9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்காண்பவனவற்றை வரையறு
நோய்க்கிருமி
2.
நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
3.
மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்?
4.
டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?
5.
புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?
6.
மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
7.
பின்வரும் மின் தடைய அமைப்பில், புள்ளிகள் a மற்றும் b ஆகியவற்றுக்கிடையே பயனுறு மின் தடை எவ்வளவு?

8.
உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது.எப்படி?
9.
வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?
10.
i. மாய முக்கியக் குவியம்
ii. மெய் முக்கியக் குவியம்
இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?
11.
குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியதொலைவு கொண்டது?
12.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயனபடுத்தப்படுவது ஏன்?
13.
நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
14.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

15.
அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்
16.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
17.
இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
18.
கடல் நீரை உப்பு நீக்குதல் என்றால் என்ன
19.
டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
20.
SI அலகு-வரையறு.
21.
குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?
22.
அடர்குறை ஊடகத்திலிருந்து(ஊடகம் 1) அடர்மிகு ஊடகத்திற்கு(ஊடகம் 2) ஒளி செல்கிறது.படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45o ,30o எனில் முதல் ஊடகத்தைப் பொறுத்து 2-வது ஊடகத்தின் ஒளிவிலகல் கணக்கிடுக.
23.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
24.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
25.
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்
ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
1.
நோயினை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் நோய்க்கிருமி எனப்படும்.
2.
ஃபிரடெரிக் ஹோலர் நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
3.
(i) துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தி மையவிலக்கு விசையை உபயோகிக்கிறது.
(ii) பாலிலிருந்து பாலாடையை பிரிக்கும் கருவிகளில் பயன்படுகிறது.
(iii) இரத்தப் பரிசோதனை ஆய்வங்களில் பயன்படுகிறது.
4.
உண்மைக் கரைசலில் உள்ள துகள்கள் ஒளி ஆற்றலை உறிஞ்சி சுயமாக ஒளிர்வதற்கு ஏற்புடையவையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை மிகச் சிறியதாக உள்ளன. எனவே உண்மைக் கரைசலில் டிண்டால் விளைவு ஏற்படுவது இல்லை.
5.
W = mg
= 50 \(\times\) 9.8
= 490 நியூட்டன்
6.
(i) NS - நிலைக்காந்தம்
(ii) ABCD - கம்பிச்சுருள்
(iii) B1, B2 - கார்பன் தூரிகைகள்
(iv) S1, S2 - பிளவு வளையம்
(v) திசைமாற்றி
7.
தொடர் இணைப்பில் மொத்த மின்தடை R1 & R2
R1 = R1 + R2 = 2Rᘯ
பக்க இணைப்பின் மொத்த மின் தடை R3 & R4
\(\frac {1}{{R}^{11}}\) = \(\frac {1}{{R}^{3}} + \frac {1}{{R}^{4}} = \frac {1}{R} + \frac {1}{R} = \frac {2}{R}\)
R11 = \(\frac {R}{2}\)
மொத்தத் தொடரின் மின்தடை ΔT
\(\frac {1}{{R}_{p}}\) =\(\frac {1}{{R}^{1}} + \frac {1}{{R}^{11}} = \frac {1}{2R} + \frac {2}{R} = \frac {1 + 4}{2R} = \frac {5}{2R}\)
Rp = \(\frac {2}{5}\) Rᘯ
8.
பறவைகள் உயர்திறன் மின்னழுத்த கம்பிகளில் ஒரு கம்பியில் தான் இருகால்களில் அமர்ந்திருக்கும். இந்த ஒரு கம்பியில் மின்சுற்று, முழுமை பெறவில்லை. எனவே பறவை மின் அதிர்ச்சிக்கு உட்படாது, மேலும் பறவையின் செல்கள் மற்றும் திசுக்கள் எலக்ட்ரான்கள் செல்ல எளிமையாக இருப்பதினால் பறவையானது பாதுகாப்பாக உள்ளது.
9.
கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்த்து முட்டை, இறைச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு வெள்ளிப் புரட்சி என்று பெயர்.
10.
குவி ஆடி, குழி ஆடி
11.
குழி ஆடி
12.
உப்பானது உணவின் உள்ள ஈரப்பதத்தை சவ்வூடு பரவல் மூலம் நீக்கிவிடுகிறது.இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளின் நொதிகள் செயல்பாடும் குறைக்கப்படுகிறது.
13.
துத்தநாகம்
14.

15.
ஹீலியம் - 2
போரான் - 5
ஆக்சிஜன் - 8
ஃபளுரின் - 9
நியான் - 10
சோடியம் - 11
மெக்னீசியம் - 12
சிலிக்கன் - 14
சல்ஃபர் - 16
கால்சியம் - 20
16.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
17.
டெஸ்மோடியம் கைரன்ஸ்
18.
கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் பிற தாதுக்களை பிரித்தெடுத்தல்.
19.
டெட்டாலின் சிறுதுளிகள் நீரில் விரவுதல் முறையில் கலக்கிறது. எனவே கலவை கலங்கலாக இருக்கிறது.
20.
SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறையை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை.
21.
R = 2f
= 2\(\times \)5 cm
R = 10 cm
22.
\(_{ 1 }{ { \mu }_{ 2 } }=\frac { \sin\ i }{ \sin\ r } \)\(=\frac { \sin\ { 45 }^{ o } }{ \sin\ { 30 }^{ o } } \)
\(=\frac { 1 / \sqrt { 2 } }{ 1/2 } =\sqrt { 2 } \) = 1.414
23.
(i) மயக்கமூட்டிகள் என்பவை உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் ஆகும். இவற்றை உணர்வை இழக்கச் செய்யும் பகுதிகளைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
(ii) அவை 1. பொது மயக்கமூட்டிகள்
2. குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
24.
1. நமது உடலில் நீரையும் மின்பகு பொருள்களையும் சமநிலைப் படுத்த உதவுகிறது,
2. இரத்தத்தில் அமில - காரச் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
25.
அ) திசை சார்ப்பசைவு
ஆ) திசை சாரா தூண்டல் அசைவுகள்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards