9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/09/2019
Term 3 நிகழ்தகவு
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடில்லாததாக இருக்க நிகழ்தகவு யாது?
2.
நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு \(\frac { 91 }{ 100 } \) எனில், மழை பொழியாமல் இருப்பதற்கு நிகழ்தகவு என்ன?
3.
ஓர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளை (LED lights) சோதனை செய்ததில் அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன?
4.
இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது, இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
5.
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு படச்சீட்டு (அதாவது இராசா, இராணி அல்லது மந்திரி (jack)? ) தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
6.
நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?
7.
42 நபர்கள் பணி செய்யும் ஓர் அலுவலகத்தில் 7 பணியாளர்கள் மகிழுந்து பயன்படுத்துகிறார்கள், 20 பணியாளர்கள் இரு சக்கர வண்டி பயன்படுத்துகிறார்கள். மீதி 15 பணியாளர்கள் மிதிவண்டி பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவைக் கண்டறிக.
8.
ஒரு பகடை உருட்டப்படும்போது, 4ஐ விடப் பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
9.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
10.
''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக இருக்க நிகழ்தகவு.
\(\frac { 1 }{ 10 } \)
\(\frac { 2 }{ 10 } \)
\(\frac { 3 }{ 10 } \)
\(\frac { 4 }{ 10 } \)
11.
ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
சிறியதாக
சீரானதாக
ஆறு முகம் கொண்டதாக
வட்டமாக
12.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு _____ என அழைக்கப்படுகிறது.
நிகழ்ச்சி
விளைவு
கூறுபுள்ளி
மேற்கண்ட எதுவுமில்லை
13.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முயற்சி
எளிய நிகழ்ச்சி
கூட்டு நிகழ்ச்சி
விளைவு
14.
பின்வருவனவற்றுள் எது நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?
0
0.5
1
-1
15.
A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A' என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P (A)′ இன் மதிப்பு ____.
1
0
1 - A
1 - P(A)
16.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
பட்டறி நிகழ்தகவு
தொண்மை நிகழ்தகவு
(1) மற்றும் (2) இரண்டும்
(1)வும் அல்ல (2) வும் அல்ல
17.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி_______.
-1 மற்றும் +1
0 மற்றும் 1
0 மற்றும் n
0 மற்றும் \(\infty \)
18.
0-க்கும் மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமவாய்ப்பு மாறி
முயற்சி
எளிய நிகழ்ச்சி
நிகழ்தகவு
1.
ஒரு நிறுவனம் உற்பத்தி செய்த மொத்த மடிக்கணிகள் n(S)=10000
குறைபாடு உடைய மடிக்கணிகளின் எண்ணிக்கை n(A)= 25
குறைபாடு உடைய மடிக்கணிகளின் நிகழ்தகவு = \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 25 }{ 10000 } =\frac { 1 }{ 400 } \\ \)
குறைபாடு இல்லாதவை = 10000 - 25
n(B) = 9975
குறைபாடில்லாத மடிக்கணினி தேர்ந்தெடுக்க நிகழ்தகவு
2.
E என்பது நாளை மழை பொழிவிற்கான நிகழ்ச்சி எனில், E′ என்பது நாளை மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்ச்சி ஆகும்.
P (E) = \(\frac { 91 }{ 100 } \)
P(E) = 0.91
P(E) = 1 - 0.91
= 0.09
எனவே, மழை பொழியாமல் இருக்க நிகழ்தகவு 0.09 ஆகும்
3.
LED விளக்குகளின் மொத்த எண்ணிக்கை n(S) =7000
குறைபாடுடைய விலங்குகளின் எண்ணிக்கை n(A) = 25
S = மொத்த விளக்குகளின் எண்ணிக்கை
A = பழுதமுடைய விளக்குகள்
ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 25 }{ 7000 } =\frac { 1 }{ 280 } \\ \)
4.
இரண்டு சீரான நாணயங்களை சுண்டும் பொழுது கிடைக்கும் கூறுவெளி, S={HH,HT,TH,TT}
n(S)=4
இரு தலைகள் கிடைக்கும் கணம் A ={HH}
P(A)=1
இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 1 }{ 4 } \)
5.
சீட்டுக்கட்டிலுள்ள சீட்டுகளின் எண்ணிக்கை n(S) =52
படச்சீட்டு இராசாவாக இருக்கும் நிகழ்ச்சி Kஎன்க n(K)=4
\(p(K)=\frac { n(K) }{ n(S) } =\frac { 4 }{ 52 } =\frac { 1 }{ 13 } \)
படச்சீட்டு இராணியாக இருக்கும் நிகழ்ச்சி Q என்க
n(Q)=4
\(p(Q)=\frac { n(Q) }{ n(S) } =\frac { 4 }{ 52 } =\frac { 1 }{ 13 } \)
படச்சீட்டு மந்திரியாக இருக்கும் நிகழ்ச்சி J என்க
n(J)=4
\(p(J)=\frac { n(J) }{ n(S) } =\frac { 4 }{ 52 } =\frac { 1 }{ 13 } \)
எடுக்கப்படும் சீட்டு இராசா அல்லது இராணி அல்லது மந்திரியாக இருக்கும் நிகழ்தகவு
\(P(K\bigcup Q\bigcup J)=\frac { 1 }{ 13 } +\frac { 1 }{ 13 } +\frac { 1 }{ 13 } =\frac { 3 }{ 13 } \)
6.
வாரத்தில் உள்ள நாட்கள் (S) = {ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி}
n(S)=7
வாரத்தில் உள்ள நாட்கள் = 7
பிறந்த நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும் நிகழ்ச்சி
A=(ஞாயிறு}
n(A)=1
ஞாயிற்றுக்கிழமை கிடைப்பதற்கான நிகழ்தகவு = \(P(A)=\frac{n(A )}{n(S)}=\frac { 1 }{ 7 } \)
7.
மொத்த வேலையாட்கள் = 42
ஒப்பீட்டு நிகழ்வெண்:
மகிழுந்து பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 7 }{ 42 } =\frac { 1 }{ 6 } \)
இரு சக்கர வண்டி பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 20 }{ 42 } =\frac { 10 }{ 21 } \)
மிதிவண்டி பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 15 }{ 42 } =\frac { 5 }{ 14 } \)
இந்த எடுத்துக்காட்டில் நிகழ்தகவுகளின் மொத்தக் கூடுதல் 1ஐ விட அதிகமாகவில்லை என்பதைக் கவனிக்கவும்.\(\frac {1}{6}+\frac {10}{21}+ \frac {5}{14} = \frac {7}{42}+\frac {20}{42}+\frac {15}{42}= 1\)
8.
விளைவுகளானது , S = { 1, 2 , 3 , 4 , 5 , 6}
E என்பது 4 ஐ விடப் பெரிய எண் கிடைக்கும் நிகழச்சி என்க
E = { 5, 6}

P(E) = \(\frac { n\left( E \right) }{ n\left( S \right) } \) = \(\frac { 2 }{ 6 } \) = 0.333...
9.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
10.
(c)
\(\frac { 3 }{ 10 } \)
11.
பகடை சீரானதாக இருக்கும் பொழுது விளைவுகள் சமவாய்ப்பு உடையனவாக இருக்கின்றன.
12.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு நிகழ்ச்சி ஆகும்.(வரையறை)
13.
சமவாய்ப்பு சோதனையின் முடிவு, விளைவு என அழைக்கப்படுகிறது. (வரையறை)
14.
நிகழ்தகவின் மதிப்பு இடைவெளி 0 மற்றும் 1
15.
P (A) + P (A)′ = 1
16.
(a)
பட்டறி நிகழ்தகவு
17.
(b)
0 மற்றும் 1
18.
(d)
நிகழ்தகவு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards