் நடுப்புள்ளி Pமற்றும் BC ன் நடுப்புள்ளி N ஐக் குறி க்க .
படி 3 : நடுக்கோடுகள் PC மற்றும் QA வரைக. அவை சந்திக்கும் புள்ளி G ஆனது \(\Delta\)ABC நடுக்கோட்டு மையம் ஆகும்.
படி 4 : எவையேனும் இரு கோணங்களுக்கு \(\angle A\) மற்றும் \(\angle B\) கோண இரு சமவெட்டிகள் வரைக. அவை சந்திக்கும் புள்ளி I ஆனது \(\Delta\) ABC ன் உள்வட்ட மையம் ஆகும்.
படி 5 : நடுக்கோட்டு மையம் G மற்றும் உள்வட்ட மையம் I ஆகியன ஒன்றே என அறிவோம் .
7.
\(\Delta\)ABC - யில்
AB = 6 செ.மீ
\(\angle\)B = 110°
AC = 9 செ.மீ
வரைமுறை:
படி 1: \(\Delta\)ABC- ஐ வரை
படி 2: ஏதேனும் இருபக்ககங்களுக்கு (AB, BC) மையக் குத்துக் கோடுகள் வரை.
படி 3: பக்கங்களின் மையப்புள்ளியை அவற்றிற்கு எதிர் முனையுடன் சேர் (CE, AD). இவை நடுக்கோடுகள் எனப்படும்.
படி 4: நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி G ஐக் குறி.
படி 5: G, \(\Delta\)ABC யின் நடுக்கோட்டு மையம் ஆகும்.
8.
AB = 4 செ.மீ
AC = 3 செ.மீ
\(\angle\)A = 90°

வரைமுறை:
படி 1: \(\Delta\)ABC ஐ வரை
படி 2: ஏதேனும் இரு பக்கங்களுக்கு (AB, AC) மையக்குத்து கோடுகள் வரைக.
படி 3: பக்கங்களின் மையப்புள்ளியையும் எதிர்முனையையும் சேர்த்து நடுக்கோடுகள் (CD, BE) வரைக.
படி 4: நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி G நடுக்கோட்டு மையம் ஆகும்.
9.
கொடுக்கப்பட்டவை \(\angle OQR\)=48o
எனவே, \(\angle ORQ\) இன் அளவும் 48o (ஏன் ?______ )
\(\angle OQR\) = 180o -(2 x 48o ) = 84o .
நாண் QR ஆனது மையத்தில் உருவாக்கும் கோணம் மீதிப் பரிதியில் உருவாகும் கோணத்தைப் போல் இருமடங்காகும்.
எனவே, \(\angle OPR\) =\(\frac { 1 }{ 2 } \times 84°=42°\)
10.
\(\angle ABC\) = 30o கொடுக்கப்பட்டுள்ளது.
\(\angle AO C\) = 2\(\angle ABC\) (ஏனெனில், வட்டத்தின் ஒரு வில்லானது மையத்தில் தாங்கும் கோணம் மீதிப் பரிதியில் தாங்கும் கோணத்தின் இருமடங்காகும்)
= 2 x 30o
= 60o

9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards