9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக.
2.
ஒரு வானொலிப்பெட்டியில், அது வீட்டின் முதன்மைச் சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?
3.
ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின்மாற்றிக்குமான வேறுபாடுகளைத் தருக.
4.
DC யை விட ACன் சிறப்பியல்புகளைக் கூறுக
5.
AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
6.
மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
7.
ஃபிளெமிங்கின் இடக்கை விதியைக் கூறுக.
8.
ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.
9.
DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.
10.
காந்தப் பாய அடர்த்தியின் அலகு
வெபர்
வெபர் /மீட்டர்
வெபர் / மீட்டர்2
வெபர் மீட்டர்2
11.
கீழ்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது.
AC இல் மட்டும்
DC இல் மட்டும்
AC மற்றும் DC
AC யை விட DC இல் அதிகமாக
12.
மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி
புலக் காந்தம்
பிளவு வளையங்கள்
நழுவு வளையங்கள்
தூரிகைகள்
13.
பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.
மோட்டார்
மின்கலன்
மின்னியற்றி
சாவி
14.
மின்னியற்றி
15.
மின்காந்தத் தூண்டல்
16.
மின்னோட்டம் மற்றும் காந்தவியல்
17.
காந்தமல்லாத பொருள்
18.
காந்தப் பொருள்
19.
மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி ________ ஆகும்.
20.
உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் _________ ஆகும்.
21.
காந்தப்புலத்திற்கு _________ இருக்கும்போது மின்னோட்டக் கடத்தியில் எந்த விசையும் செயல்படாது.
22.
காந்தப் புலத் தூண்டலின் SI அலகு _________ ஆகும்.
23.
ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
24.
சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.
25.
ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.
26.
காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன மற்றும் ஒன்றையொன்று வெட்டாது.
27.
ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துனைச் சுருள் 8 சுருள்களை கொண்டுள்ளது. இது ஒரு 220V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?
28.
ஒரு மின்மாற்றியானது ஒரு வீட்டின் அழைப்பு மணிக்கு 240 V AC மூலத்திலிருந்து 8 V மின்னழுத்தம் கொடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சுருள் 4800 சுற்றுகள் கொண்டுள்ளது. துனைச்சுருளில் எத்தனை சுற்றுகள் இருக்கும்?
1.
1) தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை லென்ஸின் விதியால் விளக்கப்படுகிறது. கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டமானது அது உருவாகக் காரணமாயிருந்த காந்தப்பாய மாற்றத்தை எதிர்க்கும் என்பதே லென்ஸ் விதியாகும்.
2) வலது கையின் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றை நீளவாக்கில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நீட்டும்போது சுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால் நடுவிரல் மின்னோட்டத்தின் திசையைக் குறிக்கும். இது மின்னியற்றி விதி என்றும் ஃபிளெமிங்கின் வலது கை விதி எனவும் அழைக்கப்படுகிறது.
2.
வானொலிப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள மின் மாற்றி இறக்கு மின்மாற்றி.
3.
| வ.எண் | ஏற்று மின்மாற்றி | இறக்கு மின்மாற்றி |
| 1. | குறைந்த மாறு திசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்ற பயன்படுகிறது. |
உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்ற பயன்படுகிறது. |
| 2. | முதன்மைச் சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கை அதிகம் (Ns > Np). |
முதன்மைச் சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் (Ns > Np). |
4.
i. ஏற்று மின்மாற்றி உதவியுடன் மாறுதிசை மின்னோட்டத்தை அதிக தூரங்களுக்கு அனுப்ப முடியும்.
ii. மாறுதிசை மின்னோட்டத்தினை எளிதில் நேர்மின்னோட்டமாக மாற்றலாம்.
iii. மாறுதிசை மின்னோட்டத்தினை எளிதில் உற்பத்தி செய்யலாம்.
5.

6.
(i) NS - நிலைக்காந்தம்
(ii) ABCD - கம்பிச்சுருள்
(iii) B1, B2 - கார்பன் தூரிகைகள்
(iv) S1, S2 - பிளவு வளையம்
(v) திசைமாற்றி
7.
இடது கரத்தின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது, மின்னோட்டத்தின் திசையை நடுவிரலும் சுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் குறித்தால் பெருவிரலானது கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கிறது.
8.
9.

(i) இப்படத்தில் ஒரு எளிய கம்பி5சுருள் ஒரு காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது. தற்போது கம்பி சுருள் AB எனும் பிரிவில் மின்னோட்டத்தின் திசை B ஐ நோக்கி செல்கிறது. ஆனால் கடத்திப் பிரிவு CD யில் மின்னோட்டதிசை எதிராக இருக்கும். கடத்திப் பிரிவு AB யிலும் CD யிலும் மின்னோட்டம் எதிரெதிர் திசைகளில் செல்வதால், பிளெமிங்கின் இடது கை விதியின் படி அவற்றின் இயக்கத்திசைகளும் எதிரெதிராக இருக்கும். கம்பிச் சுருள் இரு முனைகளிலும் விசையானது எதிரெதிர் திசைகளில் இருப்பதால் அவை சுழல்கின்றன.
(ii) மின்னோட்டமானது ABCD வழியாக இருந்தால், கம்பிச் சுருள் முதலில் கடிகாரத் திசையிலும் பின் எதிர் திசையிலும் சுழலும், கம்பிச் சுருள் ஒரே திசையில் அதாவது கடிகாரத்திசையில் இயங்க வேண்டுமானால் மின்னோட்டமானது, சுழற்சியின் முதல் பாதியில் ABCD யிலும், இரண்டாவது பத்தியில் DCBA வழியாகவும் பாய வேண்டும். மின்னோட்டத்தின் திசையை மாற்ற, பிளவு வளைய திசைமாற்றி எனும் ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது.
(iii) பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது முனையம் X மற்றும் Y உடன் இணைந்திருக்கும்போது சுருளில் மின்னோட்டம் இருப்பதில்லை. ஆனால், சுருள் நகர்வதால், அது தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து இரு பிளவு வளையங்களில் எதாவது ஒரு கார்பன் தூரிகைகள் X மற்றும் Y யுடன் தொடர்பு கொள்ளும். இந்த மின்னோட்டத் திருப்புதல் ஒவ்வொரு அரைச் சுழற்சியிலும் நிகழ்ந்து கம்பிச்சுருளில் தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்துகிறது.
10.
(c)
வெபர் / மீட்டர்2
11.
(a)
AC இல் மட்டும்
12.
(d)
தூரிகைகள்
13.
(a)
மோட்டார்
14.
தூண்டல்
15.
ஃபாரடே
16.
அயர்ஸ்டெட்
17.
மரம்
18.
இரும்பு
19.
( )
மின்கலன் / மின்னியற்றி
20.
( )
இறக்கு மின்மாற்றி
21.
( )
இணையாக
22.
( )
டெஸ்லா (T)
23.
(a)
24.
(b)
25.
(b)
26.
(a)
27.
ஒரு மின்மாற்றியில்
Es / Ep = Ns/Np
Es = Ns/Np \(\times\) Ep
= 8/800 \(\times\) 220
= 220/100
Es = 2.2 வோல்ட்
28.
Es / Ep = Ns/Np
Ns = Es/Ep \(\times\) Np
= 8/240 \(\times\) 4800
Ns = 4800/30 = 160 சுற்றுக்கள்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards