9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
திசுக்களின் அமைப்பு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மூளையில் உள்ள திசுவின் பெயர் எழுது.
2.
திரவ அணியுடன் உள்ள இணைப்பு திசுவின் பெயர் எழுது.
3.
நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?
4.
தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸில் உள்ள நார்கள் எவை?
5.
அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
6.
ஸ்கிளீரைடுகளிலிருந்து நார்களை வேறுபடுத்துக.
7.
இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன விளைவு ஏற்படும்?
8.
கீழே கொடுக்கப்பட்ட படத்தில் பாகங்களைக் கண்டறியவும்.

(a)a,b,c பாகம் குறிக்கவும்
(b)திசுவின் வேதிக் கூட்டுப் பொருட்கள் எவை?
(c)பாகம் c-யின் செயல் என்ன?
9.
கீழே உள்ளவற்றில் எது ஒன்று சாத்தியம்? ஒரு மனிதனின் நீண்ட கை எலும்புகள் இரண்டு விபத்தில் இடம்மாறி அமையபெற்றது.
தசைநார் காயம்
எலும்புகூட்டு தசை உடைதல்
தசைநார் கிழிதல்
சிற்றிடை திசு விரிசல் அடைவது
10.
ஏரேன்கைமா எதில் கண்டறியப்பட்டது?
தொற்று தாவரம்
நீர்வாழ் தாவரம்
சதுப்புநில தாவரம்
வறண்ட தாவரம்
11.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
பாரன்கைமா
கோலன்கைமா
சைலம்
ஸ்கீளிரன்கைமா
12.
உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு
பாரன்கைமா
கோளன்கைமா
ஸ்கிளிரைன்கைமா
மேலே கூறிய எதுவும் இல்லை
13.
ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது
பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.
முதிர்ந்த செல்கள்
உயிரற்ற செல்கள்
ஸ்கிளிரன்கைமா செல்கள்
1.
நரம்புச் செல்கள், நியூரான்கள்
2.
இரத்தம், நிணநீர்
3.
அடிப்போசைட் எனப்படும் கொழுப்புத்திசு
4.
1) கொலாஜன் நார்கள்
2) மீள் நார்கள்
3) ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள்
5.
எலும்புச்சட்டக தசை அல்லது வரித் தசை: இந்த தசைகள் எலும்புகளுடன் ஒட்டியுள்ளன. உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவை எலும்புச் சட்டக தசை என்று அழைக்கப்படுகின்றன. இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
மென் தசை அல்லது வரியற்ற தசை: இந்த தசைகள் கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும், முனைப்பகுதி குறுகியும் காணப்படுகின்றன. இத்தசை நார்கள் எந்தவிதமான கோடுகளையோ வரிகளையோ பெற்றிருக்கவில்லை. ஆதலால், இவை மென்மையான தசைகள் (வரியற்ற தசைகள்) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை உடல் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது இல்லை. எனவே இவற்றை இயங்கு (தன்னிசையற்ற) தசைகள் என்றும் அழைக்கிறோம்.
6.
| ஸ்கிளீரைடுகள் | நார்கள் |
| வழக்கமாக அகன்றது | நீண்ட குறுகிய இல்லை போன்றவை |
| சுவரின் முடிவில் மழுங்கியவை | சுவரின் முடிவில் கூர்மையானவை |
| ஒற்றையாகக் காணப்படுகிறது | கற்றையாகக் காணப்படுகிறது |
| குழிகள் ஆழமானவை | குழிகள் குறுகியவை. |
7.
இரத்தத் தட்டுகள் இரத்தம் உறைதலுக்கு அவசியமாகும். இவற்றை இரத்தத்திலிருந்து நீக்கி விட்டால் இரத்தம் உறைவதில்லை. எனவே காயங்களின் வழியே வெளியேறும் இரத்தம் உறையாமல் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் மரணம் ஏற்படும்.
8.
(a) A - லமெல்லா
B - இடைவெளி
C - ஹாவர்சியன் கால்வாய்
(b) இதன் மேட்ரிக்ஸில், கொலாஜன் நார்களும் அதிகம் உள்ளன.
(c) லேக்குனாக்கள் என்பன கனாலிகுலி என்ற நுட்பமான கால்வாய்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடங்களின் வழியே உணவுப் பொருள் எலும்பு செல்களை அடைகிறது. இதன் மூலம் எலும்பு செல்களில் உருவாகும் கழிவு வெளியேற்றப்படுகிறது.
9.
(b)
எலும்புகூட்டு தசை உடைதல்
10.
(b)
நீர்வாழ் தாவரம்
11.
(c)
சைலம்
12.
(a)
பாரன்கைமா
13.
(a)
பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards