9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 3 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
2.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
3.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
4.
தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?
5.
வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்
6.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
7.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
8.
யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?
9.
டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?
10.
கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?
1.
i) பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள் குறுகியகாலம் மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ii) இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன.
iii) இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டுபணணுகின்றன. எனவே இவை ஆபத்தானவை.
2.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு.
3.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
4.
தெவிட்டிய சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் அல்லது கார்பன், ஹைட்ரஜன் ஒற்றைப் பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
தெவிட்டாத சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
5.
| வைரம் | கிராபைட் |
| ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது. |
ஒவ்வொரு கார்பனும் மூன்று |
| கடினமானது, அடர்த்தியானது ஒளிபுகும் தன்மை உடையது. |
மிருதுவானது, தொடுவதற்கு வழவழப்பானது ஒளி புகாத்தன்மை உடையது. |
|
நான்முகி அலகுகள் முப்பரிமாண |
அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன. |
| இது வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது. |
இது வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். |
6.
ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்): உயர் வெப்பநிலையில் காரப்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றனது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
2C(s) + O2(g) ➝ 2 CO(g) + வெப்பம்
C(s) + O2(g) ➝ CO2(g) + வெப்பம்
CH4(g) + 2O2(g) ➝ CO2(g) + 2H2O(g) வெப்பம்
நீராவியுடன் வினை: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) ➝ CO(g) + H2(g)
கந்தகத்துடன் வேதி வினை: உயர்வெப்பநிலை கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.
C(s) + S(g) ➝ CS2(g)
உலகத்துடன் வேதி வினை: உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.
W(s) + C(g) ➝ WC2(s)
7.
சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும். சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பனாகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளை சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.


8.
யோகா நெகிழிகுறியீடு 7 எனப் போடப்பட்டுள்ள நெகிழிப் புட்டியை வாங்க வேண்டும். ஏனெனில் இது பாதுகாப்பான நெகிழி ஆகும். எனவே நெகிழி குறியீடு 7 எனப் போடப்பட்டுள்ள நெகிழிப் புட்டியை வாங்க வேண்டும்.
9.
PVC நெகிழியை எரிப்பதன் மூலம் டைஆக்சின்கள் உருவாகிறது. இது பாலிவினைல் குளோரைடு நெகிழியுடன் தொடர்புடையது. இந்த பாலிவினைல் குளோரைடுடன் காட்மியம் மற்றும் காரீயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. மேலும் தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோன்களைப் பாதிக்கின்றன. மேலும் இவற்றை எரிப்பதால் ஆக்சின்கள் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்களை வெளியிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
10.
i) நாம் இருக்கும் இந்த உயிர்க்கோளத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனின் சேர்மங்களால் உருவானவை.
ii) நான் பயன்படுத்தும் அனைத்து வகையான படிக எரிபொருளும் ஹைட்ரோகார்பன் என்ற கார்பனின் சேர்மங்களால் உருவாக்கப்பட்டவை.
iii) உயிர்புவி வேதிச்சுழற்சியில் உயிர்க்கோளம், புவிக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலத்துடன் கார்பனானது பரிமாறப்படுகிறது.
iv) நைட்ரஜன் மற்றும் நீர் சுழற்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அனைத்து நிலைகளிலும் கார்பன் ஈடுபடுவதும் மேலும் இதில் நான்கு கட்டுறா எலக்ட்ரான்கள் இருப்பதாலும் இவை இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards