9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?
2.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
4.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
5.
ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
6.
மனிதனின் உணவுப் பாதையை விவரி
7.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அண்டம்
கருப்பை
விந்தகம்
அண்டக்குழாய்
8.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.
குடலுறிஞ்சிகள்
கல்லீரல்
நெஃப்ரான்
சிறுநீரகக்குழாய்
9.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
நாவடிச் சுரப்பி
லாக்ரிமால்
கீழ்தாடைக் சுரப்பி
மேலண்ணச் சுரப்பி
10.
சிறுநீரகங்கள்
11.
பெருங்குடல்
12.
நுரையீரல்கள்
13.
தோல்
14.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் _____ ஆகும்.
15.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
16.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி _________ ஆகும்.
17.
அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.
18.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
19.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
1.

அண்டகங்கள்: பெண்களின் ஓரினை பாதாம் -வடிவ அண்டகங்கள். கீழ் வயிற்றறையில் சிறுநீரகங்களுக்கு அருகில் அமைத்துள்ளன. அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம்) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முதிர்ந்த அண்டகத்தில் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான அண்டங்கள் / கருமுட்டைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைகிறது. ஒரு முதிர்ந்த கருமுட்டை ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் (மாதவிடாய் சுழற்சி) வெளியிடப்படுகிறது. இவ்வாறு கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல் (Ovulation) என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பப்பை: கர்ப்பப்பையானது ஒரு பேரிக்காய் போன்ற தசையாலான வெற்றிடமுள்ள அமைப்பையுடையது. இது இடுப்புக்குழிக்குள் அமைந்து காணப்படுகின்றன. இந்த கர்ப்பப்பையானது, சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே உள்ளது. கருவின் வளர்ச்சியானது கர்ப்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது. கர்ப்பப்பையின் குறுகலான அடிப்பகுதியானது கருப்பைவாய் (செர்விக்ஸ்) என அழைக்கப்படுகிறது. இது யோனி என்ற பகுதிக்குள் செல்கிறது.
2.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனைவிட அதிகமான நெஃப்ரான்கள் அமைத்துள்ளன. இந்த நெஃப்ரான்கள் அல்லது சிறுநீரைக் கொண்டுவரும் நுண்குழல்கள் சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகுகள் ஆகும். ஒவ்வொரு நெஃப்ரான்கள் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் காணப்படுகின்றன. இச்சிறுநீரக கார்ப்பசலில் (Renal corpuscle) கிண்ண வடிவில் காணப்படும் பௌமானின் கிண்ணத்தில் இரத்த நுண்ணாலங்களின் தொகுப்பாகிய கிளாமருலஸ் என்ற பகுதி காணப்படுகிறது. இரத்தமானது கிளாமரூலஸில் உள்ள நுண்நாளத்தொகுப்பில் உட்செல் நுண் தமனி (Afferent arterioles) வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண்தமனி (Efferent arterioles) வழியாக வெளியேறுகிறது.
பௌமானின் கிண்ணத்தினைத் தொடர்ந்து உள்ள சிறுநீரக நுண்குழல்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை உண்மை சுருள் நுண்குழலாகவும், 'U' வடிவில் கொண்ட ஹென்லேயின் வளைவாகவும், சேய்மை சுருள் நுண்குழலாகவும் தொடர்கின்றன. இச்ச்சுருள் நுண்குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது. நைட்ரஜன் கழிவுகளெல்லாம் சிறுநீரகப் பெல்விஸில் வடிகட்டப்படுகின்றன. பின்னர் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறுநீர்ப்பூரவழிப் பகுதி மூலம் வெளியேற்றப்படுகிறது.
3.
1. நமது உடலில் நீரையும் மின்பகு பொருள்களையும் சமநிலைப் படுத்த உதவுகிறது,
2. இரத்தத்தில் அமில - காரச் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
4.
மனித உடலானது 37°C வெப்பநிலையில் சாதாரணமாக இயங்குகிறது. வெப்பமானது அதிகரித்தால் வியர்வைச் சுரப்பிகள் வியர்வைச் சுரக்க ஆரம்பிக்கின்றன.அவற்றில் நீருடன் சிறிதளவு பிற வேதிப் பொருட்களாகிய அம்மோனியா, யூரியா, லாக்டிக் அமிலம் மற்றும் உப்புகள் காணப்படுகின்றன.
5.
ஆண் ஹார்மோன்: டெஸ்டோஸ் டீரான்
பெண் ஹார்மோன்: ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்
6.

உணவுப் பாதையின் அமைப்பு :
உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதை, வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது). பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது.
அ) வாய்
உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. வாய்க்குழியானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் (காற்றுக் குழாயையும் உணவுக் குழாயையும் பிரிப்பது) என்ற பகுதியாலும் கீழ்ப்பகுதி தொண்டையாலும் பக்கப்பகுதியானது தாடைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளது. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.
ஆ) பற்கள்
கடினமான கட்டமைப்பைக் கொண்ட பற்கள் உணவைப் பிடித்துக்கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் உதவுகின்றன. மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக (இரட்டைப் பல்வரிசை) உருவாகின்றன. முதலில் இருபது தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் தோன்றுகின்றன. பின்னர் இப்பற்களுக்குப் பதிலாக இரண்டாம் தொகுப்பில், முப்பத்திரெண்டு நிரந்தர
பற்கள் (கலப்பு பல் வரிசை) மாற்றியமைக்கப்படுகின்றன. இவைகள் ஒரு தாடைக்கு பதினாறு வீதம் இருக்கும். ஒவ்வொரு பல்லும் ஒரு வேரினைக் கொண்டு ஈறுகளில் (திகோடான்ட்) பொருத்தப்பட்டுள்ளது.
| பற்களின் வகைகள் | பற்களின் எண்ணிக்கை | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | 8 | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | 4 | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | 8 | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | 12 | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
இ) உமிழ்நீர்ச் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவையாவன மேலண்ணச் சுரப்பி. நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி
i. மேலண்ணச் சுரப்பி
இச்சுரப்பிதான் மிகப்பெரிய சுரப்பியாகும். இவை இரு கன்னங்களிலும், காதுக்குக் கீழே அமைந்துள்ளன
ii. நாவடிச் சுரப்பி
இது மிகச்சிறிய சுரப்பியாகும் நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.
iii, கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்
இவைகள் கீழ்தாடைகளின் கோணங்களில் காணப்படுகின்றன.
நாக்கு:
நாக்கு ஒரு தசையாலான,. உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன்
உணவானது கலக்க உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள
சுவை மொட்டுகள் உதவுகின்றன.
தொண்டை:
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். இது வாய்ப் பகுதியை உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.
உணவுக் குழல்:
இது 22 செமீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வால் கடத்துகிறது.
ஈ) இரைப்பை
இரைப்பையானது உணவுக் குழலுக்கும் - சிறுகுடலுக்குமிடையே 'J' போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது. இந்த இரைப்பை நீர், நிறமற்றதாகவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.
உ) சிறுகுடல்:
உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். இது 5 - 7 மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும். இக்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜூஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
i. முன்சிறுகுடல் (டியோடினம்):
சிறுகுடலின் மேல்பகுதியாயிருக்கும் இது 'C' வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் (கல்லீரலிலிருந்து) கணைய நாளமும் (கணையத்திலிருந்து) இணைந்து டியோடினத்தில் திறக்கின்றன.
ii. நடுசிறுகுடல் (ஜூஜினம்):
சிறுகுடலின் நடுப்பகுதி ஜூஜினம் ஆகும். இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும். சிறுகுடல் சுரக்கும் சுரப்புப் பொருள்கள் சிறுகுடல் நீர் ஆகும். சிறுகுடல்நீரில் சுக்ரோஸ்,மால்டேஸ்,லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன.
iii. பின்சிறுகுடல் (இலியம்):
சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவையாகும் இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
ஊ) கல்லீரல்
உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது. இடது கதுப்பைவிட பெரிதானதாகும். கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கிறது. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.
எ) கணையம்
இது பிளவுபட்ட இலை போன்ற அமைப்புடைய சுரப்பியாகும். இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் (முன் சிறுகுடல்) இடையே அமைந்துள்ளது. கணையமானது நாளமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாவும் செயலாற்றுகிறது.நாளமுள்ள சுரப்பியின் பகுதியாகயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி கணைய நீரைச் சுரக்கிறது அவற்றில் மூன்று நொதிகள் காணப்படுகின்றன. அவையாவன லிப்பேஸ், டிரிப்சின் மற்றும் அமைலேஸ். இவைகள், முறையே கொழுப்பு. புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றில்செயலாற்றுகின்றன. இதன் மேற்புறத்தில் லாங்கர்கான் திட்டுகள் காணப்படுகின்றன. இந்த லாங்கர்கான் திட்டுகள் நாளமில்லா செல்களைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இதிலுள்ள ஆல்பா செல்கள் குளுக்கோகான் என்ற ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
7.
(c)
விந்தகம்
8.
(c)
நெஃப்ரான்
9.
(b)
லாக்ரிமால்
10.
சிறுநீர்
11.
செரிக்காத உணவு
12.
கார்பன் டை ஆக்ஸைடு
13.
வியர்வை
14.
( )
கருமுட்டை
15.
( )
பித்தப்பை
16.
( )
குடல்வாய் (பைலோரஸ்)
17.
(b)
18.
(b)
19.
(b)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards