9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 08/11/2019
கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
வைரம்
ஃபுல்லரின்
கிராஃபைட்
வாயு கார்பன்
2.
பென்சில் முனையில் இருப்பது எது?
கிராஃபைட்
வைரம்
காரியம்
கரி
3.
கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன ?
அது நல்ல மின்கடத்தி
அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
அதன் அதிக அடர்த்தி
அது வலிமையானது மற்றும் மிருதுவானது
4.
கீழ்க்கண்டவற்றுள் எந்த நெகிழி தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது?
நெகிழித்தாள்
நெகிழித் தேநீர் குவளை
நெகிழித் தண்ணீர் பைகள்
மேற்கண்ட அனைத்தும்
5.
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
பாலிஸ்டைரீன்
பி.வி.சி
பாலிபுரோப்பலீன்
எல்.டி.பி.இ
6.
கீழ்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?
CO2
C2H4
HCl
O2
7.
வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,
அதன் கடினத் தன்மை
அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
அதன் சீரான வடிவம்
அது நீரில் கரைவதில்லை
8.
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
புறவேற்றுமை வடிவம் மாற்றியம்
நான்கு இணைதிறன்
சங்கிலி தொடராக்கம்
இவை அனைத்தும்
9.
ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள்.
நான்முகி மற்றும் ஐங்கரம்
ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்
அறுங்கோணம் மற்றும் ஏழுகோணம்
ஏழுகோணம் மற்றும் எண்முகி
10.
கிராஃபைட் கார்பனிலுள்ள தனித்த எலக்ட்ரோன்களின் எண்ணிக்கை
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
11.
நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை ________
12.
பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் அதன் _______
13.
ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் _______
14.
பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் ________ கார்பன் அணுக்களைக் கொண்டது.
15.
______ என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டர் ஆவார்.
16.
எரித்தல்
17.
தெர்மாக்கோல்
18.
C60
19.
ஆண்ட்ரே ஜெம்
20.
அல்கைன்
21.
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?
22.
நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
23.
கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது?
24.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
25.
தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?
26.
வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்
27.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
28.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
29.
குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?
1.
(c)
கிராஃபைட்
2.
(a)
கிராஃபைட்
3.
(b)
அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
4.
(d)
மேற்கண்ட அனைத்தும்
5.
(c)
பாலிபுரோப்பலீன்
6.
(c)
HCl
7.
(b)
அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
8.
(c)
சங்கிலி தொடராக்கம்
9.
(b)
ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்
10.
(a)
ஒன்று
11.
( )
ஏழு
12.
( )
சங்கிலி தொடராக்கம்
13.
( )
மாற்றியங்கள்
14.
( )
60
15.
( )
ஆண்டனி லவாய்சியர்
16.
ஆக்ஸிஜனேற்றம்
17.
பாலிஸ்டைரின்
18.
பளபளப்பான பந்து
19.
கிராஃபீன்
20.
முப்பிணைப்பு
21.
குறியீடு # 3, குறியீடு # 6, குறியீடு # 7.
22.
ஃபிரடெரிக் ஹோலர் நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
23.
கார்பன் நான்கு இணைத்திறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
24.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு.
25.
தெவிட்டிய சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் அல்லது கார்பன், ஹைட்ரஜன் ஒற்றைப் பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
தெவிட்டாத சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
26.
| வைரம் | கிராபைட் |
| ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது. |
ஒவ்வொரு கார்பனும் மூன்று |
| கடினமானது, அடர்த்தியானது ஒளிபுகும் தன்மை உடையது. |
மிருதுவானது, தொடுவதற்கு வழவழப்பானது ஒளி புகாத்தன்மை உடையது. |
|
நான்முகி அலகுகள் முப்பரிமாண |
அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன. |
| இது வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது. |
இது வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். |
27.
ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்): உயர் வெப்பநிலையில் காரப்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றனது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
2C(s) + O2(g) ➝ 2 CO(g) + வெப்பம்
C(s) + O2(g) ➝ CO2(g) + வெப்பம்
CH4(g) + 2O2(g) ➝ CO2(g) + 2H2O(g) வெப்பம்
நீராவியுடன் வினை: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) ➝ CO(g) + H2(g)
கந்தகத்துடன் வேதி வினை: உயர்வெப்பநிலை கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.
C(s) + S(g) ➝ CS2(g)
உலகத்துடன் வேதி வினை: உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.
W(s) + C(g) ➝ WC2(s)
28.
சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும். சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பனாகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளை சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.


29.
உலகில் உள்ள அனைத்து பொருள்களும் எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. குறைந்த காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிக்கப்படும்போது கார்பன் எரிபொருளானது முழுவதுமாக எரியாததால் அந்த அறையில் கார்பன் மோனாக்ஸைடு உருவாகின்றது. இந்த கார்பன் மோனாக்ஸைடு நச்சுத்தன்மை வாய்ந்தது. இது நம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அங்கு இருப்பது ஆபத்தானது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards