9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 06/02/2020
9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் IV - 2019 - 2020 ( 9th Science Annual Exam Model Question Paper IV - 2019 - 2020 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
2.
சூரிய மண்டலம் என்றால் என்ன ?
3.
ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?
4.
வேதிச்சிகிச்சை என்றால் என்ன?
5.
தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?
6.
வாயுக்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றிருக்கவில்லை?
7.
உள்ளீ ட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
8.
நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?
9.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
10.
தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக
11.
ஓர் அணு 11 புரோட்டான்கள், 11 எலக்ட்ரான்கள் மற்றும் 12 நியூட்ரான்களையும் பெற்றுள்ளது. அதன் அணு எண் யாது? அத்தனிமத்தின் பெயரினை எழுதுக?
12.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
13.
கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?
நீர் மறுசுழற்சி
ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல்
மேல்நிலை நீர்த்தேக்கத் தொடிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.
தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.
14.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
தும்மல்
இருமல்
கடத்திகள்
துளிர்தொற்று முறை
15.
நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு ____.
குறையும்
அதிகரிக்கும்
அதே அளவில் இருக்கும்
குறையும் அல்லது அதிகரிக்கும்
16.
____________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை
சகப்பிணைப்பு
ஈதல் சகப்பிணைப்பு
அயனிப் பிணைப்பு
17.
இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் ____________
220 Hz
50 Hz
5 Hz
100 Hz
18.
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
வெப்பக்கதிர்வீச்சு
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
b மற்றும் c
19.
நியூட்ரான்களின் மின்சுமை _________.
நேர்
எதிர்
சுழி
20.
ஒரு வானியல் அலகு என்பது
1.496 x 1011 மீ
9.46 x 1015 மீ
1.496 x 10-11 மீ
21.
உணவு கெட்டுபோவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
மெழுகுப் பூச்சு
சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
உணவின் ஈரத்தன்மை
செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருள்கள்
22.
இலையில் காணப்படும் பச்சையம் ____________ க்கு தேவைப்படும்
ஒளிச்சேர்க்கை
நீராவிப்போக்கு
சார்பசைவு
திசைசாரா தூண்டல் அசைவு
23.
மீசோகிளியா காணப்படுவது
துளையுடலிகள்
குழியுடலிகள்
வளைதசையுடலிகள்
கணுக்காலிகள்
24.
குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்
5 செ.மீ
10 செ.மீ
2.5 செ.மீ
25.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
26.
வளிமண்டல அழுத்தம் 98.6 கிலோ பாஸ்கல் அளவு இருக்கும்பொழுது பாதரச காற்றழுத்தமானியின் பாதரசத்தின் உயரம் எவ்வளவு இருக்கும்?
27.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார் அவ்வாறு அவர் சொல்வதற்குள் காரணம் என்ன?
28.
90oC ல் இருக்கும் 100 கி நீரையும் 20oC ல் இருக்கும் 600 கி நீரையும் கலக்கும் போது கிடைக்கும் கலவையின் இறுதி வெப்பநிலை எவ்வளவு?
29.
எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.
30.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிளாஸ்மிடு
31.
இயக்கத்தின் வகைகள் யாவை?
32.
சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
33.
பின்வரும் மின் தடைய அமைப்பில், புள்ளிகள் a மற்றும் b ஆகியவற்றுக்கிடையே பயனுறு மின் தடை எவ்வளவு?

34.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
35.
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
36.
டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?
37.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
38.
10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.
1.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
2.
சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்ததே சூரிய மண்டலமாகும். அதில் கோள்கள், வால் விண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும்.
3.
ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் போன்றவற்றில் பெரும் பங்காற்றி வருகிறது. ஐ.யூ.சி.என், இவ்வுலகின் இயற்கை நிலையை அறிவதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுத்து இயற்கையின் பாதுகாவலனாக விளங்குவதற்கும் உலகளாவிய தலைமை (அதிகார) அமைப்பாக உள்ளது.
ஐ.யூ.சி.என் நோக்கம்:
“இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம்" என்பதே இதன் நோக்கமாகும்.
ஐ.யூ.சி.என் இலக்கு:
இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், எந்தவொரு இயற்கை வளத்தினை பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும், சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் உள்ளதா என்பதை வலியுறுத்துவதற்கும் ஒவ்வொரு சமுதாயத்தினையும் ஊக்கப்படுத்தி அவற்றிற்கு உதவி செய்வதே இதன் இலக்காகும்.
4.
மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச்சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதிச்சிகிச்சை என்கிறோம்.
5.
தெவிட்டிய சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் அல்லது கார்பன், ஹைட்ரஜன் ஒற்றைப் பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
தெவிட்டாத சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
6.
i) வாயுக்களில் உள்ள துகள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமின்றி இருப்பதால் அவைகளுக்கிடையே அதிக இடைவெளி உள்ளது.
ii) ஆகவே அவைகள் ஒன்றுக்கொன்று நெருக்கப்படலாம் அல்லது எளிதில் அழுத்தப்படலாம். எனவே நிலையான கனஅளவைப் பெற்றிருக்கவில்லை.
7.
| உள்ளீடகம் | வெளியீடகம் |
| இது தரவுகளை கட்டளைகளையும் உள்ளீடு செய்கிறது. |
இது மையச் செயலகத்திலிருந்து ஈரடிமானக் குறிப்புகளை (Binary signals) பெறுகிறது. இக்குறிகளை பயனருக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. |
| விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான் (Barcode reader), ஒலிவாங்கி (Microphone - Mic.,), இணையப் படைக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light pen) போன்றவைதான் உள்ளீட்டுக்கருவிகள். |
கணினித்திரை (Monitor), அச்சுப்பொறி (Printer), ஒலிபெருக்கி (Speaker), வரைவி (Plotter) போன்றவை வெளியீட்டகத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன. |
8.
தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு 'தொடர்கள்' என அழைக்கப்படுகிறது. மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி 'தொகுதிகள்'. தனிம வரிசை அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன.
9.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இது நவீன ஆவர்த்தன விதி ஆகும்.
10.
| வ.எண் | தட்டைப்புழுக்கள் | உருளைப்புழுக்கள் |
| 1. | இவை பிளாட்டிஹெல்மின்தஸ் (plathyhelminthes) தொகுதியைச் சார்ந்தவை | தொகுதி நிமட்டோடா (Nematoda)தொகுதியைச் சார்ந்தது. |
| 2. | உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது | உணவுக்குழாய் நீண்ட குழாய்அமைப்புடையது |
| 3. | கழிவு நீக்கம் சுடர் செல்களால் நடைபெறுகிறது. |
உடலில் மேல் புறத்தில் கியூட்டிக்கிள் என்னும் மெல்லிய உறை உள்ளது |
| 4. | இரு பாலின உயிரினம் | ஒரு பால் உயிரினம் |
11.
புரோட்டான்களின் எண்ணிக்கை= எலக்ட்ரான்களின் எண்ணிக்கை=11
ஃ அணு எண் = 11
தனிமத்தின் பெயர் சோடியம்
12.
| வ.எண் | நிறை | எடை |
| 1. | இது அடிப்படை அளவு. | இது வழி அளவு. |
| 2. | இது ஸ்கேலார் அளவாகும். | இது வெக்டர் அளவாகும். |
| 3. | பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும். | பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும். |
| 4. | இடத்திற்கு இடம் மாறாது. | இடத்திற்கு இடம் மாறும். |
| 5. | இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன். |
13.
(a)
நீர் மறுசுழற்சி
14.
(c)
கடத்திகள்
15.
(b)
அதிகரிக்கும்
16.
(c)
அயனிப் பிணைப்பு
17.
(b)
50 Hz
18.
(b)
வெப்பக்கடத்தல்
19.
(c)
சுழி
20.
(a)
1.496 x 1011 மீ
21.
(c)
உணவின் ஈரத்தன்மை
22.
(a)
ஒளிச்சேர்க்கை
23.
(b)
குழியுடலிகள்
24.
(b)
10 செ.மீ
25.
நீரானது நமது உடலின் மிக முக்கிய உட்பொருளாகும். நமது உடலில் 65% அளவிற்கு நீர் உள்ளது. நமது உடலிலுள்ள அனைத்து வேதிவினை மாற்றங்களுக்கும் நீர்த் தேவைப்படுகிறது. அதிகளவு நீர் உட்கொள்ளும்போது நமது உடலில் நீர் பற்றக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அதிகப்படியான நீர் . சிறுநீராக வெளியேறிவிடும். நாம் தேவைக்கேற்ப நீர் உட்கொள்ளவில்லை எனில் சோர்வு, சிறுநீரகத்தில் கல் போன்றவை உருவாகும். எனவே உணவு மருத்துவர் அதிக நீர் குடிக்க வலியுறுத்துகிறார்.
26.
வளிமண்டல அழுத்தம் (P) = 98.6 கிலோ பாஸ்கல்
= 0.986 \(\times\) 105 பாஸ்கல்
பாதரசத்தின் அடர்த்தி (p) = 1.36 \(\times\) 104 கி.கி மீ-3
= 13600 கி.கி மீ-3
புவியீர்ப்பு முடுக்கம் (g) = 9.8 மீ/வி
பாதரசத்தின் உயரம் (h) = ?
P = hpg
\( 0.986 \times 10^{5} =h \times 13600 \times 9.8 \\ h =\frac{0.986 \times 10^{5}}{13600 \times 9.8} \\ h =\frac{98600}{133280} \)
= 0.740 மீ
= 740 மி.மீ
27.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் இரும்புச் சத்து குறைவதால் இரத்த சோகை உண்டாகிறது. இதை ஈடு செய்யவே மருத்துவர் அந்தச் சிறுமியிடம் இரும்புச் சத்து மிகுந்த இலைவகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம்பழத்தை அதிக அளவில் உணவின் சேர்த்துக் கொள்ளும்படிக் கூறுகிறார்.
28.
முதல் நீரின் நிறை (m) = 100 கிராம்
முதல் நீரின் வெப்பநிலை (t) = 90°C
இரண்டாம் நீரின் வெப்ப நிறை (m2) = 600 கி
இரண்டாம் நீரின் வெப்பநிலை (t2) = 20°C
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் (C) = 4.18 J/gºC.
கலவையின் இறுதி வெப்பநிலை (t) = ?
\(=\frac{(100 \times 90+600 \times 20)}{100+600} \\
=\frac{9000+12000}{700} \\
t =\frac{9000+12000}{700}=30^{\circ} \mathrm{C}\)
29.
(i) அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz):
(ii) அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது அதன் அதிர்வெண் எனப்படும்.
30.
பாக்டீரியா செல்லில் காணப்படும் சிறிய வட்டமான குரோமோஸோமல் டி.என்.ஏ பிளாஸ்மிடு எனப்படுகிறது. இது சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
31.
இயக்கத்தின் வகைகள் - நேரான இயக்கம், வட்ட இயக்கம், அலைவு இயக்கம், சீரான இயக்கம், ஒழுங்கற்ற இயக்கம் ஆகும்.
32.
நபரின் உயரத்திற்குப் பாதி இருக்க வேண்டும்.
33.
தொடர் இணைப்பில் மொத்த மின்தடை R1 & R2
R1 = R1 + R2 = 2Rᘯ
பக்க இணைப்பின் மொத்த மின் தடை R3 & R4
\(\frac {1}{{R}^{11}}\) = \(\frac {1}{{R}^{3}} + \frac {1}{{R}^{4}} = \frac {1}{R} + \frac {1}{R} = \frac {2}{R}\)
R11 = \(\frac {R}{2}\)
மொத்தத் தொடரின் மின்தடை ΔT
\(\frac {1}{{R}_{p}}\) =\(\frac {1}{{R}^{1}} + \frac {1}{{R}^{11}} = \frac {1}{2R} + \frac {2}{R} = \frac {1 + 4}{2R} = \frac {5}{2R}\)
Rp = \(\frac {2}{5}\) Rᘯ
34.
அ) இனப் பெருக்க குளம் :ஆரோக்கியமான , இனப்பெருக்கத்திற்கேற்ற , முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்களானவை சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றன. பெண் மீன்களால் வெளியிடப்பட்ட முட்டைகளானவை விந்துகள் மூலம் கருவுறுதல் அடைகின்றன.இந்த கருவுற்ற முட்டைகள் நீரின் மேற்பகுதியில் நுரைபோன்று கூட்டமாக மிதந்து காணப்படுகின்றன.
ஆ)குஞ்சு பொரிக்கும் குழிகள் : இனப் பெருக்கக் குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன. பொரிப்பங்கள் மற்றும் பொறுப்பு வலைத் தொட்டிகள் ஆகியவை இரண்டு வகையான மீன் பொரிக்கும் குழிகளாகும்.
இ) நாற்றங்கால் குளங்கள் : குஞ்சு பொரிக்கும் குழிகளில் பொரிக்கப்பட்ட இளம் மீன் குஞ்சுகளானவை 2முதல் 7 நாட்களுக்கு பிறகு , வளர்க்கும் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளானவை 60நாட்கள் வரை நாற்றங்கால் குளத்தில் சரியான அளவு உணவு கொடுக்கப்பட்டு 2 - 25 செ,மீ அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.
ஈ) வளர்க்கும் குளங்கள் : இளம் மீன்களை வளர்ப்பதற்கும் , வளர்க்கும் குளத்திற்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் வரை அதாவது 10 முதல் 15 செ.மீ நீளமுடைய மீனாக வளரும் வரை வளர்க்கப்படுகின்றன.இங்கு குளம் மீன்களானவை இளரிகளாக மாற்றமடைகின்றன.
இருப்புக் குளங்கள் : இவை வளர்ப்புகளம் அல்லது உற்பத்திக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன் இக்குளமானது கரிம மற்றும் கனிம உரங்கள் இடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
35.
வடிவங்களை அடிப்படையாக கொண்டு பாக்டீரியங்கள் கீழ்க்காணும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. கோள வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் 'கோக்கைகள்' என அழைக்கப்படுகின்றன. (ஒரு செல் மட்டும் இருந்தால் கோக்கஸ் எனப்படும்).
2. கோல் (குச்சி) வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் 'பேசில்லைகள்' என அழைக்கப்படுகின்றன. (ஒரு செல் மட்டும் இருந்தால் 'பேசில்லஸ்' எனப்படும்).
3. திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் 'ஸ்பைரில்ல' என அழைக்கப்படுகின்றன. (ஒரு செல் மட்டும் இருந்தால் 'ஸ்பைரில்லம்' எனப்படும்).
36.
இது ஒரு வகை கால்வானிக் மின்கலம் ஆகும். இதில் துத்தநாக உலோகம் நேர்மின் முனையாகவும் தாமிர உலோகம் எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன. நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசல் நேர் மின்பகுளியாகவும், நீர்த்த தாமிர சல்பேட் கரைசல் எதிர் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு (KCI) கரைசல் உப்புப் பாலமாக செயல்படுகிறது. டேனியல் மின்கலத்தின் அமைப்பை கீழ்காணும் படம் விளக்குகிறது.

நேர்மின்முனையில் துத்தநாகம் ஆக்ஸிஜனேற்றமடைந்து அதன் எலக்ட்ரான்களை இழக்கின்றது.
Zn(s) ⟶ Zn2+ + 2e- (ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின் முனையில், மின்பகுளியில் உள்ள தாமிர அயனிகளானவை எலக்ட்ரானை எதிர்மின்வாயின் மேற்பரப்பிலிருந்து பெற்று தாமிரமாக ஒடுக்கமடைகின்றன.
Cu2+ ⟶ 2e- + Cu(s) (ஒடுக்கம்)
நிகர வினை: Zn(s) ⟶ Cu2+ ⟶ Zn2 + Cu(s)
டேனியல் மின்கலத்தின் திறன் 1.1V ஆகும்.
37.
சைலம் பல்வேறு வகையான உறுப்புகளால் ஆனது. அவை: 1) சைலம் டிராக்கீடுகள் 2) சைலம் நார்கள் 3) சைலக் குழாய்கள் 4) சைலம் பாரன்கைமா ஆகும்.
i) சைலம் டிரக்கீடுகள்: டிரக்கீடுகள் நீண்ட குழாய் போன்றவை. இவை தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும். செல்களின் முனைப்பகுதி மழுங்கிய, சிறுத்த, அல்லது உளி போன்ற அமைப்புடையது. செல்கள் புரோட்டபிளாசம் அற்றது. எந்தப் பொருளும் இல்லாத பெரிய உட்குழல் பகுதியை டிரக்கீடுகள் கொண்டுள்ளன. இவற்றின் பணி நீரைக் கடத்துதல் மற்றும் தாவரங்களுக்கு வலிமையை அளிப்பதாகும்.
ii) சைலம் நார்கள்: இந்த செல்கள் நீண்டவை; லிக்னின் பெற்றவை; மற்றும் செல்களின் இருமுனைகளும் கூரானவை. நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை வேரிலிருந்து இலைகளுக்கு கடத்துவது மற்றும் தாவரங்களுக்கு வலிமையை அளிப்பது இதன் பணியாகும்.
iii) சைலக்குழாய்கள்: சைலக்குழாய்கள் நீண்ட உருளை மற்றும் குழாய் வடிவமுடையவை. செல்சுவர் லிக்னின் பெற்ற அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது. புரோட்டாபிளாசம் இல்லாததால் இவைகள் இறந்த செல்கள் ஆகும். செல்கள் நீள் அச்சுக்கு இணையாக அமைந்துள்ளன. துளைகளுடைய குறுக்குச் சுவரினால் இவை பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முழு அமைப்பும் பார்ப்பதற்கு நீர்க் குழாய் போன்று தோன்றும். இவைகளின் முக்கியப் பணி நீர், கனிமங்களைக் கடத்துதல் மற்றும் தாவரங்களுக்கு வலிமையை அளித்தல் ஆகும்.
iv) சைலம் பாரன்கைமா: செல்கள் மெல்லிய சுவரை உடையவை; மற்றும் உயிருள்ளவை. இதன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேமித்தல் ஆகும்.
38.

R1 = 5 Ω, R2 = 5Ω
\(\frac {1}{{R}_{p}} = \frac {1}{{R}_{1}} + \frac {1}{{R}_{2}} = \frac {1}{5} + \frac {1}{5} = \frac {2}{5}\)
Rp = \(\frac {5}{2}\) = 2.5 Ω
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards